தீபாவளி தீபாவளியாம்
இந்த ஆண்டும் சிங்கப்பூர் குட்டி இந்தியா பகுதி வழக்கம் போல தீபாவளிக்காக அலங்கரிக்கப்ப்ட்டிருந்தன, சென்ற ஆண்டு அலங்காரம் பற்றிய கட்டுரை இங்கே, சென்ற ஆண்டு அலங்காரம் வெள்ளையானை, இந்த ஆண்டு தோகை விரித்த மயில். சனியிலிருந்து செவ்வாய் வரை நான்கு நாட்கள் விடுமுறை, தீபாவளியன்று காலையிலிருந்தே வந்து கொண்டிருந்து தீபாவளி வாழ்த்து குறுஞ்செய்திகளுக்கு பதிலளிக்காமல் தொலைபேசியில் வந்த சில தீபாவளி வாழ்த்து செய்திகளுக்கு மறுவாழ்த்து சிலருக்கு சொல்லி, சிலருக்கு சொல்லாமல் என ஒரே தத்துவ சொதப்பல்.


பல மொழிகளில் வாழ்த்துகள்

பொதுவாக நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிங்கப்பூரின் புலாவுபின் தீவிற்கு சென்று இயற்கையை ரசிப்பது வழக்கம், அன்றும் புலாவுபினுக்கு ஊர் நண்பர்களோடு கிளம்பினோம், புலாவுபின் தீவு காங்கிரீட் கோபுரங்கள் இல்லாத, இயற்கையாக காட்டு பகுதி மாதிரியான ஒரு பழைய சிங்கப்பூரை கண் முன் நிறுத்தும், மோட்டார் படகில் அந்த தீவிற்கு செல்லவேண்டும், அந்த தீவில் மிதிவண்டியை வாடகைக்கு எடுத்து சுற்றி வருவார்கள், மற்றவர்கள் மிதிவண்டி வாடகைக்கு எடுத்தபோது நான் மட்டும் நீங்கள் செல்லுங்கள் என்றேன், என் குட்டி பூர்ஷ்வா வாழ்க்கைக்கு கொடுத்த விலை கடந்த சில வருடங்களாக இருக்கும் என் முதுகுவலி, தினம் வாடகைக்காரில் உடன் வேலை செய்பவருடன் அலுவலகம் சென்று வந்தேன், சில மாதங்களுக்கு முன் Peak hour sur charge ஒரு சிங்கப்பூர் வெள்ளியிலிருந்து இரண்டாக உயர்த்தப்பட்டது, தினம் பயண செலவு இரண்டு வெள்ளி கூடுதலானது, சரி இனி மிதி வண்டியில் செல்வோம், வீட்டிலிருந்து ஒன்னரை கிலோமீட்டர் தூரம் தானே என்று அன்றே ஒரு புது மிதிவண்டி வாங்கி ஒரு நாள் மட்டுமே ஓட்டி விட்டு வந்து சேர்ந்தபோது மறு நாள் அலுவலகம் செல்லமுடியாத அளவிற்கு முதுகுவலி, இது மூன்றாம் மாதம் பிசியோதெரபிக்கு சென்று கொண்டிருக்கின்றேன், மருத்துவத்திற்கு இப்போது செலவழித்த பணம் இந்த ஆண்டு முழுமைக்கும் நான் வாடகை காரிலேயே அலுவலகம் சென்றிருக்கலாம், அதனால் மீண்டும் முதுகுவலியை மோசமாக்க விரும்பாமல் நண்பர்களை மட்டும் மிதிவண்டியில் சுற்றிவர நான் தீவினுள் நடக்க ஆரம்பித்தேன்.

சிலர் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர், பலர் மிதிவண்டியில் சுற்றி வந்தனர், சிலர் மிதிவண்டியை நிறுத்தி காதல் செய்து கொண்டிருந்தனர், மேலும் நடந்து வர, இருவர் அடித்த மப்பில் பாதையோரமாகவே சாய்ந்து கிடக்க அவர்களை எழுப்பும் முயற்சியில் மேலும் இருவரென, நால்வரும் தமிழ்கூறும் நல்லுலகை சேர்ந்தவர்கள்.

சிறிது நேரம் இளைப்பாறிவிட்டு மீண்டும் படகை பிடித்து நகரினுள் நுழைந்தோம். மேலும் படங்கள் இங்கே

9 பின்னூட்டங்கள்:

said...

மேலும் படங்களுக்கு என்று நீங்கள் கொடுத்த சுட்டியை க்ளிக்கினால் கீழுள்ளவாரு வருகிறதே :))


Username kuzhali140277 Password

Note: If you are having login
issues please see the top of the FAQ

கனனிங்கோ :)

said...

சரி செய்துட்டேங்க சங்கர்

நன்றி

said...

தீபாவளியை வித்தியாசமா கொண்டாடிட்டு, ஜாலியா இருக்கீங்க போல...

அந்த பாட்டில்களின் குவியலில் எவ்வளவு உங்களுடையது ;)

said...

படங்கள் கலக்கல்...

நன்றி

said...

//அந்த பாட்டில்களின் குவியலில் எவ்வளவு உங்களுடையது ;)
//
ஹி ஹி கடந்த பத்து வருடமாக அந்த விசயத்தில் மருத்துவர் இராமதாசின் அணுக்கத் தொண்டன் :-)

said...

---மீண்டும் முதுகுவலியை மோசமாக்க விரும்பாமல் நண்பர்களை மட்டும் மிதிவண்டியில் சுற்றிவர நான் தீவினுள் நடக்க ஆரம்பித்தேன்.---

உங்களை மாதிரி முதுகுவலி வர நேரிடும் என்பதால், சைக்கிளே கற்றுக் கொள்ளாத புத்திசாலி நான்!

---சனியிலிருந்து செவ்வாய் வரை நான்கு நாட்கள் விடுமுறை, ---

கொடுத்து வச்சிருக்கீங்க! ஹ்ம்ம்... பெருமுச்சுடன், சிங்கப்பூர் தீபாவளிக்கு நன்றி.

said...

படங்கள் நன்றாய் உள்ளன..

said...

சிங்கப்பூர் தீபாவளி கொண்டாட்டம் நன்றாக இருக்கிறது. படங்கள் அட்டகாசம்!

நன்றி குழலி.

வைசா

said...

குழலி, நல்ல படங்கள்.
சிங்கப்பூரிலும் உதய சூரியனா என்று ஒரு கணம் திகைப்பாக இருந்தது.
கூர்ந்து பார்த்தபின் தான் மயில் என்று விளங்கியது :)

உங்களின் பதிவில் 'என் பின்னூட்டங்கள்' என்று இதுவரை நீங்கள் இட்ட பின்னூட்டங்களை தொகுத்திருக்கிறீர்கள்.
அது எப்படி செய்வது என்ற step-by-step எப்படி என்று சொன்னால் நன்றாக இருக்கும்.

நன்றி!