இந்தா புடவை கட்டிக்கோ

தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக முழங்கும் விஜயகாந்த் அவர்களின் வேட்பாளர் தான் இப்படி.ஹேய் யாருப்பா அது என்னது சத்தமா சொல்லு... என்னது தலைவரே தொப்புள்ல பம்பரமா? யோவ் என்ன வெளயாடுறியா? போ... போ... இட்லிவடைக்கும், எஸ்.கேக்கும் கோபம் வந்துடப்போகுது, போய்யா போ.....

54 பின்னூட்டங்கள்:

said...

அன்பே சிவத்தில் (நாட்டுக்கொரு சேதி சொல்ல) பாட்டு வருமே...

'மரங்கள் காற்றை விரும்பினாலும் ...???
ஓடி ஓடி ஒளிந்தாலும் ...???'

(நினைவில் சிக்காமல் வார்த்தை மறந்துவிட்டது)

அந்த மாதிரி கோபம் வருவது தவறா?

said...

//ஹேய் யாருப்பா அது என்னது சத்தமா சொல்லு... என்னது தலைவரே தொப்புள்ல பம்பரமா?//

அடப்பாவிகளா... இதுக்கும் அதுக்கும் என்னய்யா சம்பந்தம்?! இதுக்கு உண்மையில் காவல்துறை தான் வெக்கப்படணும். தி.மு.க செஞ்சா எல்லாமே ரைட்டுன்னு நினைச்சா என்ன பண்ண முடியும்?

இப்படி தைரியமா எதுத்து கேக்க அவங்களாலயாச்சும் முடியுதேன்னு சந்தோஷப்படுங்க!

said...

//இட்லிவடைக்கும், எஸ்.கேக்கும் கோபம் வந்துடப்போகுது, //

பாட புத்தகத்தில் இன்னும் விஜயகாந்தைப் பற்றிப் படிக்காத செல்வனுக்கும்...

said...

மன்னிச்சிக்குங்க பாலா , இட்லிவடை, எஸ்.கே. வரிசையில் உங்களை சேர்க்காமல் மறந்துட்டேன்...

said...

//பாட புத்தகத்தில் இன்னும் விஜயகாந்தைப் பற்றிப் படிக்காத செல்வனுக்கும்...//

ஹி ஹி.... :-)))

said...

:))))

said...

ஓ அதனாலதான் தலைவரு மரத்த வெட்டி இலைதலைங்களால ஆடை பண்ணி போட்டுகிட்டாரோ?..

said...

Kuzhali will you also post the newsitem that appeared in JV
about the behavior of Moorthy,
PMK MP in elections to Madras Corporation and give your comments.
I do not approve the comments
made by the candidate.I understand
your problem- the growth of the
party led by Vijayakanth.

said...

நம்ம தமிழ்நாட்டு அரசியலில் புடவையை அவுத்துப்போடறவுங்களும் இருக்காங்க, புடவையை அவுத்து விடறவுங்களும் இருக்காங்க. வாழ்க அரசியல்!! வளர்க தமிழ்நாடு!!! நல்ல எதிர் காலம் எனக்கு இப்பவே தெரியுது!!

said...

//இப்படி தைரியமா எதுத்து கேக்க அவங்களாலயாச்சும் முடியுதேன்னு சந்தோஷப்படுங்க!//
கேட்கட்டும் கேட்கட்டும் நல்லா கேட்கட்டும்....

said...

செல்வனின் பதிவில் நான் இட்ட பின்னூட்டம். மீண்டும் ஒரு முறை.

"மன்னிக்கவும். விஜயகாந்தும் இதே குட்டையில் ஊரும் மட்டைதான். அவர் இன்னும் ஆட்சிக்கு வராத காரணத்தால் அவரின் பராக்கிரமங்கள் தெரியவில்லை. அவரின் கட்சியில் சேர்ந்து பதவிகளை பிடிப்பவர்கள் முன்னால் தி.மு.க மற்றும் அ.தி.மு.க வினரே. அப்புறம் எப்படி அவர்கள் ஒரே நாளில் புனிதமானவர்கள் ஆவார்கள்?

ஒரு சிறிய செய்தியை பாருங்கள்.

சென்னை மாநகராட்சிக்கு போட்டியிடும் தே.மு.தி.க வேட்பாளர் மீனாட்சி விஜயகாந்துடன் கமிஷனர் ஆபீசுக்கு வந்தார். அப்போது அங்கிருந்த போலீஸ் அதிகாரியிடம் "என்னையா டூட்டி பாக்கறீங்க.... ஆளும் கட்சின்னா நடுங்கறீங்களா... பேசாம என் புடவையை கட்டிக்கோங்க. அவுத்துத்தர்றேன்.." என்று நிஜமாகவே முந்தானையை உதறப் போக, சகத் தொண்டர்கள் பாய்ந்து அவரை சமாதானப்படுத்தினர். (நன்றி - ஜூனியர் விகடன்).

விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று இதைத்தான் சொல்வார்களோ.

Unfortunately we got to choose one of the (lesser) evils."

said...

