தலைமுறை வலிகள்

தமிழ்மணம் விவாதகளத்தில் நான் இட்ட பின்னூட்டம் இன்னும் வெளியாகவில்லை, நான் இட்டு வெகுசில மணி நேரங்களே ஆகியிருந்தாலும் அது வெளி வரும் வரை பொறுமையில்லாததால் இங்கே அவைகள்.

விவாதகளத்தில் இருந்த பின்னூட்டங்களை படித்துவிட்டு வந்தால் எளிதாக புரியும்.

இடஒதுக்கீடு பற்றி ஒரு தவறான புரிதலை தந்துவிட்டு அதை நான் குறிப்பிட்டு எழுதியபோது

//திரு.டோண்டு சொல்லிய மாதிரி,”அவரவர் கவலை அவருக்கு. பாதிக்கப்பட்டவர்தான் அதன் வேதனை உணர்வர்”.நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை. உங்கள் கருத்தை சொன்னதற்கு நன்றி//

என்று குறிப்பிட்டார்.

அவருக்கு அவர் வலி எழுத தூண்டியதென்றால், எங்களுக்கோ தலைமுறை தலைமுறையான வலி..... என்ன செய்ய தூண்டும்????


இனி என் பின்னூட்டம்

சற்று உணர்ச்சி வசப்படாமல் சொந்த அனுபவங்களை தூரவைத்துவிட்டு சில விடயங்களை பார்ப்போம், ஒரு மாணவன் இன்று இருக்கும் கல்வி முறையில் மதிப்பெண்கள் வாங்குவது என்பது அவனுடைய சொந்த திறமையை மட்டும் பொறுத்ததல்ல, அதற்கு பல காரணிகள் உண்டு

குடும்ப சூழல்
சுற்றுப்புற சூழல்
பெற்றோர்களின் விழிப்புணர்ச்சி மற்றும் அக்கரை
பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு ஏற்படுத்தும் விழிப்புணர்ச்சி
கல்வி கற்கும் இடம் (நகரம், கிராமம் மற்றும் தரமான பள்ளிகள்)
இதோடு மாணவனின் தனிப்பட்ட திறமை மற்றும் குடும்ப பொருளாதாரம்(+2 மதிப்பெண்களுக்கு குடும்ப பொருளாதாரம் ஒரு சிறிய காரணி மட்டுமே, +2 மதிப்பெண்களுக்கு இது பெரும் முக்கிய காரணியாக இருப்பதில்லை)

இப்படி பல காரணிகள் இருக்குமிடத்தில் மாணவனின் தனிப்பட்ட திறமை தவிர்த்து மற்ற எல்லா
காரணிகளுக்கும் பெரும்பாலும் சாதியே காரணமாக இருக்கின்றது.உங்கள் சுற்றுப்புற சூழலிலிருந்தே உதாரணம் தருகிறேன், தனிப்பட்ட திறமை என்பதை தவிர ஒரே சமூகம், ஒரே பள்ளி, ஒரே மாதிரியான குடும்ப சூழலில் இருந்து உங்கள் தெரு தம்பி(எனக்கு அண்ணா) பத்ரி ஐ.ஐ.டி சென்று படித்துள்ளார், இன்னொருவர் இரு முறை ஐ.ஐ.டிக்கு முயற்சி செய்து இடம் கிடைக்காமல் ஜி.இ.சி. திருநெல்வேலியில் பொறியியல் படித்தார், இன்னும் ஒருவர் அரசு பொறியியல் கல்லூரியில் படித்தார் (இந்த இருவரும் வலைப்பதிவிற்கு தொடர்பில்லை என்பதால் அவர்கள் பெயரை சொல்வதை தவிர்க்கிறேன்), ஒரே மாதிரியான குடும்ப சூழல், சுற்று சூழல், சமூக சூழல் இருந்தும் பத்ரி தொட்ட இடத்தை மற்ற இருவர் தொடவில்லை, மற்ற இருவர் தொட்ட இடத்தை இன்னொருவர் தொடவில்லை என்றால் அது அவரவர்களின் தனிப்பட்ட திறமையில் உள்ள வித்தியாசம்.

