க.சு.கா(கருத்து சுதந்திர காவலாளி) மூஞ்சியில் கரி
போன வருசம் இந்த கருத்து சொதந்திர காவலாளிங்க தொல்லை தாங்க முடியலை, ஆளுக்காளு கருத்து சொதந்திர காவலாளிங்க ஆயி ஒரே இம்சை, சரி எழவு இருந்துட்டு போகுதுனா இவிங்க யாருக்குடே கருத்து சொதந்திரத்தை காக்குறாங்கனு பார்த்தா முக்காவாசி சினிமாகாரங்களாவே இருக்கு, சரி எழவு ஏதோ ஒன்னு இருந்துட்டு போகட்டும், போன வருசம் அய்யா சினிமாக்காரவங்களே உங்க படத்து தலைப்பை தமிழ்ல வைங்க, எழவு சொன்னாலும் சொல்லலைனாலும் சினிமா வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது, அதனால கொஞ்சம் பொறுப்போட இருங்கனு சொன்னாங்க முதல்ல, இது என்ன எழவு சொல்லி தெரிய வேண்டுமா?
ஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அப்பாலிக்கா கெளம்புனாங்க பாருங்க க.சு.கா ங்க(கருத்து சுதந்திர காவலாளிங்க), நீங்க சொல்றது தப்பு என்ன படத்துக்கு என்ன பெயர் வைக்கனும்னு அவங்களுக்கு தெரியும் (சரி ராசா அப்போ த.பா.இ., திருமா, இராமதாசு கருத்து சுதந்திரப்படி அவங்க சொன்னாங்க, அது அவங்க கருத்து சுதந்திரம் இல்லியா)
அட அது கூட பரவாயில்ல இன்னும் சில க.சு.காங்க கெளம்பினாங்க, இன்னாடா வெசயம்னா படத்துக்கு பொருத்தமா பேர் வக்கிறாங்களாம், அந்த படத்துக்கு அந்த பேர் தான் பொருத்தமாம், இல்லினா படம் ஊத்திக்குமாம், இத்தியாதி இத்தியாதினாங்க....
இப்பாலிக்கா இவிங்க மூஞ்சியில தான் கரி பூசுனாங்க, அப்போ பல இங்கிலிபிசு தலப்பு படத்துக்கு பொருத்தமானது, அத மாத்தக்கூடாது, பேருந்துனு சொன்னா யாருக்கு புரியும், 'பஸ்' னு சொன்னா எல்லாருக்கும் புரியும், வலைப்பதிவுல கூட ஏதோ ஒரு க.சு.காவலாளி "மும்பை எக்ஸ்பிரஸ்" ங்கறதை "மும்பை எக்ஸ்பிரசு" னு மாத்திட்டானு நக்கல் உட்டாரு, "BF" படத்தை "அஆ"னு மாத்துனதுக்கு நக்கல் உட்டாங்க
இவிங்களுக்கு வச்சாங்க ஆப்பு, தமிழ்ல பெயர் வைத்தால் கேளிக்கை வரி ரத்து அப்படினு முதல்வர் கருணாநிதி சொன்ன பிறகு "Something Something உனக்கும் எனக்கும்" படத்து பெயர் "ஏதோ ஏதோ உனக்கும் எனக்கும்"அப்படினு மாறிடுச்சி, "எம்டன் - மகன்" படத்து பெயர் "எம்-மகன்" ஆயிடுச்சி, இதெல்லாம் "சம்திங் சம்திங்", "எம்டன் - மகன்" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க, அப்பாலிக்கா "ஜில்லுனு ஒரு காதல்" என்னடானா "சில்லுனு ஒரு காதல்" ஆயிடுச்சி, "காட்ஃபாதர்"னு ஒரு படம் எடுக்குறாங்களாம் அது பெயர் கூட தமிழ்பெயர்ல மாத்திட்டாங்களாம், இப்போ அப்படியே கொஞ்சம் பின்னால போனா நம்ம க.சு.காவலாளிங்க என்ன சொன்னாங்க இந்த ஆளுங்களுக்கு ஆதரவா, இப்போ இந்த ஆளுங்க என்ன செய்திருக்காங்க, படத்துக்கு பெயர் பொறுத்தம், பேருந்துனு சொன்னா புரியுமா பஸ்னு சொன்னா புரியும் இத்தியாதி, இத்தியாதி எல்லாம் டுபாக்கூர், இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க.
வரிவிலக்கு கொடுத்தால் தமிழ் பெயர் வைக்கிறாய் என்றால் அது கருத்தளவில் தமிழ் பெயர் வைப்பது சரி என்றும் அதனால் அந்த படத்தின் வியாபாரத்திற்கு பாதிப்பு இல்லை என்று தானே பொருள், இதைத்தானேயா அன்று தமிழ் பாதுகாப்பு இயக்கம், திரு.தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க, அன்று படத்தின் பெயர் நன்றாக விளம்பரம் செய்தாகிவிட்டது, பேருந்துனா புரியுமா, "ஸ்" க்கு பதில் "சு" போட்டுக்கலாமா இத்தியாதி இத்தியாதி எல்லாம் கதறியவர்கள், இப்போது படம் வெளிவந்த பின்பு படத்தின் தலைப்பை
மாற்றியிருக்கிறார்கள் "ஜில்" என்பது "சில்" ஆகிவிட்டது, ஏற்கனவே விளம்பரம் செய்யப்பட்ட "காட்ஃபாதர்" படத்தின் பெயர் மாறிவிட்டது இதெல்லாம் க.சு.காவலாளிகளின் மூஞ்சியில் பூசப்பட்ட கரி தானே....
அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் என்றால் அன்று அவர்கள் தமிழில் பெயர் வைக்காததற்கு என்ன காரணம்? இன்று பணத்திற்காக மாற்றுபவர்கள் தமிழுக்காக ஏன் மாற்றக்கூடாது.
இதற்கெல்லாம் வரி விலக்கு தந்துகொண்டிருந்தால் பிறகு குப்பைத்தொட்டியில் சரியாக குப்பையை கொட்டினால் ஊக்கத்தொகை, திருடாமல் இருக்க ஊக்கத்தொகை, சரியான வருமான கணக்கை சமர்பித்தால் நூறு விழுக்காடு வருமான வரிவிலக்கு(நூறு விழுக்காடு வருமான வரிவிலக்குனா எதுக்கு வருமான வரி கணக்கு காண்பிக்க வேண்டும்...) என்றெல்லாம் செய்ய வேண்டும், இதற்கு பதில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம், ஆனால் இதற்கும் உடனடியாக க.சு.காவலாளிங்க கிளம்பியிருப்பார்கள், கோடி கோடியாக சம்பாதிக்கும் திரைப்படகாரர்களுக்கு மேலும் வருமானம் பெற்று தருவதற்கு.
84 பின்னூட்டங்கள்:
ஒரு விஷயம் தெரியுமா குழலி அவர்களே. போன வருஷம் தமிழ்ப் பெயர் வை என்று மட்டும் கூறவில்லை. அதற்கு மேலும் பயமுறுத்தினார்கள்.
ஆனால் அதற்குள் வேறு அரசியல் நிர்ப்பந்தங்கள் வர ராமதாசு அவர்கள் திருமாவுக்குக் கூறாமல் ஜெகா வாங்கினார்.
அதற்குத்தான் கருத்து சுதந்திர காவலாளிகள் ஆட்சேபம் தெரிவித்தார்கள். அதிலும் தமிழ்ப்பெயர் போர்டுகளில் வேண்டும் என்று கேட்டு விட்டு, பா.ம.க. அலுவலக போர்டே ஆங்கிலத்தில் மட்டும் இருந்ததை சிலர் சுட்டிக் காட்ட எல்லாமே கேலிக் கூத்தாகப் போய் விட்டது.
இந்த வருஷம் வந்த அறிவிப்பு அதை விடத் தமாஷ். தமிழில் பெயர் வைத்தால் போதுமா? அதன் பொருளடக்கம் என்ன என்று பார்க்க வேண்டாமா. ஏதோ மனதில் தோன்றுவதையெல்லாம் மூளையை உபயோகிக்காது அறிவிப்பு செய்தால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
சினிமா வியாபாரிகள் செய்யும் கோமாளிததனங்களுக்காக கருத்து சுதந்திரத்தை கிண்டலடிக்கலாமா? இந்தக் கால காதலர்கள் வயசுக் கோளாறில் பண்ணும் ரவுசுத்தனங்களுக்கு காதல்தான் பொறுப்பு என்பது போலல்லவா இது? காசுக்காக பெயரை மாத்துதல் என்றாலும் அது அவரவர் உரிமை அல்லவா...? ராமதாசு வகையறாக்கள் கருத்து வெளியிட்டார்களா.. இல்லை வன்முறை மூலம் கட்டாயப்படுத்தினார்களா....? (அது அவர்களின் கோமளித்தனமான விளம்பர யுத்தி என்றாலும்)...
//அதிலும் தமிழ்ப்பெயர் போர்டுகளில் வேண்டும் என்று கேட்டு விட்டு, பா.ம.க. அலுவலக போர்டே ஆங்கிலத்தில் மட்டும் இருந்ததை சிலர் சுட்டிக் காட்ட எல்லாமே கேலிக் கூத்தாகப் போய் விட்டது.
//
டோண்டு அய்யா உம்ம அலம்பலுக்கு அளவேயில்லையா? தினமலர் படமெடுத்து போட்டதை வலைப்பதிவில் வைத்து ஜல்லியடித்ததை இங்கே உண்மைபோல பேசுகின்றீரே, அதே படத்தில் தமிழிலும் ஆங்கிலத்திலும் பெயர் பலகை இருந்ததை பலரும் சுட்டு காட்டினார்களே நினைவில்லையா உங்களுக்கு.
Kuzhali is the spokesperson for PMK in the blogsphere.So to think
that he will argue rationally
and logically is an exercise in vain.MK is doing stupid things because of pressure from PMK.
The film industry is ever ready
to lick the boots of those in
power and wants to get all such concessions.Nobody expects that to
defend freedom of expression.
HALLO! I DREAMED I COULD UNDERSTAND. IT'D BE NICE. ANYWAYS... YOUR COUNTRY IS SO BEAUTIFUL. GOOD BYE AND BE COOL.
அனானி சொல்வதை நான் வழிமொழிகிறேன். திருமாவும், ராமதாசும் தங்கள் கருத்தைச் சொன்னதோடு நிற்கவில்லை. அதைத் தினிக்க முற்பட்டார்கள்.
"டாக்டர் ராமதாஸ்" திடீரென ஒருநாள் "மருத்துவர் ராமதாசு" ஆனார். திடீரென்று ஒருநாள் அவருக்குத் தமிழ்ப்பற்று(!?) வந்து மாறினால், அன்றிலிருந்து எல்லோருமே மாறிவிடவேண்டுமா என்ன?
//The film industry is ever ready
to lick the boots of those in
power and wants to get all such concessions.
//
அதே தான் அதே தான், அந்த எழவு தான் ஆனா இந்த க.சு.காவலாளிங்க என்ன என்ன சொன்னாங்க, பேருந்துனு சொன்னா பிரியுமா? பஸ்னு சொன்னாதானே பிரியும், அப்பாலிக்கா படத்துக்கு பொருத்தமான தலப்பு, ஏற்கனவே வெளம்பரம் செஞ்சாச்சி, இப்போ வெளிவந்த படத்துக்கே பேர் மாத்திட்டாங்க, எழவு என்ன சொல்வாங்க இதுக்கு ஆங்... IRONY அந்த எழவைத்தான் சொன்னேன்...
