அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்

1991-96 அதிமுக ஆட்சியைவிட மக்களுக்கு அதிக கேடுவிளைவித்த ஆட்சியென்றால் 2001-06 அதிமுக ஆட்சி தான், 1991-96ல் வெறும் ஊழலும், ஆடம்பர திருமணமும் மட்டும் தான் இதனால் ஒன்றும் உயிர் உரிமை போகும் அளவிற்கு மக்கள் பாதிக்கப்படவில்லை, ஆனால் 2001-06 ஆட்சியில் ஆடம்பரமும் ஊழலும் குறைந்தது போல தோன்றினாலும் அதிமுக அரசின் செயல்பாடுகள் மக்களின் உயிருக்கும் உரிமைக்கும் உலை வைத்தன மக்களை மட்டுமல்ல சாமிகளுக்கும் ஊறுவிளைவித்தது அதிமுக அரசு.


கோழி, ஆடு பலியிடத்தடை என்ற சட்டத்தை திடீரென ஒரு நாள் நிறவேற்றினார் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதா, மேலோட்டமாக பார்க்கும் போது இது ஏதோ மிருகங்களின் மீதான கருணை மழையை ஜெயலிதா பொழிந்தது போன்ற ஒரு தோற்றத்தை நடுத்தர வர்க்கத்தினரிடம் தோற்றுவித்தது, ஆனால் இது ஒரு அப்பட்டமான இந்து மதம் என்று தற்போது அழைக்கப்படும் இந்த மதத்தின் பன்முகத்தன்மையை அழித்து ஒரு முகப்படுத்தும் முயற்சி, இந்து மதத்தில் சிறு தெய்வ வழிபாடும் குலதெய்வ வழிபாடும் காலம் காலமாக இருந்து வரும் வழக்கம் , பெரும்பான்மை மக்களின் இந்த வழிபாட்டு முறை தான் ஆரியமயமாக்களில் எல்லாவற்றையும் இழந்து எஞ்சி நிற்பது.



யாரிந்த குலதெய்வங்கள், சில பல காலங்களுக்கு முன் எம் மக்களுக்கும், ஊருக்காகவும் சமூகத்திற்காகவும் உயிர்துறந்த எம் முன்னோர்கள், இவர்களின் நினைவாக நாம் கும்பிடுவதே குலதெய்வங்களும் சிறு தெய்வங்களும், இந்த கோவில்களில் பெரும்பாலானவைகளுக்கும் அரசாங்கத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை, இன்றைக்கு இந்து மதம் என்ற ஒற்றை குடையின் கீழ் எம் மக்கள் வந்த போதும் எம் மக்களின் அடையாளங்களும், நம்பிக்கைகளும் குல தெய்வ, சிறு தெய்வ வழிபாட்டில் உள்ளன, எஞ் சாமிக்கு முப்பலி படைப்பது எம் வழிபாட்டு அடையாளம்,அது எமது உரிமை, சனாதான தர்ம ஆகம விதிப்படி இயங்குவதாக கூறும் கோவில்களின் கருவறையில் நுழைவதை வேண்டுமானால் சில ஜாட்டான்கள் தடுக்கலாம், ஆனால் எம் கோவிலின் கருவறையில் நுழைவதையும், எஞ் சாமியை தொடுவதையும் எந்த ஜாட்டான்களாலும் தடுக்க முடியாது, எஞ் சாமியை எப்படி வேண்டுமானாலும் ஆராதிப்பேன், எந்த மொழியில் வேண்டுமானாலும் ஆராதிப்பேன், அதையும் எந்த 'பெரியவரும்' நிந்திக்க முடியாது, நான் தொட்டதற்காக எஞ்சாமி தீட்டு என கோவித்துக்கொள்ளாது, பட்டு,பீதாம்பரம், தங்கம், நெய் மற்றும் இன்ன பிற உணவுகளையும் யாக நெருப்பிலிட்டு பொசுக்கிவிட்டு எழுந்து போவதை போல ஆட்டையும், கோழியையும் பலி கொடுத்து விட்டு அதை தூக்கி வீசிவிட்டு வரமாட்டோம், அதை எம் சொந்தங்களும், ஊர் மக்களும் பங்கிட்டு அங்கேயே சமைத்து உண்போம், வேண்டும்போதும் வாய் ஊறும் போதும் சிக்கன்-65 சாப்பிட்டு கொண்டிருப்பவர்களல்ல எம் மக்கள்,அசைவ உணவே தீபாவளிக்கும், கரிநாளுக்கும் எப்போதாவதுமாக மட்டுமே இருந்து கொண்டிருக்கும் எம் மக்களுக்கு சாமிக்கு படைப்பது நம்பிக்கைக்கு மட்டுமல்ல அதை வைத்து அசைவம் உண்ணும் நாளாகவும் இருக்கும் என்பதுவும் கூட.


எம் கோவில்களின் மீது எந்த உரிமையும் இல்லாத அம்மையாரின் அதிமுக அரசு ஆடு,கோழி பலியிடத்தடை என்று எம் மக்களின் நம்பிக்கையையும், உரிமையையும் பறித்தது, எஞ் சாமிக்கு என்ன படைக்க கூடாது என்று சட்டம் போட்டு தடுத்து இந்து மதமென்றால் சாமிக்கு சைவ உணவுதான் படைக்க வேண்டுமென்ற நிலைக்கு தள்ளியது




கீழ்கண்ட வரிகள் திரு.முத்துகுமரன் அவர்களின் அதிகார உரையாடல்களை உடைப்போம் என்ற பதிவிலிருந்து எடுக்கப்பட்டது, இங்கே பொருத்தமாக இருக்கும் என்பதால் இணைக்கின்றேன்