உதாரணத்திற்கு நீங்கள் எடுத்த மதிப்பெண்களே எடுத்திருந்த ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது மிக பிற்படுத்தப்பட்ட மாணவன் எடுத்து அவருக்கு பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்த தனக்கு கிடைக்கவில்லை என்றால் அந்த தாழ்த்தப்பட்ட, மிக பிற்படுத்தப்பட்ட மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் அதே மதிப்பெண்கள் எடுத்த உயர்சாதி மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியும் ஒன்றா?(ஒரு சில விதிவிலக்குகள் தவிர்த்து) இல்லையே, அப்போது மாணவனின் குடும்ப சூழல், சமூக சூழல், இடம் , பொருளாதாரம், பெற்றோர்களின் விழிப்புணர்ச்சியில் தாழ்வு இருக்கும்போது ஒரு உயர்சாதி மாணவன் வாங்கும் அதே மதிப்பெண்களை ஒரு தாழ்த்தப்பட்ட அல்லது பிற்படுத்தப்பட்ட மாணவன் வாங்குகிறான் என்றால் இவ்விரு மாணவர்களின் திறமையும் சமமா? இல்லையே திறமைய் தவிர்த்து மற்ற சூழல்களில் குறைபாடு உள்ளவர்களை சமப்படுத்த தான் இடஒதுக்கீடு.

45கிலோ எடை உள்ளவன் 100கிலோ பளுதூக்கி 45கிலோ பிரிவில் தங்கம் வாங்கியவனை பார்த்து, 100கிலோ எடையுள்ளவன் ஹெவிவெயிட் பிரிவில் 100கிலோ பளு தூக்கி 10வது இடம் பிடித்து மெடல் வாங்காதவன் நானும் 100கிலோ தூக்கினேன், அவனும் 100கிலோ தூக்கினான் அவனுக்கு மட்டும் தங்கப்பதக்கம், எனக்கும் ஒன்றுமில்லையே என் வலி எனக்கு தான் தெரியும் என்று புலம்புவது சரியான செயலாகுமா?

இந்த பின்னூட்டத்தை எடிட் செய்து விடாதீர்கள் அல்லது நிறுத்திவிடாதீர்கள், "நான் பட்ட வலி அவ்வாறு எழதத்தூண்டியது.அதில் தவறு இருப்பதாக தெரியவில்லை." என்று சொன்னதாலேயே அவரின் ஊர் நண்பர்களை உதாரணம் காட்டி பேசவேண்டியதாகிவிட்டது.

21 பின்னூட்டங்கள்:

said...

இந்தபதிவில் கோபம் கொண்ட வடுவூர் குமாருக்கு நான் இட்ட பின்னூட்டம்

//1977யில் எனக்கு நடந்தது என்றால் உங்களுக்கு 2001யிலா?
தமிழகம் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.
//
உங்களைப்போன்றே குடும்பசூழல், சாதி சமூக சூழல் எல்லாம் ஒரே மாதிரி இருந்த பத்ரி மட்டும் ஐ.ஐ.டி. போனது எப்படிங்க? இது பற்றி விரிவாக

href="http://kuzhali.blogspot.com/2007/02/blog-post.html">இங்கே பதில் சொல்லியிருக்கிறேன்



//கல்வியை இலவசப்படுத்தட்டும்,ஆனால் இட ஒதுக்கீடு கூடாது.//
ம்... சரிதான் இந்த சொரனை தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு முன்பே வராமல் போனதால், சில ஆயிரம் ஆண்டுகளாக 100% இடஒதுக்கீடு வழங்கிவிட்டார்கள்

உயர்த்தப்பட்ட சாதியினருக்கு, இப்போ கூட அனைவரும் அர்ச்சகராகலாம் என்று சட்டம் வந்தால் அதில் 100% இடஒதுக்கீடு கேட்டு நீதிமன்றம் போகிறார்கள்.

//அதுவும் இத்தனை
நாள் வசதியை அனுபவித்த பிறகு.
கொடுத்த ஒன்றை நிறுத்த வழிதெரியாத திட்டம்.
நினைக்க நினைக்க கோபமாக வருகிறது.//
50 வருசத்திலேயே உங்களை போன்றவர்களுக்கு வந்த சொரனையும் கோபமும் என் பல ஆயிரம் ஆண்டுகள் உயர்த்தப்பட்டவர்களை அனுபவிக்க விட்ட முந்தைய

தலைமுறை தாழ்த்தப்பட பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வராததை நினைத்தால் எனக்கும் கோபம் கோபமாக வருகிறது

said...

டோண்டு, குமார் போன்றோருக்கு இன்னும் எத்தனை வருடம் பதில் சொல்லுவதாக உத்தேசம். பெரியவர் டோண்டு பாஷையிலேயே சொல்லனும்னா போங்கட போக்கத்தப் பயலுவலான்னு போயிட்டே இருக்க வேண்டியது.

சபர்வால் என் கிற டாபர் போறப்போ பன்னாடைத் தனமாக உளறிக்கொட்டித் தீர்ப்பு வாசிச்சிட்டு போச்சு. அதை வைத்து கேஸா போட்டுத் தாக்கிடலாம் என பகல் கனவு காணுகிறது சில அய்ட்டங்கள்.