//Kuzhali is the spokesperson for PMK in the blogsphere.
//
நன்றி தல, அடுத்த தேர்தலுக்கு எதுனா மருத்துவர் அய்யாகிட்ட சொல்லி சீட்டு வாங்கி தாங்க :-)
//"டாக்டர் ராமதாஸ்" திடீரென ஒருநாள் "மருத்துவர் ராமதாசு" ஆனார். திடீரென்று ஒருநாள் அவருக்குத் தமிழ்ப்பற்று(!?) வந்து மாறினால், அன்றிலிருந்து எல்லோருமே மாறிவிடவேண்டுமா என்ன?
//
அருள் திடீரென ஒரு நாளெல்லாம் ஆகலை, இப்போது மாதிரி அப்போதெல்லாம் பெரிசு பெருசாக சுவரொட்டி அடிக்க முடியாத நிலை "மருத்துவர் இராமதாசு" பேசுகிறார் என்ற முழங்கை நீள சுவரொட்டி 1984-87களில் பல இடங்களில் ஒட்டப்படும், 'கனல்' பத்திரிக்கையில் எப்போதும் "மருத்துவர் இராமதாசு" என்று தான் குறிப்பிடப்பட்டிருக்கும், பொது ஊடகத்தில் மருத்துவர் என்று வலியுறுத்த ஆரம்பித்தது வேண்டுமென்றால் பிற்காலத்தில் என்றாலும் தொடக்க காலத்திலிருந்தே அவர் தமிழ் பற்றோடு தான் இருந்தார், சரி இந்த பதிவு இராமதாசின் தமிழ் பற்றை பற்றியதல்ல, தமிழ் பெயர் வைக்க அன்று சொன்ன போது சில காரணங்களை திரைப்படத்துறையினரும், க.சு.காவலாளிகளும் சொன்னார்கள் ஆனால் இன்று வரிவிலக்கு கிடைக்கிறதென்று அதே காரணங்களை விலக்கி தமிழில் பெயர் வைக்கின்றனர் படம் வெளிவந்த பிறகும்.
குழலி அவர்களே,
கருத்து சுதந்திர காவலாளி மூஞ்சியில் கரி பூசுங்கள்..சரி..
கருத்து சுதந்திர கொலையாளி முகத்தில் எதைப் பூசுவது?
கோடி கோடியாய் quota மருத்துவர் அய்யா மட்டும் தான் சம்பாதிக்க அனுமதி தருவீர்களா..
சினிமாக் காரர்கள் சம்பாதித்தால் ஏன் ஆத்திரம் கொள்கிறீர்கள்?
பாலா
அனானி சொன்னது போல் திரைப்படத் துறையினர்பதவியில் இருப்பவர்களுக்கு ஜால்ரா அடிப்பது பணம் பண்ணுவதற்கு தான்.
அதே போல் அய்யா அவர்கள் தனது கூலிப் படையை ஏவி மிரட்டல் வியாபாரம் செய்வதும் பணம் கொள்ளை அடிக்கத்தான்.
//கருத்து சுதந்திர காவலாளி மூஞ்சியில் கரி பூசுங்கள்..சரி..
//
நான் எங்கே பூசுவது அதுக்கா முன்னாலயே யாருக்காக பேசுனாங்களோ அவங்களே பூசிட்டாங்களே...
//கருத்து சுதந்திர கொலையாளி முகத்தில் எதைப் பூசுவது?
//
மொதல்ல கருத்து சொதந்திரம்னா என்னனு சொல்லுங்க... என்னவேனா எதுவேனா எப்படிவேனா யார் வேணாலும் பேசுறது தான் கருத்து சொதந்திரமா?
//கோடி கோடியாய் quota மருத்துவர் அய்யா மட்டும் தான் சம்பாதிக்க அனுமதி தருவீர்களா..
//
அடேடே மருத்துவர் அய்யாவின் ஆடிட்டர் நீங்க தான் போல :-) அது சரி இங்கே quota எங்கே வந்தது, ஓ... ஓ... அது தான் உங்க எரிச்சலோ?
//சினிமாக் காரர்கள் சம்பாதித்தால் ஏன் ஆத்திரம் கொள்கிறீர்கள்?
//
சே... சே... நான் எங்க சொன்னேன் ஆத்திரம் வருதுனு.
//அய்யா அவர்கள் தனது கூலிப் படையை ஏவி மிரட்டல் வியாபாரம் செய்வதும் பணம் கொள்ளை அடிக்கத்தான்.
//
அவர் எங்கே ஏவிவிட்டார் எவ்வளவு கொள்ளையடித்தார் என சொல்லுங்கள் தினமலரும் இன்னும் பல இதழ்களும் காத்துக்கொண்டிருக்கின்றன, ஸ்கூப் நியூசே அடிக்கலாம் நீங்க... ஆதாரமில்லாமல் இது மாதிரி செய்திகளை காழ்ப்புணர்ச்சியோடு பரப்பும் உங்களை மாதிரி ஆட்கள் கருத்து சுதந்திர காவலாளிகளா?
கருத்து சுதந்திர கொலையாளிகளா?
சினிமா யாபார பொறுக்கிகளுக்குத் தான் புத்தி இல்லை.கருத்து சுதந்திர காவலாளிகளுக்கு புத்தி எங்க போச்சுன்னு கேக்கறீங்க.. அப்படித்தானே?நியாயம்தான்
க.சு.கா ஆளுங்களுக்கு(இந்த சுருக்கமே ஒரு மாதிரி இருக்கு)தமிழ் என்று வார்த்தை வந்தா அடி,நொருக்கு என்பது தான் அவர்கள் கொள்கை.
கேவலமா படம் எடுத்து சூழலை நாசமாக்கிற நாய்களை இவங்க பாதுகாப்பது இன்னும் தமாசா இருக்கும்.
பாபா படச்சுருள் பெட்டிகளைக் கைப்பற்றியது, தமிழ்ப்பெயர் வைக்கவில்லையென்றால் அதே மாதிரி போராட்டங்களெல்லாம் செய்து திருட்டு விசிடிக்கள் போடப்போவதாகக் கூறியதெல்லாம் மறந்து விட்டதா?
எப்போதுமே தமிழ்ப் பற்றுடையவர் தன் மகனை ஏன் கான்வெண்டில் படிக்க வைத்தாராம்? பேத்திகளும் கூட சென்னையில் படிக்கும்போது தமிழ்க்கல்வி இல்லாமல்தானே இருந்தார்கள்? 14, மற்றும் 12 வயது குழந்தைகள் டெல்லிக்கு சென்று மேட்டர்டே விவகாரம் வந்த போதுதான் தமிழ் படிக்கவே அனுப்பிக்கப்பட்டனர்?
குழலி அவர்களே, இவ்வளவு வீக் பாயிண்டுகளை வைத்துக் கொண்டு அவர் தமிழ் பற்றுடையவராக நடித்ததைத்தான் கேலி செய்தோம். மற்றப்படி குழந்தைகளுக்கான கல்வி என்னவாக இருக்க வேண்டும் என்பது சம்பந்தப்பட்ட பெற்றோர்தான் தீர்மானிக்க வேண்டும் என்பதில் ஒரு கருத்து வேறுபாடும் இருக்க முடியாது என்பதையும் கூறுகிறேன்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி,
கருத்து சுதந்திரம் என்பது படத்தை காசு போட்டு எடுப்பவன் அவன் இஷடத்திற்கு பெயர் வைப்பதே. அது அவனுக்கு லாபகரமாகவோ,ராசியாகவோ அல்லது அவனுதது சின்ன வீடு ஆசைப்பட்ட பெயரோகவோ இருக்கலாம். அது அவனோட விருப்பம்.
மற்றப்படி இங்க நம்ம காலாட்டிட்டு ஒக்காந்திட்டு நீ டமிலன் டமிழ்லதான் வைக்கனும்னு சொல்லிட்டு தியேட்டர்ல கல்லை விட்டெறிஞ்சா அதுக்கு பெயர் கட்டை பஞ்சாயத்து.
இப்பவும் க.சு.கா முகத்தில கரியெல்லாம் இல்லை. க.சு நல்லாதான் இருக்கு.
ஆகா கெளம்பிட்டாருய்யா டோண்டு அய்யா பலமுறை பேசி விளக்கம் கொடுத்த பழய பல்லவியை தூக்கிக்கிட்டு கெளம்பிட்டாரு...
நானும் அனானி & அருளின் கருத்தை வழி மொழிகிறேன்.
//திருமாவும், ராமதாசும் தங்கள் கருத்தைச் சொன்னதோடு நிற்கவில்லை. அதைத் தினிக்க முற்பட்டார்கள்.// தினிப்பைத்தான் கருத்து சுதந்திர காவலாளிகள் சொன்னார்கள்.
//இதெல்லாம் "சம்திங் சம்திங்", "எம்டன் - மகன்" ங்கிற பெயர்களை நன்றாக விளம்பரம் செய்துட்டு, படமும் வெளிவந்து பிறகு மாத்துனாங்க//
இதையே தான் டாக்டர் ராமதாசும் செய்தார் என்று நினைக்கிறேன். டாக்டர் என்று விளம்பரம் முழுமையா செய்துவிட்டு தான் மருத்தவர் என்று மாற்றிக்கொண்டார் என்பது என் கருத்து.BTW தாஸ் என்றாலும் தாசு என்றாலும் அது தமிழ் அல்ல தலைவா!!! அதை ஏற்றக்கொள்வாரா உங்கள் தலைவர்? பெயரை எப்ப தமிழில் மாற்ற போகிறார்?? அப்பறம் சன் டிவியும் கூட தினமும் // வயசு வித்தியாசமில்லாம எல்லார்கிட்டயும் போய் சேருது// ஏன் அதை மாற்ற சொல்லமாட்டீங்கறாரு? பயமா?? கூட்டா?
அதெல்லாம் போகட்டும். எது எப்படி ஆனாலும் நீங்கள் சொல்லும் சில கருத்துக்கள் நான் ஏற்றுக்கொள்கிறேன். வரிவிலக்குக்காக தான் இவர்கள் பெயர் மாற்றுக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு லாபம்!!! நான் சில் நாட்களுக்கு முன் பாண்டிச்சேரி சென்றிருந்தேன் அங்கு எம்-மகன் சினிமா, எம்டன்-மகன் என்ற பெயரிலேயே ஓடிக்கொண்டிருக்கு!!! அப்ப தமிழ்நாட்டில் வரிவிலக்குன்னா இங்க மட்டும் பெயர் மாற்றி சாதனை செய்யறாங்க!!! என்ன கொடுமையடா இது!!! அங்க நாளிதழ் கூட எம்டன்-மகன் என்ற பெயரிலேயே விளம்பரம் செய்திருந்தார்கள்!!! அப்ப இவர்கள் தமிழக அரசை முட்டாளாக்கறாங்களா??
எனக்கு இது போன்ற ஊக்கம் செய்தால் தமிழ்வளரும் என்ன கருத்தில் ஏற்பு இல்லை. இது தமிழக அரசு தேவையில்லாமல் தன் வருமானத்தை இழப்பதாகத்தான் தெரிகிறது. இலவச டி.வி, எறிவாயு அடுப்பு என்று இலவசங்களை கொடுத்து திவாலாக உள்ள அரசு இது போன்ற அன்றாட வருமான கேளிக்கை வரியையும் விட்டுவிட்டால் அப்பறம் டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி தான் நம்ம அரசு ஓட்டும். இந்த சுமை வெகுவிரைவில் நம் தலையில் தான் வந்து விழும் என்பதே உண்மை.