//தனக்கான உரையாடல்களை கட்டமைப்பதே வரலாறு என்றாகியிருக்கிறது. அதனால் ஒவ்வொரு இனத்திற்கும் தங்களுக்கான உரையாடல்களை கட்டமைப்பதே உண்மையான யுத்தக்களமாக இருக்கிறது. இங்குதான் அதிகார,ஆதிக்க சமூகம் தன் கோரக்கரங்களை நுழைக்கிறது. அந்தந்த மண்ணுக்குரிய பெருவாரியான மக்களின் உரையாடலை அறவே அழித்தொழித்து தனது ஆதிக்க உரையாடலை திணிக்கிறது. அதை அங்கு வாழும் அனைத்து சமூகங்களுக்கும் பொதுவானதாக கற்பிக்கிறது. இப்படி கற்பிக்கப்பட்டவையே இயற்கையானது என பெரும்பான்மையான மக்கள் கூட்டத்தின் நம்ப வைத்து அவர்களை மனரீதியாகவே அடிமைதனத்தை ஏற்கச்செய்கிறது. தாங்கள் அடிமைகள், ஆதிக்க சமூகத்தினருக்கு அடங்கிப்போவதே தனக்கு விதிக்கப்பட்ட விதி, அதை ஏற்றுக்கொண்டு வாழ்வதே ஒரே வழி என்று அவர்களை மனரீதியாகவே அடிமை பட வைக்கிறது. இந்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதில் வெற்றி பெறும் போது அவர்களால் எதிர்ப்புகளற்ற அதிகார சமூகத்தை மிக எளிதாக கட்டமைக்க முடிகிறது. இவ்வாறு ஏற்படுத்திய கருத்துருவாக்கத்தை பாதுகாக்க எண்ணற்ற புராணக்கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக அதை வலுவூட்டி வருகிறது.பெண்ணடிமைத்தனமும் இதே முறையில்தான் இயங்குகிறது.
//

புராணக் கதைகள், நீதி சம்பவங்கள், இலக்கியங்கள் எனத் தொடர்ச்சியாக சமூக அளவில் அதை வலுவூட்டி வருகிறபோது அரசு அதிகாரம் கையிலிருக்கும் போது எம் மக்களின் உரையாடலை ஒழிக்கும் சட்டங்களை போட்டு நம் மண்ணின் வரலாற்றை ஒரு முகப்படுத்த துடிக்கின்றது, நம் வரலாற்றை, நம் உரையாடலை, நம் மொழியை நம் நம்பிக்கையை நாம் இழக்கும் போது நாம் தாமாகவே அடிமையாகின்றோம்.

இது தொடருமானால் நாளை நம் சாமியை கும்பிடும்,வணங்கும், வழிபாட்டு முறை உரிமைகளை இழந்து எந்த சாமியை கும்பிட வேண்டும், எப்படி வணங்க வேண்டும், எந்த வழிபாட்டு முறையை பின்பற்ற வேண்டும், என்ன வேண்டிக்கொள்ள வேண்டும் என்று சட்டம் போட்டு சொல்லும் அளவில் வந்து நிற்கும் இந்த ஒரு முகப்படுத்தும் முயற்சி.

இன்று நம் சாமிக்கு என்ன படையல் போட வேண்டுமென சட்டத்தின் மூலம் முடிவு செய்பவர்கள் நாளை நாம் என்ன சாப்பிட வேண்டுமென சட்டத்தின் மூலம் முடிவு செய்யவும் வாய்ப்புள்ளது இது நடக்க வாய்ப்பில்லை என மறுக்க முடியாது ஆடு,கோழி பலியிடத்தடை என்பதை அது சட்டமாக்கப்படும் முன் வரை நினைத்து பார்த்திருப்போமா?

கிறித்துவ பிரச்சார அமைப்புகளின் அதி தீவிர மதமாற்றப் பிரச்சாரங்கள் ஏற்படுத்திய எரிச்சலில் மத மாற்ற தடை சட்டம் என்ற ஒற்றை காரணத்திற்காக ஆதரிப்பவர்களே உம் மதத்திலேயே உம் உரிமைகள் இங்கே சட்டத்தினால் பறிக்கப்பட்டுள்ளனவே!

உயிர் உரிமைப்பிரச்சனைகள் தான் எமக்கு தலையாய பிரச்சினை மற்றவைகள் எல்லாம் அதற்கு பிறகு தான்

39 பின்னூட்டங்கள்:

தேசாந்திரி said...

1. உணவிற்காக மிருகங்களைக் கொல்வது குற்றம் இல்லாத பொழுது இதுவும் அவ்வாறே.

2. இரண்டாவது படத்தின் பின்புலம் பசுமையாக மிகவும் செழிப்பாக இருப்பது போல் இருக்கிறது. எந்த ஊர்?

குழலி / Kuzhali said...

//2. இரண்டாவது படத்தின் பின்புலம் பசுமையாக மிகவும் செழிப்பாக இருப்பது போல் இருக்கிறது. எந்த ஊர்?
//
சமீபத்திய மழையினால் தான் இந்த பசுமை, மற்ற நேரங்களில் இது வானம் பார்த்த வறண்ட பூமி, எங்கள் சொந்த ஊர்...

Sivabalan said...

Photos are really good!!

Unknown said...

கோயிலில் எப்படி வேண்டுமானாலும் கும்பிட உரிமை உண்டு என்பது உண்மைதான்.தான் உண்பதை கடவுளுக்கு கொடுப்பதும் பக்தன் உரிமைதான்.பக்தி நோக்கில் பார்ப்பினும் மாமிசம் உண்ட கடவுளர் உண்டு(கண்ணப்ப நாயனார் கதை).

ஆக எப்படிப் பார்த்தாலும் இந்த சட்டம் தேவையற்றது தான்.

நல்ல பதிவு.

VSK said...

மானுடம் பிதற்றித் திரியும் மக்களே!
கதறும் அந்த மிருகங்களின் அவல ஓலம்
காதில் விழுகிறதா?

அது எப்படி அய்யா?
எல்லாவற்ரையும் தன்னலக் கண்ணோடு மட்டுமே
தட்டிப் பார்க்கத் தோன்றுகிறது?

எந்தச் சாமி அய்யா
உயிர்பலி கேட்டது?

உன் பசி ஆற, இப்போது
'வேண்டாத' சாமி கூட
வலுலில் வந்து நிற்கிறதோ?

