தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்ன பிற
சிந்து சமவெளி நாகரிகம், மஞ்சளாற்று நாகரிகம், நைல் நதி நாகரிகம் எல்லா நாகரிகத்தையும் விட இப்போ பேசிக்கிட்டு இருக்காங்களே இங்கே நாகரிகம் நாகரீகம் இருக்கே சாமி தாங்கலைடா.... நாகரிகம்னு எதை எதையெல்லாம் சொல்கிறார்கள்.... வழக்கம் போல வெகு சன ஊடகங்களினால் கட்டமைக்கப்பட்டுள்ள அதே பாசாங்கு நாகரிகம், போலித்தன நாகரிகம் இங்கேயும், வார்த்தைகளில் மட்டும் நாகரிகம் இருந்தால் போதும் ஆனால் கருத்தில் இருக்கத்தேவையில்லை இது தான் பச்சை நாகரிகம் இங்கே, "இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கணவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்.... இழிபிறவியும் தேவடியாமவனேயும் ஒரே பொருள் தானே இந்த எழவில் இழிபிறவி எப்படி நாகரிகமானது, இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது, வரிக்கு வரி இழிபிறவி என்ற எழுத்துக்களை படிக்கும்போது அதை எப்படி எந்த வித உறுத்தலும் இல்லாமல் படிக்க முடிகிறது? தேவடியாபையா என்ற எழுத்திற்கு எத்தனை அருவெருப்பு படுகிறோமோ அதே அருவெறுப்பு எப்படி இழிபிறவி என்ற எழுத்துகளுக்கு படாமல் நம்மால் தாண்டிப்போக முடிகிறது? எப்படியாக இந்த கட்டமைப்பு உருவானது?
திருநங்கைகளிடம் அசிங்கமாக ஆபாசமாக பார்த்து, பேசி இடுப்பில் கைவைக்கும் கணவான்களை "நண்பரே நீங்கள் செய்வது மிக தவறான செயல், தாங்கள் இப்படியெல்லாம் செய்யக்கூடாது, காந்தியை நினைத்து பாருங்கள், ஸ்ரீராமபிரானை நினைத்து பாருங்கள் அவர்களெல்லாம் எத்தனை ஒழுக்க சீலர்கள், தாங்கள் ஏன் இப்படி தவறுசெய்கிறீர்கள், நாங்களும் மனிதர்கள் தானே, எங்களை மட்டும் ஏன் இப்படி கேவலப்படுத்துகிறீர்கள்" என்று கதாகாலாட்சேபம் செய்தால் அது நாகரிகம் அப்படித்தானே?, அந்த நிலையில் இப்படியான கதாகாலாட்சேபம் செய்ய இயலுமா? "அடிங்கோ தேவடியாபயலே..." என்று வாயில் வருமா? சே... சே.... என்ன இருந்தாலும் அநாகரிகமாக கை வைத்தவனை அதைவிட அநாகரிகமாக தேவடியாபயலே என்று திட்டுவது அநாகரிகத்திலும் அநாகரிகம் என்று சொல்கிறோம், ஒரு வேளை "இழிபிறவி" என்று அறிவுறுத்தியிருந்தால் நாகரிகமாக இருந்திருக்குமோ?
