நக்கீரன் புலனாய்வு இதழ் - மீள்பதிவு

நக்கீரன் புலனாய்வு இதழ்,பதினெட்டாம்(தற்போது பத்தொன்பதாம்) ஆண்டில் வெற்றி நடை போட்டுக்கொண்டிருக்கும் இந்த இதழிற்கும் இதன் ஆசிரியர் திரு நக்கீரன் கோபாலுக்கும் வாழ்த்துக்கள்.

நக்கீரன் இதழ் எப்பொழுதுமே எதிர் கட்சியாகத்தான் செயல்படும், அது தி.மு.க ஆட்சியிலிருந்தாலும் சரி அ.தி.மு.க ஆட்சியிலிருந்தாலும், நக்கீரனின் புலனாய்வு செய்திகள் எமக்கு எப்போதும் ஆச்சரியத்தை அளிக்கக்கூடியது.இவர் இப்படித்தானிருப்பார்
என்பது தெரிந்ததே நக்கீரனால்தான்

யாராலும் கண்டுபிடிக்க முடியாத, தொடர்பு கொள்ள முடியாமல்
இருந்த வீரப்பனிடமிருந்து பேட்டியெடுத்து வெளியிட்டது அதன் முதல் மாபெரும் வெற்றி.

முந்திரிக்காட்டில் பதுங்கியிருந்த தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழர் விடுதலைப்படையின் தலைவர் இளவரசனிடம் பேட்டி எடுத்து வெளியிட்டது

அடித்த ஸ்கூப்களிலே
முக்கியமான ஸ்கூப் இவருடையது தான்


திரு.சங்கரராமன் அவர்கள் காஞ்சிபுரத்திலே வரதராஜ பெருமாள் சன்னிதியிலேயே வெட்டிக்கொலை செய்யப்பட்டபோது எந்த ஒரு பத்திரிக்கையும் ஒரு கிசு கிசு வாகக்கூட மடத்தை கை காட்டாத போது, நக்கீரன் தான் இந்தக்கொலையில் மடத்தின் தொடர்பை கேள்விக்குள்ளாக்கியது, அது மட்டுமின்றி சங்கராச்சாரியார் அவர்களிடம் நேரடியாக இந்த கொலை பற்றி பேட்டி கண்டபோது, எனக்கு தெரியாது, ஆனால் சங்கரராமன் எனக்கு தந்த தொல்லைகளை பார்த்து என் மேல் பாசம் வைத்திருக்கும் யாரேனும் செய்தால் நான் எப்படி பொறுப்பேற்க முடியும் என அவர் பேட்டியில் கூறியபோது ஒரு கோடு,இரண்டு கோடு, மூன்று கோடு என பல கோடுகளை வரைந்தனர், பிறகு இந்த வழக்கில் ஜெயேந்திரர்,விஜயேந்திரர் என பலர் கைது செய்யப்பட்டனர்

திரு.ஆலடி அருணா வெட்டிக்கொலை செய்யப்பட்ட போது, பல பத்திரிக்கைகளும் திரு.கட்டதுரையின் கொலைக்கு பழிக்குப்பழியாக இந்த கொலை நடந்தது என்று தகவல் தந்து கொண்டிருந்தபோது பொறியியல் கல்லூரித்தொழில்போட்டியினால் தான் இந்த கொலை நடந்தது என எஸ்.ஏ.ராஜா வின் மீது முதன் முதலில் கைக்காட்டியது நக்கீரன் தான், இவரும் பிறகு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.
எஸ்.ஏ.ராஜா, திருநெல்வேலி மாவட்டத்திலே பல கல்விக்கூடங்கள் நடத்தி வரும் பிரபலம்.தமிழகத்தை கலக்கிய இரு பெண்கள்கஞ்சா வழக்கில் செரீனா கைது செய்யப்பட்ட போதும், சீட்டிங் வழக்கில் ஜெயலட்சுமி கைது செய்யப்பட்டபோதும் ஏதோ இது தினம் நடக்கும் சம்பவங்களில் ஒன்று என்று எண்ணியிருந்த்தபோது கைதின் பின் புலங்களை முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்.


