உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

க்ரீமிலேயர் வரையறை என்ன? பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ஏற்கனவே பலமுறை தேய்த்து விளக்கி சலித்து போனது புரியவேண்டாமென்று இருப்பவர்களுக்கு விளக்கி கிழிக்கத்தேவையில்லை, ஆனால் புரிய வேண்டியவர்களுக்கு புரியாமல் இருப்பது தான் கொடுமை, விளக்கமாக பின்னொரு நாள் க்ரீமிலேயர் பற்றி எழுதுகிறேன் அதற்கு முன் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்கலாம் சோதனை முறையில். இதை வலியுறுத்தி முன்பு நான் எழுதிய கட்டுரை இங்கே மீள்பதிவாக

செல்லா சொல்வது போல நாங்கள் என்று வந்துவிட்டால் கலைஞர் ராமதாஸ் குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதுவே உங்களுக்கு என்று வந்தால் கோயிலில் மணியாட்டும்ஏழை அம்பிகள் தான் தெரிகிறார்கள்.

பொருளாதாரம் க்ரீமிலேயருக்கு அடிப்படையாக இருக்கக்கூடாது, க்ரீமிலேயர் பற்றிய உயர்சாதியினரின் கூச்சலுக்கு அடிப்படை காரணம் இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழிப்பதுவே, அதே மாதிரி இடஒதுக்கீட்டை ஒருதலைமுறை பயன்படுத்தினால் அவர்களின் பிள்ளைகள் பயன்படுத்தக்கூடாது என்பதும் ஒயின்ஷாப்பில் ஊற்றிக்கொடுக்கும் அரசாங்க வேலை இடஒதுக்கீட்டில் கிடைத்துவிட்டால், 'டி' கிரேட் பியூனாகவும், கிளார்க்காகவும் இடஒதுக்கீட்டால் பெற்றுவிட்டால் அவர்கள் பிள்ளைகள் இடஒதுக்கீட்டிற்கு தகுதியில்லையா? கலைஞருக்கும் இராமதாசுக்கும், பிற்படுத்தப்பட்ட ஐ.ஏ.எஸ், தாசில்தார்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்?

படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், உயர்சாதியினர் இடஒதுக்கீட்டிற்கே ஆப்பு வைக்கும் எண்ணத்தில் தான் இதை தடை செய்ய சொல்கின்றனர், ஒயின்ஷாப்பில் ஊற்றிகொடுக்கவும், 'டி'க்ரூப் கிளார்க்காக்வும் தலைமுறையை நிறுத்திவிட்டு அய்யோ பாருங்கள் இடஒதுக்கீடு கொடுத்தும் ஐஐடியில் இத்தனை இடம் காலியாக இருக்கின்றது, கல்லூரி ட்ராபவுட் இத்தனை என்று ஓலமிட்டு இடஒதுக்கீட்டினால் பலன் இல்லை என்று மொத்த இடஒதுக்கீட்டிற்கும் ஆப்படிக்க நினைக்கின்றனர். பொருளாதாரத்தை க்ரீமிலேயருக்கு அளவுகோலாக கொள்ளச்சொல்லும் உயர்சாதி ஏழைப்பங்காளர்கள் முதலில் அவர்கள் சாதியில் இருக்கும் ஏழைகளுக்கு வழிவிடட்டும், எப்படியா? கட்டுரையை தொடர்ந்து படியுங்கள்

உயர் சாதியிலிருந்து க்ரீமி லேயரை ஆரம்பிப்போம்

1994 அரசு பொறியியல் கல்லூரியில் ஓராண்டிற்கான கல்விக்கட்டணம் ரூ.2500, இன்றும் கூட ரூ.17,000 கட்டணம், ஆனால் 1994லேயே ஒரு பொறியாளரை உருவாக்க அரசாங்கம் செய்யும் செலவாக எங்களுக்கு ஒரு கூட்டத்தில் சொல்லப்பட்டது இரண்டு இலட்சம், அன்று ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் செலவு செய்வதாக சொல்லப்பட்ட தொகை ரூபாய் ஐந்து இலட்சம், ஆனால் கல்விக்கட்டணம் க்ரீமிலேயர், க்ரீமி இல்லாத லேயர் என எல்லோருக்குமே ரூ.2500 அப்போது, இப்போது ரூ.17,000 இரண்டு இலட்சம் படிப்புக்கு மொத்தம் மாணவர் செலுத்தியது ரூ.10,000. மட்டுமே.

இடஒதுக்கீடு இன்னும் இரண்டாம் தலைமுறையை எட்டாத நிலையில் (இது தொடர்பான என்னுடைய முந்தைய பதிவு இடஒதுக்கீடு தலைமுறை தலைமுறையாகவா?)இப்போதே க்ரீமிலேயருக்காக அழும் ஆட்கள் முதலில் க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், ஒரு 5 அல்லது 10 ஆண்டுகள் பரிசோதனை அளவில் செயல்படுத்தலாம், பிறகு மற்றவர்களுக்கும் அதை செயல்படுத்தலாம், இடஒதுக்கீட்டில் க்ரீமிலேயருக்காக அழும் ஆட்களின் முரண்பாடு என்னவென்றால் இவர்கள் இடஒதுக்கீடே வேண்டாமென்பவர்கள்.

