O.C - Open Competition OR Other Castes

சிவபாலன் அவர்கள் வெளியிட்டிருந்த ஐ.ஏ,ஸ், ஐ.பி.எஸ். தேர்வுகளில் மாபெரும் அநீதி... என்ற பதிவில் அய்யா டோண்டு ஒரு பின்னூட்டமிட்டிருந்தார், அவர்களுக்கு தெரியாதது அல்ல, அதனால் நிச்சயம் இந்த விளக்கம் அவருக்கானது அல்ல, ஆனால் அவர் ஒரு குழப்பி குழப்பி விட்டு சென்றிருக்கும் போது அதை பார்த்து மற்றவர்களும் குழம்பக்கூடாது அல்லவா அதனால் தான்....

தமிழக அரசில் இட ஒதுக்கீடு மொத்தம் 69% அதில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு 18%, மிகப்பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 20%, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 30% பழங்குடியினருக்கு 1% மற்றவர்களுக்கு 31%, இதில் அனைவரும் அடங்குவர்.

அதாவது பிற்படுத்தவப்படவர்கள் 69 இடங்களில் நிச்சயம் 30 இடங்கள் ஒதுக்கப்பட வேண்டும், டோண்டு அய்யா சொல்வது போல 100 இடங்களில் 30 இடங்கள் அல்ல...

இப்போது தரவரிசை கீழ்கண்டவாறு இருப்பதாக வைத்துக்கொள்வோம்.

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

11 - பிற்படுத்தப்பட்டவர்
12 - இதர வகுப்பினர்
13 - இதர வகுப்பினர்
14 - பிற்படுத்தப்பட்டவர்
15 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
16 - தாழ்த்தப்பட்டவர்
17 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
18 - பிற்படுத்தப்பட்டவர்
19 - பிற்படுத்தப்பட்டவர்
20 - இதர வகுப்பினர்

21 - தாழ்த்தப்பட்டவர்
22 - பிற்படுத்தப்பட்டவர்
23 - இதர வகுப்பினர்
24 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
25 - தாழ்த்தப்பட்டவர்
26 - இதர வகுப்பினர்
27 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்
28 - பிற்படுத்தப்பட்டவர்
29 - தாழ்த்தப்பட்டவர்
30 - பிற்படுத்தப்பட்டவர்

பட்டியல் எண்ணிக்கை - 30

(O.C) இ.வ. - 9
(B.C) பி.வ. - 10
(M,B.C) மி.பி.வ. - 6
(S.C) தா.வ - 6

இடங்களின் எண்ணிக்கை - 20
O.C 31% 6 இடங்கள்
B.C 30% 6 இடங்கள்
M.B.C 20% 4 இடங்கள்
S.C/S.T 18+1% 4 இடங்கள்

கிண்டி பொறியியல் கல்லூரியில் மொத்தமே 10 இடங்கள் தான் மீதமுள்ள 10 இடங்கள் மற்ற பொறியியல் கல்லூரிக்கு எனக்கொள்வோம்

இட ஒதுக்கீட்டில் எல்லா பொறியியல் கல்லூரிக்கும் (20 இடங்களில் )சேர்த்து இடஒதுக்கீட்டில் தேர்வு செய்யப்படும் இடங்கள் 14, பொது ஒதுக்கீடு 6

இதன் படி முதல் 6இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) மற்ற இடங்கள் இடஒதுக்கீட்டில் வரும் மொத்தமாக பார்த்தால்

இடங்களின் எண்ணிக்கை - 20

O.C 31% 6 இடங்கள் (OC-3,B.C-1,M.B.C-1,S.C.-1) F.C - 3

B.C 30% 6 இடங்கள் 6+1(O.C) = 7

M.B.C 20% 4 இடங்கள் 4+1(O.C) = 5

S.C/S.T 18+1% 4 இடங்கள் 4+1(O.C) = 5

இது வரை எல்லாம் சரிதான் ஆனால் இனிமேல் சொல்லப்போகும் கணக்கு தான் O.C (Open Competition) என்பதை Other Castes என்று மாற்றப்போவது.

பொறியியல் கல்லூரிகள் கிண்டி பொறியியல் கல்லூரி தரத்தில் முதலிடம், எனவே அதற்கு விருப்பப்படுபவர்கள் எண்ணிக்கை அதிகம்

இதே கிண்டி பொறியியல் கல்லூரியில் பொது இடங்கள் 3, இடஒதுக்கீட்டில் 7 இடங்கள்

கீழ்கண்ட பட்டியியலில் முதல் மூன்று பேருக்கு (O.C.-2, S.C-1) பொதுப்பட்டியியலில் கிண்டி பொறியியல் கல்லூரியில் இடம் கிடைக்கும்

1 - இதர வகுப்பினர்
2 - இதர வகுப்பினர்
3 - தாழ்த்தப்பட்டவர்
4 - பிற்படுத்தப்பட்டவர்
5 - மிகப்பிற்படுதப்பட்டவர்
6 - இதர வகுப்பினர்
7 - பிற்படுத்தப்பட்டவர்
8 - இதர வகுப்பினர்
9 - பிற்படுத்தப்பட்டவர்
10 - மிகப்பிற்படுத்தப்பட்டவர்

நான்காவதாக வந்தவர் பிற்படுத்தப்பட்டவர்
எல்லா கல்லூரிகளுக்கும் சேர்த்து உள்ள 20 பொறியியல் இடங்களில் பொதுப்பிரிவில் வருவார், ஆனால் அவர் கிண்டி பொறியியல் கல்லூரிக்கு விருப்பப்படுகிறார் என்றால் அவர் பொதுப்பிரிவிலிருந்து விலகி பிற்படுத்தப்பட்ட பட்டியியலில் சேர்வார், அவர் பொதுப்பிரிவில் நான்காவது ஆனால் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியியலில் முதல் இடம், 5வதாக வந்த மிகப்பிற்படுத்தப்பட்டவர் கிண்டி பொறியியல் கல்லூரியில் சேர முனைவார் அப்போது அவரும் பொதுப்பட்டியியலில் இருந்து விலகி மிகப்பிற்படுத்தப்பட்டியியலில் சேர்வார், இப்போது 6ஆக இருக்கும் இதரவகுப்பினர் பொதுப்பட்டியலில் 4ம் இடத்த்ற்கு செல்வார்... 7வதாக இருக்கும் பிற்படுத்தப்பட்டவர் கிண்டிபொறியியல் கல்லூரிக்காக பிற்படுத்தப்பட்டியலில் சேர்வார்...

இப்படி கிண்டி கல்லூரிக்காக போடப்பட்டியலில்



தற்போது 6ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 4ம் இடத்திற்கு வருகிறார், அடுத்து 8ம் இடத்திலிருக்கும் ஒரு O.C. 5ம் இடத்திற்கு வருகிறார், சட்டப்படி பொதுப்பிரிவில் முதல் 6 ரேங்க் உள்ளவர்களுக்கு மட்டுமே இடம், 8ம் இடத்திலிருக்கும் பொதுப்பிரிவை சேர்ந்த அவருக்கு பொறியியலில் இடம் இல்லை, ஆனால் அவருக்கு முந்தைய தரமான மாணவர்கள் கிண்டி கல்லூரிக்காக இடஒதுக்கீட்டிற்கு போனதால் 8ம் இடத்திலிருக்கும் O.C. க்கு இடம் கிடைக்கின்றது அதற்கு கீழுள்ள கல்லூரியில் இடம் கிடைக்கின்றது.

இப்போது கிண்டி கல்லூரியிலும் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் O.C.க்கு ஒரு இடம் மட்டுமே என்றாள் 3ம் இடத்திலிருக்கும் S.C.மாணவர் கம்ப்யூட்டர் சயின்ஸ்க்காக S.C. இடஒதுக்கீட்டில் நுழைவார் அப்போது அந்த மூன்றாமிடமும் பொதுப்பிரிவில் காலியாகும், அப்போது 6ம் இடத்திலிருந்து 4க்கு வந்த O.C. மாணவர் இப்போது 3ம் இடத்துக்கு வருவார், அவர் மூன்றாமிடமென்றால் கிண்டி கல்லூரியில் பொதுப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட 3 பேரில் ஒருவராகிவிடுவார்...



ஆக இப்போது கிண்டி பொறியியல் கல்லூரியில் பொதுப்பிரிவில் வந்த மூவருமே O.C (OTHER CASTES) ஆனால் அந்த மூன்றாவது ஆளின் ரேங்க் 6....

