விஜயகாந்த்தும் 28 இலட்சமும்

தேர்தல் முடிந்தவுடன் எழுத நினைத்த பதிவு நாளாகிவிட்டது, தமிழகத்தில் எத்தனை சட்டமன்ற, பாராளுமன்ற தொகுதிகள் இருக்கிறது என்று மக்களுக்கு தெரியுமோ இல்லையோ பத்திரிக்கைகள் புண்ணியத்தில் விஜயகாந்த் கட்சி எவ்வளவு வாக்குகள் வாங்கியது என்றால் சட்டென்று சொல்வார்கள் 28 இலட்சமென்று, அவர் கட்சி வாங்கிய வாக்குகள் 8.32%, அதாவது நூற்றுக்கு எட்டு வாக்காளர்கள் அவருக்கு வாக்களித்துள்ளார்கள், பொதுவாக சதவீதத்தில் பேசும் நம் பத்திரிக்கைகளுக்கு என்ன ஆனது வாக்கு எண்ணிக்கை கணக்கில் பேசுகின்றனர், ஏன் வேறு யாருமே இதற்கு முன் முதல் தேர்தலில் 8% வாக்குகள் பெறவில்லையா? என்றெல்லாம் கேட்டால் பத்திரிக்கைகள் விஜயகாந்த்தை வைத்து செய்யும் அரசியல் தெரியும்.

சில புள்ளிவிபரங்களோடு இந்த கட்டுரை உள்ளது, முழுதும் படிக்க முடியாதவர்கள் பதிவின் கடைசியில் சில கேள்விகள் உள்ளன, அதை மட்டுமாவது படிக்க வேண்டுகிறேன்.

இந்த தேர்தலின் போது இருந்த சூழல் முதலில் கணக்கிலெடுத்தால் பொதுமக்கள் மத்தியில் அதிமுக அரசின் மீது 1996ல் இருந்தது போன்ற மிகப்பெரும் எதிர்ப்பெதுவும் இல்லை, அதே சமயம் 1991 போல திமுக மீதான எதிர்ப்பு (ராஜீவ் காந்தி கொலை அனுதாப அலை) எதுவும் இல்லை, பொதுவாக தமிழக தேர்தல்கள் யார் தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென்பதை விட யார் தேர்ந்தெடுக்கப்பட கூடாது என்பதுவே வெற்றி தோல்வியை முடிவு செய்யும், 1996 தேர்தலில் ஜெயலலிதா தேர்ந்தெடுக்கப்படக் கூடாது அதனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் வாக்குகள் சிதறக்கூடாது என்றே திமுகவிற்கு முன்னெப்போதும் வாக்களிக்காதவர்கள் கூட திமுகவிற்கு வாக்களித்தனர், இது பாமக, மதிமுக போன்ற கட்சிகளையும் பாதித்தது, ஆனால் தேர்தல் அலையின் போது தோல்வியின் பக்கத்தில் இருக்கும் கட்சிகளுக்கு கிடைக்கும் வாக்குகளே அவர்களின் உண்மையான வாக்கு வங்கி பலம், இந்த தேர்தலில் அது மாதிரியான அலை ஏதும் இல்லாததால் மக்களிடம் யார் வரக்கூடாது என்ற எந்த கட்டாயமும் இல்லாததால் அவர்களின் விருப்பம் போல வாக்குகள் விழுந்தன, அப்படி திமுக, அதிமுக இருவரும் வேண்டாமென விஜயகாந்த் பக்கம் சென்றவர்கள் அதிகம், அதிமுக மீது 1996ல் இருந்த வெறுப்போ, திமுக மீது 1991ல் இருந்த வெறுப்போ இந்த தேர்தலில் இருந்திருந்தால் விஜயகாந்த்க்கு விழுந்த வாக்குகள் குறைந்திருக்கும்.

2006 சட்டமன்ற தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் 70.82% வாக்குபதிவு இருந்தது, 2001 சட்டமன்ற தேர்தலில் வாக்குபதிவு 59.07%, முந்தைய தேர்தலைவிட 11.75% கூடுதல் வாக்கு பதிவு. மூன்று கோடியே முப்பது இலட்சத்து அய்யாயிரத்து நானூற்று தொன்னூற்றிரண்டு (3,30,05,492) பதிவான வாக்குகளில் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள்.

முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை.


பாமகவிற்கு கிட்டத்தட்ட இதே போன்றதொரு சூழல் நிலவியது 1989 பாராளுமன்ற தேர்தலில்(1991,96 தேர்தல்களில் அலை வீசியது, 2001,2006 தேர்தல்களில் கூட்டணி இருந்ததால் அவைகளை இந்த ஆய்வில் கணக்கில் எடுக்க வில்லை) , மதிமுகவிற்கு 2001 தேர்தலில் இந்த சூழ்நிலை நிலவியது.

1989 பாராளுமன்ற தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 2,67,63,788
செல்லத்தக்க வாக்குகள் 2,63,99,730
செல்லாத வாக்குகள் 3,64,058

இதில் பாமக பெற்ற வாக்குகள் 7.06% (15,61,371) 33 இடங்களில் போட்டியிட்டது (32 தமிழகம், 1 பாண்டிச்சேரி)

போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.06%
1991 ராஜீவ்காந்தி கொலை அனுதாப அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வாக்கு 7.00% (1 இடம் வெற்றி, 29 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)
1996 ஜெயலலிதா எதிர்ப்பு அலையிலும் போட்டியிட்ட இடங்களில் மொத்த வா 7.61% வாக்குகளும் பெற்றது. (4 இடங்களில் வெற்றி, 17 இடங்களில் பிணைத்தொகை திரும்ப கிடைத்தது)

மாநிலம் முழுவதற்கும் மொத்தமாக போட்டியிடாத இடங்களுக்கும் சேர்த்து (தமிழகம் 5.82% + பாண்டிச்சேரி 6.63%)

2006 தேர்தல் புள்ளி விபரம்

பதிவான வாக்குகள் 3,30,05,492
செல்லத்தக்க வாக்குகள் 3,29,91,555
செல்லாத வாக்குகள் 5,828

போட்டியிட்ட இடங்களில் விஜயகாந்த் கட்சி பெற்ற மொத்த வாக்குகள் 8.45%
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 1.39% கூடுதலாக பெற்றுள்ளது.
1989ல் பாமக பெற்றதை விட வெறும் 0.84% கூடுதலாக பெற்றுள்ளது.
1இடத்தில் அதுவும் விஜயகாந்த் மட்டும் வெற்றி, 9 இடங்களில் மட்டுமே விஜயகாந்த் கட்சி பிணைத்தொகை திரும்ப பெற்றுள்ளது
223 இடங்களில் விஜயகாந்த் கட்சி பிணைத்தொகையை இழந்துள்ளது.

வடமாவட்டங்களில் மட்டுமே செல்வாக்குள்ள ஒரு கட்சி (33 பாராளுமன்ற தொகுதிகள் என்றால் மாநிலத்தில் 85% இடங்களில் போட்டியிட்டுள்ளது) பெற்ற வாக்குகளைவிட மாநிலம் முழுவதும் செல்வாக்குள்ளதாக நம்பவைக்கப்படும் ஒரு கட்சி பெற்ற அதிக வாக்குகள் வெறும் 1.39%, பத்திரிக்கைகள் போடும் கணக்கில் பார்த்தால் கூட இன்றைக்கு கூடுதலாக வாக்கு பதிவையும் சேர்த்தால் கிட்டத்தட்ட இருபது இலட்சம் வாக்குகள் வந்து சேரும், ஆனாலும் இன்று பத்திரிக்கைகள் விஜயகாந்த் பெற்ற வாக்கு சதவீதத்தை சொல்லாமல் 28 இலட்சம் 28 இலட்சம் என ஏதோ ஒரு இமாலய சாதனை போல் பிம்பம் ஏற்படுத்த முயல்வது தெளிவாகத் தெரிகின்றது. மேலும் 232 தொகுதிகளில் போட்டியிட்ட விஜயகாந்த் கட்சி 223 தொகுதிகளில் பிணைத்தொகையை பறி கொடுத்துள்ளது, வெறும் 9 தொகுதிகளில் மட்டுமே பிணைத்தொகை மீள கிடைத்துள்ளது. ஆனால் பாமக 1991,96 தேர்தல்களில் முறையே 29, 17 இடங்களில் பிணைத்தொகையை மீளப்பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட இதே நிலைதான் மதிமுக வுடன் விஜயகாந்த் கட்சியை ஒப்பிட்டு நோக்கும் போதும், தமிழகத்தில் நான்காம், ஐந்தாம் இடத்திலிருக்கும் பாமக, மதிமுக கட்சிகளைவிட பெரிய அளவில் தேர்தலில் எந்த சாதனையும் செய்யாத விஜயகாந்திற்கு கொடுக்கப்படும் அதீத விளம்பர பிம்பமும் விஜயகாந்த்தை பத்திரிக்கைகள் தூக்கிவிட முயற்சிப்பதன் உள்நோக்கத்தையும் சந்தேகிக்க வேண்டியுள்ளது.