ஏற்கனவே சமூகத்தில் தவறாக உருவகப்படுத்தப்படிருக்கும் திருநங்கைகளை அவர்கல் எல்லாம் பாலியல் தொழில் செய்து பெண்களை வைத்து தொழில் நடத்துகிறார்கள் என்று மொத்தமாக சாணியடித்தால் சாணியடிப்பவரின் ஒழுக்கத்தையும் சந்தி சிரிக்கத்தான் வைப்பார்கள். இதில் என்ன அநாகரிகம்? திருநங்கைகளுக்காவது சமூகத்திலிருந்து ஒதுக்கல், படிப்பு, தொழில் இன்ன பிற என்று எந்த ஒத்துழைப்பும் கிடைக்காமல் சோற்றுக்கே வழியின்றி வேறு வழியின்றி பாலியல் தொழிலில் சமூகமே தள்ளிவிடுகிறதென்றால் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமாக இருக்கும் சிலர் இலட்சக்கணக்கில் வாங்கியவர்களுக்கும்/வாங்குபவர்களுக்கும் என்ன விளிம்புநிலை பிரச்சினை? திருநங்கைகளை பாலியல் தொழிலாளிகளாக மட்டுமே பெரும்பாலும் திரைப்படங்களிலும் காட்சி ஊடகங்களிலும் காண்பிப்பவர்கள் கன்னட பிரசாத் போன்றவர்களின் 'தொழில்' மூலாதாரமான அரிதாரங்களை அப்படி ஒரு படத்திலாவது காண்பித்திருப்பார்களா? காண்பித்துவிடத்தான் முடியுமா? திருநங்கைகள் என்றால் லிவிங் ஸ்மைல் மட்டும் வலைப்பதிவில் வந்து சவுண்டு விடுவார், மிஞ்சி மிஞ்சி போனால் விகடனிலோ ரிப்போர்ட்டரிலோ ஒரு கட்டுரை ஆவேசமாக வரும், ஆனால் சில அவர்களை காண்பித்தால் செருப்படி அல்லவா விழும், திரைப்படத் தொழிலே செய்ய முடியாதே, சோத்துக்கே சிங்கியடிக்கும் நிலைமையாகிவிடும், அதனால் பொத்திக்கொண்டு போக வேண்டியது தான்.
உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம்.
தொடர்புடைய சுட்டிகள்
பத்தினி பதிவிரதை ராதிகா R. சரத்குமாரும், பாதக அலிகளும்
விளிம்புநிலை மாந்தர்களும் ஊடகச் சார்புநிலைகளும்!
25 பின்னூட்டங்கள்:
nan elutha ninaichen. ninga eluthiddinga.
//nan elutha ninaichen. ninga eluthiddinga.//
நீங்களும் எழுதுங்க..... நாகரிக கணவான்களுக்கு புரிகிறதா என்று பார்ப்போம்
this is already written by potti kadai last month.
sooriyan.
//this is already written by potti kadai last month.
sooriyan.//
புதுசில்லை தான், அதன் தொடர்ச்சி என வைத்துக்கொள்ளுங்களேன், இன்றைக்கு வந்த லிவிங்ஸ்மைல், இலவசகொத்தனார் பதிவிற்கு இது தேவைப்படுமென நினைக்கிறேன்.
குழலி:
இந்த விதயத்தில் நான் மாறுபடுகிறேன் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
தேவடியா மகன் என்பதும் இழிபிறவி என்பதும் ஒன்றல்ல. தேவடியா மகன் என்பது ஒரு வசைச்சொல்லாயினும் அது ஆணாதிக்க சிந்தனையோட்டத்தில் எழுந்த இழிபிறவியின் ஒரு வகையினை மட்டுமே குறிக்கும் சொல்.
ஆனால் பிறப்பின் மூலமே எல்லாம் தீர்மானிக்கப்படுவதாகவும், பிறக்கும் இடம் தலையா, காலா என்பதிலும், பிறப்பு ஒன்றா இரண்டா (த்விஜனன்) என்று பிறப்பைச் சுற்றிக்கட்டப்பட்ட பார்பனீயக் கருத்தாடலில் இழிபிறவி என்ற வார்த்தை கொள்ளும் பொருள் விரிந்தது.
இழிபிறவி என்பது பார்பனீய-ஆணாதிக்க சிந்தனையாடலின் கற்பிதம்; தேவடியா மகன் என்பது ஆணாதிக்க கற்பிதம். இரண்டவது மாறலாம்; முதலாவது மாறுவதற்கான சாத்தியக்கூறுகள் தென்படவில்லை.
//பார்பனீயக் கருத்தாடலில் இழிபிறவி என்ற வார்த்தை கொள்ளும் பொருள் விரிந்தது.