இப்படியாக முன்னேறி முன்னேறி கடைசியில் பொதுப்பிரிவில் 3 F.Cகள் இருக்க வேண்டியதற்கு பதில் 6 F.C. கள் இருப்பார்கள்

இடங்களின் எண்ணிக்கை - 20,

பட்டியல் கீழ் கண்டவாறு இருக்க வேண்டும்


ஆனால் இருப்பதோ இப்படி கீழ்கண்டவாறு


பொதுப்பிரிவில் 3 FC மாணவர்களுக்கு பதில் 6 FC மாணவர்கள் நுழைகின்றனர், FC மாணவர்களுக்கு கிடைக்கும் மற்றைய 3 இடங்களும் அவர்களை விட தரமான மற்ற பிரிவு மாணவர்கள் இடஒதுக்கீடு பிரிவிற்கு தள்ளியதால் கிடைத்த இடங்கள்

இப்படி பார்த்தால் இடஒதுக்கீடே சுத்தமாக இல்லையென்றாலும் முதல் 20 இடங்களில் உள்ள 7 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைக்கும், இட ஒதுக்கீடு 69% இருந்தாலும் கூட 6 எஃப்.சி. மாணவர்களுக்கு இடம் கிடைத்துவிடுகின்றது, இது தான் நிலவரம்.

மொத்தமாக பொறியியல் கல்லூரி தரப்பட்டியல் தயாரித்து பொறியியல் (அல்லது எந்த படிப்பாயினும் ) இடங்கள் முதல் 31% இடங்கள் எந்த ஒதுக்கீடும் பார்க்காமல் எடுத்து அவர்கள் அனைவரும் பொதுப்பிரிவு என கணக்கெடுத்து, அதன் பிறகு S.C., B.C, M.B.C, தரப்பட்டியல் படி கல்லூரி / துறை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அப்படி செய்தால் தான் இட ஒதுக்கீட்டின் பலன் முழுமையாக சென்றடையும், இல்லையென்றால் O.C. என்பது Open Competion ஆக இல்லாமல் Other Castes ஆகத்தான் இருக்கும், இப்போது இப்படித் தான் இருக்கின்றது.

இதையே தான் UPSC IAS,IPS,IFS வரிசைக்காக செய்கிறது என கருதுகிறேன், அதனால் தான் எவ்வளவு தானென்றாலும் இடஒதுக்கீட்டு சதவீதத்தை தாண்டி வெற்றிபெருபவர்களின் எண்ணிக்கை அமைவதில்லை.

59 பின்னூட்டங்கள்:

said...

குழலி,


OH My Goodness... FC-3 இருப்பதற்கு பதிலாக FC-6 இருக்கிறது...

மிக விளக்கமாக பதிவிட்டுள்ளீர்கள்... அருமை..

மிக்க நன்றி..

said...

என் பதிவின் சுட்டியை கொடுத்தமைக்கு மிக்க நன்றி..

said...

//OH My Goodness... FC-3 இருப்பதற்கு பதிலாக FC-6 இருக்கிறது...//

இப்படியாகத்தான் பெரும்பாலான இடங்களில் இடஒதுக்கீட்டில் ஒதுக்கப்பட்ட இடங்கள் அளவிற்கு மட்டுமே பி.சி., எம்.பி.சி, எஸ்.சிக்கள் வருவதும் ஓ.சி.யில் பெரும்பகுதி எஃப்.சி.க்கு செல்வதன் சூட்சமம் இது தான், மற்றபடி டோண்டு அய்யா சொல்வது போன்ற திறமையெல்லாம் இல்லை, இப்படி ஓட்டைகளை பயன்படுத்துவது அல்லது ஓட்டைகளை உருவாக்குவது.

said...

சும்மா சொல்லக்கூடாது "ஓட்டைத் திறமை"வாதிகளின் திறமையையும் தைரியத்தையும்.
இதற்கு எதாவது செய்தாகவேண்டுமே?

said...

//இதற்கு எதாவது செய்தாகவேண்டுமே? //
சில வாரங்களுக்கு முன் இதைப்பற்றி எனக்கு தெரிந்த சிலரிடம் பேசினேன்... அனேகமாக முந்தைய ஆண்டு இடங்களின் புள்ளிவிபரங்களுடன் ஒரு முழு அறிக்கையை தயார் செய்ய வேண்டும்,அவர்கள் வழக்கு மன்றத்திற்கு செல்ல தயாராக உள்ளனர்.

இது தொடர்பான தகவல் சேகரப்பில் நான் ஈடுபட்டபோது 1994-95ல் இது மாதிரியான ஒரு வழக்கு தி.க. தலைவர் வீரமணி அவர்களால் போடப்பட்டது, அது மருத்துவ இடங்கள் உயர்த்தப்பட்டது தொடர்பாக, அந்த உயர்த்தப்பட 100 இடங்களும் O.C.க்கு மட்டும் என்பதால் வீரமணி அவர்கள் வழக்கு போட்டார், ஆனால் அந்த வழக்கு தோல்வி, அந்த வழக்கின் தீர்ப்பு ஆவணம் தேடி வருகின்றேன்.

said...

//மற்றபடி டோண்டு அய்யா சொல்வது போன்ற திறமையெல்லாம் இல்லை//

ஒன்று இட ஒதுக்கீடு பற்றி பேச வேண்டும். அல்லது திறமை குறித்து பேச வேண்டும். இரண்டையும் குழப்பக்கூடாது குழலி.

பிற்படுத்தப்பட்டவகுப்பினர் உட்பட அனைவரும் நல்ல மதிப்பெண்கள் பெற்று Open competition-ல் வந்த நிலை வந்து 'உண்மையான திறமைசாலிகளாக' மாறி விட்ட பிறகு எதற்கய்யா இட ஒதுக்கீடு?!

said...

வழக்கம் போல மாயவரத்தான் பேசு(உளறு)கிறார், சொல்லுறாங்க அவிங்களாம் திறமைசாலிகளாம், அதனால் தான் O.C.யில் கிட்டத்தட்ட எல்லா இடங்களும் அவர்களுக்கு கிடப்பது அந்த எக்ஸ்ட்ரா தெறமையால (என்னமோ பொறக்கும் போதே தனியா பொத்துக்கிட்டு வந்தது மாதிரி)என்பது மாதிரி பேசி வருகின்றனர், அந்த எக்ஸ்ட்ரா தெறமையெல்லாம் ஒரு மண்ணுமில்லை, ஓட்டையை பயன்படுத்தி / உருவாக்கி அதனால் தான் O.C.யில் பெரும்பாலானோர் FCயாக இருக்க காரணம்.

said...

//ஒன்று இட ஒதுக்கீடு பற்றி பேச வேண்டும். அல்லது திறமை குறித்து பேச வேண்டும். இரண்டையும் குழப்பக்கூடாது குழலி.
//
என்ன மாயவரத்தான் உங்களிடம் பேசி பயனில்லை, திறமைகள் தொடர்பாக ஏற்கனவே நிறைய பேசிவிட்டேன்....

இரண்டு விதமான பதில்கள் இதற்கு வைத்துள்ளேன், இதில் எந்த பதிலுக்கு நீங்கள் பொருந்துவீர்கள் என்பது எல்லோருக்கும் தெரியுமோ இல்லையே உங்களுக்கே தெரியும்.

இப்படி தான் பதில் சொல்லனுமோ?

என்று தணியும் இந்த பிரச்சாரம்...

said...

Your are looking at open competition with blinkers on. Your logic works for every category. When a SC candidate with top Open competition ranking moves into SC category to get the college/course he wants, a BC or MBC would benefit if he was below him in the rank. Why only look at FCs and crib?

First of all, counselling was not invented by Forward castes only. Secondly, there are brighter OC students who select colleges closer to their home town or courses due to various socio-economic reasons. In such a situation, a reserved category student might also benefit.

You might question "brighter' word used. When a common evaluation system is accepted by law, the ones who come ahead are definitely better than the ones below. If one starts questioning the evaluation system itself, then we can very well say TN State Board is far inferior to CBSE just looking at the curriculam and the difficulty level of exams. Have you wondered why TN state board students score poorly in IIT JEE, CAT or Gate, compared to CBSE students?

Though affirmative actions are required for upliftment, it should not become a right due to electoral strength; You are trying to deprive students from forward castes even where it flows to them in open competition. How much time do you think it would take Mayawati to classify Brahmins like Tyagis as OBC, just to teach a lesson to Yadavs? Why do you think Laloo is going slow on the current OBC reservations fiasco? He knows that it is going to benefit Southern states rather than his community.

Let us not see every thing from TN perspective and gloat ourselves; There is a world beyong TN's petty caste politics and Tamils can succeed only by their own efforts there, not by any affirmative action.

I am surprised that someone who lives in Singapore like you, and others like you who live aborad, are unable to see this point inspite of the competitive environment there and are constantly making it more and more difficult for people like us who have chosen to stay in India.

said...

