நாடாளுமன்ற தாக்குதலும் தூக்கு தண்டனையும்

நாடாளுமன்றத்தை தாக்கி அதில் வெடிகுண்டு வீசியவர்கள் நாட்டின் இறையாண்மைக்கு ஊறுவிளவிக்க முயற்சித்தார்கள் என்பது உண்மை, இந்த நாட்டில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தி அரசுக்கும் நாட்டு மக்களுக்கும் ஒரு பதட்டத்தை உருவாக்கினார்கள் என்பது உண்மையே, ஆனால் இதையும் சுதந்திர போராட்டம் என்பார்கள், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கிலிடுவதே சரியானதாக இருக்கும், இதை சுதந்திர போராட்டமாக உருவகித்து பேசுபவர்கள் அவர்கள் கொலை செய்யும்போதும், குண்டு வைக்கும்போதும் அது தேசிய இனங்களின் எழுச்சி, உரிமைக்குரல் என்பார்கள். ( இவர்கள் வீட்டில் எல்லாம் அவர்கள் குண்டு வைக்கப் போவதில்லை . ஏனெனில் இவர்கள் திருட்டுத்தனமாக வீடு கட்டியிருப்பது அரசால் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என அறிவிக்கப்பட்ட பகுதியில் அல்லவா?)

மரண தண்டனை ஒரு சமூகத்தில் ஏன் தேவைப்படுகிறது? அரசுக்கு ஒரு மனிதனை கொல்லும் உரிமை உண்டா?

மரண தண்டனை ஒட்டுமொத்தமாக தேவை அல்லது தேவை இல்லை என்ற நிலைப்பாடு தான் உண்மையான பொதுப்புத்தி. ஒரு சமூகத்தில் மரண தண்டனை தேவையா, தேவை இல்லையா என்பது அந்தந்த சமூகம் ,சூழ்நிலை, அது எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஆகியவற்றை பொறுத்தே அமைய முடியும்.


இப்படி அரசுக்கும், மக்களுக்கும் அச்சுறுத்தும் தீவிரவாதிகளுக்கு மரணதண்டனை தருவது சரியானதாகவே இருக்கும், இப்படி பட்ட தீவிரவாதிகளை தூக்கில் போடாமால் விட்டால் பிறகு எப்படியாவது அவர்கள் விடுதலையாகிவிட்டால் அப்புறம் அந்த தீவிரவாதி மறுபடி குண்டு வைப்பது, படை திரட்டுவது என காரியங்களில் ஈடுபடுவான் . இவர்கள் "தேசிய இனங்களின் எழுச்சி" என அதை வர்ணித்து பூரித்து, புளகாங்கிதமடைந்து கைதட்டுவார்கள்.

(சிவப்பு வரிகள் உதவிக்கு நன்றி செல்வன்)

முகமது அப்சலுக்கு அளிக்கப்பட்ட தூக்கு தண்டனை பற்றிய கருத்துஇல்லைங்க, நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம்

பிற்சேர்க்கை

வழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.

தருமி அய்யா இந்த பதிவை நீக்க கூறினார், அவருக்கு பதிலாக "எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன். "

அப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.

36 பின்னூட்டங்கள்:

said...

// நாடாளுமன்றத்திற்குள் குண்டுவீசியதற்காக 1930ம் ஆண்டு அக்டோபர் மாதம் 7-ம் நாள் அளிக்கப்பட்ட தீர்ப்பில் பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோருக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையின் போது பலரும் இப்படி எழுதியிருக்கலாம், பேசியிருக்கலாம், நினைத்திருக்கலாம் இப்போது அப்சல் தூக்கு தண்டனைக்கு எழுதிக்கொண்டிருக்கின்றார்களே அது போல. //

அதுசரிதான். அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான். ஆளவிடுங்கசாமி. இந்த ஆட்டைக்கே நான் வரலை.

said...

Thanks for showing your true colors.

said...

