டாடா, மாறன்,ஜீவஜோதி க.சு. காவாலித்தனம்

மறந்து போகவில்லை தேர்தல் 2006ம் அதில் அரசியல்வாதிகள் எடுத்த நிலையும், பத்திரிக்கைகள் எடுத்த நிலையும், தேர்தலின் நெருக்கத்தில் இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி
பத்திரிக்கைகள் டாடாவை மிரட்டினார் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் என்று எழுதினார்கள், வைகோவும் இதை ஊர் ஊராக எடுத்துக்கொண்டு போய் பேசினார், அதை தயாநிதி
மாறன் மறுத்தார், நட்டஈடு கேட்டு வழக்கும் தொடர்ந்தார், தேர்தலும் முடிந்துவிட்டது, வாக்குப்பதிவுக்கு முன்பு வரை பத்திரிக்கைகளில் வழக்கம் போல(?!) வாசகர் கடிதமென்ன, அலசல் என்ன என்று கருத்து சுதந்திரத்தையும், பத்திரிக்கை சுதந்திரத்தையும் காத்தார்கள், சரி டாடாவை மிரட்டியது உண்மையா? பொய்யா? என ஒன்றும் புரியாமல் சனநாயகத்தின் நான்காம் தூணான பத்திரிக்கைகளை நம்பி ஏற்கனவே திமுகவுக்கு வாக்களிக்க நினைத்தவர்கள் சிலர் திமுகவிற்கு ஓட்டுப்போடாமல் போயிருப்பார்கள்.

டாடாவை(யே?!)மிரட்டியதாக கூறிய பத்திரிக்கைகள் அதன் பிறகு இதை கண்டுகொள்ளவேயில்லை சரி இன்னும் அவர்களுக்கு அவகாசம் தேவைப்படலாம் என காத்திருந்தேன், தேர்தல் முடிந்து நூறு நாட்களும் ஆன பின்பும் இன்னமும் பத்திரிக்கைகள் தயாநிதி மாறன் டாடாவை(யே!) மிரட்டியதை நிரூபிக்கவில்லை, சரி நிரூபிக்கவில்லையே அதற்கான மன்னிப்பையாவது கேட்டார்களா என்றால் அதுவும் இல்லை, பத்திரிக்கைகளின் சுதந்திரம், கருத்து சுதந்திரம் எல்லா எழவும் சரிதான், ஆனால் தேர்தலுக்கு வெகுசில நாட்களே இருக்கும்போது டாடாவை(யே?!) மிரட்டியதாக பத்திரிக்கைகள் எழுதியதும் தேர்தல் முடிந்த பின் இன்னமும் அது தொடர்பான எந்த அறிவிப்பும் செய்யாமல் இருப்பதால் இந்த பத்திரிக்கைகளின் நோக்கத்தை சந்தேகிக்க வேண்டியுள்ளது, திமுக கூட்டணி வெற்றி பெறக்கூடாது என்ற ஆசையில் character assassination செய்தார்கள் என சந்தேகிக்காமல் இருக்க முயவில்லை.

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன் நடந்த தேர்தலில் ஒரு உறுப்பினர் மீது கணக்கு வழக்கு பிரச்சினையை எதிர் கட்சியினர் எழுப்பினார்கள், அதற்கு மூத்த அமைச்சர் "ஹோ சோ டாங்" அவர்கள் வாக்குப்பதிவிற்கு முன் இந்த சர்ச்சையை தொடர்புடையவர்கள் தீர்த்துக்கொள்ளுங்கள் தேர்தல் சமயத்தில் இப்படி எழுப்பப்படும் பிரச்சினைகள் வாக்குப்பதிவில் எதிரொலிக்கும் என்றார், இங்கோ தேர்தல் முடிந்து நூறு நாட்களுக்கு மேல் ஆகியும் பத்திரிக்கைகள் எதையும் நிருபிக்கவில்லை, அது மட்டுமல்ல அந்த குற்றசாட்டு பற்றி எந்த விவாதமும், அலசலும், வாசகர்கடிதங்களும் இல்லை, இதிலிருந்து தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் அதன் செய்திகளை வைத்து பரப்பிய மற்ற பத்திரிக்கைகள் செய்தவைகள் கருத்து சுதந்திரம் எனலாமா?, பத்திரிக்கைகள் நினைத்தால் யார் மீதும் தேர்தலுக்கு முன் சேறு இறைத்துவிட்டு அதன் பின் ஒன்றும் நடவாதது போல் இருக்கலாம், இது கருத்து சுதந்திர காவாலித்தனமில்லையா? இதனால் தேர்தல் நேரத்தில் திமுக கூட்டணிக்கும். தயாநிதி மாறனுக்கும் ஏற்பட்ட இழப்பிற்கு யார் பொறுப்பு?

