ஏன் வேண்டும் இடஒதுக்கீடு - கட்டுரைகளின் தொகுப்பு

சமூகநீதிக்கு சாவு மணி அடிப்பதே குறிக்கோள் என்று அலையும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றம் 27% இடஒதுக்கீட்டிற்கு நேற்று இடைக்காலத் தடைவிதித்துள்ளது, அதற்கு காரணமாக சொன்னது புள்ளிவிபரங்கள் தேவையான அளவிற்கு இல்லையாம், கைப்புண்ணிற்கு கண்ணாடி கேட்டுள்ளது மனுநீதிமன்றம், இதெல்லாம் இடஒதுக்கீட்டை தள்ளிப்போட்டு அதன் பின் அதை செரித்துவிடும் நடவடிக்கை, முழுபுள்ளிவிபரம் வேண்டுமெனில் மிக எளிதாக ஒரு முறை உள்ளது, தற்போதுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் எத்தனை விழுக்காடு உயர் சாதி மாணவர்கள் உள்ளனர், எத்தனை விழுக்காடு பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் உள்ளனர் என கணக்கெடுக்கட்டும், இந்த கணக்கெடுப்பை ஒரே வாரத்தில் செய்துவிட முடியும்.

எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே, எனவே மிக எளிதாக உயர்சாதியினர் எத்தனை விழுக்காடு இடங்களை ஆக்கிரமித்துள்ளனர் என்று தெரிந்து விடும், அந்த உயர்சாதியினரின் விழுக்காடு இந்திய சமூகத்தில் அவர்களின் எண்ணிக்கைக்கு சமமா என்று தெரியாதா என்ன?

ஒரு கல்வி நிலையத்தில் 65% உயர்சாதியினர் ஆக்கிரமித்திருந்தால் உயர்சாதியினர் இந்திய சமூகத்தில் இருக்கும் எண்ணிக்கை விழுக்காட்டிற்கு மேலிருப்பதை இடஒதுக்கீட்டிற்கு ஒதுக்கட்டும், ஒரு 10 அல்லது 15% உயர்சாதியினர் எத்தனை இடங்களை ஆக்கிரமித்துள்ளனர், மற்றவர்கள் நிலை என்ன என்று உச்சநீதிமன்றத்திற்கு தெரியாதா என்ன? உயர்சாதிகளுக்கு உதவவே சமூக நீதிக்கு சாவு மணி அடிக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தில் இடஒதுக்கீட்டை செய்து மனுநீதி மன்றத்தை முதலில் நீதிமன்றமாக மாற்ற வேண்டும்.

ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது தொடர்பாக இது வரை வந்த கட்டுரைகளில் சிலவற்றை தொகுத்துள்ளேன், மேலும் இது தொடர்பான கட்டுரைகள் இருந்தால் பின்னூட்டங்களில் தெரிவியுங்கள்.

இந்த தொகுப்பு ஏன் வேண்டும் இடஒதுக்கீடு என்பது பற்றியது, இன்னமும் இடஒதுக்கீடு- ஊடகங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - மனு நீதிமன்றங்களின் சார்பு நிலை, இடஒதுக்கீடு - எதிர்ப்பாளர்களின் வாதங்களுக்கா பதில்கள், இடஒதுக்கீடு - வஞ்சகமாக ஏமாற்றப்படும் இடங்கள் என்ற தலைப்பில் தொகுத்துக்கொண்டுள்ளேன் அவைகளை வரும் காலங்களில் வெளியிடுவேன்.

உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பை எதிர்த்து நாளை தமிழகத்தில் அடையாள வேலை நிறுத்தம் செய்யும் கட்சிகள் மற்றும் பொதுமக்களை வாழ்த்துகிறேன், நாளை தமிழகத்தில் எழும் முழக்கம், தன் கோவணத்தை உருவிக்கொண்டிருக்கும் உச்ச நீதிமன்ற மனுநீதிமன்றத்தை சொரணை இல்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் இந்தியா முழுவதும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களின் காதில் அறையும் எழுச்சி முழக்கமாக இருக்கட்டும்.


