பாமக - வரைவு நிதி நிலை அறிக்கை

பாட்டாளி மக்கள் கட்சியின் அறிவார்ந்த முயற்சிகள் இது வரை அவ்வளவாக பொது தளத்தில் அறியப்பட்டதில்லை, கடந்த சில ஆண்டுகளாக பாமக தமிழக அரசுக்கு பரிந்துரைக்கும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் வரைவு நிதி நிலை அறிக்கையை சமர்ப்பிக்கும், இதே போன்று பாமக சார்பில் மாற்று கல்வித்திட்டங்கள் குறித்தான இரு நாள் கருத்தரங்குகளும் நடத்தப்பட்டு வருகின்றன, அது மட்டுமின்றி மாணவர்களுக்கு பாமக சார்பில் பயிலரங்குகளும் நடத்தப்படுகின்றன, அதில் சில நிமிடங்கள் மட்டுமே கட்சி விடயங்கள் பேசப்படும் அதுவும் கூட கட்சி தோன்றிய வரலாறு மட்டுமே, மற்றவையெல்லாம் மாணவர்களுக்கான அறிவு சார்ந்த விடயங்கள் நடத்தப்படும்.

தமிழக அரசிற்கான 2006-07ம் ஆண்டிற்கான வரைவு நிதிநிலை அறிக்கையை PDF கோப்பாக இங்கே இணைத்துள்ளேன், இந்த சுட்டியில் முயற்சி செய்யவும் அறிக்கையை தரவிறக்கி கொள்ளலாம்.

வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள், வரி சீர்திருத்தங்கள் மூலம் வருவாய் பெருக்கம், வரியில்லா வருவாயை பெருக்குவதற்கான நடவடிக்கைகள் பற்றி விளக்கமாக ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.தொழில்நுட்ப பூங்காக்கள்(IT Parks) மட்டுமே கேள்விப்பட்டுள்ளோம் நாம், இந்த அறிக்கையில் நெசவாளர் நலன்களுக்காக 100 நெசவுத்தொழில் பூங்காக்கள் அமைப்பது, அதன் மூலம் சுமார் 10,000 பேர்களுக்கு வேலைவாய்ப்பு ஆகியன இந்த அறிக்கையில் உள்ளன.ஒடுக்கப்பட்ட மக்களான விவசாயிகள், நெசவாளர்கள், தாழ்த்தப்படவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலனுக்கான திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலித் மக்களுக்கான சிறப்புக்கூறு திட்ட (Special Component Plan) ஒதுக்கீடும், அமலாக்கமும் முறையாக, முழுமையாக செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும், தலித் மக்களுக்கான 21 அம்சம் கொண்ட போபால் பிரகடனம் தமிழகத்திலும் செயல்படுத்தப்படும், ஆதிதிராவிட மக்களுக்கு அளிக்கும் சலுகைகள் அனைத்து மதங்களை பின்பற்றும் ஆதிதிராவிட மக்களுக்கும் அளிக்கப்படும்.சமூகநீதிக்கான இடஒதுக்கீடு, நீதித்துறையில் இடஒதுக்கீடு பற்றி வலியுறுத்தப்பட்டுள்ளது, மேலும் தமிழக அரசில் இடஒதுக்கீடு தொடர்பான வெள்ளை அறிக்கை தாக்கல் செய்து நிரப்பப்படாமல் இருக்கும் இடஒதுக்கீட்டு இடங்களை நிரப்புவது தொடர்பான ஆலோசனைகள் தரப்பட்டுள்ளன.

பள்ளிகல்வி, உயர்கல்வி, அரசு ஊழியர்கள் நலன், வேலை வாய்ப்பு பற்றியும் அறிக்கை முக்கியமாக பேசுகின்றது.

சுற்று சூழல் மற்றும் வனநலன், புதிய மாவட்டங்கள், பின் தங்கிய மாவட்டங்கள் வளர்ச்சி பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

முழுமையான மதுவிலக்கே பாமகவின் இலக்கு என்றாலும் தமிழகத்தில் மது விற்பனை அனுமதிக்கப்படும் வரை கள்ளுக்கடைகள் அனுமதிக்கப்படும், பனை தொழிலாளர் நலவாரியம் அமைக்கப்பட்டு சிறப்பாக நடைபெற வழிவகை செய்யப்படும்.

