பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்

பாக்கிஸ்தான் தலைமை நீதிபதியாக ஹிந்து நியமணம் தட்ஸ்டமில் செய்தி தெரிவிக்கின்றது, ஆக இதனால் தெரிவது என்னவென்றால் மத அடிப்படைவாத நாடு என்று பொய்யாக இழித்தும் பழித்தும் சொல்லப்படும் பாக்கிஸ்த்தானில் இந்துக்கள் எத்தனை சுக வாழ்வு வாழ்கிறார்கள் என்பது புலப்படும் இந்துக்கள் அங்கே தலைமை நீதிபதியாக முடிகின்றதென்றால் அங்கே நிலைமை எப்படி இருக்கின்றது பாருங்கள்... இந்துக்கள் எத்தனை உயர்ந்த வாழ்க்கையோடும் உரிமைகளோடும் வாழ்கிறார்கள் என்பதற்கு ஒரு இந்து தலைமை நீதிபதியானதே சான்று.

அய்யகோ இந்த இந்திய ஊடகங்களும் மேற்கு ஊடகங்களும் தான் பாக்கிஸ்தானை மத அடிப்படை வாத நாடு அங்கு பிற இனத்தவருக்கு எந்த உரிமையும் இல்லை என்கிறார்கள், பாருங்கள் இந்துக்களின் சுக வாழ்வை, கோவிலில் கும்பாபிசேகம் செய்கிறார்கள், தலைமை நீதிபதியாகிறார்கள்.... இனியாவது பாக்கிஸ்தான் மத அடிப்படைவாத நாடு என்று சொல்லாதிர்கள், இந்துக்கள் சுகவாழ்வு வாழும் நாடு பாக்கிஸ்தான், யூசுப் யுகானா போன்ற கிறுத்துவர்கள் பாக்கிஸ்தான் கிரிக்கெட் அணியில் இடம் பிடித்துள்ளனர், இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.

பின்குறிப்பு
இந்தியாவில் ஒரு தலித் தலைமை நீதிபதியாகவும் ஒரு முஸ்லீம் குடியரசு தலைவராகவும் இருக்கின்றனர்

30 பின்னூட்டங்கள்:

We The People said...

கரீட்டு தல ;)

குழலி / Kuzhali said...

ஜெய் பின்குறிப்பு படிச்சிங்களா? :-)

We The People said...

படிச்சேன் தல... ஒரு கிருத்துவர் பிரதமராகவும் இருக்காரு ;) அதை விட்டுப்புட்டீங்களே!!

ஹோ! அப்படின்னு வெளிய சொல்லமுடியாதோ!!

Anonymous said...

உள்குத்து பலமா இருக்கு.

கால்கரி சிவா said...

//இந்துக்கள், முஸ்லீம்கள், கிறித்துவர்கள் என எல்லா மதத்தினரும் சுமுகமாக சுகவாழ்வு வாழும் நாடு தான் பாக்கிஸ்தான்.
//

குழலி, அடுத்த வேலைக்கு பாகிஸ்தானுக்கு போகலாம் என்கிறீங்க. :)))

Anonymous said...

Blasphemy and intolerance in Pakistan
Mon 19 Mar 2007
Insulting the prophet Mohammed in Pakistan is a capital offence, and defiling the Koran carries life imprisonment.

Now the Catholic Archbishop of Lahore is calling for the blasphemy laws to be repealed, saying they foster intolerance and result in grave miscarriages of justice.

Lawrence Saldanha believes the laws are used falsely to wrongly accuse Christians, Muslims and Hindus alike.

But the Pakistan Justice Minister has accused More 4 News of interfering in his country's sovereign affairs by asking about the effectiveness of the laws.

This report from Pakistan is by Kate Clark.

http://www.channel4.com/more4/news/news-opinion-feature.jsp?id=559

குழலி / Kuzhali said...