//என்னையா டூட்டி பாக்கறீங்க.... ஆளும் கட்சின்னா நடுங்கறீங்களா... பேசாம என் புடவையை கட்டிக்கோங்க. அவுத்துத்தர்றேன்/

சபாஷ், தி மு க விற்கும், பா ம க விற்கும் சரியான போட்டியாக ஒரு கட்சி உருவெடுத்து விட்டது.

பாலா

said...

//சபாஷ், தி மு க விற்கும், பா ம க விற்கும் சரியான போட்டியாக ஒரு கட்சி உருவெடுத்து விட்டது.//

அப்படியா? சுப்ரமணிய சாமிக்கு பாவாடையைத் தூக்கிக் காட்டி தரிசனம் கொடுத்த அதிமுக இந்த லிஸ்ட்டில் இல்லையா? :-))))

said...

//தி.மு.க செஞ்சா எல்லாமே ரைட்டுன்னு நினைச்சா என்ன பண்ண முடியும்?
//
நான் எங்கேப்பா அப்படி சொன்னேன், சென்னை மாநகரத் தேர்தல் வன்முறைக்கு கண்டனப்பதிவு போட்டேனேப்பா, மாற்றம் தரும் மாசற்ற தலைவராம் விஜயகாந்தின் கூத்துகள் அருமை...

said...

---இட்லிவடை, எஸ்.கே. வரிசையில் உங்களை சேர்க்காமல் மறந்துட்டேன்---

கோபம் வருவது தவறா? (original-ஆ கேட்டதுதான்; அதே சந்தேகம் தெளியாததால் மீண்டும் ஒரு முறை கேட்டு விடுகிறேன்)

said...

//அப்படியா? சுப்ரமணிய சாமிக்கு பாவாடையைத் தூக்கிக் காட்டி தரிசனம் கொடுத்த அதிமுக இந்த லிஸ்ட்டில் இல்லையா//

தப்பு தான். அ இ அ தி மு க இல்லாமலா?

அதுவும் இந்த லிஸ்டில் உண்டு உண்டு.

பாலா

said...

http://dharumi.blogspot.com/2006/10/180-election-report.html

தருமியின் இந்த பதிவு இப்போதெல்லாம் நடக்கும் உள்ளாட்சி தேர்தல்களின் அவலங்களுக்கும் அதற்கு போலீஸாரின் ஒத்துழைப்பிற்கும் ஒரு சின்ன உதாரணம்தான். இதையெல்லாம் பார்க்கும்போது, மேலே குறிப்பிட்ட வேட்பாளருக்கு அப்படி கோபம் வராவிட்டால்தான் கேவலம்!

said...

81 வயசு சென்னா ரெட்டி என்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டார் என்று சொன்ன அம்மா தான் இதற்கெல்லாம் முன்னோடி.

said...

//கோபம் வருவது தவறா? //

சே... சே... யார் சொன்னா தப்புனு?

தப்பே இல்லிங்க... என்ன எல்லோருக்குமே கோபம் வரும் அப்படிங்கறதை நாமெல்லாம் அப்பப்போ மறந்துடறோம் :-)))

சப்பை மேட்டரு உள்ளாட்சி தேர்தல் வன்முறைக்கே( ஆமாங்க நிசமாவே இது சப்பை வன்முறை தான்) அடிவாங்கியவர்களுக்கு கோபம் வந்து புடவையை கழட்டி கட்டிக்கோனு சொல்ல வந்தா, போராட்டத்தை முடிவுக்குகொண்ட வரமுடியாமல் சாதிக்கலவரத்தை தூண்டிய காவல்துறையையும், துப்பாக்கி சூட்டையும் அதில் பறிபோன உயிர்களையும், தாமிரபரணி ஆற்றில் மொத்தமாக குதித்து உயிரிழந்தவர்களையும், காவல்துறையை சேர்ந்தவரை கும்பலில் அடித்ததற்காக ஒரு கிராமத்தையே வன்முறைக்காடாக்கி வன்புணர்ந்த கயவர்களையும் எதிர்கொண்டவர்களுக்கும் இன்னும் ஒன்னும் எத்தனையோ எத்தனை சம்பவங்கள், அவர்களுக்கு எத்தனை ஆத்திரம் வரும், எவ்வளவு கோபம் வரும், எத்தனை வெறி வரும், அப்போதெல்லாம் நாம் "அந்த மாதிரி கோபம் வருவது தவறா?" என்று கேட்பதற்கான வார்த்தைகள் நம்மிடம் மிச்சமிருக்க வேண்டும்.

said...

//மேலே குறிப்பிட்ட வேட்பாளருக்கு அப்படி கோபம் வராவிட்டால்தான் கேவலம்!//

கோவம் வந்தா பொடவையை அவுத்துடுவாங்களா? நல்லா கீதே கதை.

said...