சும்மா பேசலாம் முகமது அப்ஸலும், பகத் சிங்கும் ஒன்று என்று அதை நிலை நிறுத்த ஒரு நல்ல கருத்தை கூறுங்கள் பார்க்கலாம். அவங்க நாட்டின் விடுதலைக்காக போராடினாங்க அப்ஸல் எந்த நாட்டு விடுதலைக்காக போராடினார்? சும்மா காஷ்மீர் விடுதலைக்காக அப்படின்னு ஜல்லி அடிக்கலாம், அப்படி பார்த்தால் ஆந்திராவில் இருக்கும் நக்சல் கூட தனிநாடு வேண்டும் என்று கேட்கிறார்கள். தமிழ்நாட்டிலேயே சில கோஷ்டி இன்னும் தனி நாடு வேண்டும் என்று கேட்டு சுத்திட்டு இருக்கு இவங்களை அப்படியே விட்டுலாமா? அப்புறம் கொஞ்ச நாளைக்கு முன்னாடி மும்பையில் குண்டு வெச்சவன் கூடத்தான் காஷ்மீர் விடுதலைக்காக குண்டுவெச்சேன் அப்படின்னு சொல்றான் அவனை விட்டுலாமா?

said...

//அதுசரிதான். அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.
//
என்ன இப்பிடி சொல்லிப்புட்டிங்க, அன்று ஆங்கிலேய அரசும் அந்த அரசில்(அப்போதைய இந்தியாவில் தான்) வாழ்ந்தவர்களும் இப்படி சொல்லியிருக்கமாட்டார்களா என்ன? ஆனந்தரங்கம் பிள்ளை டயரிகுறிப்புகள் சுதந்திர போராட்டம் தொடர்பாக இது மாதிரியான குறிப்புகள் உள்ளன.

said...

//Thanks for showing your true colors. //
தல மிக்க நன்றி, அது சரி என்று நான் பொய் நிறம் காண்பித்தேன் ஒன்று உண்மை நிறம் காட்ட

said...

சந்தோஷ் கடைசியில் பேசுகிறேன் மற்றவர்களின் கருத்துகளையும் கேட்டு பின் பதில் சொல்கிறேன்.

நன்றி

said...

அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.

so sad. never expected such a post from you.

i strongly suggest that you remove this post.

said...

தருமி அய்யா சொன்னது,
so sad. never expected such a post from you.

i strongly suggest that you remove this post. "

தருமி அய்யா,

It is sad indeed. But you can and should expect this and more from Kuzhali.

பாலா
"

said...

வழக்கமாக பொதுவாக எல்லா பிரச்சினைகளிலும் தலையை சுற்றி மூக்கை தொடும் என் பதிவுகள் இந்த முறை சட்டென்று bulls eyeல் அடித்துவிட்டது என நினைக்கின்றேன்.

//i strongly suggest that you remove this post. //
தருமி அய்யா எதிர்வினை பதிவுகள் எல்லாம் வந்துவிட்டதால் எந்த அளவிற்கு இது சாத்தியம் என தெரியவில்லை, இந்தியதேசிய சட்டப்படி (கருத்து சுதந்திரத்திற்கு) இந்த பதிவி தவறென்றால் உடனடியாக இந்த பதிவை நீக்குகிறேன்.

அப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.

அதை சுட்டி காட்டுதலே இந்த பதிவு, அடுத்த சில நாட்களுக்கு அனேகமாக திரித்தல், கொளுத்தல் எல்லாம் சேர்த்து பொதுமாத்து எனக்காக இருக்கும், யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், கடைசியாக விளக்கம் தர தயாராக உள்ளேன், ஆனால் நடுவில் திரிக்கப்பட்டு, துப்பப்படும் எச்சில்களுக்கு அல்ல.

said...

பகத் சிங்,ராஜகுரு என்ன செய்தார்கள் என்பதையும்,2001ல் தீவிரவாதிகள் செய்ததையும் புரிந்து கொண்டு எழுதியிருக்கலாம். அதுவும் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல், இதுவும் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல் என்று நினைத்துவிட்டீர்கள் போலும்.அப்புறம் நீதிபதிகளின் ஜாதியை இதில் இழுப்பதுதானே உங்கள் மரபு.அதை இங்கு ஏன் குறிப்பிட மறந்தீர்கள்.இல்லை
அதற்காக தனிப்பதிவு போட்டு புனிதப் பசு அது இது என்று எழுதவிருக்கிறீர்களா.
அதுதான் அடுத்த பதிவா.

said...