இட ஒதுக்கீடு பத்ரி

ரிஸர்வேஷன் டாக்டர்களிடம் போவீர்களா? இராமநாதன்

சாதி ரீதியான இட ஒதுக்கீடு தேவையா? குழலி

இட ஒதுக்கீடு - தலைமுறை தலைமுறையாகவா? குழலி

தலைமுறை வலிகள் குழலி

ஹிந்து கட்டுரை நன்றி சுந்தரமூர்த்தி

இடஒதுக்கீடு பற்றி ஞானி குரல்வலை

இயலாதோருக்கு இடஒதுக்கீடு அனுராதா

இடப்பங்கீடு சில நியாயங்கள்! திரு

ஏன் வேண்டும் இட ஒதுக்கீடு… தருமி

நான் கண்ட மண்டல் கமிஷன். தருமி

சாதிகள் இருக்குதடி பாப்பா - முழுக்கட்டுரை தருமி

பூனைக்கு மணிகட்டும் காலம் ஆதவன் தீட்சன்யா

இட ஒதுக்கீடு குறித்து... கோவி.கண்ணன்

இட ஒதுக்கீடு எனும் ஆயுதம் சிவபாலன்

இடஒதுக்கீட்டின் வயது சில ஆயிரம் வருடங்கள் அசுரன் (தினகரன் கட்டுரை)

இடஒதுக்கீடு சில சிந்தனைகள் நேசக்குமார்

இடஒதுக்கீடு இன்னொரு தீண்டாமை ஒழிப்பு மகேந்திரன்.பெ

இடஒதுக்கீடு எவ்வளவு காலத்திற்கு? அறிவானந்தா

இட ஒதுக்கீடு - அச்சு ஊடகங்கள் நச்சு ஊடகங்களா? குழலி

இட ஒதுக்கீடு வேண்டும்! ஏனென்றால், சுந்தரவடிவேல்

இடஒதுக்கீட்டின் கணிதம் ரவிசங்கர் அருணாச்சலம் மொழியாக்கம் : கார்த்திகேயன் இராமசாமி

இடஒதுக்கீடு பிரச்சனை: தலித் - பிற்படுத்தப்பட்டோர்ஒன்றிணைவதற்கான ஓர் அரிய வாய்ப்பு நன்றி கார்த்திகேயன் இராமசாமி

இட ஒதுக்கீடு: நாய்கள்தான் அப்படி நாமளுமா? கல்வெட்டு

24 பின்னூட்டங்கள்:

said...

Kuzhali,

Excellent Post!!

Hats off to you!

said...

குழலி,
தொகுப்புக்கு மிக்க நன்றி!

said...

//எலிமினேஷன் முறையில் இதை செய்யலாம், எஸ்.சி/எஸ்.டி அல்லாத, உயர்சாதி அல்லாத எல்லோரும் இதர பிற்படுத்தப்பட்டவர்கள் தானே//

இதர பிற்படுத்தப்பட்டவர்கள் = OBC தானே ?

SC/ST, BC, OBC, FC, OC(Open competition) என்று ஐந்து வகையாக பிரித்துள்ளார்கள்.

இதில் SC/ST,BC,FC ஆகியோரை மொத்த என்னிக்கையில் கழித்தால் OBCயினரின் என்னிக்கை கிடைக்கலாம்.

அதுவும் OCயில வந்த இஸ்லாமியர், கிருத்துவர், உயர் சாதியினர் எல்லாரையும் சேர்த்து கழிக்க வேண்டும்.

said...