//
அய்யய்யோ இழிபிறவியின் பொருள் தேடினால் அது தேவடியா மகன் என்பதையும் விட மோசமானதாக இருக்கிறதே....
//"இழிபிறவி" என்று மூத்த பதிவர்கள், வயசில் மூத்த பதிவர்கள் இன்ன பிற நாகரிக கனவான்கள் எல்லாம் எழுதலாம் தப்பில்லை, அதில் எந்த தரக்குறைவும் இல்லை, ஆனால் தேவடியா மவனே என்பது ஆபாசம் அநாகரிகம்....//
தேவடியா மவனே என்பதும் இழிபிறவி என்பதும் ஒரே பொருள் இல்லை. இழிபிறவி என்ற சொல்லை உபயோகித்தவர்களில் நானும் ஒருவன். நான் உபயோகித்தது தனது செயலால் இழிந்த பிறவி அல்லது ஜன்மம் என்ற பொருளில். இந்த இடத்தில் பிறவி என்பது ஒரு மனிதரை குறிக்கும் ஆகுபெயர். இழிந்த என்பது பெயரெச்சம். இழிந்த பிறவி என்பது புணர்ச்சி விகாரத்தால் இழிபிறவியானது.
அதுவும் நான் குறிப்பிட்ட இழிபிறவி தனது செயலாலேயே இழிந்து போனது என்பதை நியாய உணர்ச்சி கொண்ட யாருமே ஒத்து கொள்வார்கள்.
ஆனால் தேவடியா பையன் என்று ஒருவரை குறிக்கும்போது அவரது தாயை இழிவாகக் குறிப்பிடுகிறோம். ஆக, இரண்டுக்கும் மலைக்கும் மடுவுக்குமான வித்தியாசங்கள்.
அன்புடன்,
டோண்டு ராகவன்
குழலி தொடர்புடைய மற்ற பதிவுகளை இன்னும் படிக்கவில்லை. உங்களது பதிவின் நோக்கம் சரியானது.
தங்கமணி குறிப்பிடுவது போல இழிபிறவி என்பதன் பொருள் பார்ப்பனீய தன்மையும் ஆணாதிக்கமும் கலந்தது. நமது பல 'கெட்ட வார்த்தைகளில்' (இந்த பதமே சரியானதா என தெரியவில்லை) பார்ப்பனீயதன்மை இருப்பதை காணலாம்.
பிறப்பின் அடிப்படையில் கேவலப்படுத்துவது என்பது செயலில் மட்டுமல்ல, எண்ணங்களை வெளிப்படுத்தும் வார்த்தைகளில் இன்னும் வழக்கத்தில் இருக்கிறது.
:-) முற்றிலும் குழலி வகை இல்லாத குழலி பதிவு. நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிப்பது போன்ற உணர்வு. வேலைப்பளுவா?
என்னுடைய கருத்தையும் கொத்தனாரின் பதிவில் சொல்லியிருக்கிறேன். அது இங்கும் பொருந்தும்.
ஆங்கில ஆபாச சொற்கள் கூட வெர்ரி.....டீசண்டாமே ?
:)
//நீண்ட நாட்கள் கழித்து உங்கள் பதிவைப் படிப்பது போன்ற உணர்வு. வேலைப்பளுவா?//
ஆமாங்க ராகவன், வேலைப்பளு அதிகமாக உள்ளது, இன்னும் கொஞ்ச நாள் அப்படித்தானிருக்கும், அதுவரை கொஞ்சம் பதிவுகளை தள்ளிவைத்திருந்தேன், இருந்தாலும் நேற்று கை அரித்துவிட்டது....