குழலி அவர்களே, 1994ம் ஆண்டிலிருந்து மொத்த இட ஒதுக்கீடு , பொறியியல்,மருத்துவ இடங்களில் 50%தான்.உச்ச நீதிமன்றம் கொடுத்த ஆணையின் படி இட ஒதுக்கீடு 50% ஆக இருக்கிறது, 69% அல்ல. இதை சரிக்கட்ட அரசு 100 இடங்களை 138 ஆக கூட்டியது.இதில் 50% அதாவது 69% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதி 69 இடங்கள் அனைவருக்கும் பொதுவானது. இதில் F.C இத்தனைதான் வர வேண்டும் என்றெல்லாம் விதி இல்லை. கட் ஆப் மார்க்கினை பொருத்து இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தினசரி ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை இடங்கள் உள்ளன என்பதும், அவற்றுக்கான கட் ஆப் மார்க்(கள்) எத்தனை என்பதும் வெளிப்படையாக
அறிவிக்கப்பட்டு செய்தித்தாள்களில் வருகிறது. மீதமுள்ள 50% கட் ஆப் மார்க் அடிப்படையில் ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு பிரிவிலும் கட் ஆப் மார்க்கள் இருப்பதால் அதற்கு அதிகமாக பெற்றுள்ளவர்கள் பொது இடங்களில் சேர்க்கைக்கு கணக்கில் கொள்ளப்படுகிறார்கள். எனவே இதில் மோசடி ஏதும் இல்லை.

said...

What do you want F.C students to do.Should they not get seats on account of their marks.Are they
claiming anything extra.

said...

தல சுத்துது சாமியோவ்.

said...

//இதை சரிக்கட்ட அரசு 100 இடங்களை 138 ஆக கூட்டியது.இதில் 50% அதாவது 69% இட ஒதுக்கீட்டின் கீழ் வரும். மீதி 69 இடங்கள் அனைவருக்கும் பொதுவானது.//

100+38 = 138, இந்த 138ல் 69% தரவேண்டும் ஆனால் 100ல் 69 தந்துவிட்டு 38 கூடுதலாக்கி விட்டனர், அப்படி பார்த்தால் 31% என்பது 31+38 = 49% ஆகிவிடுகின்றது, ஆக மொத்தம் இடஒதுக்கீடு 51% மட்டுமே, 69% தான், இதை எதிர்த்து தான் வீரமணி அவர்கள் அந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார், வழக்கம் போல உயர் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது, ஏனெனில் அங்கே இருப்பவர்கள் யாரென்று சொல்ல வேண்டுமா?

said...

//தல சுத்துது சாமியோவ்.
//
உங்களுக்கு தல சுத்துது அந்த கேப்ல இந்த மாதிரி நிறைய பிசி, எம்பிசி, எஸ்சி, எஸ்டி இடங்கள் எஃப்சிக்கு போகுது....

said...

//இதில் F.C இத்தனைதான் வர வேண்டும் என்றெல்லாம் விதி இல்லை. கட் ஆப் மார்க்கினை பொருத்து இடங்கள் ஒதுக்கப்படுகின்றன. தினசரி ஒவ்வொரு பிரிவிலும் எத்தனை இடங்கள் உள்ளன என்பதும், அவற்றுக்கான கட் ஆப் மார்க்(கள்) எத்தனை என்பதும் வெளிப்படையாக
அறிவிக்கப்பட்டு செய்தித்தாள்களில்
வருகிறது//

கட்-ஆஃப் மார்க்கெல்லாம் தெரியுது ஆனால் கட்-ஆஃப் மதிப்பெண் என்பது தரப்பட்டியலில் கடைசி மதிப்பெண், ஆனால் விடயம் என்னவென்றால் அந்த BC, MBC, SC/ST பிரிவுகளில் முதல் சில இடங்களில் இருப்பவர்கள் OC பிரிவில் கடைசியில் இருப்பவர்களை விட அதிக மதிப்பெண்கள் பெற்றிருப்பார்கள், அவர்களை கல்லூரி, துறை என்று கோட்டாவினுள் தள்ளுவதால் OC முழுக்க FCக்களின் ஆக்கிரமிப்பாக உள்ளது...

கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிடுவது போல் ஸ்டார்ட்டிங் மதிப்பெண்களையும் வெளியிடவேண்டும் அப்போது இந்த வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில் ஏறும், வெறும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் மட்டுமின்றி கீழ்கண்டவாறு வெளியிடப்பட வேண்டும்,

OC - 300 to 295
BC - 297 to 290
MBC - 296 to 280
SC - 296 to 270

ஆனால் நமக்கு கிடைப்பதெல்லாம் கட்-ஆஃப் மதிப்பெண்கள் மட்டுமே அதாவது கீழிருப்பது மாதிரி

OC - 295
BC - 290
MBC - 280
SC - 270

அதனால் தான் நமக்கு எந்த கோட்டாவிற்கு எந்த மதிப்பெண்களில் முடிகிறது என தெரிகிறது ஆனால் எங்கே ஆரம்பிக்கின்றது என தெரியவில்லை.

அதனால் தான் OC முடிந்து 295 மதிப்பெண்களுக்கு கீழே ஆரம்பிக்க வேண்டிய கோட்டா, OC கட்-ஆஃப் 295 ஆக இருக்கும் போதே BC க்கு 297ல் ஆரம்பிக்கின்றது கீழ் கண்டது போல்

OC - 300 to 295
BC - 297 to 290
MBC - 296 to 280
SC - 296 to 270

ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டியது

OC - 300 to 295
BC - < 295 to 290
MBC - < 295 to 280
SC - < 295 to 270

said...

Your logic is flawed as the total reservation is only 50% not 69%.
When the BCs and OBCs are assured of their quota what is wrong if the seats in open competition are alloted according to cut-off marks.
You have made some assumptions
regarding ranking in open competition but in reality
it need not be so.You should
specify your source.Dont try to
turn your assumptions into facts.
One thing is clear you hate the
'forward' castes.Even if they come
by merit you dont want them to get
any seat.

said...

When a SC candidate with top Open competition ranking moves into SC category to get the college/course he wants, a BC or MBC would benefit if he was below him in the rank. Why only look at FCs and crib?

Good question, but Kuzhali wont
answer such questions.

said...

100+38 = 138, இந்த 138ல் 69% தரவேண்டும் ஆனால் 100ல் 69 தந்துவிட்டு 38 கூடுதலாக்கி விட்டனர், அப்படி பார்த்தால் 31% என்பது 31+38 = 49% ஆகிவிடுகின்றது, ஆக மொத்தம் இடஒதுக்கீடு 51% மட்டுமே, 69% தான், இதை எதிர்த்து தான் வீரமணி அவர்கள் அந்த ஆண்டு வழக்கு தொடர்ந்தார், வழக்கம் போல உயர் நீதிமன்றத்தில் தோல்வி அடைந்தது, ஏனெனில் அங்கே இருப்பவர்கள் யாரென்று சொல்ல வேண்டுமா?

100+38 = 138
50% of 138 is 69
other 69 seats are in open
competition where all can
compete.The limit set by
Supreme Court for reservations
in 50%. Please understand this.
If Veeramani wants 100%
reservation should Courts grant
that.You will want 50% reservation
for vanniyars alone but should
others accept it.

said...

குழலி,

நல்லா விரிவாக, புரியும்படியாக உதாரணத்துடன் விளக்கம் அளித்திருக்கிறீர்கள். ஆனாலும், சில கேள்விகள் வருகின்றன.

நீங்கள் கூறிய உதாரணத்தில் உள்ள 7-12 இடங்களில் இருப்பவரில் OC (Other castes) யாருமே இல்லையெனில், நீங்கள் கூறுவது போல் final tally வராது !!! அதாவது, Open Competition-க்கான 31% இடங்களை, OC-க்கள் முழுவதுமாக நிரப்பி விடுவதில்லை ! ஏனெனில், இது தரப்பட்டியல் எவ்வாறு அமைந்துள்ளது என்பதைப் பொருத்தது அல்லவா ? அதே போல், தரப்பட்டியலின் மேல் பகுதியில் OC-க்களின் ஆதிக்கம் இருந்தால், நீங்கள் கூறுவது போல் நடப்பதற்கான சாத்தியம் குறைவு. ஆனால், பட்டியலில் மேலே இருக்கும் BC/MBC/SC -க்கள் நகர்வதால், இடஒதுக்கீடு ஓரளவு நீர்த்துப் போகிறது என்பது நேர்கிறது தான் !

நீங்கள் இதற்கு தெளிவான தீர்வை தந்திருக்கலாம் ! அதாவது, Open Competition-க்கான 31% இடங்களிலிருந்து, ஒரு BC வெளியேறினால், அவ்விடத்தை தரப்பட்டியலில் அடுத்து வரும் BC-யைக் கொண்டு நிரப்பினால் ஒப்புவீர்கள் என்று நினைக்கிறேன், அது போலவே MBC, SC -க்களுக்கும்.