அப்சலை இந்தியனாக அணுகுவதற்கும் காஷ்மீரியாக அணுகுவதற்கும் வித்தியாசங்கள் உள்ளன.

பகத்சிங்கை இந்தியனாக அணுகுவதற்கும் ஆங்கிலேய அரசின் குடிமகனாக அணுகுவதற்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன.


ஒவ்வொருவரும் இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.என்னை இந்தியனாக அணுகுவதற்கும்,
... ஜாதியை சேர்ந்தவனாக அணுகுவதற்கும்,தமிழனாக அணுகுவதற்கும், சிங்கப்பூரில் உள்ள பிரஜையாக அணுகுவதற்கும் என்று. சிங்கப்பூரில் இதெல்லாம் செல்லாது.குற்றம் செய்தால் எல்லோருக்கும் ஒரே தண்டனைதான். அதாவது உங்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறேன்.

said...

இதற்கு ச‌ரியான எதிர்வினைக்கான சொற்றொட‌ர் என்னவாக இருக்க முடியும் என்பதனை யோசிக்கிறேன் குழலி.

காஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவின‌ர், தங்களைச் சார்ந்த மக்களைக் காப்பாற்ற கிளம்புகிறோம் என்பதும் அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் எப்படி சுதந்திரப் போராட்டம் ஆக முடியும்?

சுதந்திர காலத்தில் மக்களில் சில‌ர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபடவில்லையென்றிருந்தாலும் கூட சுதந்திரம் கிடைத்துவிடக் கூடாது என கங்கணம் கட்டியிருந்தவ‌ர்கள் எத்தனை சதவீதம் இருந்திருக்கும்?

ஆனால் காஷ்மீரத்திலோ, நக்சலைட்டுகளின் வெறியாட்டம் மிகுந்த மாநிலங்களிலோ சுதந்திரம் வேண்டும் எனப் பேசும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு?

விடுதலைப் போராட்டத்தோடு, இவ‌ர்களின் போராட்டங்களை ஒப்பிடுவது ச‌ரியெனப் படவில்லை.

said...

பூனைக்குட்டி இவ்வளவு காலம் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. இப்போதோ துள்ளிக் குதித்து விட்டது. பரபரப்பிற்காகவே எழுதிக் கொண்டிருக்க வேண்டும் என்று எண்ணுபவர்களை என்ன தான் செய்ய? 'தலை' எவ்வழியோ அவ்வழி தானே தொண்டனும். ஆச்சரியப் பட எதுவுமில்லை.

said...

விடுதலைப்புலிகனை ஆதரித்து ஒரு சிங்களவர் பதிவு போட்டால் இதே எதிர்வினைகள்தான் கிடைக்கும்

said...

மணிகண்டன்,
உங்கள் எண்ணத்தில் நேர்மையிருக்கிறது எனினும் காஷ்மீர் போராட்டம் அந்த மக்களின் ஆதரவை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்கள் ஆதரவு இல்லாமல் போயிருந்தால் இத்தனை காலம் வீரியமுடன் இருக்க வாய்ப்பேயில்லை.
இந்தியாவும் பாகிஸ்தானும் காஷ்மீருக்காக நடத்துகிற அரசியல்/போர்/குயுக்திகளை விட்டுவிட்டு அந்த மக்களின் உணர்வுகளுடன் பாருங்கள்.

said...