குழலி / Kuzhali said...

பிரச்சினை உயிர்பலியிடுவது மட்டுமல்ல எம்மக்களின் உரையாடலை ஒழிக்க முயல்வதும், எம்மக்களின் இருப்பை மறைக்க முயல்வதும் தான்...

குழலி / Kuzhali said...

//மானுடம் பிதற்றித் திரியும் மக்களே!
கதறும் அந்த மிருகங்களின் அவல ஓலம்
காதில் விழுகிறதா?
//
உணவுக்காக மிருகங்களை கொல்வது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்று, இது தவறென்றால் உணவுக்காக தாவரங்களை கொல்லும் சைவ பட்சினிகளை என்ன செய்யலாம் அந்த தாவரங்களின் கதறல்கள் ??

பதிவை திசை திருப்ப விரும்பவில்லை, பிரச்சினை உயிர்பலியிடுவது மட்டுமல்ல எம்மக்களின் உரையாடலை ஒழிக்க முயல்வதும், எம்மக்களின் இருப்பை மறைக்க முயல்வதும் தான்...

சைவ, அசைவ விவாதங்கள் முற்றிலும் பதிவை வேறு திசைக்கு கொண்டுசெல்லும் என்பதால் அவைகள் வெளியிடப்பட மாட்டாது

Pot"tea" kadai said...

எஸ்கே,
//எந்தச் சாமி அய்யா
உயிர்பலி கேட்டது?//

ஐயனாரும், முனியும் நாங்கள் வெரும் தேனும், வெண்ணையும், பாலும் தான் உண்ணுவோம் எழுதி வைத்துவிட்டு செல்லவில்லை.

//உன் பசி ஆற, இப்போது
'வேண்டாத' சாமி கூட
வலுலில் வந்து நிற்கிறதோ?//

இச்சைக்காக உயிர்களைக் கொல்லும் போலிச் சாமியார்களை(தரகர்களை) விட,அந்த ஒரு நாளைக்காவது சாமி பேர சொல்லி "பழங்கஞ்சி, பச்ச மொளகா, வெங்காயம்னு" சாப்பிடாமல் "ஆட்டுக்கறி" சாப்பிட விரும்பும் எம்மக்களுக்கு சாமி தேவை தான், பசியாற மட்டும்!

ஒரு சட்டத்தின் மூலம் ஒரு குடியின் பூர்வ "வாழ்க்கை முறையையே" மாற்ற முயன்ற ஆதிக்க-தரகு சமுதாயத்தின் ஆட்சி மோகத்தை அடியோடு அறுத்தெரிகின்ற வேலை வந்து விட்டது.

Anonymous said...

தரகு சமுதாயத்தின் அடிவருடிகளின் அடிப்படை(யில்லா) கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொல்லி நேரத்தை விரயம் செய்யவேண்டாம்.

P B said...

ஒரு ஆட்சியாளர் தவறான் முடிவு எடுப்பது, மக்களுக்கு பிடிக்கவில்லை என்றால் மாற்றிக்கொள்வது என்பது எல்லா தலைவர்களுக்கும் பொருந்தும். ஒரு ஆட்சியாளன் ஆலோசகர்களின் துணைக்கொண்டே ஆட்சி நடத்துகிறான். ஒரு காலத்தில் பல விஷயங்களில் காஞ்சி ஜெயேந்திரரின் ஆலோசனை கேட்கப்பட்டது. அவருடைய ஆலோசனைகளில் ஒன்றாக இது இருந்திருக்கலாம். மாற்றிக்கொண்டுவிட்டது ஜெயலலிதாவின் அரசியல் முதிர்ச்சியை காட்டுகிறது. என்னை பொருத்தவரை இந்த தேர்தலில் திமுக மற்றும் பாமக வின் குடும்ப அரசியல் வேரறுக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
தயாநிதி மாறன் கொஞ்சம் அவசரப்பட்டுவிட்டார், தேர்தல் வரை கூட பொறுக்க முடியவில்லை புத்தியை காட்டிவிட்டார். வெற்றி பெற்றுவிட்டால் இவர்கள் ஆட்டம் எங்கு போய் முடியுமோ!

ஜெயக்குமார் said...

என்ன குழலி சிங்கப்பூர் போனாலும் உங்கள் ஊர்ப்பாசத்திற்கு ஒரு அளவே இல்லாமல் போய்விட்டது. உங்கள் ஊர்தான் உங்களுக்கு உலகமா? எதற்கெடுத்தாலும் உங்கள் ஊரையும்,உங்கள் மக்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறீர்களே.
உங்கள் ஊர் தாண்டியும் உலகம் உள்ளது என்பதை சற்று புரிந்துகொள்ளுங்கள்.

உங்களின் அரசு ஊழியர் போராட்டம் பற்றிய பதிவுக்கு நான் ஏற்கனவே பிண்ணூட்டம் இட்டுள்ளேன். அரசு ஊழியர் மற்றும் அவர்களின் குடும்பம் தவிர வேறு யாரும் அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கவில்லை. அந்த போராட்டம் பொதுமக்களுக்கும், அரசுக்கு கேடு விளைவிப்பதாகவே இருந்தது.

இப்போது நீங்கள் குறிப்பிட்டுள்ள "அசைவ சாமிகள்" பற்றிய பதிவைப்படித்தால் சிரிப்புதான் வருகிறாது. "வேப்பிலைக்காரி" போன்ற தொலைக்காட்சி தொடர்களை ஒளிபரப்பி மக்களை கற்காலத்திற்கு அனுப்ப முயலும் சன் டிவிக்கும் உங்களுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை.