//சென்னை மாநகரத் தேர்தல் வன்முறைக்கு கண்டனப்பதிவு போட்டேனேப்பா,//

ஆமாம் உங்கள் நடுநிலமையை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும் :)))

//கூட்டணி அரசென்பது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, அரசு தவறிழைக்கும் போது தட்டிக்கேட்கவும் தான், தமிழகத்தில் அரசை தாங்கும் கூட்டணி கட்சிகள் இதையும் தட்டி கேட்கவேண்டும்.
//

கூட்டணி கட்சிகள் மட்டும் தான் தட்டிக்கேட்கவேண்டும், மற்றவர்கள் தட்டிக்கேட்டால் அது கூத்து என்று சொல்லும் உங்கள் நடுநிலமையை நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும்!

said...

குழலி கண்ணில் பா.ம.கவைச் சேர்ந்த மூர்த்தி எம்.பி இந்த தேர்தலில் எப்படி நடந்து கொண்டார் என்று ஜூ.வி வெளியிட்டுருந்த செய்தி தெரியவில்லையா அல்லது அதைப் போட்டால் பா.ம.கவைப்
பற்றி குற்றம் சொல்வதாக ஒத்துக் கொண்டதாகிவிடும் என்ற பயமா.1999 தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் தலித்களை வாக்களிக்க விடாதது குறித்து ரவிக்குமார் விரிவாக எழுதினார்.அதைப்
படித்திருக்கிறீர்களா.யார் அப்படி செய்தது என்று உங்களுக்குத் தெரியாதா. விஜயகாந்த் கட்சி
மோசம் பா.ம.க நல்ல கட்சி என்று நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது.
அந்த வேட்பாளர் செய்தது சரியல்ல.

said...

//நடக்கும் உள்ளாட்சி தேர்தல்களின் அவலங்களுக்கும் அதற்கு போலீஸாரின் ஒத்துழைப்பிற்கும் ஒரு சின்ன உதாரணம்தான்.
//
அருள் கலவரத்திற்கு காவல்துறையும் திமுகவும் தான் முழுகாரணமென்றால் எனக்கு சிரிப்புதான் வரும், ஏனென்றால் சென்னை கலவரத்துக்கு முழுமுதல் காரணம் சென்னை வாழ் வாக்காள மஹா ஜனங்கள் தான், அதிமுக 2001ல் நடத்திய வன்முறை தேர்தலுக்கு சென்னை வாழ் மஹா ஜனங்கள் என்ன செய்தார்கள், நாலரை வருடத்தில் மறந்துவிட்டு ஆயிரம் ரூபாய் வெள்ளநிவாரனநிதி வாங்கிக்கொண்டு இரட்டை இலையில் குத்தினார்களே, அய்யோத்திக்குப்பம் வீரமணியை வைத்து எல்லாம் செய்துவிட்டு கடைசில் தங்களுக்கு எதிரானவுடன் வீரமணியை சுட்டு தள்ளி (தங்களுக்கு பிடிக்காத )ரவுடிகளை மட்டும் சுட்ட ஜான்சி ராணிக்கு குத்தினார்களே, அப்போது ஞாபகம் இல்லாமல் போய்விட்டதல்லவா 2001 தேர்தல் வன்முறை.

அதே மாதிரி நாலரை வருடத்தில் சென்னை வாழ் வாக்காள பெருங்குடி மக்கள் இதையும் மறந்து இன்னும் எதாவது 2000 ரூபாய் நிவாரணநிதிக்கும் வேறு எதற்குமாவது வாக்களிக்க போகின்றது, இதில் தவறு திமுக மீதாம் காவல்துறை மீதாம்... ஹைய்யோ ஹைய்யோ...

//இதையெல்லாம் பார்க்கும்போது, மேலே குறிப்பிட்ட வேட்பாளருக்கு அப்படி கோபம் வராவிட்டால்தான் கேவலம்!
//
அதுக்காக....

said...

ரவி அதுக்கு தான் உங்களை மாதிரி நிறைய பேர் இருக்கிங்களே :-)

என்ன ரவி நீங்கள் என் பதிவுகளை தொடர்ந்து படிப்பதாக நினைத்தேன், போன பதிவின் பின்னூட்டத்தில் 1999 பற்றிய கருத்தை சொல்லியிருக்கின்றேனே!

said...

//விஜயகாந்த் கட்சி
மோசம் பா.ம.க நல்ல கட்சி என்று நீங்கள் என்னதான் பிரச்சாரம் செய்தாலும் எடுபடாது.
//
ரவி நானெங்கப்பா இப்படி சொன்னேன், அதுவும் இந்த பதிவில் பாமக பற்றி ஒரு வார்த்தையும் சொல்லலையே, பின்ன என்ன?

said...

தி.மு.க வை மட்டும் குறை சொல்லவில்லை. அப்போது ஆட்சியிலிருக்கும் கட்சியையும் அவர்களுக்கு உடந்தையாய் இருக்கும் காவல் துறையையும்தான் சொல்கிறேன்.