டோண்டு அய்யா "இழிபிறவி" என்பதற்கு உங்கள் விளக்கம் கண்டேன், இது மாதிரியான லாஜிக்கில் போலி வந்து நான் தேவடியாமகனே என்று கூறியது திட்டுவதற்கு அல்ல, பாராட்டுவதற்குதான், தேவடியாமவன் = தேவன்+அடியார்+மகன், தேவர்களுக்கு அதாவது கடவுளுக்கு அடியவர்களின் மகனே என்று பாராட்டினேன் என்று போலியும் பொருள் கூறிவிடும் அபாயம் இருக்கிறதுங்க. சில மாதங்களுக்கு முன் ஒரு புனித பிம்ப வலைப்பதிவர் (நக்கலுக்காக சொல்லவில்லை, அவர் நெஜமாலுமே அப்படித்தான்) உடன் சாட் செய்து கொண்டிருந்தேன் , அந்த உரையாடல் இங்கே....உங்கள் பார்வைக்கு
me: இப்போ இழிபிறவினு திட்டுறதுக்கும் தேவடியாமகனே திட்டுறதுக்கும் பொருள் ஒண்ணுதான்
1:06 AM இழிபிறவினு திட்டுறவன் டீசண்டானவன்
தேவடியாமகனேனு திட்டுறவன் அநாகரிகமாணவன்
இது தான் நம்ம அளவுகோள்
XX: கரெக்ட்
me: என்னை பொறுத்தவரை இழிபிறவின்னு திட்டுறவன் டீசண்டும் கிடையாது
XX: நீங்களே கொஞ்சம் யோசிச்சு பாருங்க இந்த ரெண்டு வார்தையில எது கேவளா இருக்குன்னு
1:07 AM me: தே.ம. திட்டுறவன் இன்டீசன்டும் கிடையாது
ஆனா நாம என்னமோ இப்படி சொல்லிக்கிறோம்
டீசண்ட்டு இன் டீசண்ட்டுனு
XX: அவரவர் மனசு தாங்க
1:08 AM me: இழிபிறவியும் தே.ம. க்கும் அர்த்தம் வேற வேறயா??
இரண்டும் ஒன்னு தான்
அப்புறம் இழிபிறவி என்ன டீசன் ட்டு
XX: என்க்கு தெ.ம கூப்பிடவன் கேவலா தெரியரான்
me: தே.ம. என்ன இன் டீசண்ட்டு
அதான்
கொடுமை
ரெண்டுக்கும் அர்த்தம் ஒன்னு தான்
ஆனா தே.ம.னு கூப்பிட்டா கேவலாமம்
போய் யோசிச்சி பாருங்க
XX: அப்படியா?
me: நல்லா இன்னைக்கு ராத்திரி
1:09 AM XX: யார் சொன்னா?
me: இழி பிறவிக்கு வேற என்ன அர்த்தம்
?
சாமி எந்த ஊருப்பா நீங்க
XX: இழின்னா என்னங்க ?
me: கொடுமைடா சாமி
இழி ன்னா இழிவு
இழிவுனா அசிங்கம்
1:10 AM அசிங்கமாக பிறந்தவன்
அசிங்கம்னா என்னனு கேட்காதிங்க
XX: அதில எங்க தெவிடியா வந்தது
me: போய்யா
வெண்ணை
XX: கேவலமானவன்
me: கேவலாமன பிறப்புன்னா என்ன??
முறையற்ற பிறப்புனு அர்த்தம்
1:11 AM XX: ஓ அப்படி மீனிங்க் எடுக்கனுமா
me: முறையற்ற பிறப்புனா என்ன அர்த்தம்
எடுக்கனுமில்லை
XX: என்னமோ போங்க
me: அதுதான் மீனிங்க
நீங்க பாட்டுக்கும் யாருகிட்டயாவது போய் இழிபிறப்பேனு சொல்லிடாதிங்க
me: ஜோட்டாலே அடிப்பான்
XX: கெட்ட வார்தை தான் நிறைய கத்துக்கொடுக்கறாங்க
me: ராசா உனக்கு இழிபிறப்புக்கு அர்த்தம் தெரியலைனா அதுக்கு என்ன செய்ய முடியும்
1:12 AM இப்போ சொல்லு தலைவா
XX: ரெண்டும் தப்பு அர்த்தம் அதுவாக இருந்தால்
me: என்னா நொன்னை அர்த்தம் அதுவாக இருந்தால்
போய் கேளுய்யா தமிழ் தெரிஞ்சவங்ககிட்ட
XX: அட நெஜமாக வே தெரியாதுங்க
me: இழிபிறப்புக்கு அர்த்தமென்னனு
1:14 AM XX: கேட்டுட்டு வரேன் நாளைக்கு
சரி நம்மை எப்பவுமே கொஞ்சம் வித்தியாசமா பார்க்குற ஆளு அவர், அதனால வேற எங்க இரண்டு பேருக்குமே தெரிந்த இன்னொரு பொது ஆளிடம் கேட்போமென்று கேட்டேன்... அதை அப்படியே அவருக்கு காப்பி செய்தேன்
YYY: சொல்லுடா
me: மச்சி
இழிபிறப்புக்கு என்னடா மீனிங்
YYY: ம்...