இப்போது என் முன் இருக்கும் கேள்விகள்

1) வெறும் 8.45% பலமுள்ள விஜயகாந்த்தை எப்படி அவரைப்போல மூன்று பங்கு பலமுள்ள ஜெயலலிதா, கருணாநிதியோடு போட்டியாளராக காண்பிக்கின்றார்கள்?


2) காங்கிரசின் வாக்கு பலம் எந்த நிலையிலும் 10% குறைந்ததில்லை என்னும் போது எந்த கணக்கை வைத்து விஜயகாந்த்தை மூன்றாவது பெரிய கட்சி என்கிறார்கள்?


3) திரைப்பட பிரபல செல்வாக்கினால் ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த என்.டி.ராமராவ் சில மாதங்களிலேயே ஆட்சியை பிடித்தார், இங்கே தமிழகத்தில் எம்.ஜி.ஆரும் ஆட்சியை பிடித்தார், இப்படி எதுவுமே இல்லாமல் வெறும் 8% வாக்குகள் பெற்றவரை பத்திரிக்கைகள் சாதனையாளராக காண்பிப்பதின் உள் நோக்கமென்ன?


4) கூட்டணி இல்லாமல் பிறகட்சிகளை போட்டியிட அறைகூவல் விடும் விஜயகாந்த்துக்கு எல்லோரும் தனித்தனியாக போட்டியிட்டால் வட மாவட்டங்களில் 1,2,3 இடங்களை திமுக, அதிமுக, பாமகவும் தென்மாவட்டங்களில் அதிமுக, திமுக, காங்கிரசும், மேற்கு மாவட்டங்களில் திமுக,அதிமுக, மதிமுக வும் பங்கிட்டுக்கொள்ளும் என தெரியாதா? டெல்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட்களும், சில தொகுதிகளில் விடுதலை சிறுத்தைகள், புதியதமிழகமும் பங்கிட்டுக்கொண்டால் ஒற்றை இலக்க தொகுதிகளில் கூட மூன்றாம் இடம் கூட கிடைக்காது என்பது விஜயகாந்த்துக்கும் பத்திரிக்கைகளுக்கும் தெரியாதா?


5)முந்தைய தேர்தலைவிட கிட்டத்தட்ட அரை கோடி(49,57,415) வாக்காளார்கள் அதிகம் வாக்களித்திருந்த போதிலும் விஜயகாந்த் பெற்றது வெறும் 28 இலட்சம் வாக்குகள், அவரால் புதிதாக வாக்களித்தவர்களின் வாக்கை முழுமையாக பெற்றிருந்தாலும் கூட 50 இலட்சம் வாக்குகள் பெற்றிருப்பார், ஆனால் அதைக்கூட ஒரு முதல்வர் வேட்பாளரால் சாதிக்க முடியவில்லை என்னும் போது பத்திரிக்கைகள் எப்படி அவரை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்துகின்றன?