//ஏனென்றால் சென்னை கலவரத்துக்கு முழுமுதல் காரணம் சென்னை வாழ் வாக்காள மஹா ஜனங்கள் தான்// இதுதான் எனக்கு நகைச்சுவையாக இருக்கிறது. ஆளும் கட்சியும் போலீசும் என்னவேண்டுமானாலும் செய்வார்கள், அதற்கு அவர்களுக்கு வாக்களித்த மாக்கள் மட்டுமே காரணம் என்னில் அந்த அரசும் காவல்துறையும் தேவையே இல்லையே. எதற்கு அவையெல்லாம்?!

அத்தோடு மக்களுக்கோ வேறு கட்சியினருக்கோ கோபம் வந்தால்தான் உங்களுக்கு கிண்டலாக இருக்கிறதே!

உண்மையில் இந்த வேட்பாளர் நடந்துகொண்டதைவிட பலமடங்கு கேவலம் ஆளும்கட்சியும் காவல்துறையும் செய்தது. அதை கண்டிக்கும் உங்கள் பதிவில் இவ்வளவு ஏளனம் இல்லையே என்பதுதான் வருத்தமாயிருக்கிறது :(

இதற்குமேல் இங்கு சொல்ல ஒன்றுமில்லை. வருகிறேன் :)

said...

உங்க மரம் வெட்டிக்கே ஆப்பு வைச்ச விஜயகாந்திற்கு ஆப்பு வைக்கும் உங்கள் முயற்சி நகைப்புக்குறியதாகத்தான் உள்ளது. ஏனென்றால் உள்ளாட்சித்தேர்தலின் போது காவல்துறையின் நடவடிக்கைகளைப் பார்த்து திமுக, பாமக தவிர எல்லோரும் ஆத்திரப்பட்டது யாராலும் மறுக்க முடியாத உண்மைதான்.

said...

//ஆளும் கட்சியும் போலீசும் என்னவேண்டுமானாலும் செய்வார்கள், அதற்கு அவர்களுக்கு வாக்களித்த மாக்கள் மட்டுமே காரணம் என்னில் அந்த அரசும் காவல்துறையும் தேவையே இல்லையே. எதற்கு அவையெல்லாம்?!//
அருள் விசயம் ரொம்ப எளிது, அவன் செய்தான், மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிருந்தார்கள், நாலரை வருசத்தில் மறந்துவிட்டார்கள், பதிலுக்கு இவன் செய்தான் இதையும் மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிருக்கிறார்கள் நாலரை வருசத்தில் மறந்துவிடுவார்கள், மக்கள் அதை மறக்காமல் இருந்திருந்தால் இன்று இவன் செய்வதற்கு துணிவானா? (செய்தது தவறு என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்)

//அத்தோடு மக்களுக்கோ வேறு கட்சியினருக்கோ கோபம் வந்தால்தான் உங்களுக்கு கிண்டலாக இருக்கிறதே//
எது மக்களுக்கு கோபமா? நீங்க வேற மக்களுக்கு முன்பு கோபம் வந்திருந்தா இது நடந்தே இருக்காதே.

//அதை கண்டிக்கும் உங்கள் பதிவில் இவ்வளவு ஏளனம் இல்லையே என்பதுதான் வருத்தமாயிருக்கிறது :(
//
ஏங்க ஒருத்தன் சும்மா பொம்பளை பொறுக்கியா இருக்கான் அவனைத்திட்டுவோம், அதே இன்னொருத்தன் ஏதோ ஒரு மடத்து பீடாதிபதியா இருக்கான் அவன் நான் உத்தமன் என்று கூறிக்கொண்டே பொம்பளை பொறுக்கியா இருக்கான், இவனை கடுமையா திட்டுவோம், இவனையும் மேலே சொன்னவனை திட்டியது மாதிரி திட்டலையேனு இவனை மட்டும் ஏன் கடுமையா திட்டுறனு கேட்குறிங்க?

மாற்றம் தரும் உத்தமர் விஜயகாந்த் அல்லவா? அதனால் தான் அவருக்கு கொஞ்சம் வசவு அதிகம் :-)

said...

இப்ப இன்னா சொல்ட்டாங்க அவ்ங்க. பொடவைய அவுத்து தறேன் கட்டிகோன்னாங்க. அப்பயும்தான் புத்தி வராதே இவனுங்களுக்கு. நாயமான கேள்விதான இது. அவுத்தா குடுத்துட்டாங்க. கோவத்துல கேக்குறதுதான இதல்லாம். சட்ட சபைல பொடவைய உருவுன பண்பாட்டு காவலர்கள் லாம் இது பத்தி பேசக்கூடாது ஆமா.

said...

//இப்ப இன்னா சொல்ட்டாங்க அவ்ங்க. பொடவைய அவுத்து தறேன் கட்டிகோன்னாங்க. அப்பயும்தான் புத்தி வராதே இவனுங்களுக்கு. நாயமான கேள்விதான இது. அவுத்தா குடுத்துட்டாங்க. கோவத்துல கேக்குறதுதான இதல்லாம். சட்ட சபைல பொடவைய உருவுன பண்பாட்டு காவலர்கள் லாம் இது பத்தி பேசக்கூடாது ஆமா.
//
நான் எதுனா தப்புனு சொன்னேனா?