தனி மடல் கிடைத்ததா ?

என்றென்றும் அன்புடன்
பாலா

said...

//When the BCs and OBCs are assured of their quota what is wrong if the seats in open competition are alloted according to cut-off marks.
//
இதே போல் இடங்களை உயர்த்துவதன் மூலம் O.C. களுக்கான இடங்கள் குறையாத போது எதற்காக மத்திய அரசு கொண்டுவரும் 27% இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும்.

//You should
specify your source//
1994 நான் பொறியியல் சேரும்போது இப்படித்தான் இருந்தது, என்ன ஒரே வித்தியாசமென்றால் இரண்டாமாண்டில் தான் துறை(டிபார்மெண்ட்) பிரிப்பார்கள் என்பதால் கல்லூரி தேர்விற்கு மட்டும் இப்படி இருந்தது ஆனால் 2002ல் ஒற்றைசாளர முறையில் எங்கள் சொந்தகார பையனுக்கு சென்ற போதும் இந்த பதிவில் சொன்னது போலவே இருந்தது, அப்போது முதலாமாண்டிலேயே டிப்பார்ட்மென்ட்டும் பிரிப்பதால் நிலமை இன்னும் மோசம். இணையத்திலும் பத்திரிக்கையிலும் நான் எதிர்பார்க்கும் முழு தரப்பட்டியல் இல்லை, இதை வேறு சிலரிடம் எடுத்து சென்றுள்ளேன், அவர்கள் முழுதகவல்களோடு அறிக்கையோடு வருவார்கள் என நினைக்கின்றேன்.

said...

//When a SC candidate with top Open competition ranking moves into SC category to get the college/course he wants, a BC or MBC would benefit if he was below him in the rank. Why only look at FCs and crib?
//
SC மாணவர் OCயிலிருந்து SC கோட்டாவுக்கு போவதால் FCகளுக்கு தான் பயன், ஏனெனில் B.C., M.B.C.க்கள் அவர்களுக்கான இடஒதுக்கீட்டில் சென்றுவிடுவார்கள்.

said...

//The limit set by
Supreme Court for reservations
in 50%.//
ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டதிருத்தத்தின் மூலம் எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் அந்த மாநிலத்தில் அமல் செய்து கொள்ளலாம். அப்படியாக தமிழகத்தில் சட்டதிருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது 69% இடஒதுக்கீடு, ஆனால் 1994-95ல் அரசாங்கம் இருக்கும் இடங்களில் 69% இடஒதுக்கீடு செய்துவிட்டு பிறகு 38 இடங்களை OCக்கு மட்டும் அதிகரிப்பார்கள், பிரச்சினை இடங்களின் எண்ணிக்கை மட்டுமல்ல விழுக்காடும் கூட, மொத்த இடங்களில் 69% தானே தவிர ஏதோ ஒரு எண்ணிக்கையிலான இடங்கள் அல்ல...

இடஒதுக்கீட்டு தொடர்பான பெரும்பாலான தீர்ப்புகள் இடஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பாகவே வந்துள்ளது நீதிமன்றங்களிலிருந்து.

said...

நன்றி பாலா, கடிதம் கிடைத்தது விபரம் தனி மடலில் அனுப்புகிறேன்.

நன்றி

said...

இந்த பதிவுக்கான தற்போதைய வாக்கு நிலவரம் -3 / 9

பின்னூட்ட கயமைத்தனம் - 1

said...

இந்த பதிவுக்கான தற்போதைய வாக்கு நிலவரம் -4 / 12

புதிதாக விழுந்த வாக்குகள் 3 அதில் இரண்டு '-' கள் ஒரு '+'

பின்னூட்ட கயமைத்தனம் - 2

said...

/OC - 300 to 295
BC - 297 to 290
MBC - 296 to 280
SC - 296 to 270

ஆனால் அது நியாயமாக இருக்க வேண்டியது

OC - 300 to 295
BC - < 295 to 290
MBC - < 295 to 280
SC - < 295 to 270
/
எல்லாவற்றையும் விளக்க இந்த ஒரு எடுத்துக்காட்டே போதும்.

/Let us not see every thing from TN perspective and gloat ourselves; /

ஒரு பானை சோத்துக்கு ஒரு சோறு பதம். ஏன் தமிழ் நாட்டை உதாரணமா எடுத்துக்கக்கூடாதா? அதில் என்ன தவறு. இடஒதுக்கீட்டுக்கு முன்னோடியே தமிழ்நாடு தானே. அதனால் தமிழ்நாட்டை வைத்துப்பேசுவதே முறையும் கூட.

said...

எங்க வாத்தியார் கூட பெரியபடிப்பு படிக்கச்சொல்றாரு.அதுல இம்புட்டு விசயம் இருக்கா?ஏதோ கணக்கு சொல்றீங்க,புரியல.எங்க வாத்தியார்ட்ட கேக்கனும்.

said...

//அதுல இம்புட்டு விசயம் இருக்கா?ஏதோ கணக்கு சொல்றீங்க,புரியல.
//
புரியாமயே போங்கய்யா, உங்களுக்கெல்லாம் புரியக்கூடாது, புரிஞ்சிடுத்துனாதான் மேல வந்துடுவிங்களே, அப்படியே அதையும் எவனாவது எடுத்து சொன்னா அந்த பதிவு வரவே கூடாது, பார்த்தீங்கள்ள எத்தனை "-" குத்தியிருக்காங்கன்னு, அதாவது இதெல்லாம் புரியக்கூடதுங்கறது தான் மேட்டரே...

இந்த பதிவுக்கான தற்போதைய வாக்கு நிலவரம் -2 / 16

புதிதாக விழுந்த வாக்குகள் 4 அதில் ஒரு '-' மூன்று '+'

said...

விளக்கமான பதிவு குழலி...
இது நயவஞ்சகம்...

எது நடந்தாலும் அது வெளிப்படையாக நடக்க வேண்டும். இப்படி சலுகை கொடுப்பது போல் கூறிக்கொண்டே/திட்டிகொண்டே சலுகையை பறிப்பது..அதனை வேறு என்னவென்று சொல்ல?

said...

//கட்-ஆஃப் மதிப்பெண்களை வெளியிடுவது போல் ஸ்டார்ட்டிங் மதிப்பெண்களையும் வெளியிடவேண்டும் அப்போது இந்த வண்டவாளமெல்லாம் தண்டவாளத்தில் ஏறும், வெறும் கட்-ஆஃப் மதிப்பெண்கள் மட்டுமின்றி கீழ்கண்டவாறு வெளியிடப்பட வேண்டும்,

OC - 300 to 295
BC - 297 to 290
MBC - 296 to 280
SC - 296 to 270

ஆனால் நமக்கு கிடைப்பதெல்லாம் கட்-ஆஃப் மதிப்பெண்கள் மட்டுமே அதாவது கீழிருப்பது மாதிரி

OC - 295
BC - 290
MBC - 280
SC - 270

அதனால் தான் நமக்கு எந்த கோட்டாவிற்கு எந்த மதிப்பெண்களில் முடிகிறது என தெரிகிறது ஆனால் எங்கே ஆரம்பிக்கின்றது என தெரியவில்லை.
//

RTI சட்டத்தின் மூலம் இத்தகவலை யார் வேண்டுமானாலும் கேட்டுப் பெறலாம் என்று நினைக்கிறேன்.

said...

//புரியாமயே போங்கய்யா, உங்களுக்கெல்லாம் புரியக்கூடாது, புரிஞ்சிடுத்துனாதான் மேல வந்துடுவிங்களே//
சித்திரைப்பாண்டி கோவிக்க மாட்டிங்கனு மேலே இருக்கிற வரிகளை போட்டேன், உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால் தெரிவியுங்கள் நீக்கிவிடுகின்றேன்.

said...

இந்த பதிவுக்கான தற்போதைய வாக்கு நிலவரம் 1 / 19

புதிதாக விழுந்த வாக்குகள் 3 அதில் மூன்று '+'

said...

இட ஒதுக்கீட்டில் ஆதிக்க சாதியின் மோசடிதனத்தை எழுதி இருக்கிறீர்கள். ரொம்ப சரி... ஆனா இட ஒதுக்கீடே கூடாதுன்னு சொல்லுறாங்க ஆதிக்க சாதிகாரங்க! போரட்டத்துல குதிக்குறாங்க. நீங்க என்னன்னா... கொடுக்குற இட ஒதுக்கீட்டில் மோசடிங்குறீங்க.

இனி "பழமொழி பாண்டி" சொல்லுவது

பந்தியிலேயே எடம் கெடயாதுங்குறாங்க... நீங்க என்னன்னா இலை பொத்தலா இருக்குதுங்றீங்களே!!! என்ன குழலி!!!

-வேல்-

said...

கணக்கு எல்லாமே சரிதான்.