தே. ம.
XX: அட
1:16 AM இது வெற லவ் டிஸ்கஸன்
வேற ஓடுச்ச
me: இதெல்லாம் தெரியாது ஆனா எது டீசன்ட்டு எது இன் டீசண்ட்டுனு பேச வந்துடுவாங்க
XX: எனக்கு தெரிஞ்ச கெட்ட வார்தை லிஸ்டல அது வரல தல
1:15 AM me: அதான் உங்களுக்கு தெரிஞ்ச
me: நீங்க நல்ல வார்த்தைனு உங்களுக்குள்ளே நினைச்சிக்கிட்டு இருகறதுக்கு மீனிங் வேற இருக்கு
இதே மாதிரி சமூகத்துல நீங்க நல்லதுனு நினைக்கிறதுல அசிங்கம் நிறைய இருக்கு
1:19 AM நீங்க அசிங்கம்னு நினைக்குறதுல நல்லது நிறைய இருக்கு
போக போக புரியும்
பை
XX: ஹூம் பன்ச் டைலாக்
//தேவடியாமவன் = தேவன்+அடியார்+மகன், தேவர்களுக்கு அதாவது கடவுளுக்கு அடியவர்களின் மகனே என்று பாராட்டினேன்//
அட.. இது தாங்க உண்மை! அப்படித்தான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
விளக்கத்திற்கு நன்றி!
1. அவன் ஒரு மாடு. என்னத்த சொன்னாலும் காதுலே ஏறாது.
2. இல்லீங்க அவரு பசு மாதிரி.
3. மொத்தத்திலே குறிப்பிடப்படும் ஜந்து ஒன்னுதான்.
//இழிபிறவி நாகரிகமான எழுத்தாக இருக்கும் போது தேவடியாமவனே மட்டும் எப்படி அநாகரிகமானது//
அதானே?
காரமான எழுத்துக்கள்.
பதிவை விட அந்த Chatting சூப்பர்
கருப்பு has left a new comment on your post "தேவடியா மவனே, இழிபிறவி, நாகரிகம், விளிம்புநிலை இன்...":
திராவிடர்களுக்கு மட்டுமே சொந்தமா தேவடியா மகன் என்ற வார்த்தையா? ஏன் பாப்பார (வெட்டப்பட்டுள்ளது) இந்த வார்த்தைகளை உபயோகித்ததே இல்லையா?
அதேபோல இழிபிறவி என்ற வார்த்தைகள் பாப்பானுக்கு மட்டுமே சொந்தமானதா? ஏன் திராவிடன் உபயோகித்தால் பாப்பான் கேஸ் போடுவானா? திட்றதுன்னு முடிவாயிட்டா எப்படித் திட்டினால் என்ன? எல்லாம் ஒன்றுதான்.
என்னங்கய்யா கூத்து இது?
ஆடுமாடு மேய்த்தபடி பஞ்சம் பிழைக்க வந்த பாப்பார (வெட்டப்பட்டுள்ளது) திராவிடர்களை "வைப்பாட்டி மகன்கள்" என்று சொன்னார்களே? அப்படி என்றால் திராவிடர்களின் அம்மாக்கள் எல்லோரும் விபச்சாரிகள் என்று அர்த்தமா? இதற்கு பதில் கூறுவா(வெட்டப்பட்டுள்ளது) நோண்டு?
