கடவுள் சிலையும் பெரியார் சிலையும்

ஏற்கனவே திராவிட தமிழர்கள் வலைப்பதிவில் வெளியான பதிவு, இங்கே மீண்டும் மீள்பதிவாக... ம்.. இன்னும் எத்தனை முறை மீள்பதிவு செய்ய வேண்டுமோ தெரியவில்லை, ஏனெனில் பெரியார் அவர்கள் சிலைகள், நினைவு நாள் கொண்டாடுதல் பற்றி என்ன சொன்னார் என்று தெரியாமலேயே உளறித்தள்ளும் சிலர் அவர்களும் உளறி எல்லோரையும் குழப்பும் வரை இவைகள் மீள்பதிவாக வந்து கொண்டேயிருக்கும்....

பிள்ளையார் சிலையை உடைத்த பெரியாருக்கு சிலையா! கடவுள் படங்களை வீசி எறிந்தவருக்கே உருவப்படங்களா? நினைவு நாளா? உருவப்படங்கள் நினைவு நாட்கள் பற்றி பெரியார் பேசியது இங்கே தரப்பட்டுள்ளது

இந்த கட்டுரை கீற்று இணைய தளத்திலிருந்து எடுத்து இங்கே தரப்பட்டுள்ளது, கீற்று இணையதளத்திற்கு நன்றி

நினைவுநாள் - படத்திறப்பு ஏன்?


எத்தனையோ பேர் சாகிறார்கள். ஏதோ இரண்டொருவர்கட்குத்தான் நாம் நினைவு நாள் கொண்டாடுகிறோம். செத்துப் போனவர்களின் பணத்தை உத்தேசித்தோ, படிப்பை உத்தேசித்தோ, அதிகாரம், பட்டம், பதவி, அறிவு, சாமர்த்தியம் முதவியவைகளைப் பற்றியோ நாம் எவருக்கும் நினைவு நாள் கொண்டாடுவதில்லை. இவைகள் காரணமாக நாம் எவரையும் போற்றுவதுமில்லை; துதிப்பதுமில்லை.

பணத்தால் ஒரு மனிதனை மதிப்பதென்றால், ரிசர்வ் பாங்கியைத்தான் மதிக்க வேண்டும். படிப்பால் ஒரு மனிதனை மதிப்பதென்றால் பெரிய லைப்ரரியைத் தான் மதிக்க வேண்டும். அறிவால் ஒருவனை மதிக்க வேண்டுமானால் 'என்சைக்ளோபீடியா' ரேடியோ முதலியவைகளை மதிக்க வேண்டும். இப்படி அனேகவற்றை - உயிரில்லாதவைகளிலும் காணலாம். ஆதலால், நாம் மதிப்பது, பேசுவது, நினைவுறுவது என்பவையெல்லாம் இவைகளை உத்தேசித்தல்ல.

மற்றெதற்காக என்றால், மனிதர்களாக - மனிதத்தன்மை உடையவர்களாக இருந்து, மறைந்த மனிதர்களுக்காக இரங்கி, அவர்களது மனிதத் தன்மையை எடுத்துக் கூறி, மற்றவர்களையும் மனிதர்களாக ஆக்குங்கள் என்பதற்காகவேயாகும்.

அப்படியானால், செத்துப் போன மற்றவர்களும், இப்போது இருக்கும் மக்கள் எல்லோரும் மனிதர்கள் அல்லவா என்று கேட்பீர்கள். அவர்களையெல்லாம் மனிதர்கள் என்று சொல்லுகின்றோமே ஒழிய, மற்ற ஜீவபிராணிகளுக்கும் மனிதர்களுக்கும் பேதம் காணக்கூடிய தன்மையுடைய மனிதர்கள் என்று சொல்லுவதற்குரியவர்களாக மாட்டார்கள். பேதம் என்றால் உருவ பேதம் அல்ல. நடப்பிலும்! நடப்பால் ஏற்படும் பயனிலும் உள்ள பேதமேயாகும்.