நீங்கள் கூட ஏமாற்றுக்காரராக இருக்கலாமே! யார் கண்டது?

அண்ணா பல்கலை கழகத்தில் வேலை பார்க்கும் BC/MBC/SC யாராவது வந்து சொன்னால் நம்பலாம்.

said...

இந்த பதிவுக்கான தற்போதைய வாக்கு நிலவரம் 1 / 21

புதிதாக விழுந்த வாக்குகள் 2 அதில் ஒரு '+' ஒரு '-'

said...

இதை முதலில் சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் OC என்பதிலிருக்கும் குழப்பத்தை தவிற்க்க GT ( General Turn ) என்று குறிப்பிட வேண்டும் என திராவிடர் கழக பொதுச் செயலாளர், மதிப்புமிகு கி.வீரமணி அவர்கள் தீர்வும் சொன்னார்கள். தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் GT என குறிப்பிடுவதாக அறிகிறேன். ஆனால் மேற்கண்ட குழறுபடி அங்கும் தொடர்கிறதா? எனத் தெரியவில்லை. ஒவ்வொரு பிரிவிலும் அதிக மதிபெண் எது என்பதையும் சொன்னால், சங்கதி வெளிச்சத்துக்குவரும் என்பது உண்மையே!! தெறமையானவங்க நல்லாதான் ஏமாத்துராங்க

said...

பதிவுக்கு புதிதாக எதும் வாக்குகள் விழவில்லை...

said...

நான் ஓட்டு போட்டுட்டேன்.

said...

நீங்கள் குழம்பியிருக்கிறீர்களோ இல்லையோ பிறரை குழப்ப முயற்சி செய்கிறீர்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம்
பேய் என்பது போல் உங்களுக்கு இட ஒதுக்கீடு அமுல் செய்யப்படும் இடங்களில் எல்லாம்
சதிகள் நடப்பது போல் தோன்றுகிறது.

இட ஒதுக்கீடு 69% என்று அரசு தீர்மானித்தாலும் உச்ச நீதிமன்றம் கிட்டதட்ட 12 ஆண்டுகளாக
தமிழ் நாட்டில் பொறியியல்,மருத்துவப் படிப்புகளில் இட ஒதுக்கீடு 50% தான் என்று தந்துள்ள உத்தரவின் அடிப்படையில் இடங்கள் அதிகரிக்கப்பட்டு ஒதுக்கப்படுகின்றன. 100 இடங்கள் இருந்தால் அவை 138 ஆக அதிகரிப்பட்டு அதில் 69 இட ஒதுக்கீடு முறையிலும், மீதி அனைவருக்கும் பொதுவானவை என்ற முறையிலும் ஒதுக்கப்படுகின்றன. நீங்களாக ஒரு அனுமானத்தினை முன் வைத்து அதனடிப்படையில் பீதியை உருவாக்க முயல்கிறீர்கள். மாணவரின்
தெரிவினையும் கருத்தில் கொண்டுதான் இடம் ஒதுக்கப்படுகிறது. 50% இட ஒதுக்கீடு தவிரப் பொதுப் பிரிவிலும் தாழ்த்தப்பட்ட,பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் இடம் பெற வழி இருக்கிறது.
பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களிலும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இடங்களை பெறுகிறார்கள். இந்த மாணவர் இட ஒதுக்கீடு முறை பல ஆண்டுகளாக அமுலில் உள்ளது. இதில் மோசடி இருந்தால் அரசு பார்த்துக்கொண்டு இருக்குமா இல்லை வீரமணி சும்மா
இருப்பாரா. இதை அமுல் செய்வது அண்ணா பல்கலைகழகம், இது மத்திய அரசின் பல்கலைக்கழகம்
அல்ல. மேலும் இது துவங்கப்பட்டு இன்று வரை ஒரு பிராமணர் கூட இதில் துணை வேந்தராக
இருந்ததில்லை என்று அறிகிறேன். எனவே பிராமணர் சதி என்றெல்லாம் எழுத முடியாது.

பொதுப் பிரிவில் இட ஒதுக்கீட்டின் கீழ் வராதோர் இடம் பெறுவதை நீங்கள் விரும்பாமல்
இருக்கலாம், 100% இட ஒதுக்கீடு தேவை என்று நினைக்கலாம். ஆனால் இந்திய அரசியல்
சட்டமும்,நீதிமன்றங்களும் இதை அனுமதியா. தருமிக்களும், குழலிகளும், முத்துக்களும்
இதற்காக அம்பேத்காரைத் திட்டி எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.

said...

நீங்கள் இதற்கு தெளிவான தீர்வை தந்திருக்கலாம் ! அதாவது, Open Competition-க்கான 31% இடங்களிலிருந்து, ஒரு BC வெளியேறினால், அவ்விடத்தை தரப்பட்டியலில் அடுத்து வரும் BC-யைக் கொண்டு நிரப்பினால் ஒப்புவீர்கள் என்று நினைக்கிறேன், அது போலவே MBC, SC -க்களுக்கும்.

This is not a right solution.
This may benefit some at the cost
of others.

said...

ஒவ்வொரு மாநிலத்திலும் சட்டதிருத்தத்தின் மூலம் எத்தனை சதவீதம் வேண்டுமானாலும் அந்த மாநிலத்தில் அமல் செய்து கொள்ளலாம். அப்படியாக தமிழகத்தில் சட்டதிருத்தத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டது 69% இடஒதுக்கீடு

States do not have the right or power to increase quota % as they
wish. As per the verdict of the Supreme Court the maximum limit is 50%. This itself is high. The Constitution of India gives much importance to principle of equality and principle of non-discrimination.That may not be to your liking.

said...

http://bharathi-kannamma.blogspot.com/2006/06/blog-post_115089456769006001.html

இடஒதுக்கீடு: பாதிக்கப்பட்டவன் பேசுகிறேன்.

இடையிறாத கழக(ஹி ஹி) பணிகளால் என் எழுத்து பணி தடைப்பட்டிருந்தது என்னவோ உண்மை தான்..ஆனால் இணைய கண்மணிகள் உங்களுக்காக உயிரை கொடுப்பேன் என்பது என் எதிரிகளுக்கு கூடத் தெரியும்...என் எழுத்துக்களை படித்து விட்டு பின்னூட்டம் இடாமல் செல்பவர்களை கண்டிப்பதால் என் செங்கோல் பறிபோனாலும் பரவாயில்லை(அட கலைஞர் மாதிரி முயற்சி பண்ணிப் பார்த்தேன்..என்ன தேறுவேனா...?).

பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வு எழுதி விட்டு ஆர்வமாக காத்திருந்தேன் முடிவுகளுக்காக..அப்பொழுது இருந்த அரசு(2001 ஆம் ஆண்டு) கிராமப்புற மாணவர்களுக்கான இடஒதுக்கீடு அறிவித்திருந்தது.நான் படித்த பள்ளியும் கிராமத்தில் இருந்ததால் நல்ல் மதிப்பெண் எடுத்தால் நல்ல கல்லூரியில் சேரலாம் என்று எல்லோரும் சொன்னார்கள்.தேர்வு முடிவுகள் வந்தது நான் முதல் மதிப்பெண்ணும்(1138) பெற்று விட்டேன்.

அது வரை காதல்,நண்பர்கள் ,அரட்டை என இருந்த என் வாழ்க்கையை திடீரென்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் என்பதும்,அதற்கு அடுத்தார் போல் நடந்த நிகழ்ச்சிகளும் அப்படியே புரட்டி போட்டு விட்டது.என்னுடய பள்ளியில் எனக்கு முந்தய மூன்று வருடங்களில் முதல் மதிப்பெண் எடுத்தவர்கள் எல்லாம் மருத்துவ கல்லூரியில் சேர்ந்திர்ந்தார்கள்.என்னுடைய ஜீனியர் மாணவர்கள் என்னை 'டாக்டர் ' என விளிக்க ஆரம்பித்தார்கள்..நானும் டாக்டர் கனவு காண ஆரம்பித்தேன்.


அந்த கிராமப்புற ஒதுக்கீடு என்பது தாழ்த்த பட்ட மணவர்களுக்கு மட்டும் தான் என தெரிய வந்தது ..நான் உயர்ந்த் சாதியாம்(0C)...ஆதலால் அந்த சலுகை எனக்கு கிடைக்காது என்று கூறினார்கள்.இந்த இடத்தில் நான் ஜாதியை பற்றி குறிப்பிட்டது ,ஏன் எனக்கு அந்த சலுகை கிடைக்காமல் போனது என விளக்க மட்டுமே.ஆதலால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை.என் பள்ளியில் மூன்றாம் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. அவனுடைய நுழைவுத்தேர்வு மதிப்பெண் என்னுடைய மதிப்பெண்ணை விட சுமார் 30 மதிப்பெண்கள் குறைவு(என்னுடையது 285).நுழைவுத் தேர்வில் ஒரு மதிப்பெண் எத்துனை பெரிய வித்தியசத்தை ஏற்படுத்தும் என்பதை நுழைவுத் தேர்வு எழுதியவர்களுக்கு மட்டுமே புரியும்.பொறியியல் கல்லூரியில் இதை விடக் கொடுமை இரண்டாம் மதிப்பெண் எடுத்த மாணவனுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் இடம் கிடைத்தது.