இது போல எண்ணிலடங்கா உதாரணங்கள், கொலை வழக்குகள் மட்டுமல்ல
அரசாங்க அதிகாரிகள்,அரசியல்வாதிகள்,கான்டிராக்ட் ஊழல்கள் என கிட்டத்தட்ட எல்லா ஊழல்களையும் பெரும்பாலும் முதலில் அம்பலப்படுத்தியது நக்கீரன் தான்

பத்திரிக்கைகளின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்களிலேயே மிக அதிகமாக பாதிக்கப்பட்டது நக்கீரன் தான், ஒரு பத்திரிக்கை ஒரு சிரிப்பு வெளியிட்டதற்காக ஒரே ஒரு நாள் அதன் ஆசிரியர் கைது செய்யப்படதை இன்று வரை பத்திரிக்கை சுதந்திரத்தில் மிகவும் பாதிக்கப்பட்டதாக சொல்லிக்கொண்டுள்ளது, பொடாவினில் பல மாதங்கள் சிறையிலே, பல முறை நக்கீரன் அச்சகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள்,பாதிப்படைந்த பதிப்பாளர் திரு.கணேசனின் இறப்பு, ஊழல்களை அம்பலப்படுத்திய பெரம்பலூர் நிருபர் கொலை, இன்னும் பற்பல ஊர்களில் நக்கீரன் நிருபர்கள் மீது தாக்குதல் என ஒரு அடக்குமுறையை எதிர்த்து போராட்டத்தையே நடத்திக்கொண்டுள்ளது நக்கீரனும் அதன் ஆசிரியர் கோபாலும். பொடாவிலே நக்கீரன் கோபால் சிறையிலிருந்த போதும் எந்த பத்திரிக்கையும் கடுமையாக போராடவில்லை, பெயருக்கு ஒரு கண்டன ஆர்பாட்டம், ஒரு கையெழுத்து வேட்டை நடத்திவிட்டு அமைதியாகிவிட்டன.

ஆனால் அத்தனை போராட்டங்களையும் மனவலிமையோடு சந்தித்து இன்றும் ஒரு வெற்றிகரமான பத்திரிக்கையாக வந்து கொண்டுள்ளது,

ஒரு சில அரசியல் இதழ்களைப்போல் அட்டையை உரித்துவிட்டால் எல்லா வாரமும் அதே செய்திகளை தாங்கிக்கொண்டுள்ள (தி.மு.க, கலைஞர் மீது தாக்குதல், பா.ம.க.,ம.தி.மு.க வை மாவட்ட கட்சி என கிண்டல் செய்தல், பாஜக மற்றும் மடங்களுக்கு ஜால்ரா போடுதல், ஒவ்வொரு வாரமும் அதே கேள்வி அதே பதில்கள், கிறுக்குத்தனமாக எதையாவது எழுதுவிட்டு, தான் ஒரு கிறுக்கன் என சொல்லிக்கொள்தல் - புரிகின்றதா யார் என?) பத்திரிக்கை போலன்றி நக்கீரனின் ஒவ்வொரு இதழ் வெளியீடும் ஒரு களப்போராட்டம் தான்.

ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ?

எது இதற்கு காரணம் சாதியா? பணமா? அல்லது சற்று தரம் குறைந்த காகிதத்தில் வண்ணமயமாக பதிப்பிக்காததா?

படங்கள் உதவி - நக்கீரன்

நன்றி - நக்கீரன்

பிற்சேர்க்கை

(நக்கீரன் கோபாலின் நெற்றிப்பொட்டில் துப்பாக்கி வைத்து மிரட்டப்பட்டதாலோ என்னவோ இந்த முறை தேர்தலின் போது திமுக ஜால்ரா சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது)

பின்னூட்டத்திற்கு இங்கு சுட்டவும்

27 பின்னூட்டங்கள்:

said...

குழுலி,

//ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ? //

பு.பி. அதிகம் உள்ள துறை அப்படித்தான் இருக்கும்..

நீங்கள் சொல்வதுபோல் அவரை பெரிய அளவுக்கு பத்திரிக்கை அரங்கில் முன் நிறுத்தப்படவில்லை.

மற்றபடி நக்கிரனுக்கு வாசகர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.

