திமுக அரசின் கரும்புள்ளி

தன் வினை தன்னை சுடும் என்று தினமலர் எழுதியதைப் போலவோ அல்லது 2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்ததே என்றெல்லாம் 'சோ'த்தனமான உத்திகள் எதுவும் இல்லாமல் நேரடியாக நேற்று சென்னை மாநகராட்சி தேர்தலில் நடந்த வெறியாட்டங்களுக்கு என் கண்டனங்களை தெரிவிக்கின்றேன்.

2001 சென்னை மாநகராட்சி தேர்தலில் ஜெயலலிதா ஆட்சி வெறியாட்டங்கள் செய்ததென்பதற்காக கருணாநிதி ஆட்சியும் அதையே செய்வதை எப்படியும் நியாயப்படுத்த இயலாது, நான் உட்பட பலரும் கருணாநிதியை கருத்தளவில் ஆதரிப்பது இது மாதிரியான வெறியாட்டங்கள் நடைபெறக் கூடாது என்பதுவும் ஒரு காரணம், கருணாநிதி ஆட்சியிலும் இப்படியே நடந்தால் வேதனை தான் மிஞ்சும்.

அதிமுகவினர் தான் வன்முறையை தூண்டினார்கள் என்று கருணாநிதி சொன்னாலும் அரசும், காவல்துறையும் தான் அந்த வன்முறைகளை தடுத்தி நிறுத்தியிருக்க வேண்டும், எனவே இதற்கு இந்த அரசு பொறுப்பேற்க வேண்டும்.

கூட்டணி அரசென்பது அதிகாரத்தை பகிர்ந்து கொள்வது மட்டுமல்ல, அரசு தவறிழைக்கும் போது தட்டிக்கேட்கவும் தான், தமிழகத்தில் அரசை தாங்கும் கூட்டணி கட்சிகள் இதையும் தட்டி கேட்கவேண்டும்.

ஒரு அரசு யாரையேனும் நசுக்கும்போது நசுக்கப்படுபவர்கள் நமக்கு பிடிக்காதவர்கள் என்பதற்காக ஆதரித்தால் நாளை வேறு அரசோ அல்லது அதே அரசோ நம்மையும் நசுக்கும் போது அந்த நசுக்கலைப் பற்றி பேச எந்த அருகதையும் நமக்கு இல்லாமல் போய்விடும்.

ஒவ்வொரு முறை அரசு அதிகாரம் கையில் இருப்பதை வைத்து புதிது புதிதாக அடக்குமுறைகள் கொண்டு எதிர்கட்சியினரை அடக்கினால் அதுவே மீண்டும் கூடுதலாக வந்து சேரும், எதிர்காலத்தில் அதிமுக ஆட்சியில் இது போல் நடந்தால் திமுகவினருக்கு அதை எதிர்க்கும் தார்மீக உரிமை இருக்காது.

47 பின்னூட்டங்கள்:

said...

ஷபாஷ்! உங்களை பாராட்டுகிறேன். நேற்று நடந்து ஏறிய அராஜத்தை கண்முன்னே பார்த்தேன். தவறுகள் எங்கிறுந்தலும் தட்டி கேட்பது நல்ல விசயம்.

நீங்களும் லக்கிலுக் மாதிரி இப்போ (தான்) வலிக்குதா?! என்று எழுதுவீர்கள் என்று நினைத்தேன்! இந்த விசயத்தில் நடுநிலையாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்.

said...

நேர்மையான உங்கள் பதிவிற்கு எனது பாராட்டுகள் திரு. குழலி.

இது போல அனைத்து வலைப் பதிவரும் ஒன்று சேர்ந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவிக்க வேண்டும், தமிழர் மானம் கருதி!

நன்றி.

said...

//நடுநிலையாக எழுதியதற்கு வாழ்த்துக்கள்.
//
ஜெய் நான் எப்போதுமே நடுநிலைதான் :-)

//நேர்மையான உங்கள் பதிவிற்கு எனது பாராட்டுகள் திரு. குழலி.
//
எஸ்.கே. நான் எப்போதுமே என் மனதிற்கு நேர்மையாக பட்டதையே எழுதுகிறேன்.

நன்றி

said...

குழலி உங்களின் கண்டனங்களில் உள்ள உண்மையை ஏற்றுக்கொள்கிறேன். ஆதரிக்கிறேன், அதே வேளை தமிழ்நாட்டில் எங்குமே பெரிதாக தேர்தல் கலவரங்கள் ஏற்படாத போது சென்னை திமுக'வில் மட்டுமே குண்டர்கள் இருப்பதாக ஏற்படுத்தப்பட்ட தோற்றம் இது என்பதுதான் உண்மை. அது ஏன் சென்னையில் மட்டும் இப்படியான கலவரங்கள் ஏற்படுகிறது என்று சிந்திக்கவேண்டும். அதே வேளை காவல்துறையை தோழனாக திமுக'வினர் கருதுவார்களானால் அது மூடத்தனமாகவே அமையும். அவர்களின் எஜமான விசுவாசம் ஜெ'விடம் தான் அதிகம்.

உங்களுடன் 500 மைல் பயணித்த ஒரு இயக்கத்தோழர் உங்களின் கண்முன்னால் கூலிப்படையால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்படுவதையோ ( சென்னை கண்டனப்பேரணி - திண்டுக்கல் அந்தோணி ) உங்களை நோக்கி வீசப்பட்ட கண்ணீர்புகை குண்டு உங்கள் நெஞ்சில் விழுந்து வெடித்து 3 மாதம் காயம் ஆறாமல் அவதிப்பட்டிருந்தாலோ, ஜனநாயக கடமையாற்றும் பூத் ஏஜென்டுகளை குண்டாந்தடியால் மண்டை பிளக்கப்படுவதை கண்ணால் பார்த்திருந்தீர்களானால்,

குழலி, வெட்கத்துடன் சொல்கிறேன் நேற்று முழுவதும் ஜெயா டிவீ சேனலை மாற்றாமல் ஒருவித மனநோயாளிபோல் நாள் முழுவதும் மனநிறைவுடன் பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

said...