6) சில நாட்களுக்கு முன் நடைபெற்ற புதுச்சேரி உள்ளாட்சி தேர்தலில் காரைக்கால் நகராட்சி தலைவராக தேமுதிக கட்சியின் பிரபாவதி வெற்றி பெற்றார், இதை பத்திரிக்கைகள் மிகப்பெரிதாக பேசின இது தொடர்பாக முதல்வர் கருணாநிதியிடம் பத்திரிக்கைகள் கேள்வி கேட்ட போது முதல்வர் கூறினார் பிரபாவதி காங்கிரசில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காமல் தான் தேமுதிகவில் போட்டியிட்டார் என்றார், இதற்கு தேமுதிகவின் வெற்றியை சிறுமை படுத்திவிட்டார் என்று கடும் கண்டனம் தெரிவித்தார், அதே பிராபாவதி விகடனுக்கு அளித்த பேட்டி கீழே, அதில் தான் செய்த சமுதாயப்பணிதான் இந்த பதவியில் அமர்த்தியிருக்கின்றது என கூறியுள்ளார், இப்போது விஜயகாந்த் என்ன செய்யப்போகிறார் விஜயகாந்த், பிரபாவதியை கட்சியை விட்டு நீக்குவாரா?




7)சென்ற ஆண்டு புதிதாக கட்சி ஆரம்பித்தவுடன் அந்த கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்ய முயன்றபோது ஏகப்பட்ட குழப்பம், சரியாக விதிகளை கடைபிடிக்கவில்லை என்று, இப்போது 8.32% வாக்குகள் பெற்று மாநில கட்சி அங்கீகாரம் கிடைத்து "முரசு" சின்னத்தை தக்க வைக்க வாய்ப்பிருந்தும் சரியாக தேர்தல் ஆணையத்திடம் கொண்டு சென்று தேவையான நடைமுறைகளை கடைபிடிக்காமல் அலட்சியமாக, தன் கட்சியின் வெற்றியை, அங்கீகாரத்தை கூட பதிவு செய்யாமல் இருந்துவிட்டு இப்போது திமுகவின் சதியால் முரசு சின்னம் கிடைக்கவில்லை என்று பொய் பிரச்சாரம் வேறு, தன் சொந்த கட்சியின் எதிர்காலத்தின் முக்கியமான விடயத்திலேயே அலட்சியமாக இருந்தவர் முதல்வரானால் என்ன நிர்வாகத்திறமையோடு இருப்பார்?


8) பத்திரிக்கைகள் இழந்து போன தங்கள் சமூகத்தின் 'ராஜரிஷி' பட்டத்தை ரஜினியிடம் முயற்சித்து பின் வீணாகி இப்போது விஜயகாந்த்தை கொண்டு மீட்கலாம் என நினைப்பது தான் இத்தனை தூரம் தூக்கிபிடிக்க காரணமோ?



இந்த உள்ளாட்சி தேர்தலில் ஒரு கோடியே தொன்னூறு இலட்சம் நகர்புறவாக்களர்களும், இரண்டு கோடியே அறுபத்தியெட்டு இலட்சம் கிராமப்புற வாக்காளர்களும் உள்ளனர், நகர் புற வாக்காளர்களுக்கு ஆளுக்கு ஒரு ஓட்டும் , கிராமப்புறத்தில் ஆளுக்கு நான்கு ஓட்டு (பஞ்சாயத்து உறுப்பினர், பஞ்சாயத்து தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர்) களும் ஆக மொத்தம் (2.68X4 = 10.72 கோடி) மொத்தத்தில் கிட்டத்தட்ட 12.68 கோடி வாக்குகள், இதில் விஜயகாந்த் ஒரு இலட்சம் வேட்பாளர்கள் நிறுத்தியுள்ளார், ஆளுக்கு 50வாக்குகள் என மொத்தம் 50 இலட்சம் வாக்குகள் பெற்றால் கூட "இரட்டிப்பானது விஜயகாந்த் பலம்" என பத்திரிக்கைகள் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை வசதியாக மொத்தம் 12.68 கோடி வாக்குகள் என்பதை மறைத்துவிட்டு.

References:

http://www.eci.gov.in/StatisticalReports/LS_1989/Vol_I_LS_89.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1991/StatisticalReport_Tamil_Nadu91.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_1996/StatisticalReport_TN96.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2001/Stat_Rep_TN_2001.pdf
http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2006/StatReport_TN_2006.pdf
http://www.vikatan.com/jv/2006/oct/04102006/jv0304.asp
சன் தொலைக்காட்சி (அக்டோபர் 04, 2008 இரவு 8.00 மணி செய்திகள்)

26 பின்னூட்டங்கள்:

said...