குழலி இந்த பதிவு எந்த நோக்கத்தோடு எழுதப்பட்டது என்று எனக்கு புரியுது. உங்க சொல்வண்மையால் எப்படியாவது கஷ்மீரில் நடப்பது தனி நாடு போராட்டம் என்று ஆக்கிவிடலாம் என்று நினைக்கிறீர்கள்!! அங்கு பாகிஸ்தான் தூண்டிவிட்டுத்தான், பொருள் கொடுத்து போரிட செய்கிறது! அதை ஆதரிப்பதும், அச்சுவிடாமல் அவர்களின் Plan of actionயை நடத்திய அப்சலை எப்படி உங்களால் பகத்சிங்க்கு இனையாக ஒப்பிட முடிந்தது. தயவு செய்து இது போன்ற பதிவுகளை வைத்து நாட்டில் பிரிவினை சக்திகளுக்கு ஆதரவு தெரிவிக்காதீர்கள். ஏற்கனமே நம்ம அரசியல்வாதிகள் நடத்தும் கூத்துக்களை எப்படி ஒழிப்பது என்று புரியாமல் தடுமாறி நிற்க்கும் வேளையில் இப்படி ஆளாலுக்கு கிழம்பினா நம்ம இந்தியர்களின் ஒற்றுமை என்பது எட்டா கனியாக மாற நீங்களும் ஒரு தூணாக மாறாதீர்கள் என்பது என் வேண்டுகோள்.

said...

//
அப்ப அதுவும் இதுவும் ஒன்னுங்குறீங்க. வெளங்குனாப்புலதான்.

so sad. never expected such a post from you.

i strongly suggest that you remove this post.
//

இது என்ன ஜுஜுபி.. அம்மணி அருந்தியதி ராய் எழுதியதையும், மஹாகணம் பொருந்திய ஸ்ரீமான் ரோசாவசந்தன் எழுதியதையும் பார்த்தீர்கள் என்றால், இந்திய ஜன்நாயகப் பிரஜைகளான நாம் தான் நமக்கு நாமே தூக்கில் போட்டுக் கொள்ளவேண்டும் என்ற ரேஞ்சுக்கு இருக்கும்...

நீங்க எப்பல இருந்து க. சு. கா ஆனீங்க...? இதெல்லாம், உலக வரலாற்றில் முக்கிய திருப்பங்கள்...என்னைக் கேட்டால் இந்த வலைபக்கத்தை book mark செய்துகொண்டு சில ஆண்டுகளுக்குப் பிறகு "Let the law take its own course" என்று புனித பிம்ப, பரிசுத்த ஆவி டயலாக் அடிக்கும் போது காட்டுவோம்...

கருத்து சுதந்திரம்?!!

said...

//எனினும் காஷ்மீர் போராட்டம் அந்த மக்களின் ஆதரவை பெறவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. //

ஊடகங்கள் மக்கள், தீவிரவாதத்தை எதிர்ப்பதாக பொய்யான பிம்பத்தை ஏற்படுத்துகின்றன என்றே எடுத்துக் கொண்டாலும்,

தேர்தல்களில், ச‌ராச‌ரியாக மற்ற இந்திய மாநிலங்களில் நடைபெறும் அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெறுவதும், தீவிரவாத மிரட்டல்கள் தலையெடுக்கும் போதும் ஜனநாயக ரீதியாக மக்கள் தேர்தலில் பங்களிப்பதும், தனிக்காஷ்மீர் என்பதற்கு மக்களின் ஆத‌ரவு இருக்கிறதா என்னும் சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.

வீரியம் என்பது வெளிநாட்டுச் சக்திகளின் ஆத‌ரவினாலும் கூட கிடைக்கலாம் என்பதைக் ஏற்றுக் கொள்கிறீர்களா?

ஆனால் இது சற்று ஆழ்ந்த சிந்திக்க வேண்டிய விஷயம். ஜஸ்ட் லைக் தட் பின்னூட்டம் தட்டிவிட விரும்பவில்லை.

எனக்கும் இந்த சுதந்திரம், தேசியம், நாட்டின் இறையாண்மை போன்ற க‌ருத்துக்களில் தனிப்பட்ட க‌ருத்து உண்டு. அவை பெரும்பான்மையோரின் க‌ருத்துக்களுக்கு எதிரானதாகவே இருப்பதால் துணிந்து வெளியிடுவதில் சில சிக்கல்கள் எனக்கு உருவாகின்றன.