க்ரீமிலேயர் தொடர்பான ஆலோசனைகள்

1. க்ரீமிலேயருக்கு அரசு நிதியில் நடைபெறும் அல்லது அரசாங்க நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களில் இடம் இல்லை, அவர்கள் வேண்டுமெனில் தனியார், சுயநிதிக்கல்லூரிகளில் படித்துக்கொள்ளட்டும்.

2. அப்படியே அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்தாலும் க்ரீமிலேயர் கட்டணங்களுக்கு அரசு மானியம் எதுவும் தரப்படக்கூடாது, அவர்களுக்கான முழுக்கல்வி செலவையும் அவர்களே ஏற்கவேண்டும், அதாவது ஒரு மருத்துவ படிப்புக்கு அரசாங்கம் பத்து இலட்சம் செலவு செய்கிறதென்றால் பத்து இலட்சமும் க்ரீமிலேயர் மாணவர்களிடமிருந்தே வசூலிக்கப்படவேண்டும். க்ரீமிலேயருக்கு ஏன் மானியங்கள் ?

க்ரீமிலேயருக்கு எப்படி அரசு ரேசன் கடை அரிசி தேவையில்லையோ அதே போல அரசாங்க கல்வி கூடங்களிலும் அரசு நிதி உதவி பெறும் கல்வி நிறுவனங்களிலும் மட்டும் எதற்கு இவர்களுக்கு படிக்க இடம் தரவேண்டும்?

இடஒதுக்கீட்டில் கிரீமிலேயரை விலக்கும்போது எப்படி அதன் கீழுள்ளவர்கள் பயன்பெறுவார்கள் என்று சொல்லப்படுகின்றதோ அதே போல உயர்சாதியில் க்ரீமிலேயரை அரசு கல்வி நிறுவனங்களில் இடமளிக்காமல் இருந்தால் பணமில்லாத ஏழை உயர்சாதி மாணவர்கள் எளிதாக இந்த கல்வி நிறுவனங்களில் இடம் பெறுவார்களே....

இதை பரிசோதனை முறையில் உயர்சாதியிலிருந்து ஆரம்பிப்போம், பிறகு அதை மற்ற சாதிகளுக்கும் விரிவுபடுத்தலாம்.

உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?, உயர் சாதி க்ரீமிலேயரே நீங்கள் தயாரா சொல்லுங்கள்.

பிற்சேர்க்கை:

ஏன் இந்த க்ரீமிலேயரை உயர்சாதியிலிருந்து ஆரம்பிக்க வேண்டுமென்பதற்கான என் பதில்


தினமலர் செய்தியில் பொறியியல் படிப்பில் காலியாக உள்ள 16,440 இடங்களில் பெரும்பாலும் MBC, SC, ST யாக உள்ளது என குறிப்பிட்டுள்ளது.

http://www.annauniv.edu/tnea06/rama21.doc

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

இலட்சக்கணக்கில் பணத்தை அழுது படிக்க வேண்டிய சுயநிதிக்கல்லூரிகளில் மட்டும் தான் இடம் நிரம்பாமல் உள்ளது,

31% OC யில் 2839 இடங்கள் மட்டுமே காலி ஆனால் 30% BC யில் 4757 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 70% அதிக காலியிடங்கள்)

20% MBC யிலோ 3804 இடங்கள் காலி (OCயை விட கிட்டத்தட்ட 107% அதிக காலியிடங்கள்)

18% SC யிலோ 4569 இடங்கள் காலி, (OCயை விட கிட்டத்தட்ட 177% அதிக காலியிடங்கள்)

இலவச அல்லது குறைந்த கட்டணத்தில் இடம் கிடைக்கவில்லையென்றாலும் OCயில் படிக்க முடிந்தவர்கள் அதிகம், ஆனால் அதே நிலை BC யில் OC யைவிட குறைவு ஆனால் MBCயைவிட அதிகம், இதே SC யை பார்த்தோமென்றால் காலியிடங்கள் MBCயைவிட அதிகம்.

வர்ணாசிரம அடுக்கு முறை ஏற்படுத்திய ஏழ்மைக்கு இந்த புள்ளிவிபரம் ஒரு உதாரணம்.

அதாவது குறைந்த கட்டணத்தில் அரசு கல்லூரிகள் இடமில்லையென்றாலும் OCயில் பணம் கொடுத்து சுயநிதிக்கல்லூரிகளில் படிக்கும் சக்தி மற்ற அனைத்து பிரிவினரையும் விட அதிகம், அதனால் தான் இதை முதலில் OCயில் ஆரம்பித்தால் உயர்சாதி ஏழை மாணவர்களுக்கு பயன்படும் அல்லவா.

உயர்சாதி க்ரீமிலேயர் பற்றி ஞானியின் கருத்து...

http://www.keetru.com/dheemtharikida/sep06/gnani_5.html
2. இட ஒதுக்கீடு பெற்றுள்ள சாதிகளில் வசதி படைத்த மேட்டுக்குடியினரே (கிரீமி லேயர்) அதிக இடங்களைச் சுருட்டிக்கொள்வதைப் பற்றி எல்லாரும் மழுப்புவது ஏன்?