//Insulting the prophet Mohammed in Pakistan is a capital offence,
//
அங்கேயாவது முகம்மதுவை கலாய்ச்சா தான், இங்கேயோ செத்து போன மாட்டை உரிச்சாலோ, பசுவை கலாய்ச்சாலோ அதே தண்டனை, இந்து வெறி குண்டர்களால் வழங்கப்படும்.... மாடு பிறருக்கு உணவு என்பதை மறந்து(மறைத்து) மாடு வெட்டும் இடத்தை பிடுங்கிக்கொண்டு இடம தராமல் பிரச்சினை செய்து உருவாக்கிய மங்களூர் கலவரமெல்லாம் பார்க்கும் போது என்ன தோன்றுகின்றது உங்களுக்கு

குழலி / Kuzhali said...

//குழலி, அடுத்த வேலைக்கு பாகிஸ்தானுக்கு போகலாம் என்கிறீங்க. :)))
ஹி ஹி....

குழலி / Kuzhali said...

//உள்குத்து பலமா இருக்கு. //
ஹி ஹி.....

Anonymous said...

Kuzhali,

When did you visit our Pakistan. Thanks for giving real status of Hindus in Pakistan.

Also Christian Missoinaries treated like Heaven in Pakistan...

Why this Indian Army is fighting with Pakistan?

Why This Indian Army is fighting with China....

Foolish Indians...Please ask All indians to follow Pakistan.

Kuzhali Thondar paadai (!)
Islamabad

Anonymous said...

Chief Justice (muslim) in pakistan arrested and also in house arrest...

Muslims are treated very bad in Pakistan. Hindus are living well in Pakistan

Musharaf is trating muslim bad....

Hindus can apply for Pakistan Citizenship....

Am I correct Kuzhali....

ஜடாயு said...

என்ன குரூர காமெடி செய்வதாக எண்ணமா?

1947 பிரிவினையின் போது 12% ஆக இருந்த இந்து மக்கள்தொகையை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரத்தல்கள் மூலம் இப்பொது இருக்கும் 1%க்கு ஜிகாதிகள் கொண்டுவந்திருக்கின்றனர் பாகிஸ்தானில்,

கடந்த 1-2 ஆண்டுகள் ஏதோ கொஞ்சம் மனித உரிமை அமைப்புகள் பாகிஸ்தானிய இந்துக்கள் பற்றிப் பேச ஆரம்பித்திருப்பதால் குறைந்தபட்ச வாழ்க்கையாவது அங்கு இந்துக்களூக்கு சாத்தியமாகிறது. ஆனாலும் கொடுமைகள் தொடர்கின்றன.

சமீப காலத்தில் பாக் இந்துக்களுக்கு நிகழ்ந்த வன்கொடுமைகள்:

கசாப்புக் கடையாகிய கோவில்
http://pakistaniat.com/2006/10/11/pakistan-hindu-temple-karachi/

கற்பழிப்புகள்
http://stophonourkillings.com/index.php?name=News&file=article&sid=769

http://www.ppp.org.pk/Human%20Rights/28-2-2007.html

கடத்தல்கள், கொலைகள்
http://www.thenews.com.pk/top_story_detail.asp?Id=5043

இப்படி எழுத வெட்கமாக இல்லை?

Gopalan Ramasubbu said...

//1947 பிரிவினையின் போது 12% ஆக இருந்த இந்து மக்கள்தொகையை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரத்தல்கள் மூலம் இப்பொது இருக்கும் 1%க்கு ஜிகாதிகள் கொண்டுவந்திருக்கின்றனர் பாகிஸ்தானில்//

True and completely agree with you..but we can't blame Jihadis alone for this.Hindu's in Pakistan as well as in B'desh didn't have the guts to fight against Jihadi forces.They behaved like coward chickens.12% of Hindu population is significant amount of presence.They should have takenup arms.In the process, they would have been labelled as "Terrorist", but who cares..Life and self respect is important than some jokers opinion,isn't?. :)..It's high time that Hindutuva organisations like VHP,RSS,Bajrangdal and BJP act on this..they should send some of its cadres to Pak,B'desh and kazkhistan (Hindu's are targeted in Kazkhistan as well)to save Hindu's from Jihadi rebels instead of shouting some idiotic slogans like "Aganda Bharat" bulshit in India and misleadeing Indian public..let's hope for the best :)

Anonymous said...

