அய்யோ பாவம் ஜெயா / சன் டிவிகள்

ஆட்சி மாற்றம் தமிழகத்திலே நடந்தேறிவிட்டது, திமுக தனிப்பெரும்பான்மையோடோ அல்லது குறைந்த பட்சம் கம்யூனிஸ்ட்கள் துணையோடு ஆட்சி அமைக்கும் நிலை வந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும்... ஐந்தாம் முறையாக முதல்வர் பதவியேற்றிருக்கும் கலைஞர் கருணாநிதிக்கு வாழ்த்துகள், தற்போதைய திராவிட பெரிய ராஸ்கல் (நாங்களெல்லாம் திராவிட ராஸ்கல்கள்) பதவியேற்றிருப்பதால் உடனே தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடப்போவதில்லை, இருந்தாலும் குறைந்த பட்சம் புரட்சித்தலைவி ஜெயலலிதா ஆட்சியில் நடந்த சில உயிர் உரிமை பிரச்சினகள் இருக்காது என்று நம்புவோமாக, ஆதலால் இனி விமர்சிக்க வேண்டியது திமுக கூட்டணி ஆட்சியின் பிரச்சினைகள்.

சரி விடயத்துக்கு வருவோம் இது வரை ஜெயா தொலைக்காட்சியில் தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடியதாகவும், அமைதிப்பூங்காவாகவும் வந்து கொண்டிருந்த நிகழ்ச்சிகள் எல்லாம் இனி மாறி தமிழகத்தில் வறுமை கோர தாண்டவம் ஆடுவதாகவும் கொலை கொள்ளைகள் நிகழ்ந்து இரத்த பூமியாகவும் கலவர பூமியாகவும் இருப்பது போல நிகழ்ச்சிகள் வர ஆரம்பிக்கும், பாவம் ஜெயா டிவி நிருபர்கள் இனி எல்லோரும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டும், சன் தொலைக்காட்சியில் அப்படியே மாறி இருக்கும், இனி தமிழகத்தில் பாலும் தேனும் ஆறாக ஓடும், பழைய நினைப்பில் சன் தொலைக்காட்சியில் தமிழக அரசின் அராஜகங்கள்னு கவனக்குறைவா போட்டுடாதிங்கப்பு, கவனமா இருங்கோ....

இப்போது ஜெயா டிவி ஆரம்பிக்க வேண்டியதை அண்ணன் மாயவரத்தார் வலைப்பதிவில் ஆரம்பித்து விட்டார், இது வரை பாலும் தேனும் ஓடி, அமைதிப்பூங்காவாக இருந்த தமிழகத்திலே திமுக ஆட்சி ஆரம்பித்த உடனே என்னென்னமோ நடக்குதாம்,அண்ணாத்தே ஜெயா டிவில நிருபர் வேலைக்கு கேட்டு இருக்கிங்களா?

29 பின்னூட்டங்கள்:

said...

தி.மு.க-விற்கு தனிப்பெரும்பான்மை எதற்கு? பயப்படாமல், பங்கு போடாமல் கொள்ளை அடிப்பதற்காகவா??

said...

வாங்க தல.. எங்க ரொம்ப நாளா ஆளையே காணும்? எதுவும் மந்திரி பதவி கேட்டு போயிருந்தீங்களா?

மேற்படி விஷயமெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி விருத்தாசலம், ஜெயங்கொண்டம், 31க்கு 18 அப்படீன்னு நீங்க அலசி ஆராய நெறய மேட்டர் இருக்குதே. ஒரேடிய புதுசுக்கு தாவினா எப்பிடி...?! (கடைசி லைனை வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)

ஜெயா டி.வி.யிலே ப்ரொக்ராம் ஹெட் வேலை தர்றதா சொன்னாங்க. நான் அதெல்லாம் முடியாது, முதலில் சன் டி.வி.யிலே சேர்ந்துக்கிறேன். கொஞ்சம் நாளைக்க்கு அப்புறமா இங்கே வர்றேன். அதான் இப்போ டிரெண்டு அப்படீன்னு சொல்லிருக்கேன்.

said...