மனுக்களை விசாரித்து நீதி வழங்குவதால் அதை மனுநீதிமன்றம் என்று சொல்வது சரிதான். கோடிஸ்வரர்களின் பிள்ளைகள், பேரன்/பேத்திகள் பிற்பட்டோர் என்று நீங்கள் கூறுவதை நீதிமன்றம் கேள்வி கேட்கிறது. தலித்,பழங்குடி இட ஒதுக்கீட்டினை அது மறுக்கவில்லையே.இட ஒதுக்கீடே தேவையில்லை என்று அது கூறவில்லையே. இது இடைக்காலத் தடைதானே.ஆதிக்க சாதியினர் பிற்பட்டோர் என்ற பெயரில் சலுகை கோருவதைத் தான் அது கேள்விகுட்படுத்தியுள்ளது.
பின் எதற்கு இந்த ஒப்பாரிகளும், முழு அடைப்புகளும்.

said...

//கோடிஸ்வரர்களின் பிள்ளைகள், பேரன்/பேத்திகள் பிற்பட்டோர் என்று நீங்கள் கூறுவதை நீதிமன்றம் கேள்வி கேட்கிறது.
//
ரவி கலக்குறிங்க, ஏம்பா வலையுலகில் இருக்கும் ஓபிசிக்களே இதில் நீங்கள் எத்தனை பேர் கோடீஸ்வரர்கள், நீங்கள் இடஒதுக்கீடு பெற்றபோது உங்கள் அப்பா எத்தனை பேர் கோடீஸ்வரர்கள்? வலையுலகில் இருப்பவர்களை மாதிரி முதல்தலைமுறை கல்வியறிவு பொருளாதாரம் பெற்றவர்கள் கூட அவரவர்கள் சமூகத்தில் ஒரு சதவீதம் கூட இல்லையே, மிச்சம் 99% எப்படி இருக்கின்றார்கள்?

said...

//மனுக்களை விசாரித்து நீதி வழங்குவதால் அதை மனுநீதிமன்றம் என்று சொல்வது சரிதான்.
//
ரவி உச்ச நீதிமன்ற தீர்ப்பால செம உற்சாகத்துல இருக்கிங்க போல.... பயங்கரமா காமெடி செய்றிங்க உங்களுக்கு :-))) எங்களுக்கு :-(((

said...

http://www.socialjustice.in/

ஓபிசி, இடஒதுக்கீடு பற்றிய நிறைய தகவல்கள், தரவுகள், கட்டுரைகள் உள்ளன.

said...

குழலி,

தொகுப்பு கட்டுரைகளும், தலைப்புக் கட்டுரையும் அருமை.

சிப்பாய் வேலைக்கு போலிஸ் வேலைக்கு நாங்களும் போகிறோம் என்று சொல்வதற்கு 'முற்போக்கு' சிந்தனைகள் இடம் கொடுகாதது ஏன் என்ற தெரியவில்லை.

said...

எது எப்படியோ, இந்த 'இடைக்கால' தீர்ப்புக்கு இவ்ளோ ஆர்பாட்டம் தேவையில்லாதது. வேஸ்ட் ஆப் டைம் :[
புள்ளி விவரங்கள் அவங்க கேக்கர மாதிரி கொடுத்தப்பரம் இழுத்தடிச்சா, இந்த ஆர்பாட்டம் நியாயம்.

said...

கார்த்திக் ரமாஸ் மற்றும் சுந்தரவடிவேல் அவர்களின் பதிவுகள் இணைக்கப்பட்டுள்ளன

said...

Kuzhali I tink you are and politicians in TN are making loud noise over a this issue unnecessarily. This Bandh is not going to help even a single person time waste and money waste. I totally agree with Supreme court order. how can u ask for reservation without data to support it. Ur explanation of taking it from institute is not reliable

said...

SC/ST-க்கு வழங்கப்படும் சலுகைகளில் எந்த வித மாற்றமும் இல்லையே.

உங்க மனசாட்சியைத் தொட்டுச் சொல்லுங்கள், ஓபிசி பிரிவுகளில் உள்ள சாதி மக்கள் இன்னமும் நசுக்கப் படுகிறார்களென்று.

எம்.ஜி.ஆர் பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு என்று சொன்னபோது கிளம்பிய எதிர்ப்பு அறியாததா? குறிப்பாக ஓபிசி சாதியினர் இன்னமும் பிற்படுத்தப்பட்டவன் என்று சொல்லிக்கொண்டிருப்பது ஏமாற்றுத்தனம்

இந்த பந்த், வோட்டு வங்கிக்காக கருணாநிதி ஆடும் நாடகம்.

