தோழர் சீமான் கைதுக்கு எமது கடும் கண்டனங்கள், அவர் பேசியது தொடர்பாக விவாதத்தை முன்னெடுக்க வேண்டும், அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பது சிங்களனுக்கு மட்டும் பொறுந்துவதில்லை தமிழனுக்கும் பொறுந்துமே... தமிழக மீனவர்களை சுட்டபோது இது நாள் வரை புலிகளுக்கு டீசல் கடத்துகிறார்கள் பெட்ரோல் கடத்துகிறார்கள் பேரிங் கடத்துகிறார்கள் பேரிக்காய் கடத்துகிறார்கள் என்றார்கள் இப்போது தான் புலிகள் என்ற இயக்கமே இல்லை என்கிறார்களே இப்போது ஏன் சுடுகிறார்களாம்.
வேட்டை சமூகம் வேளாண்மை சமூகம் ஆனபோது அரசு செய்த முதல் செயல் மக்களிடமிருந்த ஆயுதங்களை களைந்து அதை படைகளிடம் தந்தது, மக்களின் பாதுகாப்பை படைகள் ஏற்றுக்கொண்டதாக பொருள் ஆனால் தமிழக மீனவர்களின் பாதுகாப்பை இந்திய படைகள் ஏற்கவில்லை என்னும் போது தமிழக மீனவர்கள் ஆயுதம் ஏந்த வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். இதையெல்லாம் கவனிக்க வேண்டிய மானங்கெட்ட கருணாநிதி(முன்பு ஜெயலலிதா அரசும்) அரசு மீண்டும் கடிதம் எழுதும் வேலையில் இறங்கும்.
கண்டனம் தெரிவிக்க வேண்டும் என்பதால் மிக சுருக்கமாக எழுதியுள்ளேன், குடிமக்கள் ஏந்தவேண்டிய ஆயுதம், அப்பாவி பொதுமக்கள் என்பவர்கள் யார், எம்மாதிரியான காலகட்டத்தில் சீமான் பேச்சுமுக்கியத்துவம் பெறுகிறது என விரிவாக எழுதுகிறேன்.
தற்போதைய தேவை கடிதம் எழுதும் கையாலாகாதவர்கள் அல்ல, தமிழ் பாசிஸ்ட்களின் தேவையை இந்திய, தமிழக, இலங்கை அரசுகள் ஏற்படுத்தியுள்ளன