உலகிலுள்ள எல்லா ஜீவ பிராணிகளுக்கும் - மனிதர்கள் என்பவர்கள் உட்பட, உருவத்தில் பேதம் இருந்தாலும், குணத்தில் பேதம் இருந்தாலும் நடப்பும் பயனும் அனேகமாய் ஒன்றுதான்.

அரசர்களை மதிக்கிறோமா? பெரிய மனிதர்களை, ஆழ்வார்களை மதிக்கிறோமா? அல்லது தெய்வங்கள் என்பவர்களையாவது மதிக்கிறோமா? மடாதிபதிகள் அல்லது மகான்கள் அல்லது ஆச்சாரியார்களை மதிக்கிறோமா? இவர்களை எல்லாம் அவரவர்களிடத்தில் சம்பந்தமும், தனிப்பட்ட நலமும் பெறுகிறவர்கள் தான் மதிப்பார்கள்; மற்றவர்கள் ஏன் மதிப்பார்கள்?

ஏன் என்றால், வியாபாரம் செய்து இலாபம் சம்பாதிப்பவனை யார், எதற்காக மதிப்பார்கள்? ஓட்டல்காரன், 'அன்னதான பிரபு' ஆவானா? சம்பள உபாத்தியாயர், 'குருநாதன்' ஆவானா? தாசி, 'காதலி' யாவாளா? என்பது போல்தான் தன் தன் நலத்துக்கு - தன் தன் பொறுப்புக்காகக் காரியம் செய்யும் எவனுடைய காரியமும் - எப்படிப்பட்டதாயினும், அது சாதாரண ஜீவ சுபாவமே ஒழிய போற்றக்கூடியதாகாது. அப்படியல்லாத தன்மை, செய்கை, வாழ்க்கை கொண்ட மனிதர்கள் -அதாவது தன்னைப் பற்றிய கவலை இல்லாமல் பிறருக்கு என்று தன்னை ஒப்படைத்துத் தொண்டாற்றுகிறவன் மதிக்கப்பட்டே தீருவான். அத் தொண்டால் பாதகமடையும் தனிப்பட்டவர்கள், தனிப்பட்ட வகுப்புக்கள், கும்பல்கள் அவனை மதிக்காமல் இருக்கலாம்; அவமதிக்கலாம்; அது பொதுவாய் மதிக்காததாகாது.

ஆகவே, நாம் நினைவு நாள் கொண்டாடும் மக்களை, உண்மையான மனிதர்களாய்க் கருதி, அவர்களது மனிதத் தன்மையை மதித்து, மற்றவர்களும் அந்தத் தன்மைக்கு வரவேண்டுமென்கிற ஆசைக்காக, எடுத்துக்காட்டுக்காக, பிரச்சாரத்திற்காகக் கொண்டாடுகிறோம்.

('குடிஅரசு' 14-4-1945)

நாம் உருவப்படத் திறப்பு விழா நடத்துவது என்பது பூசை செய்யவோ, தேங்காய், பழம் ஆராதனை செய்து, விழுந்து கும்பிட்டுப் பக்தி செய்து, நமக்கு வேண்டியதைக் கோரிப் பிரார்த்தனை செய்யவோ, நாம் செய்த - செய்யும் பாவத்தை மன்னிக்கும்படி கேட்கவோ அல்ல என்பதை முதலில் தெரிவித்துக் கொள்ளுகிறேன். அப்படிப்பட்ட சக்தி இருப்பதாகக் கருதிக்கூட நாம் எந்தப் படத்திறப்பு விழாவும் செய்வதில்லை. மற்றும், எப்படிப்பட்ட படத்திற்கும் பூசை செய்யும்படியோ, கோவில்களிலோ தேர், இரதம், விமானம், சப்பரம் ஆகியவைகளிலோ வைத்து ஊர்வலம் ஆராதனை செய்யும்படி காலித்தனம் செய்வதற்கோ அல்ல.