சண்டாளன் என்ற பெயரில் ஒரு பிரிவினரையே தள்ளி வைத்து இருந்தார்களே இந்த பாப்பார (வெட்டப்பட்டுள்ளது) அதற்கு என்ன அர்த்தமாம்?
------------------------
கருப்புவின் பின்னூட்டம் ஆங்காங்கே வெட்டப்பட்டுள்ளது, முதலில் இதை வெளியிட விருப்பமில்லை தான் ஆனாலும் ஆங்காங்கே வெட்டி அப்புறம் **** போட்டால் பின்னூட்டம் நாகரிக கணவான்களின் அளவுகோல்களின் படி நாகரிகமாகிவிடுமே.... அது எப்படி இருக்கும் என்பதற்காகத்தான் இந்த வெளியிடுதலே, ஆங்காங்கே **** போட்டு வெட்டினால் கருப்பு என்ன சொல்ல வருகிறார் என்று புரியாதா என்ன?? ஆனாலும் *** போட்டு வெட்டி போட்டால் அது நாகரிகம் அப்படித்தானே???
கருத்து எப்படி இருந்தாலும் பரவாயில்லை ஆனா வார்த்தையில் நாகரிகம் வேணுமாம். என்ன எழவு நாகரிகம்டா சாமி...
நல்ல பதிவு.
டோண்டு:
//இழிந்த பிறவி என்பது புணர்ச்சி விகாரத்தால் இழிபிறவியானது//
இலக்கணமா பேசினாலும் அநாகரீகமா தான் தெரியுது :)).
//அதுவும் நான் குறிப்பிட்ட இழிபிறவி தனது செயலாலேயே இழிந்து போனது என்பதை நியாய உணர்ச்சி கொண்ட யாருமே ஒத்து கொள்வார்கள்.//
ஆகா!! சூப்பர்!
தங்கமணியின் அருஞ்சொற்பொருள் விளக்கம் அருமை.
குழலி,
பெரிய பெரிய விஷயம் எல்லாம் ரொம்ப simpleஆ ஆக்கிடரீங்க. ஆனா அது simplify ஆனதுக்கு அப்புறம் எப்பிடியோ உங்களுக்கு சாதகமாவே இருக்கு!!!
எல்லா மொழியிலயும் கலாச்சாரத்திலும் இருக்கிறதுதானே இது? சில வார்த்தைகள் பெரும்பான்மையான மக்களால் நிராகரிக்கப்படுகிறது அல்லது marked as inappropriate. Officeல I can say 'I am screwed'. ஆனா I am f*****னு சொல்ல முடியுமா? Generally it is considered a cruder expression.
தேவடியா பையன்னு சொன்னாலும் 'நாகரீகமா' விபச்சாரியின் மகன் இல்லை 'தன் அன்னை ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண்களுடன் உறவு கொண்டதால் தந்தை பெயர் தெரியாத செல்வன்' என்று கூறினாலும் எல்லாம் அநாகரீகமான attack தானே? ஆனா இழிபிறவிக்கு இப்படி ஒரு அர்த்தத்தை நிறைய பேர் எடுத்துக்குவாங்கன்னு தோனலை. நான் எடுத்துக்கலை.
கருத்து, பேச்சுன்னு பிரிக்காம பொதுவா நாகரீகமா நடந்துக்கோ, கருத்துல சூடா இருந்தாலும், சொல்ரப்போ நல்ல விதம சொல்லிக்கோ, பேச்சு சூடா இருந்தாலும், அடுத்தவரை புண்படுத்தாமல் பேசிக்கோங்கிறதுதான் என் நிலை.
சுவாமி
piss off mate,
Dont bloody cook-up shit old stories and create f**king cheap publicity here.
You know what...you got f**king attitude problem, mate?
I get screwed everyday at the office and I yell at my boss often..."F**k off G" dont give me anymore poor old C**ts.
How decent it is...But my boss is a crazy lucky B******D. cos he drives one classic f*****G Jag mate.