எனினும் பல இன்னல்களுக்கிடையே தொடர்ந்து பத்திரிக்கை நடத்தி வரும் கோபாலைப் பாராட்டவேண்டும்.

said...

//பு.பி. அதிகம் உள்ள துறை அப்படித்தான் இருக்கும்.. //

என்ன சொல்ல வர்றீங்க சிவபாலன்? பு.பி.க்கள் மட்டும் தான் பத்திரிகைகள் காசு வாங்கி படிப்பவர்கள். ப.சீ.க்கள் (பரமார்த்த குரு சீடர்கள்) ஓசி கிராக்கிகள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

ஐயோ பாவம், ஸேம் சைடு கோல் போட்டுட்டீங்களே.

said...

//திமுக ஜால்ரா சத்தம் கொஞ்சம் அதிகமாக இருந்தது//

உங்க பமக க்கு அடிச்சா தான் சாதிக்கு பிரச்சாரம் அப்படித்தானே
உங்க சாதி ஆளு அதனால அவர மிரட்டுராங்க இல்லா.....

போங்கடா உங்க மூஞ்சின என கைய வைக்க...

said...

மாயவரத்தான்

நான் பத்திரிக்கை உலகை சொன்னேன்..

நீங்கள் தவறாக புரிந்து கொண்டீர்கள்..

said...

கடைசியா வந்த அனானி, நக்கீரன் கோபால் மிரட்டப்பட்டது கருணையின் வடிவான ஜெயலலிதா ஆட்சியில் என்று அவர் குறிப்பிட்டுள்ளார், ஆதலால் அவர் ஜெயலலிதா ஆட்சிக்கு வருவதை விரும்பியிருக்க மாட்டார்.

said...

//பு.பி. அதிகம் உள்ள துறை அப்படித்தான் இருக்கும்.. //

என்ன சொல்ல வர்றீங்க சிவபாலன்? பு.பி.க்கள் மட்டும் தான் பத்திரிகைகள் காசு வாங்கி படிப்பவர்கள். ப.சீ.க்கள் (பரமார்த்த குரு சீடர்கள்) ஓசி கிராக்கிகள் என்று ஒப்புக் கொள்கிறீர்களா?

ஐயோ பாவம், ஸேம் சைடு கோல் போட்டுட்டீங்களே//


தல..சிவபாலன் மேல் பாயாதீங்க.இப்படி வாங்க..

அவர் சொன்னது பத்திரிக்கை துறையில..ஏதோ லிஸ்ட் வந்ததே :))

said...

மாயவரத்தான்,

இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு By சுந்தரவடிவேல்

http://bhaarathi.net/sundara/?p=278

நேரம் கிடைக்கும் போது இதைப் படித்துப் பாருங்க..

said...

மாயவரத்தான்

நேரம் கிடைக்கும் போது இதைப் படித்துப் பாருங்க..

இந்திய ஊடகங்களில் உயர்சாதியினரின் ஆதிக்கம் - ஆராய்ச்சி முடிவு by
சுந்தரவடிவேல்

http://bhaarathi.net/sundara/?p=278

said...

சிவபாலன்,

பத்திரிகை உலகில் பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை அப்படி என்றால் பத்திரிகையாளர்கள் மத்தியில் என்று பொருள் இல்லை.

மக்கள் மத்தியில் என்று அர்த்தம்.

இல்லை இல்லை... நக்கீரனுக்கு மக்கள் மத்தியில் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்ல பேர் இருக்கு அப்படீன்னு சொல்லுற ப.சீ. க்ரூப்பா நீங்க? அப்படீன்னா விளக்கம் சொல்லி புரிய வைக்க முடியாது. நான் அப்பீட்டு.

said...

//ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன் ? //

"சினிக்கூத்து"

என்ற ஒரு இதழையும் அது நடத்துகிறதே, கிட்டத்தட்ட மஞ்சள் பத்திரிக்கை மாதிரிதானே இருக்கு.

எப்படி பெரிய்ய்ய்யயயயய எடம் கிடைக்கும்.

said...

Nakkeeran's first woman reader is our AMMA DR JJ.

said...