Poor Kuzhali, he is losing sleep over vijayakanth and media.Relax man, have fun in life and enjoy family life.If Vijayakanth wins
and gains strength accept that as
peoples' verdict.If not that is also peoples' verdict.

said...

யப்பா !!! கலக்குறீங்க !!!

said...

Kuzhali,
Nice article with deep analysis of statistics.All the bloggers know about the indian media and tamilnadu as well which is being controlled by those "Uyarnda manam padaithavargal". Please do not waste time in writing article for these "media" cheap publicity. I was wondering why people like you,sundaramurthy, dharumi and veravanniyan start a media with same commercial cheap sense of luring public with hero and heroine gossips and mix it up with your tamil, dravidian and reservation issues in society and create whole new media without any influence of venugolachari and other acharyas.
Balaji

said...

அரசியலில் நிறைய நடிகர்கள் செல்வாக்கு காட்ட முயன்று தோற்று போய்விட்ட நிலையில் விஜயகாந்த் வெற்றி பெற்றுள்ளார்.

1. 7 கட்சி கூட்டணிக்கு எதிராக, அ.தி.மு.க விற்கு எதிராக , இவ்வளவு வாக்குகள் அறிமுகம் இல்லாத வேட்பாளர்களை வைத்து பெற்றது ஒர் சாதனையே.

2. விஜயகாந்த் பெற்ற வெற்றி, எம்.ஜி.ஆர், என்.டி.ஆர் அளவு பெரிய வெற்றி அல்ல.

3. காங்கிரசு, பா.ம.க வாக்குகள் குறைய போவதில்லை. அதிகரிக்க போவதும் இல்லை. ஆனால் விஜயகாந்திற்கு அந்த வாய்ப்பு உள்ளது.

4. தனியாக கட்சி நடத்துவது என்பதில் விஜயகாந்த் உறுதியாக தான் இருக்கிறார். இது அவருக்கு ஒர் பலமே.

மொத்தமாக ஒர் நெகட்டிவ் வியூ எடுத்து விட்டீர்களோ என்று தோன்றுகிறது.

said...

குழலி,
விஜயகாந்த் மேல அப்படி என்ன காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு. 'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல கொள்கைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்... பா.ம.க வை விட நல்ல கொள்கைகளும் நல்ல வழிமுறைகளும் (நான் என்ன சொல்ல வருகிறேனென்று உங்களுக்குத் தெரியாததா..) வைத்திருக்கிறார்...
சினிமாவில் வேண்டுமானால்.. அவர் நடிப்பு எனக்கு அவ்வளவு பிடிக்காததாயிருக்கலாம்.. அரசியலில் அவருக்கு ஒரு நல்ல எதிர்காலம் நிச்சயமாக உண்டு..

அவர் கட்சியை பா.ம.க வுடம் நீங்கள் ஒப்பிட்டுக் காட்டும் போதே.. உங்கள் பா.ம.கவின் பலவீனம் தெரிந்திருக்குமே..

தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...

இனியும் சமாளிக்க வேண்டாம்...
அன்புடன்,
சீமாச்சு..

said...

குழலி

நல்லா அலசியுள்ளீர்கள்..

இருப்பினும் விஜயகாந்த் தன்னை ஒரு அரசியல் தலைவர் என நீருப்பிக்கும் அள்வுக்கு வள்ர்ந்துவிட்டார் என்றே தோண்றுகிறது. ஏ சி நீல்சன் நடத்திய சர்வே முடிவுகள் கூட இதை காண்பிக்கிறது. ஆனால் அவர் நல்ல நிர்வாகியா என்பதைப் பற்றி நிறையவே அலச வேண்டியுள்ளது.

எதிர் வரும் காலங்களில் அவர் அரசியலில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடிப்பார் என்றே தோன்றுகிறது. ஆட்சியைப் பிடிக்கும் அளவுக்கு வள்ர்வாரா என்பது தெரியவில்லை.. பொருத்திருந்தே பார்க்கவேண்டும்..