அது வரை காதல்,நண்பர்கள் ,அரட்டை என இருந்த என் வாழ்க்கையை திடீரென்று முதல் மதிப்பெண் பெற்ற மாணவன் என்பதும்,அதற்கு அடுத்தார் போல் நடந்த நிகழ்ச்சிகளும் அப்படியே புரட்டி போட்டு விட்டது.என்ற வரிகளை பயன்படுத்தியது ஏன் என நீங்கள் நினைக்கலாம்..தொடர்ந்து படியுங்கள் புரியும்..


அட மருத்துவக் கல்லூரியில் தான் இடம் கிடைக்க வில்லை..நல்ல பொறியியல் கல்லூரியிலாவது சேரலாம் என நினைத்த என் நினைப்பில் மண் விழுந்தது...ஆம் 'சாஸ்த்ரா' என அறியப்படும் தஞ்சாவூர் சண்முகா பொறியியல் கல்லூரியை கவுன்சிலிங்கில் தேர்வு செய்து சேரப் போன என்னையும்,என்னை போன்ற மாணவர்களையும் வாசலிலேயே தடுத்து நிறுத்தி ஒரு ஒரமாக உட்கார வைத்து விட்டார்கள்.

காரணம்: அந்தக் கல்லூரி நிகர்நிலை பல்கலைகழக அந்தஸ்த்துக்கு விண்ணப்பத்திருந்தது. அரசு அனுமதி அளிக்க வில்லை என்பதால் அவர்கள் நீதிமன்றத்தை நாடியிருந்தார்கள்.

இந்த விசயங்கள் தெரியாமல் நானும் அந்த கல்லூரியை தேர்வு செய்து விட்டேன். என்னுடய அறியாமை குற்றமா..? இல்லை பிரச்சினை இருந்தாலும் பரவாயில்லை (பாதிக்கப் படுவது மாணவர்கள்) என்று அந்த கல்லூரியை கவுன்சிலிங்கில் சேர்த்த அரசின் மேல் குற்றமா என்று நீங்கள் தான் சொல்ல வேண்டும்!!!.


அப்புறம் நாங்கள் சாலை மறியல் செய்தும்..ஊர்வல்ம் போயும்...கடைசியில் பாதிக்க பட்ட எங்களுக்கு 'மறுகவுன்சிலிங்' ஏற்பாடு செய்தார்கள்....இதற்க்கிடையில் என்(எங்களுடைய புகைப் படங்கள் செய்திதாள்களிலும் வெளிவந்தன..தொலைகாட்சிகளிலும் நான் என்னை பார்த்தேன்...)புகழ் பெறவும் ..பத்திரிக்கை வெளிச்சம் நம் மேல் விழவும் பாதிக்கப் பட்டால் மட்டுமே போதும் என்ற எண்ணம் தான் தோன்றியது..!.அதிலும் அரசுக் கல்லூரிகளில் இடம் ஒதுக்க வில்லை.

கடைசியில் வேறு வழியின்றி கோயம்புத்தூரியில் ஒரு கல்லூரியில் சேர்ந்து படித்து..வேலையும் கிடைத்து..இப்போது இதை உங்கள் பார்வைக்கும் படைத்துக் கொண்டிருக்கிறேன்.


இதை பற்றி நான் இப்போது இங்கே எழுதக் காரணம் ஆனந்த விகடனில் ஞானி 'இடஒதுக்கீடு' பற்றி எழுதியக் கட்டுரை தான்...ஆம் அவர் அந்தக் கட்டுரையில் அவரே கேள்வி கேட்டு பதிலும் சொல்கிற மாதிரி எழுதியிருந்தார்.

கடைசிக் கேள்வி: தாழ்த்த பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் எல்லாம் நிரப்ப படாமலே வீணாய் போகிறதே?

பதில்: அது இவர்கள் செய்யும் யுக்தி. ஒதுக்குவது போல் ஒதுக்கி பின் மீண்டும் பொதுப்பிரிவில்(General quotta ) அனைத்து சீட்டுகளையும் மாற்றி விடுகிறார்கள்.


இல்லை ஞானி அவர்களே.! ..நீங்கள் வருடா வருடம் கவுன்சிலிங்கில் கலந்து கொள்கிறீர்களா..இல்லை நீங்கள் பொறியியல் படிக்கிறீர்களா...? இந்த கேள்வியை கேட்டதற்க்கு மன்னிக்கவும்....ஓவ்வொரு வருடமும் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தும் இந்த கவுன்சிலிங்கில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தாழ்த்த்ப் பட்ட/பிற்படுத்தப் பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் நிரம்பாமலேயே இருப்பதை செய்திதாள்களில் நீங்கள் பார்க்கலாம்.கடைசி வரை நிரம்பாமல் இருக்கும் இந்த இடங்களையே பொதுப் பிரிவுக்கு(general quotta) மாற்றுகிறார்கள்.


எல்லாருடய கருத்தும் தாழ்த்த பட்டவர்கள் ஏழைகள் என்பதும்...உயர் சாதியை சேர்ந்தவர்கள் பணக்காரர்கள் என்பது மட்டுமே...

ஆனால் எப்போதும் அதே போல் இருப்பதில்லை என்பது உலகறிந்த விசயம்.

said...

இதே போல் இடங்களை உயர்த்துவதன் மூலம் O.C. களுக்கான இடங்கள் குறையாத போது எதற்காக மத்திய அரசு கொண்டுவரும் 27% இடஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும்.

There is no need to give quota for OBCs in IITs etc.Let there be some
institutions where victims of reservation are not deprived of seats on account of caste and where
only merit prevails in admissions.

said...

ரவி இது தொடர்பாக "-" குத்து போடுவதிலேயே பலர் மும்முரமாக இருந்தார்களேயொழிய பெரும்பாலும் யாரும் விவாதிக்க தயாராக இல்லை, நீங்களாவது வந்தீர்களே!

//100 இடங்கள் இருந்தால் அவை 138 ஆக அதிகரிப்பட்டு அதில் 69 இட ஒதுக்கீடு முறையிலும், மீதி அனைவருக்கும் பொதுவானவை என்ற முறையிலும் ஒதுக்கப்படுகின்றன.//

மாநிலங்களில் சட்டத்திருத்தத்தின் மூலம் 50% இடஒதுக்கீட்டிற்கும் மேல் கொண்டு செல்லலாம், சில வடகிழக்கு மாநிலங்களில் 95% இடஒதுக்கீடு என்பது அங்கீகரிக்கப்பட்ட ஒன்று, 100 இடங்களை 138 ஆக அதிகரித்து பின் 100 இடங்களுக்கு மட்டும் இடஒதுக்கீடு என்பதை யாரை ஏமாற்றும் வேலை, அப்படியென்றாலும் அது 50% இடஒதுக்கீடு தான் 69% அல்ல, இன்னொரு தகவல் இந்த இட அதிகரிப்பு மருத்துவகல்லூரிகளுக்கு மட்டுமே, பொறியியல் கல்லூரிகளுக்கு இல்லை, ஏன்? பொறியியல் கல்லூரிகளில் இடம் எளிதாக கிடைக்கிறது என்பதாலா? ....

உயர்கல்வி கூடங்களில் இடங்களில் பொதுப்பிரிவில் இது வரை கிடைத்து வரும் இடங்களும் குறையாமல் 27% இடஒதுக்கீட்டை அமல் படுத்த இடங்களை உயர்த்த பரிசீலிக்கப்படும் போது குறையாத தரம், மருத்துவ கல்லூரிகளில் O.C. க்காக மட்டும் 38% இடங்களை உயர்த்தும்போது குறையாமல் போனதன் மர்மம் என்ன? அதாவது உயர்கல்வி கூடங்களில் பொதுப்பிரிவு மாணவர்களின் இடங்களின் எண்ணிக்கை எந்த பாதிப்பும் இல்லாமல் உயர்த்தும் போது தரம் குறைவதாக கூச்சலிடுபவர்களின் கூச்சல் இதில் இல்லை ஏன்?