பின்ன எதுக்குங்க இப்போ டென்சனாகுற? எதுக்கு டென்சனாகுற? எதுக்கு டென்சனாகுற?....

தண்ணி கொஞ்சம் ஜில்லுனு இருக்காப்பா...

இருங்கப்பா தண்ணி குடிச்சிட்டு வரேன் :-)

said...

//அதிமுக 2001ல் நடத்திய வன்முறை தேர்தலுக்கு சென்னை வாழ் மஹா ஜனங்கள் என்ன செய்தார்கள், நாலரை வருடத்தில் மறந்துவிட்டு ஆயிரம் ரூபாய் வெள்ளநிவாரனநிதி வாங்கிக்கொண்டு இரட்டை இலையில் குத்தினார்களே//

இது தவறு. இங்கு அதிமுகவிற்கு ஓட்டு விழுந்தது வெள்ள நிவாரணம் தான் ஆனால் நீங்க நினைக்கிற வெள்ள நிவாரணம் அல்ல குழலி. சுமார் 7 ஆண்டுகள் ஒரு குடம் தண்ணீர்க்கு தட்டுப்பாட்டு, குடம் எடுத்துக்கிட்டு ரோடு ரோடா அலஞ்ச எங்களுக்கு தட்டுப்பாடில்லமா குடிநீர் கொண்டுவந்து (புதிய வீராணம் திட்டம்) குடிநீர் பிரச்சனையை தீர்தமைக்காக தான் தல...

said...

//சுமார் 7 ஆண்டுகள் ஒரு குடம் தண்ணீர்க்கு தட்டுப்பாட்டு, குடம் எடுத்துக்கிட்டு ரோடு ரோடா அலஞ்ச எங்களுக்கு தட்டுப்பாடில்லமா குடிநீர் கொண்டுவந்து (புதிய வீராணம் திட்டம்) குடிநீர் பிரச்சனையை தீர்தமைக்காக தான் தல...
//
நல்ல விசயம் தான், இதே போல இன்னொரு ஏழாண்டு பிரச்சினை இல்லாமல இருக்கும், அதை திமுக அரசு தீர்த்து வைத்தபின் 2006 தேர்தல் வன்முறையை 2001 தேர்தல் வன்முறையை மறந்தது போல மறந்து சூரியன்ல குத்திட்டு போகப்போறிங்க அவ்ளோதானே! இதுக்கெதுக்கு அப்பு இவ்ளோ பில்டப்பு...

said...

Kuzhali said in his previous post: 2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி வெறியாட்டங்கள் செய்ததென்பதற்காக கருணாநிதி ஆட்சியும் அதையே செய்வதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது ...

Kuzhali said in this post:
... ஏனென்றால் சென்னை கலவரத்துக்கு முழுமுதல் காரணம் சென்னை வாழ் வாக்காள மஹா ஜனங்கள் தான், அதிமுக 2001ல் நடத்திய வன்முறை தேர்தலுக்கு சென்னை வாழ் மஹா ஜனங்கள் என்ன செய்தார்கள் ...

Kuzhali please stick to one side.

said...

//---இட்லிவடை, எஸ்.கே. வரிசையில் உங்களை சேர்க்காமல் மறந்துட்டேன்---//

ஏன் 'அவருக்கு' மட்டும் இரட்டை பதவி கொடுக்க நினைக்கிறீங்க குழலி சார்?

said...

//Kuzhali said in his previous post: 2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி வெறியாட்டங்கள் செய்ததென்பதற்காக கருணாநிதி ஆட்சியும் அதையே செய்வதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது ...

Kuzhali said in this post:
... ஏனென்றால் சென்னை கலவரத்துக்கு முழுமுதல் காரணம் சென்னை வாழ் வாக்காள மஹா ஜனங்கள் தான், அதிமுக 2001ல் நடத்திய வன்முறை தேர்தலுக்கு சென்னை வாழ் மஹா ஜனங்கள் என்ன செய்தார்கள் ...

Kuzhali please stick to one side.//

நான் திமுக செய்ததை எந்த இடத்திலும் நியாயப்படுத்தவில்லை (சே... இது ஒரு எழவா போச்சி, எங்க போனாலும் இந்த டிஸ்கி போட்டுக்கிட்டு, தேர்தல் வன்முறைக்கு திமுக மட்டுமல்லாமல் மற்ற காரணங்களை பேசினால் திமுகவின் பங்கை ஆதரிப்பது போல திரிக்கும் எழவிற்கு முடிவேயில்லையா), இந்த கலவரத்திற்கு முழு பங்கும் திமுகவிற்கு மட்டும் தானா? மக்களுக்கு எந்த பங்குமில்லையா? மக்கள் எந்த வகையில் அந்த அராஜகத்து எதிர்ப்பு காண்பித்தார்கள்? தண்ணி கொடுத்தாங்க நிவாரண நிதி கொடுத்தாங்கனு வாக்களித்தார்கள் அல்லவா? அது போல இதுக்கும் கருணாநிதி ஏதாவது தருவார் அதை வாங்கிக்கிட்டு ஓட்டு போடுவாங்க, அப்போ இந்த தேர்தல் வன்முறையை மறந்துடுவாங்க...

said...