//பு.பி. அதிகம் உள்ள துறை அப்படித்தான் இருக்கும்.. //

//என்ன சொல்ல வர்றீங்க சிவபாலன்?//

பத்திரிக்கைத் துறையில் இருக்கும் பு.பிக்களை சொன்னால் நமது ஐயா மாயவரத்தாருக்கு கோபம் வருவது ஏன்? நானும் யோசித்து யோசித்துப் பார்க்கிறேன்.

said...

Nakkeeran has behaved as a cheep magazine by publishing 'Aids to Acress roja' kind of newses and sexy kushboo photos(taken without her knowledge) and many more like that. The accomplishment may be noticable. But it s not genuine or exceptional to other magazines.

said...

//நான் அப்பீட்டு.//

இதுதானே பு.பி.க்களின் டெக்னிக்....

said...

நமக்கு நக்கீரன் போல் பத்திரிகையும் தேவைதான்!! அது தொடர வாழ்த்துகிறேன்.
யோகன் பாரிஸ்

said...

நக்கீரன் கோபாலை 2004 ஆம் ஆண்டு சந்தித்தேன்..

அவருக்கு பல சோதனைகள் வந்திருந்த நேரம் அது...

அவர் ரீபோக் ஷு அணிந்திருந்தார்..

இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது நான் கிண்டலாக " என்ன சார், காட்டுக்குள்ள போறதுக்கு இந்த ஷூ நல்லா ஹெல்ப்பா இருக்குமில்ல" என்றேன்..

முறைமுறை என்று முறைத்தார்..

நான் ஹி ஹி என்று வழிந்து சமாளித்தேன்..

சோதனைகளை மட்டுமே சந்தித்து இந்த பத்திரிக்கை இன்றும் நிலைத்து நிற்கிறது என்றால் அவரது உறுதியான மனம் தான் காரணம் என்பேன்..

said...

Nakeeran is a very cheap book.They create a orinadry issue as a extraorinary issue.It is a third rate method to sell the book.Your comparison shows your color.

said...

//Your comparison shows your color.
//
THANKS....

said...

ஆனாலும் நக்கீரனுக்கு பத்திரிக்கை உலகில் ஒரு பெரிய இடம் மற்றும் பெயர் இல்லை? ஏன்

Which is the largest selling daily in Tamil
Which TV channel has the largest
reach in Tamil Nadu
Which eveninger is the largest selling one in Tamil
Which is the largest selling
weekly in Tamil

How and why is that these are owned and controlled by a single
family.Compared to them Gopal
is a small fry and is no match
for them in money and power
or access to money and power.
There are other reasons too.
Nakeeran's credibility is
low as it very often passes off
rumor as news.Many times it is
not even rumor but a figment
of imagination.
.It had done some excellent
stories on Auto Shankar,
Veerapan etc but there is
more to journalism than
such scoops.Nakeeran lacks
professionalism.In case of Jayendrar's arrest
and aftermath Nakeeran was
behaving like police spokesperson
instead of behaving like a weekly
magazine.Kumudam Reporter and JV
did write about the possible involvement of Jayendrar in the murder of Shankarraman but did not
proceed further on that line.

So Nakeeran cannot be judged soley
on some stories and excellent work
in some issues.

said...

இது போன்ற பத்திரிக்கைகளுக்கு ஆளும் கட்சியிலிருந்தும் எதிர்க் கட்சியிலிருந்தும் அவ்வப்போது கனிவான உபசரிப்புகள் கிடைக்கும். ஆனால் ரவி சுப்பிரமணியின் கட்டுரை வெளியான போது கோபாலுக்கு பல பக்கங்களில் (முக்கியமாக மற்ற பத்திரிக்கையாளர்) இருந்து அந்த தொடரை நிறுத்த அன்பான அழைப்புகள் வந்ததாம். தொடர் வெளியான பிறகு சில உஞ்சவிருத்திகள் இந்த புத்தகத்தை தொட்டாலே பாவம் என்பது போல நடந்து கொண்டதுகள்.

said...