//100 இடங்கள் இருந்தால் அவை 138 ஆக அதிகரிப்பட்டு அதில் 69 இட ஒதுக்கீடு முறையிலும், மீதி அனைவருக்கும் பொதுவானவை என்ற முறையிலும் ஒதுக்கப்படுகின்றன. //
//50% இட ஒதுக்கீடு தவிரப் பொதுப் பிரிவிலும் தாழ்த்தப்பட்ட,பிற்பட்ட வகுப்பு மாணவர்கள் இடம் பெற வழி இருக்கிறது.//
அந்த மீதி அனைவருக்கும் பொது என்பதில் உள்ளது எப்படி மறைமுகமாக FCகளுக்கு மட்டும் என்று மாறுகிறது என்பதை விளக்கியதே இந்த பதிவு.


// இந்த மாணவர் இட ஒதுக்கீடு முறை பல ஆண்டுகளாக அமுலில் உள்ளது//
முன்பும் இந்த சொதப்பல் இருந்தது, ஆனால் இதன் பாதிப்பு மிக அதிக அளவில் இருப்பது ஒற்றை சாளர முறை அமலில் வந்த பின் தான், ஏனெனில் அதற்கு முன்பு இரண்டாம் ஆண்டில் தான் துறைபிரிப்பார்கள் எனவே கல்லூரியில் OC யில் வந்துவிட்டு துறையில் இடஒதுக்கீட்டு முறையில் வருவார்கள், இப்போது அப்படியல்ல....

//இதில் மோசடி இருந்தால் அரசு பார்த்துக்கொண்டு இருக்குமா இல்லை வீரமணி சும்மா இருப்பாரா. இதை அமுல் செய்வது அண்ணா பல்கலைகழகம், இது மத்திய அரசின் பல்கலைக்கழகம் அல்ல. //
இந்த மோசடி தெரியாமல் கூட இருக்க வாய்ப்பிருக்கின்றது, மேலும் தெரிந்த அதிகாரிகளும் சும்மா இருக்கலாம், IITயில் சென்று பார்க்கும் வரை M.S.ல் கொல்லைப்புறமாக மாணவர்கள் சேர்க்கப்படுவது தெரியாமல் தானே இருந்தது...

//நீங்களாக ஒரு அனுமானத்தினை முன் வைத்து அதனடிப்படையில் பீதியை உருவாக்க முயல்கிறீர்கள். மாணவரின் தெரிவினையும் கருத்தில் கொண்டுதான் இடம் ஒதுக்கப்படுகிறது//
பீதியெல்லாம் வலைப்பதிவில் உருவாக்கி ஒன்றுக்கும் உதவாது என்பது எனக்கு தெரியும், வேறு சில முயற்சிகளை எதிர்பார்க்கின்றேன்.

//பிற்பட்ட வகுப்பினைச் சேர்ந்தவர்கள் பொது இடங்களிலும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் இடங்களை பெறுகிறார்கள்.//
பெரியாரின், திராவிட கட்சிகளின் மாபெரும் சாதனை இது, இந்தியாவின் மற்றைய மாநிலங்களை விட தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்டவர்களின் கல்வி முன்னேற்றம் அதிகமிருப்பதே காரணம், இத்தனை ஓட்டைகளையும் தாண்டி நிறைய இடம்பிடிக்க ஆரம்பித்துள்ளனர்.

//ஆனால் இந்திய அரசியல் சட்டமும்,நீதிமன்றங்களும் இதை அனுமதியா. தருமிக்களும், குழலிகளும், முத்துக்களும் இதற்காக அம்பேத்காரைத் திட்டி எழுதினால் நான் வியப்படையமாட்டேன்.//
சட்டம் அம்பேத்காரும், சட்ட மன்றங்களும், பாராளுமன்றமும் எழுதினாலும் அதை அமல் படுத்தும் இடத்தில் உயர் ஆதிக்க சாதி வேணுகோபால்கள் நிறைந்துள்ளனர், நீதிமன்றங்களிளோ சொல்லவே தேவையில்லை, இடஒதுக்கீடு, இந்துமதம், சுயநிதிகல்லூரி விடயங்களின் நீதிமன்றங்களின் தீர்ப்பையெல்லாம் இப்போது மிகச்சரியாக கணிக்க முடிகின்றது.

said...

http://www.hindu.com/2006/05/03/stories/2006050306640500.htm

Extra seats in professional courses for open category this year too

J. Venkatesan

The move is aimed at accommodating meritorious students





--------------------------------------------------------------------------------

Government will have to make admissions on the basis of 69 per cent reservation
Thereafter, it should prepare a list of candidates, with 50 per cent reservation, for the "open category"
--------------------------------------------------------------------------------


NEW DELHI: The Supreme Court on Monday extended for 2006-2007 its 1994 order directing the Tamil Nadu Government to create extra seats in medicine, engineering and other courses to accommodate meritorious students in the "open category," affected by the 69 per cent reservation.

This is the 13th year in succession that the court has passed this interim order to benefit the "open category" students. As per the 1994 order, the extra seats created will be equal to the number the "open category" candidates will get if the rule of 50 per cent reservation is applied as per the Mandal judgment. The quota will not be affected by this order, as the extra seats will be in excess of the 69 per cent reservation. In the light of the order, the State Government will have to make admissions on the basis of the 69 per cent reservation. Thereafter, it should prepare a list of candidates, with 50 per cent reservation, for the "open category" and create extra seats to accommodate those who would have secured admission had the 50 per cent reservation been followed.

A Bench consisting of Justices Arijit Pasayat and S.H. Kapadia gave this direction on an application from K.M. Vijayan, Trustee, Voice (Consumer Care) Council, seeking relief for 2006-2007 as was granted in the earlier years.

After hearing K.V. Mohan, counsel for the petitioner, and S. Balakrishnan, senior counsel for Tamil Nadu, the Bench said: "Without prejudice to the rights and contentions of the parties, the same order as was made for ... 2005-2006 shall be applicable to ... 2006-2007.

Voice submitted that the petitions challenging the Tamil Nadu Backward Classes, SCs and STs (reservation of seats in educational institutions and of appointment or posts in the services under the State) Act, ensuring 69 per cent reservation and its subsequent inclusion the Ninth Schedule were referred to a seven-judge Bench. Until the matter was disposed of, "open category" students should be protected by the interim order.
"

said...

இன்னொரு தகவல் இந்த இட அதிகரிப்பு மருத்துவகல்லூரிகளுக்கு மட்டுமே, பொறியியல் கல்லூரிகளுக்கு இல்லை, ஏன்? பொறியியல் கல்லூரிகளில் இடம் எளிதாக கிடைக்கிறது என்பதாலா? ....

You got it wrong.See the news item
i posted.

said...

//இடஒதுக்கீடு: பாதிக்கப்பட்டவன் பேசுகிறேன்.//
இரண்டாயிரத்தி சொச்சம் ஆண்டுகள் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறேன் என பல கோடி மக்கள் எழுதமுடியும், இப் பதிவு பேசுவது இடஒதுக்கீடு தேவையா இல்லையா என்பது அல்ல, எனவே அது தொடர்பான விவாதங்கள் பதிவின் போக்கை திசைதிருப்பிவிடும், பதிவு சொல்வது எப்படி இடஒதுக்கீடு முழுபயன் அளிக்காமல் அதில் உருவாக்கிய அல்லது இருந்த ஓட்டைகளினால் இடஒதுக்கீடு நீர்த்து போகின்றது, O.C. Open competition ஆக இல்லாமல் எப்படி Other Castes ஆக இருக்கின்றது என்பதை விளக்குவதே இந்த பதிவு, நாம் இது தொடர்பாகவே விவாதிக்கலாம்.

said...

//You got it wrong.See the news item i posted. //
agreed கடைசியாக பார்த்தால் தமிழகத்தில் 69% இடஒதுக்கீடு அல்ல, வெறும் 50% தான்.... எத்தனை ஏமாற்று வேலை

said...

கடைசியாக இந்த பதிவின் வாக்கு நிலவரம் 4/30, இது நேற்று இரவு நான் கடைசியாக பார்த்தபோது 6/** ஆக இருந்தது.

said...

http://www.dinamalar.com/2006aug22/general_tn28.asp

தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, 31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி 20% MBC யிலோ 3804 இடங்கள் காலி 18% SC யிலோ 4569 இடங்கள் காலி,

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

said...

//இரண்டாயிரத்தி சொச்சம் ஆண்டுகள் இடஒதுக்கீட்டால் பாதிக்கப்பட்டவர்கள் பேசுகிறேன் என பல கோடி மக்கள் எழுதமுடியும், இப் பதிவு பேசுவது இடஒதுக்கீடு தேவையா இல்லையா என்பது அல்ல, //

2000 வருஷமாவா இஞ்சினியரிங் காலேஜிலும் மெடிக்கல் காலேஜிலும் மேல்/உயர்சாதிகாரங்க பிற்ப்படுத்தப்பட்டவர்களுக்கு அநீதி இழைத்தார்கள்? இல்லையே குழலி!
அந்த காலத்தில் எல்லாம் திண்ணை பள்ளிகூடம்தான். ஈஸியா இடம் கிடைக்கும். ஒதுக்கீடு தேவைப்படலை.