//சுமார் 7 ஆண்டுகள் ஒரு குடம் தண்ணீர்க்கு தட்டுப்பாட்டு, குடம் எடுத்துக்கிட்டு ரோடு ரோடா அலஞ்ச எங்களுக்கு தட்டுப்பாடில்லமா குடிநீர் கொண்டுவந்து (புதிய வீராணம் திட்டம்) குடிநீர் பிரச்சனையை தீர்தமைக்காக தான் தல...//

ஜிங் சாக்... ஜிங் சாக்... ஜிங் சாக்...

சத்தம் ரொம்ப ஓவரா கேக்குதே?

said...

//அது போல இதுக்கும் கருணாநிதி ஏதாவது தருவார் அதை வாங்கிக்கிட்டு ஓட்டு போடுவாங்க, அப்போ இந்த தேர்தல் வன்முறையை மறந்துடுவாங்க...//

சரி தல அடுத்த தடவ ஓ போட்டுவிடுவோம். அப்போ ஓ.கே வா!?? ஆனா ஓ போடற வாய்ப்பாவது கிடைக்குமா??!!! ஜனநாயகம் கேலிகூத்தா மாறிக்கிட்டு வருதில்ல... நம்ம ஓ போடறதுக்குள்ள நம்ம கழக கண்மணிகள் என் ஓட்டை போடாமா இருக்கனமே!!

said...

குழலி அனானியா வந்த கமெண்ட் என்னுடையது:

//அது போல இதுக்கும் கருணாநிதி ஏதாவது தருவார் அதை வாங்கிக்கிட்டு ஓட்டு போடுவாங்க, அப்போ இந்த தேர்தல் வன்முறையை மறந்துடுவாங்க...//

சரி தல அடுத்த தடவ ஓ போட்டுவிடுவோம். அப்போ ஓ.கே வா!?? ஆனா ஓ போடற வாய்ப்பாவது கிடைக்குமா??!!! ஜனநாயகம் கேலிகூத்தா மாறிக்கிட்டு வருதில்ல... நம்ம ஓ போடறதுக்குள்ள நம்ம கழக கண்மணிகள் என் ஓட்டை போடாமா இருக்கனமே!!

said...

//நம்ம ஓ போடறதுக்குள்ள நம்ம கழக கண்மணிகள் என் ஓட்டை போடாமா இருக்கனமே!!
//
2006 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட முடிந்ததல்லவா? அதே போல 2011ல் போடுங்க....

said...

மக்களுக்கு எந்த பங்குமில்லையா? மக்கள் எந்த வகையில் அந்த அராஜகத்து எதிர்ப்பு காண்பித்தார்கள்?

Mr.Kuzhali, the media highlighted how the police behaved
and how the public was prevented
from voting.The public would have
faced the wrath of the police
and political parties had they
protested.False cases would have
been foisted on them.When the
powers that be openly indulge
in such activities you want the
public to protest and suffer.
It is a cruel joke. The MP from PMK captured a booth in Chennai
according to Junior Vikatan.
You maintain a silence on this
issue.You are unwilling to condemn
his behavior.If your argument is
that the party floated by Vijayakanth is as good or as bad
as another party, then the same
is equally true of PMK.See the
editorial of the Hindu dated
18th Oct 2006.PMK is part and
parcel of the coalition headed
by DMK.Both CPI and CPI(M) have
atleast strongly protested against
the violence unleashed by DMK.What
was the response of PMK.The left
parties were in the receiving
end whereas PMK was not.Had PMK
been with AIADMK the same thing
would have happened.

Please stop pretending to be neutral or objective.We all
know your biases.

said...

//2006 சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போட முடிந்ததல்லவா? அதே போல 2011ல் போடுங்க....//

தமிழ்நாட்டை கருணாநிதி சொர்க்கபுரியாக மாற்றினாலும் சரி அவர் 2011லும் ரெட்டை எலைக்கு தான் போடுவார்

said...

இல்லை தல 2006ல நம்ம ஓட்டை கள்ள ஓட்டுன்னு டிக்லேர் செஞ்சு லிஸ்ட்லிருந்து தூக்கீட்டாங்க :(

//ஜிங் சாக்... ஜிங் சாக்... ஜிங் சாக்...

சத்தம் ரொம்ப ஓவரா கேக்குதே? //

மேட்டரை சொன்னா உங்களுக்கெள்ளாம் அப்படி தான் கேட்க்கும் அனானி. திமுகவுக்கு ஓட்டு போட்டாங்கன்னு சொன்னா அது நேர்மையான ஓட்டு. பகுத்தறிவு ஓட்டு. எதிர்த்து சுயேட்சைக்கு போட்டாலும் நம்மை ஜிங் சாக்... ஜிங் சாக்... ஆக்கிவிடுவீர்கள்!! படிப்பறிவு இல்லதவன் என்று சொல்லுவீங்க... எல்லாம் நேரம்.

said...