உங்கள் ஊரில் மட்டுமல்ல, எங்கள் ஊர்பக்கம் பல கிராமங்களில், இந்த பலிகொடுத்தள் பல்லாண்டுகளாக நடந்து கொண்டுதான் வருகிறது. கிடா பலி கொடுக்கும் நம் மக்களில் பலர் தண்ணி வண்டிகளாக மாறிவிடுவார்கள். வெட்டிய கிடாயை யாரும் முறைப்படி சமைக்க மாட்டார்கள். அது காட்டு சமையல் மாதிரிதான் இருக்கும். அதில் ருசி பார்த்து குத்தம் சொன்னால் அது சாமி குத்தம் ஆகிவிடும். இந்த தண்ணி வண்டிகள் "மப்புல" இந்த படையல ஒரு கட்டு கட்டும். அப்புறம் என்ன சண்டை வெட்டு குத்துன்னு கற்காலத்திற்கு அருகிலேயே போய்த்திரும்பும். கிடா வெட்டி பொங்கல் வைக்கும் ஒரு கோவில் திருவிழாவாவது சண்டையில்லாமல்
நடக்கிறதா?.
இது போன்ற கன்றாவிகளிடம் இருந்து தப்பிக்கத்தான். இப்போதெல்லாம் திருமணம் போன்ற எந்த வீட்டு விஷேசங்களுக்கு கூட இப்போது எங்கள் ஊர்பக்கம் அசைவம் செய்வதில்லை. இல்லாவிடால், எந்த வீட்டு விஷேசம் என்றாலும் "புடிடா நாலு ஆட்டை" என்றுதான் கூறுவார்கள். ஆனால் விஷேசத்திற்கு வருபவர்கள் அசைவம் என்றவுடன், கையோட ரெண்டு புட்டியையும் புடிச்சிட்டு வந்திடுவாங்களே!. அப்புறம் என்ன வெட்டு குத்துதான்!. "காதல்" படத்தில் ஒரு பாடல் காட்சியில் இதுபோன்ற ஒரு காட்சியை அழகாக படம்பிடித்துள்ளார் இயக்குனர் பாலாஜி சக்திவேல்.

நாளொரு புதுமையாக வந்து கொண்டிருக்கும், இக்காலகட்டதில் சாமிக்கு ஆடு , கோழி பலியிடுவது என்று நம் மக்கள் இன்னும் கற்காலத்தில் இருந்து கொண்டிருக்கிறார்கள். வெளிநாட்டவர்களும் வரவேற்கும் நாகரீகங்களாக ஒருவனுக்கு ஒருத்தி என்ற நம் திருமண உறவுகளும், ஆன்மீக சிந்தனைகளும் இருக்கும் நம் கலாசாரத்தில் அவர்களுக்கு அறிமுகம் கூட செய்யமுடியாத கலாச்சாரம்தான் இதுபோன்ற பலியிடும் சாமாச்சாரங்கள்.

இது ஒரு பாரம்பரிய நிகழ்சிகள் என்றாலும், மக்கள் அதை கொஞ்சம், கொஞ்சமாக மறந்து நெறிப்படவேண்டும். பழமையின் நல்ல குணங்களுடன் கூடிய புதுமைகளை வரவேற்க அவர்கள் முன்வரவேண்டும். பழைய காலத்தில் உடுத்திக்கொண்டிருந்த ஆடைகளையா நாம் இப்போது உடுத்திக்கொண்டிருக்கிறோம். பழைய காலத்தில் இருந்தது போலவா நாம் வீடுகள் கட்டிக்கொண்டிருக்கிறோம்.

காலத்திற்கேற்ப, வேகமாக மாறிவரும் உலகத்திற்கேற்ப நாமும் அதனுடன் ஒரு நதியைப்போல பயனிக்கவேண்டும் இல்லாவிட்டால் "துர்நாற்றமடிக்கும் குட்டை" போல நம் மக்கள் வாழ்விலும் ஒரு தேக்க நிலை ஏற்பட்டுவிடும்.
இந்த பிண்ணூட்டத்தை வெளியிருவீர்கள் என்று நம்புகிறேன்.

oosi said...

3 வது போட்டோவில் அதிமுக கரை வேட்டியுடன் நிற்கிறாரே ஒருத்தர் !!!

குழலி / Kuzhali said...

//இந்த தேர்தலில் திமுக மற்றும் பாமக வின் குடும்ப அரசியல் வேரறுக்க கிடைத்திருக்கும் நல்ல வாய்ப்பு. மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
//
முத்துகுமார் உங்களுக்கு குடும்ப அரசியல் தான் பிரச்சினை, ஆனால் உயிர்,உரிமை, எதேச்சாதிகார ஆணவ ஆட்சி பிரச்சினை இல்லையென்றால் நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை

குழலி / Kuzhali said...

ஜெயக்குமார் பின்னூட்டத்தில் நான் சொல்லியுள்ளதை ஒரு முறை படியுங்கள் இல்லையென்றாலும் இதோ தருகின்றேன்

---
பிரச்சினை உயிர்பலியிடுவது மட்டுமல்ல எம்மக்களின் உரையாடலை ஒழிக்க முயல்வதும், எம்மக்களின் இருப்பை மறைக்க முயல்வதும் தான்...
--

VSK said...

இன்னும் என் எந்தக் கேள்விக்கும் பதில் வரவில்லை!

பசியாற "சாம்"இ தேவையில்லை1

அசைவம் வேண்டுமென்றால், எத்தனையோ வழிகள் உண்டு!

அதை விட்டு, சாமி பேரை சொல்லி சமத்துவம் பேசுவது,

சற்றுக் கூட சரியில்லை!

கருணாநிதி சொன்னது போல,

திராவிட இயக்கத்தின் கடைசி மணி

அடிக்கபடப் போகும் மே 8-ஐ எதிர்நோக்கி

இறுமாந்து காத்திருக்கிறேன்!

10-ம் தேதி பேசலாம்!!

Anonymous said...

ஜெயலலிதாவைப் பிடித்து கைது செய்து முட்டிக்குமுட்டி தட்டி, ஜெயிலில் அடைத்து வெளியவே வரமுடியாதபடிக்கு செய்து எல்லா வேளையும் கம்பங்கூழும் களியும் காய்ச்சி ஊத்தனும். அதை எங்கள் கண்ணால பாக்கனும்.

போலிடோண்டு ரசிகர்மன்றம்
நங்கநல்லூர் கிளை.