பகுத்தறிவு வெங்காயப் பாசறையில் பயின்றவர்களால் வேறு எப்படி சிந்திக்க முடியும்?
கருத்து, பேச்சுன்னு பிரிக்காம பொதுவா நாகரீகமா நடந்துக்கோ, கருத்துல சூடா இருந்தாலும், சொல்ரப்போ நல்ல விதம சொல்லிக்கோ, பேச்சு சூடா இருந்தாலும், அடுத்தவரை புண்படுத்தாமல் பேசிக்கோங்கிறதுதான் என் நிலை.
சுவாமி
Swamy, some people think they have the fundamental right to write or say anything about others or another person, however false or defaming it may be, because they are 'marginalised' or they represent the 'marginalised'.
Some people concur with this.
You do not seem to understand
this. It is not a question of decency or indecency in speech
or writing but a question of the
right to lie and defame, right to
indulge in false propoganada etc.
For example it is permissible
for some to brand all brahmins
as evils but it is not permissible
to show even one transgendered person as a pimp/prostitute.
Because hating brahmins is a
'politically correct' position.
Try to understand such views as
'politically correct' jalliadis.
ravi srinivas
இதே இழையில் எழுதப்பட்ட ரவியின் பதிவில் இடப்பட்டப் பின்னூட்டம். பொருத்தப்படு கருதி இங்கும் இடப்படுகிறது.
ரவி
இழிபிறவியை யார் யார் இணையத்தில் பயன்படுத்துகிறார்கள் என்ற கணக்கு என்னிடம் இல்லை. டோண்டு பயன்படுத்தியதை அவர் சொன்னபின் தான் அறிந்தேன். ஆனால் பிறப்பை முன்வைத்து மனிதனைப் உயர்த்துவதும், தாழ்த்துவதும் பார்பனீயக் கருத்துருவாக்கம் என்பது என் புரிதல். இதில் நீங்கள் எவ்வளவு தூரம் உடன்படுகிறீர்கள் என்பது என்னுடைய பிரச்சனை இல்லை. ஆனால் சண்டாளனும், பறையனும் உண்டானது பிறப்பினால் தான்; அவர்களது பிறப்பினாலேயே அவர்கள் இழிவானவர்களாகக் கருதப்படுகிறார்கள். 'இழிபிறவி' இணையத்தில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது, நடைமுறையில் எப்படிப் பயன்படுத்தப்படுகிறது என்பதை ஆராய்வதல்ல என்னுடைய பின்னூட்டம்.யாரும் வசைச்சொற்களைப் பொருளுணர்ந்து திட்டுவதில்லை; தேவடியா மகன் என்று திட்டுவோர் ஒருவனது தாயை யோசித்து இந்த வார்த்தையைத் திட்டுவதில்லை; அதே நேரம் அந்தச் சொல் உருவான சிந்தனைத்தளம் ஆணாதிக்க மனநிலையில் தான் என்று புரிந்துகொள்கிறேன். அதே போல fuck you போன்ற வசைகள் அதே அர்த்தத்தை உணர்ந்து சொல்லப்படுவதில்லை; ஆனால் உடலை, கலவியின்பத்தை இழிவாகவும், கண்டனத்து உரியதாகவும் நினைக்கும் மதவழிப்பட்ட சிந்தனைத் தளத்தில் இருந்து பிறந்ததாகப் புரிந்துகொள்கிறேன். அப்படியே இழிபிறவி என்ற சொல்லைப் பலரும் பல அர்த்தங்களில் பயன்படுத்தி இருக்கலாம். நான் சொல்ல வந்தது அது எந்த சிந்தனைத் தளத்தில் இருந்து உருவானது என்பதைத் தான்.