//அது ஏன் சென்னையில் மட்டும் இப்படியான கலவரங்கள் ஏற்படுகிறது என்று சிந்திக்கவேண்டும்.//
சென்னை மாநகராட்சி எதிர்கட்சியிடம் செல்வது என்பது ஆளும் அரசுக்கு கடும் உறுத்தலாகவே அமையும், கௌரவபிரச்சினை என்பதை விட எதிர்கட்சி தலை நகரின் மாநகராட்சியில் அமர்வது ஆளும் அரசுக்கு நிர்வாகரீதியிலும் கடும் தலைவலியாகவே அமையும், அதனாலேயே சென்ற முறை அதிமுக அரசு சென்னை மாநகராட்சியை கைப்பற்ற கடும் முயற்சி செய்தது.

//உங்களுடன் 500 மைல் பயணித்த ஒரு இயக்கத்தோழர் உங்களின் கண்முன்னால் கூலிப்படையால் ஓட ஓட விரட்டி வெட்டி கொல்லப்படுவதையோ ( சென்னை கண்டனப்பேரணி - திண்டுக்கல் அந்தோணி ) உங்களை நோக்கி வீசப்பட்ட கண்ணீர்புகை குண்டு உங்கள் நெஞ்சில் விழுந்து வெடித்து 3 மாதம் காயம் ஆறாமல் அவதிப்பட்டிருந்தாலோ, ஜனநாயக கடமையாற்றும் பூத் ஏஜென்டுகளை குண்டாந்தடியால் மண்டை பிளக்கப்படுவதை கண்ணால் பார்த்திருந்தீர்களானால்,
//
கண்டிப்பாக செந்தில் அதையெல்லாம் தாங்கமுடியாது தான், அதை செய்து முடித்த 'அயோத்திக்குப்பம்' வீரமணியை பயன்படுத்திக்கொண்ட அதே அதிமுக அரசு அவர்களுக்கு எதிராக சென்றவுடன் சுட்டு தள்ளியது, என்ன கொடுமையென்றால் இன்றும் அதிமுக அரசு தான் ரவுடிகளை சுட்டு தள்ளும் என்கிறார்கள் பலர், அதில் ஒரு திருத்தம் அவர்களுக்கு பிடிக்காத ரவுடிகளை மட்டும் சுட்டு தள்ளுவார்கள்.

//நேற்று முழுவதும் ஜெயா டிவீ சேனலை மாற்றாமல் ஒருவித மனநோயாளிபோல் நாள் முழுவதும் மனநிறைவுடன் பார்த்துக்கொண்டிருந்த என்னைப்போல் நீங்களும் இருந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
//
2001ல் அந்த செய்திகளை கேட்டபோதும் பார்த்த போதும் வந்த கோபம்,எரிச்சல், உணர்ச்சிவசப்பட்டது எதுவும் இப்போது இல்லை என்பது உண்மை தான், காரணம் பதிலுக்கு பதில் என்பது போன்றதே என்றாலும் இது மாதிரியான செயல்கள் ஜெயலலிதா அரசின் அடாவடி நடவடிக்கைகளுக்கு கண்டிப்பாக மாற்று அல்ல, இதை என் நிலையில் இருந்து சொல்வது எளிது, உங்கள் நிலையில் இருந்து சொல்வது கடினம் தான்.

நன்றி

said...

குழலி அவர்களே, உங்களிடம் இந்த பதிவினை எதிர்பார்க்கவில்லை. இந்த நடுநிலையில் மிக்க மகிழ்ச்சி....

said...

அது மட்டும் அல்ல குழலி, சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சுமார் 7 இடங்களை கைப்பற்றியது. கண்க்குப்போட்டு பார்த்தால், ஒரு வேளை அதிமுக மேயர் பதிவியை பிடித்தாலும் பிடித்துவிடும் என்ற பயம். மேலும் சென்னை ஒரு தி.மு.க கோட்டை என்று இவ்வளவு ஆண்டுகள் ஓட்டிவிட்டு இப்பொழுது அவர்கள் கட்ந்ததேர்தலில் கோட்டைவிட்ட வெறுப்பு தான் நேன்றைய வெறியாட்டம் என்று தோன்றுகிறது.

//அது ஏன் சென்னையில் மட்டும் இப்படியான கலவரங்கள் ஏற்படுகிறது என்று சிந்திக்கவேண்டும்.//

இங்க தாங்க கராத்தே தியாகராஜன் இருக்காரு!! எல்லாம் நம்ம தலையெழுத்து. ரவுடிகளுக்கு கிடைக்கும் மரியாதை மக்களுக்கு கிடைப்பதில்லை.

said...

//சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி சுமார் 7 இடங்களை கைப்பற்றியது.
//
ஜெய் திமுகவும் 7 இடங்களை கைப்பற்றியது, ஆனால் கடந்த சில மாதங்களாக இருந்த திமுக அரசின் மீதான நன்மதிப்பு, ஆளுங்கட்சியோடு ஒத்து போகிற மாநகராட்சி வேண்டுமென்ற பலரின் எண்ணம், என பல விசயங்கள் திமுக முண்ணனியில் தான் இருந்திருக்க வேண்டும், ஆனாலும் ஏன் இப்படி? மேலே செந்தில் சொன்னது போன்ற ஒரு பழிதீர்ப்பா?

said...