ஆனால் மற்றெதற்கு என்றால், மனித சமூக நலனுக்கு - சுயநலமில்லாமலும், மற்றவர்களிடமும் எவ்விதக் கூலியோ, புகழோ, பிரயோஜனமோ பெறாமலும், தன் முயற்சியால், தன் பொருளால், தன் பொறுப்பென்று கருதித் தொண்டாற்றி வந்த பெரியார்களின் குணாதிசயங்களையும் தொண்டையும் எடுத்துச் சொல்வதன் மூலம், மற்றும் பலரும் அக்காரியத்தைப் பின்பற்ற வேண்டும் - பின்பற்ற மாட்டார்களா என்பதற்காகவேதான். மனித சமூக நலனுக்குப் பிரதிப் பிரயோஜனம், கூலி இல்லாமல் மக்கள் பாடுபட வேண்டும் என்கின்ற மேலான குணத்தைப் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சாதனமாகவேதான் இக்காரியத்தைச் செய்கிறோம்.

உதாரணமாக, கிரீஸ் தேசத்துச் சாக்ரடீஸ் என்பவர் - எந்தக் காரியத்தையும் அறிவால் ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும் என்று சொன்னதற்காக விஷம் கொடுத்துக் கொல்லப்பட்டார். கவுதம் புத்தர் என்பவர் - ஆரியப் புரட்டுகளை எதிர்த்ததற்காக எவ்வளவோ கஷ்டப்பட்டார். இயேசு கிறித்து விக்கிரக ஆராதனை, கோவில் பூசை முதலியவைகளை எதிர்த்துப் பிரச்சாரம் செய்ததற்காகச் சித்ரவதை செய்து கொல்லப்பட்டார் முகமது நபி அனேக மூடப்பழக்க வழக்கங்களையும் பல தெய்வ உணர்ச்சியையும் பெண் கொடுமையையும் எதிர்த்துப் பல நல்ல கொள்கைகளைப் பிரச்சாரம் செய்ததற்காகப் பல முறை சங்கடப்படுத்தப்பட்டார். அப்படிப்பட்டவர்களும் மற்றும் அது போன்ற பல புதிய அபிப்பிராயம் சொன்னவர்களும் அவர்களது ஆயுள் காலத்தில் இதுபோல் எவ்வளவு துன்பப்படுத்தப்பட்டு, எவ்வளவு கஷ்டப்படுத்தப்பட்டு, எவ்வளவு தொல்லைப்படுத்தப் பட்டு இருந்தாலும் இன்று அவர்கள் கோடானுகோடி மக்களால் அவர்களது அபிப்பிராயங்களோடு மதிக்கப்படுகிறார்கள்; கோடிக்கணக்கான பேர்களால் பின்பற்றப்படுகிறார்கள்.

அது போலவே தான், நாங்களும் இன்று எங்கள் அபிப்பிராயங்கள் எவ்வளவுதான் வெறுக்கப்பட்ட போதிலும், பாமர மக்களாலும், சுயநலச் சூழ்ச்சிக்காரர்களாலும் எவ்வளவுதான் வெறுக்கப்பட்டுத் தொல்லைகள் விளைவிக்கப்பட்டு அல்லல்பட்டாலும், பிற்காலத்தில் எங்கள் தொண்டு மக்களுக்கு மிக்க பயன் தரக்கூடியதாயும் பாராட்டக்கூடியதாயும், மக்களை ஞானவழியில் நடத்தக் கூடியதாயும் இருக்கும் என்கின்ற நம்பிக்கை யுடையவர்களாகவே இருக்கிறோம். இல்லாவிட்டால் இவ்வளவு தொல்லைகளுடன் எங்களுக்கு எவ்விதத்திலும் சுயநலமற்ற இந்தத் தொண்டைப் பெரும்பான்மையான மக்களுடைய இவ்வளவு வெறுப்பிற்கிடையில் துணிந்து ஆற்ற முனைந்திருக்க மாட்டோம்.

