முகமூடிக்கு ஜூரி(நடுவர்?!)யாக இருக்க தகுதி உண்டா?

யார் எப்படி போனா எனக்கென்ன என்று இருந்தேன், ஆனால் என்னையும் இருவர் இன்டிப்ளாக்கீஸ் அவார்டுக்கு முன்மொழிய (முன்மொழிந்தவர்களுக்கு நன்றி) வேறுவழியின்றி இதை பேச வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது, ஏனெனில் இன்டிப்ளாக்கீஸ் ஜூரி குழுவில் அனாமதேய வலைப்பதிவர் முகமூடி அவர்கள் ஜூரியாக(நடுவர்?!) இருக்கின்றார்.

இதில் கூட அவர் லாஸ் ஏஞ்செல்சில் இருக்கிறார் என்பதைத்தவிர அவர் யாரென்பதற்கான எந்த விபரங்களும் இல்லை, சரி அவரது பதிவிலாவது பார்க்கலாமென்று அவரின் வலைப்பதிவில் தேடியபோது அதிலும் இதே நிலைமை, ஆக இணையத்தில் யாரென்று அடையாளம் காட்டிக்கொள்ளாத ஒருவர் ஆயிரத்து எண்ணூறுக்கும் மேற்பட்ட தமிழ் வலைப்பதிவுகளில் போட்டியில் கலந்துகொள்ள முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வலைப்பதிவாளர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்போவது தம்மை யாரென்று தெரிவித்துக்கொள்ளாத ஒரு அனாமதேய பதிவர், தங்களை யாரென்று இன்டிப்ளாக்கிஸ் குழுவிற்கு தெரிந்தால் மட்டும் போதும் கலந்து கொள்பவர்களுக்கு தெரிய தேவையில்லை என்று ஜூரியும் இன்டிப்ளாக்கிஸ் குழுவும் கருதுவார்களெனில்(நான் கருதுகிறார்கள் என சொல்லவில்லை, கருதுவார்கள் எனில் என்று தான் கூறியுள்ளேன்) போட்டியில் கலந்து கொண்ட பல வலைப்பதிவாளர்கள் தங்களை எடை போடப்போவது யாரென்றே அறியாமல் ஒரு அனாமதேயத்தால் அவர்களின் வலைப்பதிவுகளின் தகுதிகள் அலசப்படும் ஒரு நிலை, அந்த நிலை சிலருக்கு இழிவாகக்கூடத் தோன்றலாம், எனக்கும் அப்படித்தான் தோன்றியது.

அடுத்தபடியாக இன்டிப்ளாக்கிஸ் விருதுக்காக தமிழ் வலைப்பதிவை தேர்ந்தெடுக்கப் போகும் இந்த 'முகமூடி' என்பவர் என்னையும் என் கருத்துகளையும், என் வலைப்பதிவையும் அவரின் வலைப்பதிவு மற்றும் பல இடங்களில் பல நேரங்களில் அப்யூஸ் செய்துள்ளார், நேரடியாக பெயர் குறிப்பிட்டும் என் வலைப்பதிவின் சுட்டி கொடுத்தும் அப்யூஸ் செய்த அவரின் பதிவுகளின் ஒன்று தமிழ் வலைப்பூ சர்க்கஸ் லிமிடெட், இது மட்டுமின்றி பல பதிவுகளிலும் இடங்களிலும் என் பெயரிலும் என் அடையாளங்களிலும் சில சிறிய மாற்றங்களை செய்து படிப்பவர்களுக்கு நான் தான் என்று எளிதாக புரியுமளவில் குறிப்பிட்டு அப்யூஸ் செய்துள்ளார், அந்த பதிவுகளையெல்லாம் எடுத்து போடலாம் என்றாலும் சொல்ல வந்த செய்தி சென்று சேர்ந்தால் போதும் என்பதால் அதை தற்போதைக்கு செய்யவில்லை என்றாலும் தேவைப்பட்டால் செய்யத்தயாராக உள்ளேன்.