குழலி அவர்களே,
quota ஒரு பட்டம்..எம் ஜீ யாருக்கு புரட்சி நடிகர்,மக்கள் திலகம், என்ற பட்டங்கள் போல்..
அதே போல் அய்யவுக்கு "மர வெட்டி மாவீரர்" என்ற பட்டமும் உள்ளது என்று உங்களுக்கு தெரியும்.
நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசலாம்..அது கருத்து சுதந்திரம்..
மத்தவங்க பேசினா அவங்க ஆடிட்டரா என்று குதர்க்கமா கேப்பீங்க..
ஆனால் ஜாதி வெறி பிடித்து அலையும் ப ம க வுக்கு நீங்கள் ஏன் கொடி தூக்குகிறீர்கள்?
//இப்பவும் க.சு.கா முகத்தில கரியெல்லாம் இல்லை. க.சு நல்லாதான் இருக்கு. //
இருந்தா நல்லது தான், ஆனா அப்படியிருக்கா இந்த விசயத்துல, ஹா ஹா...
டோண்டு பதிவெல்லாம் படிக்கறதில்லை.
அதனால் அவர் சொன்ன விவரம் தெரியலிங்கோ.
நான் சொன்ன கருத்து சுதந்திரத்துக்கான வெளக்கம் விவரம் பத்ததாதுனா நீங்கதான் எனக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சி கருத்து சுதந்திரம்னா என்னனு சொல்லி தாங்களேன்.
கேவலமா படம் எடுத்து சூழலை நாசமாக்கிற நாய்களை இவங்க பாதுகாப்பது இன்னும் தமாசா இருக்கும்
Mr.Muthu
Tell me what have been the actions of your great leaders like Supa.Vee, Arivumathi,Nedumaran
regarding Tamil films.Have they not always received the support of some sections of film world. Have
they ever opposed films like
Thullovatho Illamai or screening
of porn films in Tamil Nadu.
How about films of T.Rajendar.
Are they dignified or do they
reflect cultural ethos.Why PMK
is not against his films.
Who is protecting whom. Youth
like you and Kuzhali should try to think rationally instead of
supporting PMK and all sorts
of tamil nationalists.
அப்பறம் டாஸ்மாக் வருமானத்தை மட்டும் நம்பி தான் நம்ம அரசு ஓட்டும்.
Dont worry DMK govt will open
arrack shops and PMK will support
it.
//How about films of T.Rajendar.
//
தியாகராஜ பாகவதர், பி.யூ.சின்னப்பாவையெல்லாம் விட்டுட்டிங்களே :-)
////அய்யா அவர்கள் தனது கூலிப் படையை ஏவி மிரட்டல் வியாபாரம் செய்வதும் பணம் கொள்ளை அடிக்கத்தான்.
//
அவர் எங்கே ஏவிவிட்டார் எவ்வளவு கொள்ளையடித்தார் என சொல்லுங்கள் தினமலரும் இன்னும் பல இதழ்களும் காத்துக்கொண்டிருக்கின்றன//
மும்பை எக்ஸ்பிரஸ் கட் அவுடுகள் பல முறை அண்ணா சாலையில் ஆள் வைத்து கிழிக்கப்பட்டது, நான் நேரிலே பார்த்தேன்! அவை செய்தியாகவும் வந்தது! so no worries குழலி.
//என்னவேனா எதுவேனா எப்படிவேனா யார் வேணாலும் பேசுறது தான் கருத்து சொதந்திரமா? //
ஆமாம். அது தான் கருத்து சுதந்திரம்.
//ஆனால் ஜாதி வெறி பிடித்து அலையும் ப ம க வுக்கு நீங்கள் ஏன் கொடி தூக்குகிறீர்கள்?//
ஓரே ஜாதி. அதனால் தான்.
//கேவலமா படம் எடுத்து சூழலை நாசமாக்கிற நாய்களை இவங்க பாதுகாப்பது இன்னும் தமாசா இருக்கும். //
எந்த திரைபடத்தால் "சூழல்" நாசமாகிறது ?
//Why PMK
is not against his films.
Who is protecting whom. Youth
like you and Kuzhali should try to think rationally instead of
supporting PMK and all sorts
of tamil nationalists.
//
தல விசயம் பாமக எதை எதிர்த்தது ஆதரித்தது என்பதல்ல, இங்கே ஏன் அடாவடியாக தேவையில்லாமல் பாமக பேசப்படுகிறது என்றும் புரியவில்லை, அன்று தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்று அவர்கள் சொன்ன போது விளம்பரம் செய்தாச்சி, படத்துக்கு இந்த பெயர் தான் பொருத்தம், 'ஸ்'சை 'சு'வாக்கினா போதுமா என க.சு.கா.கள் பேசினார்களே இன்று படமே வெளியான பின்பு பணத்துக்காக பெயர் மாற்றுகிறார்களே இப்போது படத்திற்கு பாதிப்பில்லையா, பெயர் படத்திற்கு பொருத்தமாக இல்லையா?, விளம்பரம் செய்த பெயரை மாற்றுகிறார்களே என்று க.சு.காவலர்களை நோக்கி கேள்வியெழுப்புகிறேன் அவ்வளவே, இதில் பாமக எங்கே வந்தது இராமதாசு எங்கே வந்தார்?
////இப்பவும் க.சு.கா முகத்தில கரியெல்லாம் இல்லை. க.சு நல்லாதான் இருக்கு. //
இருந்தா நல்லது தான், ஆனா அப்படியிருக்கா இந்த விசயத்துல, ஹா ஹா...
//
குழலி கருத்து சுதந்திரத்தின் வரையரை விஷயத்துக்கு விஷயம் மாறுமா?
;)
பி.யு சின்னப்பா மாதிரி சிரிக்கிறிங்க.
கலக்குங்க போங்க
//நீங்கதான் எனக்கு கொஞ்சம் வேப்பிலை அடிச்சி கருத்து சுதந்திரம்னா என்னனு சொல்லி தாங்களேன்.
//
என்னவேனா எதுவேனா எப்படிவேனா யார் வேணாலும் பேசுறது தான் கருத்து சொதந்திரம்.
///ஆனால் ஜாதி வெறி பிடித்து அலையும் ப ம க வுக்கு நீங்கள் ஏன் கொடி தூக்குகிறீர்கள்?//
ஓரே ஜாதி. அதனால் தான்.
//
அப்படியே விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட்கள், பல நேரங்களில் காங்கிரஸ், சில நேரங்களில் அதிமுக முன்னொரு காலத்தில் பாஜக என நான் கொடிபிடித்த கொடி பிடிக்கும் கட்சிகள் பல உண்டு, அதற்கு என்ன காரணமாக இருக்கும், சமுத்ராவை கேட்டால் சொன்னாலும் சொல்வார் ஒரே சாதியென :-)
//அன்று தமிழில் பெயர் வைக்க வேண்டுமென்று அவர்கள் சொன்ன போது//
யார் அந்த அவர்கள்
அவர்கள் எதுக்கு அடுத்தவன் படத்துக்கு பெயர் வைக்கறதில் ஆர்வமாய் இருந்தாங்க.டமிலார்வமா?
// விளம்பரம் செய்தாச்சி, படத்துக்கு இந்த பெயர் தான் பொருத்தம், 'ஸ்'சை 'சு'வாக்கினா போதுமா என க.சு.கா.கள் பேசினார்களே //
இப்படிதான் சொல்ல முடியும். ஐயா நீங்க கட்டை பஞ்சாயத்து செய்யறிங்கனு
சொல்லிட்டு படம் ரிலிஸ் பண்ண முடியுமா? அடுத்து ஆளுங்கட்சியா வந்தா தயாரிப்பாளர் தமிழ் பூமியில இருக்க முடியுமா?
//இன்று படமே வெளியான பின்பு பணத்துக்காக பெயர் மாற்றுகிறார்களே //
படம் எடுப்பதே பணத்துக்காகதானே.
// இதில் பாமக எங்கே வந்தது இராமதாசு எங்கே வந்தார்?
//
முதல் வரியில் நீங்கள் சொன்ன அவர்கள் யார் குழலி
//விளம்பரம் செய்த பெயரை மாற்றுகிறார்களே என்று க.சு.காவலர்களை நோக்கி கேள்வியெழுப்புகிறேன் அவ்வளவே, இதில் பாமக எங்கே வந்தது இராமதாசு எங்கே வந்தார்? //
//ஆனா அது அவிங்களுக்கு தெரியலை அதனால தமிழ்பாதுகாப்பு இயக்கம் தொல்.திருமா, மருத்துவர் இராமதாசு எல்லாம் சொன்னாங்க//
நீங்க தான ஆரம்பிச்சீங்க!!! இப்ப வந்து "இதில் பாமக எங்கே வந்தது இராமதாசு எங்கே வந்தார்?" என்று கேட்டால் என்ன சொல்லறது??!!
ஓ!!! தமிழ்பாதுகாப்பு இயக்கம்ன்னு சொல்லனுன்னு சொல்லறீங்களா? மக்களே இனி அந்த மேட்டரை தொடங்குங்க!!! இன்னைக்கு சனிகிழமை சும்மா இருப்பீங்கன்னு எல்லாருக்கு குழலி வேலை கொடுத்து இருக்காரு!! என்சாய்!!!
அப்பறம் குழலி சன் டிவி போர்டு மட்டும் ஏன் தார் அடிக்காம விட்டாங்க உங்க தமிழ்பாதுகாப்பு இயக்கம்!!?? என் முந்தைய பின்னூட்டத்துல சில கேள்விகள் கேட்டேன் தமிழ் வளர்க்க அதை பத்தி ஒன்னும் பதில் காணேம்??
அப்பறம் குழலி சன் டிவி போர்டு மட்டும் ஏன் தார் அடிக்காம விட்டாங்க உங்க தமிழ்பாதுகாப்பு இயக்கம்!!??
They target the weak and those who wont retaliate.With the powerful
forces they either ally or come to
a compromise.
அய்யா சாமிகளா என்னைக்கு நாமெல்லாம் பதிவின் பேசு பொருளை என்றூ பேசியிருக்கோம், சாமிகளா த.பா.இ ஏன் இதை செய்யலை, அதை செய்யலை, லொட்டு லொசுக்கு எல்லாம் பேச த.பா.இ பற்றிய பதிவல்ல இது
விசயம் ரொம்ப எளிது ...
அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே, இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்
//விசயம் ரொம்ப எளிது ...
//
எவ்வளவு பெரிய விஷயத்தை இப்படி
பட்டுனு போட்டு உடைக்கிறிங்க. ;)
என் கண்ணே பட்டுடும் போல இருக்கு
//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது//
கை காசு, பொண்டாட்டி தாலியெல்லாம் வித்து படம் எடுக்கறவன்ட்ட என் தமிழார்வத்துக்கு நீ படமெடுனெல்லாம் வலியுறுத்த கூடாது.
// என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள்
//
கட்சிகாரங்களை பகைச்சிட்டு நம்ம ஊர்ல வியாபாரம் பண்ண முடியாது.
வற்புறுத்தி பெயர் மாற்ற சொன்னால், சொன்னவர் மனம் புண் படாமல் இருக்க வழா வழா கொழ கொழானு ஒரு காரணம் சொல்லறாங்க.
அவங்களை பார்த்து இரக்கம்தான் பட வேண்டும்.