VSK said...

I am game for it too!

Pot"tea" kadai said...

எஸ்கேவின் புரிதலில் உள்ள பிரச்சினை அனைவரும் அறிந்ததே. அதனால் அனைவரும் கொஞ்சம் பொறுத்தருளவும்...
மே 10 பேச இயலாது, 11ம் திகதியில் நடுப் பகலில் பேசலாம்....ஓ நீங்கள் அமெரிக்க பச்சை அட்டை பெற்றவர் அல்லவா...கொஞ்சம் பின் தங்கி தான் இருப்பீர்கள்.

P B said...

ஜெயலலிதா தவறு செய்தார் என்று வைத்துக்கொண்டாலும், தன்னை மாற்றிக்கொண்டார் என்கிற வாதத்தை ஒதுக்கிவிட்டீர்களே குழலி? தன் கருத்து மக்களால் ஏற்றுக்கொள்ளபடாவிட்டால் மாற்றிக்கொண்ட பிறகு பிற விஷயங்களை பார்க்க வேண்டாமா?


தொடர்ந்து எழுதுங்கள், தங்கள் பதிவை தொடர்ந்து படிப்பவன், உங்களுக்கு diametrically opposite கருத்து கொண்டிருந்தாலும், உங்கள் பதிவு ஒரு விவரஸ்தரின் பதிவாக இருக்கிறது. பாராட்டுக்கள்.

ப்ரியன் said...

/*
எதற்கெடுத்தாலும் உங்கள் ஊரையும்,உங்கள் மக்களையுமே உதாரணத்திற்கு எடுத்துக்கொள்கிறீர்களே.
உங்கள் ஊர் தாண்டியும் உலகம் உள்ளது என்பதை சற்று புரிந்துகொள்ளுங்கள்.
*/

அன்பின் ஜெயக்குமார் இது உங்களுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன்.உங்கள் வட்டத்தில் மட்டும் நின்று உலகைப் பார்க்காதீர் அடுத்தவரின் உலகத்தையும் பாருங்கள்.

தமிழகத்தில் ஏன் தென் இந்தியாவில் நான் பழகியவரை எல்லா இடத்திலும் குலசாமிகள் என்று ஒன்று இருக்கத்தான் செய்கிறது.இதில் குறிப்பிட வேண்டிய விசயம் குலசாமிகள் ஒன்றும் வானத்து தேவர்கள் அல்ல.நம் இனத்தில் பிறந்து நல்ல விதமாய் இனக் காவலாளியாய் நின்று வாழ்ந்து மரித்துப் போன மூதாதையர்கள்.முருகனையே குறிஞ்சி (மலையும் மலை சார்ந்த இடமும்) வாழ் மூத்தவன் என்கிறார் கவிஞர் வைரமுத்து(கொஞ்சம் தேநீர் நிறைய வானம்).செத்துப் போன பாட்டான் பூட்டான்களுக்கு திதி செய்வதுப் போலத்தான் இந்த சாராயம் படைத்தலும் கறிவெட்டுதலும்.

இந்த சாமிகள் ஏழைச்சாமிகள் இவர்கள் இவர்கள் கேட்பது தினமும் நெய்யோ மூன்று நேர பூசைகளோ பணமோ அல்ல.வருடத்திற்கு ஒரு முறை படையல் கறி சோறு அதுவும் அவர்களுக்கு அல்ல.மக்கள் உண்ண.அதுவும் சொந்த பந்தங்கள் கூடி உண்ண.

இப்படி எல்லாரும் கறி உண்ணும் போது கூடி வெட்டி சாகிறார்கள் என்னும் நீங்கள் அப்படி நிகழ்ந்த நிகழ்ச்சி ஒன்றை சுட்டிக்காட்டினால் நலமாக இருக்கும்.உங்கள் வாதப்படி அப்படியே வெட்டிச் சாகிறார்கள் என்றால் அதுவும் மது மயக்கதிலே அன்றி புலால் உண்ட மயக்கத்தினால் அல்ல என்பது திண்ணம்.அப்படியானால் மதுவை தடை செய்வதுதானே அதைவிட்டு ஆடு கோழி வெட்டுவதை ஏன் தடுக்க வேண்டும்.(இருந்த 1000+ கடைகளை 3000+ ஆக்கியவர்தானே அம்மா).

அடுத்து நீங்கள் என்ன எழுதினாலும் சன் டிவியையும் திமுக வையும் இழுப்பது என முடிவோடு இருக்கிறீர்கள் என நினைக்கிறேன்.சரி சன் தொலைக்காட்சியில் வாரம் ஒருமுறை காட்டப்படுவது குல சாமி 'வேப்பிலைக்காரி' என்றால் தவறு.அதே 'ஜெயா' தொலைக்காட்சியில் தினமும் காலை 'திருப்பதி' பண சாமியைக் காட்டினால் தவறில்லை.என்னே உங்கள் நடுநிலைமை.

/*திருமணம் போன்ற எந்த வீட்டு விஷேசங்களுக்கு கூட இப்போது எங்கள் ஊர்பக்கம் அசைவம் செய்வதில்லை. */

இது எங்கள் ஊரில் வழக்கமில்லை ஆனால் மதுரை பக்கம் வழக்கம் விசேஷத்திற்கு ஆடு கோழி வெட்டுவது.அதனால் பாதகமில்லை அது அவர்கள் கலாச்சாரம்.

உங்கள் கலாச்சாரம் உங்களோடு போகட்டும் எங்கள் மீது திணிக்காதீர் என்பதுதான் குழலியின் பதிவு சொல்லும் சொல்லவரும் கருத்து என நான் உணர்கிறேன்.

அதே சமயம் எங்களின் குல சாமிகளை சாமிகள் இல்லை என்றும் அவர்களுக்கு என்னப் படைக்க வேண்டும் என உத்தரவிடமும்,எங்கள் கலாச்சாரம் நல்லக் கலாச்சாரம் இல்லை எனச் சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை மிகத் தாழ்மையுடன் சொல்கிறேன்.

