தேர்தல் 2006

களைகட்டிவிட்டது தமிழக அரசியல், ஒவ்வொரு முறை தேர்தல் வரும்போதும் நண்பர் குழுவோடு அலசல்கள் செய்வதுண்டு தற்போது தமிழ்மணத்தில்....

கருத்துகணிப்பும் தொகுதி நிலவர அலசல்களும் பத்திரிக்கைகள் மட்டுமின்றி தனிப்பட்ட மனிதர்களாலும் செய்யப்படுவதுண்டு... நானும் செய்ததுண்டு....

பல நேரங்களில் கருத்து கணிப்பு பொய்ப்பதற்கு காரணம் உண்மை நிலவரம் அறிந்தோ/அறியாமலோ தம் சார்பு நிலையை கருத்துகணிப்பில் ஏற்றி கூறுவதே.... இதை பெரும்பாலானா/அத்தனை இதழ்களும் செய்தன, கடந்த சில தேர்தல்களில் நக்கீரன் நடுநிலையாக நடந்து கொண்டது, ஆனால் இந்த முறை தெளிவாகவே ஜெயலலிதா எதிர்ப்பு நிலையால் திமுக ஆதரவு நிலையை எடுத்துள்ளது எனவே தகவல்களை மட்டும் நக்கீரனிலிருந்து எடுத்துக்கொண்டு முடிவுகளை விட்டுவிடலாம்.

ஒரு பக்கம் திமுக தலைமையில் ஏழு கட்சி கூட்டணி, மறுபுறம் அதிமுக தனித்து. இராமதாசுவைவிட இந்த முறை வைகோ திமுக கூட்டணியில் தொடர்வாரா இல்லையா என்று பரபரப்பான பேச்சுகள்.... கம்யூனிஸ்ட் தோழர்களும் காங்கிரஸ் தலைகளும் பாமகவும் வைகோவும் மற்ற அத்தனை கூட்டணி கட்சிகளும் ஜெயலலிதாவுடன் கூட்டணியென்றால் சத்தம் போடாமல் கிடப்பதும், திமுக கூட்டணியில் உரிமைக்குரல் எழுப்புவதும் வழக்கமாகிவிட்டது, இப்போதும் உரிமைக்குரல்கள் கேட்கின்றன.

எனக்கு நன்கு அறிமுகமான சில தொகுதிகள் பற்றிய அலசல்கள் இனி வரும்.

தற்போதைக்கு தலையிடிக்கும் இரண்டு கேள்விகள்

1. திருமா திமுக கூட்டணிக்குள் வருவாரா?
2. வைகோ திமுக கூட்டணியில் தொடர்வாரா?

8 பின்னூட்டங்கள்:

said...

அய்யா, குழலி வாங்க.வாங்க.
ரொம்ப நாளைக்கப்புறமா வந்திருக்கீங்க.
போற போக்கைப் பார்த்தா மருத்துவரோட உதவியோட சிறுத்தைகள், மஞ்சத் துண்டு மகானோட கூட்டணியில வந்திடுவாங்கன்னு நினைக்கிறேன்.

said...

1. திருமா திமுக கூட்டணிக்குள் வருவாரா?

வருவார்!

2. வைகோ திமுக கூட்டணியில் தொடர்வாரா?

தொடர்வார்!!

said...

என்ன குழலி, ரொம்ப நாளா ஆளையே காணோம். ஊருக்குப் போயிருந்தீயளா.....

திருமா தி.மு.க. கூட்டணியில் வருவார். (ஆனால் நான் மருத்துவரோடுதான் கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறுவார்) அநேகமாக கடந்த தேர்தலைவிட பா.ம.க.வுக்கு ஒன்றிரண்டு தொகுதிகள் குறைய வாய்ப்புண்டு. அதுதான் வி.சி.க்கு கொடுக்கப்படும்.

வைகோ வேற வழியே இல்லை.

இதைவிட பெரிய தலைவலி.... கார்திக்கின் பார்வார்டு பிளாக்கும் (தோழர்களின் துணையுடன்) இக்கூட்டணியில் இடம்பெற வாய்ப்புண்டு.

said...

என்னய்யா இன்னும் அரசியல் சத்ததையே காணலன்னு நெனச்சேன்.ம் ஆரம்பிங்க ஆட்டத்த!

said...

After long time வாங்க..குழலி..எழுதுங்க...

said...

வாங்கையா வாங்க! தேர்தல் வரும் பின்னே.. குழலி வருவார் முன்னே!! :)

1. வரமாட்டார்! அம்மாவுடன் போவார்
2. தொகுதிபிரிப்பு சண்டைக்குப்பின் தொடர்ந்தாலும் தொடரலாம்!

3. மூன்றாவது என் சார்பாக...
மூன்று MLAக்கள் முகாம் மாறியதால் டாக்டர் அய்யா இந்த முறை முகாம் மாற வாய்ப்பில்லை!!! (என்பது இந்த அரசியல் அரிச்சுவடி பாலகனின் கணிப்பு.. பார்க்கலாம் எனக்கு எப்பேற்பட்ட அதிர்ச்சி காத்திருக்கிறதென்று...)

said...

வாங்கைய்யா வாங்க!!! உங்களுக்காக தான் வெயிட்டிங்...ஊர் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?
உம்முடைய இரு கேள்விகளுக்கும் என்னோட பதில்.

விசி திமுகவில் தான் சேரும்
மதிமுகவின் தலைவிதி திமுகவில் நீடிக்க வேன்டும் என்பது...

ஊரில் உள்ளவர்களிடம் பேசியவரை, திமுக கூட்டணி நீடித்தால் அக்கூட்டணிக்கே வெற்றி நிச்சயம் என்பது...:-)

said...

அனைவருக்கும் நன்றி.... ஊருக்குதான் போயிருந்தேன்....

//வாங்கைய்யா வாங்க!!! உங்களுக்காக தான் வெயிட்டிங்...ஊர் நிலவரமெல்லாம் எப்படி இருக்கு?
//
ஊர் நிலவரமெல்லாம் நல்லாதான் இருக்குங்க....