சம்பாதிக்கனும் அப்படிங்கற ஆர்வத்திலதான் படம் எடுக்கறாங்க. வரி சலுகை கொடுத்தா படத்தோட வருமானம் அதிகமாகுது. அதுக்காக அவங்களே விருப்பப்பட்டு
பெயர் மாற்றுகிறார்கள்.
//அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே, இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்
//
க.சு.காவலாளிகள் சொல்வது வற்புறுத்தக் கூடாது, முதல் போடறவன் அவன் விருப்பத்துக்கு திரைப்பட பெயர் வைத்துக் கொள்ளலாம் என்பதே
விருப்பத்திற்கு செய்கையில் க.சு.காவிற்கு ஏது பிரச்சனை.
விரும்பி செய்வது, வற்புறுத்தி செய்வது
இரண்டு நிலைதான க.சு.காவிற்கு
உதாரணத்திற்கு கீழ் காண்பவை
வருமான வரி கட்ட வேண்டுமென்பது வற்புறுத்த படக் கூடியது
தொழில் தொடங்கையில் மற்றும் குழந்தை பிறக்கையில் பெயர் இடுவது விருப்பத்தில் செய்வது.
//அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே, இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... //
இன்று பெயர் மாற்றம் தினிக்கப்படவில்லை!! அன்னும் சிலர் தமிழில் பெயர்மாற்றினார்கள், ஆனால் அன்று தினிக்கப்பட்டு தான் மாற்றப்பட்டுள்ளது! உதாரணம் அ.ஆ! இறுதிவரை போராடி எங்க பிரச்சனை பெரிதாக போய்விடுமோ என்று மாற்றினார் சூர்யா! இன்று இவர்களுக்கு வியாபார ரீதியாக சில நன்மைகள் கிடைக்கப்பெற தாங்களாகவே தான் பெயர் மாற்றுகிறார்கள். அரசு தினிக்கவில்லை. வரிவிலக்கு வேண்டுமென்றால் தமிழில் பெயர் வைக்க சொல்கிறார்கள். சோ! தினிப்புக்குத்தான் எதிர்ப்பு கிழம்பியது! இன்று வரிவிலக்கு தினிப்பு அல்ல!!!! அவ்ளோதான்!!! ஹி! ஹீ!! அது கூட புரியலையா குழலி.
ஓக்கே குழலி அவர்களே. இந்தப் பதிவின் முக்கிய விஷயத்துக்கே வருகிறேன். இந்த இன்ஸெண்டிவை போன ஆண்டே கொடுத்திருந்தால் இந்தப் பிரச்சினை எல்லாமே இல்லாமல் போயிருந்திருக்கும்.:))
சரி சீரியஸாக: போன ஆண்டும் சரி இந்த ஆண்டும் சரி படத் தயாரிப்பாளர்கள் சுதந்திரமாகத்தான் முடிவு எடுத்தனர். போன ஆண்டு மிரட்டலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த ஆண்டு இன்ஸெண்டிவை வாரி எடுத்துக் கொண்டனர். அவர்களை சுதந்திரமாக இருக்க விடுங்கள் என்று கூறிய நாங்கள் இந்த ஆண்டும் அதைத்தான் கூறுகிறோம்.
இதில் எங்கே முகத்தில் கரி வந்தது? 2001-ல் அதிமுகவுடன் கூட்டு வைத்தப் போது கண்ணுக்குத் தெரியாத தர்மபுரி பஸ் கொலை 2006-ல் மட்டும் எப்படித் தெரிந்ததோ அப்படித்தான் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.
இதில் பா.ம.காவை கலாய்த்ததற்கு காரணம் நீங்கள் வாகாகப் போட்டுக் கொடுத்த பந்தை நாங்கள் சிக்ஸர் அடிப்பதற்காகவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஜெய் என் முந்தைய பின்னூட்டத்தை படித்துவிட்டு பேசுகிறீர்களா? மீண்டும் படியுங்கள், உதாரணத்திற்கு மருந்தை சாப்பிட்டால் கசக்கும் அதனால் சாப்பிடமாட்டேன் என்று சொன்ன குழந்தையோடு சேர்ந்து கொண்டு ஆமாமாம் கசக்கும் அதனால் சாப்பிட சொல்வது தவறு என்ற க.சு.காவலாளிகள் இன்று அதே குழந்தையை ராசா கண்ணு நீ மருந்து சாப்பிடு நீயே சாப்பிட்டால் உனக்கு பணம் தரேன் என்று சொல்லும்போது கசப்பு மருந்தை டபக்கென்று குழந்தை முழுங்கிவிட்டது, அன்று கசந்த இன்றைக்கு கசக்கவில்லையா? அன்று கசக்கும் என்று சொன்ன க.சு.காவலாளிகள் இன்று என்ன சொல்கிறார்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கிறேன், நீங்கள் என்னடாவென்றால் வலுக்கட்டாயமாக மருந்து புகட்ட முயன்றவரை வலுக்கட்டாயமாக மருந்து புகட்டாதீர்கள் என்று சொன்னவர்களை பற்றி பேசுகிறீர்கள், நீங்கள் சொன்ன க.சு.காவலாளிகளுக்கும் நான் பேசும் க.சு.காவலாளிகளுக்கும் வித்தியாசம் இருக்கிறது. என் பின்னூட்டம் மீண்டும் கீழே...
//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே., இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்
இன்னும் கூறுவேன். இப்போது அரசு செய்திருப்பதும் கோமாளித்தனமானக் காரியம்தான். தமிழில் தலைப்பு வைத்தால் போதுமா அதன் உள்ளடக்கம் தமிழ் எண்ணத்திற்கு மாறாக இருகலாமா? போன ஆண்டாவது வெறுமனே இம்மாதிரி ஆய்ந்தறியாத வகையில் கூறினார்கள், பணம் ஒன்றும் செலவில்லை. ஆனால் இந்த ஆண்டில் பண நஷ்டம் வேறு. வெறுமனே விதியின் எழுத்துக்களை (letter of the law) பார்த்து கடை பிடிததற்கெல்லாம் பணம் அழ வேண்டியிருக்கிறது.
இந்த அழகில் குழந்தைக்கு மருந்து என்றெல்லாம் வேறு இன்னும் தமாஷை அதிகரிக்கிறார். குழலி அவர்கள். அது சரி சன் டிவி தன் பெயரை இன்னும் மாற்றாமல் வைத்திருக்கிறதே. ஏன்?
மற்றப்படி நான் பார்ப்பனர் என்று சொல்லிக் காட்டாத நாளும் இருக்கிறதா என்ன? அவர்கள் பாப்பான் என்று திட்ட நான் போடா ஜாட்டான் என்று என் வேலைகளை கவனிக்கிறேன். அவ்வளவே.
அன்புடன்,
டோண்டு ராகவன்
ஹோ! ஹோ!! அப்ப க.சு.காவில் பல கோஷ்டியிருக்கா?? என்னவோ நான் சொல்லவந்ததை சொல்லிவிட்டேன். அவ்வளவே!!!
//என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது//
கருத்து தினிப்பை எதிர்ப்பதற்க்கு காரனம் தேவையில்லை. ஆதரிப்பதற்க்கு வேண்டுமானால் இந்த பதிவை போல ஜால்ரா வேலைகள் தேவைபடலாம்.
கருத்து சுதந்திரத்தை இத்தனை பேர் காக்க முற்பட்டிருப்பது நாட்டுக்கு நலல எதிர்காலம் இருப்பதை கட்டியம் கூறுகிறது.ஆனால் கருத்து சுதந்திரம் என்பது யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் எழுதுவது,பேசுவது என்று வரையறுப்பது சரியல்ல என்று நினைக்கிறேன்.அது நகைப்பிடமானது.முட்டாள்தனமானது. உதாரணம் தமிழ்மணத்தில் நடக்கும் பிரச்சினைகளில் இருந்தே அறிந்துகொள்ளலாம்.
இந்த பதிவை பொறுத்தவரை படத்திற்கு பொறுத்தமான தலைப்பு ஆங்கில் மொழியில் தான் இருக்கிறது அல்லது இன்னும் ஒரு படி மேல் போய் சம்ஸ்கிருதத்தில் தான் இருக்கிறது என்று சொன்ன ஆட்கள் இன்று பணத்திற்காக
சினிமா வியாபாரிகள் தமிழ் பற்றாளர்களாக மாறி தமிழ் தலைப்பு வைத்துள்ளதை எப்படி நியாயப்படுத்துகிறார்கள் என்பதுதான்.அப்ப தமிழ் தலைப்பு வைத்தாலும் படம் ஓடும் என்றால் ஏன் கருத்து சுதந்திரம் என்று காவடி எடுத்தார்கள் கருத்து சுதந்திர காவலாளிகள்?
டோண்டு, ஆகியோர் சொல்வதை நான் ஒருவிதத்தில் ஒத்துக்கொள்வேன். தமிழ் பற்றாளர்களாக வேசம் கட்டி ஆனால் திருமாவும் ராமதாசும் உண்மையில் பற்றில்லாதவர்களாக இருந்தால் அதை வெளிகாட்டுவதில் தப்பில்லை.ஆனால் அதை வைத்துக்கொண்டு தமி்ழ்பற்றை பேசுவதே தவறு என்று சொல்வது அயோக்கியத்தனம்.
after posting this reply i saw kuzhali posted a similar reply to jai.
:))
குழலி
ராமதாஸ் என்று ஒரு சிலுவையை சுமந்துகிட்டு எப்படிய்யா சுழட்டி சுழட்டி அடிக்கிற?
k
தானாக இருக்கவேண்டிய சுரணையை கூட பணததை காட்டி அடிச்சி வரவெக்கற நிலைமை தமிழனுக்கு...
சாரி... கொஞ்சம் லேட் ஆகிடுச்சு.
//அருள் திடீரென ஒரு நாளெல்லாம் ஆகலை, // ஏற்க முடியாத கருத்தாயினும், இப்பதிவுக்கு நேரடி சம்பந்தமில்லை என்பதால் விட்டுவிடுவோம்.
முதலில், நம் அரசு அறிவித்திருக்கும் இந்த வரிவிலக்கு ரொம்ப கேவலமான ஒன்று. இதனால் தமிழ்நாட்டில் தமிழ்ப்பற்று செழித்துவிடப்போவதில்லை. படத்தின் உள்ளே இருக்கக்கூடிய கருத்திலோ, வசனங்களிலோ எந்த மாற்றமும் இருக்கப்போவதில்லை! இதனால் அரசு ஏற்கும் நஷ்டத்தை தமிழ் வளர்க்க வேறு நல்ல வழிகளில் பயன்படுத்தி பயன்பெற முடியும்.
அடுத்து கருத்து சுதந்திரத்திற்கு வருவோம். 100% இப்போதும் கருத்து சுதந்திரம் இருக்கிறது என்றே சொல்லவேண்டும். அவர்கள் முகத்தில் எந்த கரியும் பூசப்படவில்லை! இப்போதும் அவர்கள் விரும்பினால் ஆங்கிலத்தில் தலைப்பிடும் உரிமை இருக்கிறது. தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்காக(அல்லது வற்புறுத்தலுக்கக) மட்டுமே இந்தப் பெயர்மாற்றங்களை இயக்குனர்கள் ஏற்கிறார்கள் என்பது என் கருத்து. தான் இயக்கும் படத்தின் தயாரிப்பாளருக்காக படைப்பாளிகள் அனுசரித்துப்போகலாம். ஆனால் மிரட்டலுக்கெல்லாம் அனுசரித்துப் போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!