"பகுத்தறிவு பகலவன்" தந்தைப் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக அறிவிக்கப்படும்.

அதிமுக அரசின் நிதி செயல்பாட்டு முறைகேடுகள், வேகமாக வளர்ந்த அரசின் கடன்கள், திட்டங்களை நிறைவேற்றாத மற்றும் மந்தமாக செயல்படுத்தியதாலும் 119 திட்டங்களில் ரூ.5337.67 கோடியளவிலான நிதி ஒப்புவிப்பு 46 திட்டங்களில் 100 சதவீத நிதிஒப்புவிப்பு என அதிமுக அரசில் நடந்த நிர்வாக கோளாறுகளையும் சுட்டிக்காட்டுகிறது இந்த அறிக்கை

நன்றி: பசுமை தாயகம் செயலாளர் அருள்

30 பின்னூட்டங்கள்:

said...

பின்னூட்ட கயமைத்தனம் - 1

said...

"பாட்டாளி மக்கள் கட்சியின் அறிவார்ந்த முயற்சிகள்"

என்னாது மரம் வெட்டுரது??

said...

பின்னூட்ட கயமைத்தனம் - 2

said...

இலவச டீவிக்கான பட்ஜெட் மிஸ்ஸிங்.....

அதை சேர்க்கவில்லையே ?

said...

HTTP Status 404 - /web/pmkbudget2006/

--------------------------------------------------------------------------------

type Status report

message /web/pmkbudget2006/

description The requested resource (/web/pmkbudget2006/) is not available.

said...

//
HTTP Status 404 - /web/pmkbudget2006/
//

eSnips is undergoing maintenance and will not be accessible in the next 2 hours. Looking forward to seeing you soon.

The eSnips Team.

said...

10.3 MB அளவுள்ள கோப்பு, அறிக்கை வேண்டுபவர்களுக்கு மின்மடல் மூலம் அனுப்புகிறேன், உங்கள் மின்மடல் முகவரியை இங்கே பின்னூட்டமாக இடுங்கள் (அந்த பின்னூட்டங்கள் வெளியிடப்படாது)

நன்றி

said...

//என்னாது மரம் வெட்டுரது?? //

மிக்க நன்றி...

said...

kuzhali, upload the file here or here and give the url

said...

குழலி,

தலைப்பு அவ்வளவு கவிர்ச்சியா இல்ல போல கீது. பா.ம.க என்றாலே உடனே பாய்ந்து வரும் கூட்டத்த காணுமே?

said...

நல்ல முயற்சி குழலி.

said...

thanks prakash...

said...

தாமதமாகவே வந்தாலும் தேவையானதொரு தருணத்தில் சுட்டியை இட்டமைக்கு நன்றி! எங்கே இன்னமும் .யிர் புடுங்கி அனாலிஸ்டுகளை காணோம்.

அதென்னவோ ஒரு சிலருக்கு சிங்கையில் வேட்டு வைத்தால் புதரகத்தில் கண்ணு புடுங்குதாம்.

said...

http://rapidshare.de/files/36553941/PMKBudget2006.pdf.html

மேற்கண்ட சுட்டியில் அறிக்கையை தரவிறக்கலாம்

நன்றி

said...

pattali makkal katchi-ku maram vetta theriyum,manitharkalai vetta theriyum,ramados -ku sothu serka theriyum,son-a minister aaaka theriyum..tamilnattil sathi kalavarathai yerpadutha theriyum...
ivan yaru budget podurathukku?????????

said...

குழலி,
ஆளும் கட்சி கூட்டணியில் இல்லாமலோ அல்லது எதிர்க்கட்சியாக இருக்கும் போது இது போன்ற வரைவு திட்டங்கள் பாராட்டத்தக்கவை.சந்தேகம் இல்லை.

இப்போது ஆளும் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இவர்கள் நம்பும் நல்ல விசயங்களை அவசியம் வற்புறுத்தி அரசின் நிதிநிலை அறிக்கையில் கொண்டுவர வேண்டும்.

அதற்கு என்ன செய்கிறது பா.ம.க ?

மகனுக்கு மந்திரி பதவி இல்லை என்றால் ஆதரவு இல்லை என்று சொல்லி சாதிக்கும் தலைவர்....

தான் மக்களுக்கு நல்லது என்று நம்பும் ஒன்றை எப்பாடுபட்டாவது சாதிக்க வேண்டும்.

