புரட்சி நாளை காலை எட்டரை மணிக்கு வருது

ஊரே பரபரப்பாக இருக்கின்றது, எந்த பக்கம் திரும்பினாலும் புரட்சி பற்றிதான் பேச்சே, தினசரி, வார மாத பத்திரிக்கையில் எல்லாம் புரட்சி வருவதை பற்றி தான் பேச்சே புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் வாத பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றது...

ஆமா "சுதந்திரம்" வந்து எல்லாத்தையும் புடுங்கிடுச்சி, மீதியை புரட்சி வந்து தாம் புடுங்கப்போவுது சலித்துக்கொண்டார் டீக்கடை பாய்


சுதந்திரம் வந்து என்ன புரட்சி வந்து என்ன? எல்லாம் பணம் இருக்கிறவனுக்கு தாம்பா, நம்மளை மாதிரி ஏழைபாழைங்களுக்கு உழைச்சாதான் அரை வயிறு தின்னலாம், போப்பா போயி வேலையைப்பாருங்கப்பா கும்பலாக புரட்சி வருவதை பற்றி பேசிக்கொண்டிருந்த சிவப்பு சட்டை போட்ட "போர்ட்டர்" தோழர்களை விரட்டிக்கொண்டிருந்தார் ஹெ.எம்.எஸ் கோபால்


அரசியல் தலைவர்களிலும் கூட புரட்சியை ஆதரித்தும் எதிர்த்தும் அறிக்கைகள் விடப்பட்டுக்கொண்டிருந்தது


புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு

புரட்சியை ஆதரித்தால் தமிழ்நாடு உருப்படாது, புரட்சியை எதிர்த்து பாமக தலைவர் டாக்டர் அன்புமணி அறிக்கை

புரட்சியை நாங்கள் ஆதரிக்கவும் இல்லை எதிர்க்கவும் இல்லை, - மாதிமுக(மாறன் திமுக) தலைவர்

நாங்கள் வித்தியாசமானவர்கள், மதுரைக்கு வடக்கே புரட்சிக்கு ஆதரவும் மதுரைக்கே தெற்கே எதிர்ப்பும் தெரிவிப்போம் மதுரையில் ஆதரவோ எதிர்ப்போ செய்யமாட்டோம், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் தலைமையை ஏற்கும் வரை நான் தேமுதிக வின் தலைமை பொறுப்பில் இருப்பேன், இளைய புரட்சி கலைஞர் பிரபாகரன் அவர்கள் தலைமை ஏற்கும் நாளுக்காக காத்திருக்கிறோம், அதன் பின் ஒரு தொண்டனாக தேமுதிகவில் தொடருவேன் - தேமுதிக தலைவர்(பொறுப்பு) சுதீஷ் பரபரப்பு பேட்டி


புரட்சி பற்றி முடிவு செய்ய புரட்சித்தலைவியின் ஆணைக்காக காத்திருக்கின்றோம், புரட்சி தலைவி கனவில் வந்து ஆணையிட தயாராக இன்றிலிருந்து புரட்சி வரும் நாள் வரை தூங்கப்போகிறோம், புரட்சி தலைவர் நாமம் வாழ்க, புரட்சி தலைவி புகழ் ஓங்குக - அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி

புரட்சி உழைக்கும் மக்களை சுரண்டும் பொறுக்கிகளின் கொண்டாட்டம், உழைக்கும் மக்களை உடனடி பிரச்சினைகளிலிருந்து திசை திருப்பும் செயலே புரட்சி இதோ வருது புரட்சி அதோ வருது என்கிற நாடகம், புரட்சி வருது வருது என்று இத்தனை நாட்களாக மக்களை ஏமாற்றிக்கொண்டிருந்தார்கள் புரட்சியை ஆதரிக்கும் தரகு முதலாளிகள் - தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...


கரகம், காவடி மேள தாளங்களோடு பீர் விஸ்கி கைகளோடு புரட்சியை வரவேற்க ஊர் எல்லையிலேயே காத்திருந்தார்கள் இளைஞர்கள்....

"ஏம்பா கி.பி. 2000த்துலயே ஒரு புரட்சி வந்து ஊத்திக்கிச்சாமே தெரியுமா?"

"ஆமாம் நானும் கேள்விப்பட்டேன், நெட்ல கூட அது டீட்டெய்ல்ஸ் தேடினேன், 2000ல புரட்சி வந்ததுன்னு தகவல் இருக்கு ஆனா அதுக்கு மேல வேற ஒண்ணும் தகவல் இல்லை"

"ரொம்ப வருசம் கழிச்சி இந்த புரட்சி வந்திருக்கு, ஏற்கனவே சுதந்திரம் ஊத்திக்கிச்சி, இந்த புரட்சியும் ஊத்திக்கிச்சினா அவ்ளோதான் நம்ம கனவெல்லாம் வீணாயிடும்"

ஏய் புரட்சி வந்துருச்சி புரட்சி வந்துருச்சி, கத்திக்கொண்டே அந்த காரை நோக்கி ஓடினார்கள் இளைஞர்கள்....