//தில் கர்நாடகத்தில் நேரடி மொழி மாற்று படங்களுக்கு 100% கூடுதல் வரி விதிப்பது போல தமிழில் படத்தின் பெயர் இல்லையென்றால் 100% கூடுதல் வரி என்று செய்திருக்கலாம்,//
ippidi senja jalra vizha eduppangala.
தமிழ் படத்துக்கு தமிழ் பெயர் வைக்க அரசு வரியை நீக்கியது. சினிமாவின் காலில் விழுவதற்கு சமன். என்னவோ !
tamil patru engarathu arasiyal vyabaram. Athula mu.ka kum ramadasukum potti. Ithula tamilnadu naar naara kiliuthu. Innamum arasiyal katchigal makkaluku nanmai seiya vanthatha nambikondu irupathai parthu sirika thaan thonuthu. PMk baba pada release nu illai, always they beleive in arajagam. Cinema vyabaram, enna panna labam varumo athai pannuvanga. Muttaklthanama oru sattam labatha jaasthi aakumna avanga use pannuvanga. Mothathil indraiya thalaivargal thangalai thalaivargalaga nambuvathu illai. Ottu pichaikarargal allathu arajagathin moolam vottai kollai adipavargal. Kandipa matru sakthigalai patri yosithu nattai kakka vendiya tharunam.
//தயாரிப்பாளர்களின் வேண்டுகோளுக்காக(அல்லது வற்புறுத்தலுக்கக) மட்டுமே இந்தப் பெயர்மாற்றங்களை இயக்குனர்கள் ஏற்கிறார்கள் என்பது என் கருத்து. தான் இயக்கும் படத்தின் தயாரிப்பாளருக்காக படைப்பாளிகள் அனுசரித்துப்போகலாம். ஆனால் மிரட்டலுக்கெல்லாம் அனுசரித்துப் போவார்கள் என்று எதிர்பார்க்க முடியாது!
//
அதான் அதேதான் அருள், அதாவது அப்போது பல காரணங்கள் கூறி சமரசம் செய்யமுடியாத காரணங்களென்றெல்லாம் கூறிய படைப்பாளிகள் அவர்களின் காரணங்களை காப்பாற்றிய க.சு.காவலாளிகள் இன்று அதே காரணங்கள் அப்படியே இருந்த போதும் தயாரிப்பாளர்களுக்காக சமரசம் செய்து கொண்டபோது அந்த காரணங்கள் பொய்யானதென்றாகவில்லையா? அப்போது அதற்காக மூர்க்கத்தனமாக் க.சு.வை காத்த காவலாளிகள் இப்போது எங்கே போய் முகத்தை வைப்பார்கள்
// Kandipa matru sakthigalai patri yosithu nattai kakka vendiya tharunam.
//
முத்துக்குமரன் பலரும் இப்படி சொல்வார்கள், திராவிட, இத்யாதி தலைவர்களை கடுமையாக விமர்சிப்பார்கள் ஆனால் இது மாதிரி மாற்று சக்தியாக யாரையும் அடையாளம் காட்டுவார்களா? அப்போது மட்டும் கள்ள மௌனம் சாதிப்பார்கள், மாற்று சக்தியாக யாரை முன்னிறுத்துவீர் சொல்லுங்கள் (ஜெயலலிதானு சொல்லிடாதிங்க தல ஹி ஹி )
//ராமதாஸ் என்று ஒரு சிலுவையை சுமந்துகிட்டு எப்படிய்யா சுழட்டி சுழட்டி அடிக்கிற?
//
ஹி ஹி... நன்றி தல
நானொன்றும் இராமதாசை மிஞ்சிய தலைவரில்லை, இராமதாசு ஒரு புனிதர் என்றெல்லாம் சொல்வதில்லையே...வெகுசன ஊடகங்கள் செய்திருக்கும் மூளைச்சலவையையும், உருவாக்கி வைத்திருக்கும் பிம்பத்தையும் தாண்டி ஏதோ எனக்கு தெரிஞ்ச விசயத்தை சொல்கிறேன்....
குழலி,
நீங்கள் பேசும் விஷயத்துக்கும் கருத்து சுதந்திரத்துக்கும் என்ன சம்மந்தம் என்பது தெரியவில்லை:-)
சூழல் 1 - தமிழ் பாதுகாப்புப் பேரவை தமிழில் படம் பெயர் வைக்க வற்புறுத்தினார்கள் - சிலர் ஒப்புக்கொண்டார்கள், சிலர் சில காரணங்கள் கூறி எதிர்த்தனர். தமிழ்ப் பாதுகாப்புப் பேரவை அப்படிப்பட்ட படங்களை எதிர்த்து இயக்கம் நடத்தினர்.
சூழல் 2 - தமிழக அரசு தமிழ்ப்பெயர் படங்களுக்கு வரிவிலக்கு அளிக்கிறது. அந்த வரிவிலக்கை ஏற்க, கேவலமாக "ஏதோ ஏதோ" "எம்-" என்ற மாற்றங்களை ஏற்படுத்தும் இயக்குநர்கள்.
முதல் சூழலில் கருத்து சுதந்திரம் பற்றிப் பேசப்பட்டதே தவறு என நினைக்கிறீர்களா குழலி? நான் எல்லா "க சு கா" சார்பாகப் பேசவில்லை,
"தலைப்பு வைப்பது படத்தை படைப்பவனின் உரிமை, அது கேவலமாக இருந்தாலோ, தேவையற்ற ஆங்கிலத்தில் இருந்தாலோ அதன் வெற்றி தோல்விகள் அவனைப்பாதிக்கும். பெயர் வைப்பது அவன் உரிமை, தமிழ் பெயர் சொல்லி அவனை மிரட்டவேண்டாம்" என்பதுதான் க சு காக்களின் நிலைப்பாடு என்பது என் புரிதல்.
இப்போது, அரசு வரிவிலக்கு கொடுக்கிறதே என்று கேவலமாக பெயர் மாற்றம் செய்பவரால் , மேற்படி க சு காவின் முகத்தில் கரி என்பது:
வெள்ள / வறட்சி நிவாரணம் பெற பொய் சொல்லி வரிசையில் நிற்பவர்களால், "பிச்சை எடுப்பது தவறு" என்று சொல்பவர்கள் முகத்தில் கரி என்பதற்கு ஒப்பாகும் என்பது எ தா அ.
பதிவுக்கருத்தில் இருந்து விலகவில்லை என்றே நினைக்கிறேன்.
கருத்து அடிமைத்தன காவலாளி குஸலிக்கு/குஜலிக்கு கௌரவ மருத்துவர் (அதாங்க கௌரவ டாக்டர்) பட்டம் வழங்கப் போராடுவோம்.
நன்றி பெனாத்தல் சுரேஷ், ஜெய்க்காக நான் கொடுத்த பின்னூட்டத்தையும் முத்து தமிழினி கொடுத்த பின்னூட்டத்தையும் மீண்டும் ஒரு முறை பாருங்கள் நான் சொல்ல வந்தது என்ன என்று மீண்டும் விளக்கியிருப்பேன்.... அந்த பின்னூட்டம் கீழே
//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே., இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்
//
First of all, I don't know about the people (protectors) you refer in your article Mr Kuzhazhi.
My thoughts on this :
// Why the concerned people changed the title after tax exemption while not having done that before //
To be precise: film industry is driven by two forces :
1) Financiers ( Most of them will be either local gangster and with the support a leading political party)
2) Producers who get money from these financiers !
That is why the concerned people are changing the title just to save their own money ! For the directors, it is irrelevant to them. As long as the producer has no problem with the extra tax, they won't bother to change the title.
So, the ball is in the producers' and financiers' court ! They are the real people who deal with this !
The reason why I refer directors in particular is:
They are the ones who opposed this.
I would like to remind you how SJS changed the title even before tax exemption while Kamal retained the title MUMBAI EXPRESS (It was produced by the respective people)
But if you are the director and you are just doing ur job with someone's money, naturally producers will have an upper hand !
You can soon expect people to have a tamil title but the entire content presented with english !
Vettaiyaadu Vilayaadu is a fine example for it to show how irrational film industry is !
It is all money that plays and as long as it is your money you can take risk rather someone reminding you about
"Don't rob peter to pay paul"
I am sure our film industry friends will abide to the title rule and they will play with the content"
and
No one can force their opinion on others. I am not a KA.SU.KA ! But to be frank:
Expressing your will to have everything in tamil is different. But forcing them to do so is ...!!
//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே., இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்
//
குழலி,
நான் இதைப் படித்து விட்டே பின்னூட்டமிட்டேன்.
நேற்று மாற்றாதவர்கள் இன்று மாற்றுவது அவர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயமே அன்றி கருத்தோ சுதந்திரமோ இதில் வரவில்லை.
நேற்று மாற்றுவதற்கு கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அழுத்தம் கொடுக்கப்பட்டது, இன்று கொடுக்கப்படவில்லை எனும்போது க சு கா க்கள் என்ன செய்யவேண்டும்?
(ஆனால், எனக்கு என்னவோ இந்த வரிவிலக்கு விவகாரம் இன்னும் அசிங்கமாகத் தெரிகிறது:-))
//நேற்று மாற்றாதவர்கள் இன்று மாற்றுவது அவர்கள் பொருளாதாரம் சார்ந்த விஷயமே அன்றி கருத்தோ சுதந்திரமோ இதில் வரவில்லை.
//
சுரேஷ் பதிவில் இந்த திரைப்படக்காரர்களின் செயலுக்கு நான் எந்த அழுத்தத்தையும் தரவில்லை ஏனெனில் எனக்கு தெரியும் அன்று அவர்கள் கூறிய காரணங்கள் எல்லாம் சப்பை, பணமென்றால் மாறிவிடுவார்கள்....
ஆனால் என் கோபமெல்லாம் திரைப்படக்காரர்கள் கூறிய சப்பை காரணங்களை வைத்துக்கொண்டு க.சு.காவலாளிகள் வுட்ட சத்தம் தான், இன்றும் அதே காரணங்கள் அப்படியேத்தானே இருக்கிறது, ஆனால் பெயர் மாறுகிறதே? அப்போ க.சு.காவலாளிகள் திரைப்படத்துறையினர் சொன்ன காரணங்கள் (மீதி இவங்களே அவங்களுக்கு எடுத்து கொடுத்தது) உண்மையல்ல என்றல்லவா ஆகின்றது.
//நேற்று மாற்றுவதற்கு கருத்து சுதந்திரத்துக்கு எதிரான அழுத்தம் கொடுக்கப்பட்டது, இன்று கொடுக்கப்படவில்லை எனும்போது க சு கா க்கள் என்ன செய்யவேண்டும்?//
அழுத்தம் பற்றியே நான் பேசவில்லையே, நான் பேசியது முழுக்க முழுக்க திரைப்படத்துறையினர் தந்த அபத்த காரணங்களும் அதற்கு காவடி தூக்கிய கா.சு.காவலாளிகளைப் பற்றியது மட்டுமே....
//ஆனால், எனக்கு என்னவோ இந்த வரிவிலக்கு விவகாரம் இன்னும் அசிங்கமாகத் தெரிகிறது:-)//
எனக்கும் தான், என்ன செய்திருக்கலாமென்றால் தமிழில் பெயரில்லையென்றால் 100% கூடுதல் வரியென்று சொல்லியிருக்கலாம், என்ன எழவு க.சு.காவலாளிங்க கெளம்பியிருப்பாங்க....
தமிழ்படத்துக்கு தமிழில் பெயர் வை என்று ஏன் போராட்டம் நடத்தினார்கள்? அந்த சமயத்தில் ஆங்கில பட தலைப்பு ரொம்ப அதிகமா இருந்ததால இந்த நிலை வந்தது.