//இந்த நடுநிலையில் மிக்க மகிழ்ச்சி....
//
ஹி ஹி நானெப்பவும் நடுநிலை தான் ஆனால் திமுகவை திட்டுவதற்கு பெயர் தான் நடுநிலை என்றால் அது எனக்கு வேண்டாம்.

said...

குழலி,
நேற்று நடந்த வன்முறை 2001ல் நடந்ததற்கு தி.மு.க. வின் பதிலடி. கருணாநிதிக்கும், போலீசிற்கும் இதுபோன்று நடக்கும் என்பது முன்கூட்டியே தெரிந்திருக்கக்கூடிய சாத்தியகூறுகள் அதிகம். ஆயினும் இதைத் தடுக்க விழையாதது, கருணாநிதியும் ஜெயலலிதா பாணி அரசியலை பின்பற்றுகிறாரோ என தோன்றுகிறது (கருணாநிதி ஒன்றும் காந்தியல்ல என்றாலும்).

என்னுடய அலுவலகம், அதிமுக தலமையகம் அருகில் இருப்பதால் அப்பகுதியை ஒரு சுற்று சுற்றிவந்தேன். நிறைய ரவுடிகள் அதிமுக அலுவலகத்தில் இருக்கக்கண்டேன். மேலும் பலர், பெரும்பாலும் பெண்கள் கும்பல் கும்பலாக, தங்களை போலீசார் ஓட்டுப்போடவிடாமல் தடுத்துவிட்டதாக அங்கங்கே மறியலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். எல்லாம் கள்ள ஓட்டுப்போட வந்த ஆட்கள் மாதிரித் தான் இருந்தனர். என்னுடய காமிராவை எடுத்துபோயிருந்தால் எல்லாவற்றையும் படமெடுத்திருந்திருக்கலாம். இதைச் சொல்வது அதிமுகவினர் கள்ள ஓட்டு போட்டனர் என்பதற்காக அல்ல. மாறாக இருதரப்பினரும் கள்ளவோட்டு போட்டனர். ஆட்சியதிகாரம் திமுவின் கையிலிருந்ததால் பெரும்பாலும் அதிமுகவினர் அடிவாங்கினர். 2001ல் திமுகவினர் அடிவாங்கியதைபோன்றே.

சென்னையில் மட்டும் அதிகளவில் கலவரம் நடந்ததற்கு இரண்டு காரணங்கள். ஒன்று, சட்டமன்றத்தேர்தலில் இழந்த சென்னையக் கைப்பற்றவேண்டும் என்ற ஆளுங்கட்சியினரின் வெறி. இரண்டாவது, சென்னையில் அரசியல் ரவுடிகளின் அட்டகாசம் அதிகமாகிக்கொண்டே வருகிறது. அதிக ரவுடிகள் அ.இ.அ.தி.மு.கவிலேயே இருப்பதாக அறிகிறேன். ஆதிராஜாராம், பாலகங்கா, சேகர்பாபு, கலைராஜன், வளர்மதி, வெற்றிவேல் மற்றும் மதுசூதனன். அதுபோன்றே, திமுகவில் புரசை ரங்கநாதன் (ஒரு காலத்தில் ப. சிதம்பரத்தின் வலது கை), காங்கிரசில் கராத்தே தியாகராஜன், ராயபுரம் மனோ என எல்லா பெரியகட்சிகளிலும் ரவுடிகள் அதிகம் உள்ளனர்.

said...

Mr.Neutral do you have anything to say on the election to parliament in 1999 from chidambaram constituency.Ravi Kumar has written about that.Dalits were
prevented from voting.No prizes for guessing who prevented them.

said...

திமுகவின் இந்த அராஜகம் கண்டிக்கத்தக்கதே.

அதே வேளையில் இவ்வளவு வன்முறை நடந்ததற்கு அதிமுகவும் காரணம் என்பதை "மட்டையடிப்பவர்கள்" மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை....

வி.பி. கலைராஜனும், சேகர்பாபுவும் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் ரெண்டு பேரும் அப்பாவிகள்... வன்முறை ஏதும் தூண்டவில்லை என்று "மட்டையடிப்பவர்கள்" நினைக்கிறார்களா?

131வது வட்டத்தில் அதிமுகவின் பாஸ்கர் என்ற அதிமுக வேட்பாளர் அங்கிருந்த பா.ம.க. வேட்பாளரை இழுத்து தள்ளி மிதித்ததை என் நண்பன் பார்த்திருக்கிறான்.

அதிமுக வன்முறை கட்சி வன்முறையைத் தூண்டி விடுகிறார்கள் என்பதால் திமுகவும் அதே பாணியை கடைப்பிடித்தது துரதிருஷ்டவசமானது.

அம்மா ஆரம்பித்த கலாச்சாரம் இன்று அம்மாவையே அட்டாக் செய்கிறது. இடையில் மாட்டிக் கொண்டவர் விஜயகாந்த் தான் பாவம்.....

said...

//அதே வேளையில் இவ்வளவு வன்முறை நடந்ததற்கு அதிமுகவும் காரணம் என்பதை "மட்டையடிப்பவர்கள்" மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை....
//
நல்ல கேள்விதான்...

said...

//நீங்களும் லக்கிலுக் மாதிரி இப்போ (தான்) வலிக்குதா?! என்று எழுதுவீர்கள் என்று நினைத்தேன்! //

ஜெய்சங்கர் இலவச விளம்பரத்திற்கு நன்றி!

said...