அரசியல், கல்வி, தொழில் என்று எந்தத் துறையை எடுத்துக்கொண்டாலும், துளியும் பண பலம் இல்லாதவர்களைவிட, ஓரளவேனும் பண பலம் உள்ளவர்கள் தான் முதலில் நுழையவும், நுழைந்த பின் தங்களுக்கென ஒரு இடத்தை உருவாக்கிக் கொள்ளவும் முடியும் என்பதும், வசதி யற்றவர்கள் முண்டியடித்து, முட்டி மோதித்தான் தங்கள் இடத்தைப் பிடிக்க முடியும் என்பதும்தான் நீண்ட காலமாக சமூகத்தின் நிலை. ராஜாஜி, பெரியார், நேரு என்று அரசியலில் பெரும் தாக் கத்தை 20&ம் நூற்றாண்டில் ஏற்படுத்திய பலர், வசதியான பின்னணியில் இருந்து வந்தவர்கள்தான். அவர்களுடைய சமூக அக்கறைகள் தெளிவாக இருந்ததனால் தான், அவர்களைப் பின்பற்றி வந்த வசதியற்றவர்களான சத்தியமூர்த்தி, காமராஜர், அண்ணா போன்றவர்கள் தங்களுக்குரிய இடத்தைப் பெற முடிந்தது. சமூகப் பார்வையில் தெளிவும், தனக்குச் சமமான கூர்மையும் உடைய ஏங்கல்ஸ் போன்ற பணக்கார நண்பர் இருந்திரா விட்டால், வசதி குறைந்தவரான கார்ல் மார்க்ஸ் இன்னும் அதிக சிரமப்பட்டு இருப்பார்.

எனவே, இட ஒதுக்கீட்டிலும், அந்தந்த சாதியில் ஓரளவு வசதியுள்ளவர்களே முதல்கட்டத்தில் உயர் கல்வி வரை வர முடியும். அப்படி வருபவர்களில் அக்கறை உள்ளவர்கள்தான் மற்றவர்களை அரசி யல் படுத்தித் திரட்ட முடியும். அந்த நிலைக்கு வருவதற்கு அந்தந்த சாதி ஏழைகள் முதலில் அடிப்படைக் கல்விக் கான வசதியைப் பெற்றாக வேண்டும்.

தவிர, இட ஒதுக்கீடு என்பது பொருளா தார ஏற்றத் தாழ்வைச் சரி செய்ய வந்த திட்டம் அல்ல. சாதிகளிடையே ஏற்றத் தாழ்வைச் சரி செய்யவும், எல்லாச் சாதிகளுக்கும் வாய்ப்புகளைப் பகிர்ந்து கொடுக்கவும் மட்டுமே ஏற்படுத்தப்பட்ட திட்டம். வறுமை ஒழிப்புக்கும் வர்க்க சமத்துவத்துக்கும் வேறு திட்டங் களைத்தான் நாம் உருவாக்க வேண்டும்.

இட ஒதுக்கீட்டில் அந்தந்த சாதிக்கான இடங்களில் முதல் தலைமுறையாகப் படிப்போர், ஏழைகளுக்கு முன்னுரிமை தருவது சரிதான். ஆனால், அதை ரிசர்வேஷன் இடங்களில் மட்டும் செய்வது சரியாகாது. ஓப்பன் கோட்டாவிலும் அதே போல ஏழைகளுக்கு முன்னுரிமை தர வேண்டும்.சமையல்கார பிராமணர், சவுண்டி பிராமணர், டிரைவர் முதலியார் ஆகியோரின் குழந்தைகளுக்கு முன்னு ரிமை தர, மூன்று தலைமுறையாக வக்கீல்களாக இருக்கும் அய்யர்களும், ஆடிட்டர்களாக இருக்கும் அய்யங் கார்களும், டாக்டர்களாக இருக்கும் முதலியார்களும் முன்வருவார்களானால், மற்ற சாதிகளிடமும் இது குறித்து நாம் விவாதிக்கலாம்.

பின்னூட்டத்திற்கு இங்கே சுட்டவும்

25 பின்னூட்டங்கள்:

said...

க்ரீமிலேயர் புலம்பல் புலம்புவது இருக்கட்டும், அதற்காக மொத்தமாக இடஒதுக்கீட்டை நிறுத்த சொல்வதின் பிண்ணனி என்ன? நேர்மையான காரணம் சொல்ல தயாரா?

அட ஒரு வாதத்திற்காக சொல்கிறேன் இடதுக்கீட்டில் கொஞ்சம் க்ரீமிலேயர் பயன்பெற்றாலும் கொஞ்சம் கூடவா க்ரீமிலேயர் பற்றி புலம்புபவர்கள் கவலைப்படும் ஏழைகளுக்கு போகாமல் இருக்கிறது? இல்லையே, இதை காரணம் காட்டி மொத்தமாக இடஒதுக்கீட்டை தூக்கினால் அந்த ஏழைகளும் சேர்த்து தானே ஆப்பு, அப்போ இவர்களின் கவலை ஏழைகளை பற்றியதா? இடஒதுக்கீடு பற்றியதா?

said...

உங்களை லூசு என்று சில பதிவர்கள் கூறிய போது நான் உண்மையிலேயே வருந்தினேன். இப்படிப் பட்ட பதிவுகள் மூலம் அவர்கள் கருத்துக்களை மெய் படுத்துகிறீர்கள்.

நல்ல நகைச் சுவையான பதிவு. இப்படியே தொடர்ந்து எழுதுங்கள். தைலாபுரம் தோட்டதிலிருந்து வர வேண்டியதெல்லாம் ஒழுங்கா வந்து கொண்டிருக்கிறதா?

said...