"BF" பார்க்க போறேன் என்று சொன்னால் உங்களுக்கு என்ன தோன்றும்? Best Friend படம் பார்க்க போறதாவா தோன்றும்?
ஆங்கில பட தலைப்பு மோகம் தலைக்கு மேல் ஏறினால் என்ன என்பதற்கு இது ஒரு உதாரணம். இங்கு படைப்பாளியின் கருத்து சுதந்திரத்தை பறிச்சுப்புட்டான் என்று சொல்வீர்களா?
தமிழில் தலைப்பு வைத்தாலும் படம் ஓடும் கதை நன்றாக இருந்தால். தலைப்பு வைக்க கூட அருமையான சொல் இல்லாமல் தமிழ் உள்ளது என்று கருதினால் எப்படி ஐயா தமிழில் படம் எடுத்த என்று கேட்க வேண்டியது தான். ஏன் ஆங்கில படம் எடுக்க வேண்டியது தானே? தயாரிப்பு செலவும் கம்மி வரும்படியும் எச்சு.
இந்த பெயர்தான் வைக்க வேண்டும் அந்த பெயர்தான் வைக்க வேண்டும் என்று வற்புறுத்தல் தவறு.
குறிப்பிட்ட பெயர் வைக்க ஊக்குவித்தல் சரி.
வற்புறுத்தல் க.சுவுக்கு எதிரானது.
ஊக்குவித்தல் க.சுவுக்கு எதிரானது இல்லை.
வலுவான, பலம் வாய்ந்தோர் வற்புறுத்தும் போது பலகீனமான நிலையில் மறுபுறம் உள்ளோர் அவர் எதிர்ப்பை சப்பை காரணங்களை வைத்துக் கொண்டுதான் காட்ட முடியும். உண்மையான காரணங்களை சொல்ல முடியாது. தற்போதைய நாட்டு நிலைமை அவ்வளவே.
தமிழை திரைப்படங்களில் ஊக்குவிக்க தமிழக அரசு இப்போது செய்வது சரியான முடிவு இல்லை. இது அரசுக்கு வரும் வருவாயை குறைக்கும்.
கருத்து சுதந்திரம் என்பது கடவுளல்ல, எல்லையில்லாமல் இருப்பதற்கு.
அடுத்தவனை காயப்படுத்தாமல் எதை வேண்டுமானாலும் சொல்லித் தொலைக்கலாம். தப்பேயில்லை. அதாகப்பட்டது, வலிமையாக சொல்வது என்றால் நிறைய ஆட்கள் வலிதரும் விதமாக சொல்வது என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
'திருமணத்துக்கு முன் கற்பு இழப்பது தப்பில்லே'ன்னு சொன்னால் கானா சூனானு கம்முன்னு இருக்கலாம். அத்துடன் "'தமிழச்சி'கள்லாம் அப்படித்தான்"னு சொன்னால் 'வந்துட்டாய்யா வடநாட்டுக்காரி'ன்னு வசவு தானே வரும். "தமிழச்சிகளைப் பற்றி பேச என்ன யோக்கியதை உனக்கு?"
அப்ப, அது கானா சூனான்னா, இதுவும் கானா சூனா தானே!
"இவனப் பாரேன், எல்லாத்துக்கும் ஒரு பதில் எப்பவும் ரெடியாவே வெச்சிருக்கான்ப்பா" என்று நண்பர்களை கலாய்க்கலாம். அரசியல்வாதியிடத்தில் அதையே நம்ம கமல் மாதிரி நாசூக்கா, " இவர் பதில் சொல்ல இயலாத கேள்வி என்று எதுவும் இருப்பதாக எனக்குத் தெரிந்திருக்கவில்லை"ன்னு சொல்லணும்.
DSR
குழலி இது உங்கள் பதிவுக்கு சம்பந்தம் இல்லாத விடயம் கடைசியாக எழுதிய அனானிமஸிற்கு பதிலாக எழுதுகிறேன். உங்களுக்கு சிரமமில்லாவிட்டால் பதிப்பிக்கவும்.
//கருத்து சுதந்திரம் என்பது கடவுளல்ல, எல்லையில்லாமல் இருப்பதற்கு//
க.சு எல்லையில்லாததே.கருத்துக்கும், மாற்றுக் கருத்துக்கும் சமுதாயத்தில் இடம் இருக்க வேண்டும்.
தனிமனிதனுக்கு தனக்கென கருத்தாக்கம் உருவாக்குவதற்கும், அதை வெளிப்படுத்தவும் பூரண உரிமை உண்டு.
கருத்தாக்கங்கள் ஆக்க பூர்வமாக, அடுத்தவர் உணர்வை மதிப்பதாக இருந்தால் நல்லது. ஆனால் அப்படியேதான் இருக்க வேண்டுமென்பது அவசியம் இல்லை.
வசவாய்தான் வெளிப்படுகிறதென்றால் அது வெளிப்படுத்துவனின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.
இந்த முதிர்ச்சின்மையை காரணம் காட்டி அக்தகைய கருத்தாக்கங்களை தடை செய்வது முறையன்று.
சமூகத்தின் எல்லா நிகழ்வுகளும் விமரிசனத்துக்கு உட்பட்டவையே. கடவுள் உட்பட. விமரிசனம் தாண்டிய, கேள்விகள் தவிர்த்த நிகழ்வுகளை உருவாக்குவது பகுத்தறிவுக்கு எதிரானது.
கருத்தாங்களுக்கு எல்லை கோடு கட்டுவது சமூக விழிப்பிற்கும், பகுத்தாய்விற்கும் கல்லறை கட்டுவதற்கு ஒப்பாகும்
கல் வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து பண்ணுவதோ, வன்முறையில் இறங்குவதோதான் தவறு.
//கல் வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து பண்ணுவதோ, வன்முறையில் இறங்குவதோதான் தவறு.
//
கல்வீசுவதோ, கட்டை பஞ்சாயத்து செய்வாதோ மட்டும் தான் என நினைக்கின்றீரா? இவைகள் வன்முறையின் ஒரு வடிவம் தான், காழ்ப்புணர்ச்சியோடு கருத்து சுதந்திரம் என்ற பெயரில் பொய்சொல்வதிலிருந்து, character assasination செய்வதும் வன்முறை தான், இது தொடர்பாக முன்பு நான் எழுதிய பதிவை படித்து பாருங்கள்
வன்முறை என்பது வெறும் இரத்தத்தின் தெறிப்பா?!
குழலி,
நான் அங்கு இறைவன் என்ற பெயருடன் பின்னுட்டமிட்டவரின் கருத்துடன் நிறைய இடங்களில் ஒத்துப் போகிறேன்.
காழ்ப்புணர்வு, தனிநபர் தாக்குதல், பொய் கூறுதல் முதலியவை தனி மனித ஒழுக்க ரீதியிலானது. அவை வன்முறைக்கு வித்திடுகின்றன. ஆனால் அதை காரணம் காட்டி கருத்து சுதந்திரத்துக்கு தடை விதித்தல் எலிக்கு பயந்து வீட்டுக்கு தீ வைப்பது போலாகும்.
எல்லோரும் நல்லோழுக்கம் கொண்ட சமூகம் அரிஸ்டாட்டில் காலத்திலிருந்தே கனவில் மட்டுமே உள்ளது.
குறை நிறைகள் கொண்ட மனிதரால் ஆன சமூதாயத்தில் வாழ்கிறோம். இவ்வகையான சமூதாயத்தில் கீழ் காணும் விடயங்கள் அவசியம்.
1) சமூதாய விழிப்புணர்வு
2) அரசின் சட்டங்களை அமல்படுத்தும் அரசு
3) அரசின் சட்டங்களை மதிக்கும் மக்கள்
மேல் சொன்ன மூன்று நிலைகளில்
முதலாம் நிலையை அடைகையில் இரண்டாம் மூன்றாம் நிலைகள் அதன் சேயாய் பிரசவிக்க வாய்புகள் அதிகம்
//வசவாய்தான் வெளிப்படுகிறதென்றால் அது வெளிப்படுத்துவனின் முதிர்ச்சியின்மையை காட்டுகிறது.//
எல்லாம் இந்த ஈகோ செய்கிற வேலை.
வசவு என்பது முதிர்ச்சியின்மை என்றால் பொய்யும் அவதூறும் நாகரீகமா?
வசவைத் தூண்டும் பொய்யையும் பித்தலாட்டத்தையும் கானா சூனா பொன்னாடை போட்டு போர்த்திப்புட்டு எதிர்வினையை மட்டும் 'முதிர்ச்சியின்மை' என்று சொல்லிவிடலாம் என்பது நல்ல தமாஸ்.
கருத்துச்சுதந்திரம் என்பதற்கு எல்லையில்லை என்றால் அது 'வார்த்தை'களாகத்தான் வெளிப்படவேண்டும் என்று வரம்புகட்ட முடியுமா?
வன்முறை என்பது 'வார்த்தை'யாக வரும்போது 'கண்டுக்காதே' என்றால் அது "அறிவுஜீவி" என்ற முகமூடி அணிந்தவர்களுடைய பித்தலாட்டம்.
DSR
//வசவு என்பது முதிர்ச்சியின்மை என்றால் பொய்யும் அவதூறும் நாகரீகமா?
//
பொய்யும், புரட்டும் நாகரீகமென்றா சொன்னேன். பொய்யும் அவதூறும் தனி மனித ஒழுக்க கேடுகள்.
//வசவைத் தூண்டும் பொய்யையும் பித்தலாட்டத்தையும் கானா சூனா பொன்னாடை போட்டு போர்த்திப்புட்டு எதிர்வினையை மட்டும் 'முதிர்ச்சியின்மை' என்று சொல்லிவிடலாம் என்பது நல்ல தமாஸ்//
மீண்டும் பின்னூட்டத்தை படியுங்கள். இது போன்ற பொருள் வர நான் எதையும் சொல்லவில்லை.
//கருத்துச்சுதந்திரம் என்பதற்கு எல்லையில்லை என்றால் அது 'வார்த்தை'களாகத்தான் வெளிப்படவேண்டும் என்று வரம்புகட்ட முடியுமா?
//
கருத்து என்பது எண்ணத்தின் கோர்ப்பு.
சிந்தனையாகவும், வார்த்தையாகவும் வெளிப்படுத்த படுவதே கருத்துச் சுதந்திரம்.
நீங்கள் யாரையாவது அடித்துக் கொண்டிருக்கும் வரை வன்முறையின் போதை இனிக்கும்.திரும்ப அடிவிழும் போது வலிக்கும்.
//வன்முறை என்பது 'வார்த்தை'யாக வரும்போது 'கண்டுக்காதே' என்றால் அது "அறிவுஜீவி" என்ற முகமூடி அணிந்தவர்களுடைய பித்தலாட்டம்//
விழிப்புணர்வு உள்ளவர்களால் எது பிரச்சாரம், எது கருத்தாக்கம் என்பதை பிரித்து பார்க்க முடியும். அப்படிப்பட்ட விழிப்புணர்வு உள்ள சமூதாயம் வர எல்லையற்ற கருத்து சுதந்திரம் வேண்டும்
பெரியாரின் பேச்சு வன்முறையை தூண்டுவதாகதான் அவர் காலத்தில் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். உங்களை போல் கருத்து சுதந்திரத்துக்கு எல்லை கோடு கட்டும் ஆட்சி இருந்திருந்தால் அவர் நசுக்கப்பட்டிருப்பார்.ஆனால் நல்லவேளை அப்படி யாருமில்லை. அவர் கருத்துகள் எல்லா இடங்களிலுக்கும் சென்றது. மாற்றுக் கருத்துகளும் பரிமாற்றிக் கொள்ளப் பட்டது. இன்று அவரது கருத்தாக்கம் நிலைத்திருக்கிறது.