அதுசரி வடுவூர் குமார் கட்டுமாணத் தொழில் பற்றி தானே எழுதிகிட்டு இருந்தார். சொந்தக்காரரோட வேலையை காண்ராக்ட் எடுத்துக்கிட்டாரோ வலையில்?

said...

//டோண்டு, குமார் போன்றோருக்கு இன்னும் எத்தனை வருடம் பதில் சொல்லுவதாக உத்தேசம்.//
எத்தனை வருடம் அவர்கள் பேசுகிறார்களோ அத்தனை வருடங்களும் பதில் தருவதாக உத்தேசம், உண்மையற்ற ஒன்றை அவர்கள் உரக்க சொல்லும்போது உண்மையை அதைவிட உரக்க பதியவேண்டும், ஒரு கட்டத்திற்கு மேல் அலுப்பாகத்தான் உள்ளது, ஆனாலும் அவர்களை போன்றவர்கள் சலிக்காமல் செயல்படும்போது எதிர்ப்பதிலும் தொய்வு ஏற்படக்கூடாது, ஏமாந்த நம் முன்னோர்களைப்போல நாமும் நம் சந்ததிகளும் இருக்கக்கூடாது, அதற்காகவே இந்த குரல் பதியப்படவேண்டும்.

//சபர்வால் என் கிற டாபர் போறப்போ பன்னாடைத் தனமாக உளறிக்கொட்டித் தீர்ப்பு வாசிச்சிட்டு போச்சு. அதை வைத்து கேஸா போட்டுத் தாக்கிடலாம் என பகல் கனவு காணுகிறது சில அய்ட்டங்கள்.
//
கேஸ் போடவே வேண்டாமாம், ஏற்கனவே உச்சநீதிமன்றமே கேசை எடுத்துக்கொண்டது, இந்த உச்சநீதிமன்ற புனித பசுவுக்கு அது கொடுத்த மாறுபட்ட தீர்ப்புகளோடு ஏற்கனவே ஒரு முறை அம்பலப்படுத்தியிருந்தோம், இன்னமும் நிறைய இருக்கின்றது.

said...
This comment has been removed by a blog administrator.
said...

//தலைல பிறந்துட்டா மட்டும் போதாது ஓய்...நம்ம தலக்கனத்த தூக்கிபோட்டு மத்தவங்களையும் மதிப்போட தலை வணங்கனும் ஓய்!
//
இடஒதுக்கீட்டால என்து போயிடுச்சி போயிடுச்சினு பொலம்பறது ஒரு ஃபேஷனாயிடுச்சி, நோண்டி பார்த்தாதான் தெரியும் கேசவன் சார் கதையில வந்த மாதிரி பெயிலா போன பசங்களோட அப்பாவும், தாழ்த்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட பசங்களுக்கு கிடைக்காத பெஸ்ட் பேக்கிரவுண்டு இருந்தும் மார்க்கு வாங்காத கையாலாகதவர்களும் புலம்பும் புலம்பல்... இப்படி புலம்பறவங்க கோட்டா ஆளுங்க சாதியிலயும் குடும்பத்திலும் பொறந்திருந்தா இந்த அளவுக்கு கூட மார்க்கு எடுத்திருக்க மாட்டாங்க, ஏன் பெயிலா கூட போயிருப்பாங்க.... எங்க காலேஜ்லயே என் கூட படிச்ச ஒரு பையன் இப்படிதான் பொலம்புவான் அப்புறம் தான் அவன் கதை பழுத்துச்சி, அதை அப்புறம் தனிப்பதிவா போடுறேன்....

said...

தெளிவான அலசல்.
நன்றி.

said...

குழலி,

உங்கள் பின்னூட்டம் விவாதக் களத்தில் வரவில்லை. நீங்கள் கொடுத்தது மட்டுறுத்தலிலும் இல்லை. உங்கள் இடுகையின் சுட்டியை நான் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

மா சிவகுமார்

said...

//குழலி,

உங்கள் பின்னூட்டம் விவாதக் களத்தில் வரவில்லை. நீங்கள் கொடுத்தது மட்டுறுத்தலிலும் இல்லை. உங்கள் இடுகையின் சுட்டியை நான் இணைத்துள்ளேன்.

அன்புடன்,

மா சிவகுமார்
//
மா.சி. உங்கள் விளக்கத்திற்கு மிக்க நன்றி, நான் இரண்டு மூன்று முறை அந்த பின்னூட்டத்தை அளித்தேன், முதல் முறை உங்கள்(என்) ஐ.பி. ஸ்பேமாக கருதப்பட்டு தடை செய்வதாக சொன்னது, அடுத்தடுத்த முறைகள் முயன்றபோது டூப்ளிக்கேட் கண்டென்ட் என கூறியது. சுட்டி தந்தமைக்கு நன்றி

said...

http://bharathi-kannamma.blogspot.com/2006/06/blog-post_115089456769006001.html ல் நான் இட்ட பின்னூட்டம் இந்த பதிவுக்கும் தொடர்பு உள்ளதால் இங்கேயும்.

//ஓவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தாழ்த்த்ப் பட்ட/பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் நிரம்பாமலேயே இருப்பதை செய்திதாள்களில் நீங்கள் பார்க்கலாம்.
//
தொடக்கத்தில் சில ஆண்டுகள் வேண்டுமானால் அப்படி இருந்திருக்கலாம், ஆனால் தற்போது நிலமை அப்படியில்லை...

காலியாக உள்ள இடங்கள் பற்றிய தினமலர் செய்தி

அண்ணா பல்கலை கழகத்தின் இணைய பக்கத்திலிருந்து எடுத்த புள்ளிவிபரம்
http://www.annauniv.edu/tnea06/rama21.doc

Consolidated Vacancy Report

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, அண்ணா பல்கலையிலும் அரசு கல்லூரிகளிலும் இடங்கள் காலி இல்லை.

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் க்ரீமிலேயரையும் முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

தொடக்க காலங்களில் ஏன் காலியிடங்கள் இடஒதுக்கீட்டில் இருந்ததென்றால் உயர்கல்விக்கான அடிப்படை படிப்பை முடித்தவர்கேள் கிடைக்காத நிலை இருந்தது இப்போது அப்படியில்லை, மேலும் முதன் முதலில் இடஒதுக்கீடு சட்ட திருத்தத்தை மேற்கொண்ட போது அப்போதைய பிரதமர் கூறினாராம் இந்த சட்டம் பலன் தர ஆரம்பிக்கவே இன்னும் 20 வருடங்கள் ஆகும் என்றாராம்.

நம் தலைமுறைக்கு இரு தலைமுறை (தாத்தா தலைமுறை, வெறும் 60 அல்லது 70 ஆண்டுகளுக்கு முன்) பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் பள்ளி படிப்பை முடித்தவர்களே கிட்டத்தட்ட இல்லை எனலாம், நமக்கு முந்தைய நம் தந்தை தலைமுறையில் (30 ஆண்டுகளுக்கு முன்) கிடைத்த இடஒதுக்கீடு(அதுவும் கூட தமிழகத்தில் மட்டும் தான் நல்ல பலன் தந்துள்ளது) அவர்கள் இடைநிலை ஆசிரியராகவும், கிளார்க்காகவும், பியூனாகவும் ஆக நான்காம் கிரேட் 'டி' பிரிவு அலுவலர்களாக வேலைக்கு சேர்ந்து அவர்கள் பிள்ளைகளை படிக்க வைக்கவும் தான் மூன்றாம் தலைமுறை அதாவது நம் தலைமுறை இப்போது தான் பொறியியல், மருத்துவம் போன்ற தொழில்கல்விகளுக்கான அடிப்படை தகுதியே பெற ஆரம்பித்துள்ளது, அதனால் தான் தற்போது இடஒதுக்கீட்டு இடங்கள் காலியாக இருப்பதில்லை. படிப்பறிவே இல்லாத தலைமுறையிலிருந்து சட்டென்று ஹைஜம்ப்பாக ஐ.ஐ.டியில் சேருவது இயலாத கதை, அப்படி சேரும்போது தலைமுறை தலைமுறையாக முறையான படிப்பறிவோடு வரும் மாணவர்களோடு போட்டி போடமுடியவில்லை என்று ஒதுக்கப்பட்டு கல்லூரி டிராபவுட்டுகள், சீட் நிரம்பாத பிரச்சினைகள் ஏற்படும்.

இப்போதும் கூட க்ரீமிலேயர் ஒப்பாரி வைக்கும் உயர்த்தப்பட்ட சாதியினரின் முதலைக்கண்ணீருக்கு காரணம் தற்போது இடஒதுக்கீட்டால் ஒரே ஒரு படி முன்னேறியவர்களின் குழந்தைகளால் தான் ஐ.ஐ.டி போன்ற கல்வி நிறுவனங்களுக்கு அவர்கள் குழந்தைகளை தயார் செய்ய முடியும், இவர்களை ஒதுக்கிவிட்டால், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் கல்வியறிவே இல்லாத தலைமுறையிலிருந்து ஹை ஜம்ப்பாக ஐ.ஐ.டி வரமுடியாது இந்த காரணத்தை வைத்து இடஒதுக்கீட்டையே கபளீகரம் செய்யவேண்டுமென்பது தான், பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஏழைகளுக்காக முதலை கண்ணீர் வடிக்கும் உயர்த்தப்பட்ட சாதியினர் முதலில் ஓ.சி.யில் க்ரீமிலேயரை கடைபிடித்து ஏழை எப்.சி. மாணவர்களுக்கு உயர்த்தப்பட்ட சாதியின் க்ரீமிலேயர் வழிவிடட்டும். இது தொடர்பான கட்டுரை இங்கே