குழலி ஐயா,

நிறைய சிகப்பு சிகப்பாக எழுதியிருக்கிறேன். சில முறை படித்தும் ஒரு ஆதாரமும் காணவில்லை. நீங்கள் வாயிலும், வயிற்றிலும் அடித்துக்கொண்டு அரட்டுகிறீர்கள் என்றுதான் பதிவை படித்ததும் தோன்றுகிறது. பொருள்களை ஒன்றொன்றாக எடுத்துக்கொண்டு அலசி ஆராய்ந்து சொல்லுங்கள்.

முதலில் உயர் சாதிக்கு இட ஒதுக்கீடே இல்லையே. அப்புறம் எப்படி கிருமி லேயர் வரும். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரியவில்லை.

பணக்கார குழந்தைகள் மேற்படிப்புக்காக அரசு சில லெட்சம் ரூபாய்களை ஒதுக்கி செலவழிக்க ஒரு முகாந்திரமும் இல்லை. இவ்வாறு நீங்கள் சொல்வது நியாயமானதுதான். இதில் எங்கே சாதியும், இட ஒதுக்கீடும் வந்தது. நீங்கள் சொல்வது வேறொரு பிரச்சனை. அரசின் தேவையற்ற மானியங்கள் குறித்து. அதை இந்த இட ஒதுக்கீட்டுடன் சாமர்த்தியமாக சேர்த்து ஏன் குழப்புகிறீர்கள்?

மானியம் என்பது இன்று புரையோடிக்கிடக்கும் இன்னொரு நோய். அதை தவிர்க்க வேண்டும் என்பதில் யாதொரு தயக்கமும் இல்லை. இன்று கார்ப்ரேஷன் மெட்ரோ வாட்டரிலிருந்து, மயானம், மின்சாரம், உரம், இந்தியாவின் மூலை முடுக்குகளில் விமானப்பயணம் என்று எல்லா இடங்களிலும் இந்த மானியம் இருக்கிறது. இதைப் பற்றி வேறிடத்தில் பேசுங்கள். இட ஒதுக்கீட்டும் இதற்கும் ஒரு தொடர்பும் இல்லை.

இட ஒதுக்கீடு என்பது ஒரு காலவரையில் நிறைவு பெற வேண்டும் என்று எல்லா இந்திய குடிமகன்களும் ஆசைப்பட வேண்டும். அது தலைமுறை தலைமுறையாக தொடர வேண்டும் என்பது இந்திய இறையாண்மைக்கு இழுக்கு. தன் சுயலாபத்திற்காக இந்தியாவை நிரந்தர கூறு போட முயலும் சில ஈன அரசியல்வாதிகள் ஓட்டு ஆதாரம் இந்த இட ஒதுக்கீடு.

//// க்ரீமிலேயர் பற்றிய உயர்சாதியினரின் கூச்சலுக்கு அடிப்படை காரணம் இடஒதுக்கீட்டை முழுமையாக ஒழிப்பதுவே, /////

இந்த இட ஒதுக்கீட்டு கொள்கையில் ஒரு கண்ட்ரோல் வேண்டும் என்று சொல்வதில் என்ன தவறு? அதை ஒரு குற்றமாக நீங்கள் முழக்குவதில் ஒரு பொருளும் இல்லை.


//// பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ////

ஆமாம். ஆமாம். ஆமாமாம்.

///// படிக்காத, கல்வி விழிப்புணர்வு இல்லாத குடும்பத்திலிருந்து ஒரே தலைமுறையில் ஹைஜம்ப் அடித்து உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்ல இயலாது, படிப்பறிவில்லாத குடும்பத்திலிருந்து கிளார்க்காகவும், 'டி' கிரேட் பணியாளர்களாகவும் வெளிவருவார்கள் (என் தந்தை தலைமுறை இப்படித்தான் பெரும்பாலும் ), அதிலிருந்து அடுத்த தலைமுறை தான் அடுத்த உயர்கல்வி நிலைக்கு கொண்டு சேர்க்க முடியும், /////

ஏதேது, இட ஒதுக்கீட்டுக்கு நிரந்தரமாக ஒரு ரூட்டு போடுகிறீர்களே!!! ஒவ்வொரு நிலையிலும் தூக்கி விடப்பட வேண்டியவனுக்கு கொஞ்சமும் தகுதி இல்லை என்றுதான் பொருள். அவன் இந்த தேசத்துக்கு ஒரு சுமையே. அடுத்த தலைமுறையில் எல்லோரும் கம்ப்யூட்டர் படிக்காதிருப்பார்கள். அதனால் அதில் இட ஒதுக்கீடு செய்யணும். அப்பறம் அமெரிக்காவில் போகும் வெளிநாட்டு இந்தியர்களில் இவர்கள் இன்னும் முன்னேறியிருக்க மாட்டார்கள். அதனால், ஒரு தலைமுறைக்கு அதிலும் இட ஒதுக்கீடு செய்யணும்.

என்ன ஒரு இருபது தலைமுறைக்கு இப்படி ப்ளான் பண்ணலாமா...

இந்தியா உருப்பட்டாற்போலத்தான்...

said...

செந்தழல் ரவி has left a new comment on your post "உயர் சாதி க்ரீமிலேயரே தயாரா?":

சரியான சமயத்தில் வந்த மீள்பதிவு...குட்..

