உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?
உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்
1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.
இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.
க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்
1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.
2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?
க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?
இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....
இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.
உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.
பிற்சேர்க்கை:
ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்
தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
http://www.annauniv.edu/tnea06/rama21.doc
CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,
31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)
20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)
18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)
இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.
வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.
அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.
உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...
http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?
அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.
எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.
தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.
78 பின்னூட்டங்கள்:
என்ன உளறல் குழலி. உயர் சாதியில் இட ஒதுக்கீடே கிடையாதே? அப்புறம் க்ரீமி லேயர் என்ன வாழ்கிறது? ஓப்பன் காம்பெடிஷனில் வருபவர்களிடம் இது என்ன பேச்சு?
அன்புடன்,
டோண்டு ராகவன்
அரசு கொடுக்கும் மானியங்கள் எப்படி வருகின்றன தெரியுமல்லவா? மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறதாக்கும். வரிப்பணம் கொடுப்பது கிரீமி லேயர்தான் எல்லா சாதிகளிலிருந்தும்.
அதே சமயம் கிரீமி லேயர்களில் இருக்கும் எஸ்.சி. எஸ்.டி. க்களுக்கும் அந்த சப்டிசைஸ்ட் கட்டணம் கூட வசூலிக்கவில்லை, நான் படிக்கும் காலத்தில். வேலைக்கு அப்ப்ளை செய்யும் போது போஸ்டல் ஆர்டர் இணைக்க வேண்டுமானால் சகட்டு மேனிக்கு அவர்களுக்கு மட்டும் ஒன்றில் நான்கு பங்குதான் வசூலிப்பார்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஸ்ப்பா டோண்டு அய்யாவோட முதல் பின்னூட்டத்தை படித்தவுடன் அய்யய்யோ என்னடா இது திரும்பவும் பதிவை விளக்கனுமோனு நினைத்தேன், மூன்றாவது பின்னூட்டத்திலே டோண்டு அய்யா சரியா புரிந்து கொண்டார் போல பதிவை....
சரி புரியாதவங்களுக்கு மீண்டும் சொல்றேன், க்ரீமிலேயரை கல்வி நிறுவனங்களில் இடம் கொடுப்பதை மட்டும் பார்க்கின்றீர், ஏன் க்ரீமிலேயரை அதுவரை மட்டும் நிறுத்த வேண்டும், இடம் ஒதுக்க மட்டும் க்ரீமிலேயர் வேண்டும், கல்விக்காகும் செலவுக்கு மட்டும் க்ரீமிலேயர் வேண்டாமா? நாம் அங்கிருந்து ஆரம்பிப்போம் க்ரீமிலேயரை.... எதற்காக க்ரீமிலேயர் மக்களின் கல்வி கட்டணத்தை அரசாங்கம் ஏற்கவேண்டும்.
//அரசு கொடுக்கும் மானியங்கள் எப்படி வருகின்றன தெரியுமல்லவா? மக்களின் வரிப்பணத்திலிருந்து வருகிறதாக்கும். வரிப்பணம் கொடுப்பது கிரீமி லேயர்தான் எல்லா சாதிகளிலிருந்தும்.
//
ஆமாம் நீங்கள் ரேசன் கடையிலா அரிசி வாங்கி சாப்பிடுகின்றீர்? ஏன் அங்கே கூடத்தான் வரிப்பணம் மானியமாக வருகின்றது, வரிப்பணம் என்பது அரசாங்கத்தின் செயல்பாட்டுக்கு நீங்கள் செலுத்தும் கட்டணம், என்னத்தான் உங்கள் சுயசம்பாத்தியமென்றாலும் எல்லாவற்றிற்கும் அரசாங்கத்தின் உதவி இல்லாமல் அதை உங்களால் சம்பாதிக்க முடியாது அதற்கு நீங்கள் செலுத்தும் கட்டணம் அது.
டோண்டு அய்யா நீங்கள் தானே எப்போதும் சொல்வீர்கள் எக்ஸ்ட்ரா திறமைபற்றி, அந்த எக்ஸ்ட்ரா திறமையுள்ள உயர்சாதியினரிடமிருந்தே நாம் இதை பரிசோதனையாக செய்யலாமே, ஏனென்றால் நீங்கள் சொல்வது மாதிரி எல்லா தடைகளையும் மீறி முன்னேறுபவர்களிடமிருந்தே ஆரம்பிக்கலாம்.
ஆகா வணக்கத்துடன் ஏகப்பட்ட உள்குத்தோட எழுதியிருக்கிங்க :-)
இப்போதும் கூறுகிறேன். திறமை இருக்கக் கொண்டுதான் ஓப்பன் காம்பெடிஷனில் இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.
கிடைக்கும் இட ஒதுக்கீட்டை எல்லாம் தங்கள் பணபலத்தால் கபளீகரம் செய்யும் மனிதர்களைத்தான் கட்டுப்படுத்துதல் அவசியம். முக்கியமாகக் கிடைக்க வேண்டியிருப்பவர்களை முன்னே வர விடாது தடுப்பவர்கள் இட ஒதுக்கீடு பெறும் கிரீமி லேயரே. மற்றப்படி குழலி பேசுவது வெறும் பொறாமையினாலேயே.
இதற்கு மேல் இவரது உளறல்களை மதித்துப் பேச நான் தயாராக இல்லை. ஆளை விடுங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
//இப்போதும் கூறுகிறேன். திறமை இருக்கக் கொண்டுதான் ஓப்பன் காம்பெடிஷனில் இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.//
ஓப்பன் காம்ப்படிஷனில் எப்படி பட்ட திறமையை பயப்படுத்தி முன்னுக்கு வருகிறார்கள் இல்லை இல்லை ஆக்கிரமிக்கிறார்கள் என எழுதப்பட்டது இந்த பதிவுO.C - Open Competition OR Other Castes
//இப்போதும் கூறுகிறேன். திறமை இருக்கக் கொண்டுதான் ஓப்பன் காம்பெடிஷனில் இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.
//
அதெப்படி அய்யா உயர்சாதிக்கு மட்டும் திறமை பிறக்கும் போதே தனியா ஆண்டவன் கொடுத்து அனுப்புகிறானா? இப்படி சொல்வதன் மூலம் ஆண்டவன் மண்டையிலிருந்து உயர் சாதியினர் பிறந்தார்கள் என்ற வர்ணாசிரமத்தை நம்புகிறீர்களா?
//இதற்கு மேல் இவரது உளறல்களை மதித்துப் பேச நான் தயாராக இல்லை. ஆளை விடுங்கள்.//
அய்யய்யோ நீங்களும் போயிட்டா என்ன ஆவது? நீங்கள் தானே எங்கள் தரப்பு நியாயங்களை கேள்விகள் கேட்டு கேட்டு வெளிக்கொண்டு வருகின்றீர், கேளுங்கள் நீங்கள் கேட்க கேட்க தான் நாங்கள் நியாயங்களை எல்லோருக்கும் பரப்ப முடிகின்றது.
//மற்றப்படி குழலி பேசுவது வெறும் பொறாமையினாலேயே.
//
ஹி ஹி மிக்க நன்றி
நன்றி
குழலி,
//உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.
//
உங்கள் அறச்சீற்ற அறைகூவல் எல்லாம் பிரமாதமாகத் தான் உள்ளது, குழலி ! எனக்கென்னவோ, உங்களுக்கு நன்றாகப் புரிவதை ஒப்புக் கொள்ள மறுக்கிறீர்கள் என நினைக்கிறேன். அதாவது, பிற்பட்டோரில், இடஒதுக்கீட்டினால் பயனடைந்து முன்னேறியவர்களை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்கினால், இன்னும் வாய்ப்பே கிடைக்காதவர்கள் பயனடைவார்கள் என்பது தான் சாராம்சம். பிற்பட்டவரில் பொருளாதாரத்தில் கீழிருப்பவரில் இன்னும் அதிகமானோர் பயன் பெறக்கூடிய இவ்விஷயத்தை நீங்கள் எதிர்ப்பதற்கு எந்த முகாந்திரமும் இருப்பதாகத் தோன்றவில்லை. உடனே "பணம் இருக்கு, சூழல் சரியில்லை" என்று ஆரம்பிக்காதீர்கள் ! உயர்சாதியினர் இதில் ஏதாவது விஷமத்தனம் செய்வார்கள் என்று அச்சமா, புரியவில்லை !!!
அப்புறம், உங்களது "இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா" என்ற பதிவு, க்ரீமி லேயர் பொய்களை உடைக்கும் ஒரு authentic document என்று எண்ணிக் கொள்ள உங்களுக்கு உரிமை இருக்கிறது.
open competition-இல் க்ரீமி லேயரை வரையறுப்பது பற்றி நீங்கள் கூறியிருப்பது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும், பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் உயர்சாதி மாணவருக்கு ஒரு 2-3% இடஒதுக்கீடு கொடுப்பது (அதாவது, 69% disturb செய்யாமல்!) உங்களுக்கு ஒப்புதலா என்று தெரியவில்லை ! அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே !!!!! சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !
//இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.
//
இது மாதிரி பொதுமைப்படுத்தி தயவு செய்து பேசாதீர்கள். இடஒதுக்கீடே தேவையில்லை என்று ஏதாவது நான் எழுதினேனா ? இந்த 27% லாவது, க்ரீமி லேயரை வரையறுத்தல் வேண்டும் என்பது தான் என் கருத்து !!!
*******************************
//open competition-இல் க்ரீமி லேயரை வரையறுப்பது பற்றி நீங்கள் கூறியிருப்பது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும்
//
//"பணம் இருக்கு, சூழல் சரியில்லை" என்று ஆரம்பிக்காதீர்கள்//
க்ரீமிலேயரை பணத்தை வைத்து தீர்மாணிக்கும் போது ஏன் இதை செய்யக்கூடாது அதாவது க்ரீமிலேயரை நீங்கள் இடஒதுக்கீடு, கல்லூரியில் இடம் கிடைப்பதில் செய்ய சொல்கிறீர்கள், பணம் கிரீமிலேயரை தீர்மாணிக்கும் போது அதை ஏன் வேறு தளத்தில் அதாவது கல்வி கட்டணத்தில் செய்வதோ அல்லது க்ரீமிலேயருக்கு அரசு கல்வி நிறுவனங்களில் இடமில்லை என்பதிலிருந்தோ ஆரம்பிக்கலாம்.
//பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கி இருக்கும் உயர்சாதி மாணவருக்கு ஒரு 2-3% இடஒதுக்கீடு கொடுப்பது (அதாவது, 69% disturb செய்யாமல்!) //
பாலா பொருளாதாரத்திற்கும் மதிப்பெண்கள் வாங்க தேவைப்படும் சூழலுக்கும் தொடர்பில்லை என்பது ஏற்கனவே பல முறை சொல்லியிருக்கிறேன் என்பதை மீண்டும் நினைவு படுத்த விரும்புகிறேன், மேலும் உயர் சாதி கிரீமிலேயர் அரசு கல்வி நிறுவனங்களில் இடமில்லையென்றால் அந்த இடங்கள் இவர்களுக்குமல்லவா வந்து சேரும், நீங்கள் சொன்ன அந்த 2-3%யையும் விட அதிக இடம், அதாவது இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்களோ அதேபோல உயர்சாதியில் க்ரீமிலேயரை கல்வி இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இடம் பெறுவார்களே....
தந்திரமும் திறமையும் ஒன்றா குழலி? :)))
kuzhali,
i thought you are thinking and writing
i never thought out of frustration youhave become mental also.
any how go to good psychiatrist otherwise you will be soon in kilpauk.
regards and vidadha anbudan
mayilu
//any how go to good psychiatrist otherwise you will be soon in kilpauk.
//
வேலூர் பாகாயம், கீழ்பாக்கத்தைவிட அருகில் உள்ளது மயில், உங்கள் ஆலோசனைக்கு நன்றி
க்ரீமி லேயர் குறித்து எழுதியவன் என்ற முறையில், எனது பதில்:
1. (எ.அ.பாலா குறிப்பிட்டது போல) நானும் இடஒதுக்கீடு கூடாது என்று எழுதியவன் இல்லை.
2. இப்படி ஒரு திட்டத்தை எந்த ஒரு குறிப்பிட்ட சாதிகளுடனும் ஆரம்பிக்க வேண்டும் என்ற தேவையே இல்லை. அப்படிக் கோருவது என்பது சமூகத் தேவைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு அரசியல் அறைகூவல் தான்.
3. உங்களது யோசனைகளில் இரண்டாவது ஏற்கக்கூடியதே (அனைத்து சாதிகளுக்கும் என்ற பட்சத்தில்). ஆனால், இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு இடம் கூடாது என்ற (எனது கருத்துப்படி மிக நியாயமான) வாதத்திற்கும் இந்த ஒரு திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
// இட ஒதுக்கீட்டில் கிரீமி லேயருக்கு இடம் கூடாது என்ற (எனது கருத்துப்படி மிக நியாயமான) வாதத்திற்கும் இந்த ஒரு திட்டத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.
//
க்ரீமிலேயர் என நீங்கள் எதை சொல்லவருகின்றீர் 1998 ஆண்டு க்ரீமி லேயர் என அரசாங்கம் சொன்னது ஆண்டுக்கு ஒரு இலட்சம் ரூபாய் வருமாணத்திற்கு மேல் வருமானம் உள்ளவர்கள், அதாவது ஒரு மாதத்திற்கு ரூ.8,333.33 வருமாணம் உள்ளவர்கள், க்ரீமிலேயர் என்பதை பணத்தை வைத்து முடிவு செய்தால் பணம் தான் க்ரீமிலேயர் என்றால் ஏன் பணவசதி உள்ளவர்கள் அரசாங்க மானியம் பெறும் குறைந்த கல்வி கட்டணம் தரும் நிறுவனங்களில் சேரவேண்டும், அவர்கள் மற்றைய ஏழைகளுக்கு விட்டுத்தரலாமே எப்படி இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயரை விலக்குவதனால் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்பதைப்போல இங்கேயும் செய்யலாமே?
இடஒதுக்கீட்டை அனுபவித்து முதல் தலைமுறையின் வாரிசுகள் இரண்டாம் தலைமுறை வந்து சேரவேயில்லை, அதற்குள்ளே க்ரீமிலேயர் என அழுபவர்களில் பெரும்பாலானோர் இடஒதுக்கீட்டை வேண்டாமென்றும் சொல்பவர்கள், பாலா மற்றும் ஸ்ரீகாந்த் போன்றவர்கள் க்ரீமிலேயரை இடஒதுக்கீட்டிலிருந்து வெளியேற்றவேண்டுமென்ற தங்கள் நியாயமாக தாங்கள் கருதுவது போல் க்ரீமிலேயர் மொத்தமாக அரசு மற்றும் நிதிஉதவிபெறும் கல்வி நிறுவனங்களில் இடம் பெறுதல் கூடாது என்ற கருத்தும் நியாயமானதே, க்ரீமிலேயரை விலக்குவது ஏன் இடஒதுக்கீட்டில் மட்டும் கல்வி நிறுவனங்களில் இடங்களிலிருந்தும் ஒதுக்கலாமே. ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் எல்லா சாதி க்ரீமிலேயரும் அரசு கல்வி மற்றும் நிதி உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து விலக்குவதென்றால் உங்களுக்கு சம்மதமா?
"ஒரு பேச்சுக்கு கேட்கிறேன் எல்லா சாதி க்ரீமிலேயரும் அரசு கல்வி மற்றும் நிதி உதவி பெறும் நிறுவனங்களிலிருந்து விலக்குவதென்றால் உங்களுக்கு சம்மதமா?"
கண்டிப்பாக நியாயமான வாதம். ஆனால் முதலில் மேல் சாதி கிரீமி க்லேயருக்கு மட்டும் இது என்று நீங்கள் கூறியதைத்தான் ஆட்சேபித்தோம்.
ஆனால் ஒன்று, இட ஒதுக்கீடு விஷயத்தில் இந்த கிரீமி லேயர்கள் பெறும் அடாவடிச் சலுகையை நீக்குவது மொத்த கிரீமி லேயர் ஒதுக்கல் வரும்போதுதான் பார்த்துக் கொள்வது என்று சம்பந்தப்படுத்துவது போகாத ஊருக்கு வழி காட்டுவது போல என்றுதான் தோன்றுகிறது.
முதற்படியாக ஃபீஸ் ஸ்ட்ரக்ட்சரை வருவாய்க்கேற்ப வரிசைப் படுத்தலாம். அரசு மருத்துவ மனைகளில் இம்முறை உள்ளது.
அன்புடன்,
டோண்டு ராகவன்
டோண்டு அய்யாவை பொறுத்தவரை க்ரீமிலேயர் வரையறை என்ன என்று சொன்னால் நாங்கள் புரிந்து கொள்வோம், அதாவது க்ரீமிலேயர் உங்களை பொறுத்தவரை பணத்தை பொறுத்ததா அல்லது வேறு ஏதேனுமா? ஏனெனில் அரசாங்கம் க்ரீமிலேயர் ஆண்டு வருமானத்தை பணத்தை பொறுத்தது என்றே நினைக்கின்றேன், உடனே மேட்டர்டே அன்புமணி என ஆரம்பிக்காதிங்க, ஒரே ஒரு அன்புமணிதான் இருக்கிறார் அவருக்கும் இரண்டு பிள்ளைகள் தான் இருக்கிறார்கள், ஆனால் பல கோடி பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்கள் இருக்கிறார்கள்...
Kuzhali, you just dont want to understand the issue.Your intention is to create confusion.
You better get your basics right.
First atleast try to understand what is meant by creamy layer
and how it is put to practice.
இடஒதுக்கீட்டை அனுபவித்து முதல் தலைமுறையின் வாரிசுகள் இரண்டாம் தலைமுறை வந்து சேரவேயில்லை, அதற்குள்ளே க்ரீமிலேயர்
In Tamil Nadu reservation was introduced first in 1920s.
If 89 years is two generations for you, what can one say.
ஒருவருக்கு எவ்வளவு வருமானம் என்று எதை கொண்டு தீர்மானிப்பது? அரசாங்க அலுவலர்களின் வருமானம் மட்டுமே ஓரளவுக்கு (முழுவதும் அல்ல, அவர்களின் தொழிற்முறை வருமானம் யாருக்கும் தெரியாது) கணிக்க முடியும்.
கிராமத்தில் உள்ள ஒருவருக்கு மாத வருமானமாக 10,000 ரூபாய் வருகிறது நகரத்திலும் ஒருவர் மாதம் 10,000 ரூபாய் சம்பாதிக்கிறார். இருவரும் ஒன்றா??
கிரீமிலேயர் என்பதற்கு சரியான வரையறை கிடையாது. கிரீமிலேயர் எதை என்று வரையறுக்காமல் இடஒதுக்கீட்டிலிருந்து கிரீமிலேயரை தூக்கு என்பது இடஒதுக்கீடு கூடாது என்பர்களின் தந்திரம். இடஒதுக்கீட்டு கொண்டு வருவதற்கே இவ்வளவு நாள் கிரீமிலேயரை வரையறுத்த பின் இடஒதுக்கீடு என்றால் "இடஒதுக்கீட்டை" மறக்க வேண்டியது தான்.
உயர்சாதியில் கிரீமிலேயர் என்று பேசினால் என்னய்யா பேச்சு இது என்று கூறுவதும் நீங்கள் சொல்வதை புரிந்து கொள்ளாதது போல் நடிப்பதும் ஒரு தந்திரம்.
//In Tamil Nadu reservation was introduced first in 1920s.
If 89 years is two generations for you, what can one say.
//
இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா? என்ற என் பதிவை படித்து பாருங்கள், இது authenticate document என நீங்கள் கருததேவையில்லை என்றாலும் அதில் உள்ள நியாயங்கள் உங்களுக்கு புரியலாம், அதிலிருந்து சில வரிகள்
------------
இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படும் ஒரு குற்றச்சாட்டு இட ஒதுக்கீட்டை பயன் படுத்தி முன்னேறியவர்களே மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்துகிறார்கள், சரியாக வார்த்தைகளை கவனிக்கவும் பயன்படுத்துகிறார்கள் பயன்படுத்துவார்கள் என சொல்லவில்லை, பயன்படுத்துகிறார்கள் என்று கூறுகின்றனர்.
ஒரு தலைமுறைக்கு 33 ஆண்டுகள், இட ஒதுக்கீடு வந்து 50 ஆண்டுகள் ஆகின்றது, சரியாக சொல்லப்போனால் முதல் தலைமுறையில் அதன் பலன் தெரியவில்லை, ஏனெனில் தொழிற் கல்விகளுக்கான(professional courses) (உதாரணம் பொறியியல்,மருத்துவம்,சட்டம் மற்ற கல்விகள்) அடிப்படை தகுதிகள் பெறும் அளவிற்கு கூட அந்த கட்டத்தில் பிற்படுத்தப்பட்ட / தாழ்த்தப்பட்டவர்கள் இல்லை, மேலும் தொழிற்கல்விகள் படிக்க முனைந்தவர்கல் மிக மிகக்குறைவே, மேலும் அன்றைய காலகட்டத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தொழிற்கல்வி கல்லூரிகள் இருந்தன, மேலும் SSLC, PUC முடித்தவுடன் அரசாங்கம் அளித்த கடைநிலை ஊழியர்கள், எழுத்தர்கள், ஆசிரியர் பயிற்சி முடித்து ஆசிரியர்கள் என்று தான் அவர்களால் செல்லமுடிந்ததே தவிர பெரும் எண்ணிக்கையில் அவர்களால் முன்னேற முடியவில்லை, ஆதலால் கிட்டத்தட்ட ஒரு தலைமுறை இட ஒதுக்கீட்டினால் பெரிய பலன் அடையவில்லை.