//தி.மு.க-விற்கு தனிப்பெரும்பான்மை எதற்கு? பயப்படாமல், பங்கு போடாமல் கொள்ளை அடிப்பதற்காகவா??
//
அட நமக்கெல்லாம் கொள்ளையடிப்பதா பிரச்சினை அதெல்லாம் பிரச்சினையாக நினைத்திருந்தால் கொள்ளையடிப்பதில் புரட்சி செய்தவர்களையே ஏற்கனவே மன்னித்து ஆட்சியில் அமர்த்தியிருந்தோம்? அட போங்க...

said...

//வாங்க தல.. எங்க ரொம்ப நாளா ஆளையே காணும்? எதுவும் மந்திரி பதவி கேட்டு போயிருந்தீங்களா? //
வீட்டுக்கு அப்பா,அம்மா வந்து இருக்காங்க சொந்த வேலை அதான்... மந்திரி பதவியா? உங்களுக்கே போன தடவை கிடைக்கலை, எனக்கு எப்படி இப்போ?

//மேற்படி விஷயமெல்லாம் பேசுறதுக்கு முன்னாடி விருத்தாசலம், ஜெயங்கொண்டம், 31க்கு 18 அப்படீன்னு நீங்க அலசி ஆராய நெறய மேட்டர் இருக்குதே. ஒரேடிய புதுசுக்கு தாவினா எப்பிடி...?! (கடைசி லைனை வடிவேலு ஸ்டைலில் படிக்கவும்)//
இருங்க தேர்தல் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை எழுதிக்கொண்டிருக்கேன், இது மாதிரி பதிவு போட 10 நிமிடத்தில் தட்டச்சு செய்தால் போதுமே, ஆனால் தேர்தல் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை அப்படியா?

said...
This comment has been removed by a blog administrator.
said...

//ஜெயா டி.வி.யிலே ப்ரொக்ராம் ஹெட் வேலை தர்றதா சொன்னாங்க. நான் அதெல்லாம் முடியாது, முதலில் சன் டி.வி.யிலே சேர்ந்துக்கிறேன். கொஞ்சம் நாளைக்க்கு அப்புறமா இங்கே வர்றேன். அதான் இப்போ டிரெண்டு அப்படீன்னு சொல்லிருக்கேன்.
//
அடேடே அப்போ ஏற்கனவே தனியா சேனல் வைத்திருந்திங்களா?

சரி அண்ணாத்தே இன்னைக்கு என்ன பிரச்சினை தமிழ்நாட்டில்? இன்று வேறு எதில் புரட்சிதலைவி கருணாநிதியிசத்தை பின்பற்றுகிறார்? கருணாநிதியிசத்தை புரட்சிதலைவி பின்பற்றுகிறார் என நினைத்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் புரட்சிதலைவி காலில் விழாமல் இருந்து விடப்போகிறார் பாவம் அவர் பொழப்பு போயிடும்

said...

கருணாநிதி- ஜெயலலிதா கேவலங்கள், குழலி-மாயவரத்தான் மூலம் வலைப்பதிவில் நடப்பதைப் பார்க்க அருவறுப்பாய் இருக்கிறது!

ஜெ டிவி- சன்டிவி பற்றிய பதிவில் தேவையில்லாமல் 'மா' வை இழுத்ததும், அதற்கு 'மா' பதில் சொன்னதும், 'குழலி' மறுபதிலென மதியிழந்ததும் பார்க்க, நம்மைப் போலத்தான் தலைவர்கள் அமைவார்கள் என ஒரு அறிஞன் சொன்னது நினைவுக்கு வந்து வேதனையை அதிகரிக்கிறது!

ஏதோ ஒருவர்தான் வெல்லமுடியும்!

ஒருவர் வென்றுவிட்டார்!

விட்டுத் தொலையுங்களேன் அய்யா, கொஞ்ச காலத்திற்கு!

இவர்கள் இருவரும் என்ன செய்வார்கள் என்பதுதான் நாற்பது வருஷமாய் நமக்குத் தெரியுமே!

படித்ததின் அழகு பண்பறிதல்1

அவனை நிறுத்தச் சொல்லு, நான் நிறுத்துகிறேன் என்பதல்ல!