உங்களின் ஜெயா / வைகோ சார்பு நிலை தவறென்று சொல்லவில்லை அது உங்கள் உரிமை.ஆனால் அதற்காக, எல்லா விசயங்களிலும் அதுவும் இந்த விசயத்தில் மக்களின் உணர்வோடு கலந்த விசயத்தில் உங்கள் சார்பு கல்லை எறியாதீர்கள்.

நன்றி.

ப்ரியன் said...

குழலி அவர்களின் 'அராஜக அதிமுக அரசும் அசைவ சாமிகளும்' படிக்கும் போது சட்டென என் நினைவிற்கு வந்தது குலசாமி நினைத்து முருகனைப்

பற்றி வைரமுத்து எழுதிய 'கொஞ்சம் தேநீர் நீறைய வானம்' தொகுப்பில் இடம் பெற்ற 'கடவுளைப் புரிதல்' கவிதைதான்.அக்கவிதையை உங்களிடம் பகிர்தல் பொருட்டு இங்கே இடுகிறேன்.

'கடவுளைப் புரிதல்'

ஜெயக்குமார் said...

//பிரச்சினை உயிர்பலியிடுவது மட்டுமல்ல எம்மக்களின் உரையாடலை ஒழிக்க முயல்வதும், எம்மக்களின் இருப்பை மறைக்க முயல்வதும் தான்...//

இருப்பும், உரையாடலும் என்ன கற்காலத்திலிருந்து வெளியே வராமலா?

//அதே சமயம் எங்களின் குல சாமிகளை சாமிகள் இல்லை என்றும் அவர்களுக்கு என்னப் படைக்க வேண்டும் என உத்தரவிடமும்,எங்கள் கலாச்சாரம் நல்லக் கலாச்சாரம் இல்லை எனச் சொல்லவும் உங்களுக்கு உரிமை இல்லை மிகத் தாழ்மையுடன் சொல்கிறேன்.//

எங்களுக்கும் குல சாமிகள் உண்டு. சமயன், முனியன், வீரமாகாளி என்று இங்கு பல சமூக மக்களால் தரிசிக்கப்படும் தெய்வங்கள் எல்லா இடங்களிலும் உள்ளன. உன் குலதெய்வத்தைக் கூறு, உன் சாதியை நான் சொல்லுகிறேன் என்று எங்கள் ஊர்ப்பக்கம் கூறுவார்கள். அனேகமாக மற்ற ஊர்களிலும் இதே நிலைதான் என்று கருதுகிறேன். இதற்காக நான் குலதெய்வங்களை வணங்குவதை தவறு என்று சொல்லவில்லை. அந்த நாட்கள் தான் வெளியூரில் குடியேரிய சொந்த பந்தங்கள் எல்லாம் ஒன்றுகூடி தங்கள் சந்தோசங்களை பகிர்ந்து கொள்ளும் நாட்கள். மாறிவரும் நாகரீக சூழ்நிலைக்கேற்ப கிராமங்களும் மாறவேண்டும். ஏரோட்டி உழவு செய்த நாம், இப்போது ட்ராக்டர் வைத்து செய்வதில்லையா?. கையால் கதிரறுத்த காலம் போய் இப்போது இயந்த்திரத்தால் கதிர் அறுப்பதில்லையா?.
கடவுளுக்கு ஆசையாக வளர்த்த மிருக பலி என்பது காட்டுவாசிக்கூட்டங்களையும், கற்காலத்தையும்தான் ஞாபகப்படுத்தும். நமது கிராமத்து நாகரீத்தின் நிறைய நல்ல அம்சங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகின்றன. அதில் கவனம் செலுத்தி அவற்றை பாதுகாக்காமல், அழிக்கவேண்டியவற்றை (பலியிடுதல், அரிவாள்மேல் ஏறிநின்று குறிசொல்லுதல், தன்னை வருத்திக்கொள்ளுதல்(விரதம் தவிர மற்றவை), சிறுவர்களுக்கு முன்னால் கிடாய் வெட்டுதல்) போற்றிபாதுகாக்க முற்படுவது முட்டாள்தனமாகும்.

குழலி / Kuzhali said...

//3 வது போட்டோவில் அதிமுக கரை வேட்டியுடன் நிற்கிறாரே ஒருத்தர் !!!
//
ஊசி உங்கள் பின்னூட்டம் மடல்களில் மறைந்து விட்டது அதான் பிரசுரிக்க என் கண்ணில் படவில்லை, சரியாக பாருங்கள் அது அதிமுக கரை வேட்டி அல்ல, பாமக கரை வேட்டி.... படம் 1.2MB அதை சுருக்கியதில் கரை சரியாக தெரியவில்லை போல

Muthu said...

ஜெயககுமார்,

பதிவின் அடிப்படை உங்களுக்கு நிஜமாகவே புரியவில்லையா? இல்லை வேறு பிரச்சினையா?

சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். தினமலர் படிப்பதை நிறுத்துங்கள் சிறிது நாளைக்கு.

Chellamuthu Kuppusamy said...

நிறைய சித்தாந்தங்கள் நெஞ்சுக்குள் புதைந்திருந்தாலும் அவற்றைப் பற்றியெல்லாம் பேசி/எழுதி நேரத்தை வீணடிப்பது சிலருக்குப் பிடிப்பதில்லை. நம்மால் மாற்ற இயல்கிற செயல்களில் மட்டுமே நம் சக்தியைச் செலவிட வேண்டும் என நினைக்கிற அந்த வெகு சிலரில் நானும் ஒருவன். எனது கருத்து தவறாக இருக்கலாம். உங்களை எல்லாம் பார்த்த பிறகு, தனக்கு உள்ளார்ந்த நிறைவை எது அளிக்கிறதோ அதை ஒருவன் செய்வது தவறில்லை என்றே உணர்கிறேன்.

குப்புசாமி செல்லமுத்து

ஜெயக்குமார் said...

//சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். தினமலர் படிப்பதை நிறுத்துங்கள் சிறிது நாளைக்கு.//

கடந்த ஒருவாரமாக தினமலர் படிக்கவில்லை. நட்சத்திர எழுத்தாளரான உங்கள் பதிவுகளைத்தான் படித்தேன்.