காஷ்மீரம் குறித்தான புரிதலில் எனக்கு மற்ற இந்தியனைப் போலவே இருக்கும் இட‌ர்பாடுகளால் இந்தப் பின்னூட்டங்களை இடுவதில் பெரிய தடுமாற்றம் இருக்கிறது.

எனவே இந்தப் பிரச்சினைகளில் நானும் க‌ருத்துச் சொல்கிறேன் என ஏதாவது உளறிவைக்க விரும்பவில்லை. இந்தப் பின்னூட்டத்தோடு இப்போதைக்கு, நான் நிறுத்திக் கொள்வது உசிதம் எனப்படுகிறது.

வேண்டுமானால் பொறுமையாக தனிப்பதிவிடலாம். அது கூட ச‌ரியாக வ‌ருமா என்று தெரியவில்லை.

said...

//காஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். ஒரு குறிப்பிட்ட பிரிவின‌ர், தங்களைச் சார்ந்த மக்களைக் காப்பாற்ற கிளம்புகிறோம் என்பதும் அதற்கான வழிமுறைகளைத் தேர்ந்தெடுக்கிறோம் என்பதும் எப்படி சுதந்திரப் போராட்டம் ஆக முடியும்?//

வா. மணிகண்டன்
காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.

said...

//
காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.
//

உங்கள் நாடு எது, பாகிஸ்தானா?

வாக்கெடுப்பு நடத்தவேண்டுமென்றா, பாகிஸ்தான் தனது ஆக்கிரமிப்பை முற்றிலும் நீக்கிக் கொள்ளவேண்டும் சுல்தான். அதை செய்யதவரை இது முடியாது...

--this post is not to dicuss kashmir issue, i will stop here in this--

said...

//தேர்தல்களில், ச‌ராச‌ரியாக மற்ற இந்திய மாநிலங்களில் நடைபெறும் அளவிற்கு வாக்குப் பதிவு நடைபெறுவதும்//
காஷ்மீரில் நடக்கும் தேர்தல் கூத்தைப் பற்றி காஷ்மீரிகளிடம் கேட்டு விபரம் பெறுங்கள்.

said...

காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.


ஐயா தங்கள் கருத்து பாகிஸ்தானுக்கும் (பலுச்சிஸ்தான்,ஆக்ரமிக்கப்பட்ட காஷ்மீர்), ஈராக் - இங்கெல்லாம் பொருந்துமா.இல்லை இந்தியாவிற்கு மட்டும் இந்த உபதேசமா

said...

//காஷ்மீரத்தின் விடுதலை என்பது அனைத்து காஷ்மீர மக்களின் விருப்பமா என்பதனை முதலில் சொல்லுங்கள். //

மணிகண்டன்,

இல்லையென்றால், referundum நடத்துவதாக இந்தியா ஐநாவுக்கு அளித்த வாக்குறுதியைச் செய்துவிட வேண்டியது தானே. பிரச்சினை இவ்வளவு தூரம் தீவிரமடைந்ததற்கே இந்தியாவின் நழுவல் தானே காரணம்?

said...

//காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து, நம்மை இதற்காக எதிர்க்கும் நாடுகளை வாயடைக்கச் செய்திருக்கும்.//


சுல்தான்,

Plebiscite வாக்கெடுப்பு இந்திய காஷ்மீர் பகுதியில் மட்டும் நடத்த முடியாது. அதற்கு முதலில் ஐநா முடிவின்படி பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீரத்தை(POK) இந்தியா வசம் திருப்பித் தந்தாகவேண்டும் முழுமையான வாக்கெடுப்பு நடத்துவதற்கு!

அன்புடன்,

ஹரிஹரன்

said...

See the last 2 posts in
http://ravisrinivas.blogspot.com

மட்டையடிக்க சில மகாவாக்கியங்கள்

வலைப்பதிவர்கள் சிலர் மட்டையடிக்க மிகவும் சிரமப்படுகிறார்கள்.அவர்களுக்கு உதவும் பொருட்டு சில மகா வாக்கியங்கள் கீழே.