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

அவரவர்கள் சொந்த அனுபவம் பெறுமதியானது, ஆனால் அதை வைத்துதான் மொத்த சமூகத்தையும் பார்ப்பேன் என்றால் உங்கள் ஒருவரின் சொந்த அனுபவத்தை விட பன்மடங்கு வலியான தலைமுறை தலைமுறை வலிகள் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களிடம் உள்ளது, உயர்த்தப்பட்ட சாதியில் இருப்பவர்களுக்கு கிடைக்கும் படிப்பானது வெறும் இன்னொரு ஆளுக்கு கிடைக்கும் படிப்பு, ஆனால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒருவனுக்கு கிடைக்கும் படிப்பானது அவனுடைய சந்ததிகள் அவன் வருங்கால தலைமுறையே மேலும் ஒரு அடி முன்னேற கிடைக்கும் வாய்ப்பு.

said...

குழலி,

செம டமாஸ் பண்றீங்க சார். 92% வாங்கி B.E. சீட் கிடைக்காம டிப்ளோமோவோட நிறுத்திக்கிட்டேனுங்க.. இத்தனைக்கும் நீங்க கரிச்சு கொட்டுற பாப்பன சாதி இல்லீங்கோவ்.. சாதாரண கவுண்டபயமாருங்க.. ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க... இத்தினிக்கும் அவுக நல்லா மாடிவூடு கட்டி காரு வச்சிட்டிருக்கிற ஆளுங்க... நாம கஞ்சிக்கு என்ன பன்றதுன்னு அவதி பட்ட ஆளுங்க.

அதென்னமோ கடவுள் புண்ணியத்துல டிப்ளோமா முடிச்ச பின்னாடி தனியார் கம்பேனி ஒண்ணு தெறமய காட்டுன்னு சான்ஸ் குடுத்தானுவ.. அதை கப்புன்னு புடிச்சு இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறோம்.

இட ஒதுக்கீட்டு முறை எல்லாம் கண் தொடைப்புங்கோவ்.. கையில காசு வச்சுட்டு வேலை காமிக்கிறவங்களுக்கு தானுங்க இப்ப எல்லாம் காலம்..

ஆனாலும் நீங்க ஆவேசமா எழுதி தள்றீங்க... படிக்க நல்ல காமடியா இருக்குங்க.. பாதிக்க பட்டவங்கற முறையில நெஞ்செரிச்சலோட சொல்றேங்க...


எப்படியோ சமுதாயத்தை குட்டிசுவராக்குறதுன்னு முடிவு பண்ணிதான் உங்களை மாதிரி நிறைய பேர் குதிச்சிருக்காவுங்க...



அட இம்புட்டு சொன்னியே பேரு சொன்னியான்னு கேட்டுடாதீங்க... பேரு சொன்னா நம்ம ஊடு வரைக்கு இழுப்பாங்கன்னு சொன்னாவுக...அதானுங்க அச்சமா இருந்தது

மத்தபடி

உங்கள மாதிரி உரத்து கத்தினா பொய்யும் உண்மைங்கறது சரிதானுங்கோவ்...

நல்லா இருங்க

said...

வாய்யா 92% வாங்குன கவுண்டா, நல்லாகீறியா?

//எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க...
//
என்னா கவுண்டா பண்றது, கண்ணுமுண்ணாடியே கொலைய பண்ணிட்டு போலிசுக்கு காசை அடிச்சு, ஜட்ஜிக்கு துட்டு வெட்டி, சாட்சிகாரனை மெரட்டோ மெரட்டுனு மெரட்டி கேசே இல்லாம ஆக்கிப்புட்டு வெளியவந்துடறானுங்கோ செல பேரு, அட இம்புட்டையும் செய்து உள்ள போனாலும் செல்போனு பிரியாணி குவார்ட்டர்னு குஜாலாகீறானுங்க சில ஆக்க.

இப்போ இன்னா செய்யலாம் இதுக்கு, போலிசு, கோர்ட்டு, ஜெயிலு எல்லாத்தையும் இளுத்து மூடிடலாமா? இன்னா கவுண்ட ராசா சொல்லு போலிசு, கோர்ட்டு, ஜெயிலு எல்லாத்தையும் இளுத்து மூடிடலாமா? அப்புடித்தானே கவுண்டமக்கா நீ சொல்லுற கதையும் கீது....

said...