//Nakeeran lacks
professionalism.In case of Jayendrar's arrest
and aftermath Nakeeran was
behaving like police spokesperson
instead of behaving like a weekly
magazine.Kumudam Reporter and JV
did write about the possible involvement of Jayendrar in the murder of Shankarraman but did not
proceed further on that line.
//
முதன்முதலில் நக்கீரனில் தான் திருவாளர் பெரிய சங்கராச்சாரியர் "என் மீது அன்பு வைத்திருக்கும் பக்தர்கள் என்னை அவன்(சங்கரராமன்) கொடுமை படுத்துவது பொறுக்கமுடியாமல் கொன்றிருக்கலாம் " என வாய் திறந்து அருள் வாக்கு சொன்னார்

said...

//At 4:31 PM, luckylook said…

//நான் அப்பீட்டு.//

இதுதானே பு.பி.க்களின் டெக்னிக்....
//

அட.. இப்படி ஒரு முழு நீள வாக்கியத்திலயோ, கட்டுரையிலோ, கதையிலோ ஒரே ஒரு வார்த்தையை மட்டும் எடுத்து ப்லிம் காட்டுறது தானே ப.சீ.க்களின் டெக்னிக்....

said...

சிவபாலன்..வெள்ளை நிறத்தை கறுப்பு தான் அப்படீன்னு அடிச்சு சொல்ல எப்படி வேணும்னாலும் எழுதலாம். அதையும் ஏழெட்டு பேரு ஆமாம் சொல்லலாம்.

புரிஞ்சா சரி.

பத்திரிகை துறையிலே பெரிய இடம் இல்லைன்றதுக்கு நொண்டிச் சாக்கு சொல்றீங்களே. மக்கள் மத்தியில் ப.சீ.க்கள் அதிகம் இருக்கீங்களே. பெரிய இடத்துக்கு வர்ற வேண்டியது தானே. யோசிச்சீங்களா?!

said...

வீரப்பன் விஷயத்தின் இந்தியா டுடே சிவசுப்பிரமணியனின் ஃபோட்டோக்களைத் திருடிப் போட்டுப் பிறகு சந்தி சிரிச்சது மறந்துபோச்சா குவாலிட்டி குவாண்டிட்டி பேசற ஆளுகளுக்கு? பளபள இந்தியா டுடே என்ன குப்பை எழுதினாலும் உண்மையா இருக்கும், நக்கீரன் சாணித்தாளில் வர்றதால் அது என்ன எழுதினாலும் குப்பை அப்படிங்கற மாதிரி பிளேட் பிளேட்டா தயிர்வடை ஜல்லி அடிக்கறதைத்தவிர உருப்படியா ஏதாவது சொல்லுங்கய்யா. ஜூனியர் விகடனில் ஆந்தையார் கழுகார் குருவியார் எழுதறதெல்லாம் ரூமர் இல்லாம பிறகென்ன பூமரா? ஆவி போகாம இருக்கணும்னா ஜூவி அடக்கி வாசிக்கணும்னு அவங்க அளவோட வாசிக்கறாங்க ஒரு அளவோட, குமுதத்தோட ரேஞ்சே வேற - அகில உலகிலிருந்தும் சுருக்கிக் கூசாம சுட்டுப் போடுவாங்க - இதேமாதிரி பிளேட் பிளேட்டா தயிர்வடை குடுத்து எல்லாவனையும் தூங்கவச்சுட்டா ஆட்சி நடத்தறவனும் அரசியல்வாதியும் எவன் டங்குவாரையும் களட்டலாம் பாருங்க. அதுதானே தேவை இங்கே - விகடன்ல கருணாநிதியையோ செயலலிதாவையோ பேட்டி கண்டா முதல் மூணு பக்கத்துக்கு அவங்க கொடுத்த காப்பி, வீட்டு நாய்க்குட்டின்னு, வாக்கிங் போறப்போ கருணாநிதி கட்டற லுங்கின்னு எழுதிட்டு அரைப் பக்கத்துக்கு நீங்க என்ன நினைக்கறேள் இதைப்பத்தின்னு கடைசியா ஒரு ரசமலாயைக் கொடுப்பாங்க - இந்தத் தயிர்வடை கோஷ்டிகள் கருணாநிதியோ ஜெயலலிதாவோ ஊழல் பண்ணினா டான்சி பத்தியோ சுடுகாட்டுக் கூரை பத்தியோ வீராணம் பத்தியோ முதுகெலும்போட எழுதப்போகுதா என்ன - ஒண்ணு எவனாவது ஆங்கிலப் பத்திரிகை போட்டுக் கிழிச்சா உண்டு இல்லை நக்கீரன் நெற்றிக்கண் தராசுன்னு யாராவது எழுதினாத்தான் உண்டு. ஆவி சாவி ஜூவி குமுதம் மாதிரித் தின்னு கொழுத்து திண்டுல சாஞ்சுட்டு என்னத்த கன்னய்யா மாதிரி புலம்பிட்டுக் கிடக்காம தன்னால முடிஞ்சதச் செய்யறாங்களே, அதைப் பாருங்கய்யா முதல்ல. அட்டைப்படத்தையும் நடுப்பக்கத்தையும் லைட்சு ஆன் சுனிலையும் தாண்டி வரச் சோம்பல் முறிக்கறவங்க உடற சவுண்டப் பாருங்கய்யா இங்க.