இப்படியான அனாமதேய வலைப்பதிவர் முகமூடியால் நான் மட்டுமின்றி மேலும் பலரும் அப்யூஸ் செய்யப்பட்டுள்ளார்கள், அவரவர்களே அதன் சுட்டியை அளிப்பது, வெளிசொல்வது, சொல்லாமலிருப்பது இன்ன பிற விசயங்களே அவர்களே முடிவு செய்துகொள்ளட்டும் என நான் கருதுவதால் அதைப்பற்றி தற்போது நான் எழுதவில்லை.

மேலும் முகமூடி சில வலைப்பதிவர்களை ஸ்டாராக அறிவித்துள்ளார், அதே சமயம் அதில் "நிரந்தர பரமார்த்த குரு" என்ற பெயரில் முத்து (தமிழினி) பெயரும் உள்ளது இது பாராட்டா? நக்கலா?

இப்படியான ஒரு ஜூரி(நடுவர்?!) முன்பு என் வலைப்பதிவு வரும்போது எப்படியாக என்(மற்றும் பல) வலைப்பதிவு எடைபோடப்படும்? விருப்பு வெறுப்பின்றி தேர்வு முடிவுகள் இருக்குமா என்ற சந்தேகம் வந்துள்ளது? இந்த சந்தேகத்தை இன்டி ப்ளாக்கீஸ்க்கும் எழுதியுள்ளேன்.

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

நான் சொல்ல வேண்டியதை சொல்லிட்டேன், அப்போ நீங்க?

பின்குறிப்பு
முகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க

மற்றுமொரு பின்குறிப்பு
இந்த பதிவையும் கிண்டலடித்து வரப்போகும் பதிவுகளை என் முடிக்கு சமானமாக கூட கருதப்போவதில்லை என்று கூற மாட்டேன், ஏனெனில் என் முடியை தினமும் வாருகிறேன், அதிகமாக வளர்ந்தால் வெட்டிக்கொள்கிறேன், அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.

34 பின்னூட்டங்கள்:

said...

இது மேட்டரு

சென்ஷி

said...

இதை ஏதோ தனிப்பட்ட எனக்கும் முகமூடிக்கும் உள்ள பிரச்சினையென்று பார்க்காமல் கருத்துகளை சொல்லவும், என்னை மட்டுமன்றி பல வலைப்பதிவாளர்களையும் அவர்களுது கருத்துகளையும் நேரடியாகவும் மறைமுகமாகவும் அப்யூஸ் செய்த அனாமதேய வலைப்பதிவர் முகமூடி ஜீரியாக அமர்ந்து உங்கள் வலைப்பதிவை எடை போடுகிறாரென்றால் உங்களை எடைபோடுபவரின் தகுதியை தெரிந்து கொள்ள வேண்டாமா? பலரையும் அப்யூஸ் செய்தவரின் தேர்ந்தெடுப்பு முறை எப்படியிருக்கும் என்ற வினா எழுவது இயல்பானதே...

said...

அப்ப நீங்க யாருங்கண்ணே?..

said...

//அப்ப நீங்க யாருங்கண்ணே?..//
நான் ஜீரி (நடுவர்?!) இல்லிங்கண்ணா....

said...

//அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//

குழலி அய்யா,
ஃபோட்டோவைப் பாத்தா அப்படி தெரியலயே அய்யா.ஆனா தொப்பைக்கு ஸ்பெஷல் ட்ரீட்மெண்ட் தந்து ஆதரவு செய்யற மாதிரி தோணுதே அய்யா.

பாலா

said...

என் பெயரையும் யாரோ சில பேர் முன்மொழிந்து தொலைத்திருக்கிறார்கள். தனிப்பதிவு போட்டு எனக்கு பரிசு வேண்டாம் என்று சொல்லிவிடட்டுமா :-))))

said...

