நீதி வேண்டுமா? பேருந்தை கொளுத்து, கலவரம் செய்....

இவர் மீதான சொத்துகுவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதித்தால் மீண்டும் மூன்று மாணவிகளை உயிருடன் கொளுத்தும் அபாயமிருப்பதாலும் கலவரம் வெடிக்கும் என்பதாலும் குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை செய்கிறோம், மேலும் இவர்கள் மீது எந்த தண்டனை வழங்கினாலும் கலவரம் வெடிக்கும் என்பதால் இவர்கள் எவ்வளவு சொத்து சேர்த்தாலும் கண்டு கொள்ள வேண்டாம்.

பாலியல் உணர்ச்சி என்பது இயற்கையானது. உங்கள் உடையால் தூண்டப்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் ஓரிருமுறை கையை பிடித்து இழுத்தபோது நீங்கள் கத்தி கூச்சல் போட்டிருக்கிறீர்கள். கூச்சல் போடுவது என்பது குற்றம் சாட்டப்பட்டவரின் கோபத்தை மேலும் கிளறக்கூடும் என்பதை அறிந்தும் நீங்கள் மௌனமாகவில்லை. ஆக உங்கள் மீதான பாலியல் பலாத்காரத்துக்கு உங்கள் கூச்சலே முக்கிய காரணம் என்பது கனம் நீதிபதிகளின் முடிவு. when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை உங்களுக்கு இந்த கோர்ட் இலவசமாக வழங்குகிறது. முடியாது எனும்பட்சத்தில் தற்கொலை செய்து கொள்வது தப்பில்லை என்ற கோட்பாட்டை கோடு காண்பிக்க இந்த கோர்ட் விரும்புகிறது.(நன்றி முகமூடி புனுகு பூசாத நீதிபத்திகள் )


இப்படியான தீர்ப்புகள் நீதிமன்றங்களால் வழங்கப்பட்டால் தயவு செய்து யாரும் அதிர்ச்சியடையாதீர்கள், நிச்சயம் யாரும் அதிர்ச்சியும் அடையமாட்டீர்கள், ஆகஸ்ட் 7-ம் தேதி இது மாதிரியான ஒரு வரலாற்று தீர்ப்பு சிதம்பரம் முன்சீப் கோர்ட்டில் வழங்கப்பட்டது. (மொத்தம் மூன்று தீர்ப்புகள் இந்த பதிவில், மூன்றையும் படியுங்கள்)

தீர்ப்பு -1

சிதம்பரம் நடராசர் கோவிலில் சிற்றம்பலத்தில் தேவாரம் பாட கிளம்பிய ஆறுமுகச்சாமியை எதிர்த்து நீதிமன்றம் சென்றது தீட்சிதர் தரப்பு, அப்போது நீதிபதி ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாட இடைக்காலத் தடை விதித்தார், கடந்த 7ம் தேதி அந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, அந்த தீர்ப்பில் கூறப்பட்டதாவது

1.ஆறுமுகச்சாமி சிற்சபையில் ஏறிப்பாடுவதால் நிச்சயம் கலவரம் ஏற்படும்,

2.அதன் மூலம் தீட்சிதர்களுக்கு அளவிட முடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்,

3. கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.

எனவே ஆறுமுகச்சாமியும் மற்றவர்களும் சிற்றம்பலத்தில் பாட விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை முற்றிருதி ஆக்குவதாக தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது. (தகவல் உதவி: ஜீனியர் விகடன்)

சட்டத்தின் முன்பே அனைவரும் சமம் என்றால் தெய்வத்தின் முன் ஏன் எல்லோரும் சமம்மல்ல?, இந்த தீர்ப்பு அரசியலமைப்புக்கு எதிரானது. ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் என நீதிமன்றம் கருதுகிறது, ஆறுமுகச்சாமி பாடினால் யார் கலவரம் ஏற்படுத்துவார்கள்? திமுக, பாமக, கம்யூனிஸ்ட், மனித உரிமைகள் பாதுகாப்பு மையம் போன்றவர்கள் ஆறுமுகச்சாமிக்கு ஆதரவானவர்கள் தானே, அவர்கள் ஆறுமுகச்சாமிக்கு சாதகமாக தீர்ப்பு இருந்தால் எப்படி கலவரம் ஏற்படுத்துவார்கள், எனவே எதிர்தரப்பு தானே கலவரம் செய்ய முனையும், சரி எதிர் தரப்பென்றால் தீட்சிதர் ஆதரவாளர்கள் தானே, அவர்களால் எப்படி தீட்சிதர்களுக்கு அளவிடமுடியாத இழப்பும் நஷ்டமும் ஏற்படும்?