வெட்கமாயிருக்கிறது!

இதை நல்ல முறையில் முடிக்க வேண்டுமென யாராவது விரும்பினால், முதலில் 'மா' பற்றிய இணைப்பைத் தூக்கிவிட்டு, .....மன்னிப்பு கேட்க வேண்டாம்,..... மறுப்பவது சொல்லி கண்ணியம் காருங்கள்!

இந்த என் பதிவை அனுமதிப்பீர்கள் என நம்புகிறேன்!

நம்முள் சண்டை வேண்டமென்ற நல்லெண்ணத்தில் சொன்னதைப் புரிந்து கொள்வீர்கள் எனவும் நம்புகிறேன்!

நன்றி!

said...

வணக்கம் குழலி(கடலூர் காட்டான்)!!??
அரசியல் சார்ந்த வலைப்பதிவுகள் சரி (இதை விட்டால் வேறு எதுமே எழுத அகப்பட மாட்டேன்கிறது பெரும்பாலோர்க்கு),ஆனால் அதில் ஏதும் தர்க்க ரீதியாக விவாதம் பண்ணும் நோக்கம் இல்லையே! தனியாக வலை பின்னி கொண்டு இருக்கும் மாயவரத்தானை(அவர் யாருக்கு வேண்டுமானாலும் வெண் சாமரம் வீசட்டுமே) இழுத்து வைத்து கும்மாங்குத்து விடும் ஆசை தான் தெரிகிறது !

said...

ஆமாம் ஆமாம்.. ஓ.பி. அலட்சியமாக போக அவர் ஜெ.வின் மகனா, பேரனா?!

said...

குழலி,

வாழ்த்துக்ள் - இட்லி வடையாரின் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு.

said...

அண்ணே எஸ்.கே. அண்ணே கொஞ்சம் பொறுமை.... அவசரப்படாதிங்க....ஆத்திரப்படாதிங்க.... நானும் மாயவரத்தானும் ஒருவர் காலை ஒருவர் இழுப்பது ஓராண்டாக வலைப்பதிவில் நடைபெறும் விடயம் எங்கள் இருவருக்குமே எல்லை எதுவென தெரியும், ஏழைஜாதி படத்தில் லியாகாத் அலிகான் எழுதிய வசனத்தை 'கேப்டன்' விஜயகாந்த் மூச்சு விடாமல் பேசுகிற மாதிரி மூச்சு விடாமல் பஞ்சாயத்து செய்கின்றீர்.

said...

//குழலி,

வாழ்த்துக்ள் - இட்லி வடையாரின் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு.
//
நானே இட்லிவடையாரின் விளக்கத்தை எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறேன் எப்படி தேர்வு செய்தாரென ஹி ஹி

said...

//கருணாநிதி- ஜெயலலிதா கேவலங்கள், குழலி-மாயவரத்தான் மூலம் வலைப்பதிவில் நடப்பதைப் பார்க்க அருவறுப்பாய் இருக்கிறது!
//
அப்போ பஞ்சாயத்து செய்யும் எஸ்.கே. அண்ணன் தான் விஜயகாந்தா?

said...

முந்தைய என் பதிலுக்கு போட மறந்த ஸ்மைலி இங்கே :-)

said...

என்ன வெளயாட்டு இது? எஸ்.கே. அண்ணாத்தே... //எங்கள் இருவருக்குமே எல்லை எதுவென தெரியும்// இது எல்லாருக்குமே தெரிஞ்ச மேட்டராச்சே. தப்பா புரிஞ்சுகிட்டீங்க எஸ்.கே. :D

said...

//கருணாநிதி- ஜெயலலிதா கேவலங்கள், குழலி-மாயவரத்தான் மூலம் வலைப்பதிவில் நடப்பதைப் பார்க்க அருவறுப்பாய் இருக்கிறது!//

//
நானும் மாயவரத்தானும் ஒருவர் காலை ஒருவர் இழுப்பது ஓராண்டாக வலைப்பதிவில் நடைபெறும் விடயம் எங்கள் இருவருக்குமே எல்லை எதுவென தெரியும்,//

அய்யா குழலி,
நான் தங்களை பெரிதும் மதிப்பவன்!
தங்களின் மேற்கண்ட மறுமொழியால், எனது இருபதாண்டு ஐயத்தை உறுதி செய்திருக்கிறீர்களே அன்றி வேறில்லை!