//1947 பிரிவினையின் போது 12% ஆக இருந்த இந்து மக்கள்தொகையை கொலை, கொள்ளை, கற்பழிப்பு, துரத்தல்கள் மூலம் இப்பொது இருக்கும் 1%க்கு ஜிகாதிகள் கொண்டு வந்திருக்கின்றனர் பாகிஸ்தானில்//

1% சதவீதம் இருக்கும் இந்துக்களால் உச்சநீதி மன்ற நீதிபதியாக முடிகிறதா!! பாகிஸ்த்தான் ஜிந்தாபாத்!

அடச்சே...நான் அவசரப்பட்டு கராச்சிலேர்ந்து இந்தியாவுக்கு வந்துட்டேன்.

முஷாராப்ஜி பெரிய மனசு பண்ணி மீண்டும் பாகிஸ்தான் குடியுரிமை தந்தால் பேஷாயிருக்கும்

Anonymous said...

நான் இந்துத்துவ வெறியன் அல்ல. வணக்கம்.

அமுக
அவுஸ்திரேலியா

சீனு said...

//கரீட்டு தல ;)//

அகாங்...

//இப்படி எழுத வெட்கமாக இல்லை?//

குழலி எப்போது காங்கிரஸ்காரர் ஆனார்?

Anonymous said...

jinna is a gentleman and mushraf is good leader. pakistan ki jinthapad!

- athvani also said

எழில் said...

சிறப்பான பதிவு. நிகழ்வுகளை தாண்டி, நிகழ்வுகளை நடத்தும் தத்துவங்களை பார்க்கும் உங்களது ஆழ்ந்த அறிவு பிரமிக்க வைக்கிறது.

CAPitalZ said...

ஐயா,
உங்கள் கட்டுரை வாசிக்க நல்லாத் தான் இருக்கு. அனால், சும்மா ஒருவருக்கு பதவி கொடுத்துவிட்டால் மட்டும் சமதர்மம் என்று அர்த்தமில்லை.

இலங்கையில், கதிர்காமர் தான் வெளிநாட்டு அமைச்சராக இருந்தார். வேறு பல தமிழ் அமைச்சர்கள் இருக்கிறார்கள்.

ஏன் அந்தக் காலத்தில், வெள்ளைக்காரன் ஒரு பொம்மை அரசரை [அந்த நாட்டு குடிமகன், ஆனால் வெள்ளைக்காரன் சொல் கேட்பவர்] வைத்து எத்தனையோ நாடுகளை ஆட்சி செய்திருக்கிறான்.

ஏன் இன்றைக்கும் ஈராக்கில் இது தானே நடக்குது. இதைப் போல் தான் தெற்கு அமெரிக்க நாடுகளிலும் அமெரிக்க பல செய்தது.

_______
CAPitalZ
தமிழ் வலைப்பதிவு சேவை

குழலி / Kuzhali said...

//CAPitalZ said...
சும்மா ஒருவருக்கு பதவி கொடுத்துவிட்டால் மட்டும் சமதர்மம் என்று அர்த்தமில்லை.
//
வாங்க CAPitalZ, நீங்கள் வலைப்பதிவுலகிற்கு புதியவரா? வாழ்த்துகள், உள்குத்து என்ற பதத்தை கேள்விப்பட்டிருக்கின்றீர்களா? இதுவரை இல்லையென்றால் என்ன இனி தெரிந்து கொள்வீர்கள், சும்மா ஒருவருக்கு பதவி கொடுத்துவிட்டால் மட்டும் சமதர்மம் என்று அர்த்தமில்லை.என்று சொல்கின்றீர்கள், இது பாக்கிஸ்தானுக்கும் இலங்கைக்கும் மட்டும் தான் பொறுந்துமா இந்தியாவிற்கு பொறுந்தாதா? இந்தியாவில் கூட ஒரு முஸ்லீம் தான் முதல்குடிமகன், ஆனால் 2500முஸ்லீம்கள் கொல்லப்பட்டதும் இந்தியாவில் தான், சுதந்திரம் பெற்று 50 ஆண்டுகள் கழித்து இப்போது ஒரு தலித் தான் தலைமை நீதிபதி அதற்காக எல்லா தலித்களும் சுகவாழ்வு வாழ்கிறார்கள் என அர்த்தமா? ஆனால் சில இந்திய தேசியபிரியர்களும் அட ஏங்க நம்ம கேப்டன் பாக்கிஸ்தான் தீவிரவாதிங்க கிட்ட பேசும்போது அவ்வளவு இந்தியாவில் ஒரு முஸ்லீம் ஜனாதிபதியாக முடியுது, அட அவ்வளவு ஏன் இந்திய கிரிக்கெட் டீமோட கேப்டனே ஒரு முஸ்லீம் தான், ஆனா பாக்கிஸ்தான்ல ஒரு கிரிக்கெட் ப்ளேயராவது இந்து இருக்கானானு வசனம் பேசுனாரு, அவரு மட்டுமா? இப்பிடித்தானே நாட்டுபற்றாளர்கள் சமத்துவ ஜல்லி அடித்துக்கொண்டிருக்கிறார்கள், இனி இப்படி பேசமுடியுமா பாக்கிஸ்தானும் பங்காளிங்க தானே உசாராயிட்டாங்க....