இந்த இடத்தில் ஒரு நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பையும், விமர்சனத்தையும் சுட்டிகாட்ட விரும்புகின்றேன், வீரப்பன் கர்னாடக திரைப்பட நடிகர் ராஜ்குமாரை பணயக்கைதியாக வைத்துக்கொண்டிருந்த நேரத்தில் பெங்களூர், மைசூர் மற்றும் சில மாவட்டங்களில் கடும் பதட்டம் ஏற்பட்டிருந்தது, ராஜ்குமாருக்கு ஏதேனுமென்றால் தமிழர்களுக்கெதிரான பெரும் கலவரம் வெடிக்க கூடிய சூழல், ராஜ்குமார் கொல்லப்பட்டார் என்று கிளம்பும் ஒரு வதந்தி பொறி கூட மாபெரும் வன்முறைய ஆரம்பிக்கும் நிலமை அது, அந்த நேரத்தில் நான் பெங்களூரில் வேலை செய்து கொண்டிருந்தேன், பதட்டத்தின் நிலவரத்தை நேரிலேயே அனுபவித்திருக்கின்றேன், வீரப்பனின் பல கோரிக்கைகளில் ஒன்றாக தமிழ் தீவிரவாதிகள் என்று அறியப்பட்ட 5 பேரை அரசாங்கம் விடுதலை செய்ய கோரிக்கை வைத்தார், அப்போது இவர்கள் விடுதலை செய்யப்படவில்லையென்றால் ராஜ்குமாரை கொலைசெய்துவிடுவதாக வீரப்பன் மிரட்டினார், அது தொடர்பான ஒரு வழக்கில் நீதிபதிகளிடம் தமிழக, கர்னாடக அரசுகள் கலவர சூழல் உள்ளது சிறு பொறியும் பெரும் கலவரத்தை உருவாக்கிவிடும், எனவே இந்த ஐவரின் மீதான வழக்குகளை திரும்பப்பெற்று ராஜ்குமாரை வீரப்பனிடமிருந்து மீட்போம் என்ற போது நீதிமன்றம் கடும் கண்டனத்தை இரண்டு மாநில அரசுகளிடம் தெரிவித்தது,

உங்களால் கலவரத்தை கட்டுபடுத்த இயலவில்லையென்றால் ராஜினாமா செய்யுங்கள், அரசை கலைக்கலாம், கலவரம் நடக்கும் என்பதற்காகவெல்லாம் எந்த வழக்கையும் திரும்ப பெறக்கூடாது என்றனர் நீதிபதிகள்.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படும் சூழல் என்றால் அந்த கலவரத்திற்கு யார் காரணமாக இருப்பார்கள் என்று அறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும், அது முடியாதென்றால் அந்த அரசை கலைக்க பரிந்துரை செய்யலாமல்லவா நீதிமன்றம், ஒவ்வொரு நொடியும் கலவரத்திற்கும், உயிருக்கு பயந்து வெளியே செல்லாமல் கிடைத்ததை தின்று நாட்கள் தள்ளும் சூழல் பெங்களூரில் ஏற்பட்ட போது இருந்ததைவிட கலவர சூழலா நிலவுகிறது? ஆனால் கலவரம் ஏற்படும் என்ற காரணம் கூறி ஒரு அநீதியை சிதம்பரத்தில் அரங்கேற்றியுள்ளது நீதிமன்றம்.

கோவிலின் புனிதம் கெட்டுவிடும் என்றால் என்ன அர்த்தம், அவர்களுக்கு புனிதம் என்றால் நமக்கு அது தீண்டாமை என்பதாகத்தானே அர்த்தம்? என்று நான் இந்த பதிவில் கேட்டதை போல பொங்கியுள்ளார் மனித உரிமை பாதுகாப்பு மன்றத்தின் கடலூர் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜீ.