//அட இம்புட்டு சொன்னியே பேரு சொன்னியான்னு கேட்டுடாதீங்க... பேரு சொன்னா நம்ம ஊடு வரைக்கு இழுப்பாங்கன்னு சொன்னாவுக...அதானுங்க அச்சமா இருந்தது//
இன்னா கவுண்டமக்கா பேரை ஊரை சொன்னா உம்ம ஊட்டுக்கு பக்கத்துல இருக்கவனுங்கோ, உம்ம சொந்தக்காரனுல உன்னைவிட அதிகம் படிச்சவனுங்கோ, அட அத்தவுடு நீ போட்டுறிருக்கியே 92% மார்க்கு வாங்குணன்னு அது கூட நெசமா இல்ல நெட்டுல டுபாக்கூர் உடுறியாங்குற கதையெல்லாம் எழுதிடுவோமுனா பாக்குற, அதெல்லாம் எல்லோருக்கும் எழுத நானென்ன பள்ளி கல்வித்துறை இயக்குனரா? ஏதோ தெரிஞ்ச மொகம் ஒண்ணு ரெண்டு பேரு டுபாக்கூர் உடும்போது அந்த டுபாக்கூருக்கு சொந்தக்கார பயபுள்ளைங்க நம்ம ஃபிரண்டுங்களாவோ வ.ப.க்களாவோ இருந்து என்னிக்கோ சொன்ன தகவல் நெனப்புல வந்து இன்னிக்கு நெட்ல உட்டாச்சி, இது மாறி எல்லாருக்கும் செய்ய முடியுமா? ஆமா இன்னாத்துக்கு நீ கவுண்டன்னு வந்துக்கினு கீற சும்மா அனானிமசா வந்துட்ட அனானிமசா போட வேண்டியது தானே அத்தவுட்டுட்டு நான் பிராமணனில்லை கவுண்டன், நான் கவுண்டனில்லை வன்னியன், நான் வன்னியனில்லை செட்டியார்னு டகால்ச்சிக்கினு.

//அதென்னமோ கடவுள் புண்ணியத்துல டிப்ளோமா முடிச்ச பின்னாடி தனியார் கம்பேனி ஒண்ணு தெறமய காட்டுன்னு சான்ஸ் குடுத்தானுவ.. அதை கப்புன்னு புடிச்சு இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறோம்.
//
எந்த தெறமைய ராசா? பொறக்கும்போதே ஸ்பெசலா உம் தலையில மட்டும் ஏத்தி வைச்ச தெறமையா? இல்ல சொந்தக்காரங்க சாதிக்காரங்க பாசத்துல தனியார் கம்பெனி கொடுத்த வேலையிலயா ராசா? இல்லை ஆரத்தழுவி உம் மேலதிகாரிங்க ஏத்திவிட்ட திறமையிலயா ராசா? ஒன் அளவுக்கு ஒன் கூட டிப்ளமோல மார்க்கெடுத்த மத்த பசங்க இன்னா ராசா செய்யுறாங்க? அவுங்க எல்லோரும் ஒன்னிய மாதிரியே இன்னைக்கு வயித்துக்கு வஞ்சனை இல்லாம திங்கறாங்களா ராசா? அது இன்னானே தெர்ல ராசா டிப்ளமோ படிச்சாலும் ஐ.டி.ஐ. படிச்சாலும் அட பத்தாங்கிளாஸ் கோட் அடிச்சாலும் உன் ஆளுங்க மட்டும் ப்யூனா கூட எங்கியுமே வேலைக்கு போறதில்லை, ம் ஏதோ உங்க திறமைக்கு கரை ஏத்த ஆளுங்களும் கம்பெனிகளும் மட்டும் எங்கேருந்து தான் கெடைக்குதோ...

நீதான ராசா அனானிமசா வந்திருக்க அப்புறம் இன்னாத்துக்கு ராசா வேசங்கட்டுற... உடு இதெல்லாம் சகஜம்.... வர்றட்டா....

said...

ஹை.. இப்ப புரிஞ்சது ;) உங்களோட "நடு"நிலைமை. என்னோட பின்னூட்டத்தை வெளியிட்டா உங்களோட உண்மை நிலைமை தெரிஞ்சிடுமே :)) நல்லா இருங்கப்பா

said...

//நீதான ராசா அனானிமசா வந்திருக்க அப்புறம் இன்னாத்துக்கு ராசா வேசங்கட்டுற... உடு இதெல்லாம் சகஜம்.... வர்றட்டா....///


அண்ணாச்சி ;) உங்களுக்காக நானென்ன MBC சர்டிபிகேட்ட எடுத்து வந்து உங்க கிட்ட காமிக்க முடியுமா ?