நீங்கள் சொல்வதுபோல் பத்திரிகைகளும் தனது பங்கிற்கு தனது வேலையை செய்து கொண்டுதான் இருக்கிற்து.

said...

//தேர்தல் சமயத்தில் நான் இந்தியாவில் இருந்திருந்தால் என் ஒட்டு விஜயகாந்திற்குக் கிடைத்திருக்கும். இது போன்று பல லட்சம் NRI ஓட்டுக்களும் சேர்ந்தால் 8 லட்சமென்ன 80 கோடி ஓட்டு கூட அவர் பெற வாய்ப்புள்ளது...
//
அண்ணன் சீமாச்சு அவர்களுக்கு என்னை போன்ற NRT களும் வெளியே உள்ளனர் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கலாம்.

said...

//I was wondering why people like you,sundaramurthy, dharumi and veravanniyan start a media with same commercial cheap sense of luring public with hero and heroine gossips and mix it up with your tamil, dravidian and reservation issues in society and create whole new media without any influence of venugolachari and other acharyas.
//
பாலாஜி என்னைப் பொறுத்தவரை இதை செய்யும் அளவிற்கு என்னிடம் பண வசதியில்லை, இந்த மாதம் சம்பளம் வாங்கினாத்தான் எனக்கு அடுத்த மாதம் சோறு அன்றாடம் காய்ச்சினு சொல்றதுக்கு பதில் அந்தந்த மாதம் காய்ச்சி நான்....

said...

//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் //
விஜயகாந்தை வெச்சி காமெடி கீமெடி எதுவும் செய்யலையே, அண்ணாத்தே மதுரை மத்திய தொகுதிக்கு எதை வைத்து 5 நாளைக்கு முன் கட்சியில் சேர்ந்தவருக்கு வாய்ய்பு கொடுத்தாரு?எல்லாம் யாதவர்களுக்கே வெளிச்சம்...

said...

//'ஊழலை ஒழிக்கிறேனென்றும்.. //
எது விஜயகாந்த் ஊழலை ஒழிக்கிறாராமா? அது சரி, உங்களுக்கு ஒரு விசயம் தெரியுமா? விஜயகாந்த்தின் ஆண்டாள் அழகர் திருமண மண்டபத்தின் மதிப்பு எவ்வளவு தெரியாமா? ரூபாய்75 இலட்சம், நான் சொல்லலைங்க, அவரேதான் தேர்தல் சொத்து கணக்கு காண்பிக்கும் அஃபிடவிட்டில் சொல்லியிருக்கார், சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் ? கொஞ்சம் கேட்டு சொல்லுங்களேன் அந்த உத்தம மகராசாவிடம்...

said...

//சாதி அடிப்படையில் மோத மாட்டேனென்றும் நல்ல
கொள்கைகள் வைத்துக் கொண்டிருக்கிறார்.//

மதுரையில் ஏதோ யாதவ சாதிக்காரரை வேட்பாளராக
நிறுத்தியதாக கேள்விபட்டது உண்மையா?

said...

சரி நீங்க, நான் இன்னும் வலைப்பதிவு ஆட்கள் கொஞ்சம்பேர் சேர்ந்து ஒரு 80 இலட்சம் ரூபாய்க்கு அந்த மண்டபத்தை விலைக்கு தருவாரா கேட்கலாம் ?

OK, Kuzhali wants to buy that and donate it to PMK, any takers :)

said...

//OK, Kuzhali wants to buy that and donate it to PMK, any takers :)
//
யாரு அப்பு அது, நான் வாங்கி அதை எதுக்கு பாமக விடம் கொடுக்க வேண்டும், ஏன் நானெல்லாம் சம்பாதிக்க வேண்டாமா?

said...

விருத்தாசலத்தில் விஜயகாந்த் பெற்றது பெரிய வெற்றியே. அந்தத் தொகுதியின் பெயரைக் கூறக் கூட மனமில்லை உங்களுக்கு.