தாரை தப்பட்டை முழங்க காரை சுற்றி சுற்றி வந்தார்கள்...

முகத்தை தொங்க போட்டபடி இறங்கினார் ....

எல்லோரிடமும் அப்போது ஒரே கேள்வி தான் புரட்சி வந்துருச்சா?? ஒரு வேளை முதலாளி புரட்சி வராம இருக்க சதி செய்துட்டாரா?, அவருக்கு புரட்சி வருவதில் விருப்பமேயில்லை, அவர் பையன் தான் புரட்சி வரவைக்க ஆர்வமாக இருந்தார்...

"அண்ணே புரட்சி வந்துருச்சா? "

"அட என்னப்பா திடீர்னு கூட 50 லட்சம் கூட குடுத்தாதான் புரட்சியை கொடுப்பேன்னு சொல்றானுங்க, அதான் பணம் பொறட்டிக்கிட்டு போக வந்துருக்கேன், பயப்படாதிங்க நாளைக்கு காலையில எட்டரை மணிக்குள்ள புரட்சி வந்துடும்"

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

38 பின்னூட்டங்கள்:

said...

// தோழர் கிச்சா என்கிற கிருஷ்ண மூர்த்தி அய்யங்கார் - ம க இ க செயலாளர் - புதிய ஜனநாயகம் பத்திரிக்கையில் வெளியிட்ட அறிக்கை தோழர் "தீவிர அசுரனின்" வலைப்பதிவில்...

புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

//

கனவு மெய்பட வேண்டும்...
:))

said...

Ha Ha Ha..

கலக்கிடிங்க..

வயிறுவலிக்க சிரிக்க வைத்துவிட்டீர்கள்..

said...

///புரட்சி - சென்ற மாதம் தான் அறுபதாம் கல்யாணம் செய்த சூப்பர் ஸ்டார் "விஜய்" - பழம் பெரும் நடிகை ஸ்ரேயாவின் பேத்தி சுரேயா நடிக்க 200 கோடி ரூபாய் செலவில் தயாரான தமிழ் திரைப்படம்

//

கனவு மெய்பட வேண்டும்...
:))

கலக்கிடிங்க..

வயிறுவலிக்க சிரிக்க வைத்துவிட்டீர்கள்..


Royal Kalakkal. I can't stop my laugh

said...

/*சூப்பர் ஸ்டார் "விஜய்" */

வன்மையாக கண்டிக்கிறேன்... அவர் என்றும் கிழய தளபதி சீ சீ .. இளய தளபதி தான்... அப்போ சுப்பர் ஸ்டார் "கமலஹாசன்" அப்படின்னு ஒரு படத்தில நடிச்சுட்டு இருப்பார்.. அதுல ஒரு வசனம்.." ரஜினியும் நான் தான்..கமலஹாசனும் நான் தான்"

said...

Please write the views / build up's of

Vijay Viki (Rajini Ramki)

Naakku Sundar

Naagan Dhas

Xavier Jr

Lucky Cook

and the views of

Suguda Dinakar

Periya Bharathi

Mugu

pleas some body write about these fellows views too

said...

கலக்கல் :)

சொல்ல முடியாது, பல வருடங்களுக்குப் பின் இது அப்படியே நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!

said...

//புரட்சி வருவதை யாராலும் தடுக்க முடியாது - திமுக தலைவர் உதயநிதி அறிவிப்பு//
சரியான காமெடி.

said...

//அதிமுக பொதுச்செயலாளர் ஏகாம்பரம் பேட்டி// ஏகாம்பரம் என்ற பெயர் படைத்த அ.தி.மு.க உறுப்பினர்கள் எல்லோரும் ஒரே கிலில இருக்காங்களாம். உங்களுக்கு அவங்க மேல என்னா காண்டு?

நல்ல காமெடி குழலி. நல்லா சிரிக்க வச்சீங்க, அதுக்கு நன்றி.

said...

ஓ ! வந்திருச்சா!

said...

கலக்கலா இருக்கு, வாய் விட்டு சிரித்தேன் :)

said...

அடேங்கப்பா... தமிழக மக்களை இப்படி புரிஞ்சு வச்சிருக்கீங்க!

கதை சூப்பர்...

//கலக்கல் :)

சொல்ல முடியாது, பல வருடங்களுக்குப் பின் இது அப்படியே நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!//

ரிப்பீட்டு!!!

said...