நாங்கள் பாமர மக்களால் வெறுக்கப்படுவதினாலேயே எங்கள் தொண்டின் மேன்மையை உணருகிறோம். பாமர மக்கள் மதித்துப் பக்தி செலுத்திப் புகழும்படியாக நடந்து கொண்டவர்களுடைய எப்படிப்பட்ட தொண்டும், அபிப்பிராயமும் அவர்களது வாழ்நாளுக்குப்பின் பயன்பட்டதாக எங்களுக்கு ஆதாரமே கிடைக்கவில்லை. அப்படிப்பட்டவர்களால் மனித சமூகம் திருத்தப்பாடு அடைந்ததாக எவ்வித ருசுவும் இதுவரை கிடைத்ததில்லை.

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் 'தெய்வீகம்' கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

இன்று உண்மையில் மனித சமூகத்திற்கு ஏதாவது புதிய மாறுதல் உணர்ச்சி அல்லது புரட்சிகரமான சுதந்திரம், விடுதலை, சமத்துவம், சுயமரியாதை என்பதான உணர்ச்சி தோன்றி இருக்குமானால் - அவை அனைத்தும் ஒரு காலத்திலோ நேற்றோ இன்றோ -கல்லடிபட்டு, கொல்லப்பட்டு, கையடிபட்டு, தொல்லைப்பட்டு உயிர் துறந்த, உயிர் வாழ்கின்ற - வெறுக்கப்பட்ட மக்களாலே தான் என்பது ஆராய்ந்து பார்க்கின்ற எவருக்கும் சுலபத்தில் புலப்படும்.

அப்பேர்ப்பட்டவர்கள் எல்லாம் மக்களின் தன்மை உயர வேண்டுமென்று கருதித் தொண்டாற்றியவர்களே ஒழிய, மக்கள் தங்களைப் போற்றிப் புகழ்ந்து பூசிக்க வேண்டுமென்று கருதியவர்கள் அல்லர். ஆதலால் அப்பெரியவர்களை ஞாபகப்படுத்தி - அவர்களின் தன்மையை மற்ற மக்கள் உணர்ந்து, அம்மாதிரியான உள்ளம் பெற்று சமூகத்துக்குத் தொண்டாற்ற முற்படவேண்டும் என்பதற்காகவே அவர்களது உருவப் படத் திறப்பு விழாக்கள் என்ற பெயர் வைத்து இவற்றை எடுத்துக் கொள்கிறோம்.

('குடிஅரசு' 10-1-1948)

13 பின்னூட்டங்கள்:

said...

'நொண்டிக் குதிரைக்கு சறுக்கினது சாக்காம்' அப்படீன்னு ஒரு பழமொழி நம்ம ஊரு பக்கம் உண்டு தெரியும் தானே குழலி?!

said...

மாயவரத்தான் எது நொண்டி குதிரை, எங்கே சருக்குச்சி, என்ன சாக்கு? ஒன்னுமே புரியலையே, வேற எங்கயாவது பின்னூட்டம் போட நினைச்சி இங்கே போட்டுட்டிங்களா? இல்ல நடிகர் கம் மயிலாப்பூர் எம்.எல்.ஏ சேகர் நாடகத்தில் "தூக்கணாங்குருவியை தூக்கிக்கிட்டு துலுக்காணம் தூங்கிக்கிட்டே போனானாம்" னு பழமொழி என்னடானா சும்மானுவாங்களே அது மாதிரி சும்மா லுலுலாயிக்கு பின்னூட்டம் போட்டு குழப்ப நினைச்சிங்களா? தெளிவா சொல்ல்லுங்க சொம்மா ஒங்க தலைவர் மாதிரி குழம்பக்கூடாது

said...

சபாஷ்! சரியான சப்பைக்கட்டு....

காந்தியால் சமூகத்துக்கு பயன் ஏதும் இல்லை என்றும், முகம்மது மூடபழக்கத்தையும், பெண் கொடுமையும் எதிர்த்தார் என்பதும்....