//அம்மா ஆரம்பித்த கலாச்சாரம் இன்று அம்மாவையே அட்டாக் செய்கிறது. //

சுய சிந்தனை உள்ளவர்கள் இந்த முதல் வரியை நம்ப மாட்டார்கள்.

நான் நம்பவில்லை.... நீங்கள்.....

said...

//அதே வேளையில் இவ்வளவு வன்முறை நடந்ததற்கு அதிமுகவும் காரணம் என்பதை "மட்டையடிப்பவர்கள்" மறந்துபோனது ஏன் என்று தெரியவில்லை....
//

ஒப்பு கொள்கிறேன் அதிமுகவும் காரணம் ஆனால் அரசு என்ற எந்திரம் அதை கட்டுப்படுத்த தவறியதையும், ரவுடிகளை வைத்து டாடா சுமோகளில் வளைத்து கள்ள ஓட்டுகளை போட்ட கராத்தே தியாகராஜன் ஏன் கைது ஆகவில்லை! கலவரமே நடக்கவில்லை என்று முதல்வர் சொல்வது சரியா? அவர்கள் 2001ல் செய்தார்கள், ஆதலால் இப்போ நாங்க ஆட்சியில், நாங்களும் இதைத்தான் செய்வோம் என்று சொல்வது சரியா?? இதற்கு பெயர் தான் மாற்றமா?? அதையே திமுகவும் செய்யும் என்றால் எதற்காக இவ்விருகட்சிகளும். மக்களை முட்டாள்களாகி விளையாடும் அரசியல் கட்சிகள் இந்தியாவில் மட்டும் தான் அதிகம்.

said...

//அம்மா ஆரம்பித்த கலாச்சாரம் இன்று அம்மாவையே அட்டாக் செய்கிறது. //

நல்ல செலக்டிவ் அம்னிஷியா.....ஹாஹாஹா...

எம்ஜியார் காலத்தில் திமுகவினரின் இந்த எலக்ஷன் கலவரங்களை தாங்கள் மறந்தாலும் நாங்கள் மறக்கவில்லை. அன்று உடன்பிறப்புக்கள் ஆரம்பித்தை ரத்ததின் ரத்தங்கள் தொடர்ந்தனர்....

இது உழலுக்கும் பொருந்தும்...தமிழகத்தில் உழல் உருவானது தமிழினதலைவர் காலத்தில், பின் வந்த அம்மா திமுக சரளமாக செய்து மாட்டிக்கொண்டது...ஏனென்றால் பாம்பின் கால் பாம்பு அறியும்....ஆகவே திமுகவினால் ஈஸியாக அதிமுகவை மாட்டவைக்க முடிந்தது.

said...

பா.ம.க. கிக்கரை அழுத்த ஆரம்பித்து விட்டது(ம்) குழலியின் இந்தப் பதிவுக்கு ஒரு காரணம்.

தி.மு.க. என்னவோ சாத்வீகமான கட்சி என்பது போன்ற தோற்றத்தை உருவாக்க நினைக்கும் குழலி, லக்கிலுக் போன்றவர்களை நினைத்தால் சிரிப்பு தான் வருகிறது.

2001-ல் நடந்ததற்கு இது பதிலடி என்றால் அதற்கு முன் அறுபதுகளிலிருந்து தி.மு.க. செய்யும் அட்டூழியத்திற்கு பதிலடி?!

இது போன்ற சம்பவங்களில் தங்களுக்குப் பிடித்த கட்சி செயல்முறை சரியென்று கொடிபிடிப்பவர்களுக்கு வேறு எந்தப் பிரச்னையிலும் - குறிப்பாக இட ஒதுக்கீடு பிரச்னைகள் உட்பட - அடுத்தவரை குறை கூறவோ, பதிலிடவோ அறுகதையே கிடையாது.

said...

குழலி!

நல்ல பதிவு.

லக்கி!
என்னவோ அ.தி.மு.க.வில் மட்டும் தான் ரவுடிகள் இருக்கின்றார்கள் என்று சப்பை கட்டு எல்லாம் கட்ட வேண்டாம். அதில் இருப்பவர்களுக்கு இரண்டு கட்சியும் ஒன்று தானே. ஒரு தடவை இங்கன இருப்பாங்க, அடுத்த தடவை அங்கன இருப்பாங்க. இரண்டும் ஒரு குட்டையில் உறிய மட்டைகள் தான்.

அவன் போன தடவை தப்பு செய்தான், அதனால் இந்த தடவை அதிகமாக தவறு செய்வேன் என்று சொல்வதால் முடிவு கிடைத்து விடாது. அடுத்த தடவை இதை விட மோசமாக அவர்கள் செய்ய போகின்றார்கள் என்பதை தான் காட்டுகின்றது. என்று தான் திருந்துவார்களோ நம் கழக கண்மணிகள்.

said...

Dear 'Kuzhali'

You too no need to write this beyond.

This type of activities were started by JJ on here 2001 local bodies election, 2002 saidapet assembley by election and all chennai corporation by election. so nothing new for channai vashi's.

There is no place of dicipline in JJ politics. If DMK repeat that so called 'different from JJ' they are really fools.

'nirvana' ooril 'koovanam' kattinavan muttaalll.

said...

//என்று தான் திருந்துவார்களோ நம் கழக கண்மணிகள்.//

கழகங்கள் செய்யும் அரசியல் வியாபாரம் லாபகரமாய் இருக்கும் வரை கழகக் கண்மணிகள் கலாசாரம் இப்படித் தான் இருக்கும்..