அந்த 'இருவர்' போலத்தான் நீங்கள் 'இருவரும்' என்றறிந்து ஓரம் கட்டுகிறேன்
நானிங்கு!

said...

இதை நல்லெண்ணமாய்க் கொள்ளாமல் பஞ்சாயத்து எனக் கொண்ட உங்கள் திறனெண்ணி மருகுகிறேன், 'குழலி'!

இன்று விஜய் டிவியில் பாக்கியராஜின் 'பாமா ருக்மணி' படம் பார்த்தேன்!
அதில் வந்த கடைசிக் காட்சிதான், ['நாய்வால்'] நினைவுக்கு வருகிறகு!

கடை விரித்தேன்!
கொள்வாரிலை!!

வாழ்க! வளர்க!

said...

ஸ்மைலி போடும் அவசரத்தை என் பின்னூட்டத்தைப் பதிவதிலும் காட்டுவீர்கள் என நம்புகிறேன்!

said...

குழலி,

சின்ன சின்ன கலாட்டாக்களை கூட பெரிதாக மாயவரத்தான் எழுதட்டும். இன்னும் அவர் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை. அவர் எழுதுவதும் நல்லதுதான்.

நாளை உண்மையிலேயே ஏதாவது பெரிய தவறை கலைஞர் செய்யும்போது இவர் அதை எழுதினால் இதே போல் நினைத்து மக்கள் சிரித்துவிட்டு செல்வது நல்லதுதானே? இப்போது ஜெயாடிவியை யாராவது பார்க்கிறார்களா என்ன?

ஐந்து வருடங்களுக்கு தமிழனை தமிழனே ஆளுவது என்பதை மாற்ற முடியாது.இந்த அதிர்ச்சி சில நாட்களுக்கு இருக்கத்தான் செய்யும்.விடுங்கள். நீங்கள் சொன்ன அந்த லிமிட் மேட்டரும் சரிதான்.

நினைத்தது நடக்காத அதிர்ச்சியில் சப்பை மேட்டரையெல்லாம் விமர்சிப்பதையே தொழிலாக நடத்துவது ஜெயாடிவிக்கு மட்டும் காப்பிரைட் போட்டதா என்ன?

(ஜெயாடிவியில் கலைஞரை புகழ்ந்து பேசும் கலைஞரின் கைமாறு நிகழ்ச்சியை பார்த்தீர்களா?)



btw what post you expect in DRMM (dravida rascals munettra munnani)..

we are ready to offer any post..becos you are the pioneer in our efforts to take alternate views to the masses

said...

//நாளை உண்மையிலேயே ஏதாவது பெரிய தவறை கலைஞர் செய்யும்போது இவர் அதை எழுதினால் இதே போல் நினைத்து மக்கள் சிரித்துவிட்டு செல்வது நல்லதுதானே?//

மக்கள் முட்டாள்கள் என்ற உங்கள் கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு நன்றி.

said...

//ஐந்து வருடங்களுக்கு தமிழனை தமிழனே ஆளுவது என்பதை மாற்ற முடியாது//

நல்லவேளை... நிரந்தர முதல்வர் அது இதுவென்று உளறிக் கொட்டுவீர்களோ என்று நினைத்தேன். அஞ்சு வருஷம் கழிச்சு வூட்டுக்கு அனுப்பிடுவாங்க இல்ல? அப்ப எனக்குதேவைப்படும்னு ஒரு சிலரின் பின்னூட்டங்களை சேமித்து வைத்துக் கொள்கிறேன். :D

said...

அய்யா குழலியாரே,

எனக்கு ஒரு உண்மை தெரிந்தாகணும் "இட்லி வடை" நீர் தானோ?