250 வருஷமாத்தான்.. தொழில் மற்றும் மருத்துவ புரட்சி தோன்றினதுக்கு அப்புறம் தான்.. இந்த காலேஜ் படிப்பெல்லம்.

இந்த பின்னூட்டம் உங்கள் பதிவின் நோக்கத்தை திசை திருப்புவதற்க்கு அல்ல.

-வேல்-

said...

தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது, 31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி 20% MBC யிலோ 3804 இடங்கள் காலி 18% SC யிலோ 4569 இடங்கள் காலி,

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

Students dont want to join colleges that lack infrastructure
or where fees is not worth the
degree awarded.It is a problem
of supply in excess of demand.
There are poor in all castes
and the deserving poor in FCs
are badly affected as the possibility of a poor BC/OBC/
SC/ST student getting financial
assitance from state is higher than
that of a poor FC student.
In case of SCs they are not only
poor but are also marginalised.

said...

வேல்பாண்டி, இப்போ ஒருத்தவங்க நிலத்தை பிடிச்சிக்கிட்டாங்க, அந்த நிலத்தில் ஆற்று தண்ணி, உரம் எல்லாம் அவங்களுக்கு மட்டும்தேன் அப்படினு கெவர்மெண்ட்டு சட்டம் போட்டு வளைச்சிக்கிட்டாங்க, மண்ணை நல்லா பதப்படுத்தனாங்க, பக்கத்து நெலம் கரம்பா கெடக்கு, அவனும் வெவசாயம் செய்ய கெளம்பினப்ப இல்லல்ல வெவசாயம் உனக்கு இல்லை, எனக்கு மட்டும்தேன்னு கடவுள் சொல்லியிருக்காருனு பயமுறுத்தினாங்கோ... அப்புறம் ஒரு நாள் நானும் வெவசாயம் செய்வோம்னு கெளம்பினாங்க கரம்பா(தரிசா) கெடந்த நெலத்துக்காறங்க, இங்க நெலம் இன்னும் கல்லு மண்ணா கெடக்குது, ஆனா அந்த நெலம் வெவசாயத்துக்கு தயாரா இருக்கு, இப்போ கரம்பா கெடந்த நெலத்தை "தரிசு நில மேம்பாட்டு திட்டம்"னு தரிசு நெலத்துக்கு தண்ணிக்கும், பாக்டம்பாஸ் 20-20-0-15 ஒ(உ)ரத்துக்கு முன்னுரிமை கொடுத்தா எலே அவனுக்கு மட்டும் பாக்டம்பாஸ் 20-20-0-15 ஒரத்துக்கு முன்னுரிமை கொடுக்குற ஒரமெல்லாம் இப்போதானே வந்துச்சினு கேட்டா நீங்க சிரிக்க மாட்டிங்க அது மாதிரினு வச்சிக்கிங்களேன்....

வேல்பாண்டி எங்கிட்ட சொன்ன மாதிரி எப்போ கிரீமிலேயர் பற்றி எழுதப்போறிங்க:-)

said...

//There are poor in all castes
//
ஆமோதிக்கின்றேன்...

//and the deserving poor in FCs
are badly affected as the possibility of a poor BC/OBC/
SC/ST student getting financial
assitance from state is higher than
that of a poor FC student.
In case of SCs they are not only
poor but are also marginalised.
//
அப்படியிருந்தும் ஒதுக்கப்பட்ட சதவீத இடங்கள் அதிகமென்றாலும் OCயில் எண்ணிக்கையளவில் காலியிடங்கள் குறைவாகவே உள்ளனவே, ஆனால் BC,MBC,SC ஒதுக்கீட்டில் இறங்குவரிசையில் இருக்கும் ஒதுக்கீட்டு சதவீதம் ஆனால் காலியாக கிடக்கும் இடம் ஏறு வரிசையில், இதற்கு காரணம் என்ன? OCயிலும் கூட காலியிடங்கள் உள்ளதால் அங்கே தகுதியானவர்கள் இல்லையென்று அர்த்தமா? அதே போல் தானே மற்ற பிரிவில் உள்ளவர்களும்.

ரவி நான் சொல்லவந்ததை புரிந்து கொள்ள முயற்சியுங்கள்...

said...

//வேல்பாண்டி எங்கிட்ட சொன்ன மாதிரி எப்போ கிரீமிலேயர் பற்றி எழுதப்போறிங்க:-) //

உங்கள மாதிரியெல்லாம் தகவல்களை சேகரித்து எழுதனுமென்றால் மாச கணக்கில் ஆகும். அதனால் நான் பின்னூட்டமிடுவதில் திருப்தி கொள்கிறேன்.


-வேல்-

said...

//அதனால் தான் O.C.யில் கிட்டத்தட்ட எல்லா இடங்களும் அவர்களுக்கு கிடப்பது அந்த எக்ஸ்ட்ரா தெறமையால//

ஹா ஹா ஹா ஹே ஹே
இங்க பாருங்க

http://www.nellaimedicos.com/blog/bruno/2005/07/merit-list-that-shows-merit.html

said...

//Have you wondered why TN state board students score poorly in IIT JEE, CAT or Gate, compared to CBSE students? //
Can you give a proof that they score poorly in GATE.
Obviously not.

And can you show ONE CBSE Student who has scored Rank below 1000 in IIT JEE WITHOUT COACHING CLASS.

IIT JEE rank has nothing to do with State Board or CBSE. It is all related to the coaching they attend

A lot of State Board Students have entered into IIT JEE in the past 5 years.

By the way, I scored a rank in PMPD (and so did a lot of my classmates) and we studied under state board only... (Of course the postal coaching i took for IIT JEE helped in the Physics and Chemistry part)

said...

//Let us not see every thing from TN perspective and gloat ourselves; //

So you accept that Reservation has worked in TN.... Great !!! (and thanks for telling the truth)

//ஏன் தமிழ் நாட்டை உதாரணமா எடுத்துக்கக்கூடாதா? அதில் என்ன தவறு. இடஒதுக்கீட்டுக்கு முன்னோடியே தமிழ்நாடு தானே. அதனால் தமிழ்நாட்டை வைத்துப்பேசுவதே முறையும் கூட. //

இது கூடவா உங்களுக்கு புரியல. ஐயோ பாவம்.... இடஒதுக்கீட்டுக்கு முன்னோடியே தமிழ்நாடு தானே. அதனால் தமிழ்நாட்டை வைத்துப்பேசினால் இடஒதுக்கீடு நன்றாக வேளை செய்துள்ளது என்று தெளிவாக தெரியுமே....

//இதை சரிக்கட்ட அரசு 100 இடங்களை 138 ஆக கூட்டியது.//
கூட்டவில்லை. See http://nellaimedicos.org/bruno/2006/05/30/69-reservation-in-tamil-nadu/

//When a SC candidate with top Open competition ranking moves into SC category to get the college/course he wants, a BC or MBC would benefit if he was below him in the rank. Why only look at FCs and crib?//
I have answered this question in my blog. The same is true of a BC Student moving to quota and benefitting SC Student.

//தற்போது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் GT என குறிப்பிடுவதாக அறிகிறேன். ஆனால் மேற்கண்ட குழறுபடி அங்கும் தொடர்கிறதா? எனத் தெரியவில்லை//
அங்கு வேறு குளறுபடி (Going to the other extreme and over shooting)1999ல் இருந்தது. இப்பொழுது சரியாகிவிட்டது. எனது பதிவை பார்க்கவும்.

// ஆதலால் எனக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்க வில்லை. (என்னுடையது 285)//
Reason given for not getting the seat !!!! He would not have got the seat even if he was MBC in 2001 when the cut off was very high

// தாழ்த்த பட்ட மாணவர்களுக்கு ஒதுக்கிய இடங்கள் எல்லாம் நிரப்ப படாமலே வீணாய் போகிறதே?//
ஒரு ம....ம் (Sorry Kuzhali) கிடையாது. This is a lame excuse....
//.நீங்கள் வருடா வருடம் கவுன்சிலிங்கில் கலந்து கொள்கிறீர்களா.. //
Engineering seats are vacant across ALL Categories in Tamil Nadu. There are colleges were just 5 people choose this year.

//இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் MBCயைவிட குறைவு. //
Excellent !!!

// அந்த காலத்தில் எல்லாம் திண்ணை பள்ளிகூடம்தான். ஈஸியா இடம் கிடைக்கும். ஒதுக்கீடு தேவைப்படலை.//
ஏகலவ்யன் (hope this is the correct spelling for Ekalavya) யாருங்கோ.... யாராவது கொஞ்சம் சொல்லுங்களேன்....

said...

http://marchoflaw.blogspot.com/2006/10/blog-post_20.html