ஜீவஜோதி திருமணம் சமீபத்தில் நடைபெற்றது, அது தொடர்பான கட்டுரைகளில் சரவணபவன் உரிமையாளர் ராஜகோபாலின் பேட்டி தவறாமல் இருந்தது, எல்லாவற்றிலும் என்னோட தொலைபேசினார் ஜீவஜோதி, என்னிடம் திருமணத்திற்கு அனுமதி பெற்றார், ஜீவஜோதிக்கு செட்டில்மென்ட் கொடுத்தார்கள், ஜீவஜோதிக்கு அண்ணாச்'சீ' சீர் செய்தார் என ஏகப்பட்ட கருத்து சுதந்திரங்கள், ஜீவஜோதி பற்றி எப்போதுமே ஒரு சந்தேகத்தை அண்ணாச்'சீ' பத்திரிக்கைகளில் கிளப்பிவிட்டுக்கொண்டிருந்தார், ஆனால் திருமணத்திற்கு பலத்த பாதுகாப்பு, ஜீவஜோதி ராஜகோபாலுக்கு தண்டனை வாங்கித்தர தொடக்கத்திலிருந்தே தீவிரமாக இருந்ததெல்லாம் பார்க்கும்போது அண்ணாச்'சீ' திட்டமிட்டு ஜீவஜோதி மீது சந்தேகம் வரவைத்துள்ளார் என கருத இடமுள்ளது, இடஒதுக்கீடு எதிர்ப்பு போராட்டத்தின் கவர் ஸ்டோரி கட்டுரையில் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்களின் கருத்தை கேட்டு போடாத பத்திரிக்கை சுதந்திரம் அண்ணாச்'சீ' யிடம் ஜீவஜோதி திருமணத்திற்கு 'பெட்டி' செய்தி வாங்கி போடுகின்ற அளவில் இருக்குது கருத்து சுதந்திரம், இதெல்லாம் கருத்து சுதந்திரமா? இல்லை கருத்து சுதந்திர காவாலித்தனமா?



என்ன எழவு அது ஆங்... டிஸ்கி

நான் பத்திரிக்கை, கருத்து சுதந்திரத்துக்கு எதிரியல்ல ஆனால் தேர்தலுக்கு வெகு சில நாட்களுக்கு முன் கிளப்பப்படுகின்ற பிறகு அது தொடர்பாக பேசாததைத் தான் காவாலித்தனம் என்கிறேன்

11 பின்னூட்டங்கள்:

said...

சோதனை

said...

நன்றாகச் சொன்னீர்கள். இதழியல் அறம் எல்லாம் இப்போது சிறிதும் கடைப்பிடிக்கப்படுவதில்லை. ஆனால் பத்திரிக்கைச் சுதந்திரத்துக்கு 'ஆபத்து' வரும்போது அனைவரும் ஒன்று சேர்ந்து கூச்சல் போடுவார்கள். இதன் தொடர்பாக நான் எழுதியது இங்கே

said...

திரு. குழலி,

இதெல்லாம் செலக்டிவ் அம்னீசியாவில சேருமோ?

வாழ்க கசுகா!!

said...

இப்ப பத்திரிக்கை எல்லாம்,
எதுக்கு நடத்துறாங்க,
காசு பார்க்கத்தான்,

அதறகாக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் இவர்கள்.
எது என் குமுறல்

said...

Kuzhali,

How about another post from you on promises not kept by the "dravidian" politicians? Why go so far, the current deplorable state of vernacular press in TN is totally due to control by DMK and its ilk.

I still remember the promises about TN becoming singapore!

said...

during this episode, Media asked Tata about it. Tata said he had no comments. this is proof enough that he did intimidate. Also gurumurthy had written articles in indianexpress around that time on who is maran, where is business interests lie etc with anough proof. If u can go through them. Atleast I am more than convinced he did that. Please dont tell me D.Maran is not that kinda of peson. We all know what sumangali cable does.

Mothathila Siru pulla thanama iruku.

said...

//Atleast I am more than convinced he did that. //
ஹி ஹி நீங்க கன்வின்ஸ் ஆகிட்டிங்க :-)

மாறன் மீது குற்றம் சாட்டியது பத்திரிக்கை, அதுவும் தேர்தல் நெருக்கத்தில், இத்தனை நாட்கள் ஆகியும் அதை நிரூபிக்காமல் விட்டு விட்டு கொடுமை என்னனா அந்த பேச்சையே எடுக்கலை...

போர்பார்ஸ் விவகாரம் தெரியுமா? நோண்டி நொங்கெடுத்தார்கள் பத்திரிக்கைகள் வருடகணக்கில் அதுவும் வலிமைவாய்ந்த பிரதமரை எதிர்த்து, இவர் after all ஒரு மந்திரி அவ்வளவு தானே?

ஆனால் பத்திரிக்கையை நம்பும் மக்களிடம் தேர்தல் சமயத்தில் இப்படி செய்வததை எதில் சேர்க்க?

said...

எல்லாம் சரி, மாறன் வழக்கு என்னாச்சி? அவரும் கம்மென்று விட்டு விட்டார் போலிருக்கே.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ஜீவஜோதி விஷயத்தில் நீதிபதியே அவரது அன்னை தனது பெண்ணை அண்ணாச்சியிடம் அவரது பணத்துக்காகப் பழக விட்டிருக்கிறார் என்று பொருள்பட கமெண்ட் விட்டிருந்தாரே. நான் நினைப்பதென்னவென்றால் இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட யாரும் இன்னொசண்ட் இல்லை.

இந்தக் கண்றாவிகளை துக்ளக் தவிர எல்லோரும் பிரசுரித்து காசு பார்த்தனர். அதிலிருந்து தெரிந்து கொள்ளலாம் துக்ளக்கின் உயர்ந்த தரம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

kuzhali,
neengal solvathai naan othukolgiren. Aanal dayanidi maran miratal viduthar enbathil sandhegam illatha vagaiyil tata vil pathil therivikirathu. Intha mathiri aatkalidam naam intha mathiri nadathaiyai thaan ethir parka mudium. Ooran neyee, en pondatti kaiyee enbathu pola, namma kaasil TV kodupargal, atharku 500 rubai varai vangi kolvathaga kelvi, cable collection vera. Intha kootathuku kodi pidikathhergal thayavu seithu. Dayanidhi maran patri gurumurthy ezhuthiya katuraikai pathil sonnara antha minshtar?

said...

குழலி,
தலைப்பு நேகு மாதிரியே நோகாமல் வச்சிருக்கிங்க !
:))