பா.ம.க. கோட்டையில் சொல்லி ஜெயித்தார். அவருக்கு எவ்வளவு தொல்லை கொடுத்தனர் பா.ம.க.வினர். வீர வன்னியனின் பதிவைப் பாருங்கள்
அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

TMMK put pressure on DMK to field a muslim candidate in Madurai Central constituency.AIADMK has
fielded a christian.Vijayakanth
has fielded a Yadava.Has PMK ever fielded a non vanniya in places like Villupuram and Salem.

said...

//Has PMK ever fielded a non vanniya in places like Villupuram and Salem.
//
சே... சே... உங்க இம்சை தாங்க முடியலைப்பா, கடலூர் தொகுதியின் முதல் பாமக வேட்பாளர் திரு.ஹிலால், இவர் ஒரு இசுலாமியர், ஏன் சென்ற தேர்தலில் கூட 6 சட்டமன்ற உறுப்பினர்கள் வன்னியர் அல்லாதவர்கள், அது சரி விஜயகாந்த் சாதியை எதிர்ப்பவர்னு தானே சொல்லிக்கிறீங்க, அப்பாலிக்கா அதை கேட்டா ஏன் இவிங்க நிறுத்தலியா, அவிங்க நிறுத்தலியானா அப்பாலிக்கா எல்லாரையும் போல அவரும்னா அவுரு எதுக்காம், இப்போ கூட ஒன்னுமில்ல ராசா எனக்கு, புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற இது தான் விஜயகாந்த்தின் மீதான என் விமர்சனம்

said...

"புனித வேசம் கட்டாம வா... புனிதர் வேசம் போட்டுக்கினு எது அய்யோக்கியத்தனம் செய்ற.."

"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

//"நானோ என் உறவினரோ ஏதேனும் பதவி பெற்றால் சாட்டையால் அடியுங்கள்" என்னும் அர்த்தத்தில் ஒருத்த சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தாரே...
//
அன்புமணி எந்த சூழலில் இறங்கினார் என்பது ஏற்கனவே பலமுறை விளக்கியிருக்கிறோம், சரி இவர் சொன்னதை செய்யலை, அதனால் விஜயகாந்த் புனித வேசம் போடுறதை சரி என்கிறீர்களா?

இங்கதான் எவரும் சரியில்லையே அதனால இவரும் இருந்துட்டு போகட்டும்கறிங்க அப்படித்தானே? அப்ப அதை சொல்ல வேண்டியது தானே? இதனால் ராமதாசை எதிர்க்கிறீர் என்றால் விஜயகாந்த்தும் அவரை போலவே இருக்கிறார் என்றால் பிறகு எதற்கு விஜயகாந்த்துக்கு புனிதர் பட்டம்.

said...

என்னைக்கு தான் நாமெல்லாம் பதிவின் பேசுபொருளோடு விவாதிக்கப்போறோமோ, எப்படியாவது கடத்திடறாங்கப்பா :-(

said...

விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

விஜயகாந்துக்கு கண்டிப்பாக நான் புனிதர் பட்டம் தரவில்லை குழலி அவர்களே. அவரும் இருந்துவிட்டுப் போகட்டும்.

ஆனால் போன வருடம் அவர் கட்சி ஆரம்பித்ததையே பெரிய பாவம் போல பல வலைப்பதிவாளர்கள் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தனர்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

டோண்டு அய்யா அவரை விடுங்க, ராமதாசு அப்படித்தான், சரி ஆண்டாள் அழகர் மண்டபம் 75இலட்சம் தானாம், உத்தமர் அஃபிட்விட்ல சொல்லியிருக்காரு வரிங்களா கூட்டா சேர்ந்து 80இலட்சத்துக்கு உத்தமர் கிட்ட கேட்போம்.

அது சரி திருமதி.விஜயகாந்த்துக்கும் கட்சிக்கும் என்ன தொடர்பு?

சதீஷ் அதாங்க, விஜயகாந்த் மச்சான் அவர் கூட போன தேர்தல்ல நின்னாராமே?