இரண்டாம் தலைமுறை, அதாவது எண்பதுகளின் இறுதியில் தான் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் அதிக எண்ணிக்கையில் தொழிற்கல்லூரிகளினுள் அடியெடுத்து வைத்தனர்,
கிட்டத்தட்ட கடந்த பதினைந்து பதினாறு ஆண்டுகளாகத்தான் இடஒதுக்கீடு அதன் பலனை தந்து கொண்டிருக்கின்றது, இட ஒதுக்கீட்டை அனுபவித்துள்ள இந்த தலை முறையின் சந்ததிகள் இன்னமும் கல்லூரி நிலையை எட்டியிருப்பார்களா என்பது சந்தேகமே... அதற்குள் தலைமுறையாக பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களில் ஒரு சாரரே இட ஒதுக்கீட்டை பயன் படுத்துகின்றனர் என்பது எத்தனை அப்பட்டமான பொய்.
எழுபதுகளில் தொழில்கல்லூரியில் இடஒதுக்கீட்டில் பயனுற்றவர்கள் மிக மிக குறைவே அவர்களின் சந்ததிகளின் எண்ணிக்கையும் விழுக்காடு அளவில் மிகக்குறைவே என்பது கண்கூடு, இருந்தாலும் இப்படி ஒரு பொய் பிரச்சாரம் இடஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்களால் வைக்கப்படுகின்றது, இட ஒதுக்கீட்டு சட்டத்தில் திருத்தம் தேவை ஆனால் அதன் தேவை இன்றே என்ற அளவில் இல்லை,
தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்பது அப்பட்டமான பொய் பிரச்சாரம், இட ஒதுக்கீட்டை பயன்படுத்திய/பயன்படுத்திக் கொண்டிருக்கின்ற முதல் தலைமுறை தான் இப்போது உள்ளது.
தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டை ஒரு சிலரே பயன்படுத்துகிறார்கள் என்று கவலைப்படும் இட ஒதுக்கீட்டு எதிர்ப்பாளர்கள் அதன் காரணத்தால் இட ஒதுக்கீட்டையே நிறுத்த சொல்வது வினோதமான ஒன்று.
அட்டகாசமான பதிவு குழலி....
இடஒதுக்கீடு என்பது சமூக ஏற்றத்தாழ்வுகளை போக்க வந்த ஒரு திட்டம். வறுமையை ஒழிக்க அல்ல. அதற்குத் தனியான திட்டங்கள் தீட்டப்பட வேண்டும்....
இதுபுரியாமல் உளறும் சில உயர்சாதி உளறலர்களுக்கு சாட்டையடி கொடுத்திருக்கிறீர்கள்....
இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயர்கள் தங்களுக்கு கீழ் இருக்கும் சம சாதியர்களை வஞ்சிக்கிறார்கள் என சமூகநீதி பேசி மூக்கால் அழுகும் மூடர்கள் முதலில் தங்கள் அளவிலிருந்து உயர்சாதி ஏழைகளுக்கு தகுந்த இடமளித்து விட்டு சமூகநீதி பேசட்டும்.....
//திறமை இருக்கக் கொண்டுதான் ஓப்பன் காம்பெடிஷனில் இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.//
ஏழு தலைமுறையாக பாலும், நெய்யும் பொங்கி வழியும் குடும்பத்தில் பிறப்பவர்கள் இயல்பிலேயே (பணவசதியின் காரணமாக) திறமையானவர்களாகத் தான் இருப்பார்கள்.... அல்லது திறமை வாய்ந்தவர்கள் போல ஒரு மாயத்தோற்றமாவது கொண்டிருப்பார்கள்....
பரம்பரை பரம்பரையாக கூழையும், அரிசிக் கஞ்சியையும் தவிர வேறு உணவு வகையே அறியாத குடும்பத்தில் இருந்து வந்தவன் கொஞ்சம் திறமை குறைந்தது போலத்தான் காட்சியளிப்பான்.... அவனுக்கு நுனி நாக்கு ஆங்கிலம் வராது...
அவனுக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள்.... அவன் திறமையாளனா இல்லையா என்பது வாய்ப்பு கொடுத்தால் தானே தெரியும்?
அதற்கு முன்பே குய்யோ முறையோ என்று கத்துவது முறையா?
அருமையான யோசனை,குழலி.
உயர் சாதி கிரீமிலேயர் என்பதை ஆங்கிலத்திலே சொல்லவேண்டுமானால் Best of both the Worlds. இவர்கள் இரண்டு உலக இன்பங்களையும் அனுபவிப்பவர்கள். சந்தைப் பொருளாதாரத்திற்கு பிறக்கும்போதே தயாராகிவிட்டவர்கள்!! இவர்களுக்கு அரசாங்கம் ஒரு பைசா கூட சலுகை செய்யக்கூடாது.
மற்றபடி, பிற்படுத்தப்பட்டவருக்கு கிரீமிலேயர் எனக்கும் ஏற்புடையதுதான். ஆனால் அதில் சில "வரையறை" மாற்றங்கள் கொண்டுவரவேண்டும். உதாரணமாக, பொருளாதாரத்தோடு, எத்தனையாவது தலைமுறை என்பது (குறைந்தபட்சம் மூன்று) கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும்.
இட ஒதுக்கீடு குறித்து வந்த பதிவுகளிலேயே திசைகள் இதழில் தருமி ஐயாவின் கட்டுரை அருமையாக எழுதப்பட்டிருந்தது. சற்றுமுன் தான் பார்த்தேன்.
Forget what we, forward castes, are saying about "Creamy Layer".
I foresee a few things happening to "Creamy Layer" like you sooner or later:
1. Caste groups like Barbers and Washermen, who are really Backward and at the mercy of other castes in rural areas, would demand and get separate reservation for them within the MBC category.
2. Poor among SC, MBC and BC would want to keep out those who have already benefitted out of reservation. I know a number of Pallars, who inspite of having benefitted from reservation for SCs, think that their caste is considered low because they are covered under SC. As this false pride goes against what is beneficial for the community as a whole, the poor ones would anyway rebel against them.
3. More and more forward castes would get into "Education Business" and some benefits would trickle to the poor among them anyway. Whether you like it or not, Vellore Institute of Technology is better appreciated than Melmaruvathur Engineering College. Since the number of
4. Since Dalits and Forward Castes are at the receiving end of BCs and BCs, in different dimensions of course, an alliance of a sort would soon develop and I already see this happening. This will happen purely on the basis of "Enemy's enemy is my friend". BCs/MBCs would stand to lose out more, as affirmative action for SCs/STs is guaranteed in Constitution and their social stigma is universal. But OBCs are a divided lot across India and an aggressive Vanniar Sangam would only alienate other castes from them. Hence the result would be short term gains and long term losses for vanniars.
5. All this would deepen the chasm among castes of TN more. If you hate Forward castes so much, don't you think they would also start reciprocate the same feelings towards you, when you encounter them outside the conforts of your home and computer, in the real business and office environment? You are intelligent enough to figure out who stands to lose much by this unwarranted hatred.
குழலி நீங்கள் பிறரை குழப்ப முயல்கிறீர்கள். பிற்பட்டோரில் முன்னோறியோர் குறித்து உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் விரிவாகக் குறிப்பிட்டுள்ளது. அதன் அடிப்படையில் மத்திய அரசிலும்,
பல மாநிலங்களிலும் இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படவில்லை.இதை தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தினால் யார் யார் பாதிக்கப்படுவார்களோ அவர்களு, அவரது ஆதரவாளர்களும் உண்மைகளை மறைத்துப் பிரச்சாரம் செய்கிறார்கள்.இதை நடைமுறைப்படுத்துவதில் சில சிக்கல்கள்,பிரச்சினைகள் இருப்பினும் கோட்பாட்டளவிலும், நடைமுறையிலும் இது தேவை. இதை இந்திய கம்யுனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) 1990ல் ஏற்றுள்ளது. இட ஒதுக்கீட்டின் கீழ் பலனடைவோர்க்கே இது பொருந்தும். பொது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இது பொருந்தாது. அங்கு இதைக் கொண்டு வரத் தேவையில்லை. உங்களைப் பொறுத்தவரை 100 ஏக்கர் வைத்திருக்கும் ஒருவர் பிற்பட்ட ஜாதி என்ற ஒரே காரணத்திற்காக தலைமுறை தலைமுறையாக இட ஒதுக்கீட்டால் பலன் பெற வேண்டும, இட ஒதுக்கீடு பட்டியலில் இல்லாத ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகள் எந்த விதத்திலும் இட ஒதுக்கீட்டினைப் பெற்றுவிடக்கூடாது. நீங்கள் கூறும் சமூக நீதி ஒரு மோசடி.
//இட ஒதுக்கீடு பட்டியலில் இல்லாத ஜாதிகளைச் சேர்ந்த ஏழைகள் எந்த விதத்திலும் இட ஒதுக்கீட்டினைப் பெற்றுவிடக்கூடாது.//
இந்த யோசனையே இவர்களுக்காகத்தான், அதாவது பணவசதி படைத்த உயர்சாதி க்ரீமிலேயர் சலுகை கட்டணத்தில் அரசாங்க கல்வி நிறுவனங்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் இந்த உயர்சாதியிலுள்ள ஏழைகளுக்கு உயர்சாதியிலுள்ள க்ரீமிலேயரால் பாதிப்பு உண்டாகிறது, அதாவது க்ரீமிலேயரை பணம் தான் முடிவுசெய்கிறது என்றால் உயர்சாதி ஏழைகளுக்காக உயர்சாதி பணக்கார க்ரீமிலேயர் விட்டுத்தருவதே நியாயமாக இருக்கும்.