இந்தச் சிந்தனைத்தளம் தமிழ்ச் சிந்தனை உலகில் அறிமுகமான போதோ, அல்லது வலுப்பெற்ற போதோ இது கண்டனத்துக்கும் எதிர்ப்புக்கும் உள்ளாகியுள்ளது. அது திராவிடக் கருத்தாக்கத்தில் தொடங்கியது அல்ல; 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்று 2000 வருடத்துக்கு முன் எழுதப்பட்டது இந்த எதிர்ப்பின் குரலால் தான் என்பது என் புரிதல் அல்லது என் இரசவாதம். குடிமை என்ற அதிகாரத்தில் மேலோர் அல்லது நற்குடி என்பதற்கு வள்ளுவர் உயர்குணங்களை மட்டும் திரும்பத்திரும்ப வலியுறுத்துவதை வெறும் உபதேசமாக மட்டும் என்னால் பார்க்கமுடியவில்லை; அது பார்பனீயக் கருத்தாக்கத்துக்கு எதிராக அந்நாளில் வலுப்பெற்ற வேதமறுப்புத் தத்துவங்களின் அடிப்படையில் எழுந்த குரல் என்ற கட்சியை நானும் ஒத்துக்கொள்கிறேன்.
மற்றபடி எது பொலிட்டிகலி கரெக்ட் என்பதைப்பற்றியெல்லாம் நான் பேசப்போவதில்லை ஏனெனில் அவரவர்க்குத் தேவையானதை அவரவர் கண்டடைகிறார்கள் என்று நினைக்கிறேன்.
Kuzali, More than grammatical analysis of two words("இழிபிறவி", தேவடியாமவனே) here, the context and bottom line you pointed out is *very* important.../*புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள்*/.
A truthful point. Deciding which word is more awkward/bad/decent is more of listener's psychological issue. The listener's comfort is irrelevant, expression of suppressed people is important. If they feel their suppression is communicated effectively using such words, they have all the right to use it. Self-claimed decent people have to understand the "underlying expression of their suppression", if they didn't...time for them to mature.
தங்கமணி அவர்களின் கடைசி பின்னூட்டத்தை பெரித்தும் பாராட்டுகிறேன்.
//உங்களுடைய(நம்முடைய) நாகரிக கையேட்டையும், நாகரிக பேச்சுகளையும் உங்களுக்கு (நமக்கு) சமமான அல்லது உங்களுக்கு (நமக்கு) மேலிருப்பவர்களிடம் காண்பிக்கலாம், ஆனால் புறக்கணிப்பின் உச்சத்தில் இருப்பவர்களிடமும் விளிம்புநிலை மனிதர்களிடமும் தயவு செய்து உங்கள் நாகரிக கையேட்டையும் அளவுகோலையும் தூக்கிக்கொண்டு ஓடாதீர்கள், நாகரிக கையேட்டை தூக்கிக்கொண்டு அவர்களிடம் ஓடும் முன் அவர்களிடத்தில் உங்களை வைத்து பாருங்கள்..... அந்த நிலையில்
நீங்களோ நானோ இருந்தால் அதையும் விட அநாகரிகமாக பேசுவோம் என்பதை மறந்துவிட வேண்டாம். ////
அருமையான கட்டுரை. இதையெல்லாம் நல்லா வெனையமா பேசி விவாதிக்கிற நடுத்தர வர்க்க நாகரிக்க கனவான்கள். அநாகரிகமான திருநங்கைகளீண் பிரச்சனைகளை விவாதிருப்பார்களா? அல்லது அவர்களைப் போன்றேயான பிற அநாகரிகமான ஒடுக்கப்பட்ட்வர்களீன் பிரச்சனைகள் அதற்க்கான தீர்வு குறித்து விவாதித்திருப்பார்களா?
அட போங்கடா.... வோ....
நாங்க அநாகரிகமாகவே இருந்து விட்டுப் போகிறோம்.
அசுரன்
//A truthful point. Deciding which word is more awkward/bad/decent is more of listener's psychological issue. The listener's comfort is irrelevant, expression of suppressed people is important. If they feel their suppression is communicated effectively using such words, they have all the right to use it. Self-claimed decent people have to understand the "underlying expression of their suppression", if they didn't...time for them to mature.///
Dandannakka has correctly expressed what I feel....
Asuran
Post a Comment