தலைமுறை வலின்னு சொன்னீங்களேன்னுட்டு என்னோட வலியை சொன்னேன்..

நம்புனா நம்புங்க நம்பாட்டி போங்க

said...

//ஹை.. இப்ப புரிஞ்சது ;) உங்களோட "நடு"நிலைமை. என்னோட பின்னூட்டத்தை வெளியிட்டா உங்களோட உண்மை நிலைமை தெரிஞ்சிடுமே :)) நல்லா இருங்கப்பா
//
இன்னா ராசா ஒன்னியும் கமெண்ட்டு பாக்கி இல்லியே இங்க, எல்லாத்தையும் தான் உட்டுட்டேனே? ஆமா ஒரு ப்ராக்சி புடிச்சிக்கினு வர்றதில்லை? இப்புடியேவா வர்றது, நீ இதுக்கு முன்னால கமெண்ட்டு எதுவும் போடவே இல்லியேனு இங்க சொல்லுதே....

said...

எனக்கு ஒன்னுமே பிரியமாட்டுது.ஆனா அந்த மாமா கவுண்டர் சொன்னது மட்டும் சுகுரா பிரிஞ்சிது.

மா**னா மாமா தானே?

மாமா எப்பவுமே பிராக்ஸில தானே வருவாரு! இன்னிக்கு செம ஜாலி மூடுல இருக்காரு போல...அதுசரி மாமா கவுண்டரோட ப்லொக்கெர் அக்கவுண்டும் ஃப்ரீஸ் ஆய்டுச்சா ஓய்?

said...

//ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க...
//
மா** கவுண்டன் என்ற பெயரில் வந்த அனானியே, எஸ்.டி.யில் பிறந்தவனுக்கே எஸ்.டி. சர்டிபிகேட் வாங்குறது ரொம்ப கஷ்டம், ஏன்னா எஸ்.டி.சர்ட்டிபிகேட்ல கையெழுத்து யாரு தெரியுமா போடனும் மாவட்ட கலெக்டர், சாதி சர்ட்டிபிகேட் தப்பா கொடுத்துட்டா அதுல கையெழுத்து போடுற வி.ஏ.ஓ, ஆர்.ஐ., அதுக்கு அடுத்தபடியா தாசில்தார், எஸ்.டிக்கு கையெழுத்து போடுற மாவட்ட கலெக்டர் எல்லோரும் அபராதம், வேலையிழப்பு மற்றும் சிறை தண்டனை வரை அனுபவிக்க நேரும், கடலூர்ல காட்டுநாயக்கன்னு பன்றி மேய்க்கும் குறவர்களுக்கு இன்றுவரை எஸ்.டி. சர்ட்டிபிகேட் கிடைக்காம போராடுறாங்க, இதுல காசு கொடுத்து சாதி சர்ட்டிபிகேட் வாங்குறாங்களாம்.... எவன்கிட்ட டுபாக்கூர் உடுற.....

நீ அனானியாக மறைந்து வந்து பொய்சொல்கிறாய் என்று கருதுகிறேன், நீ ஒரு பொய்யன் இல்லையென்றால் காசு கொடுத்து எஸ்.டி. சர்ட்டிபிகேட் வாங்கியதாக குறிப்பிட்ட அந்த மாணவன் மற்றும் குடும்பத்தினரின் பெயர் மற்றும் அதற்கான ஆதாரங்கள் தா, நானே என் செலவில் அவர்கள் மீது வழக்குப்போடத் தயாராக உள்ளேன்... வா.... வந்து அநீதிக்கு எதிராக களம் இறங்கு, அதை விட்டுவிட்டு டுபாக்கூர் விடாதே....

காட்டுநாயக்கன் சமூகத்தவர்களுக்கு எஸ்.டி.சர்ட்டிபிக்கேட் கிடைக்காத விவரங்களை என் அடுத்த பதிவில் விரிவாக எழுதுகிறேன்.

போலி சாதி சர்ட்டிபிகேட் அடித்து கொடுத்து தான் மாட்டிக்கொள்வார்கள், உயர் சாதி, பிற்படுத்தப்பட்ட சாதியை சேர்ந்தவர்கள் வேறு சாதி என்று சொல்லிக்கொண்டு சர்ட்டிபிகேட் வாங்கி சலுகை அனுபவிப்பது மிக மிக மிக குறைவு, அதுவும் கூட கவுண்டர் என்றால் பி.சி, கவுண்டன் என்றால் எம்.பி.சி இந்த 'ர்' 'ன்' குழப்பத்தில் ஏமாற்றிய சிலர் வேண்டுமென்றால் இருக்கலாமே தவிர சாதி சர்ட்டிபிக்கேட் பொய்யாக வாங்குவது மிக மிக கடினம்.

said...

