தேசிய ஜல்லி















தேசிய ஜல்லி

என் மண்னைவுட்டு
மனையைவுட்டு

என் ஊட்டைவுட்டு
காட்டைவுட்டு

என் ஆட்டைவுட்டு
மாட்டைவுட்டு

எங்கோமணத்தை
மட்டும்வுட்டு

கரியெடுத்து
கரெண்டெடுத்து

நாடெல்லாம்
குடுக்கறாங்க

எங் குடுசைக்கும்
பம்பு செட்டுக்கும்
கரெண்டு கேட்டா

தண்ணிகுடுக்காத
சகோதரங்ககூட
பங்கு போட்டது
போவ ஜீரோவாட்ஸ்
பல்புக்கூட
பத்தலையே

சத்தம் போட்டு
கேட்டுப்புட்டா
தடாவும் பொடாவும்

சத்தம்போடாம
கேட்டுப்பாத்தேன்

சுத்தி சுத்தி
கொட்டுறானுங்க

லோடு லோடா
தேசிய ஜல்லி


இவர்களும் இந்தியர்கள்




களைந்(த்)த ஆடைகள்
சொல்லிக் கொள்(ல்)வோம்
இவர்களும் இந்தியர்கள்
உரக்க சொல்வோம்
ஜெய்ஹிந்த்

படத்திற்கு நன்றி விகடன்.காம்


ஒரே இந்தியா







ஒரே இந்தியா

ஒரு ரூபாய்

தொலைபேசி அழைப்பில்

மட்டும்

கர்நாடகா தமிழர்கள் தமிழகத்துக்கு படையெடுப்பு

11 பின்னூட்டங்கள்:

gulf-tamilan said...

nalla kavithai!!!
ennum yaarum parkallaiyaa!!

குழலி / Kuzhali said...

//nalla kavithai!!!
ennum yaarum parkallaiyaa!!
//
முதல் ஒப்பாரி மட்டும் தான் இப்போ வைத்தது, மற்ற இரண்டும் மீள் ஒப்பாரிகளே...

நண்பன் said...

குழலி

கவிதைகள் அரூமை.

இந்தத் தளத்திலும் (கவிதையிலும்) பிரகாசிக்க வாழ்த்துகள்.

இன்னமும் இது போன்ற கவிதைகள் நிறைய எழுதுவீர்கள் என்ற எதிர்பார்ப்புடன்,

நண்பன்

குழலி / Kuzhali said...

அனானி அண்ணாக்களா பதிவை கடத்தாம பின்னூட்டம் போடுங்கண்ணே...

அபிமன்யு said...

தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அவர்க்கோர் குணமுண்டு...

நன்று!நன்று!.

Ponnarasi Kothandaraman said...

That was a very nice poem :) And i read thru couple of ur kavitahis.. Tey r 2 good..Keep writing :)

Darren said...

//ஒரே இந்தியா
ஒரு ரூபாய்
தொலைபேசி அழைப்பில்
மட்டும்///

Super

Anonymous said...

வாழிய செந்தமிழ்
வாழ்க நற்றமிழர்
வாழிய பாரத மணித்திரு நாடு
வந்து ஏமாத்துறோம்!!

david santos said...

Hello!
All very good.
Tank you

Anonymous said...

அண்ணாச்சி சொன்னா கோச்சிக்கப் படாது.

நாலு வரியை ஒடைச்சு ஒண்ணு கீழ ஒண்ணுன்னு எழுதினா அது கவிதை இல்லை...

சித்திரமும் கைப்பழக்கம் ( அட அந்த கைப்பழக்கம் இல்லைங்க :D ),,, செந்தமிழும் நாப்பழக்கம்.

எழுதுனத படிச்சு பாருங்க. சில விசிலடிச்சான் குஞ்சுகள் ஆஹா .. ஓஹோன்னு ஏத்தி விட்டு போகும்.. அப்படியே உங்களோட கவிதைத் திறனையும் அதலபாதாலத்துக்கு தள்ளிட்டு போய்டுவாய்ங்க. அதுக்கெல்லாம் இடம் தராதீங்க.


சில உதாரணம் சொல்லனும்னா.. ஒரே வார்த்தையை அடிக்கடி போடாதீங்க.. you can join them :)



என் மண்னைவுட்டு
மனையைவுட்டு

## என் மண்ணையும் மனையயும் வுட்டு ##

அல்லது

# என் மண்ணையும் வுட்டு மனையயும் வுட்டு##


_________

இப்ப பாக்கலாமா
என் மண்ணைவுட்டு மனையவுட்டு
என் ஊட்டவுட்டு காட்டவுட்டு
என் ஆட்டவுட்டு மாட்டவுட்டு
எங்கோமணத்தை மட்டும் வுட்டு

கரியெடுத்து கரண்டெடுத்து
நாடெல்லாம் குடுக்கறாய்ங்க..

..........

மிச்சத்தை நீங்களே பாத்துக்கங்க :)


- கவிஜ மடக் குழு மனிதன் -

பி:கு : பதிவின் கருத்து பற்றி நோ காமெண்ட்ஸ்

asariiri said...

Related Article

http://in.rediff.com/news/2004/aug/10spec2.htm

http://www.tehelka.com/story_main5.asp?filename=op081404the_tehelka_view1.asp

http://www.hindu.com/2004/08/20/stories/2004082001491000.htm

நன்றி: தங்கமணி
http://ntmani.blogspot.com/2004/08/blog-post.html

தான் மட்டும் நல்லாயிருந்தால் போதும் என நினைக்கும் சுயநலவாதிகள் வெட்கங்கெட்டவர்கள் எப்போதுதான் திருந்துவார்களோ????