சரி இந்த பதிவில் உள்குத்து எங்கேயிருக்கு கண்டுபிடிங்க பார்ப்போம் :-)

வஜ்ரா said...

"பாக்கிஸ்தானில் இந்துக்கள் அமோகமாக வாழ்கிறார்கள்"="இலங்கையில் தமிழர்கள் அமோகமாக வாழ்கிறார்கள்"=இந்தியாவில் தலித்துகள் அமோகமாக வாழ்கிறார்கள்"

எல்லாம் ஒன்றே.

எந்தத் தேசியவாதியும் சும்மா ஒரு முசுலீமை ஜனாதிபதி ஆக்கியவுடன் முசுலீம்கள் அமோகமாக வாழ்கிறார்கள் என்று சொல்வதில்லை. இந்தியத் துணைக்கண்டத்தில் பாகிஸ்தான், வங்கதேசத்தைவிட இந்தியாவில் வாழும் முசுலீம்கள் சிறப்பாக வாழ்கிறார்கள் என்று தான் சொல்கின்றனர்.

அதன் காரணம், பாகிஸ்தானிலோ, வங்கதேசத்திலோ உள்ள முசுலீம்களுக்கு இந்தியாவில் இருப்பது போல் குழலிகளும், திராவிடமும், கம்யூனிசமும், காங்கிரசும் இல்லை !! :D

Anonymous said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20070326095411&Title=International+News&lTitle=Tu%5D%F4h%D3f+%F9Nn%A7Ls&Topic=0

Please read for more status....

Anonymous said...

http://www.dinamani.com/NewsItems.asp?ID=DNB20070325112008&Title=International+News&lTitle=Tu%5D%F4h%D3f+%F9Nn%A7Ls&Topic=0


More information....

Anonymous said...

Ethuvum kamadi, kemmadi pannalaye???
Kaipullai.

ஆதி said...

இந்துக்கள் அமோகமாக வாழும் பாகிஸ்தானுக்கு திம்மிகள் இடம் பெயரலாமே?

முத்துகுமரன் said...

//இந்துக்கள் அமோகமாக வாழும் பாகிஸ்தானுக்கு திம்மிகள் இடம் பெயரலாமே? //

வந்தவந்ததான வெளிய போகணும்!!


அகண்ட பாரதம் அவ்வளவுதானா!!

குழலி / Kuzhali said...

//think about the liberlty to make fun on your own motherland.
//
யோவ் பரமபிதா, மீண்டும் அவதரிச்சிட்டியா? இன்னா ராசா இத்தினி நாள் எங்கிட்டு ராசா போயிருந்த. எதையெதையோ தாய் நாடுன்னு சொல்லிக்க அனாதையில்ல நாங்க...நீங்க வேணா சொல்லிக்கொள்ளுங்கள் அடுத்த வீட்டுக்காரியை அம்மா என்று, ஆனால் எங்களையும் அப்படித்தான் சொல்ல வேண்டுமென்று வற்புறுத்தாதீர்கள்.

//Bharat is more liberal to allow backdoor entries like you fuming the venom on fellow hindus. so, be grateful
//
தோடா நாங்க சொல்றோமாம், பூணுல் போடும்போது ஒரு மந்திரம் சொல்வாங்களே அதுக்கு இன்னா அர்த்தம் ராசா? மொத்தமா ஒரு பெரும் மக்கள் கூட்டத்தையே கேவலப்படுத்தறது தானே அது, முதலில் இந்து மதத்தில் எல்லோரையும் சமமாக்குங்க *சுரு(இணைய நாகரிகம் கருதி மசுரு வில் 'ம'க்கு பதில் * வைத்துள்ளேன்), பிறகு பேசலாம் நாங்க திட்டுறோங்கறதை...