குழலி அய்யா!

நடுவர்களாக இருக்கும் பத்ரி அய்யா, முகமூடி அய்யா ரெண்டு பேருக்கும் ஒரு ஒற்றுமை இருக்கு பார்த்தேளா?

பாலா

said...

உங்கள் போட்டோ அவுட் ஆப் போக்கஸில் உள்ளதால் நீங்களும் ஒரு முகமூடி என்று அவர் கூறிவிடப்போகிறார் !!!!!!!!!

said...

என்னையும் ரெண்டு பேரு போட்டுத் தள்ளியிருக்காங்க...தட்ஸ்தமிழ், கில்லி ய பத்து பேர் போட்டிருக்காங்க.

இவங்களொடல்லாம் போட்டி போடற அளவுக்கு நா வளர்லபா...

ஆனாலும் சிலுக்குவார்பட்டி குயிலி இப்பிடி ஆடக்கூடாதுபா...லாஸேஞ்சல் பச்சி சொல்லுதுபா...

//அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//

அப்போ நீங்க கிரீமி லேயர்ங்கறத ஒத்துக்கறீங்களா?

said...

//என் பெயரையும் யாரோ சில பேர் முன்மொழிந்து தொலைத்திருக்கிறார்கள். தனிப்பதிவு போட்டு எனக்கு பரிசு வேண்டாம் என்று சொல்லிவிடட்டுமா :-))))
//
லக்கி, என் பதிவையும் போட்டியிலிருந்து விலக்கலாம் என்று இருக்கிறேன், ஆனால் காரணங்களை சொல்லித்தான் விலக்குவேன், அனாமதேய நடுவர்களால் நான் பரிசீலிக்கப்படுவதை நான் விரும்பவில்லை

said...

என் கேள்விக்கென்ன பதில்? :-))

said...

.ன்டி ப்ளாக்ஸ் தேர்தல் நடத்தும் டெபாசிஷ் ஒரு டுபுக்கு.அவன் வெக்கிற ஜூரர்ஸ் மட்டும் எப்படி இருப்பாங்க?

இதுல போனதடவ ஜூரரா இருந்தவரோட "பில்லி" யும் கலந்த்துக்குதாம் :-))

said...

தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

said...

////அதற்கு எண்ணெய், க்ரீம் எல்லாம் போட்டு என் முடியை பராமரிக்கிறேன்.//

அப்போ நீங்க கிரீமி லேயர்ங்கறத ஒத்துக்கறீங்களா? //

அடப்பாவிங்களா அப்போ க்ரீம் கலர் சட்டை போட்டா க்ரீமிலேயரை, விட்டா சொறி அரிப்புக்கு க்ரீம் போடுறவனை கூட க்ரீமிலேயர்னு சொல்லிடுவிங்க போல :-), ம்... போற போக்கை பார்த்தா கோமணம் கட்டாமல் வேட்டை சட்டை போடுறவனை பார்த்து நீ க்ரீமிலேயர் வேட்டி சட்டை போடுற அளவுக்கு உனக்கு பணம் இருக்கு, கோமணம் கட்டாத நீயெல்லாம் க்ரீமிலேயர்னு சொல்லிடுவீங்க போல....

said...

//தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் 2006ன் சிறந்த பதிவர் வாக்கெடுப்பு நடத்திய சர்வேசன் பதிவிலும் அதை எதிர்த்து என் பதிவை விலக்கிக்கொண்டேன், அந்த பதிவில் நான் எழுதிய பின்னூட்டம்

தன்னை வெளிபடுத்தி கொண்டால் உடனே ஆப்பு விழுதே என்னா பண்றது?

said...