//இருங்க தேர்தல் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை எழுதிக்கொண்டிருக்கேன், இது மாதிரி பதிவு போட 10 நிமிடத்தில் தட்டச்சு செய்தால் போதுமே, ஆனால் தேர்தல் போஸ்ட் மார்ட்டம் அறிக்கை அப்படியா?//

இன்று இட்லி வடை "தேர்தல் போஸ்ட் மார்ட்டம் " என்ற பெயரில் பதிவிடுகிறார்.


விளக்கவும்....

said...

//இன்று இட்லி வடை "தேர்தல் போஸ்ட் மார்ட்டம் " என்ற பெயரில் பதிவிடுகிறார்.
//
அடப்பாவி மக்கா இதெல்லாம் ஒரு இது.... அவ்ளோதான், இட்லிவடை யாருனு உங்களை மாதிரியே எனக்கும் தெரியாது...

said...

**இட்லிவடை யாருனு உங்களை மாதிரியே எனக்கும் தெரியாது...**

ennaku theriyum

inthanga address

Bala Idly vadai
c/o saltless chattini
p.o box no 1234
Boston
u.s.a

said...

அன்பு நண்பர் குழலி அவர்களுக்கு,

வாழ்த்துக்ள் - இட்லி வடையாரின் போட்டியில் முதல் பரிசு பெற்றதற்கு.

இன்று காலையில் ஜெயா டிவி செய்திகள் பார்த்தேன், பழைய சன் டிவியின் சேவையை இவர்கள் கையில் எடுத்து கொண்டார்கள் போல், ஒரே கலவரம், அடிதடி, ரத்தம் என்று காட்டினார்கள். ஆக இனிமேல் ஒரே கூத்தாக தான் இருக்கும்.

said...

//btw what post you expect in DRMM (dravida rascals munettra munnani)..//
கொள்கை பரப்பு செயலாளர் பதவி கொடுத்தால் மகிழ்ச்சியடைவேன், அப்போதானே அடுத்ததா பொதுச்செயலாளர் அதுக்கப்பால முதலமைச்சர் அப்படினு போய்கிட்டே இருக்கலாம், நானென்ன தலைவர் மகனா, தோழியின் குடும்பமா, இல்ல நடிகரோட இல்ல இல்ல தலைவரோட மச்சானா ஜிங்குனு நேரா உச்சிக்கு போக....

//we are ready to offer any post..//
மிக்க நன்றி கொ.ப.செ. கொடுங்கள் அது போதும்.

//becos you are the pioneer in our efforts to take alternate views to the masses
//
ஹி ஹி... ரொம்பத்தான் உங்களுக்கு இது....

//
ennaku theriyum

inthanga address

Bala Idly vadai
c/o saltless chattini
p.o box no 1234
Boston
u.s.a
//
overto Idlyvadai and Boston Bala...

said...

>> மிக்க நன்றி கொ.ப.செ. கொடுங்கள் அது போதும். >>

ஆத்தாடி! வம்பால்ல இருக்கு! எல்லாரும் கொ.ப.செ கேக்குறாங்களே!

ஏற்கெனவே பாலபாரதி கேட்டுட்டாரு! நானும் ஒரு நப்பாசையில கொ.ப.செ விண்ணப்பம் போட்டுப் பாத்தேன்!

இப்ப பெரிய 'தலைங்க' எல்லாம் கேக்குறதால...

உடல் இணையத்துக்கு!..உயிர் தி.ரா.மு.மு-க்கு! என் உயிர் உள்ளவரை தி.ரா.மு.மு-வில அடிமட்டத் தொண்டனா இருப்பேன் என்று ஆணையிட்டுக் கூறுகிறேன்! ;)

said...

//பாவம் ஜெயா டிவி நிருபர்கள் இனி எல்லோரும் ஓவர் டைம் வேலை செய்ய வேண்டும்,//

:)

இதை நேரடியாக காண்பவர்களில் நானும் ஒருவன்!

said...

பேசாமல் சன் டிவியிடன் வறட்சி கேசட்டுகளை ஜெயா டிவியும், ஜெயா டிவியிடம் இருக்கும் பசுமை கேசட்டுகளை சன் டிவியும் பண்டமாற்று முறையில் வாங்கிக் கொள்ளட்டுமே?