பொட்டீகடையார் அழைக்கிறார் - சிங்கையில் அமுக மாநாடு

பொட்டீக்கடையார் அழைக்கிறார்



அனானிகள் முன்னேற்ற கழகத்தின் (அமுக) முதல் உலக மாநாடு சிங்கையில் இன்றிரவு தொடங்கி ஞாயிற்றுகிழமை முடிவடைகின்றது(6,7,8 ஏப்ரல் 2007) மாநாட்டு அழைப்பாளர் அஞ்சா நெஞ்சன், அசகாய சூரன், அகில உலகமெங்கும் அவுஸ்திரேலியா முதல் அமெரிக்கா வரை படையெடுப்பு நிகழ்த்தும்(டேட்டிங் சைட்டுகளில்) பொட்டீக்கடையார் என்று அழைக்கப்படும் சத்ய ராஜேந்திர சோழர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அமுக வின் மற்றொரு முக்கிய புள்ளி இளஞ்சிங்கமும் வருகை புரிகின்றார், பாதுகாப்பு காரணங்களுக்காக அவரது பெயர் மற்றும் இன்ன பிற விபரங்கள் இரகசியமாக வைக்கப்படுகின்றது.

மாநாட்டு விபரங்கள் சந்திப்பு தொடர்பாக இளம் புயல் குழலியை தொடர்பு கொள்ளவும்

நேரடியாக அமுக பொட்டீக்கடையாரை தொடர்பு கொள்ள தொலைபேசி எண் மற்றும் இடவிவரங்களை பிறகு இதே பதிவில் வெளியிடுகின்றோம்.

அமுக மாநாட்டில் கண் பார்வையற்றவர்கள் பேசும் அதிசயமும், வாய்பேச முடியாதவர்கள் கேட்கும் அதிசயங்களும் நிகழ்த்தப்படும், ஹால்மார்க் முத்திரை பொறித்த வைர மோதிரத்தை பொட்டீக்கடையார் தம் மந்திர சக்தியால் வரவழைத்து இளம் புயல் குழலிக்கு வழங்கும் அதிசயமும் இடம்பெறலாம்.

அலைகடலென திரண்டு வாரீர்.... ஆதரவு தாரீர்

15 பின்னூட்டங்கள்:

said...

வெளியில் இருந்து எங்கள் ஆதரவு ;-)

அருமைத் தம்பி பெட் டீ கடையார் வெற்றியுடன் திரும்பி வர சிட்னியில் இருந்து வாழ்த்துகிறோம். (முடிந்தால் சிங்கை முரசுக்கு அரைப்பக்க விளம்பரம் கொடுக்கவும்)

said...

மூஞ்ச பாரு மூஞ்ச. மங்கி..

said...

கடைசி நேரத்தில் கேன்ஸல் செய்யப்பட்ட என்னுடைய சிங்கைப்பயணத்துக்கு மெய்யாலுமே வருந்துகிறேன்...

பொட்டீக்கடையாரிடம் தகுந்த விளக்கம் கொடுத்துள்ளேன்...

நவம்பரில் பாலித்தீவு அல்லது தாய்லாந்தில் நடைபெறும் அ.மு.க மாநாட்டில் துவக்கவுரையை நான் நான் நிகழ்த்துவேன் என்று துண்டு போட்டு வைத்துக்கொள்கிறேன்...

சார்க் மாநாட்டை விட புகழ் பெற்ற இந்த மாநாட்டில் அ.மு.கவினர் திரளாக முண்டியடித்து கலந்துகொள்வார்கள் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன்...

கொஞ்சம் இந்த போட்டோவை போடாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்...எங்கள் அலுவலகத்தில் ஒரு குழந்தை இந்த போட்டோவை பார்த்து 'வீல்' என்று அலறி ஆப் டே "லீவ்" போட்டுவிட்டு ஓடிவிட்டது...மூஞ்சியை காட்டி குழந்தைகளை பயமுறுத்தும் பொட்டீக்கடையாரை வண்மையாக கண்டிக்கிறேன்...

said...