//Please stop pretending to be neutral or objective.We all
know your biases.//

thanks...

said...

ரவி தவறு யார் செய்தாலும் தவறுதான், அது பாமக என்றில்லை, மூர்த்தி செய்ததும் தவறுதான், மேலும் 1999 பற்றி சென்ற பதிவின் பின்னூட்டத்தில் எழுதியிருக்கிறேன், இதில் எனக்கு பாமக மட்டும் என்ன புனிதம், இப்போதும் சொல்கிறேன் பாமகவை கண்மூடித்தனமாக ஆதரிக்க எனக்கு எந்த வித கட்டாயமுமில்லை, தனிப்பட்ட முறையில் பாமக வென்றாலும் தோற்றாலும் எனக்கு ஒன்றுமில்லை, இப்போ யாராவது வெகுசன ஊடகத்தில் அள்ளித்தெளித்துக்கொண்டிருக்கும் பொய்களை செய்து கொண்டிருக்கும் அய்யோக்கியத்தனத்தை யாரும் வெளியே சொல்லவேக்கூடாதா? எனக்கு தெரிந்த உண்மைகளை நான் சொல்கிறேன், அவ்வளவே அதற்கு எதற்கு பாமக சாயத்தில் முழுசும் என்னை முழுகடிக்கின்றீர். எப்போதுமே நான் பாமக தான் உலகை உய்விக்க வந்த கட்சியென்றும், மிக தூய்மையான கட்சியென்றும் சொல்லவில்லை, பாமகவின் வரைவு திட்ட அறிக்கையை நான் பதிவில் போட்டால்(முதலில் எத்தனை பேருக்கு அப்படியெல்லாம் பாமக செய்கிறது எனத்தெரியும்? அதனால் தான் அதை வெளியிட்டேன்) அதற்காக பாமக மற்றும் அதன் உறுப்பினர்களின் அத்தனை செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க வேண்டுமா? என்ன அநியாயம்யா இது? எழவு எங்கப்போனாலும் டிஸ்கி போடனுமா?

இரவி உங்களுக்கு வேண்டியது என் மீது முழு பாமக முத்திரை குத்தவேண்டும் அதனால் என் விமர்சனங்களை முனை மழுக்க வேண்டும் இது தான் உங்கள் எண்ணமென்றால் செய்து கொள்ளுங்கள் எனக்கு பிரச்சினையில்லை, வாசகர்களுக்கும் என் சார்பு நிலை தெரியும், அந்த சார்பு நிலை எல்லாவற்றையும் ஆதரிக்கும் கண்மூடித்தனமானதா? அல்லது பொதுவெளிக்கு சொல்லாத விடயங்களை சொல்வதற்கானதா என்பதை வாசகர்கள் முடிவு செய்து கொள்ளட்டும்....

வேணும்னா ஒன்னு செய்றங்க கேப்டன் வாழ்கனு அடுத்து ஒரு பதிவு போட்டு என் நடுநிலையை காப்பாற்றிக்கொள்கிறேன்.
பதிவு என்னாலேயே கடத்தப்பட்டுவிட்டது...

நன்றி

said...

Kuzhali,
For Ravi, dondu, boston bala,badnewsindia whatever you write it is biased. To prove that they will quote from reference from The HINDU, THUKLAQ, VIKATAN, KUMUDAM ETC.These are really unbiased medias..ha..ha..ha.They will criticize Sun Tv for showing Kalaigner celeberation with the dances cine people, does it really neccessary at this stage? But they won't say a word about these medias which carries actress and actors glamour pictures and gossip columns for more than 50 years. How many articles were written in the past regarding reservation and imbalances in the society? Well they won't write these issues bcos they cannot ride on the backward class horses for more than a century.Looking the way our judiciary, media and government goes, I would rather prefer a Monarchy rule rather than this pseudo-republic imposed by the English for the last 2 centuries. Look at the responses you get, you should continue writing atleast for these horse rdiers.

said...

Hi...
Kuzhali has stated that previously there were incidents of strike like the vanniyar sangam strike, as a result of which there were police shoot outs..people died in the shoot out...

My question is, when the vanniyar did strike Y not they sit and strike in front of the collector office or secratariat office...? Y did they resort to violence..such as cutting trees and blocking roads, causing inconvenience to public.That was the order from our great "Ramdoss".

For all these things only panruttiar has to be blamed.Then MGR was in US and panrutiar was the one in charge of the police portfolio.He should have issued the orders on day one itself.If he had done like that, the strike would have got no effect and Ramdoss will be nowhere in politics now.After 7 days it was MGR who issued the orders.

Kuzhali i hope u dont know much about Ramdoss and his men.

As i was closely involved with PMK top rung leaders i cant stop laughing from what u have said in ur previous blogs.
Just now i came to know about it and read ur blogs...

----Padayatchi

said...

ராமதாஸோடு நெருங்கிப் பழகினவராம். ஆனால் அனானியாக வந்து தான் கமெண்டு போடுவாராம். நல்லா இருக்கு கதை.