உங்களையெல்லாம் போயி.... சரி வேண்டாம் விட்டுவிடுங்கள்.

ஜெயக்குமார் said...

குழலி, உங்கள் அடுத்த பதிவிற்கு தலைப்பை நானே இங்கு தந்து விடுகிறேன்.

"தமிழக அரசும் - சாலைப்பணியாளர்களும்".

Anonymous said...

//இந்த தண்ணி வண்டிகள் \"மப்புல\" இந்த படையல ஒரு கட்டு கட்டும். அப்புறம் என்ன சண்டை வெட்டு குத்துன்னு கற்காலத்திற்கு அருகிலேயே போய்த்திரும்பும். கிடா வெட்டி பொங்கல் வைக்கும் ஒரு கோவில் திருவிழாவாவது சண்டையில்லாமல் நடக்கிறதா?//
//மாறிவரும் நாகரீக சூழ்நிலைக்கேற்ப கிராமங்களும் மாறவேண்டும்.//
//கடவுளுக்கு ஆசையாக வளர்த்த மிருக பலி என்பது காட்டுவாசிக்கூட்டங்களையும், கற்காலத்தையும்தான் ஞாபகப்படுத்தும்.//

ஜெயக்குமார், இந்த வாதங்கள் ஏற்புடையதாக இல்லை. மிருகபலி என்பதை அருவருக்கத்தக்க ஒன்றாக மாற்றிய கருத்தாக்கத்தின் மீதான விமர்சனத்தைத்தான் குழலி வைத்திருப்பதாக நினைக்கிறேன். Intensive farming என்று ஊரைவிட்டு ஒதுக்கப்பட்ட கொட்டில்களில் வளர்க்கப்பட்டு அறுத்துத் தின்னப்படும் ஆடு, கோழி, பன்றி, மாடு போன்றவை நாகரீகத்தின் சின்னமா அப்போது? மாறிவரும் நாகரீக சூழ்நிலைக்கேற்ப என்பதற்கு அளவுகோல் ஏதும் கிடையாது. கறி தின்றுவிட்டுக் குடித்துவிட்டுக் குத்து வெட்டு கொலை என்று நடப்பது சுயபுத்தி இல்லாததால் - கிராமப்புறங்களில் நடப்பது, பெரும்பாலும் படிப்பறிவில்லாத காரணத்தால். நாகரீகமடைந்த மேற்கத்திய நாடுகளில் அதேமாதிரி கறி தின்றுவிட்டுக் குடிவெறியில் நிகழும் bar fights இருப்பதில்லையா, இல்லை தகராறு செய்பவர்களை பாரை விட்டுத் தூக்கி எறிய மூலைக்கு மூலை bouncerகள் இருப்பதில்லையா? அவை எதனால் நிகழ்கிறது அப்போது? துடிக்கத் துடிக்க ஆடு, கோழி, எருமை தலையை வெட்டுகிறார்கள் என்றெல்லாம் பேசுபவர்கள், கறிக்கடையில் ஆடு, கோழி, மாடுகளை எப்படிக் கொல்கிறார்கள் என்றும் யோசிப்பது நலம். தமிழ்நாட்டில் அனைவரும் மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டால், அப்போது ஜெயலலிதா இந்த சட்டத்தைக் கொண்டுவருவதில் எந்த ஆட்சேபணையும் எனக்கு இல்லை. மனிதமையவாதத்தின் (anthropocentricism) விளைவாக நாம் ஏற்படுத்திக்கொண்டிருக்கும் சேதங்களைப் பட்டியலிடத் தொடங்கினால் நாம் இப்போது மேற்கொள்ளும் \"நாகரீக வாழ்க்கை\" அடிப்படையில் எத்தனை சேதங்களின் மேல் எழுப்பப்பட்டிருக்கிறதென்று தெரியும். இதில் இந்த மிருக பலி போன்றவற்றைக் குறிவைத்து ஜெயலலிதா தாக்குவது எதன் விளைவாய் என்று யோசிக்க உபரி மூளை ஏதும் தேவையில்லை. திரும்பப் பெற்றுக்கொண்டது ஒரு பெரிய சாதனையும் அல்ல; தோல்வியடைந்த ஒன்றைத் திரும்பப் பெற்றுக்கொள்ளாமல் பிறகு என்ன செய்வது?

புதுமைகளை வரவேற்கவேண்டுமென்பதில் தவறொன்றுமில்லை. ஆனால், புதுமைகளை உள்வாங்கையில் கேள்வியேதும் கேட்காமல் போனால், assimilation என்பதற்கும் unconditional surrender என்பதற்கும் வித்தியாசம் தெரியாமல் போனால், செய்வதெல்லாம் கடைசிவரை எதையாவது குருட்டுத்தனமாகப் பின்பற்ற முயன்றுகொண்டிருக்கும் அரைவேக்காட்டுத்தனமாகத்தான் இருக்கும். இதுகுறித்த புரிதல் உங்களிடம் இருக்குமென்று நம்புகிறேன்; ஒருமுகமாக்கல் (homogenization) என்னும் அராஜகக் கருத்தாக்கம் நீங்கள் விரும்பாத தருணமொன்றில் உங்களை இதுவரை தாக்கியிருக்கிறதா தெரியவில்லை - \"என்ன சிங்கப்பூர் போயும்...\" என்ற ரீதியில் குழலியை நீங்கள் கேட்கும் உள்நாட்டிலோ அல்லது நீங்கள் தற்போது வாழும் வெளிநாட்டிலோ, சகநாட்டவராலோ வெளிநாட்டவராலோ, வெளிக் கலாச்சாரக் கூறுகளாலோ - அதன் தாக்கத்தை அனைவரும் என்றேனுமொரு நாள் உணரத்தான்/உணர்ந்திருக்கத்தான் செய்வோம் என்பது என் எண்ணம். செயல்படுத்தும் ஆட்களுக்கேற்ப, நுணுக்கத்தின் அடர்த்தியும் அதிகமாய் இருக்கும். ஆட்கள் செய்யாததை நாட்கள் செய்யும் என்பார்கள் - அவ்வளவுதான்.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Have a look at the debate in Thinnai.It had been reported that
Periyar was against such sacrifices to gods.DK supported Jayalalitaa in this.The issue is more complex than what you have assumed it to be.
JJ later withdrew this.But when was the original bill passed and
JJ the first politician to oppose this.
See thinnai for more details.