இப்போது விதித்திருப்பது, வெறும் இடைக்காலத் தடை மட்டுமே, காசுகள் பரிமாறப்படலாம், நீதிபதிகள் விலை பேசப் படலாம், அல்லது மிரட்டப்படலாம், ம்ம்...நம் இந்தியநாடு..

said...

// இது இடைக்காலத் தடைதானே.ஆதிக்க சாதியினர் பிற்பட்டோர் என்ற பெயரில் சலுகை கோருவதைத் தான் அது கேள்விகுட்படுத்தியுள்ளது.//

போக போக ஆதிக்க சாதியினர் (ஒரிஜினல்) & ஆதிக்க சாதியினர் (டூப்ளிகட்) என்று பிரிவுகள் உண்டு பண்ணுவாங்க போல இருக்கே!

குழலி! நீங்க ஒரு முறை Multi Level Caste System-ஐ உருவாக்கியவன் தான் உலகின் மிக பெரிய கிரிமினல் என்று சொன்னீங்க!
இப்போ ரவியின் கூற்றுப்படி பார்த்தா அந்த கிரிமினல்களை விட,
தங்களின் தேவைக்கேற்ப Caste level rearrangement மற்றும் restructuring பண்ணும் இவர்கள்தான் மகா பெரிய கிரிமினல்களாக இருக்கிறார்கள்.


//இடைக்காலத் தடைதானே//
//பின் எதற்கு இந்த ஒப்பாரிகளும், முழு அடைப்புகளும். //

ஒருத்தனை நோக்கி கொலைகாரன் கத்தியை கொண்டு குத்த வரும் போதே கத்த வேண்டும். அவன் குத்தி உயிர் போன பின்னாலே கத்த முடியுமா என்ன?

said...

Kuzali also add my blog http://reservationfaqs.blogspot.com in the list since it contains a lot of Data and arguements. thanks

said...

For once respect the court. Just because you haven't got the verdict in your favour, you can not go about complaining about the court.

Unfortunately disrespect to court is in the increase. Starting from Kaveri verdict, Mullaiperiyar and now on the reservation! The politician who are out there to support and implement the verdict and increasingly turning against for pure political gain. Poor India.

The judgement is only to stay the implementation for this year and if you are confident about the fundamental reason behind the reservation why moan about this stay?

Thank god that some of the judges who heard this case were from backward community, if not you would have even painted them being discriminatory.

said...

நான் ஒரு இந்து. தாழ்த்தப்பட்ட ஹரிஜன வகுப்பை சேர்ந்தவன். என்னையும் உயர்ஜாதி என்று ஏற்றுக் கொள்வார்களா பார்ப்பனர்கள்? அவர்கள் போட்டுக் கொள்ளும் பூனூலை நானும் போட்டுக்கலாமா? நான் அவர்கள் வீட்டு திண்ணையில் கொஞ்ச நேரம் அமர்ந்தால் திண்ணையை கழுவாமல் இருப்பார்களா பார்ப்பனர்? எனக்கு பார்ப்பனர் பெண் கட்டித்தருவார்களா?

said...

நிறையப் பதிவுகளைத் தொகுத்துத் தந்திருக்கிறீர்கள்,நன்றி.
முன்னர் 9 நீதிபதிகள் கொடுத்தத் தீர்ப்புக்கு எதிராக 2 நீதிபதிகள் தீர்ப்பளித்ததே தவறு.
இதில் தீர்ப்பைவிட தள்ளிப்போட்டு,அரசு ஆணை சரியா தவறா என்பதை விட்டுவிட்டு இவர்களது அறிவுரைகள்,இவர்கள் என்ன செய்யவேண்டும் என்றெல்லாம் சொல்வதற்கு இவர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் அல்ல.
மொத்தத் தீர்ப்பிலும் எப்படியாவது இடஒதுக்கீட்டிற்குக் குறுக்கு சால் ஓட்ட முயற்சிப்பதுதான் தெரிகிறது.பாராளுமன்றத்திற்கு முதுகெலும்பு இருந்தால் இவர்கள் நீக்கப்பட்டிருப்பார்கள்.

said...