ஈ.வே.ரா. அவர்களின் பேச்சுக்களில் அதிகமாக ஆதாரம் இருக்காது என்று மறுபடியும் சுட்டிக்காட்டியதற்கு மிக்க நன்றி

said...

இது சிவசேனாவின் வேலையாம் ..

said...

EVR asked money for all his services and speches. Hope he didnot do any any service at free of cost. Where all the money went...

He was not taking bath for days.
Also I heard that he was interest to clean his teeth. Is there any reason he lived to help anyone like that.

Why did he married maniammai on that old age...Even though he was against the elderly marriages.

Please answer...

Aathigan

said...

நன்றி குழலி!

பெரியாருக்கு சிலையா என சிலாகித்து ஒரு அனாமதேயம் எனது http://periyaarr.blogspot.com/2006/08/blog-post_30.html பதிவில் பின்னூட்டமிட்டது. திரும்ப திரும்ப சொன்னதை சொல்லி சிலாகிக்கிற இதுகள் உங்களது பதிவை படித்தாவது திருந்தட்டும்.

said...

நாமறிய ஒரு காலத்தில் திலகர் புகழப்பட்டார்; பெசண்ட் அம்மையார் புகழப்பட்டார்; காந்தியும் புகழ்ப்படுகிறார். சரித்திரத்தில் எத்தனையோ ஆச்சாரியார்கள், நாயன்மார்கள், ஆழ்வார்கள், சுவாமிமார்கள் எனப்பட்ட எத்தனையோ பேர் புகழப்பட்டதாகவும் பார்க்கிறோம். இவர்களில் பலர் 'தெய்வீகம்' கற்பிக்கப்பட்டார்கள்; பலர் தெய்வங்களாகவும் கருதப்பட்டிருக்கிறார்கள். ஆனால் இவர்களெல்லாம் ஒரு காதொடிந்த ஊசியளவு பயன் மக்களுக்கு ஏற்படுகிறதா? ஏற்பட்டதா? ஏற்படும் என்கின்ற குறியாவது காணப்படுகின்றதா? இவர்கள் எல்லாம் புராணங்களுக்குப் புதிய உரை எழுதுகிற உரையாசிரியர்கள் போல் தோன்றி, பாமரர்களுடைய பக்திக்கும் பூசைக்கும் ஆளாகி, முட்டாள் தனத்துடனும் அல்லது பாமர மக்களை ஏமாற்றிப் பொய்ப் புகழ் பெற்று வருகிறோம் என்கின்ற உணர்ச்சியுடனும் தானே செத்தார்கள் - சாகின்றார்கள் - சாகப்போகின்றார்கள் என்று சொல்ல வேண்டி இருக்கிறதே தவிர, கண்கண்ட பயன் என்ன என்று பாருங்கள்!

Tilak,Gandhi and Besant too
contributed to the Indian
society.Let society and
history be the judge.
Periyar perhaps was so arrogant
that he could not accept others'
contributions.This whole piece
is nothing but a self-propaganda.

said...

குழலி..புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்.. புரியாத மாதிரி நடிக்கிற ஆளுங்களுக்கு புரிய வைக்க முடியாது. புரியுதா?!

said...

அவாள் எல்லாம் வந்து உளருவதைப் பார்த்தால், நாமும் பெரியாராக மாறவேண்டும் போல.

said...

சிலைகளுக்கு செருப்பு மாலை போடுவது, சிலையில் உள்ள நபருக்கு ஒவ்வாத கொள்கைகள் சின்னங்களை வைப்பவர்களின் நோக்கம் அவமானபடுத்துவது என்பதால் அதனை மக்களால் எளிதாக எடுத்து கொள்ள முடியவில்லை.