என்ன குழலி சார்

இண்டிப்ளாக்கீஸ் விருது பற்றி உங்களுக்கு தெரியாதா ? சொல்றேன் கேளுங்க

போன வருஷம் என்னா பண்ணாங்க, யாருக்கும் தெரியாம முகமிலியை சிறந்த பதிவரா தேர்ந்தெடுத்தாங்க. 1000 பேர் இருக்கிற வலைப்பதிவுல 5 பேர் கலந்துக்கிட்டு அதுல இவர ரகசியமா தேர்ந்தெடுத்துட்டாங்க.

இந்த தடவை என்னா பண்ணாங்க, இவர ஜூரியா போட்டிருக்காங்க. இவரு என்னா பண்ணுவாரு, பல்லி பதிவ சிறந்த பதிவா தேர்ந்தெடுப்பாரு

இப்படி இவரு அவர தேர்ந்தெடுப்பாரு, அவரு இவர தேர்ந்தெடுப்பாரு, ஒரே தமாசு தான் போங்க

இந்த தடவை பந்தயம் கட்டறேன், அவரு தான் சிறந்த வலைப்பதிவரு, நான் சொல்ற அவரு "யாருன்னு" தெரியுதா ?

யோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்

said...

//இந்த தடவை பந்தயம் கட்டறேன், அவரு தான் சிறந்த வலைப்பதிவரு, நான் சொல்ற அவரு "யாருன்னு" தெரியுதா ?//

புக்கர், புளிட்கர், நோபல் பரிசு பெறப் போகும் உஷார் வலைப்பதிவாளினி

பின்னூட்ட நாயகி

உலகின் புதிய கடவுள்

காலுகிரி

ஹரியே சரணம்

முகமிலியை தெரிஞ்ச முகமுடையவர்கள்

இல்லாட்டி, போனா போவுதுன்னு நடுநிலை வலைப்பதிவாளர் (அவிங்களுக்கு ஜல்லி அடிக்க கூடியவங்கன்னு வாசிங்க)

said...

குழலி சார்,

பள்ளிக்கூடம் படிக்கோசொல்லோ பப்ளிக் எக்ஸாம் வைப்பாங்க, அப்பாலிகா காலெஜ்லயும் செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் வெப்பாங்க.
பரீட்சை எழுதிட்டு பேப்பர நூலு போட்டு கட்டிட்டு வாத்தியார் கிட்ட குடுத்துட்டு ரெண்டு மாஸம் காத்திருக்க வச்சு, ரிஸல்ட் அனௌன்ஸ் பண்ணுவாங்க.

நூல்ல கட்டி குடுத்த பேப்பர, யார் படிக்கரா, யார் மார்க் போடறா இதெல்லாம் தெரியாது - முகமூடி மாதிரிதான் அதுவும்.
அதெல்லாம் தாண்டிதான வந்திருக்கோம்?

எழுதினதுக்கேத்த மாதிரி, திருத்தர முகமூடி வாத்தியார், சரியா மார்க் போடுவாங்கன்றது ஒரு நம்பிக்கதான்.

அத்தே மாரி தான் சார் இங்கியும்.

பல அவார்ட் கமிட்டிலயும் இப்படிதான், நடுவர் குழுல இருக்கரவங்க பேரெல்லாம் சொல்ல மாட்டாங்க.

குறிப்பா இங்க பேர் சொல்லி மார்க் போட்டா, டகால்னு சாயம் பூசிடுவாங்க, பேஜார் புடிச்ச பயலுவ.

நம்ம சிறந்த பதிவர் சர்வேல, மக்கள்ஸ் தான் தேர்ந்தெடுத்தாங்க - ஜனநாயக முறைப்படி :)

ஜெயிச்சவரும் லேசு பட்டவரு இல்ல. நல்லாவே எழுதரவருதான். மக்கள்ஸ் தப்பு பண்ணல.

பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.

said...

//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.//

அப்படியே உங்க பச்சை கலரையும் மாத்திருங்க சர்வேசண்ணா, அது கோழித்திருடன் முஷாரப் ஆளற பாகிஸ்தான் கலரு. என்ன, கோழித்திருடங்கிறது சரிதான?

said...