//இட ஒதுக்கீட்டின் கீழ் பலனடைவோர்க்கே இது பொருந்தும். பொது இடங்களில் தேர்ந்தெடுக்கப்பட்டோருக்கு இது பொருந்தாது. அங்கு இதைக் கொண்டு வரத் தேவையில்லை. //
அது தான் ஏன் இங்கு கொண்டுவரத்தேவையில்லை? இடஒதுக்கீட்டில் மட்டும் பணத்தை வைத்து க்ரீமிலேயர் இடம்பெறக்கூடது என்னும் போது பணவசதி படைத்த உயர்சாதி க்ரீமிலேயர் சலுகை கட்டணத்தில் அரசாங்க கல்வி நிறுவனங்களின் இடங்களை ஆக்கிரமிப்பதால் இந்த உயர்சாதியிலுள்ள ஏழைகளுக்கு உயர்சாதியிலுள்ள க்ரீமிலேயரால் பாதிப்பு உண்டாகிறது, அதாவது க்ரீமிலேயரை பணம் தான் முடிவுசெய்கிறது என்றால் உயர்சாதி ஏழைகளுக்காக உயர்சாதி பணக்கார க்ரீமிலேயர் விட்டுத்தருவதே நியாயமாக இருக்கும்.
//உயர்சாதி ஏழைகளுக்காக உயர்சாதி பணக்கார க்ரீமிலேயர் விட்டுத்தருவதே நியாயமாக இருக்கும்.//
நெத்தியடி
சமூக நீதி பேசுபவர்கள் முதலில் தங்கள் சமூகத்தில் இருந்தே ஆரம்பிக்கட்டும்....
Kuzhali, you and your supporters just want to distract the issue.
Your concern for the poor among those not covered by reservation
is phony.Dont try to fool others by
shedding crocodile tears.Creamy layer is not an utopian idea.It has been put to pratice.Time and
again you want to project that
creamy layer is decided soley on
income.The verdict given in Mandal
case states why creamy layer should
be excluded.If you have not read that , try to read that.
சமூக நீதி பேசுபவர்கள் முதலில் தங்கள் சமூகத்தில் இருந்தே ஆரம்பிக்கட்டும்....
Yes, those who claim that reservation is social justice
should do that.
ரவி உங்கள் பின்னூட்டத்தை எதிர்பார்த்தேன், பின்னூட்டமளித்ததற்கு நன்றி
//Your concern for the poor among those not covered by reservation
is phony.Dont try to fool others by
shedding crocodile tears.//
அய்யய்யோ என்னங்க நீங்க இப்படி சொல்றீங்க? நான் நிசமாகவேத்தான் சொல்கிறேன்.
இடஒதுக்கீட்டில் இருக்கும் க்ரீமிலேயரால் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்கள் அதனால் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்களின் கண்ணீரை நான் எந்த முதலை கணக்கில் சேர்க்க??
இடஒதுக்கீட்டில் இருக்கும் க்ரீமிலேயரால் ஏழைகள் பாதிக்கப்படுகிறார்கள் என்று கண்ணீரை விட்டுக்கொண்டே உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி பேசாமல் இருப்பவர்களின் கண்ணீரை எந்த முதலைக்கண்ணீரோடு நான் சேர்ப்பது சொல்லுங்கள்.
//Creamy layer is not an utopian idea.It has been put to pratice.//
yes, why do not we start it from FC
//creamy layer is decided soley on
income.//
க்ரீமிலேயர் எனக்கு தெரிந்தவரை (1998ம் ஆண்டு வரை) ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்திற்கு மேல் இருப்பவர்கள் க்ரீமிலேயர் என்று சொல்லப்பட்டது, இப்போது மாற்றப்பட்டு இருந்தால் தயவ்செய்து தெரிவிக்கவும் நான் தெரிந்து கொள்கிறேன்.
ரவி ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் க்ரீமிலேயர் வரையறை கெசட்டட் ஆபிசர், பொறியாளர், மருத்துவர் குழந்தைகளுக்கு கிடையாது என்று சொல்லி இன்னுமொன்றாக ஆண்டு வருமாணம் இத்தனை இலட்சத்திற்கு அதிகமாக இருந்தால் கிடையாது என்று சொன்னால் அந்த படிகளில் கடைசியாக இருக்கும் பணத்தை தானே எடுக்க முடியும், படிப்பென்றால் என்னவென்றே தெரியாத பெற்றோர்கள் 100 பன்றிகளை மேய்த்து மாதம் 20,000ரூபாய் சம்பாதிக்கிறார்கள் என்றால் ஆண்டு வருமானத்தை காரணம் காண்பித்து அந்த பன்றி மேய்ப்பவர்களின் குழந்தைகளுக்கு இடஒதுக்கீடு தரக்கூடாது என்பது தானே பொருளாதாரத்தையும் அளவுகோலாக கொள்ளும் க்ரீமிலேயர் கணக்கு
//
The verdict given in Mandal
case states why creamy layer should
be excluded.If you have not read that , try to read that.
//
ஸ்ப்பா இதுவரை தேவையில்லாத மண்டல் கமிசன் அறிக்கையை இதற்காவது படிக்க சொல்கிறீர்களே, அதாவது தேவையான போது மட்டும் மண்டல் கமிசன் அறிக்கை :-) just kidding I need some one talk seriously so the audience will understand what is right than just watching one side media's brain wash.
// If you hate Forward castes so much,//
அனானி நண்பருக்கு, நான் எந்த பிறப்பால் உயர்சாதியினரை எப்போதும் வெறுக்கவில்லை, எனது பதிவுகளை தொடர்ந்து படித்து வருபவராயின் எந்த இடத்திலும் எந்த சாதியையும் தனிப்பட்ட காழ்ப்புணர்வோடு எழுதுவதில்லை.
வெறுப்பதெல்லாம் உயர் ஆதிக்க சாதிவெறிதான், அந்த வெறிகொண்டு செயல்படுபவர்களை தான், யாரெல்லாம் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திற்கு அவர்களின் பங்கையளிக்க மறுப்பவர்களைத்தான் எதிர்க்கிறேன், வெறுக்கிறேன்.
பிறப்பால் உயர்சாதியை சேர்ந்த எனக்கு உதவிய என் நண்பர்கள் என் பதிவுகளை படித்துக்கொண்டும் அதில் யாரை எதிர்க்கிறேன் என சரியாக புரிந்து கொண்டும் இருக்கிறார்கள் என நம்புகிறேன், அவர்கள் யாரும் இதுவரை உயர்சாதியை காழ்ப்புணர்வோடு தாக்கி எழுதுகிறாய் என்று சொல்லவில்லை...
http://ncbc.nic.in/html/creamylayer.htm
http://realitycheck.wordpress.com/2006/07/05/how-kerala-got-its-cream-back/
http://www.hindu.com/2006/06/08/stories/2006060802740400.htm
"Bar creamy layer from purview of quota"
Special Correspondent
Reservation has not ensured upward mobility for all: Krishnasamy
CHENNAI: Puthiya Tamizhagam founder-president K. Krishnasamy has sought the removal of "creamy layer" from the purview of reservation.
Demanding a rethink of the present scheme of reservation at the national level, Dr. Krishnasamy told reporters here that certain sections of communities covered under reservation had progressed whereas others had not benefited. "So, reservation is a myth. It has to be demolished."
He said Tamil Nadu had a history of reservation schemes for decades, covering Backward Classes and Scheduled Castes/Tribes.
This had benefited some but, in the ultimate analysis, not ensured upward mobility for all. "Sections such as the dhobis (washermen) and barbers have not benefited under the reservation scheme. When will they get the benefits?"
It was time that sections that had benefited allowed others to reap the fruits of reservation, Dr. Krishnasamy said.
Asked whether he was endorsing one of the points articulated by antagonists of quota, he said his objective differed from that of the anti-quota sections. He wanted the reservation scheme to continue in its present character. He was for targeting the scheme to those who bore the brunt of "Varnashrama Dharma" for ages. Also, there should be no economic criterion for reservation. Emphasising the need for a comprehensive review of the scheme, he said it would be meaningless if it was not targeted to reach the needy.
Asked whether he had discussed his suggestion with other leaders, Dr. Krishnasamy said this was why he organised a seminar on reservation here on June 17. It would also deliberate on filling of backlog vacancies for SC/STs in Government departments, quota in private sector and implementation of reservation for Other Backward Classes in institutions of higher education.
Dr. Krishnasamy said in the past, several seats reserved for SCs fell vacant even in the Government quota in unaided engineering colleges.
-----------------------------------
யார் வேண்டுமானாலும் எந்த கல்லூரியிலும் படிக்கட்டும். பணம்
இருப்பவர்கள் பணம் கொடுத்து படிக்கட்டும். மற்றவர்களுக்கு
ச்காலர்ஷிப் அளிக்க வேண்டும்.
யார் ச்காலர்ஷிப் அளிப்பது? இன்று அரசாங்க கல்லூரியில் ஓசியில்
படித்தவர்களை வைத்து நோகாமல் இவர்களை வைத்து தரகு வேலை
செய்யும் நிறுவனங்கள் சமூகத்திற்கு தங்கள் பங்கை திருப்பி செலுத்தட்டும்.
சினி ஆர்டிஸ்டு எல்லாம் க்ரீமி லேயர் என்ற லிஸ்டில் போட்டிருக்கிறார்கள்.
எல்லோருமே அமிதாப் பச்சன்களா? சிங்கில் டீக்கு நடிப்பவர்கள் கூட இந்த
லிஸ்ட்டில் வருவார்கள். இப்படி நிறைய ஓட்டைகள்.
க்ரீமிலேயர் சுட்டியை தந்த அனானிக்கு மிக்க நன்றி, அதை ஏன் அனானியாக தரவேண்டும். அந்த சுட்டியில் VI. Income/Wealth Test உள்ளதை படியுங்கள்.
Son(s) daughter(s) –
(a) Persons having gross annual income of Rs. 1 lakh or above or possessing wealth above the exemption limit as prescribed in the Wealth Act for a period of three consecutive years.
அதாவது மாதத்திற்கு ரூபாய் 8,333.33 வருமானம் பெறுபவர்கள் அதாவது நாளொன்றுக்கு ரூ.277.77 வருமாணம் உள்ளவர்கள் இடஒதுக்கீட்டை பயன்படுத்த இயலாது.
(b) Persons in Categories I, II, III and V-A who are not disentitled to the benefit of reservation but have income from other sources of wealth which will bring them within the income/wealth criteria mentioned in (a) above.
பத்து பன்றிகள் வைத்து மேய்த்துக்கொண்டு மாதம் ரூபாய் 8,333.33 வருமானம் பெற்றால் அந்த பன்றி மேய்ப்பவனின் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீட்டில் இடம் கிடையாது.
இடஒதுக்கீட்டிற்கு அரசாங்கத்தின் இந்த க்ரீமிலேயர் வரையறையை அப்படியே எடுத்துக்கொண்டு யாரெல்லாம் மாதம் ரூ.8,333.33க்கு மேல் வருமாணம் பெறும் உயர்சாதியினரை க்ரீமிலேயராக கருதி அவர்கள் குறைந்த கட்டணம் வாங்கும் அரசு மற்றும் நிதி உதவி பெறும் கல்விநிலையங்களில் இடம் தரக்கூடாது என வலியுறுத்துகிறேன்.