1,இன்றைய சரி நாளை தவறாக இருக்கலாம்.நாளைய தவறு நேற்று சரியாகவும், இன்று சரியில்லாமலும் இருக்கலாம்.எது சரி என்று யார் சொல்ல முடியும்.எனவே அப்சலுக்கு
மரண தண்டனை கூடாது.
2, நீதிமன்றங்கள் தரும் தீர்ப்பு சட்டப்படி சரியாக இருந்தாலும், அற நோக்கில்
அநீதியாக இருக்கலாம். எதையும் வெறும் சட்டக் கண்ணோட்டத்திற்கு அப்பால் புரிந்து
கொள்ள வேண்டும். அறக்கணோட்டம் திராவிட அறக் கண்ணோட்டம் என்று பொருள் கொள்க.
திராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.
எனவே அப்சலை தூக்கில் போடுவது தவறு.
3,மரண தண்டனை சட்டத்தின் தீர்ப்புதான், சமூகத்தின் தீர்ப்பல்ல.சமூகம் சட்டத்தினை விட
உயர்ந்தது.சமூகத்திற்காக சட்டமே, அன்றி சட்டத்திற்காக சமூகம் இல்லை
4,வரலாறுதான் எது சரி, தவறு என்று தீர்மானிக்கும். எனவே அப்சல் குறித்து வரலாறு தீர்மானிக்கட்டும். சட்டமோ,நீதிமன்றமோ தீர்மானிக்க வேண்டாம்
5,தேசத்துரோகம் என்று கூறுவது தவறு, இந்தியா ஒரு தேசமாக உருவாகவே இல்லை,
இது சாதிய சமூகமாக இருக்கிறது, அப்படி இருக்கும் போது தேசத்துரோகம் எப்படி
சாத்தியமாகும்.
6,பாரளுமன்றம் ஒரு கட்டிடம்தான்.காலனிய ஆட்சியின் போது கட்டப்பட்ட காலனியத்தின்
குறியீடான பாராளுமன்றத்தினை தகர்ப்பதா தவறு.
7,கொல்லாமையே திராவிடர் அறம், மரண தண்டனையை புகுத்தியது ஆர்ய வந்தேறிகள்.
மரண தண்டனை திராவிட,தமிழர் நாகரித்திற்கு முரணானது.எனவே அப்சலை தூக்கிலடக்கூடாது.

தேவைப்பட்டால் இன்னும் வரும்....

said...

சுல்தான் அவர்களே //காஷ்மீரில் நீங்கள் நினைப்பது போல் அதிகமான மக்களின் விருப்பமில்லை என்பது நிதர்சனமாயிருந்தால், இந்நேரம் நமது நாடு, அதை வாக்கெடுப்பு நடத்தி, உறுதி செய்து//


http://www.eci.gov.in/SR_KeyHighLights/SE_2002/StatRep_JK_02.pdf

இந்த தேர்தலில் ஓட்டு போடவேண்டாம் என்று JKLF சொல்லியிருந்தது! ஆனால் ஆண்கள் 48% பெண்கள் 38% ஓட்டு போட்டார்கள்!! பலர் கொலை செய்துவிடுவார்கள் என்று பயந்து ஓட்டு போடாமல் இருந்தார்கள் அப்ப J&K மக்கள் ஏன் ஓட்டு போட்டார்கள்?? சும்மா ஆத்தாதீங்க சார்! அதனால் அங்கு நடப்பது சுதந்திர போராட்டம் அல்ல என்பது உண்மை! பாகிஸ்தானின் தூண்டுதலின் பெயரில் நடக்கும் அட்டூழியங்களே!!

சுல்தான், குழலி சுதந்திர போராட்டத்தில் தன் மக்களையே கொல்லவில்லை பகத்சிங். ஆனால் தினமும் அங்கு கொல்லப்படுவதில் சாதரண பிரஜைகளா முஸ்லீம்கள் தான் அதிகம். அப்படி இருக்கும் போது எப்படி அதை பகத் சிங்கின் போராட்டத்துக்கு சம்மாச்சு??