இந்துக்கள் மேல இவ்ளோ கரிசனம் இருக்கே, அப்புறம் இன்னாத்துக்கு ராசா யேசு போட்டோவை போட்டிருக்க "ஜெயராமன்" போட்டோவை போட வேண்டியது தானே.

Anonymous said...

The Hindu Judge is posted as an acting Justice only. And the removed Muslim judge has said this Hindu judge is more a Muslim than Muslims so that he would get justice from him. There is a political motive in appointing a Hindu judge as Justice. In Pakistan, Hindu judges are appointed to hear cases related to Hindus Vs Hindus. Here as an exception, Musharsaff has posted the Hindu to hear the case related to the removed Muslim judge so that the judgement is expected to be unbiased. Mushraff has no faith in another Muslim Judge to hear the case of the removed Muslim judge. This is the reason for the appointment of a Hindu judge as an active judstice. In the last sixty years this is the first time a Hindu is posted as acting
Justice and that too with a motive and NOT for providing an opportunity to a Hindu to hold a higher post.

Amar said...

தல, அவசரப்பட்டு எழுதிட்ட.

அந்த ஹிந்து நீதிபதி ஆக்டிங்க ஜட்ஜுங்க. தலைமை நீதிபதியை நீக்கிய பிரச்சனை முடிவுக்கு வந்தவுடன் விரட்டிவிடுவார்கள்.

அதுமட்டுமில்லை, ஓரூ ஹிந்து/காஃபிர் அந்த நாட்டு சனாதிபதியாக முடியாதுங்க. ஜியா உல் ஹக் காலத்திலேயே சட்டம் போட்டு வச்சிருக்காங்க. இந்தியாவுல அந்த மாதிரி சட்டம் இருக்கோ ?

அதெல்லாம் நம்ம ஜல்லிவீச்சுக்கு எங்க தடையா இருக்க போவுது....இன்னும் மூனு வருசத்திக்கு நாம் தான் தமிழ்மன அறிவுகுஞ்சு.

இந்த ஒரு பதிவ வச்சிக்கிட்டே பின் நவீனத்துவ சிந்தனைசெல்வர்களின் தலைவர்கள் ஆகிவிடலாம்.


ஜெய் கிந்து.

குழலி / Kuzhali said...

http://ezhila.blogspot.com/2007/04/blog-post_8388.html

அட இதுக்கு ஏன் கவலைப்படுகின்றீர் அதான் ஒரு இந்துவை தலைமை நீதிபதியா நியமிச்சிட்டாங்களே பாக்கிஸ்தானில் அப்புறமென்ன.... குஜராத்ல 2000 முஸ்லீமை கொலைசெய்து எரித்த போதும் ஒரு முஸ்லீம் அப்துல்கலாம் தானே இந்தியாவுக்கே குடியரசு தலைவர், ஒரு முஸ்லீம் குடியரசு தலைவரா இருக்குறார் அது எவ்ளோ பெரியவிசயம் இதுல 2000 முஸ்லீம் கொல்லப்பட்டது ஒரு பெரியவிசயமா? அது போல ஒரு இந்து பாக்கிஸ்தானில் தலைமை நீதிபதியா இருக்கார், அவ்ளோ சுதந்திரம் கொடுத்திருக்கிற நாட்டுல போய் இந்துக்களை வீட்டை விட்டு துரத்துறாங்கன்னு சொல்றீங்களே நீங்க வேற இந்து தலைமை நீதிபதியாக இருப்பதை பார்த்து சந்தோசப்படாம அங்கொன்றும் இங்கொன்றுமாக நடப்பதை பெரிது படுத்துகின்றீர்....

யெய்யா இது முழுக்க முழுக்க உள்குத்து பின்னூட்டம், என்னையை உருட்டாதிங்க உடனே.... பார்க்க
http://kuzhali.blogspot.com/2007/03/blog-post_8886.html