க்ரீமிலேயரை எப்படி பணத்தை வைத்து வரையறுக்க இயலும்? சமூக ஏற்றத்தாழ்வுகளை சமன்படுத்தவே இந்த இடஒதுக்கீடே தவிர பொருளாதார ஏற்றதாழ்வுகளை அல்ல, பணத்தை வைத்து க்ரீமிலேயர் செய்து இடஒதுக்கீட்டில் அந்த க்ரீமிலேயரை ஒதுக்க வேண்டுமென்பவர்களுக்கு க்ரீமிலேயருக்கு குறைந்த கல்விகட்டணமுள்ள அரசு கல்விநிலையங்களில் இடமளிக்க கூடாது என்று சொல்லும் என்பது சரியான நியாயயமே...
My views:
http://balaji_ammu.blogspot.com/2006/09/3.html
http://balaji_ammu.blogspot.com/2006/09/4.html
enRenRum anbudan
BALA
சுட்டிகளுக்கு நன்றி பாலா, சரி க்ரீமிலேயர் பற்றி அரசாங்கம் தந்த வரைமுறைகளை படித்திருப்பீர்கள்... சரி இப்போ என்ன சொல்றீங்க?
//இப்போதும் கூறுகிறேன். திறமை இருக்கக் கொண்டுதான் ஓப்பன் காம்பெடிஷனில் இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள்.
//
Absolutely.Have a look at this one,
430 OPEN SEATS were available for MBBS in Tamilnadu in 2005.
Here is the final selection list.
321 BC students,
57 MBC students
38 Forward Community students
14 SC students.
--------
Kuzhali,
Creamy layers should be eliminated regardless of their caste and it should be given to the needy ppl living in villages.What's the point in giving reservation to IAS/IPS officers(who used Reservation) kids?If we eliminate them, then, those seats can go to the real needy ones.
//Creamy layers should be eliminated regardless of their caste //
க்ரீமிலேயரை இடஒதுக்கீட்டிலிருந்து விலக்க வேண்டுமென்ற கோரிக்கையை முன்வைத்தவர்கள் உயர்சாதி க்ரீமிலேயர் எப்படி உயர்சாதி ஏழைகளை ஏய்க்கிறது என்பதையும் எடுத்துகாட்டவே தான் இந்த பதிவு.
//What's the point in giving reservation to IAS/IPS officers(who used Reservation) kids?If we eliminate them, then, those seats can go to the real needy ones.
//
என் முதல் இடஒதுக்கீடு பதிவில் http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html கீழ் கண்டவரிகளை சொல்லியிருப்பேன்.
இதற்காக தற்போதுள்ள இட ஒதுக்கீடு முறையில் ஓட்டை இல்லை என சொல்ல வரவில்லை, ஒடுக்கப்பட்ட சமூகங்களிலிருந்து படித்து வெளிவரும் தலைமுறை நன்றாக படிக்கக்கூடிய ஒரு சூழலை தங்கள் வாரிசுகளுக்கு தந்துவிட்டு மீண்டும் அவர்களின் வாரிசுகள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தும் நிலை உள்ளது, இந்த ஓட்டையை மட்டும் அடைத்துவிட்டு இட ஒதுக்கீட்டை தொடரலாம்.... எது வரை தொடரலாம்?, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பிறப்பினால் இருக்கும் ஏற்றத்தாழ்வுகள், பிறப்பினால் ஏற்படுகின்ற சமூக உரிமை மறுப்புகள் அழியும் வரை, பொருளாதார அளவில் மட்டுமின்றி சமூக அளவிலும் எல்லோரும் சமம் என்ற நிலை வரும் வரை எல்லாருக்கும் சம உரிமை கிடைக்கும் வரை இது தொடரலாம்.
ஆனால் பொருளாதாரம் தான் க்ரீமிலேயரை முடிவு செய்யும் என்றால் நான் அதற்கு எதிராகவே இருப்பேன். வெறும் ஆண்டுக்கு ஒரு இலட்சம் வருமானம் உள்ளவர்கள் க்ரீமிலேயர் என்றால் என்ன அநியாயம் அது?
http://kuzhali.blogspot.com/2005/06/blog-post_24.html
SC/ST யிலும் க்ரீமி லேயர் இல்லை.
ÌÆÄ¢! «Õ¨ÁÂ¡É À¾¢×.
«Îò¾ þÃñÎ ¾¨ÄÓ¨ÈìÌ ¬Ùõ º¡¾¢Â¢É¨Ã ´Ð츢/´Î츢 ¨Åì¸ §¾¨ÅÂ¡É º¢ó¾¨É.
-§Åø-
//சுட்டிகளுக்கு நன்றி பாலா, சரி க்ரீமிலேயர் பற்றி அரசாங்கம் தந்த வரைமுறைகளை படித்திருப்பீர்கள்... சரி இப்போ என்ன சொல்றீங்க?
//
I will go thru' the link and then get back. Thanks !
enRenRum anbudan
BALA
தமிழகத்தில் இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்கு தடை நீதிமன்றம் உத்தரவு, 10 பன்றி வைத்து மேய்த்துக்கொண்டு இனி மாதம் ரூ.8333 வருமாணம் உள்ளவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாது, நல்ல நீதி....
http://thatstamil.oneindia.in/news/2006/09/11/tn.html
கோபாலன் ராமசுப்பு!
நீங்கள் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தானே?
குழலி,
இட ஒதுக்கீட்டில் உங்கள் பதிவு ஒரு voice of reason. Creamy Layer பற்றிய உங்கள் கருத்தில் எனக்கு உடன்பாடுதான். பணக்காரர்களுக்கு சலுகைகள் தேவையில்லைதான். ஆனால் சமுதாயத்தை சமன்படுத்தும் முயற்ச்சியில் வருமானத்தை நுழைப்பது நேர்மையில்லாத செயல் அல்லது விளைவுகளை புரியாத செயலே. Aiming for an ideal solution in a non-ideal world. இன்று 2 லட்சம் சம்பாதிப்பவர் நாளை ஆண்டியகலாம். சேத்தூரில் 50000 சம்பாதிப்பவர் சென்னையில் 2 லட்சம் சம்பாதிப்பவரோடு பணக்காரரா. சில ஓட்டைகளை அடைப்பதற்காக floodgates ஐ திறப்பதிலேதான் இது முடியும். .
எப்போது இட ஒதுக்கீட்டை நிறுத்துவது என்பதில் வேறுபடுகிறேன். சண்டைக்கு வருவீர்களோ என்று பயமாக இருக்கிறது! Just kidding. சாதி நம் நாட்டில் என்றுமே ஒழியப்போவதிலை என்பதுடன் நிறுத்திக் கொள்கிறேன். நல்ல பதிவுக்கும் தொடர்ந்து போரடுவதற்கும் நன்றி.
சில ஓட்டைகளை அடைப்பதற்காக floodgates ஐ திறப்பதிலேதான் இது முடியும்
The present reservation policy for OBCs does it.If a person becomes poor creamy layer wont be applicable.Will an IAS/IPS officer
become clerk or peon.Creamy layer
is a good concept.We should broaden the reservation by including women,economically poor
and under-represented castes getting priority over over-represented castes.Say yes to
affirmative action,no to quota
based OBC reservation.
//If a person becomes poor creamy layer //
க்ரீமிலேயருக்கும் பணத்திற்கும் என்ன தொடர்பு? திரும்பவும் பன்றி உதாரணம் சொல்ல வேண்டுமா? எனக்கே அலுத்துடுச்சிங்க இந்த பன்றி உதாரணம் சொல்லியே....
வழக்கம்போல அருமையான பதிவு குழலி.
kuzhali,
These are my views.
1. I never mentioned the existing cut-off of Rs.100000 for creamy layer is OK. அது வரையறுக்கப் படவேண்டும் என்று கூறினேன். தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு அதை உயர்த்தலாம்.
2. மேலும், கிராமப்புறத்தில் வாழும் படிக்காத (விவசாயம் / சிறுதொழில் செய்யும்) பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, க்ரீமி லேயரிலிருந்து விலக்கு
அளிக்கலாம்.
3. //அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.//
இதில் எனக்கு ஒப்புதலில்லை. ஏனெனில், சுயநலக்கல்லூரிகளில் 80%, infrastructure,teaching ... போன்றவற்றில் பின் தங்கி
உள்ளன. பல அரசுக் கல்லூரிகளுக்கு நல்ல reputation இருக்கிறது. எனவே, நன்றாக படித்து மிக நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஒரு (உயர்சாதியோ, பிற்படுத்தப்பட்டவரோ) மாணவனுக்கு, நல்ல காலேஜில் சீட் இல்லை என்று கூறுவது நியாயமில்லை. நீங்களே கூறியபடி, அவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம் என்பது நடைமுறை சாத்தியமே.
4. //இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.//
ஏற்கனவே ஒரு முறை கூறியதை நினைவு கூர்கிறேன்.
"அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர
வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !"
5. அமுல்படுத்தவிருக்கும் 27%-இல் க்ரீமி லேயர் வரையறுக்கப்படுகிறதோ இல்லையோ, பொதுப்பிரிவில் (31%) பொருளாதாரத்தில் பின்
தங்கியவர்களுக்கு (ஊக்கம் தரும் வகையில்) ஒரு 3-4% ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், அரசு பொருளாதார உதவியும் தர வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
என் பதிவில் எழுதிய "அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு
தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்." குறித்து உங்கள் கருத்து என்ன ?
இதற்கு மேல் இது குறித்து கூற எதுவுமில்லை. நன்றி.
எ.அ.பாலா
//சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !"
//
உண்மையாகவா?
சரி பாலாவை விடுங்க, மற்றவர்கள் சொல்லுங்க, இந்திய சமுதாயத்தில் இது உண்மையா??? மற்றவற்றிற்கான என் பதில்கள் பிறகு தருகிறேன்.
The court has issued notice only, has not passed any order. The State
Backward Commission can fix an income limit which may be higher than 1 lakh.When other states are
excluding creamy layer why not Tamil Nadu also.In some cases the
creamy layer criteria may be different from the one laid down
by National Backward Classes Commission.Still as something is
better than nothing let there be
a creamy layer criteria for OBC
reservations in Tamil Nadu also.
This will to some extend reduce the
negative impacts of reverse discrimination as practised in
Tamil Nadu.A complete review of
OBC reservation in both states
and centre is a must.We should move
from caste based quotas in OBC reservation to affirmative action.
Let women and economically poor
also be entitled for reservation.
//1. I never mentioned the existing cut-off of Rs.100000 for creamy layer is OK. அது வரையறுக்கப் படவேண்டும் என்று கூறினேன். தற்போதைய சூழலுக்கு ஏற்றவாறு அதை உயர்த்தலாம்.
