மன்னர்களின் பெருமைகளையும் போர்களையும், பட்டப்பெயர்களையும் அவர்களின் அந்தப்புர காம களியாட்டங்களையுமே நாம் வரலாறு என்று படித்துக்கொண்டிருக்கிறோம் ஆனால் குடிமக்களின் வாழ்க்கை தான் உண்மையான வரலாறு என்பார் பெரியார்தாசன் அவர்கள், பெரும்பாலுமான நமது பைந்தமிழ் இலக்கியங்களும் போர்ப்பரணிகளையும் இதிகாசங்களையும் மன்னர் தம் பெருமைகளையும் உயர்குடிக்களின் வாழ்க்கையையும் மதங்களையுமே கொண்டிருக்கும், ஆனால் அதிலும் ஒடுக்கப்பட்டோர்களின் குரல்களாக ஓங்கி ஒலித்த இலக்கியங்களும் உண்டு... குறவஞ்சியும் சித்தர் பாடல்களுமாகவும் பல்வேறு குலசாமிகளின் கதையுமாகவும், நாட்டுப்புற பாடல்களிலும்,நாட்டார் கதைகளாகவும் பல்வேறு இலக்கியங்களில் ஆங்காங்கேயும் ஒடுக்கப்பட்டோர் குரல் ஒலிப்பு நம் தமிழ் இலக்கியங்களிலும் உண்டு... பல இடங்களில் வாழ்க்கைமுறையாகவும், நையாண்டியாகவும் அதிகாரத்துக்கெதிரான குரலாகவும் ஒலிக்கும் இந்த குரல்கள் பற்றிய ஒரு தேடல் இருந்தால் அது தொடர்பான ஆர்வமிருந்தால் உங்கள் கட்டுரைகளை மணற்கேணி 2010 போட்டிக்கு எழுதி அனுப்புங்கள்
"பழந்தமிழ் இலக்கியங்களில் ஒடுக்கப்பட்டோர் குரல்கள்" என்ற தலைப்பு உட்பட பல்வேறு தலைப்புகளில் அரசியல்/குமுகாயம், தமிழ் அறிவியல் மற்றும் தமிழ் இலக்கியங்கள் என்ற பிரிவுகளில் சிங்கப்பூர் வலைப்பதிவர்களும் தமிழ்வெளி இணையதளமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக நடத்தும் மணற்கேணி 2010 போட்டியில் கலந்து கொள்ளுங்கள், பிரிவுக்கு ஒருவராக வெற்றிபெறுபவர்கள் மொத்தம் மூன்று பேர் சிங்கப்பூர் வந்து ஒருவாரம் தங்கி இருந்து தமிழ் சார்ந்த நிகழ்வுகளிலும் விழாக்களிலும் கலந்து கொள்வார்கள்...
கட்டுரை அனுப்பவேண்டிய இறுதி நாள் டிசம்பர் 31, 2010 மேலும் தகவல்களுக்கு பாருங்கள் http://www.sgtamilbloggers.com/