இவங்க தந்தை சொல்லி கொடுத்த பாடம் அல்லவா? உணர்வுடன்
கலந்து விட்டது அவர்கள் கற்ற பாடம்.
அதை பகுத்தறிவுன்னு சொல்லிக்கொண்டு திரிவாங்க இவங்க.

பாலா

said...

//இவங்க தந்தை சொல்லி கொடுத்த பாடம் அல்லவா? உணர்வுடன்
கலந்து விட்டது அவர்கள் கற்ற பாடம்.
அதை பகுத்தறிவுன்னு சொல்லிக்கொண்டு திரிவாங்க இவங்க.
//
பாலா நிஜமாவே நீங்க பாவம்ங்க... எதை எங்கே கொண்டு வந்து சேர்க்கின்றீர் பாருங்க, உங்களை பார்த்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு

said...
This comment has been removed by a blog administrator.
said...

நல்ல பதிவு குழலி.

அவன் செஞ்சான் ,இவன் செஞ்சான், அவன் தான் ஆரம்பிஞ்சான், இவன்தான் ஆரம்பிச்சானு குழந்தைகள் சண்டைகளில் விரல் காட்டுவது போல் காட்டிக் கொண்டு இதுதான் நம் இத்தனை வருடங்களில் அடைந்த அறிவு முதிர்ச்சியாய் இருப்பது எந்த பிரச்சனையையும் தீர்க்காது.

இன்றைய தேதிகளில் தேர்தல் ஒழுங்காக நடத்துதல் அரசின் கடமை. போலிஸ் துறையை கையில் வைத்திருக்கும் அரசு அவர்களை கழக உறுப்பினர்கள் போல் பயன்படுத்தாமல் நல்ல முறையில் பயன் படுத்தி காவல் துறைக்கும் அவர்களுக்கும் பெருமை சேர்க்கும் வகையில் தேர்தல் நடத்தியிருக்கலாம்.

இது அரசின் கையாலாகத்தனத்தைதான் , நிர்வாக மேலாண்மை பற்றாக்குறையையும் தான் காட்டுகிறது.

நல்ல வேளை தமிழகம் முழுதும் இந்த வியாதி பரவவில்லை

said...

நேற்று தமிழகத்தில் ஏராளமான இடங்களில் தேர்தல் நடந்தது. சென்னையில் மட்டுமே வன்முறை. சென்னையில் எத்தனை பூத்களில் வன்முறை என்பதும் தெரியவில்லை. ஆனால் எதோ முழு தேர்தலும் வன்முறையின் இடையே நடந்து இருக்கிறது என்ற சாயத்தை பூச பார்ப்பன ஊடகங்கள் வழுக்கம் போல எழுந்துள்ளன. அதில் முக்கியமானது தினமலம். அது வெளியிட்டுள்ள படங்களை பாருங்கள். யாரோ ஒரு ரவுடி கட்டையை ஓங்கி அடிகின்றான். கீழே திமுககாரன் என்று எழுதியுள்ளனர். அந்த ரவுடி இவரிடம் வந்து தான் ஒரு திமுககாரன் என்று சொல்லிவிட்டா அடிக்க ஆரம்பித்தான். உடனே ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற குரல் எழுந்துள்ளதையும் கவனியுங்கள்.

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் வன்முறை என்பது எப்போதும் நடை பெறுவதுதான். முக்கியமாக திமுக அதிமுக இடையே அடிக்கடி நடைபெறும். ஆட்சி யார் கையில் இருக்கிறதோ அவர் கை ஓங்கியிருப்பது வழக்கமான ஒன்றே. அதுதான் இப்போது நடந்து இருக்கிறது.

வன்முறை நடுநிலையாளர்கள் மத்தியில் தி.மு.க விற்கு சரிவையே ஏற்படுத்தும்.

said...

//பாலா நிஜமாவே நீங்க பாவம்ங்க... எதை எங்கே கொண்டு வந்து சேர்க்கின்றீர் பாருங்க, உங்களை பார்த்தா எனக்கு ரொம்ப பாவமா இருக்கு//

குழலி அய்யா,

நான் மட்டும் என்ன, தமிழ் நாடே இந்த பகுத்தறிவு கும்பல் கிட்ட சிக்கி படாத பாடு படுவதால்,பாவம் தான்.

ஆமா, இந்த கட் அவுட் வைக்கிறது,போஸ்டர் ஒட்டுகிறது,விழா எடுக்கிறது,தாங்களே தங்களூக்கு பட்டம் கொடுத்து மகிழ்தல்,மரம் வெட்றது,convoy of cars பந்தா,ஊரெல்லாம் சிலை வைக்கிறது, சினிமாவுக்கு வரி விலக்கு/funding இத்யாதி இத்யாதி இதெல்லாம் பகுத்தறிவோட இந்த கும்பல் செய்யும்;ஆனா இந்த வன்முறை மட்டும் பகுத்தறிவு இல்லாத வேற ஒரு கும்பல் செய்யும்.
இதைச் சொன்னா, சொல்றவங்க மேலே உங்களுக்கு பாவம் வரும்..

பாலா

said...

என்ன செய்ய பாலா இந்த கும்பலை விட்டாலும் வேறு வழியில்லை, இவர்களை விட்டால் அந்த இடத்துக்கு வருபவர்கள் பசுவின் தோலை உரித்தால் மனிதத்தோலை உரிப்பார்கள், அப்புறம் தலையிலிருந்து பிறந்தது, காலிலிருந்து பிறந்தது கதை வரும், மனிதர்களில் சிலர் உயர்வாகவும் சிலர் தாழ்வாகவும் பிறப்படிப்படையில் பிரிப்பது சரியென்று வாதிடப்படும், மூளை சிலருக்கு மட்டும் பிறப்படிப்படையில் இருப்பதாகவும் மற்றவர்களுக்கு மூளைக்கு பதில் களிமண் இருப்பது போலவும் ஆகும், தமிழ்தவிக்கும், இவர்கள் இருக்கும்போதே சிதம்பரத்தில் தமிழ் படும் பாடு தெரிகிறது, இவர்களும் கூட இல்லையென்றால் என்னாவது?

said...