//
முதலில் நீங்கள் சொல்லும் க்ரீமிலேயரை வரையறுத்துவிட்டு பேச வந்திருந்தால் நலமாக இருக்கும், க்ரீமிலேயர் என்று மட்டுமே பேசினீர்களே தவிர க்ரீமிலேயருக்கான உங்கள் வரைமுறைகள் என்ன?, இரண்டாவதாக பொருளாதாரத்தைக் கொண்டு இந்த விடயத்தில் க்ரீமிலேயர் வரையறுப்பது தவறான ஒன்றாக நான் கருதுகிறேன், இடஒதுக்கீடு பொருளாதார சமன்பாட்டிற்கானதல்ல, பொருளாதார பிரச்சினை உள்ளவர்களுக்கு இடம் கிடைத்து படிக்க முடியாதவர்களுக்கு அரசாங்கமே நிதியுதவி செய்யலாம், வங்கி கடனுதவி செய்யலாம், ஏன் நீங்களே சில முயற்சிகளை செய்கின்றீரே! பொருளாதாரத்தை க்ரீமிலேயரில் நுழைக்கும் விடயத்தில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளது, இது இடஒதுக்கீட்டை காலி செய்ய முனைவதன் முதல்படியில் இதுவும் ஒன்று என்பது என் சந்தேகம், இது தொடர்பாக விளக்கமாக பிறகு என் சந்தேகங்களை எழுதுகிறேன்,
//2. மேலும், கிராமப்புறத்தில் வாழும் படிக்காத (விவசாயம் / சிறுதொழில் செய்யும்) பெற்றோர்களின் பிள்ளைகளுக்கு, க்ரீமி லேயரிலிருந்து விலக்கு
அளிக்கலாம்.
//
ஒப்புதல்
3. //அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.//
இதில் எனக்கு ஒப்புதலில்லை. ஏனெனில், சுயநலக்கல்லூரிகளில் 80%, infrastructure,teaching ... போன்றவற்றில் பின் தங்கி
உள்ளன. பல அரசுக் கல்லூரிகளுக்கு நல்ல reputation இருக்கிறது. எனவே, நன்றாக படித்து மிக நல்ல மதிப்பெண்கள் எடுத்த ஒரு (உயர்சாதியோ, பிற்படுத்தப்பட்டவரோ) மாணவனுக்கு, நல்ல காலேஜில் சீட் இல்லை என்று கூறுவது நியாயமில்லை. நீங்களே கூறியபடி, அவர்களிடம் அதிகக் கட்டணம் வசூலிக்கலாம் என்பது நடைமுறை சாத்தியமே.
பாலா உங்களின் இந்த கருத்துக்கும், இதற்கு கீழே நீங்கள் எழுதியுள்ளீர்களே அதற்கும் மிகப்பெரிய இடைவெளி உள்ளது
//என் பதிவில் எழுதிய "அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு
தனிப்பள்ளிகளே கூடத் தொடங்கலாம்." குறித்து உங்கள் கருத்து என்ன ?
//
அதாவது அரசு பள்ளிகள் தற்போது நல்ல reputation, infrastructure,teaching இல்லை அதனால் இலவச கல்வியே அரசாங்கத்தில் கொடுக்கப்பட்டாலும் தரமில்லாத அரசு பள்ளிகளில் சேர்க்க பிரியப்படாமல் தனியார் பள்ளிகளில் காசைக்கொட்டி கொடுத்து படிப்பிக்க தயாராக உள்ளார்கள்
அரசுக்கல்லூரிகளில் நல்ல reputation இருக்கிறது, infrastructure,teaching நல்ல மதிப்பு இருக்கின்றது, கட்டணமும் மிகக்குறைவு எனவே தனியார் கல்லூரிகளை விட அரசு கல்லூரிகளில் க்ரீமிலேயர் ஏழைகளுக்கு இடமில்லையென்றாலும் பரவாயில்லை அதிக கட்டணம் கொடுத்தாலும் க்ரீமிலேயர் இங்கே படிக்கலாம்
நல்ல தரமான நல்ல infrastrucure, teaching தரக்கூடிய பள்ளிகளை அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உருவாக்கும்போது அதில் க்ரீமிலேயர்கள் இடம் கேட்கமாட்டார்களா? அதிக கட்டணம் கொடுத்தாலும் பரவாயில்லை நான் இங்கே படிக்கிறேன் என்று சொல்ல மாட்டார்களா? சரி இதையே சற்று மாற்றி கேட்கிறேன், நல்ல தரமான நல்ல infrastrucure, teaching தரக்கூடிய பள்ளிகளை அரசும், பெரு நிறுவனங்களும் இணைந்து, பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு உருவாக்குவதை போலவே நல்ல தரமான கல்லூரிகளை அரசு பொருளாதாரத்தில் பின் தங்கிய ஒதுக்கப்பட்ட / பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு ஏன் உருவாக்கலாமே, கொள்கை அளவில் இது சரி என்னும் போது ஏன் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களுக்கு தனிப்பட்ட பள்ளி கல்லூரி கட்டும் வரை காத்திருக்க வேண்டும், இப்போதே அரசு கல்வி நிறுவனங்களில் இருக்கும் இடத்தில் சில இடங்களை இடஒதுக்கீடாக ஒதுக்கலாமே?
பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட ஏழைகளுக்கு நீங்க என்ன சொல்கின்றீர் தனியாக பள்ளி கட்ட சொல்கிறீர், நான் என்ன சொல்கிறேன் ஏன் அதை பள்ளியோடு நிறுத்த வேண்டும் கல்லூரியும் அது போல கட்டலாமே என்கிறேன், கொள்கை அளவில் சரி என்ற பின் ஏன் கல்லூரிகள் கட்டும் வரை காத்திருக்க வேண்டும் இப்போதே இருக்கும் கல்லுரிகளில் க்ரீமிலேயருக்கு இடமில்லை என்று கூறிவிட்டால் புதிதாக கல்லூரி கட்டும் வரை இதை தாமதப்படுத்த தேவையில்லையே, அதையும் உயர் சாதியிலிருந்தே ஆரம்பிக்கலாம் என்பதற்கு கீழ்கண்ட புள்ளி விபரம் உதவும்
***************
http://www.dinamalar.com/2006aug22/general_tn28.asp
தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.
http://www.annauniv.edu/tnea06/rama21.doc
CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, 31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி 20% MBC யிலோ 3804 இடங்கள் காலி 18% SC யிலோ 4569 இடங்கள் காலி,
இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.
வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.
***************
அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.
4. //இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.//
ஏற்கனவே ஒரு முறை கூறியதை நினைவு கூர்கிறேன்.
"அதென்ன, க்ரீமி லேயர் பரிசோதனையை உயர்சாதியினரிடமிருந்து ஆரம்பித்து ஒரு 10 வருஷங்கள் கழித்து தான், OBC க்ரீமி லேயர் பக்கம் வர
வேண்டும் என்கிறீர்கள், ஒரே நேரத்தில் நடைமுறைப்படுத்தலாமே
மேலே உள்ள புள்ளி விபரத்தையும் காரணத்தையும் இதற்கு பொறுத்தி கொள்ளுங்கள்
//சாமானியர்களுக்கும், ஏழைகளுக்கும் தான் சாதி, பணக்காரர்கள் எல்லாருமே பொதுவாக ஒரு சாதி தான் !"
//
பாலா எந்த உலகத்தில் இருக்கின்றீர்? உங்களுக்குள்ளேயே உங்களிடம் கேட்டுப்பாருங்கள் இப்போதுள்ள இந்திய சமூகத்தில் நீங்கள் சொல்வது உண்மையா என்று.
//5. அமுல்படுத்தவிருக்கும் 27%-இல் க்ரீமி லேயர் வரையறுக்கப்படுகிறதோ இல்லையோ, பொதுப்பிரிவில் (31%) பொருளாதாரத்தில் பின்
தங்கியவர்களுக்கு (ஊக்கம் தரும் வகையில்) ஒரு 3-4% ஒதுக்கீடு கொண்டு வர வேண்டும், அரசு பொருளாதார உதவியும் தர வேண்டும் என்பது என் தனிப்பட்ட கருத்து.
//
இடஒதுக்கீடு பொருளாதார சமன்பாட்டிற்கானதல்ல, பொருளாதார பிரச்சினை உள்ளவர்களுக்கு இடம் கிடைத்து படிக்க முடியாதவர்களுக்கு அரசாங்கமே நிதியுதவி செய்யலாம், வங்கி கடனுதவி செய்யலாம், ஏன் நீங்களே சில முயற்சிகளை செய்கின்றீரே! பொருளாதாரத்தை க்ரீமிலேயரில் நுழைக்கும் விடயத்தில் எனக்கு மிகப்பெரிய சந்தேகம் உள்ளது, இது இடஒதுக்கீட்டை காலி செய்ய முனைவதன் முதல்படியில் இதுவும் ஒன்று என்பது என் சந்தேகம், இது தொடர்பாக விளக்கமாக பிறகு என் சந்தேகங்களை எழுதுகிறேன்,
//இதற்கு மேல் இது குறித்து கூற எதுவுமில்லை. நன்றி.
//
பேசுங்க, உங்கள் சந்தேகத்தை கேளுங்கள், நாம் பேசலாம், நம் கருத்துகள் மாறுகின்றதோ இல்லையே இதை படிக்கும் வேறு சிலருக்கு தெள்வு ஏற்படலாம்.
adi...thuuL!!!
ulla varalai...but present sir!
Thanks kuzhali, for the detailed response !
விட்டது சிகப்பு பதிவில் இட்ட பின்னூட்டம்
http://vittudhusigappu.blogspot.com/2006/09/1509.html
செவப்பு முதலில் உயர்சாதி க்ரீமிலேயர் அரசு கல்விநிறுவனங்களில் ஆக்கிரமிக்கும் இடங்களை வேண்டாமென்று சொல்ல சொல்லுங்கள் அதாவது உங்க கணக்குப்படி மாதம் இருபதாயிரம் சம்பாதிக்கும் உயர் சாதி க்ரீமிலேயர் ஆட்களின் பிள்ளைகள் குறைந்த கட்டணத்தில் அரசு மற்றும் நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் ஆக்கிரமிப்பு செய்வதன் மூலம் உயர் சாதி ஏழைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்துகிறார்களே, ஏன் இவர்கள் அரசாங்கத்திடம் மானிய பிச்சை எடுக்கிறார்கள்?