ஆறுமுகச்சாமி சிற்றம்பலத்தில் பாடுவதால் கலவரம் ஏற்படுமென்று காரணம் கூறி அவரை பாட அனுமதிக்காத நீதிமன்றம், ஆறுமுகச்சாமியை சிற்றம்பலத்தில் பாடவிடவில்லை என்பதால் நாற்பது பேருந்துகளை கொளுத்தி, கலவரம் செய்தால் நீதிமன்றம் ஆறுமுகச்சாமியை பாட அனுமதிக்குமா?(தலைப்பை கொண்டுவந்தாயிற்று இந்த பத்தியில்) இதைத்தான் இந்த தீர்ப்பின் மூலம் சுட்டிக்காட்ட விரும்புகிறதா நீதிமன்றம்.

இந்த பிரச்சினைக்காக சட்டமன்றத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் பண்ருட்டி சட்ட மன்ற உறுப்பினர் திரு.வேல்முருகன் குரல் எழுப்பியுள்ளார்.






தீர்ப்பு -2


இந்தியாவின் புனித பசு நீதிமன்றங்கள் தமிழக அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின் போது நடந்து கொண்டதற்கும், ஆதிக்க உயர் சாதி வெறி பிடித்து இடஒதுக்கீட்டை எதிர்த்து வேலைநிறுத்தம் செய்த எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொல்லி நடந்து கொண்ட முறைகள் (முழு விபரம் இங்கே) இருக்கும் போது மீண்டும் ஒரு தீர்ப்பு, தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்திற்கு சம்பளம் வழங்க வேண்டாமாம் என தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது, வேலை நிறுத்த காலத்திற்கு வேலை இல்லை, சம்பளம் இல்லை (No Work, No Pay) என்ற அடிப்படையில் சம்பளம் வழங்கத்தேவையில்லை என்று தீர்பள்ளித்துள்ளது, தீர்ப்பு விபரம் இன்றைய தினமலரில், இந்த எழவு No Work, No Pay என்ற அடிப்படை வேலை நிறுத்தம் செய்து நோயாளிகளை கொன்ற உயர் ஆதிக்க சாதி வெறி கொண்ட எய்ம்ஸ் மருத்துவர்களுக்கு வேலை செய்யாத நாட்களுக்கு சம்பளம் வழங்க சொன்னபோது .யிர் பிடுங்க சென்றிருந்ததா?

தீர்ப்பு -3

யார் வேண்டுமானாலும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்திற்கு நீதிமன்றம் தடைவிதித்ததாக செய்தி.நெட் வலைப்பதிவில் கண்டு பின் டைம்ஸ் ஆஃப் இன்டியாவிலும் படித்த போது சட்டத்தின் முன்னும் தெய்வத்தின் முன்னும் அனைவரும் சமம் என்பது எத்தனை பெரிய பொய்யாக உள்ளது.


நியாயங்களும், நீதிகளும், உரிமைகளும், சம உரிமையும் நேர் வழியிலும், அறவழியிலும் கிடைக்காத போதே வன்முறையால் அவைகளை அடைய முனைகிறார்கள் என்பது வரலாறு

சமூகம் அதன் தவறுகளை அவ்வப்போது சரி செய்து கொள்ள வேண்டும் இல்லையென்றால் அதன் ஒவ்வொரு தவறுக்கும் என்றேனும் மிகப் பெரிய விலையை தர நேரிடும்.

நன்றி: ஜீனியர் விகடன் படங்கள் உதவி

23 பின்னூட்டங்கள்:

Anonymous said...

எல்லா வழக்குகளிலும் ஒரே மாதிரியான அப்ரோச் தான் வேண்டும் என்று எதிர்பார்க்கிற ஆசாமியா நீங்கள்? அடடே, சூப்பர் திங்க்கிங் போங்கள். இதே ரீதியில் பழசையெல்லாம் கிளப்பினால் எங்களை மரம் வெட்டி என்கிறார்கள் என்று புலம்பல் போட்டு மேலும் சில அல்லக்கைகளையும் இழுத்து ஒன்றுக்கும் உதவாத கூப்பாடு போடுவீர்கள். பாவமாக இருக்கிறது வரவர உங்களைப் பார்த்தால். இப்படி .யிர், தயிர் என்று புலம்பிக் கொண்டேயிருங்கள். காலம் பூராவும் இப்படி தான் புலம்ப முடியும் உங்களால். வேறு எந்த ம.ரையும் பிடுங்க முடியாது.

fhygfhghg said...
This comment has been removed by a blog administrator.
Anonymous said...