//குழலி அய்யா,//
அய்யய்யோ என்னங்க இது, எனக்கு வயசு 29 தான், இன்னும் அய்யா ஆகும் வயசெல்லாம் ஆகலைங்க.

said...

அருண்மொழி ,

தினமலர் ஒரு பக்கம் சாய்ந்தால், தினகரன் மறுபக்கம் சாய்கிறது.

நடுநிலமை என்றைக்கோ இவர்கள் அட்டகாசம் தாங்காமல் ஒடி போய் விட்டது என்று நினைக்கிறேன்.

இவர்கள் சாய்வு நிலையின் பயன் என்னவென்றால் ஓருவரது வீர விளையாட்டுகளை மற்றவர் முழுவதும் காட்டுகிறார். நமக்கும் அதை பார்க்கும் பாக்கியம் கிடைக்கிறது.

சன் டிவி ஒரு பக்கம் காட்டினால், ஜெ டிவி மறுபக்கம் காட்டுகிறது.

இரண்டையும் இணைத்து பார்த்தால் கழகங்களின் அரிப்புக்கு அரசின் வரிப்பணம்தான் சீப்பாகிறது.

இங்கு பிரச்சனை தினமலர் என்ன எழுதியது, தினகரன் என்ன எழுதியது என்பதில்லை.

சனநாயகத்தின் அடிப்படை தேர்தல். அதன் அர்த்தம் சிலரின் வன்முறை செயல்களால் மாற்றி எழுதப்படுகின்றது.
அதைதான் கண்டிக்க வேண்டும்.


இந்திய குடிமகனின் உரிமை ஒட்டுப்போடுவது. கழகங்கள் எதை எதையோ கண்ணில் காட்டி அடிப்படை உரிமையை பறித்து போகிறார்கள்.

பாட்டி வடை சுட்ட கதையின் காகங்களாய் இருக்கிறோம். கதை எத்தனை முறை சொல்லப்பட்டாலும் , எவர் சொன்னாலும் காகம் ஏமாந்துதான் போகிறது.

said...

குழலி அய்யா,
//என்ன செய்ய பாலா இந்த கும்பலை விட்டாலும் வேறு வழியில்லை, இவர்களை விட்டால் அந்த இடத்துக்கு வருபவர்கள் பசுவின் தோலை உரித்தால் மனிதத்தோலை உரிப்பார்கள், அப்புறம் தலையிலிருந்து //

இந்த கும்பலுக்கு முன்னாடியிருந்த காமராஜர்,கக்கன் போன்றவர்களையா நீங்க இப்படி சொல்றீங்க..
உண்மையாகவே பகுத்தறிவு பாசறையிலிருந்து சீறிப் புறப்பட்டவர்தான் நீங்கள்..

பாலா

said...

//இந்த கும்பலுக்கு முன்னாடியிருந்த காமராஜர்,கக்கன் போன்றவர்களையா நீங்க இப்படி சொல்றீங்க..
உண்மையாகவே பகுத்தறிவு பாசறையிலிருந்து சீறிப் புறப்பட்டவர்தான் நீங்கள்..
//
சரி பாலா இன்றைய தேதியில் சொல்லுங்கள் யாரை ஆதரிப்பது, நீங்கள் அடையாளம் காட்டுங்கள் காமராஜ் மாதிரி கக்கன் மாதிரி (விஜயகாந்த்துன்னு மட்டும் சொல்லிடாதிங்க :-) ), நாங்கள் அவர்கள் பின்னால் வருகிறோம், பிரச்சினையென்னவென்றால் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் அதற்கான மாற்று அரசியலை பற்றி கேட்கும் போது கள்ள மௌனம் சாதிக்கின்றனர், ஏற்கனவே இப்படியான ஒரு மாற்று ஆளை அடையாளம் காட்ட சொன்னே திரு.முத்துகுமரன் புராணம் அவர்களிடம் ஆனால் அவரிடமிருந்து பதிலில்லை.

said...

To counter JJ 'style' DMK should do 'Azhagiri' style. not 'Stalin / MK' style.

ADMK supremo understand only such type of answer.

Don't create a 'PUNITHA PASU' image to DMK and dilute it like congress.

This is JJ era. we should counter her like this way only. Then only media and common man will appreciate all courages decisions / actions.(PODA arrestes, MK arrest, JJ ruling time elections, Gunga cases, acid to IAS officers,Govt. staff arrests, encounters, ????????????)

Realy like Mr. Senthil said we (DMK symp) are so egerly looking these days.

said...

mr.Neutral you are yet to answer to my post.PMK prevented dalits from voting in 1999.Are you willing
to condemn PMK for that.

said...

//களிமண் இருப்பது போலவும் ஆகும், தமிழ்தவிக்கும், இவர்கள் இருக்கும்போதே சிதம்பரத்தில் தமிழ் படும் பாடு தெரிகிறது, இவர்களும் கூட இல்லையென்றால் என்னாவது? //
குழலி சிதம்பரத்தில் சிவ அடியார்கள் பட்ட பாட்டை அல்லது தமிழ் பட்ட பாட்டை நீங்க எழுதுங்க ஐயா. ஐயா என்று நான் சொன்னது நம்ம sir என்ற நட்பில் சொன்னது.
நன்றி பாலாஜி.

said...