உயர்சாதி / "தாழ்த்தப்பட்ட" சாதி, இரண்டு கிருமிகளையும் ஒரே நேரத்தில் பிடித்து பேகான்பிரே அடிக்கலாமே...

யார் வேண்டாங்குறது ?

நல்ல கருத்துக்கள்...

Publish this comment.

Reject this comment.

Moderate comments for this blog.

செந்தழல் ரவி பின்னூட்டம் முந்தைய பதிவிற்கு வந்ததை இங்கே பதிப்பிக்கிறேன்

said...

//முதலில் உயர் சாதிக்கு இட ஒதுக்கீடே இல்லையே. அப்புறம் எப்படி கிருமி லேயர் வரும். நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள் என்று புரியவில்லை.
//
புரியலையா ரேசன் கடை அரிசி H முத்திரை குத்தியவங்களுக்கு இல்லையில்லையா! அது போல உயர்சாதி க்ரீமிலேயர் ஆளுங்க ஒரு 5 வருசத்துக்கு அரசாங்க கல்லூரிகளிலோ அரசாங்க உதவிபெறும் கல்லூரிகளிலோ அனுமதிக்க வேண்டாம், அது நல்ல பலன் கொடுத்து ஏழை சவுண்டி பிராமணர்களும், சில்லறைக்கு மணியாட்டும் கோவில் பிராமணனும் படிச்சி வரட்டும்.... இது சோதனை முறையில் ஓகே ஆனவுடன் அப்படியே அதை மத்தவங்களுக்கும் இம்ப்ளிமெண்ட் செய்துடலாம்....

said...

நீங்களும் இதை பல இடங்களில் கூறிவிட்டீர்கள். நானும் முடிந்த வரை இது பொருந்தாது எனக் கூறி விட்டேன். இருப்பினும் மறுபடியும் கூறுகிறேன்.

பொது லிஸ்டில் எந்த சலுகையும் கிடையாது. அவரவர் தத்தம் திறமையால் வர வேண்டியதுதான். சலுகை தரப்படுவது இட ஒதுக்கீடு இடங்களுக்கே. அங்குதான் கிரீமி லேயர்காரர்கள் அடாவடியாக தம் வகுப்பினரில் உள்ள ஏழைகளின் இடத்தைப் பறிக்கின்றனர். அவர்களை அடையாளம் காண வேண்டும் என்றுதான் சுப்ரீம் கோர்ட் கூறுகிறது. டி கிரேட் பியூன்களையெல்லாம் கிரீமி லேயரில் சேர்க்க யாரும் கூறவில்லை.

இவ்வளவு பேசும் நீங்களே கிரீமி லேயர்தான். இருப்பினும் உங்கள் குழந்தைக்கு அத்தருணம் வரும்போது இட ஒதுக்கீட்டை பயன்படுத்தத்தான் போகிறீர்கள். ஒப்புக்குக் கூட என் குழந்தைகளுக்கு வேண்டாம் எனக் கூறப்போவதில்லை. ஆகவே நீங்கள் ராமதாசு மற்றும் கருணாநிதி வீட்டு குழந்தைகளுக்கும் அதை கூறப்போவதில்லை என்பது வெள்ளிடை மலை.

ஆனால் இட ஒதுக்கீடு வேண்டாம் எனக் கூறிய பதிவர் ஜோசஃப் அவர்கள். ஆகவே இது ஒன்றும் நடக்க முடியாதது அல்ல. நீங்களாக விடப்போவதில்லை. தலைமுறை தலை முறையாக அனுபவிக்க என்ணம் கொண்டுள்ளீர்கள். கேட்டால் 2000 ஆண்டுகள் கதை எல்லாம் சொல்லிவீர்கல். ஆனால் சுற்றுப்புறச் சூழலை நாசமாக்கிய மரம் வெட்டிச் செயலை பற்றி மட்டும் கூறக்கூடாது அப்படித்தானே?

அதனால்தான் சுப்ரீம் கோர்ட் அவ்வாறு செய்ய வேண்டியதாயிற்று.

ஆகவே பொது இடங்களில் கிரீமி லேயர் பற்றி பேசுவது விஷமத்தனமானதே.

மொத்தமாக இட ஒதுக்கீட்டை யார் நிறுத்தச் சொன்னார்கள். எஸ்.சி. எஸ்.டி.க்கு கொடுங்கள். ஆனால் அவர்கள் மேல் வன்கொடுமைகள் பல செய்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இதில் குளிர் காய நினைப்பது ஏன்?

அதுவும் கிட்டத்தட்ட 86 ஆண்டு பழைய சென்சஸை வைத்து ஜல்லி.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குழலி ஐயா,

பதிலுக்கு நன்றி. ஆனால் தங்களை "லூசு" என்றவரின் வார்த்தைகளை கஷ்டப்பட்டு நிரூபிக்க முயல வேண்டாம்...


//// புரியலையா ரேசன் கடை அரிசி H முத்திரை குத்தியவங்களுக்கு இல்லையில்லையா! ////

இதைத்தான் சொல்கிறேன். இது மானியம் சம்பந்தப்பட்ட விஷயம். இதற்கும் இட ஒதுக்கீட்டும் ஒரு தொடர்பும் இல்லை. நீங்கள் புரிந்துகொள்ளவேண்டியது நிறைய உள்ளது.//// அது போல உயர்சாதி க்ரீமிலேயர் ஆளுங்க ஒரு 5 வருசத்துக்கு அரசாங்க கல்லூரிகளிலோ அரசாங்க உதவிபெறும் கல்லூரிகளிலோ அனுமதிக்க வேண்டாம், /////

இது பார்ப்பனர்களுக்கு மட்டும்தானா. இல்லை எல்லா கிருமிகளுக்குமா.