ஒவ்வொரு சாதிக்கும் ஒரு அப்ரோச் வேண்டும் என்கிறார் இந்த அனானி.சூப்பரபு.

அருண்மொழி said...

நீதி வேண்டுமா? Simple way.

உடனே கடைக்கு ஓடு. வெள்ளை நூல்கண்டு வாங்கு. அதை திரி. வசதியாக மாட்டிக்கொள். உனக்கு கண்டிப்பாக அவாள் கோர்ட்டிள் நீதி கிடைக்கும்.

The irony is - the name of the judge who gave the verdict in chidambaram is ambedhkar.

குழலி / Kuzhali said...

//The irony is - the name of the judge who gave the verdict in chidambaram is ambedhkar.//
பதிவை எழுதி முடித்துவிட்டு ஏதோ ஒன்று எழுத நினைத்தது மறந்து விட்டதே என நினைத்தேன், அது இது தான்...

நன்றி

Anonymous said...

அருண்மொழி, மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தாலே தெரியாதா என்ன. நீங்க என்னதான் திரி வாங்கி போட்டுகிட்டாலும் உங்க மூஞ்சி காட்டி கொடுத்திடாதா? வேற எதாச்சும் இருந்தா ட்ரை பண்ணு.

Anonymous said...

நீதி வேண்டுமா? மரத்தை வெட்டு என்று எழுதுவீர்களா?

Anonymous said...

//The irony is - the name of the judge who gave the verdict in chidambaram is ambedhkar. //

ஹி...ஹி.... ஐயோ இத யாராவது சொல்லிட்டா நம்ம நெலம என்ன ஆறதுனு ஒரு பயம், ஏன்னா இந்த ஜல்லி இருந்தா தான நம்ம ஜாதில இருக்கற ஏழைய ஏழையா வெச்சி நாம குளிர் காய முடியும், அதயும் புடிங்கிட்டா என்ன பண்ணறது

அருண்மொழி, இதுக்கு பேரு தான் எரிச்சல்.... ரொம்ப வயறு எரிஞ்சா அல்சர் தான் வரும், பாத்து....

Pot"tea" kadai said...

அய்யய்யோ அய்யய்யோ
கண்டம்டு ஆப் கோர்ட்டு
கண்டம்டு ஆப் கோர்ட்டு

"தேவாரம் பாடினா புனிதம் கெடும்"னு எந்த ஐபிசி ல எழுதிருக்கு? ஆனா திருட்டுப் பசங்க பூசை பண்ணா கெடாது.
நீதிபதி "அம்பேத்கர்" பத்தி சிரிப்பு தான் வருது...இதுக்கு மேல பேசனா கண்டம்டு ஆப் கோர்ட்டு.

பேக்டரி கேட்ல நின்னு வேலை நிறுத்தம் பண்ணக்கூடாது.ஆனா பூணூல் போட்டுன்டு உள்ளயிருந்தே உயிர்களைக் கொன்னுடுங்கோ...இதுக்கு மேல பேசினா கண்டம்டு ஆப் கோர்ட்டு.

அதெப்படி...தெய்வத்துக்கு தேவ பாசை தானே புரியும்...அதுவும் சூத்திரனுக்கோ சத்திரியனுக்கோ சுட்டுப் போட்டாலும் வேதம் வராது...அவனெப்பிடி அர்ச்சனை பண்ண முடியும்.இதுக்கு மேல பேசினா கண்டம்டு ஆப் கோர்ட்டு.

நாளை சுதந்திர தினமாம்...அடத்தூ!

அருண்மொழி said...

//அருண்மொழி, மொச புடிக்கிற நாய் மூஞ்சிய பாத்தாலே தெரியாதா என்ன.//

ஏன்னா ஒரு "ஸ்வாகா" ஸொன்னா பத்தாதா. இல்லன்னா உஞ்சவிருத்திகள் பிச்சை எடுக்கும் போது ஏதோ ஸொல்வாளே (என்ன எழவுடா இது, ஞாபகம் வந்து தொலையமாட்டேன் என்கிறது- help please). அத்த ஸொல்லி தப்பித்துக்கொள்ள வேண்டியதுதான்.

குழலி / Kuzhali said...

//நீதி வேண்டுமா? மரத்தை வெட்டு என்று எழுதுவீர்களா?
//
கண்டிப்பாக எழுதலாம் தப்பில்லை என்றே தோன்றுகின்றது... 'மனு' நீதிமன்றங்களின் மனுதர்மத்தை பார்க்கும் போது....

