RSS - பிரச்சினை உள்ளவர்களுக்கு

இது சரியான தீர்வா என்று தெரியவில்லை, என்னளவில் இது வேலை செய்கின்றது.
--------------------------------------
பிரச்சினை என்னவென்றால் XML க்கு ஒவ்வாத & # 3 ; இதன் ஒவ்வொரு எழுத்திற்கும் இடவெளி விட்டுள்ளேன், இது உங்கள் பதிவில் இடைவெளியில்லாமல் இருக்கும் இதை கண்டுபிடித்து உங்கள் பதிவிலிருந்து நீக்கினால் வேலை செய்யும், இதை நீக்க Edit Html ஐ சுட்டி அதிலிருந்து செல்லுங்கள் ,பிரச்சினைக்குறிய அந்த எழுத்துகளை கீழுள்ள படத்தில் வட்டமிட்டுள்ளேன்.

---------------------------------------
உதாரணமாக இது ரோசாவந்த்தின் பதிவில் "வசையும்" "தேசத்துரோகி" என்ற இரு வார்த்தைகளின் நடுவில் வருகின்றது, இதை நீக்கினால் RSS பிரச்சினை இல்லாமல் வேலைசெய்யும் என கருதுகின்றேன்
-------------------
பொதுபுத்தியுடன் எதையும் உரையாட முடியாது. இந்தவிஷயத்தில் விநோதம் என்னவென்றால், அஃப்சலின் தூக்குதண்டனைக்கு எதிராக வலைப்பதிவுகளில் கருத்து சொல்ல வந்த சில இஸ்லாமியர்கள் கூட, இந்த பொது புத்தியிலிருந்து விலகிஎதையும் சொல்லமுடியவில்லை என்பதுதான். நரேந்திர மோடியையும் தூக்கில் போடவேண்டியதுதானே என்பதற்கு மேல் அவர்களிடமும் வேறு வாதங்கள் இல்லை. வேறு யாரிடமிருந்தும்எந்த வகை குரலும் ஒலித்ததாக எனக்கு கேட்கவில்லை. <br /> <br /> <br /> <br />வழக்கம் போல மிக முட்டாள்தனமான, மிக கயமைத்தனமான ஒரு வாதம் முன்வைக்கப் படுகிறது. அஃப்சலின் தூக்கு தண்டனையை எதிர்ப்பவர்கள் விளம்பரத்திற்காகவும், சுய ஆதாயத்திற்காகவும் அதை செய்வதாக சொல்வது; இன்று இருக்கும் தேசியம் சார்ந்த ஜுரத்தின் இடையில், இந்திய பாராளுமன்றத்தை தாக்கியதாக தீர்ப்பளிக்கப் பட்ட நபருக்கு ஆதாரவாக குரல் கொடுத்தால், வசையும் தேசத்துரோகி பட்டமும்

2 பின்னூட்டங்கள்:

said...

ச்செ! syndication service...

நானும் சுவயம்சேவக் சங் பிரச்சனைன்னு நெனச்சி உள்ள வந்து பாத்துட்டேன்...

said...

//வசையும்" "தேசத்துரோகி" என்ற இரு வார்த்தைகளின் நடுவில் வருகின்றது, இதை நீக்கினால் RSS பிரச்சினை இல்லாமல் வேலைசெய்யும் என கருதுகின்றேன்//

'வசை'யும் 'தேசத்துரோகி'யும் இல்லாவிட்டால் RSSக்கும் பிழைப்பு நாறிடும்.