ஆனால் இதே போன்று தான் முன்னர் இந்து சமய சிலைகள் உடைக்க பட்ட போதும், மத சின்னங்கள் அவமான படுத்த பட்ட போதும் இருந்திருக்கும் என்ற எண்ணத்தை தான் மாயவரத்தான் வெளிப்படுத்தி இருந்தார் சில நாட்கள் முன்னர்.

said...

மாயவரத்தான் மிகச் சரியாகச் சொல்லியிருக்கிறார்

//குழலி..புரியாதவங்களுக்கு புரிய வைக்கலாம்.. புரியாத மாதிரி நடிக்கிற ஆளுங்களுக்கு புரிய வைக்க முடியாது. புரியுதா?!//

ஜெயராமன், ஆத்திகன், ரவி சீனிவாசு, பரமபிதா

புரியுதா???

said...

தமிழ் மன்னர் இராவணனை பொம்மை உருவமாக செய்து, இழிவு படுத்தி, தீயில் கொழுத்தி மகிழுகிற கேவலமான ஆரிய லீலா கூத்து நடத்துகிற போது அவாள்களுக்கு இவை விளங்கவில்லை? சாதி அடிமைத்தனத்தை புகுத்தி மக்களை அடுக்கு முறைகளில் வைத்து ஒருவனை இன்னொருவனுக்கு எதிராக சாணக்கியத்தனமான அடிமை முறையை உருவாக்கி போது புரியவில்லை? இன்றும் இந்த சாதி மட்டும் தான் கருவறையில் நுழையலாம், இந்த சாதி மட்டும் தான் பூசை செய்யலாம் என்கிற போது புரியவில்லை?

இந்த ஆதிக்க ஆரியவெறியை அடக்க பெரியார் எடுத்த போராட்டங்களுள் ஒன்று இராமனுக்கு செருப்பு மாலை. எல்லோரும் இந்து என்று சொல்பவர்கள் சொல்லுங்கள் எல்லா சாதியினரும் இந்து என்றால் ஏன் எல்லா சாதியினரும் அர்ச்சகர் ஆக தடை? ஆடு கோழி பலியிட்டு வணங்க ஏன் தடை? ஆரியர்களுக்கு நீதி ஒன்று, மற்றவர்களுக்கு இன்னொன்றா? இதை தான் எதிர்த்தார் பெரியார்.

பெரியார் சிலைக்கு சந்தனம் பூசியது சரி என்பவர்கள் சொல்லுங்கள் இத்தனை வருடங்களாக காத்திருந்தது ஏன்? ஆதிக்கத்தின் உச்சகட்டத்தில் ஆரியம் இருந்த வேளைகளில், பெரியார் உயிருடன் இருந்த காலத்தில் இதை செய்யும் துணிவு இருந்ததா? இல்லையே! இந்த விசமிகள் செயலை சப்பைகட்டி உங்களது மனக்குமுறலை வெளிப்படுத்துவது தெரிகிறது.

தேவாலயங்கள், மசூதிகள் என வழிபாட்டுத்தலங்களை இடித்ததும், விவிலியத்தை கிழித்துப் போட்டதும், கிறிஸ்தவ சகோதரிகளை பாலியல் வன்கொடுமை நடத்தியதும், ஒரு கிறிஸ்தவ பாதிரியார் மற்றும் அவரது 2 குழந்தைகளை படுகொலை செய்தது, குஜராத்தில் கருவில் இருந்த சிசுவை கிழித்து தீயில் பொசுக்கியது யார்? இந்த ஆரிய அடிதடி சங்பரிவார, ஆர்.எஸ்.எஸ் கும்பல் தானே!

அந்த வேளைகளில் அந்த மக்களின் மனது எவ்வளவு துடித்திருக்கும்? மதவெறி பிடித்த இரத்தம் குடிக்கிற ஓநாய்களுக்கு இது விளங்கவில்லையா?

தமிழகம் இன்றும் அமைதியாக இருக்க காரணம் பெரியார் விதைத்த பகுத்தறிவு விதையின் பயன்.

said...

குழழி குசும்பு பண்ணூராருங்கோ...................