25,000 ரூபாய் கொடுத்து எஸ்.டி. சர்ட்டிபிகேட் வாங்க முடிந்தால் எதுக்குப்பா 4 இலட்சம் செலவு செய்து தனியார் கல்லூரியில் படிக்கவைக்கிறாங்க??

அதென்னமோ தெரியலை அனானி கவுண்டர்கள், அனானி வன்னியர்கள், அனானி பி.சி.க்கள், அனானி எஸ்.சி.க்கள் எல்லாம் வந்து இடஒதுக்கீட்டை எதிர்த்து பேசுகின்றார்கள், ஆனால் நான் வலையுலகில் திரியும் இந்த இரண்டு வருசத்தில் ஒரு அனானி எஃப்.சி. கூட வந்து இடஒதுக்கீட்டுக்கு ஆதரவா பேசியதேயில்லையே..... என்னமோ போங்க அனானி கவுண்டர், வன்னியர், பிசி, எஸ்.சி. எல்லாம் பார்த்தா ஒரே சந்தேகமாத்தான் இருக்கு.... :-)))

said...

I honestly think that my, i.e, brahmin's, community has taken way more than its share in india's resources and bureaucracy. When you try to balance it by reservation, it is true that significant number of brahmins are affected.

while i support reservation, why cant think of something that would compensate the loss incurred by brahmin victims?

said...

///இன்றுவரை எஸ்.டி. சர்ட்டிபிகேட் கிடைக்காம போராடுறாங்க, இதுல காசு கொடுத்து சாதி சர்ட்டிபிகேட் வாங்குறாங்களாம்.... எவன்கிட்ட டுபாக்கூர் உடுற.....
////

சரியான மண்டுன்னு மறுக்கா மறுக்கா நிரூபிக்கற...

//ஆனா 85% வாங்குன ஒரு பையனுக்கு சீட் கிடைச்சதுங்க .. எப்படிங்கறீங்க அவங்க அப்பாரு எஸ்.டி ன்னு சர்டிபிகேட் வாங்கினாருங்க கூடவே ஒரு 25 ஆயிரம் வெட்டினாருங்க... இத்தினிக்கும் அவுக நல்லா மாடிவூடு கட்டி காரு வச்சிட்டிருக்கிற ஆளுங்க... நாம கஞ்சிக்கு என்ன பன்றதுன்னு அவதி பட்ட ஆளுங்க.///

அந்தாளு அழுத இருபத்தஞ்சு காலேஜி சீட்டுக்கு...



இதுலயும் ஒரு குயுக்தியோட வந்து கேள்வி கேட்டா நான் அப்பீட்.. என்னோட வலி நான் சொன்னேன்.. நீங்க நம்புறதோ நம்பாததோ எனக்கு தேவை இல்லை.

///, ம் ஏதோ உங்க திறமைக்கு கரை ஏத்த ஆளுங்களும் கம்பெனிகளும் மட்டும் எங்கேருந்து தான் கெடைக்குதோ...///

முதல் மூன்று மாதம் சம்பளம் இல்லாமலே வேலை செஞ்சிருக்கேனுங்க... அப்புறம் 20 ரூபா சம்பளமுங்க ஒரு நாளைக்கு அப்புறம் கிட்ட தட்ட ஆறு வருஷம் கஷ்டப்பட்டு ஒரு கம்பெனி காரன் பாத்து நல்லா வேலை செய்யற வாய்யான்னு கூப்ட அதை கப்புன்னு பிடிச்சி...


எட ஒதுக்கீடெல்லாம் காசு வச்சிருக்கவுங்களுக்கு தானுங்கோவ்... என்னோட அனுபவத்துல பட்டது. எலக்ட்ரிகல் டிப்ளோமா படிச்சுட்டு எலக்டிரிசிடி போர்ட் ல என்ன விட கம்மி மார்க்கெடுத்தவெனெல்லாம் உள்ள்ளார போனப்ப வாழ்க்கையே வெறுத்து போயிருந்தேன்.. அந்த நேரத்துல முடிஞ்ச வேலை செய்யலாம்னு எலக்ட்ரானிக் ரிப்பேர் கடையில மூனு மாசம் காசுவாங்காம வேலை செஞ்சிருக்கேன்.

அட இதெல்லாம் உங்களுக்கெதுக்குங்க.. வழக்கம பாடுற வசவை எடுத்து உடுங்க... உங்க பதிவு பக்கம் தலை வைக்காம இருக்கேன் நானு.

மா** கவுண்டன்
good by for ever

said...

0