//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இ் லேடீஸ் கலர்.//
அது கேய் கலரும் கூட..

said...

//
நூல்ல கட்டி குடுத்த பேப்பர, யார் படிக்கரா, யார் மார்க் போடறா இதெல்லாம் தெரியாது - முகமூடி மாதிரிதான் அதுவும்.
அதெல்லாம் தாண்டிதான வந்திருக்கோம்?
//

இன்னா தத்துவம் பாருங்கப்பா

அடா அடா அடா

முகமூடி வாத்தியாரெல்லாம் சரி தான். இந்த முகமூடியோட லட்சணதுக்கு தான் குழலி லிங்க் கொடுத்திருக்காரே.

தெரியாத முகமூடின்னா பரவாயில்லை. தெரிஞ்ச முகமூடியை என்ன பண்றது

//பின்குறிப்பு
முகமூடி எல்.ஏ.ராம் ஆக இருக்க முடியாது என்பது எல்.ஏ.ராம் அவர்களின் கருத்து, பார்க்க//

குழலி - சுட்டிக்கு நன்றி. நான் நம்பினேன்

said...

//பி.கு: இந்த பிங்க் கலர மொதல்ல மாத்துங்க சார். பிங்க் இஸ் லேடீஸ் கலர்.
//
எல்லா ஆண்களுக்குள்ளும் பெண்கள் இருக்கிறார்கள், இந்த அவுட் ஆஃப் போகஸ் போட்டோ, கலர் எல்லாம் ஒரு அடையாளமாகவே மாறிவிட்டது, கலைஞர் மஞ்சத்துண்டு, வைகோ கருப்பு துண்டு, ஜெயலலிதா பச்சை கலர் மாதிரி, நல்ல டெம்ப்ளேட் கிடைத்தவுடன் மாற்றிவிடுகிறேன்....

//அப்படியே உங்க பச்சை கலரையும் மாத்திருங்க சர்வேசண்ணா, அது கோழித்திருடன் முஷாரப் ஆளற பாகிஸ்தான் கலரு. என்ன, கோழித்திருடங்கிறது சரிதான?
//
ஏம்பா முஷாரப் என்ன செய்தாருனு கலாய்க்கிறிங்க, ஏன் முஷாரப், ஜெயலலிதா அம்மாவோட விருப்ப நிறம்னு கூட சொல்லலாமே...

//அது கேய் கலரும் கூட.. //
அது சரி.... இருந்துட்டு போகட்டுமே அதனால என்ன?

said...

//யோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்//

இன்னாபா, நான் வர்றதுக்குள்ள நீங்களே சிலப் பேர போட்டுட்டீங்க

நான் சொல்ற ஆளு வேற

யோசிச்சு வைங்க, அடுத்த கொமண்டுல வாரேன்

said...

ஜீரி = ஜூரி

அன்புடன்,
எழுத்துப்பிழை ( எலிக்குட்டி சோதனையில் நான் மாட்டுவேனா ?)

said...

அனானி அண்ணாச்சி,
நீதிபதிகளுக்கு நான் ஜனவரி 28ம் தேதி அனுப்பிய மெயிலை காப்பி பேஸ்ட் செஞ்சிருக்கேங்க. ஆனா இன்னி வரை பதில் வரைலைங்க. என் பெயரை யாராவது சொல்லியிருக்காங்களான்னு தெரியாதுங்க. ஆனா, அப்படி விருது கிடைச்ச்சாலும், 2006க்கு வாங்க எனக்கு தகுதியில்லைங்க.
இப்படிக்கு,
உஷா
பி.கு நீங்களும் "உஷாரான" எளுத்தாளி நான் இல்லைன்னு சொல்லிடாதிங்க. ஏதோ புலிச்சர், புக்கர் என்றதும் நானாக்கும் என்று நினைத்து பதில் சொல்லியிருக்கேனுங்க.
-----------------------------------
usha R to Mugamoodi
show details 28-Jan