//யாராவது கருத்து சுதந்திர காவலர்கள் என்னை காப்பாற்றினால் தான் உண்டு என நினைக்கின்றேன், //

இந்த வாரம் நீங்க அவங்களை(க.சு.கா) ரவுண்டுகட்டு அடிச்சுட்டு அவர்களை துணைக்கு கூப்பிட்டா வருவாங்களா குழலி???!!!

said...

பகத்சிங் கோணத்தில் பார்த்தால் அப்சலின் செயல் எவ்வளவு நியாயமோ அவ்வளவு நியாயம் நம் அரசின் சார்பில் இருப்பது, ஆங்கிலேயர்களின் கோணத்தில் நம் அரசைப் பார்த்தால் உனக்குப் புரியுலாம்!

said...

குழலி,

நாளைக்கு ஒரு களவானி வீடு புகுந்து திருடி விட்டு நான் திருடியது என் ஏழ்மையினால்தான் அதனால் தண்டிக்க பட வேண்டியது என் ஏழ்மைக்கு காரணமானவர்களைதான் என்று சொல்லலாம்

பாலியல் வன்முறை செய்பவர்கள் எனக்கு ஜின்கள் வழியாகதான் இந்த குறை வந்தது. எனவே தண்டிக்கபடவேண்டியது நானில்லை எனலாம்.

கீழ வெண்மணியில் தீயிட்டு கொன்றவர்கள் கூலி தொழிலாளிகள் ஒரு நாளைக்கு 24 மணி நேரம் உழைத்து விளைச்சலை அதிகமாக்கி,அரசுடன் பேசி எங்களுக்கு அதிக விலை வாங்கி கொடுத்திருந்தால் நாங்கள் அவர்களுக்கு கூலி கூட கொடுத்திருப்போம். ஆதலால் குற்றவாளிகள் கூலி தொழிலாளரும்,அரசும்தான் என்று சொல்லலாம்.

எந்த ஒரு குற்றத்திற்கும் சூழலையும்,பிறரையும் கை காட்டும் காரணம் சுலபமாக கண்டுபிடிக்கலாம்.

said...

குழலி,
பதிவில் சொற்குற்றம் இல்லை, பொருட்குற்றம் உள்ளது !!!
பார்க்க: http://balaji_ammu.blogspot.com/2006/10/blog-post_07.html

said...

இந்த தொடுப்பை பாருங்கள்..

http://en.wikipedia.org/wiki/Bhagat_Singh

Bomb in the Assembly

In the face of actions by the revolutionaries, the British government enacted the Defence of India Act to give more power to the police. The purpose of the Act was to combat revolutionaries like Bhagat Singh. The Act was defeated in the council by one vote.

However, the Act was then passed under the ordinance that claimed that it was in the best interest of the public. In response to this act, the Hindustan Socialist Republican Association planned to explode a bomb in the assembly where the ordinance was going to be passed. Originally, Azad attempted to stop Bhagat Singh from carrying out the bombing, however, the remainder of the party forced him to succumb to Singh's wishes. It was decided that Bhagat Singh and Batukeshwar Dutt, another revolutionary, would throw the bombs in the assembly.

On April 8, 1929, Singh and Dutt threw bombs onto the corridors of the assembly and shouted "Inquilab Zindabad!" ("Long Live the Revolution!"). This was followed by a shower of leaflets stating that it takes a loud voice to make the deaf hear. The bomb neither killed nor injured anyone; Singh and Dutt claimed that this was deliberate on their part, a claim substantiated both by British forensics investigators who found that the bomb was not powerful enough to cause injury, and by the fact that the bomb was thrown away from people. Singh and Dutt gave themselves up for arrest after the bomb. He and Dutt were sentenced to 'Transportation for Life' for the bombing on June 12, 1929.

said...

திராவிட அறக்கண்ணோட்டம் இன்றைய நிலவரப்படி மரணதண்டனைக்கு எதிரானது.

:-))))

said...

அய்யப்பனை தொட்டதாக சொல்லும் ஜெயமாலாவின் எண்ணம் தான் உங்களுக்கும்,,, இந்த பதிவெழத தூண்டியது...

cheap publicity...you already got it...

said...