//http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
//

As per this stats, 2849 seats in OC are vacant. OC is not for FC, it is for all. When people get a seat based on their marks,
Anna University would call all those who secured above the cut-off marks for conselling.
For example, if the cutoff mark for OC is 98%, anna university would a list of people (irrespective of their caste) who secured 98% and above for conselling. In this list all castes will come. During the conselling they can choose the college they want from the available list.

Also the self-financing colleges are affiliated to Anna University. So the government merit seats are available in those colleges also. I studied in Tamil Nadu college of engineering in merit quota only. when I studied 50% seats were management seats and 50% for government merit quota.

Kuzahili is tyring to fool everyone by hiding the reality and trying to project incorrect image.

said...

இட ஒதுக்கீடு என்பது சாதி ஒழிப்புக்கான ஒரு வழி.
மேட்டையும் , பள்ளத்தையும் சமமாக்க வேண்டும் என்றால், இரண்டும் சமமாகும் வரை, பள்ளத்தில் தான் மண்ணை கொட்ட வேண்டும்.
சில அறிவு ஜீவிகள் வெளியில் இருந்து மண்ணை கொண்டு வந்து, இரண்டிலும் சமமாக கொட்ட வேண்டும் என்கிறார்கள்.
அதாவது ஏற்ற தாழ்வுகள் உள்ள ஒரு சமுதாயத்தில் தகுதி தகுதி என்று கூச்சல் போடுகிறார்கள் பார்ப்பனர்கள்.
பார்ப்பனர்கள் 2000 ஆண்டுகள் படித்த பரம்பரையினர், தாழ்த்தப்பட்ட மக்கள் 50 ஆண்டுகளாகத்தான் படித்து வருகின்றனர். இருவரையும் ஒரே தராசில் வைத்து பார்ப்பது சரி அல்ல, ஓட்ட பந்தயத்தில் 20 வயது உள்ளவனையும்,10 வயது சிறுவனையும் ஓட விட்டு , தகுதி இருப்பவர்களுக்கு முதல் பரிசு என்பது எப்படி முறையாகும்.
ஆற்றின் ஓட்டத்தில் நீந்துபவர்களைவிட , எதிர் நீச்சல் போட்டு வருபவர்கள் கவனிக்கப்பட வேண்டியவர்கள்.

பழைய கணக்கு என்று கூறி பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டை தடை செய்த நீதிபதிகள் , அதே கணக்கை கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீடு தொடரும் என்று கூறி இருப்பது , இருவருக்குள்ளும் பிரிவினையை ஏற்படுத்தும் சூழ்ச்சி, ஏற்க்கனவே இட ஒதுக்கீடு 50 ஐ தாண்ட கூடாது என்றும் சொல்லி விட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்களில் முன்னேறிய வகுப்பினரை ஒதுக்கிவிடும் கிரிமிலேயர் இன்னொரு சூழ்ச்சி, பிற்படுத்தப்பட்ட மக்களையும், தாழ்த்தப்பட்ட மக்களில் முன்னேறிய வகுப்பினரையும் பொதுப்பட்டியலில் கொண்டு வந்து விட்டால், எதிர்காலத்தில் இட ஒதுக்கீட்டையே எடுத்து விடலாம் என்று பார்ப்பன நீதிபதிகள் சூழ்ச்சி செய்கிறார்கள். அதற்கு நாம் பலியாகி விட கூடாது.

said...

http://aalamaram.blogspot.com/2007/05/blog-post.html

said...

http://kaiman-alavu.blogspot.com/2007/04/blog-post_12.html

said...

From : K.R.Athiyaman, Chennai - 96
nellikkani.blogspot.com

To : Thriru.Ki.Veeramani Ayya Avargal, Chennai

Anbulla Ayya,

The creamy layer (that is, those who are
upper middle class and above) among
BC/SC/ST communities continue to enjoy
the benifits of reservation unashamedly.
(i hail from such a family).