இந்த ஆளை பார்த்தால் ஹெராயினை கடத்துபவன் மாதிரி இருக்கிறது...இந்த ஆளின் லங்கோடு முதல் நாங்கள் சோதனை இடவேண்டும் :)))

said...

இந்த மாநாடு பெருவாரியான அனானிகள் கலந்துகொள்ளும் மாபெரும் மாநாடு. திரளான அனானிகள் கலந்துகொண்டு சிறப்பிக்க வேண்டுமாய் கேட்டுக்கொள்கிறோம்.

அ.மு.க தலைமை கழகம்
மாகடி மெயின் ரோடு,பெங்களூர்

said...

விழா நல்லபடியாக அமைய வாழ்த்துகள்! சிங்கைமக்கள் திரளாகக் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கிறேன். இப்பதான் ஒருத்தருக்கு போன்போட்டு விசயத்தைச் சொன்னேன்.

செந்தழல் ரவி சொல்வதையும் கவனிக்கவும். ;)))

-மதி

said...

மாநாடு நன்கு நடைபெற வாழ்த்துகள்.(பிரியாணி உண்டா)

said...

நீங்க கூட்டம் நடத்துறது சிலருக்குப்பொறுக்கல போலிருக்கு. வாழ்த்திட்டுப்போயிருக்காங்க. ;)

said...

ஓ, இந்த போட்டாவில் இருப்பவர்தான் பொட்டிக்கடையாரா? நான் என்னவோ பிரமிடு என்று நினைத்தேன்.

said...

அ.மு.க. உறுப்பினரான நடிகை நமீதா இங்கே பின்னூட்டம் இடமுடியவில்லையாம். எனக்கு மெயில் அனுப்பியிருக்கிறார். அவர் மெயிலிலிருந்து,

"இதுவரை நான் பார்த்த ஆணழகர்களிலேயே சிறந்த ஆணழகர் பொட்டீக்கடை தான். அவர் போட்டோவைப் பார்த்ததுமே நான் மானசீகமாக அவரை காதலிக்க ஆரம்பித்து விட்டேன். டாம்க்ரூஸ் மாதிரி இருக்கிறார். தயவுசெய்து எனக்கு செட்டப் செய்யமுடியுமா?"

- கடைசி லைன் கொஞ்சம் எனக்கு நெருடலாக இருந்தாலும் கூட பொட்டிக்கடை மீதான நமீதாவின் தெய்வீகக்காதலுக்கு கருத்தியல் ரீதியான ஆதரவை தருவேன் என்று பகிரங்கமாக உறுதி கூறுகிறேன்.

said...

//மாநாடு நன்கு நடைபெற வாழ்த்துகள்.(பிரியாணி உண்டா)//
கண்டிப்பா உண்டு வாங்க வாங்க...

said...

//பொட்டிக்கடை மீதான நமீதாவின் தெய்வீகக்காதலுக்கு கருத்தியல் ரீதியான ஆதரவை தருவேன் என்று பகிரங்கமாக உறுதி கூறுகிறேன்.
//
லக்கியின் உயிரை கொடுத்தாவது நமீதாவின் பொட்டீகடை மீதான காதலை சேர்த்துவைப்போம் என அமுக முடிவு செய்துள்ளது...

said...

இந்த சந்திப்பை இழந்தது மிகுந்த வருத்தமாக இருக்கிறது.

ரவி சொன்னது போல அடுத்த அ.மு.க. அகில உலக கழகவளர்ச்சி மாநாட்டில் நவம்பரில் நானும் இருப்பேன். நான் தான் ஆண்டறிக்கை படிக்கனுமாக்கும்.

:)

இந்த சந்திப்பு வழிய வழிய மகிழ்ச்சியை கொடுக்கட்டும்.

said...

நானும் கலந்துக் கொள்கிறேன் !

பொட்டீக்கடைக்காரரும், அந்த விஐபி பதிவரும் வருக வருக!!!

said...

முடியல....

கண்ண கட்டுது!!




தெளிஞ்சதுக்கப்புறம் வரேன்..

வரவே இல்லைன்ன்னா.. தெளியவேயில்லைனு தெரிஞ்சிக்குங்க..