பார்ப்பனர்களுக்கு என்றால் மறுபடியும் கேட்கிறேன். அவர்களுக்கு இட ஒதுக்கீடு எங்கே...

ஒரு பார்ப்பன கிருமி லேயர் தனக்கு இடம் வேண்டாம் என்று விட்டுவிட்டால் மற்றொரு சாதி கிருமி லேயருக்கு அந்த இடம் போகாது என்பதற்கு என்ன உத்தரவாதம்? அப்படி இருக்கும்போது இந்த பார்ப்பன உயர்சாதிகளை நீங்கள் என்னதை நிரூபிக்கசொல்கிறீர்கள்.

/// அது நல்ல பலன் கொடுத்து ஏழை சவுண்டி பிராமணர்களும், சில்லறைக்கு மணியாட்டும் கோவில் பிராமணனும் படிச்சி வரட்டும்.... இது சோதனை முறையில் ஓகே ஆனவுடன் அப்படியே அதை மத்தவங்களுக்கும் இம்ப்ளிமெண்ட் செய்துடலாம்.... ////

பணக்கார பார்ப்பனன் விட்ட இடம் ஏழை பார்ப்பனுக்கு போக வேண்டும் என்றால் அது ஒரு இட ஒதுக்கீடு இருந்தால்தான் முடியும்.

ஒன்றுமே யோசிக்காமல் வழக்கம்போல ஒரு "குழ"ப்ப பதிவு தான் இது. இதில் சொன்ன கருத்துக்கள் கொஞ்சமும் சரியில்லை. தங்கள் "குழ"ம்பிய மனதையே காட்டுகின்றன..

said...

//புரியலையா ரேசன் கடை அரிசி H முத்திரை குத்தியவங்களுக்கு இல்லையில்லையா!//
இப்போது ஏது ஸ்வாமி H முத்திரை? தமாஷாக எல்லாம் பேசுகிறீர்கள். அதுவும் உயர்சாதிக்கு மட்டும் கிரீமி லேயர். நீங்கள் எல்லாம் அனுபவித்து வருவீர்கள். ஊரார் மேல் பரிசோதனையா?

இன்னொரு பின்னூட்டத்தில் குறிப்பிட்டது போல ஃபீஸ் எல்லாம் வேறு விளையாட்டில் வருகிறது.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

குழலி, ஒரு சிறு வேண்டுகோள். முட்டாப் பன்னாடைகளுக்கு பதிலளிக்க வேண்டாம். நேரம் விரயம் தான் ஆகும். நாம்எழுதுவது நம் மக்களுக்குப் புரியவேண்டும் என்றுதான். தூங்குகிறவனை நாம்எழுப்புவோம். தூங்குகிற மாதிரி பாவ்லா காட்டுபவனை உதாசீனப் படுத்துவோம்!- அருமையான வாத்ங்களின் கோர்வை! - நன்றி

said...

குழலி ஐயா,

ஓசை செல்லாவிற்கு நான் இட்ட பின்னூட்டங்களை அவர் பதிப்பிக்க வில்லை. தாழ்ந்த சொற்களால் அவர் மட்டமாக பேசுகிறார். அவர் நிலையை நினைத்தால் பாவமாக இருக்கிறது. சரியான பன்னாடை, கூமுட்டை என்றெல்லாம் தன்னை அறிமுகப்படுத்திக்கொள்ள அவருக்கு என்ன நேர்ந்தது? "நம்படவா"ளூக்கு மட்டுமே அவர் எழுதச்சொல்கிறார். இங்கு ஒரு வன்னிய மடமோ இல்லை செல்லாக்காசு ஓசை மடமோ திறந்து நீங்கள் உங்கள் அருள்வாக்கை வழங்குங்கள். அதற்கு செல்லா அவர்கள் பின் "ஓசை' போடுவார். நீங்கள் இருவரும் தொந்தரவு இல்லாமல் பாட்டு பாடிக்கொள்ளலாம்...

(கஷ்டம்டா சாமீ....)

said...

//நாம்எழுதுவது நம் மக்களுக்குப் புரியவேண்டும் என்றுதான்.//

உங்க மக்களா? எந்த ஊரு ராசாங்கோ நீங்கோ? நெனப்பு தான் பொழப்பக் கெடுக்கும். மொதல்ல நீங்க கண்ல கெடக்கற கருப்பு கருமத்த கழட்டிட்டு ஒலகத்த பாருங்கண்ணே. தின்னு கொழுத்த உங்க வாய கொஞ்சம் பாருங்கண்ணே.

//தூங்குகிறவனை நாம்எழுப்புவோம்//
அதுக்குத் தான் பேர்ல 'ஓசை' வச்சிருகீகளோ? இல்ல ஒரு கை ஓச கொடுக்காதுன்னு குழலி கைய கேக்குறீகளா?

நீங்க ரெண்டு பேரும் போய் பன்னிமாதிரி தின்னு கொழுத்து தூங்கிக்கிட்டுருக்கிற ஒங்க மக்கள எழுப்புங்கோ. நாட்டுக்கு ஒரு விடியல் வருதான்னு பாக்கலாம்.

said...