We propose that economic criteria should
also be included as an additional qualification
for being eligible for reservation benefits.
Families whose annual income is above say,
Rs.1,80,000/- and where the parents are well
educated may be deemed as FCs. And many schools,
where annual fees are above Rs.60,000 may be
classified as FC schools.

Reservation was meant to be a short term
issue and never a permenent institution as
it has become now. And there should be a
standing committe consisting of eminent
jurists, educationalists and honest people
to perodically evaluate the effects/abuse
of reservation benefits. The whole process
should a dynamic one, not a static one, which
is now a vote bank issue and nutured by
vested interests. And there should be a
maximum limit for resrvation (and not the
present >70%), which should be gradually
brought down to zero.

And in promotion among govt staff only
seniority, merit and efficency should be
the criteria. Only one generation of any
family must be eligible for the benefits.
Subsequent generation must be deemed FCs.

Unfair reservation benefits to numerous
well off students has created resentment
and heart burn among FCs and many fair
minded people. The caste divisions has become
more rigid and divisive (esp in govt offices).

I am sure Thandai Periyar and Ambedhkar would
endorse my above views if they are alive today.
They were basicaly honest in all issues.

DK should have functioned as a bridge between
BCs and SCs (esp in rural areas) and established
peace committes for stopping caste clashes.
The aliented SCs have formed many organisations
of their own to fight for their rights, instead
of joinning DK. Blaming brahmins alone for all
the ills of the society will not solve any thing.

Thanks & Regards

K.R.Athiyaman
Chennai

said...

March 2006

Dear Friends,

The creamy layer among OBC/SC/ST have been
cornering the bulk of the reserved seats
at the cost of the poor among them.

Like every other subsidy or dole by govt
of India (incl labour policy and exit policy)
reservation policy is full of loopholes and
distortions, which is being effectively
utilised and safeguarded by vested intersts
masquerading as 'for the people'....

As the FCs are, in effect a minority (less than
30 % of population), all the political parties
are silent in this issue, as they vie with
each other for the votes of the majority
(OBC and SC/STs) of the populace.

The parliament will enact the bill into law
and courts cannot stop this as there is a
provision in the constitution.

This is called majoritarianism : imposing the
will of the majority of the population on the
minority ; and fundamental rights and fair play
be damned. Legal sanctity will make it look
like right thing.

In Nazi Germany, in 1933-45, the majority of the
German people did not object to the genocide
against the minority (Jews mainly). the German
state did it with the tacit approval of the
majority of the Germans. But it is a gross
violation of fundamental rights of the minorites.

Indians too have become so cynical that the
majority is ready to supress the monorites
rights.

I am sorry to say that this bill will be enacted
even if all the FCs fight against it, as the
majority's will (due to vote share) is being
imposed without any inhibition.

Unless and until a party like LP has two
thirds majority in parliament, no one can
stop these bills.

TN has shown the ugly way some decades back
and hence FCs in TN are resigned to their fate
and not much protest here. And it induces brain
drain and mass emigration of FCs. And the
caste feelings and divisiveness increses.

The only positive aspect currently is that
the BC/SC/ST youth are no longer under the
spell of castist leaders like Ramadoss (PMK) or
Krishnaswamy (SC/ST) and are slowly realising
the true nature of these cynical and selfish
leaders, who utilise the castist feeling for
their personal improvements. That the vote share
of these leaders is decreasing over the years,
is the only silver lining.

K.R.Athiyaman
Chennai -96

said...

http://payanangal.blogspot.com/2008/06/500.html

இடஒதுக்கீடு எவ்வளவு பலனளித்துள்ளது என்பதற்கான முக்கிய தகவல்கள் அடங்கிய பதிவு, பின்னூட்டங்கள் குறிப்பாக ஹரிகரன், புருனே உரையாடல் அம்பலப்படுத்துவது ஏராளம்