புது ப்ளாக்கர்க்கு தமிழ்மண கருவிப்பட்டையை சேர்ப்பது

புது ப்ளாக்கர் அடைப்பலகையில் தமிழ்மண கருவிப்பட்டை நிரலியை எளிதாக சேர்க்கும் விதமாக ஜாவாஸ்கிரிப்ட் பயன்படுத்தி எழுதியுள்ள கருவி இங்கே (www.kuzhali.co.nr) கிடைக்கும், இத்துடன் புது ப்ளாக்கர் பின்னூட்டங்களில் தமிழ் எழுத்துகள் சிதைந்து இருப்பதை சரி செய்யும் ஜெகத் அவர்களின் நிரலியையும் இணைத்துள்ளேன், இது ஏற்கனவே சில பதிவுகளில் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சேவை ஏற்கனவே தமிழ்மணத்தில் இருக்கும் ஒன்று தான், கூடுதலாக ஜெகத்தின் தமிழ் எழுத்துகள் சரி செய்யும் நிரலியையும் இணைத்துள்ளேன்.

15 பின்னூட்டங்கள்:

said...

நன்றி குழலி.....

said...

நல்லதொரு விடையத்தினை செய்திருக்கிறீர்கள்.நன்றிகள்.

said...

தலை,
நீங்க சொன்ன மாதிரி செய்தும் என்னுடைய பதிவில் கருவி பட்டை தெரியலையே?

http://santhoshpakkangal.blogspot.com/

said...

புதுப்ளாகரின் வீண்புரளிகளை புதுநிரலிகளின் மூலம் பொடிப்பொடியாக்கி,

தமிழ்மண சமூகத்துக்கு கணிணி அறிவை அர்ப்பணித்து,

ஓளவைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான் போல் தமிழ்மண கருவிப்பட்டைக்கே ஒட்டுப்போட்ட

எங்கள் அன்பு அண்ணன்
புரட்சி ப்ரோக்ராமர்
குழலியார்
வாழ்க! வாழ்க!!:)

said...

குழலி அவர்களே! மிக்க நன்றி...என்னைப் போன்று தமிழ்மண கருவிப்பட்டையில் தடுமாறுபவர்களுக்கு இப்பதிவு வரப்பிரசாதம். சிரமமின்றி எனது வலைப்பூவில் உங்க புண்ணியத்தால மாத்தியாச்சு. நன்றி..

said...

மிகவும் பயனுள்ள கருவி. இனி பிளாக்கர் நிரலில் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு தேட வேண்டாம். நன்றி.

said...

நீங்கள் சொல்லியபடி "paste" செய்த பின்னும், என் ப்ளாக்-ல் பதிவுப் பட்டை தெரியவில்லை.

உங்கள் உதவி தேவை

said...

வணக்கம் குழலி

தங்கள் பக்கம் மூலம் நண்பர் ஒருவருக்கு உதவக்கூடியதாக இருந்தது. அருமை. மிக்க நன்றிகள்.

said...

//நீங்க சொன்ன மாதிரி செய்தும் என்னுடைய பதிவில் கருவி பட்டை தெரியலையே?
//
//நீங்கள் சொல்லியபடி "paste" செய்த பின்னும், என் ப்ளாக்-ல் பதிவுப் பட்டை தெரியவில்லை.
//
சந்தோஷ் மற்றும் யாழினி அத்தான், நீங்கள் என்ன அடைப்பலகையை பயண்படுத்துகிறீர்கள் என்று தெரிவித்தான் நான் சோதனை செய்து பார்ப்பேன், இந்த நிரலை என் வலைப்பதிவிலும், எல் எல் தாஸ் மற்றும் திராவிட தமிழர்கள் வலைப்பதிவுகளில் சோதனை செய்தேன்... வேலை செய்கின்றது ஆனால் மேலும் சிலர் நிரலி வேலைசெய்யவில்லை என்று மடலில் தெரிவித்திருந்தனர்...

இதில் முக்கியமான விடயமே, உங்கள் ப்ளாக்கரின் EditBox இன் மேலே வலது மூலையில் இருக்கும் Expand Widget Templates என்ற சொடுக்குப் பெட்டியை தேர்வு செய்து அதன் பிறகே அந்த அடைப்பலகை நிரலியை கருவிப்பட்டை இணைப்பதற்கு பயன்படுத்த வேண்டும்,இல்லையென்றால் தமிழ்மணம் கருவிப்பட்டை தெரியாது....

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி

said...

இது மாதிரி ஒண்ணு இருந்தா நல்லா இருக்கும்னு எழுதி, போட்டுட்டு அலுவலகம் வந்தா, அதுக்குள்ள தயார் பண்ணிட்டீங்களா!

கவிஞ்சர் காந்துவாயனுக்கு அடுத்த புரட்சி புரோக்ராமர் அவதாரத்துக்கு ஒரு ஓஓஓ!!!!

said...

சூப்பரா வேலை செய்யுது.. டாட்ஸ் வார்ப்புரு சோதனை செஞ்சேன்..

அது ஜெகத்தின் தமிழ் எழுத்துரு மாற்றி தானே? முடிந்தால் அவரின் நேரம், தேதி தமிழில் காட்டும் நிரலியையும் இணையுங்களேன்...

said...

//அது ஜெகத்தின் தமிழ் எழுத்துரு மாற்றி தானே?
//
ஜெகன் என்று தவறாக பதிவில் குறிப்பிட்டிருந்ததை ஜெகத் என்று மாற்றிவிட்டேன்...

//முடிந்தால் அவரின் நேரம், தேதி தமிழில் காட்டும் நிரலியையும் இணையுங்களேன்...
//
வாரஇறுதியில் செய்துவிடுகின்றேன்...

said...

நன்றி குழலி,

இப்போது வேலை செய்கிறது என் பதிவு பட்டை கருவி.

உங்கள் சேவை தொடரட்டும்.

said...

Thank you Kuzhali

said...

அனைவருக்கும் நன்றி