குழலி,

அந்த ஓ.சி கோட்டாவில் எத்தனை பேர் FC மற்ற பிரிவினர்(BC MBC SC ST) எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா? அதை வைத்துத்தானே உங்க வாதம் சரியா இல்லையா என்று சொல்லமுடியும்? யாரு சேர்த்தாங்கன்னு தெரியாம எப்படி FC கிட்ட காசு இருக்கு, மற்றவர்களிடம் இல்லைன்னு சொல்லமுடியும்!?? விவரம் தெரிந்தால் சொல்லுங்க!!

said...

Start removing creamy layer in all levels ....Either you can start from OC or BC or SC or ST.


க்ரீமி லேயரை ஆரம்பிப்போம் ....This is the right policy.......

said...

//OSAI Chella said...

குழலி, ஒரு சிறு வேண்டுகோள். முட்டாப் பன்னாடைகளுக்கு பதிலளிக்க வேண்டாம். நேரம் விரயம் தான் ஆகும். நாம்எழுதுவது நம் மக்களுக்குப் புரியவேண்டும் என்றுதான். தூங்குகிறவனை நாம்எழுப்புவோம். தூங்குகிற மாதிரி பாவ்லா காட்டுபவனை உதாசீனப் படுத்துவோம்!- அருமையான வாத்ங்களின் கோர்வை! - நன்றி //

ஆமாம் , தானே கக்கி தானே நக்கர நாய்போல் உங்களுக்கு நீங்களே பதிவு போட்டு பதிலும் சொல்லிக்கிங்க சாமிகளா

said...

//முட்டாப் பன்னாடைகளுக்கு பதிலளிக்க வேண்டாம்.//

இந்த பின்னூட்டத்தை வெளியிட்டது நீங்க தான்!

//அட பண்ணாடை குழலி,//
புதிய பட்டப்பெயர் இன்னும் எத்தனை வரப்போகுதோ... ம்...//

இப்படி சொல்லறதும் நீங்க தான்?? மொத்தமா க்ரீமீ லேயர் ஆதரிப்பவர் மற்றும் எதிர்ப்பவர்கள் எல்லாரும் பண்ணாடைகள் தான்ன்னு சொல்லவறாங்களா??

யார் கருத்தை யார் எதிர்த்தாலும் அவன் பார்ப்பனன், பண்ணாடை என்ற அடைமொழிக்குள் பொறுந்துகிறானே ஏன்??

said...

நன்றாக தொகுத்துள்ளீர்கள்.

நல்ல பதிவு!

நன்றி

said...

//அந்த ஓ.சி கோட்டாவில் எத்தனை பேர் FC மற்ற பிரிவினர்(BC MBC SC ST) எத்தனை என்று உங்களுக்கு தெரியுமா? அதை வைத்துத்தானே உங்க வாதம் சரியா இல்லையா என்று சொல்லமுடியும்? யாரு சேர்த்தாங்கன்னு தெரியாம எப்படி FC கிட்ட காசு இருக்கு, மற்றவர்களிடம் இல்லைன்னு சொல்லமுடியும்!??
//
இதைப்படிங்க கொஞ்சம்
O.C - Open Competition OR Other Castes குன்சா பதில் கிடைக்கும்...

said...

குழலி அது அரசு கல்லூரிக்கான இட ஒதுக்கீடு தானே! அது சலுகை சீட்டுக்கள் தல, எல்லாரும் பாய்ந்து எடுத்திருப்பாங்க, நான் கேட்டது சுயநிதி கல்லூரி மேட்டர், அதையும் இதையும் ஒரு மாதிரி பார்க்கமுடியாது தல!

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434

நீங்க கொடுத்த இந்த புள்ளிவிவரத்தின் Breakup இருக்கா?

said...

//குழலி அது அரசு கல்லூரிக்கான இட ஒதுக்கீடு தானே! அது சலுகை சீட்டுக்கள் தல,
//
எது சலுகை சீட்டுகள், இடஒதுக்கீட்டு சீட்டுகள் சலுகை சீட்டுகளா? புரிந்து கொண்டு பேச முயற்சிக்கவும்.... இது மொத்த இடஒதுக்கீட்டையும் கேவலப்படுத்தும் சொல்லாடல்... புரிந்து கொள்ள முயற்சிக்கவும்....

//நான் கேட்டது சுயநிதி கல்லூரி மேட்டர், அதையும் இதையும் ஒரு மாதிரி பார்க்கமுடியாது தல!

CATEGORY OC BC MBC SC ST
ANNA UNIVERSITY 0 0 0 0 0
GOVT. & GOVT AIDED 0 0 0 0 1
SELF FINANCING 2839 4757 3804 4569 434
//
சுயநிதிகல்லூரிகளில் பிசியில் 4757சீட்டுகள் காலியாக உள்ளன, ஒரு பிசி ஓசி பிரிவில் சென்று காசு கொடுத்து சீட்டுவாங்குவதை விட பிசி பிரிவில் வாங்குவது இன்னமும் லாபம்... கல்லூரி பிரிவுகளை தேர்ந்தெடுக்கலாம் எனவே அவர்கள் ஓசியில் சேரமாட்டார்கள், அப்படியிருந்தும் பிசியில்,எம்பிசி,எஸ்சி, எஸ்டியில் இத்தனை காலியிடமென்றால் ஓசி முழுக்க எஃப்சி என்று தானே அர்த்தம்?

said...