குழலி அவர்களுக்கு,

கருத்து சுதந்திரத்தை நிரூபிக்க இப்படி ஒரு பதிவை எழுதியிருக்கிறீர்கள் போலும்! உங்கள் கருத்தை தெரிவிக்க ஒரு தடையும் இல்லை! எந்தப் புனிதமுமே விவாதத்துக்குரியதுதான், தேசப்பற்றும், தேசிய இறையாண்மையும் கூடத்தான். நீங்கள் எங்கிருந்து இந்தக் குரலைக் கொடுக்கிறீர்கள் என்பதுதான் இங்கு பலருக்கும் கேள்வியாக இருக்கக்கூடும். வெறும் கருத்து சுதந்திர விவாததின் நீட்சியாக இருந்தால் இங்கு விவாதிக்க வேறொன்றுமில்லை என்றே தோன்றுகிறது - ஸ்ரீதர்

said...

//மந்திரிகளையும், பாராளுமன்ற உறுப்பினர்களையும் காக்க வேண்டி (அவர்களில் பாதிக்கு மேல் காப்பாற்ற லாயக்கற்றவராக இருப்பினும்!) போரிட்டு உயிர் துறந்த பாதுகாப்புப் படைவீரர்களின் தியாகம், இது குறித்து பேசும் அனைவரும் எண்ணிப் பார்க்க வேண்டிய ஒன்று.//

இதைத்தான் நான் நினைக்கிறேன். சந்தன கடத்தல் வீரப்பன், ஆட்டோ சங்கர், அப்சல் போன்ற கிரிமினல்களுக்கு பாய்ந்து ஆதரவு தரும் இந்த மனித உரிமை இயக்கங்களும், குழலி & கோ கோஷ்டிகளும் ஏன் ஒரு சாதரண குடும்ப பிரச்சனையில் கொலை செய்து மரண தண்டனைக்கு காத்து இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்!!! இதில் உள்ள Hidden agenda என்ன? விளம்பரமா? பிரிவினைவாத ஆதரவா?

said...

//
இந்த மனித உரிமை இயக்கங்களும், குழலி & கோ கோஷ்டிகளும் ஏன் ஒரு சாதரண குடும்ப பிரச்சனையில் கொலை செய்து மரண தண்டனைக்கு காத்து இருக்கும் மற்ற குற்றவாளிகளுக்கு ஆதரவு தெரிவிக்காமல் இருக்கிறார்கள்!!! இதில் உள்ள Hidden agenda என்ன? விளம்பரமா? பிரிவினைவாத ஆதரவா?
//இந்த ரவுடிங்க பின்னாடி ஒரு ஜால்ரா கூட்டம் என்னிக்குமே இருக்கும்... "அண்ணே, நீங்க டாப்பு, அவனுக்கு கொடுத்தீங்க பாருங்க, அது சூப்பரு" ன்னு ஜிஞ்சா தட்டிகிட்டே...

இவனுங்க அலம்பல் ஓவரா இருக்கும்..."அவன் ரவுடி, அவன் செலம்புறான்", நீ ஏன் டா செலம்புறன்னு அவன்கிட்ட கேட்டா, "ஏய், நான் ரவுடிக்கு தெரிஞ்சவண்டா" ன்னு சொல்லுவான்.

இவனுங்கள்லாம், ரவுடி இருக்கும் போது தான் செலம்புவானுங்க...ரவுடி இல்லான்னா, இவிங்களும் இருக்க மாட்டாங்க...

said...

death penalty ? for these pigs ? they expected when started with terrorism right?

If i have power to punish them,

1 - Remove there tongue
2 - cut all the fingers half in hands and legs
3 - remove eye lid only - they should never be able to close their eyes till death and put them in life sentence after that.

They should die everyday.. not in single shot.


after all these will anyone think of doing terrer activity ?

may be some good adiyars might support them.. some god nesan might well support them. but true indian would expect such a penalty to such a criminal like mathani, apsal and who ever does it.


-- indian --