திரு. முகமுடி
திரு. பத்ரி
அவர்களின் பார்வைக்கு

இண்டிபிளாக் 2006 விருதுகளுக்கு
என் பிளாக்கை முன்மொழிந்து இருக்கிறார்களா என்று தெரியவில்லை. அப்படி யாராவது என் பெயரை
சொல்லி இருந்தால், நீதிபதிகளான நீங்களும், பத்ரியும் அதை ஏற்றுக் கொள்ள வேண்டாம். கடந்த பல மாதங்களாகவே நான் எதுவும் என் பதிவில் ஒழுங்காய் எழுதாததால், தேர்தலில் என் பதிவின் பெயரைக் குறிப்பிடவும் எனக்கு விருப்பமில்லை. இந்த மடல் கிடைத்தற்க்கு ஒரு வரி பதில் அனுப்பினால் மகிழ்வேன்.
இப்படிக்கு,
ராமசந்திரன் உஷா
---------------------------------
குழலி, இன்னும் பிளாகரில் புது கணக்கு ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. அதனால் அனானிமஸ்ஸாகப் போடுகிறேன்.

said...

What is so abusing in his link you provided??? If you publish your views in public then it can be criticized by all means. I could see that post more decent when compared to some bloggers.
Murali.

said...

//What is so abusing in his link you provided??? If you publish your views in public then it can be criticized by all means. I could see that post more decent when compared to some bloggers.
Murali.
//
முரளி டீசன்சி என்றால் எது ங்...தா, ங்...மா என்று எழுதாமல் இருப்பது மட்டும் தான் டீசன்சியா? அது மட்டும் தான் டீசன்சி என்று நினைத்தால் சொல்வதற்கு ஒன்றுமில்லை, விமர்சனங்களுக்கும் காழ்ப்புணர்ச்சிக்கும் வித்தியாசம் இருக்கிறது, அந்த சுட்டியில் இருப்பது விமர்சனமா? காழ்ப்புணர்ச்சியா? என்பதை படிப்பவர்களிடமே விடுகின்றேன், இது நேரடியாக என் பெயர் சுட்டி குறிப்பிட்டு எழுதப்பட்டது என்பதால் அதை குறிப்பிட்டேன், அவருடையை கிட்டத்தட்ட மொத்த வலைப்பதிவுமே காழ்ப்புணர்ச்சியோடு எழுதப்பட்டடதா? இல்லையா என்று படித்து பார்த்தால் நன்றாகவேத் தெரியும்....

அது மட்டுமின்றி இவர் யார்? இணையத்தில் உலவும் அனாமதேயங்களில் இவரும் ஒருவர் தானே? இணைய அனாமதேயங்கள் 1800க்கும் மேற்பட்ட தமிழின் வலைப்பதிவுகளில் முன்மொழியப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பதிவுகளிலிருந்து தேர்ந்தெடுப்பது ஒரு இணைய அனாமதேயமா?

//I could see that post more decent when compared to some bloggers.
//
எல்லாரை பற்றியுமா பேசுகிறோம்? நடுவர்களை பற்றி மட்டும் தானே பேசுகிறோம்.

நன்றி

said...

Sorry to come again. I feel nothing biased or abusing in that post. Infact he had mentioned your name and made fun of you. That is honest.
If you say that so the same could apply to one of your blogs too. Moreover it is not just fair to say somebody is abusing when you cannot accept the criticisms.
Murali.

said...

//I feel nothing biased or abusing in that post.//
எனக்கு மட்டுமல்ல அதை படித்த வேறு சிலரும் அப்யூஸ் என்றே கூறியிருக்கின்றனர்.

// Infact he had mentioned your name and made fun of you. That is honest.//
கிழிஞ்சிது போங்க, இது ஹானஸ்ட்னா என் பெயர் சொல்லாமல் அப்யூஸ் செய்ததெல்லாம்? அப்போ அது வேற ஹானஸ்ட்டாயிடுமா?