//சரி பாலா இன்றைய தேதியில் சொல்லுங்கள் யாரை ஆதரிப்பது, நீங்கள் அடையாளம் காட்டுங்கள் காமராஜ் மாதிரி கக்கன் மாதிரி (விஜயகாந்த்துன்னு மட்டும் சொல்லிடாதிங்க :-) ), நாங்கள் அவர்கள் பின்னால் வருகிறோம், பிரச்சினையென்னவென்றால் திராவிட கட்சிகளை கடுமையாக விமர்சிப்பவர்கள் அதற்கான மாற்று அரசியலை பற்றி கேட்கும் போது கள்ள மௌனம் சாதிக்கின்றனர்//

Dear Kuzhali,

Firstly let me apologisae for responding in English; I do not have access to ekalappai in this system.

You are right to the extent that the leadership in Congess is pathetic and no where in the league of Kamaraajar and Kakkan.

But for a quality leadership to emerge in due course in TN educated people such as yourself will have to recognize/accept that:
1) TN made a huge blunder in getting mesmerized by the Dravidian/Aryan Divide slogans/pill/spin created by johnnies like Periyaar,Anna,karunanidhi;accept that these slogans, are what indeed they are, viz, pills, unworthy of consumption;
accept that it was a mistake for the people of TN to have rejected leaders like Kamaraj for the sake of cutlets whose only claim to fame was writing flilmy script for mostly third rate films.
2)Do not continue to blindly support this flourishing politico-business models (flourishing for Karunanaidhi or JJ or Dr Ayya).
3)It is ironical that you should talk about fraudulent silence(Kalla Mounam) when there is complete silence when Karunanidhi calls himself Kalaignar,gives himself a Doctorate, calls himself a Paguththarivu vaathi and erects statue for Kannagi,and worse reerects it after after another fraud had removed it,et all.
4)Still one sees educated people like you mouthing patently ridiculous things like Paarpana Aathikka Sakthikal when these are non existent ..All the busineesses/government posts/private educational insttitions are in the hands of people who fraudulently describe themselves as OBCs and continue to usurp seats in educational institutions and jobs which legitimately should go to dalits and rural poor from other castes
6)Accept that Dr Ayya practises Caste politics and he doesn't have the over all interests of TN and Tamils.
7) In the name of Dravidian/Aryan divide do not support Islamic fundamentalism by refusing to accept that there is an issue like that.
8)I cannot comment on Vijay Kanth in terms of leadership skills ;but I suspect that it is unlikely to be earth shattering; but then what obtains from Karunanidhi is not any better.
If only to shake the shackles that continue to strangle TN viz Sun Family and the Poes Garden family and Dr Ayya family, I do want to see Vijay kanth ,another leader(?) emerge. The monopoly of these families should go.

More about this when I get back to my machine with ekalaippai facility.

Regards,

Bala

said...

//mr.Neutral you are yet to answer to my post.PMK prevented dalits from voting in 1999.Are you willing
to condemn PMK for that.
//
தவறு யார் செய்தாலும் தவறுதான், அது பாமக செய்தாலும், பாமக செய்யும் அத்தனையையும் ஆதரிக்கும் கண்மூடித்தொண்டன் அல்ல நான்.

said...

இது வரைக்கும் பா.ம.க. தவறு செய்துள்ளது என்று நீங்கள் சுட்டிக் காட்டியுள்ளவைகளை கூறுங்களேன் குழலி.

'இது வரைக்கும் பா.ம.க. தவறே செய்ததில்லை' என்று ஜல்லி அடிக்க போகிறீர்களா?

said...

மாயவரத்தான் 1999ல் நான் வலைப்பூ ஆரம்பிக்கவில்லை, என்ன எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கின்றதா? நீங்க தானே சொன்னீங்க 2001ல் நீங்கள் வலைப்பூவே ஆரம்பிக்கவில்லை என்று, நான் இந்த அளவிற்காவது தவறு என்று சொல்கிறேன், நீங்களோ நான் 2001ல் வலைப்பூ வைத்தில்லை என்று சொல்லி ஜகா வாங்கிவிட்டீரே யொழிய தவறியும் கூட 2001ஜெஜெ ஆட்சி அராஜக தேர்தலை பற்றி ஒரு வரி கூட சொல்ல்லவில்லை. சரி சரி பதிவை வேறு எங்காவது கடத்தாதீர்.

said...

கலைஞருக்கும் திமுக -வுக்கும் இது அழகல்ல!

said...

// At 3:59 PM, குழலி / Kuzhali said…

//இந்த நடுநிலையில் மிக்க மகிழ்ச்சி....
//
ஹி ஹி நானெப்பவும் நடுநிலை தான் ஆனால் திமுகவை திட்டுவதற்கு பெயர் தான் நடுநிலை என்றால் அது எனக்கு வேண்டாம். //

குழலி, திமுகவை மட்டும் திட்டுவதும் அல்லது திட்டாமல் இருப்பதும் நடுநிலையாகாது. என்னைப் பொறுத்த வரையில் இன்றைய திமுக என்பது அதிமுக. அங்கு ஜெயலலிதா என்றால் இங்கு கருணாநிதி. இவர்களில் யாருமே ஆதரிக்கத்தக்கவர் இல்லை. கருணாநிதி சமூகநீதி கொண்டு வருவார் என்றோ...ஜெயலலிதா நாட்டைப் அமைதிப்பூங்காவாக வைத்திருப்பார் என்றோ நாம் நம்பவில்லை. இவர்களை ஆதரிப்பதால் பலன் உண்டு என்கிறவர்களே ஆதரிக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

கூட்டணியில் தொடங்கிய தவறைத் தனியாக ஆட்சி நடத்துவதில் தொடர்ந்து இப்பொழுது இங்கு வந்து நிற்கிறது. ம்ம்ம்ம்ம்....

said...