்ஏங்க இந்த பொருளாதார சர்டிபிகேட் வாங்குவது அவ்வளவு கடினமானது இல்லை. அதனால் உயர்சாதி ஆளுங்க இதை எளிதில் பெற்று புற வாசல் வழியாக உள்ளே வரும் முயற்சிதான் இந்த பொருளாதார அடிப்படை. இதனால்தான் மீடியாக்களும் இதையே ஜல்லி அடிக்கிறது.

இதற்கு தீர்வு என்ன வென்றால்,

சாதி அடிப்படையில் பொருளாதாரம். அப்பொழுது இந்த இடஒதுக்கீடு சேர வேண்டியவர்களுக்கு
சேரும்.

வெறும் பொருளாதாரம் என்று வைத்தால் 2000 வருடம் என்ன செய்தார்களோ அதையே ஒரு சர்டிபிகேட் வாங்கி கொண்டு செய்ய துவங்கிவிடுவார்கள்.

- சேரன்

said...

//எது சலுகை சீட்டுகள், இடஒதுக்கீட்டு சீட்டுகள் சலுகை சீட்டுகளா? புரிந்து கொண்டு பேச முயற்சிக்கவும்.... இது மொத்த இடஒதுக்கீட்டையும் கேவலப்படுத்தும் சொல்லாடல்...//

அடப்பாவி மக்கா இப்படி மாட்டிவிடறீங்களே! ஓய், நான் நீங்க நினைக்கிற மாதிரி அர்த்தத்தில சொல்லவில்லை சலுகை சீட்டுன்னு, அரசு சலுகை கிடைக்கும் கல்லூரியில் சீட்டு என்று அர்த்தம் தல.

ஆளை போட்டுத்தள்ளப் பார்க்குறீங்க

said...

//// பொருளாதார நிலை க்ரீமிலேயரை தீர்மாணிக்கின்றதா? ////

ஆமாம். ஆமாம். ஆமாமாம்.

மூன்று முறை ஆமாம் போட்ட அனானி

சென்ற ஆண்டுவரை க்ரீமிலேயருக்கு பொருளாதார வரையறை ஆண்டுக்கு ஒரு இலட்சம் வருமாணம், அதாவது மாதம் ரூபாய் 8,333.... அப்போ டி கிரேட் பியூன் பசங்க போனவருசம் க்ரீமிலேயர், இந்த வருசம் 20,000னு மாற்றியிருப்பதா சொல்றாங்க... அப்பவும் கூட ரிட்டையர் ஆகுற நிலையில் இருக்குற டி க்ரூப் ஆபிசருங்க இதை தொடுவார்கள், டில்லியில் 20,000 சம்பளம் வாங்கி 8,000 வாடகை கொடுத்து இன்ன பிற செலவுகள் செய்து மாத கடைசியில் கடன் வாங்குபவன் க்ரீமிலேயர், ஆனால் ஏதோ ஒரு கிராமத்தில் 19,999 சம்பாதித்து 1000 வாடகை கொடுத்து மாச கடைசியில் 5,000மோ பத்தாயிரமோ மிச்சம் பிடிப்பவன் க்ரீமிலேயர் இல்லை.... அப்படித்தானே? இன்றைக்கு பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு கேட்பவர்கள், நாளைக்கு நான் சொன்ன இந்த ஓட்டைகள், மற்றும் பொய் வருமான சர்ட்டிபிகேட் வாங்குகிறார்கள் என்றெல்லாம் சொல்லி இடஒதுக்கீட்டையை மொத்தமாக தூக்க சொல்வார்கள், இது தான் பொருளாதாரத்தை க்ரீமிலேயரில் சேர்க்க சொல்வதன் பிண்ணனி,.

said...

Mr.Kuzhali, creamy layer is decided not on the basis of income alone.The National Backwards Classes Commission defines creamy
layer taking into account the category of employment (Group I,
IAS,IPS) also.The same is applied
by Central govt.In other words
irrespective of income children
of IAS/IPS officers will come
under creamy layer.So stop talking
nonsense on creamy layer.

said...

////செல்லா சொல்வது போல நாங்கள் என்று வந்துவிட்டால் கலைஞர் ராமதாஸ் குழந்தைகள் தான் கண்ணுக்கு தெரிகிறார்கள். அதுவே உங்களுக்கு என்று வந்தால் கோயிலில் மணியாட்டும்ஏழை அம்பிகள் தான் தெரிகிறார்கள். ////


My Question here is....

Do you want இட ஒதுக்கீடு for your family or not. Can you say கலைஞர், ராமதாஸ் families not going to use the இட ஒதுக்கீடு.

If they are raising their voice only for BC/OBC/SC/ST with first graduates.....

If yes for all your answers ,

I really appriciate your posting...You are the best.

Sarthar

said...

why do we need quota system?

NO where else in world there is quoto even for very very suppressed communities. Only in India because of lazy persons and politician and few misunderstood persons like you we are having quota system.

Even in US Native Indians or even Afro Americans who where treated more badly than SC in our country dont have quota system

Your argument is like in Indian village we dont have track for running practice so we will need quota for Indian backward villager in olympics race because the training that American get is not given to Indian villager.

dont this argument feel funny even to you ???