பேச வேண்டியதெல்லாம் நிறைய இந்த சுட்டியில் http://kuzhali.blogspot.com/2006/09/blog-post_10.html பேசியிருக்கோம், உமக்கு புரியுதோ இல்லையோ இவைகள் உமக்காக எழுதப்படவில்லை, வெகுசன ஊடகத்தாலும், உம்மை போன்றவர்களாலும் மூளைச்சலவை செய்யப்பட்டவர்களுக்கு தான் எழுதுகிறோம்.
http://vittudhusigappu.blogspot.com/2006/09/1509.html
விட்டதுசிகப்பு பதிவில் எழுதிய கடிதம்
வணக்கம்,
அன்புடையீர்,
எனது பெயர் ........... தந்தையார் பெயர் .............. எங்கள் சொந்த ஊர்/கிராமம் ............................
நான் தற்போது ஒரு கணினி நிறுவனத்தில் கன்சல்டண்டாக இருக்கிறேன்/பாங்க் ஆப் பரோடாவில் சீப் கேஷியராக இருக்கிறேன்/ஒரு நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர். நான் வசிக்கும் ஊர் துலுக்கனாம்பட்டி/மலேசியா/செவ்வாய் கிரகம்/பெங்களுர். என் மாத வருமானம் நாற்பதினாயிரம் இந்திய ரூபாய். என் மனைவி குடும்பத்தலைவி.
என் தந்தையார் என்னைக் படிக்க வைத்தார். ஓடி ஓடி எங்களுக்காக பணத்தை சேர்த்தார். நானும் ஓரளவிற்கு நன்றாகவே படித்தேன். என் திறமையாலும் இந்திய அரசின் கல்லூரிகளில் குறைந்த கட்டணத்தில் நல்ல கல்லூரியில் இடம்கிடைக்கப்பெற்றென். அதன் பொருட்டு நல்ல நிறுவனத்திலும் வேலை கிடைத்து நன்றாகவே வாழ்ந்து வருகிறேன். எனக்கென்று ஒரு சொந்த வீடும், ஓரேயொரு காரும், வீட்டில் ஒரு ஏஸியும் மற்றும் இன்னபிற அத்தியாவசியப் பொருட்களும் இருக்கின்றன. நிற்க.
என் மகன் எஸ்.பி.ஓ.ஏ பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் __% சதவிகிதம் மதிப்பெண் பெற்றுள்ளான். அரசு கல்லூரிகள் போன்று அரசு பள்ளிகள் இலவசமாக, தரமான கல்வியளித்தாலும் தனியார் பள்ளிகளுக்கு நான் பணம் அழுது என் மனைவிக்கு 234வது பட்டுப்புடவை வாங்கித்தரமுடியாகிவிட்டது ஆனால் அரசு கல்லூரிகள் இலவசமாகவும் தரமாகவும் கல்வியளிப்பதால் என் மனைவிக்கு 32வது தங்க வைர நெக்லஸ் வாங்கித்தர வேண்டியிருப்பதாலும் நான் குடும்பத்துடம் ஐரோப்பா டூர் போகவிருப்பதாலும் அதற்கான பணத்தை சேமிக்க தனியார்கல்லூரிகளில் சேர்க்குமளவிற்கு பணமிருந்தாலும் மேற்கண்ட என் முக்கிய செலவுகளுக்கு பணம் தேவைப்படுவதால் என் சொந்தகார ஏழைகள் தனியார் கல்லூரியில் சேருமளவிற்கு பணமில்லாமலிருந்தாலும் அதை விட முக்கியமான செலவுகள் எனக்கிருப்பதால் அரசாங்கம் தயவு கூர்ந்து இலவச/குறைந்த கட்டணத்தில் என் மகன்/மகளுக்கு மானியத்தில் இடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நீ இருபதாயிரத்துக்கு மேல சம்பாதிக்கிறாயே என்ற கேள்விக்கு பதிலாய், கைக்கு வர காசு எல்லாம் செலவாகிப்போய்விடுகிறது என்பதையும், அரசாங்கமே என் கைச்செலவிற்கும் மாதம் ஒரு அமவுண்ட் போட்டு, கூடவே அரிசி வாழைக்காயும் கொடுத்தால் புண்ணியமாகப் போகுமென்று தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
மேற்குறிப்பிட்டதெல்லாம் உண்மையென்றும், சுய நினைவுடன் எழுதியது என்பதுடன் நான் ஒரு பிச்சைக்காரன் என்பதனையும் அழுத்தந்திருத்தமாக ஒப்புக்கொள்கிறேன்.
நன்றி வணக்கம்,
இப்படிக்கு
வெட்கம் கெட்ட ஜென்மம்,
பிற்படுத்தப்பட்ட/ தாழ்த்தப்பட்டவர்கள் இடஒதுக்கீட்டில் மட்டும் க்ரீமிலேயர் கேட்கும், மனைவிக்கு 234வது பட்டுப்புடவையும், 32வது தங்க நெக்லசும், 15 நாள் குடும்பத்துடன் ஐரோப்பாடூர் போகவும் அரசாங்கத்தின் கருணையை எதிர்பார்க்கும் க்ரீம் இல்லாத லேயர்
உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...
http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?
அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.
எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.
தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.
இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.
குழலி,
நல்ல பதிவு.
நன்றி.
குழலி
பொருளாதாரம் உயரும் போது சமுதாய ஏற்றத்தாழ்வுகள் மறைவதில்லை என்று கூறியுள்ளீர்கள். எந்த நிலையில் சமூதாய ஏற்ற தாழ்வுகள் மறையும். நான் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்தவன்தான். இட ஒதுக்கீட்டில் பலனடைந்து பயன் பெற்றவன். இந்த நிலையில் என் குழந்தைளை நான் ஒப்பன் காம்படிசனில் கொண்டு செல்ல போகிறேன். நான் என் சமுதாயத்தை சேர்ந்த வளரக் கூடிய இன்னோருவனின் இடத்தை என் குழந்தைகளை கொண்டு நிரப்ப விரும்பவில்லை.எனக்கு என் குழந்தைகளுக்கு எவ்வாறான கல்வி புகட்ட வேண்டும், எப்படி அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு உள்ளது. இட ஓதுக்கீட்டால்தான் எனக்கு இக்தகைய ஒரு கல்வியும் அதன் விளைவாக நல்ல வேலையும் விழிப்புணர்வும் கிடைத்தது.எங்கள் ஊரிலேயே பத்து வருடங்களுக்கு முன் தொழில் கல்வி பயின்ற இரண்டாம் மாணவன் நான். என் தந்தையார் அண்ணா பல்கலைகழகத்திற்கும், அண்ணாமலை பல்கலைகழகத்திற்கும் வித்தியாசம் தெரியா நிலையிலியே இருந்தார். கம்யுட்டர் சயன்ஸ் என்றால் என்னவென்று புரியாமல் மின்னியல் பாடம் படிக்க சேர நேர்ந்தது. அடுத்த தலைமுறை இன்று மேலே வந்துள்ளோம். எனக்கு அடுத்த தலைமுறை இன்னும் மேலே வரும். இந்தியாவின் மெட்ரோக்லில் வாசம். வெளிநாடு காணும் வாய்ப்பும் பணி நிமித்தம் கிடைக்கிறது. புது அறிவும் புது சிந்தனைகளும் கற்றுக் கொள்ள முடிகிறது. நான் முடித்த பின் எங்கள் கிராமத்திலிருந்து பதினைந்து பொறியாளர்களும் ஒரு மருத்துவரும் வந்தார்கள். பத்தாம் வகுப்பில் பெண்களுக்கு திருமணம் செய்வது குறைந்து வருகிறது. நான்கு பெண்கள் பொறியியல் படிக்கும் வாய்ப்பு பெற்றார்கள். ஊருக்கு பேருந்து வசதி போராடி பெற்றோம். ஊர் வரி உண்டாக்கி அரசின் உதவியுடன் காவிரி நீர் கொணர்ந்தோம். இந்த விழிப்புணர்வுக்கு அரசின் கல்விமுறையே காரணம். பொருளாதாரம் வளர்கையில் சமூகம் மேம்படுவதாகவே காண்கிறேன். தனிப்பட்ட அபிப்ராயம்.
//இட ஒதுக்கீட்டில் பலனடைந்து பயன் பெற்றவன். இந்த நிலையில் என் குழந்தைளை நான் ஒப்பன் காம்படிசனில் கொண்டு செல்ல போகிறேன். நான் என் சமுதாயத்தை சேர்ந்த வளரக் கூடிய இன்னோருவனின் இடத்தை என் குழந்தைகளை கொண்டு நிரப்ப விரும்பவில்லை.எனக்கு என் குழந்தைகளுக்கு எவ்வாறான கல்வி புகட்ட வேண்டும், எப்படி அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு உள்ளது.//
எப்படி அவர்களை எதிர்காலத்திற்கு தயார் செய்ய வேண்டுமென்ற விழிப்புணர்வு உங்களுக்கு உள்ளது, அதனால் நீங்கள் இடஒதுக்கீட்டை பயன்படுத்தாமல் இருக்கலாம் நேர்மையான நோக்கம்.
//என் தந்தையார் அண்ணா பல்கலைகழகத்திற்கும், அண்ணாமலை பல்கலைகழகத்திற்கும் வித்தியாசம் தெரியா நிலையிலியே இருந்தார். கம்யுட்டர் சயன்ஸ் என்றால் என்னவென்று புரியாமல் மின்னியல் பாடம் படிக்க சேர நேர்ந்தது.
//
உங்கள் தந்தை ஏதோ ஒரு தொழிலில் நிறைய சம்பாதிக்கிறார் ஆனால் இப்படி தெரியாமல் இருக்கிறார் உங்கள் தந்தை இவ்வளவு சம்பாதிக்கிறார் அதனால் உங்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றால் அது நியாயமா?
//உங்கள் தந்தை ஏதோ ஒரு தொழிலில் நிறைய சம்பாதிக்கிறார் ஆனால் இப்படி தெரியாமல் இருக்கிறார் உங்கள் தந்தை இவ்வளவு சம்பாதிக்கிறார் அதனால் உங்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றால் அது நியாயமா//
குழலி ,
அரசு சலுகை அளித்தும் எனக்கும் என் சகோதரனுக்கும் கல்லுரி மற்றும் விடுதி கட்டணம் செலுத்த அவ்வப்போது அம்மாவின் நகைகள் கடைக்கு போகும் மத்திய தர குடும்பத்தை சேர்ந்தவன் நான். அதற்காக என்றும் நாங்கள் வருத்தப்பட்டதில்லை.அதிலேயும் படிக்க உதவினாரே என சந்தோஷ படவே முடிகிறது. தெரிந்த பள்ளி ஆசிரியர்கள் நுழைவு தேர்வுக்கு தயார் செய்ய உதவினார்கள். நல்ல படிப்பிருப்பின் செல்வம் தேடி வருமென்பது பெற்றோரின் எண்ணம்.
விழிப்புணர்வும் சமூக அறிவும் வரும் பொழுது சமுதாயத்தின் மற்றவர் நலம் கருதி வழி விட வேண்டுமென்பதே என் கருத்து.