ரவி ஸ்ரீநிவாஸ் said...

Jayakumar, it is a question of tradition and change.Some think that tradition should continue without any change.Some want changes to reflect the changing
times and values.You are for the
latter.You dont deny tradition but
want to modify it.There are some positive aspects about this.But i dont expect that there will be
a consensus.Ultimately what we do in the name of and for god(s)/godess(es) tells more about us
than about those gods or godesses.

thiru said...

குழலி நியாயமான பதிவு! கட்சி அடையாளத்துடன் விவாதிப்பவர்களுக்கு இந்த பதிவின் நியாயம் புரியாமல் போகலாம். ஆடு கோழி பலியிடுவது கற்காலம் அல்லது மனிதத்தன்மையல்ல என்பவற்களுக்கு ஒரு கேள்வி. யாகம் என்ற பெயரில் பட்டு பீதாம்பரம், நெய், பழங்கள், பொன் எல்லாவற்றையும் பொசுக்கும் பொருளாதார குற்றம் எந்த வகையில் வருகிறது? அந்த சாம்பலை எந்த தெய்வம் சாப்பிடுகிறதாம்? வாசலில் ஏழைகள் பசித்திருக்க கற்பகிரகத்தில் பால், நெய் என குடம் குடமாக ஓடவிட சாக்கடையில் சங்கமிப்பதை எந்த மனிதத்தன்மையில் சேர்ப்பதாம்? கலாச்சார காவலுக்கு வரும் செல்வி.ஜெயலலிதா அரசும் அவர்களது அடியாட்களும் இதற்கு என்ன பதில் சொல்வார்கள்?

Muthu said...

அய்யய்யோ,

ஜெயகுமார்,நானே என் தலையில் மண்ணை வாரி போட்டுககொண்டேனா?

சாரிங்க..ஒரு வாரம் உங்களை என்னால் தடுக்க முடிஞ்சது..காலம் முழுவதும் முடியுமா? அதான் சொன்னேன்...

//உங்களையெல்லாம் போயி.... சரி வேண்டாம் விட்டுவிடுங்கள்//

சொல்லிடுங்க..நான் ஒரு பொறம்போக்கு..அதானே..

குழலி / Kuzhali said...

//It had been reported that
Periyar was against such sacrifices to gods
//
பெரியார் யாகத்தீயிலிட்டு பொருட்களை எரிப்பதற்கு ஆதரவாகவும் இதற்கு எதிராகவும் இருந்ததில்லை, பெரியார் எல்லா மூட நம்பிக்கைகளுக்கும் எதிராக இருந்தார், உயிர்பலி தடைசட்டத்தின் பின்னனியிலுள்ள இந்து சமயத்தை ஒரு முகப்படுத்தும் முயற்சியும், சாதாரண மக்களின் இருப்பை மறைக்கும் முயற்சியும் மிக மிக கடுமையாக கண்டிக்கத்தக்கது....

ஜெயக்குமார் said...

//சொல்லிடுங்க..நான் ஒரு பொறம்போக்கு..அதானே..//

முத்து, நான் சொல்ல நினைத்தது வேறு. "தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன், உயர்த்தப்படுவான்!" என்பதற்காக நீங்களே உங்களைப்பற்றி இப்படியெல்லாம் கற்பனைசெய்துகொள்ளவேண்டாம்.

Pot"tea" kadai said...

////சொல்கிறேன் என்று கோபித்துக் கொள்ள வேண்டாம். தினமலர் படிப்பதை நிறுத்துங்கள் சிறிது நாளைக்கு.//

கடந்த ஒருவாரமாக தினமலர் படிக்கவில்லை. நட்சத்திர எழுத்தாளரான உங்கள் பதிவுகளைத்தான் படித்தேன்.

உங்களையெல்லாம் போயி.... சரி வேண்டாம் விட்டுவிடுங்கள்.//


////சொல்லிடுங்க..நான் ஒரு பொறம்போக்கு..அதானே..//

முத்து, நான் சொல்ல நினைத்தது வேறு. "தன்னைத்தானே தாழ்த்திக்கொள்பவன், உயர்த்தப்படுவான்!" என்பதற்காக நீங்களே உங்களைப்பற்றி இப்படியெல்லாம் கற்பனைசெய்துகொள்ளவேண்டாம்.//

ஒன்னுமே புரியலே ஒலகத்திலே...என்னமோ நடக்குது மர்மமா இருக்குது...

Muthu said...

jeyakumar,

A BIG THANKS

SnackDragon said...

குழலி இந்த பதிவுக்கு மிக்க நன்றி. ஜெயக்குமார் போன்றவர்களின் அரைவேக்காட்டுத்தன வாதங்களுக்கு பதில் சொல்லிக்கொன்டிருக்காமல், தொடர்ந்து வாய்ப்பு கிடைக்கும் போது இவ்வாறு எழுதுவதை வரவேற்கிறேன்.

ரவி பெரியார் பலிதடுப்பை ஆதரித்தார் என்று சுட்டிக்காட்டி எதைச் சொல்லவ்ருகிறார் என்று தெளிவாகத் தெரியவில்லை.

Anonymous said...

dear kuzhali sir!,
i m new to this blogger area n me also from singapore. ur comments on bloody cannibal jayalaitha r absolutely true n no debate abt it. i m very proud about u n the persons who ever thinks like this. if the percentage of the people like u increses no one cant stop t.n n indias developement. very happy to read such things... pls continue... never mind the interruptions.... good luck!- manickam.

Anonymous said...

enna dmk support-a??????

oru thalai patchmana pathivu