சும்மா வரைவு மட்டும் *இந்த* நேரத்தில் கதைக்குதாவாது.

said...

//pattali makkal katchi-ku maram vetta theriyum,manitharkalai vetta theriyum,ramados -ku sothu serka theriyum,son-a minister aaaka theriyum..tamilnattil sathi kalavarathai yerpadutha theriyum...
//
இந்த பதிவிலாவது வாந்தியெடுக்காம இருக்கமுடியாதா?

said...

ஏங்க...திமுக, பாமக, காங்கிரஸ் (தேர்தலுக்கு முந்தைய கூட்டணி)கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளை எல்லாம் சேர்த்து அதில் எவ்வளவு ஒற்றுமையான திட்டங்கள் உள்ளன, ஒற்றுமையானவற்றின் திட்டமாக்கல் எவ்வளவு தூரத்தில் உள்ளது, அதன் செலவு திட்டம் என்ன என்றும் பார்க்கலாமே!...அந்த கூட்டு செயல் திட்டமே ஒரு 5 ஆண்டு திட்ட அறிக்கையாக வைத்துக்கொண்டு செயல் பட திமுகவை அறிவுருத்தலாமல்லவா?

said...

மகனுக்கு மந்திரி பதவி இல்லை என்றால் ஆதரவு இல்லை என்று சொல்லி சாதிக்கும் தலைவர்....

தான் மக்களுக்கு நல்லது என்று நம்பும் ஒன்றை எப்பாடுபட்டாவது சாதிக்க வேண்டும்.

If it is
"தன் மக்களுக்கு i.e his children , kith and kin, நல்லது என்று நம்பும் ஒன்றை எப்பாடுபட்டாவது சாதிக்க வேண்டும்" then he is always at it
and will go any extent for that.

said...

தொடர்ந்து அனானிகளாக வந்து ஆதரவு(?!) கொடுப்பவர்கள் அவர்களின் எரிச்சலை சொல்லிக்கொண்டுள்ளார்கள், சொல்லி முடித்தாகிவிட்டதா கொஞ்சம் ஆசுவாசப்படுத்தி கொள்ளுங்கள்.

said...

குழலி,

நல்ல செயல். இது போன்ற வரைவுகள் பற்றிய விழிப்புணர்வு அடிதட்டு மனிதனுக்கும் வருமாறு பயிற்சி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்வது பாராட்டதக்கது.

அரசும் தங்கள் நிதி அறிக்கையை பள்ளிகளின் பாட புத்தகங்களில் கொண்ட வந்து மாணாக்கர்களிடையே கலந்துரையாடலையும், கட்டுரை போட்டிகளையும் உருவாக்கலாம். எதிர்காலத்திற்கு அவர்களை தயார் செய்யும். பாமக ஆளுங்கட்சியாக உள்ள நிலையில் இதை அரசுக்கு பரிந்துரைக்கலாம்.

இதற்கு அடுத்த நிலையில் "quaterly progress card"
போன்றதையும் பாமக பதிப்பிக்கலாம். அரசின் திட்டங்கள் நிதி நிலை அறிக்கையிலிருந்து மக்களிடம் எத்தனை பாதுகாப்பாக மக்களிடம் போய் சேருகிறது என்பது பற்றிய விழிப்புணர்வு வரும். தவறுகள் குறைய வாய்ப்புண்டு

said...

It does not work.You better host in somewhere.

said...

பா.ம.க குறித்து எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தபோதும் அதிகாரம் நோக்கிய நகர்வில் மிகத்தெளிவான அடிகளை எடுத்து வைக்கிறது. மேலும் அதன் தெளிவான பார்வைக்கு ஆண்டுதோறும் அது முன்வைக்கும் நிதிநிலை அறிக்கை ஒரு உதாரணம். மேலும் வெறுமனே விமர்சனங்களை முன்வைக்காமல் மாற்றுகளை முன்வைப்பதும் ஒரு மய்யநீரோட்ட அரசியல் கட்சியின் அடிப்படைப்பண்புகளில் ஒன்றுதான்.

said...

//It does not work.You better host in somewhere.//

esnips.com

rapidshare.de

மேற்குறிப்பிட்ட இரண்டு சுட்டிகளிலும் தரவிறக்கம் செய்ய இயலுகிறது, பிரச்சினை இருந்தால் மின்மடல் முகவரி தந்தால் அனுப்பி வைக்க தயாராக உள்ளேன்.

