போதை - குடிகாரர்களும் கவனிக்க
ஆளில்லா மைதானத்திலே
கோல் போட்டு
அலுத்துவிட்டேன்
இன்பம் கூட
வேண்டாம்
துன்பமாவது தா!
இரு கைகளிலும்
வாளேந்தி ஆவேசமாக
சுழற்றிவிட்டேன்
என் வாளில்
வெட்டுபடவும்
என்னை
வெட்டவும் தான்
ஆளில்லை
வெற்றி கூட
வேண்டாம்
தோல்வியாவது தா!
சதுரங்க ஆட்டத்திலே
வெள்ளை காயையும்
கறுப்பு காயையும்
மாற்றி மாற்றி
நகர்த்தி
பிளவாளுமையோ வென
மகிழ்ந்தேன்
மயிராளுமை யென
மட்டுப்படுத்தியது
மனது
என்னை நானே
கீறினேன்
குருதி வழிந்து
வலித்தது
குதூகலித்தேன்
மேலும் மேலும்
கீறினேன்
வலியோ
பழகிவிட்டது
விரல்களை
வெட்டியெறிந்தேன்
விரல்களின்றி
வாழ்ந்தபோது
விரல்களே
வீண்தானோ
என்றேன்
தற்போதொரு
கையில்லா
வாழ்க்கையும்
பழகிவிட்டது
அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே
26 பின்னூட்டங்கள்:
கவிதை நல்லா இருக்குதுங்க குழலி!
மிக நல்ல கவிதை குழலி!
// நாமக்கல் சிபி said...
கவிதை நல்லா இருக்குதுங்க
அபி அப்பா said...
மிக நல்ல கவிதை குழலி! //
அப்போ இது கவிதையாத்தான் இருக்கணும்.
நல்லா இருங்க...
பினாத்தலார் அனுப்பிய மடல்...
//அதனாலென்ன
வெட்டியெறியத்தான்
இன்னமும்
இரு கால்களும்
இரு காதுகளும்
இரு கண்களும்
ஒரு மூக்கும்
மிச்சமுள்ளதே//
இந்த வரிகள் இப்படி இருந்தா எப்படி இருக்கும்னு பாருங்க
வெட்டியெறியப்பட
உறுப்புகள் உள்ளவரை
போரும் தொடரும்
//வெட்டியெறியப்பட
உறுப்புகள் உள்ளவரை
போரும் தொடரும் //
ஃபினிஷிங் டச், நன்றாக உள்ளதுங்க....
நன்றி
//அப்போ இது கவிதையாத்தான் இருக்கணும்.
நல்லா இருங்க...
//
தருமி அய்யா இதுக்கு பேருதான் மருதை குசும்பா?
தெரியுது கீழாதல ஏன் எல்லாம் ழுகலி?
:-)
புரச்சி புரகிராமரிடம் இருந்து ஒரு புரச்சி கவிஜன்னு கொள்கிறேன்.
//தெரியுது கீழாதல ஏன் எல்லாம் ழுகலி?
:-)
//
//புரச்சி புரகிராமரிடம் இருந்து ஒரு புரச்சி கவிஜன்னு கொள்கிறேன்.
//
ஒரு குரூப்பாத்தாம்லே கெளம்பியிருக்காங்கோ :-)
கவிதையின் நிறமும் சிகப்பா ;-)
இந்த கவிதையில் ஏதாவது உள்குத்து வைத்திருக்கிறீர்களா? என்னைப் போன்ற அப்பாவிகளால் கண்டுபிடிக்க இயலாது :-))))
//கவிதையின் நிறமும் சிகப்பா ;-)
இந்த கவிதையில் ஏதாவது உள்குத்து வைத்திருக்கிறீர்களா?
//
ஹா ஹா போனவருசம் எழுதியது, இப்போ வெறும் மீள்பதிவு மட்டும் தான்... ஆனா காலத்துக்கும் பொருந்தும் போலிருக்கே :-)
பின்நவீனத்துவக் கவிதை என்று சொல்வார்களே அது இதுதானா?
//பின்நவீனத்துவக் கவிதை என்று சொல்வார்களே அது இதுதானா?
//
அது சரி, அப்போ நானும் பின் நவீனத்துவவாதி ஆயிட்டேனா?
//பின்நவீனத்துவக் கவிதை என்று சொல்வார்களே அது இதுதானா?