நக்கீரன் செய்யறது எல்லாமே சரின்னு இல்லைன்னாலும், வீரப்பன், ஜெயேந்திரர்னு ஸ்கூப் கொடுத்துட்டுதான் இருக்காங்க தமிழ்நாட்டு அளவுல. வாராவாரம் ஸ்கூப் வேணும்னா வாராவாரம் குண்டுவெடிப்போ கொலையோ தேர்தலோ நடந்தாத்தான் ஆச்சு.

said...

அட, இந்தியா டுடே சிவசுப்புரமணியோடத திருடி போட்டுச்சா. அது சரி. ப்ரிலான்ஸரா சுத்திகிட்டு வீரப்பன் கூப்பிட்டு பேட்டி கொடுத்தவுடனே அதை எடுத்துகிட்டு வந்து ஜூ.வி., இந்தியா டுடே, நக்கீரன்னு போய் பெரும் தொகைக்கு பேரம் பேசிகிட்டு ஒரே நேரத்தில இந்தியா டுடே, நக்கீரன் ரெண்டுத்தலயும் வித்து காசாக்கின ஆளு சிவசுப்புணி. மேட்டர் வெளியானவுடனே ஐயையோ அசிங்கம்னு இ.டு. ஒதுங்கிடுச்சு. அப்படி நீங்க சொல்ற மாதிரி சிவசுப்புணிகிட்ட திருடியிருந்தா கேஸ் போட்டிருக்கலாமே. ஏன் போடலை?

மாயவரத்தான் கேட்ட மாதிரி, மக்கள் ஏன் வரவேற்பு தரலை? அதுக்கு பதில் சொல்லுங்கப்பா.

said...

நக்கீரன் கோபால் வன்னியனோ.. இவ்ளோ சப்போர்ட் பண்றீங்க... வீரப்பன் கூட வன்னியரில்ல.. ஓ அதனாலதான் வீரப்பன் நக்கீரன் கோபாலுக்கு எக்ஸ்குலூசிவ் இன்டர்வியூ கொடுத்தாரில்லை...

சிவபாலன்.. கொஞ்சம் யோசிச்சு எழுதுங்கோ.. ஆனா ஊனா பு.பி னு உளராதீங்கோ...பத்திரிக்கை பிரபலமாவதுனா... மக்களிடம் பிரபலமாவது.. பத்திரிக்கை துறையில் இல்லை.. முடிஞ்சா நக்கீரன் சர்குலேஷன் எவ்வள்வுனு கண்டுபிடிச்சி போடுங்கோ..

மக்களிடம் அந்த பத்திரிக்கைக்கு எவ்வளவு மரியாதை இருக்குனு பார்த்துடுவோம்.. உடனே மக்களை பு.பி நக்கீரனை வாங்க விடாமா வசியம் பண்ணிட்டோங்கோ னு புலம்பாதீங்கோ...

said...

//நக்கீரன் கோபால் வன்னியனோ.. இவ்ளோ சப்போர்ட் பண்றீங்க...//

அனானி ராஜா, அடுப்புல வெந்த கூஜா - நக்கீரன் கோபால் தேவர் ராசா - முகத்தைப் போய் கண்ணாடில பாத்துக்கோ. உங்க புத்தியைத் திருத்த முடியுமா எவனாலயும்?