Anonymous said...

பேஷ்! பேஷ்! ரொம்ப நன்னாயிருக்கு நீதிபதிவாள்!

அருண்மொழி said...

பேசாம கோயிலுக்கு உள்ளே போய் அந்த மணிய புடுங்கி அர்ச்சனை செய்தால் சாமி கோபித்துக்கொள்வாரா?

Anonymous said...

// கோவிலின் புனிதத்தன்மை கெட்டுவிடும்.//
ம். தந்திரியை வந்து பரிகாரம் செய்யச் சொல்ல வேண்டியதுதான்.

புனித பிம்பங்கள் எல்லோரும் இன்று வெகேசன் போயிருக்கிறார்கள்.

Anonymous said...

இந்தப் பதிவைத்தான் சொன்னீர்களோ?

என்ன சொல்ல?
என்ன செய்ய என்பதும் தெரியவில்லை. இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டுமோ?

இந்த அனானிகளின் பின்னூட்டங்கள் உங்களுக்கு ரொம்ப தேவையா?

தருமி said...

இதற்கு முன்பு எப்படியோ இப்பின்னூட்டம் அனானியாக வந்து விட்டது. மன்னிகவும். எப்படியோ ஒரு தவறு செய்துவிட்டேன். மன்னிக்க

இந்தப் பதிவைத்தான் சொன்னீர்களோ?

என்ன சொல்ல?
என்ன செய்ய என்பதும் தெரியவில்லை. இன்னும் எத்தனை யுகங்கள் வேண்டுமோ?

இந்த அனானிகளின் பின்னூட்டங்கள் உங்களுக்கு ரொம்ப தேவையா?

Anonymous said...

Solution 1: Appoint all memebers
of Ramadoss family as judges in
Supreme Court and Madras High Court
Solution 2 : Discard all laws of the land
Solution 3: Declare that whatever
Anbumani and Ramadoss say is law

Anonymous said...

இந்தத் தீர்ப்பினை வழங்கிய நீதிபதி ஒரு தலித்.சித்தம்பலத்தில் பாட முயன்றவர் ஒரு வன்னியர்.
இந்தக் கோணத்தில் இதை ஏன் பார்க்ககூடாது.

அருண்மொழி said...

விடுதலையில் வந்துள்ள தலையங்கத்தில் இருந்து

- வழக்கில் வாதாடியவர்கள் முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் பராசரன் மற்றும் பா.ஜ.கவின் அருண் ஜெட்லி

- உயர்நீதிமன்றம் செல்லாமல் நேரடியாக உச்ச நீதிமன்றத்தை அனுகி உள்ளனர்.

- இதே போல் தான் சென்ற முறையும் நடந்தது (ராஜகோபாலாச்சாரியாரின் ஆலோசனைப்படி)

- அரசு வழக்கறிஞர் உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கை தாக்கல் செய்து இருக்க வேண்டும் என்று கூறியும், அது எடுபடவில்லை

மேலும் படிக்க
http://viduthalai.com/20060816/news05.htm

லக்கிலுக் said...

///நியாயங்களும், நீதிகளும், உரிமைகளும், சம உரிமையும் நேர் வழியிலும், அறவழியிலும் கிடைக்காத போதே வன்முறையால் அவைகளை அடைய முனைகிறார்கள் என்பது வரலாறு////

நிதர்சனமான உண்மை

We The People said...

சார் இந்த ambedhkarகாரும் அவாளா?

//when rape is inevitable, lie back and enjoy என்ற பொன்மொழியை//

இதை யார் சொன்னா தெரியுமா? பொன்மொழியை சொன்னவரை ஒன்னும் சொல்ல மாட்டீங்களா?

வேல்பாண்டி said...

//when rape is inevitable, lie back and enjoy it என்ற பொன்மொழியை சொன்னது //

-கன்ஃப்யூஷியஸ் என்ற சீன தத்துவ ஞானி.

//இதை யார் சொன்னா தெரியுமா? பொன்மொழியை சொன்னவரை ஒன்னும் சொல்ல மாட்டீங்களா?//

குழலி,

எதுனா கன்ஃப்யூஷியஸை பத்தி சொல்ல போறீங்களா?

-வேல்-

Anonymous said...

http://viduthalai.com/20060907/news30.htm