சாக்ரடீஸ் மற்றும் கலிலியோவின் கருத்தாக்கத்திற்கு உம்மை போன்றவர் எல்லை கோடு கட்ட அவர்கள் அழிக்கப்பட்டார்கள்
நீர் எல்லை கோடு வரைவதால் இன்று எல்லைக் கோடு உங்களுக்கு உவப்பாய் இருக்கிறது. உங்களை ஒத்த மனநிலை கொண்டவர் சமூகத்தில் உங்களுக்கும் ஒருவர் எல்லைக் கோடு போட்டிருப்பார்.அப்போது தெரியும் எல்லைக் கோட்டின் பிரச்சனைகள்.
எதை அனுபவிக்கிறோம், அனுபவித்தோம் என்பது அந்த உரிமைகள் மறுக்கப்படும் வரை தெரியாது.
மூச்சு திணறும் போதும்தான் காற்றின் அருமை தெரியும்.
எந்த சூழ்நிலையிலும் அறிவுஜிவியாக ஆக முயற்சிக்காதீர்கள். அக்தகைய மனோபாவம் அறிவை ஜுவிக்க வைக்காது. மழுங்கதான் செய்யும்.
பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.
பெரியார் தாண்டியதாலேயே எல்லைக்கோடுகள் இல்லை என்று ஆகிவிடாது. பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது.
பெரியார் தாண்ட நேர்ந்த சூழல் எல்லா பொழுதும் நிலவுவதில்லை.
நிற்க, எந்தப்பக்கமும் என் கையை வீச எனக்கு உரிமை உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்தவரின் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் என் 'கை' முடிந்துப் போகிறது என்பதை மறுதலிக்கிற அறிவுஜீவி முகமூடியும் என்னிடமில்லை. நன்றி.
சரியாக சொல்லிட்ட்டீங்க...
மறந்துட்டன்,
நானும் படத்துல சொன்னன். :)
//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.
//
ஜல்லி போன்ற வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை. எல்லைக் கோட்டை பற்றிய பேச்சு வருகையில் எல்லை கோடு இல்லாமையால் பலனடைந்தவராய் பெரியாரையும், எல்லைக் கோடு இருந்தமையால் நசுக்கப்பட்டவராய் கலிலியோவையும்,சாக்ரடீஸையும் குறிப்பிட்டேன்.
//பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது//
நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது.
அதுதான் அவர் என் எழுத்தில் வருகையில் உங்களை உணர்ச்சி பிழம்பாய் கொதிக்க வைக்கிறது. நான் பெரியாரை சக மனிதராக பார்க்கிறேன். தன்னை பூசிக்க சொல்லி ்வாழ்ந்த மனிதர் நடுவே யாரையும் பூசிக்காதே, உன் உரிமைக்கு போராடு, சுயம் தேடு என குரல் எழுப்பிய மனிதர் அவர்.
அவரையும் மத புத்தகங்கள் போல் ஆராய்ச்சிக்கும், கேள்விகளுக்கும் அப்பால் வைத்து புனிதர் ஆக்க வேண்டாம். எங்களை போன்ற சராசரி மனிதருள் மனிதராய் அவர் இருக்க வேண்டும்.
//பெரியார் தாண்ட நேர்ந்த சூழல் எல்லா பொழுதும் நிலவுவதில்லை.
//
பெரியார் காலத்து புரட்சி சமூகத்தின் சுயமரியாதையை நோக்கி. இன்றும் அது பூர்த்தி அடைந்து விடவில்லை. இரட்டை டம்ளர் இன்னமும் உண்டு. மேலவளவூர் கூத்துகள் மறையவில்லை.
சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன
அதையன்றி ஏராளமான ஊழல்கள், விழி திரும்பும் திசையெல்லாம் விதி மீறல்கள், குற்ற உணர்ச்சி அறவே அற்று இதையெல்லாம் செய்ய கூடிய மனிதர்கள். இவையெல்லலா் போக வேண்டும்.
வலுவான கருத்தாக்கங்கள் வரும்போதே சமூக விழிப்புணர்வும், அக்கறையும் வரும். அப்போதே
இக்குறைகள் குறையும் என்பது என் கருத்து.
//எந்தப்பக்கமும் என் கையை வீச எனக்கு உரிமை உள்ளது என்பதை நான் மறுக்கவில்லை. அடுத்தவரின் மூக்கு ஆரம்பிக்கும் இடத்தில் என் 'கை' முடிந்துப் போகிறது என்பதை மறுதலிக்கிற அறிவுஜீவி முகமூடியும் என்னிடமில்லை. நன்றி.
//
தனது சொந்த கருத்தை பிறர் மனம் புண்படாமல் வசவு வார்த்தை இல்லாமல் பேசுவது நாகரீகம். அடுத்தவன் எதை சொன்னாலும் மறுக்காமல் வாய் இளித்து ஆம் சொல்வதை நமது ஊரில் எதோ ஓரு வாத்தியத்துக்கு ஒப்பிடு செய்வர்.
கை மூக்கு தத்துவம் கையின் நீளத்தை மட்டும் கணக்கு செய்கிறது. மூக்கின் நீளமும் முக்கியமே.
தேவையில்லாமல் நீளும் முக்கை கை என்ன செய்யவது? எந்த கணித கோட்பாடும் இரு புறத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.
புதிதாய் வானத்திலிருந்து யாரை யார் மேற்கோள் காட்ட வேண்டும், எது கருத்து சுதந்திரத்தின் எல்லைக் கோடு என்று பல ்விதிமுறைகளை கொணர்ந்த இறக்கை முளைத்த தேவதையாய் உங்களை நினைத்துக் கொள்கிறிர்கள். நமது நாட்டில் இது அடிக்கடி பார்க்க கூடிய ஒன்று.
வானத்து தேவதையாய் நினைப்பவரோடு வாதிட ஒன்றும் இருப்பதில்லை. ஆகவே முடித்துக் கொள்கிறேன்.
எனக்கு அறிவுசீவியாகவும் வேண்டாம். அறிவுஜிவியாகவும் வேண்டாம். முடிந்தவரை சொந்தமாக சிந்தித்து வாழ முயற்சி செய்வதாய் உத்தேசம்
பல வேலைகளுக்கு நடுவே என் பின்னுட்டத்தை படித்து பதிப்பித்த குழலிக்கு நன்றி. பல சிரமங்கள் கொடுத்து விட்டேன். தவறாக எண்ண வேண்டாம். என் கருத்துகளை பதிப்பித்தமைக்கு மீண்டும் நன்றி கூறி விடை பெறுகிறேன்
அனானி சொன்னது,
"//பெரியாரை வைத்து ஜல்லி வேண்டாம்.
//
ஜல்லி போன்ற வார்த்தைகள் எனக்கு புரிவதில்லை. எல்லைக் கோட்டை பற்றிய பேச்சு வருகையில் எல்லை கோடு இல்லாமையால் பலனடைந்தவராய் பெரியாரையும், எல்லைக் கோடு இருந்தமையால் நசுக்கப்பட்டவராய் கலிலியோவையும்,சாக்ரடீஸையும் குறிப்பிட்டேன்.
//பெரியார் 'முள்ளை' முள்ளால் எடுத்தார். கையில் முள்ளை வைத்துக்கொண்டு அலைபவர்கள் எல்லாம் 'பெரியார்' ஆகிவிடவும் முடியாது//
நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது."
மிகவும் சரி.
பெரியார் உட்பட,அனைத்து மதங்களின் வேதங்கள் உட்பட யாவும் விமர்சனத்திற்கு உட்பட்டவையே.
மற்றபடி, முள்ளை முள்ளால் எடுக்கவேண்டிய சூழ்நிலை பெரியாருக்கு இருந்தது இப்போது தேவையில்லை என்பது வீண் வாதம்.
தற்போது நடப்பது தூய திராவிட ஆட்சி அதனால் அந்த சூழ்நிலை இல்லை என்று சொல்வது வடிகட்டின இரட்டை நிலை.
பாலா
தமிழ் என்றாலே நீஷபாஷை என்று சொல்லும் ஜென்மங்களிடம் நீங்கள் இன்னமும் என்னத்தை தான் எதிர்பார்க்கிறீர்களோ தெரியவில்லை குழலி.... விட்டுத் தள்ளுங்கள் விகடகவிகளை :-))))
//நீங்கள் பெரியாரை கடவுளாக பார்ப்பவர் போல் உள்ளது அல்லது உங்கள் ்வீட்டு மரப்பாச்சி பொம்மையாக பார்ப்பீர்கள் போல் உள்ளது.//
இல்லை. மனிதனாகத்தான் பார்க்கிறேன். ஒரு கலகக்கார சீர்திருத்தவாதியாக. 'பெரியார் தாண்டிவிட்டாலும் எல்லைக்கோடுகள் என்பது இருக்கிறது" என்று சொல்லியிருக்கிறேன்.
//பெரியார் காலத்து புரட்சி சமூகத்தின் சுயமரியாதையை நோக்கி. இன்றும் அது பூர்த்தி அடைந்து விடவில்லை. இரட்டை டம்ளர் இன்னமும் உண்டு. மேலவளவூர் கூத்துகள் மறையவில்லை.
சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன//.
உண்மைதான். மனிதனின் சுயமரியாதை இன்னமும் 'அடகில்' உள்ளது உண்மைதான். ஆனால் அதை மீட்கப்புறப்படுகிறவர்கள் நிலையோ தடிஎடுத்ததால் தண்டல்காரனாகிவிட்டேன் என்பது போல.
//கை மூக்கு தத்துவம் கையின் நீளத்தை மட்டும் கணக்கு செய்கிறது. மூக்கின் நீளமும் முக்கியமே.
தேவையில்லாமல் நீளும் முக்கை கை என்ன செய்யவது? எந்த கணித கோட்பாடும் இரு புறத்தையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.//
கையோ, மூக்கோ ஒரு பரிமாணத்திற்கு உட்பட்டிருக்கவேண்டும் என்பது புரிந்துவிட்ட(தா)ல் தீர்ந்து விடும் கருத்து வேறுபாடு.
//புதிதாய் வானத்திலிருந்து யாரை யார் மேற்கோள் காட்ட வேண்டும், எது கருத்து சுதந்திரத்தின் எல்லைக் கோடு என்று பல ்விதிமுறைகளை கொணர்ந்த இறக்கை முளைத்த தேவதையாய் உங்களை நினைத்துக் கொள்கிறிர்கள். நமது நாட்டில் இது அடிக்கடி பார்க்க கூடிய ஒன்று.//
நான் என்னை எப்படி நினைத்துக்கொள்கிறேன் என்பதை நீங்களாக நினைத்துக்கொள்வதை நினைத்து .... "ம்..நடத்துங்கள், உங்கள் மனம், உங்கள் விருப்பம்" என்று தான் சொல்ல முடியும்.
//வானத்து தேவதையாய் நினைப்பவரோடு வாதிட ஒன்றும் இருப்பதில்லை. ஆகவே முடித்துக் கொள்கிறேன்.//
வாதிட ஒன்றுமில்லை என்று சொல்வதும் உங்கள் விருப்பத்தின் படியே. நன்று.