கடலூரில் மாவட்ட செயலாளராக இருந்த ஒரு தலித்தை நீக்கிட்டு வன்னியரான பல்லவா சிவக்குமாரை போட்டிருக்காங்களாமே,

இதேமாதிரி தான் விருத்தாசலத்திலயும் தலித்தை நீக்கிட்டு வன்னியரை போட்டிருக்காங்களாமே கட்சி பதவிக்கு.

said...

http://www.dinamalar.com/2006oct06/political_tn32.asp

said...

திருமதி விஜயகாந்த் திமுக, அதிமுக மீது தனித்து நிற்க தைரியமில்லாதவர்கள் என சாடல், http://www.dinamalar.com/2006oct06/political_tn38.asp


அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்...

said...

விஜய்காந்த் மாற்றம் தருவார் என்று நானும் நினைத்திருந்தேன். ஆனால் இப்போது நடப்பதே வேறு.

- பின்னால் இருந்து இயக்குபவரில் ஒருவர் பன்ருட்டி ராமச்சந்திரன். அவர் யார், எப்படிப்பட்டவர் என்று அனைவருக்கும் தெரியும்.
- very strong kitchen cabinet headed by Mrs. Premalatha & Satheesh.
- கட்சியில் பதவிக்காக முன்னால் எம்.பி.களும், எம்.எல்.ஏ.களும் சேருகின்றனர். ஒரே குட்டையில் ஊரிய மட்டைகளான இவர்களால் எப்படி லஞ்சமில்லா ஆட்சி தர முடியும்?
- இப்போது இவரும் அதே குட்டையில் ஊரும் மட்டைதான் என்று சொல்லிவிட்டார். (கட் அவுட் கலாசாரம், தொடரும் வண்டிகளின் ஊர்வலம், புகழ்ந்து தள்ளும் பேச்சாளர்கள், மாலைகள், கேப்டன்/திராவிடன் பட்டங்கள், கல்வீச்சு, கலவரம் ... இப்படி எத்தனையோ)

பார்ப்பன ஊடகங்கள் பா.ம.க.வையும், தி.மு.க.வையும் ஒழிக்கலாம் என்று இவருக்கு கொம்பு சீவுகின்றனர். எனவே இவர் ஜெயித்து ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாற்றமும் இருக்க போவதில்லை.

ஒரு வேண்டுகோள் - வழக்கம் போல திசை திருப்பும் வேலைகள் நடக்கின்றன. எனவே சம்பந்தமில்லா பின்னூட்டங்களை நீக்கிவிடவும். அப்படி வரும் பின்னூட்டங்களை அனுமதிக்க வேண்டாம்.

said...

//அது சரி கட்சிக்கும் திருமதிக்கும் என்ன தொடர்புனு கேட்க கூடாது.... அக்காங்... //

குழலி.. இதெல்லாம் ஒரு கேள்வியா.. இன்னும் கொஞ்சம் விவரமான கேள்விகளா கேட்கப்படாதா? அவங்க கட்சியின் முதன்மை உறுப்பினர் அல்லது அடிப்படை உறுப்பினர்-னு வெச்சுக்க்குங்களேன்.. ஒவ்வொரு தேர்தலிலும் திமுக அதிமுக பாமக கட்சிகளுக்கு பிரச்சாரம் பண்ணும் திரை நட்சத்திரங்கள் மாதிரி ஒரு குடும்ப நட்சத்திரம்-னு வெச்சுக்கோங்களேன்.. இதெல்லாம் ஒரு பெரிய விஷயமா..

ஒரு சாதாரண குடிமகனாகச் சொல்கிறேன். எனக்கு இதில் ஒன்றும் தவறாகத் தெரியவில்லை.. விஜயகாந்த் முதல்வராக ஆகும் பொழுது.. அவர் மனைவி ஏதாவது இராஜீய விஷயங்களில் கருத்து சொல்லும் போது (சாதாரண குடிமகள் என்ற நிலையைக் கடந்து.. முதல்வரின் மனைவி என்ற எண்ணங்களோடு) எனக்கு நீங்கள் கேட்கும் கேள்விகள் போலக் கேட்கத்தோன்றும்..
அது வரை உங்கள் கேள்விகளில் நியாயங்களிருப்பதாக ஒத்துக் கொள்ள இயலவில்லை..

அன்புடன்,
சீமாச்சு