அரசுக்கு கெட்டப்பெயர் வந்துவிட்டதே:கருணாநிதி கவலை தினமலர் செய்தி

said...

பதிவை வேறு எங்கும் கடத்தவில்லை.

கடந்த கால பா.ம.க. வரலாறை அலசி ஆராய்ந்த நீங்கள் எங்காவது அவர்களது தவறை சுட்டிக் காட்டியிருக்கிறீர்களா என்று கேட்டேன். அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்று சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன். ஒரு வாதத்துக்கு அதை தவறு என்று வைத்துக் கொண்டாலும் (நானும் அதை தவறு என்று தான் சொல்கிறேன், பா.ம.க.வையெல்லாம் சேர்த்தது அ.தி.மு.க.வின் தவறு), வேறு எந்த தவறும் இல்லை என்று சொல்கிறீர்களா? வேண்டுமானால் இந்தப் பதிவில் இல்லாமல் வேறு பதிவு எழுதுங்களேன்.

said...

இன்னொரு விஷயம். ஒரு செயல் தவறு என்று சொன்னோமானால் உடனே எல்லாரும் சொல்வது என்ன தெரியுமா........அவன் செய்யவில்லையா.......இவன் செய்யவில்லையா என்று...அதிலும் புள்ளி விவரங்களோடு வரும். இதுக்கு முன்னாடி இவ்வளவு நடந்திருக்கு. சரி. அதெல்லாம் தப்புன்னா...நீ செய்யுறதும் தப்புதான்னு சொன்னாலும் பலருக்குப் புரிவதில்லை.

said...

//அ.தி.மு.க.வுடன் கூட்டணி சேர்ந்தது தவறு என்று சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று நினைக்கிறேன்.//
மாயவரத்தான் நான் எந்த காலத்திலும் கூட்டணி சேர்வதையோ மாறுவதையோ தவறு என்றே சொல்லமாட்டேன், சொன்னதும் இல்லை :-)

said...

ம்..இப்போது தான் கவனித்தேன். சந்தடி சாக்கில் அடுத்தது அ.தி.மு.க. அரசு தான் என்று சொல்லி விட்டீர்களே.

said...

There is nothing wrong in pointing out in 2006 that PMK prevented Dalits from voting in 1999 and it used techniques used by DMK and ADMK.The question is will Mr.Kuzhali say that clearly and
categorically.

said...

//இந்த கும்பலை விட்டாலும் வேறு வழியில்லை, இவர்களை விட்டால் அந்த இடத்துக்கு வருபவர்கள் பசுவின் தோலை உரித்தால் மனிதத்தோலை உரிப்பார்கள், அப்புறம் தலையிலிருந்து பிறந்தது, காலிலிருந்து பிறந்தது கதை வரும், மனிதர்களில் சிலர் உயர்வாகவும் சிலர் தாழ்வாகவும் பிறப்படிப்படையில் பிரிப்பது சரியென்று வாதிடப்படும், மூளை சிலருக்கு மட்டும் பிறப்படிப்படையில் இருப்பதாகவும் மற்றவர்களுக்கு மூளைக்கு பதில் களிமண் இருப்பது போலவும் ஆகும்//

குழலி, நல்ல பதிவுதான். சபாஷ்.

ஆனால், நீங்கள் இன்னும் நமது திராவிட தலை(?)வர்களின் 'brain wash'ல் இருந்து மீளவில்லை போல் தெரிகிறதே.
பிரிவினையை ஊட்டி நம்மை மடையர்கள் ஆக்கிய ஆங்கிலேயனை விரட்டி விட்டோம். உள்ளூர் பிரிவினை வாதிகளை விரட்ட அவரவர் மனதில் ஒளி பிறக்க வேண்டும்.
இதுக்காக இன்னொரு காந்தி வருவதர்க்கெல்லாம் காத்திருக்க முடியாது.

100 வருடதிர்க்கு முன்னர் வேண்டுமானால், நீங்க சொல்ற மாதிரி, சில ஆதிக்கங்கள் ஜாதி பேர்ல இருந்திருக்கலாம். இப்ப அதெல்லாம் கிடையாது (அல்லது ரொம்ப கம்மி).

ஒரு ஒரமா தனியா ஒக்காந்து அமைதியா யோசிச்சு பாருங்க. உங்களுக்கே புரியும். எனக்குத் தெரிஞ்சு நீங்க எல்லாம் தெரிஞ்சும் சும்மா ஒரு வாதத்துக்கு இந்த மாதிரி கதை கட்டரீங்கண்ணு நெனைக்கறேன்.

நல்லா எழுதரீங்க. ஆக்க பூர்வமா எல்லாரையும் சிந்திக்க வைக்கர மாதிரி எழுதுங்க. பிரிவினை வேண்டாம்.
யாரு கண்டா, உங்க எழுத்த படிச்சுட்டு இங்கிருந்தே கூட அடுத்த தலைவர் ரெடி ஆகலாம்.

பட்டதை சொன்னேன். அம்புடுதேன்!!

நடப்பவை நன்மைக்கே - nature has its way. எல்லாத்துக்கும் கணக்கு இருக்கு. பதில் சொல்லும் நாள் கண்டிப்பாய் வரும்.