குழலி,
//வாதிட ஒன்றுமில்லை என்று சொல்வதும் உங்கள் விருப்பத்தின் படியே. நன்று. //
இவர் கோபக்கார்ராய் இருக்கிறார்
ஜல்லி அடிக்காதே. இவரை மேற் கோள் காட்டாதே. எல்லை கோடு இவருக்கு மட்டும் உண்டு என் எழுத்துக்கும் கட்டுபாடு போடுகிறாரே என நினைத்து வாதிட விரும்பாமல் விலக நினைத்தேன்.
அவர் சாந்தமான மனிதர் தான் போலிருக்கிறது. கடைசி இரு பதிவுகள் பொறுமையாக செய்துள்ளார்.
உங்கள் பதிவில் வந்து இருந்து கொண்டு உங்கள் நேரத்தை ஆக்ரமித்து நீங்கள் பங்கு பெராத ஒரு உரையாடலை உங்கள் அனுமதியின்றி தொடர்ந்து நடத்துதல் முறையன்று.
நீங்கள் அனுமதி அளித்தால் என் உரையாடலை தொடர்கிறேன்.
//உங்கள் பதிவில் வந்து இருந்து கொண்டு உங்கள் நேரத்தை ஆக்ரமித்து நீங்கள் பங்கு பெராத ஒரு உரையாடலை உங்கள் அனுமதியின்றி தொடர்ந்து நடத்துதல் முறையன்று.
நீங்கள் அனுமதி அளித்தால் என் உரையாடலை தொடர்கிறேன்.
//
நான் பங்கு பெறவில்லை என்றாலும் பல விடயங்களை பிறரின் உரையாடலிலிருந்து அறிந்து கொள்ள இயலும், எனவே நீங்கள் தொடருங்கள், நான் முடிந்த அளவிற்கு உடனுக்குடன் வெளியிடுகிறேன், நீங்கள் தனிப்பதிவு கூட தொடங்கி உங்கள் கருத்துகளை சொல்லமாம்.
நன்றி
நன்றி குழலி.
வாழைப் பழ ஊசி போல் அறிவுரை கொடுத்திருக்கிறீர்கள். நீங்கள் கொடுக்கலாம். ;-)
தனி பதிவு தொடங்கியிருக்கின்றேன். கஷடப்பட்டு அரை மணி நேர பின்னுட்டம் அடித்து பதிப்பிக்க பார்த்தால் engineerடம் சொல்கிறேன் என்று இரண்டு முறை பிளாக்கர் சொல்லி விட்டது. அதனால் மீண்டும் அடிக்க வேண்டியதாயிற்று.
இப்போது அனானிமஸிற்கு பதில்
நானும் நீங்களும் எல்லைக் கோடு கருத்தாக்கங்களுக்கு வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்யும் விடத்தில் வேறு படுகிறோம்.
உடைக்க முடியாத எல்லைக் கோடுகள் இருந்திருந்தால் என்ன நடந்திருக்குமென பார்க்கலாம்
1) இட ஒதுக்கீடு இருந்திருக்காது
2) உடன்கட்டை இன்றும் இருந்திருக்கும்
3) பால்ய விவாகங்கள் ஜாம் ஜாம் என நடந்து கொண்டிருக்கும்
4) உலகம் தட்டை என் நம்பிக் கொண்டிருந்திருப்போம்
5) மதங்களில் மனிதம் படும் அவஸ்த்தை பல மடங்காக ஆகியிருக்கும்
6) சொத்துரிமை பெண்களுக்கு இருந்திருக்காது
இது சில உதாரண்ங்களே.
இந்த எல்லைக் கோடுகள் சிந்தனை ஒடும் ஆறாய் ஆக விடாமல் குளமாய் மாற்றி பாசி போல் படர்ந்திருக்கும்.
காலம் நகரையில் புதிய கருத்தாக்கங்கள் வந்தன. எல்லைக் கோட்டை உடைத்தன. சமூகம் முன்னோக்கி நகர்கிறது. இன்னும் ஒராயிரம் எல்லைக் கோடுகள் உள்ளன. அவையும் உடைய வேண்டும்.
தூஷ்பிரயோகம் கண்டு அஞ்சி கருத்தாக்கங்களை கட்டிப் போட்டால் அது நமக்குதான் கெடுதல். வரிப் பணம் துஷ்பிரயோகமாகிறது என அஞ்சி வரி செலுத்தாமலா இருக்கிறோம். அரிவாள் தலை கொய்கிறது என அஞ்சி தேங்காய் சீவ அரிவாள் பயன் படுத்தாமலா இருக்கிறோம். எது கையில் கிடைத்தாலும் அதை தன் சுயநலத்துக்கு பயன்படுத்தும் கூட்டம் இருந்து கொண்டேதான் இருக்கும். அதற்காக அச்சப்பட்டு கொண்டிருந்தால் நம்மை எல்லைக் கோடுகளை கயிறாக்கி கட்டி தொங்க விட்டு விடுவார்கள்
சாதீக் கொடுமைகள் கட்சிகளாக மாறி களை கட்டிக் கொண்டுள்ளன
example PMK
பின்னூட்டங்களை பிரசுரிக்கும் போது ப்ளாக்கர் சொதப்புகின்றது, உடனடியாக சில பின்னூட்டங்களை பிரசுரிக்க இயலவில்லை
நன்றி
குழலி,
அன்று -
- தமிழில் தலைப்பு வை என்று சொன்ன, ஆர்ப்பாட்டம் செய்த அரசியல்வாதிகள் செய்தது தவறு.
- அதைக் கண்டித்த க.சு.கா. செய்தது சரி.
- போராட்டத்தினால் பயந்தோ,வேறு காரணங்களாலோ தலைப்புகளைத் தமிழ்ப் படுத்தியவர்கள் செய்தது -வேறு வழியில்லாததால், போட்ட பணத்தை எடுக்கவேண்டியதிருந்ததால். இதில் ஏதும் தவறில்லை.
இன்று -
- தமிழ்த் தலைப்புக்கு வரிவிலக்கென்ற அரசின் ஆணை தவறு.
- இப்போதும் க.சு.கா. இந்தத் தவறையே சுட்டிக்காட்ட வேண்டும்; சுட்டிக்காட்டுகிறார்கள் என்றே நினைக்கிறேன். அது மிக மிக சரி.
- அரசின் ஆணையை ஒட்டி தலைப்புகளைத் தமிழ்ப்படுத்துவது பணத்தைக் காப்பாற்ற.இதிலும் ஏதும் தவறில்லை.
இதில் யார் மூஞ்சியில் யார் கரி பூசியதென்றால்,
- அன்று,
அரசியல்வாதிகளால் 'மும்பை எக்ஸ்ப்ரஸை' தடம் புரள வைக்கமுடியாததால் அவர்கள் மூஞ்சியில் கரி.
- இன்று,
வரிவிலக்குக் கொடுத்து அரசு தனக்குத்தானேயும், அதனால் வரி வரத்துக் குறைவதால் அரசு மக்கள் மூஞ்சியிலும் கரி பூசிக் கொண்டு விட்டது
சில்லுனு ஒரு காதல் படம் பார்த்தீங்களா இல்லையா ??
//இவிங்களுக்கு பணம் கிடைக்குமாங்கறது தான் வெசயமே, இப்போ படத்துக்கு பெயரே வைக்க கூடாது, 1,2 னு எண்கள் அதான் நெம்பர் மட்டும் தான் வைக்கனும், வைத்தால் பாதி செலவை அரசாங்கம் ஏத்துக்கும்னு சொல்லுங்க, ஒடனே அதையும் செய்வாங்க//
ஏங்க சொல்றேனு தப்பா எடுத்துக்காதீங்க...இவங்க எல்லாம் தமிழ காப்பாத்தவா படம் எடுக்கறாங்க...கோடி கோடியா பணத்த போட்டு அத திருப்பி எடுக்க வேண்டாம...தமிழ காப்பாத்தரன்னு சொல்லீட்டு இருக்கவங்களே சன் டிவினு வைக்கும் போது இது எல்லாம் என்ன ஜுஜுபி :-)
//அன்று தமிழில் தலைப்பு வைக்க சொல்லி வலியுறுத்தியபோது என்னென்ன காரணங்களையெல்லாம் சொல்லி முடியாது என்று சொன்னதோ அதே காரணங்கள் இன்றும் இருந்த போதும் அதையெல்லாம் விலக்கிவிட்டு இன்று வரிவிலக்கிற்காக படம் வெளியான பிறகும் கூட பெயர் மாற்றுகிறார்கள் அன்று இதே காரணத்திற்காக க.சு.காவலாளிகள் கத்தினார்களே, இன்று அதே க.சு.காவலாளிகள் என்ன சொல்லப்போகிறார்கள்.... அவ்ளோதான் விசயம்//
இத இப்பதான் படிச்சேன்...புரியுதுங்க :-)
அன்பு அநானி,
'"எல்லைக்கோடுகள்" என்ற பெயரால் சீர்திருத்தங்களை சிதைத்துவிடக்கூடாது" என்ற உங்கள் கருத்தை யார் தான் மறுக்க முடியும். எல்லைக்கோடுகளே தேவையில்லை என்பதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அப்படியானால் நாம் 'போலிகளின்' ஆபாசங்களையும் அதே க.சு பெயரால் அங்கீகரிக்க வேண்டியதாகிவிடும்.
அதுபோல அளவற்ற கருத்துசுதந்திரம் என்ற பெயரால் சமூகத்தில் நிலவுகிற பிரச்னைகளையும் நாம் உணர வேண்டும். 'வசனம் பேசுறவன்லாம் விஜயகாந்த்'துங்கிற மாதிரி இது:-)).
பெரியார்கள் இனியும் வரக்கூடும் என்பதை மறுக்கவில்லை. அதுபோல 'போலிகளும்' வரக்கூடுமல்லவா? 'பெரியார்களுக்கும்' 'போலிகளுக்கும்' உள்ள வித்தியாசத்தை விளங்கிக்கொள்ள வேண்டுமென்பதே என் எதிர்பார்ப்பு.
துஷ்பிரயோகம் எல்லா இடங்களிலும் உண்டு. அதனால் எதையும் நிராகரித்திட முடியாது.
துஷ்பிரயோகம் பற்றி போன பின்னுட்டத்திலியே இட்டேன். நேரமிருப்பின் பாருங்கள்.
போலித்தனங்களுக்கு பயந்து கருத்தாக்கங்களுக்கு வேலி கட்டும் போது போலித்தனங்கள் வெற்றி பெறுகின்றன. போலித்தனங்கள் மத்த்தின் பெயரால், தனிமனித தாக்குதலின் பெயரால், ஆண்டவனின் பெயரால் , சடங்குகளின் பெயரால் இருந்து கொண்டேதான் இருக்கும். அவை முற்றிலும் மறைதல் சாத்தியமில்லை.நம்மை போன்றவர்கள் எது போலி எது ஆபாசம் என்று பிரித்து பார்க்க கற்றுக் கொள்ளுமிடத்தில் போலிதனங்கள் தோற்று போகின்றன்
அவற்றின் சமூக தாக்கத்தை குறைக்கும் இடத்தில்தான் நல்ல கருத்தாக்கங்கள் உயிர் பெறுகின்றன.
வலுவான கருத்தாக்கங்கள் நிகழ சுயமரியாதையை காவு கொடுக்கவும் வேண்டியதில்லை. பிறர் சுயமரியாதையை காவு வாங்கவும் வேண்டியதில்லை. அந்த நிலை எதிர்காலத்தில் நிகழும்.
Post a Comment