மேம்பட்ட பொருளாதாரமும் விழிப்புணர்வின் படி கல்லே. பொருளிருந்தும் சமூக அறிவும், விழிப்புணர்வும் இன்றி இருக்கும் போது அவ்வகை குறைக்கு இட ஒதுக்கீடு மட்டும் எவ்வகையில் பலனளிக்கும். வேறு வகை சமூக நல திட்டங்கள் வேண்டும்
உங்கள் கருத்தாங்களை குறைத்து மதிப்பிடுவதாக நினைக்க வேண்டாம். எனக்கு தோன்றியதை தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.
அனானி நண்பர் அவர்கள் மன்னிக்கவும், நான் சரியாக சொல்ல வந்ததை சொல்லவில்லை.
நான் சொல்ல வந்தது ஒரு உதாரணத்திற்கு உங்கள் தந்தை
உங்கள் தந்தை ஏதோ ஒரு தொழிலில் நிறைய சம்பாதிக்கிறார் ஆனால் இப்படி தெரியாமல் இருக்கிறார் உங்கள் தந்தை இவ்வளவு சம்பாதிக்கிறார் அதனால் உங்களுக்கு இடஒதுக்கீடு கூடாது என்றால் அது நியாயமா? என்று தான் சொல்ல வந்தேன், அந்த உதாரணமாக என்ற வார்த்தை வேறு அர்த்தம் தந்துவிட்டது,
அதாவது ஒரு உதாரணத்திற்கு ஒருவர் நிறைய சம்பாதிக்கிறார் அவர் உங்கள் தந்தையைப்போல அண்ணா பல்கலைக்கும் அண்ணாமலை பல்கலைக்கும் வித்தியாசம் தெரியாமல் இருக்கிறார், அதே போல் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்கும், எலக்ட்ரானிக்ஸ்க்கும் வித்தியாசம் தெரியாதவர், அவர் நிறைய சம்பாதிக்கிறார் என்ற காரணத்திற்காக அவரை க்ரீமிலேயரில் அடைத்து அவருடைய பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு வழங்காதிருப்பது நியாயமா?
மற்றபடி உங்கள் எல்லா நடுத்தர குடும்பங்கள் வீட்டிலும் இதே கதைதான்.
நன்றி
மன்னிப்பெல்லாம் பெரிய வார்த்தை. நீங்கள் தவறாய் எதுவும் கூறிவிடவில்லை.
//மற்றபடி உங்கள் எல்லா நடுத்தர குடும்பங்கள் வீட்டிலும் இதே கதைதான்//
அதே.
அடுத்து சில கேள்விகள்
ஒரு குடும்பத்தின் விழிப்புணர்வையும், சமூக அறிவையும் எவ்வாறு அளவிட முடியும். அங்கு அளவுகோல் என்ன?
என் பதில்; குடும்ப பொருளாதாரமே அளவுகோல்
தங்கள் பதில்; ?
எந்த நிலையில் ஒருவனை நீ மூன்னேறிவிட்டாய், உன் சமூதாயத்தின் முதுகில் ஏறி உன் வாரிசுகளை வளர்காதே உன் சமூதாயத்திற்கு நீ செய்யும் உதவி நீ மேல் நோக்கி செல்வதே என்று சொல்ல முடியும்
என் பதில்; குடும்ப பொருளாதாரமே அந்த நிலை
தங்கள் பதில்; ?
//Anonymous said...
கோபாலன் ராமசுப்பு!
நீங்கள் தினமலர் குடும்பத்தைச் சேர்ந்தவர் தானே?//
Anonymous,
சத்தியமா சிரிப்புதாங்க வருது உங்க கேள்வியை படிச்சவுடனே. என்ன சொல்வது என்று தெரியவில்லை.
P.S: I'm really curious to know what in my post made you ask such question? :)
'க்ரீமி லேயர் விலக்கு' அறிக்கையை எரிப்போம் என்று கி.வீரமணி எழுதி
வருகிறார். OC க்கும் SC க்கும் க்ரீமி லேயர் இல்லை. BC க்கு மட்டும்
ஏன் க்ரீமி லேயர் என்று கேட்கிறார்கள்.
தமிழக அரசின் பியூன் ரூ5000 சம்பளம் வாங்குவதாக கேள்வி. பியூனின்
மகனுக்கு வீட்டில் படிப்பு சொல்லித்தர யாரும் இருக்க முடியாது. அதே நேரத்தில்
பல தலைமுறைகள் ஜமீன்களாக இருந்து போர்டிங்க் பள்ளியில்
குழந்தைகளை படிக்க வைப்பவர்களுக்கு இட ஒதுக்கீடு அவசியமா?
பல்வேறு பல்கலைகழகங்களில்,கல்லூரிகளில் என்ன படிப்பு, வாய்ப்புகள்
என்ற விவரங்களை மாணவர்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அரசின் கடமை.
பள்ளிகளில் மாணவர்களுக்கு counselling, மூலம் அரசு இந்த தகவல்களை
மாணவர்களுக்கு இந்த தகவல்களை கொண்டு சேர்க்கலாமே. வெட்டித்தனமாக சிலை
வைப்பதற்கு செலவு செய்வதற்கு பதிலாக இதற்கு செலவு செய்யலாமே.
க்ரீமி லேயர் நடைமுறையில் பல பிரச்சினைகள் இருக்கிறது.சுய தொழில்
செய்பவர்கள் இந்த சட்டத்தை எளிதில் ஏமாற்று அமைப்புதான் இந்தியாவில்
இருக்கிறது. வேலைக்கு போகும் பெற்றோர்களை மட்டுமே இந்த சட்டம் பாதிக்கும்.
மற்றொரு பிரச்சினை, க்ரீமி லேயரில் இல்லாதவர்கள் ஐஐடி பரிட்சையில்
தேற முடியுமா? அப்படி தேறாத பட்சத்தில் பரிட்சை முறை மாற்றி
அமைக்கப்படுமா என்பதும் கேள்விக்குறி.
அத்துடன் இந்த எம்.எல்.ஏ, எம்.பி,முதலமைச்சர் கோட்டாக்களும்
ஒழிக்கப்பட வேண்டும். இவர்களுடைய வேலை சட்டம் இயற்றுவதே. அரசாங்க
இடங்களை இவர்கள் பணத்திற்கு விற்பதற்கு ஏன் அனுமதிக்கிறோம்?
மற்றொரு பிரச்சினை, க்ரீமி லேயரில் இல்லாதவர்கள் ஐஐடி பரிட்சையில்
தேற முடியுமா?
What a stupid question.
இது ஏன் stupid என்று தயை கூர்ந்து விளக்கமுடியுமா?
At 2:55 PM, குழலி / Kuzhali said…
""""அனானி நண்பர் அவர்கள் மன்னிக்கவும், நான் சரியாக சொல்ல வந்ததை சொல்லவில்லை """"""
இதைத்தான் எல்லோரும் ரொம்ப நாளா சொல்லிக்கிட்டு இருக்காங்க .
இப்பவாவது புரிஞ்சிச்சா:)
http://news.bbc.co.uk/2/hi/south_asia/5345100.stm
அனானி நண்பர் அவர்கள் மன்னிக்கவும்,
1) நான் சரியாக சொல்ல வந்ததை சொல்லவில்லை """"""
2) நான் சொல்ல வந்ததை சரியாக சொல்லவில்லை
Kuzhali meant the second but wrote the first.Perhaps he is too confused to express his confusion
clearly.
மற்றொரு பிரச்சினை, க்ரீமி லேயரில் இல்லாதவர்கள் ஐஐடி பரிட்சையில்
தேற முடியுமா?
IIT entrace exam is open to all
irrespective of creamy layer
or not. There is reservation
for SC/ST candidates.There is
no reservation for BC/OBC candidates. So entrace exam
has nothing to do with creamy
layer.IITs do not even ask your
caste in the selection process.
பரிட்சையில் தேற முடியுமா?
என்றால் அவர்களால்
வருடத்திற்கு 40000 கொடுத்து coaching வகுப்புகளுக்கு
போக முடியுமா? என்று அர்த்தம்
பரிட்சையில் தேற முடியுமா?
என்றால் அவர்களால்
வருடத்திற்கு 40000 கொடுத்து coaching வகுப்புகளுக்கு
போக முடியுமா? என்று அர்த்தம்
Hello idiot, yes you are an idiot because you lack common sense.There are many students who get in to IIT without going for expensive coaching classes.Is not
the same (expensive coaching class)
a problem for the poor in the
'forward' castes also.Anbumani
(Ramadoss) was educated in an
expensive convent school in Yercaud.There are many rich OBCs
who spend lakhs for weddings and
for sending their children abroad
for education.Do they deserve
reservation.
நண்பர் குழலிக்கு வணக்கங்கள்!
இந்த 'மேல்சாதிக்காரர்களின் கிரீமி லேயர்' மோசடி பற்றி முன்பே நான் ஒரு பதிவு செய்துள்ளேன்! :)
பார்ப்பனர்களின் அப்பட்டமான பதட்டம் செம காமடிங்கோ!
அய்யா அறிவாளி அவர்களே,
ஒரு உதாரணத்திற்கு சொல்கிறேன். அமெரிக்காவில் sat
என்று ஒரு பரீட்சை உண்டு. இதில் பணம் படைத்தவர்கள்
கோச்சிங்குக்கு போவதால் தங்கள் மதிப்பெண்ணை
உயர்த்த முடிந்தது. இதனால் வசதி இல்லாத மாணவர்கள்
மதிப்பெண் பின்தங்கி போனதென்று அனைவரையும் சமமாக
மதிப்பிட வேண்டுமென்று பரிட்சையே மாற்றி அமைத்தார்கள்.
இந்தியாவிn ஏற்ற தாழ்வு அமைப்பில் fairness பற்றி
பேசக்கூடாது போல.
தூங்குபவர்களைதான் எழுப்பலாம்.
சரியான சமயத்தில் வந்த மீள்பதிவு...குட்..
உயர்சாதி / "தாழ்த்தப்பட்ட" சாதி, இரண்டு கிருமிகளையும் ஒரே நேரத்தில் பிடித்து பேகான்பிரே அடிக்கலாமே...
யார் வேண்டாங்குறது ?
நல்ல கருத்துக்கள்...
பின்னூட்டங்களை மொத்தமாக எடுத்து பதிவிற்குள் போட்டுவிட்டால் புதிதாக 40 பின்னூட்டங்கள் வரை சேரும்..நல்ல விவாதங்களும் நடக்கும்...
குழலி ஆவன செய்வார :)) ( இந்த பின்னூட்டம் போடுவது யாருன்னு உங்களுக்கு தெரியாதா ?)
Post a Comment