நான் கொழந்தையா இருக்கப்பவே எனக்கு காது குத்திட்டாங்க. அந்த ராமதாஸோட நெருங்கிய அனானி நல்லா குத்துவாரு மாதிரி தெரியுது....

said...

//----Padayatchi //
/As i was closely involved with PMK top rung leaders //
இப்படியெல்லாம் சொல்லிக்கிறிங்க, பிறகு

//My question is, when the vanniyar did strike Y not they sit and strike in front of the collector office or secratariat office...? //
இப்படியெல்லாம் கேள்வி கேட்கிறிங்க? அண்ணாத்தே சாலைமறியல் ஆரம்பிப்பதற்கு ஆறு மாத காலம் முன்பிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம் முன்னெல்லாம் ஆர்பாட்டம், உண்ணாவிரதம், குடும்பத்தோடு உண்ணாவிரதம் என்றெல்லாம் நடந்தது தெரியாதா உங்களுக்கு? அப்படி உங்களுக்கு தெரியலைனா என்னுடைய இந்தபதிவில் சொல்லியிருக்கேன் அதிலிருந்து சில வரிகள்
//ஒரு வார மறியல் போராட்டம் ஏதோ திடீரென நடத்தப்படவில்லை, பல மாதங்களுக்குமுன் கோரிக்கை வைத்து அறிவிப்பு கொடுத்து, பல இடங்களில் பல முறை குடும்பத்தோடு ஆர்பாட்டம், உண்ணாவிரதம் என எல்லா போராட்டங்களும் அமைதியான முறையில் செய்து பின்தான் நடை பெற்றது இந்த சாலை மறியல் போராட்டம். //

வேசம் போடும்போது சரியா போடனும் இல்லைனா இப்படித்தான் அங்கங்கே பிச்சிக்கிட்டு தொங்கும்....

said...

லக்கி அது ஒன்னுமில்லை,அந்த அனானிக்கு நாய் வேசம் போடனும்னா முதல்ல குலைக்க கத்துக்கனும்னு தெரியலை போல :-) , இப்படி நாய் வேசம் போட்டுக்கிட்டு வந்து மியாவ் மியாவ் அப்படின்னா அது வேசம் போட்டுக்கிட்டு வந்திருக்குனு கண்டுபுடிச்சிடுவாங்கனு பாவம் தெரியலை...

said...

//இப்படி நாய் வேசம் போட்டுக்கிட்டு வந்து மியாவ் மியாவ் அப்படின்னா அது வேசம் போட்டுக்கிட்டு வந்திருக்குனு கண்டுபுடிச்சிடுவாங்கனு பாவம் தெரியலை...//

அபச்சாரம், அபச்சாரம்

said...

//As i was closely involved with PMK top rung leaders i cant stop laughing from what u have said in ur previous blogs.
Just now i came to know about it and read ur blogs...

----Padayatchi ??//

"Arya koothu avuthu pottu aadudhu anonymous moolama"-did u noticed it kuzhali. This is what I called horse riders. I remember there was this "anonymous" who has Periyar photo and started criticising about Dravidians and DK. Now here is this joker(Arya Koothadi) using Padayatchi and Panrutiar name calls to throw mud sling on PMK and Ramadoss. This is really cat calls. That is the victory for your writing. Yeh dhil mange more and more. Vendum ennum Vendum.
Balaji

said...

இன்னொரு கேள்வி குழலி:
---அதற்காக பாமக மற்றும் அதன் உறுப்பினர்களின் அத்தனை செயல்களுக்கும் நான் பொறுப்பேற்க வேண்டுமா? ---

இப்படி வினா எழுப்பும் தாங்களே ---தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவரப்போவதாக முழங்கும் விஜயகாந்த் அவர்களின் வேட்பாளர் தான் இப்படி.--- என்றும் சொல்வது வேட்பாளரின் உணர்ச்சிவசப்படலை விஜய்காந்த்தின் மேல் போட்டுவிடுவது முரணா? (அல்லது) பொது வாழ்வில் இருக்கும் கட்சித் தலைவர், தங்கள் தொண்டர்களின் செய்கைகளுக்கு தார்மீகப் பொறுப்பேற்க வேண்டும் என்னும் சுட்டுதலா?


---பதிவு என்னாலேயே கடத்தப்பட்டுவிட்டது---

இந்தப் பின்னூட்டம் பதிவோடு சம்பந்தமுடையது என்றே நினைக்கிறேன்.

said...

என்னங்க பாலா பாமக உறுப்பினர் ஆக கூட இல்லாதவன் நான்
நீங்கள் செய்த இந்த ஒப்புமை சரியா என்று யோசித்து பாருங்க...

சரி பாலா இந்த கேள்வி அப்படியே இருக்குமல்லவா? எப்போதாவது பின்னொரு காலத்தில் உதவும் அதுக்குதான் சொன்னேன் :-)

said...

---எப்போதாவது பின்னொரு காலத்தில் உதவும் அதுக்குதான் சொன்னேன் ---

மாட்டிக் கொண்டேனா... கேள்வி கேட்பதுதான் எளிதாயிற்றே!