//If you say that so the same could apply to one of your blogs too.//
நான் ஜீரி அல்ல..

// Moreover it is not just fair to say somebody is abusing when you cannot accept the criticisms.
Murali.
//
மீண்டும் சொல்கிறேன் விமர்சனம் வேறு, காழ்ப்புணர்ச்சி வேறு.... காழ்ப்புணர்ச்சியில் எழுதவதற்கும் விமர்சனமாக எழுதுவதற்கும் வித்தியாசம் தெரியவில்லையென்றால் சொல்வதற்கு ஒன்றுமில்லை

said...

//பள்ளிக்கூடம் படிக்கோசொல்லோ பப்ளிக் எக்ஸாம் வைப்பாங்க, அப்பாலிகா காலெஜ்லயும் செமஸ்டர் எக்ஸாம் எல்லாம் வெப்பாங்க.
பரீட்சை எழுதிட்டு பேப்பர நூலு போட்டு கட்டிட்டு வாத்தியார் கிட்ட குடுத்துட்டு ரெண்டு மாஸம் காத்திருக்க வச்சு, ரிஸல்ட் அனௌன்ஸ் பண்ணுவாங்க.//

அவரு ஒரு ஸ்கூலில் வேலை செய்பவராகத்தான் இருக்கும்.

said...

குழலி,

மிகச் சரியான பதிவு.

தன் மூகத்தை வெளிக்காட்டும் நேர்மையற்ற ஒருவரினால், தன் முழு விவரங்களையும், புகைப்படத்துடன் தன் அடையாளங்களை வெளியிட்டு எழுதும் (எனக்கு - மற்றவர்கள் அவர்களைப் பற்றிச் சொல்லட்டும்) - என் பதிவை எடை போடும் தகுதியை ஒருபோதும் அளிக்கமாட்டேன். நீங்கள் சொன்னது போல், அது ஒரு இழிவே.

சமநிலையற்ற மன அமைப்பு மிக்க ஒருவரால், எப்படி நடுநிலை வகிக்க இயலும் என்பது ஒரு கேள்வியே. இவருடைய சித்தாந்திற்கு எதிர் நிலையில் இயக்கும் பலரையும், நாகரீகத்தின் எல்லைகளை மீறி அவமதித்தவர். பத்மவியூகம் என்ற பெயரில் அவர் அவமதித்த நபர்கள் எத்தனை பேர்!

குறிப்பாக, நண்பன் ஒரு தீவிரவாதி, துபாயில் ஒளிந்திருக்கிறான் என்றெல்லாம் எழுதியவர் நேர்மையானவர் என்று எப்படி இவரை இண்டிபிளாக்ஸ் குழுவினர் கருதுகிறார்கள் என்று புரியவில்லை. அதே போல், மரம் என்ற பெயரில், இயங்கி வந்த ஒரு பெண்மணியை எத்தனை துவேஷித்தார் என்பதும் வலையுலகம் அறிந்தது தான்.

தகுதியற்ற ஒரு நபரால் தேர்ந்தெடுக்கப்படும் அவமானம் நிகழாதிருப்பதே நல்லது.

நன்றி.

said...

அடக்கண்ணறாவியே!

டாப் 20 லிஸ்ட்டில் என் வலைப்பூவும் அங்கே இருக்கிறது :-(

said...

//அடக்கண்ணறாவியே!

டாப் 20 லிஸ்ட்டில் என் வலைப்பூவும் அங்கே இருக்கிறது :-(//

அடக்கண்ணறாவியே!

said...

உள்ளே வந்தால் முக்கால் மணி நேரம் சுற்றி சுற்றிவந்து கொண்டே இருக்கின்றேன். தலை சுற்றுகின்றது. மனிதரில் இத்தனை நிறங்களா?