நன்றி

said...

குழலி

பதிவுக்கு நன்றி

said...

//
"பகுத்தறிவு பகலவன்" தந்தைப் பெரியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 17 சமூக நீதி நாளாக அறிவிக்கப்படும்.//

ராமதாஸ் மரம் வெட்டிய நாளை, பசுமைப் புரட்சி நாளாக அறிவிக்காமல் தவறு செய்ததற்காக, பாமக'வை கண்டிக்கிறேன்

said...

வரைவெல்லாம் நல்லாதான் இருக்கும்.. அதை செயல்படுத்தும் போது தான் பிரச்சனை தெரியும்.. ஒன்னுத்துக்கும் உதவாத திட்டம்னு உலகத்துக்கே தெரிஞ்ச இலவச டிவி திட்டத்தை ஆதரிச்சிட்டு, சமூக நலன் அக்கறை உள்ள மாதிரி வரைவு... நல்ல இருக்குப்பா டபுள் ஆக்டிங்..

ஜெ. டாஸ்மாக் கொண்டுவந்தப்போ.. பட்டதாரி இளைஞர்களை சாராயம் விற்க வைக்கிறார்னு கூவிட்டு, கருணாநிதி டாஸ்மாக்கை தொடரலாம்னு போது முச்சு கூட விடாதவர் தானே சமுக நலன் காக்கும் உங்க மருத்துவர்.

கேரளா CM 80 பேர் செத்தாங்கோன்னு சொன்னா உங்க சின்னய்யா யாருமே சாவலன்னு, கருணாநிதி சொன்னதை ஜால்ரா அடிச்சாரில்ல மறந்துடுச்சா...

பர்ஸ்ட் உங்க அய்யா சமூகத்தின் மேல அக்கறை உள்ள மாதிரி நடிக்கிறதை நிறுத்தச் சொல்லுங்கோ.. வேனும்னா அவருடைய உண்மை குணமான, குடும்ப நலனை முன்னிறுத்துவதை வெளிப்படுத்தச் சொல்லுங்கள்...

இதை விட நல்ல வரைவு எல்லாம் குவாட்டர் கோயிஞ்சாமிகூட வரைவான்.. என்னா அவன் அதை செயலபடுத்த தேவயில்லையே...

said...

//ராமதாஸ் மரம் வெட்டிய நாளை, பசுமைப் புரட்சி நாளாக அறிவிக்காமல் தவறு செய்ததற்காக, பாமக'வை கண்டிக்கிறேன்//
இராமதாசுவுக்கு இந்த கோரிக்கையை வலியுறுத்தி நீங்களே கடிதம் எழுதலாம், இப்படி பொதுவில் உங்கள் மனவிகாரத்தை காண்பிக்கின்றீரே...

said...

So when can we except the condenms from Mr.ayya about madras elections...

or is he going to say that JJ is responsible for this... or is he going to say it is same as 2001 election..

Mr.ayya is so interested in samuuga neethi...only with cinema people...

said...

உங்கள் பக்கங்களை அதிகம் புரட்டுவதில்லை எனினும் திரு.தமிழ்குடிதாங்கி அவர்களை பற்றிய விடயம் என்றதால் சற்று சல சலப்போடு படித்தேன்.

பின்னூட்ட நபர் அனானி ஒருவர் என் கருத்தை ஒத்து இருந்தார். அதாவது அரசியல் பற்றிய விடயங்களில் விடப்படும் அறிக்கை.

ஒரு விசயத்தில் அவரை பிடிக்கும் படித்தவர்கள் மட்டுமே அரசியல் பதவிகளை வகிக்க வேண்டும் என்பதில்.
அதிலும் திறமையான அமைச்சர்களை வழங்கியுள்ளார்.அன்புமணி அவர்களை தவிர்த்து. சரி சரி!! அரசியல் எதுக்கு இனிமேலும்....

வரைவு அறிக்கை தமிழக அரசு சட்டை செய்யுமா!! இல்லை ஒருவேளை கனவில் கூட பா.ம.க கட்சியே ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் தங்கள் மீது கொடுக்கப்பட்ட சுமைகளை இறக்கி வைகத்தான் பார்ப்பார்களே ஒழிய , ஏனென்றால் பிரச்சினைகள் திணிக்கப்டுவதால் திணறித்தான் போவார்கள்...இதுதான் நிதர்சனம் நண்பரே