//
அப்போ அடுத்து பின்நவீனத்துவ சிறுகதைக்கு முயற்சி செய்யலாமா? :-))
அக உலகை சிறப்பான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..வாழ்த்துகள்..
//போதை - குடிகாரர்களும் கவனிக்க//
குடிகாரர்களும் கவனிக்க என்று சொல்லியதன் மூலம் கவிதையின் அடர்வு கூடுகிறது
//அக உலகை சிறப்பான முறையில் சொல்ல முயற்சித்திருக்கிறார்கள்..வாழ்த்துகள்..
//
நன்றி அபிமன்யு, முதல்முறை வந்திருக்கிறீர்கள் என நினைக்கிறேன்
//அப்போ இது கவிதையாத்தான் இருக்கணும்.
நல்லா இருங்க...//
குழலி ஐயா,
தருமி ஐயாவை நான் வழிமொழிகிறேன் !
:)
போதையும் குடியும் நோயுங்க
நோய்க்குத் தீர்வும் உண்டுங்க
நண்பர் சொல்ல மாட்டாங்க
சொன்னாலுங் கேட்க மாட்டாங்க
குடும்பம் படும் பாடுங்க
வெளியே சொல்ல மாட்டாங்க
குணம் கட்டாயம் உண்டுங்க
மருத்துவ உதவி நாடுங்க
மனதிலே அமைதி தேடுங்க!!
//போதையும் குடியும் நோயுங்க
நோய்க்குத் தீர்வும் உண்டுங்க
நண்பர் சொல்ல மாட்டாங்க
சொன்னாலுங் கேட்க மாட்டாங்க
குடும்பம் படும் பாடுங்க
வெளியே சொல்ல மாட்டாங்க
குணம் கட்டாயம் உண்டுங்க
மருத்துவ உதவி நாடுங்க
மனதிலே அமைதி தேடுங்க!!
//
குடி நோய் ஒத்துக்கறேன், ஆனா அதுக்கான மருத்துவ உதவி தேடுற தேவை எனக்கு இல்லை... ஆமாங்க நெஜமா நம்புங்க, இந்த விசயத்தில் மருத்துவர் இராமதாசின் அனுக்கத் தொண்டன் நான் :-)
ஆனால் போதை, போதைங்கறது குடியும், புகையும் மட்டும் தானா? புகழ் ஒரு போதை, எதிராளியை பார்த்து எரிச்சல் பட்டுக்கொண்டு விடாமலோ விட்டு விட்டோ சொறிந்து கொண்டு தன் புண்ணை சிவப்பாக்கிக்கொள்வதும் ஒரு போதைதான்.... இதுக்கெல்லாம் எந்த மருத்துவ உதவியை நாடுவதுங்க?
சில மனிதர்கள்(சொறி நாய்கள்}வெளியே இருக்கிறார்கள்.கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள்.அது மன நோய்தான்.சந்தேகமேயில்லை.
சொறி நாய்கள் மீது கல் வீசிப் பயன் இல்லை என்பது எனது கருத்து.
//சில மனிதர்கள்(சொறி நாய்கள்}வெளியே இருக்கிறார்கள். கீழ்ப்பாக்கத்தில் இருக்க வேண்டியவர்கள். அது மன நோய்தான்.சந்தேகமேயில்லை.
சொறி நாய்கள் மீது கல் வீசிப் பயன் இல்லை என்பது எனது கருத்து.//???
ஏன் இந்த காழ்ப்புணர்ச்சி?
"ஊத்திக்கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு
இப்போ
ஒலகம் சுத்துதடி பல ரவுண்டு"
இது கவுஜ!
:-)
//அப்போ இது கவிதையாத்தான் இருக்கணும்.
நல்லா இருங்க...
//
:))
கலக்குறீங்க தருமி சார்!
:))
நல்ல கவிதை, இதைப் படித்தும் திருந்த மாட்டார்கள்.
அண்ணே ரெண்டு சந்தோகம். 1. இது குடைக்கடை குடிகாரர்களுக்கு மட்டுமா? வேற இடத்தில் குடித்தால் கிடையாதா?.
2.இரகசியமான கேள்வி: அந்த பாட்டில் என்ன விலை. ஹா ஹா ஹா .
நல்ல கவிதை. அந்த படம் நல்ல உதாரணம். சவப் பெட்டியும் பாட்டிலும், நல்ல காம்பினேசன். நன்றி குழலி.
புதுப் பின்னூட்டம் :)
நல்லாயிருக்கு வாழ்த்துகள் நண்பரெ
Post a Comment