அது சரி :-)) என்னமோ நடக்கப் போறதில்லங்கிற மாதிரி கனவு மெய்ப்பட வேண்டும்ங்கிறீங்க... அந்தப் படத்தின் பேரில் மட்டும் நீங்க சொன்ன அந்த ஆட்களை நடிக்கச் சொல்லுங்க, குழலி சொன்ன கதையை நாம் தினத்தந்தியில் நிஜமா நாளைக்குப் படிப்போம்...

குட் ஒன், குழலி :-)

said...

குழலி,

இவ்வளவு நாளா எங்கய்யா மறைச்சு வைச்சிருந்தீர் இந்த குசும்பை எல்லாம்?! :)))

தேமுதிக டாப்புலயும் டாப்பு!

said...

:))))))))))))))))))))))))))))))))))))))))))))) ஐயோ குழலி....தாங்க முடியலை வயித்து வலி..செம காமெடிங்க.

said...

குழலி

புரட்சி
இங்கு மொத்தமகவும் சில்லரையாகவும் கிடைக்கும்
பொலிகளை கண்டு ஏமாறாதீர்கள்

சிறப்பு சலுகை
10 புரட்சிக்கு வாங்குபர்களுக்கு 1 புரட்சி இலவசம்.
[ only offer stock in hand so be quick ]

said...

அ.தி.மு.க பொதுச்செயலாளரா சுதாகரன் மகன் குதாகரனை போட்டிருக்கலாம்...!!!!

:)))

said...

//அ.தி.மு.க பொதுச்செயலாளரா சுதாகரன் மகன் குதாகரனை போட்டிருக்கலாம்...!!!!

:)))//
ரவி விசயம் இருக்கு, ஏன்னா அதிமுக வில் அடுத்த என்ன நடக்கும் யார் வருவாங்கன்னு சொல்லவே முடியாது, ஜெயலலிதா அதிமுக தலைவராவாங்கன்னு அவங்களே கூட நினைத்திருக்க மாட்டாங்க அப்போ... அப்புறம் இவங்களுக்கோ முந்தா நாள் பாஸ்கரனை புடிக்குது, அப்புறம் திவாகரனை புடிக்குது, நேத்து தினகரனை புடிச்சது ஒரு நாள் எல்லோரையும் விரட்டிட்டு சுதாகரனை தலையில் தூக்கி வச்சி ஆடுராங்க, இந்த லட்சணத்துல எதை நம்பி நான் வாரிசு ன்னு போடுறதே, அதே பாருங்க திமுக - பாமக லாம் சரியா ஒரு ரூட்ல போயிக்கிட்டே இருக்காங்க, மாமன் - மச்சான் குறுக்க வந்தாலும் மாமனாவது மச்சானாவது அவங்களுக்கும் ஆப்பு தான்னு தெளிவா இருக்காங்க அப்படியே ஸ்டாலின் உதயநிதி அப்புறம் உதயநிதி பையன்னு ரூட்டு தெளிவா போகுது :-)

said...

//மாதிமுக(மாறன் திமுக) தலைவர்
//

இந்தப் பகுதியை நீங்களா எழுதினீங்களா இல்லாட்டி இந்த வார ஜூனியர் விகடன் கழுகார் பகுதியைப் பாத்துட்டு எழுதுனீங்களா? வருங்காலத்துல இல்லாம இப்பவே இது நடக்கும் போல இருக்கே! :-)

said...

////மாதிமுக(மாறன் திமுக) தலைவர்
//

இந்தப் பகுதியை நீங்களா எழுதினீங்களா இல்லாட்டி இந்த வார ஜூனியர் விகடன் கழுகார் பகுதியைப் பாத்துட்டு எழுதுனீங்களா? வருங்காலத்துல இல்லாம இப்பவே இது நடக்கும் போல இருக்கே! :-) //
இன்னும் விகடன் பார்க்கலையே இருங்க பார்க்கிறேன்...

said...

ஆகா நேற்று இரவு இந்த பதிவை எழுதும் வரை மாறன் தனிக்கட்சி மூடு பற்றி படிக்கலை... விகடனில் இப்போது தான் பார்த்தேன், ஆகா நடக்கும்னு எதிர்பார்த்தேன், ஆனா இவ்ளோ சீக்கிரம் எதிர்பார்க்கலை...

said...

புரட்சிப் புயல் வைகோவின் கட்சி பற்றிய செய்தி எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சோகம் :-(

அய்யகோ! கீழ்த்திசை நாடு ஒன்றிலே தன் பெண்ணையே பெண்டாள நினைத்தானே சாலி கோட்ரோஸ்கி.. ஏகாதிபத்தியத்தை எதிர்த்து எகிப்தில் குரல் கொடுத்தானே ஏகாம்பரம்... அவன் கதை தான் நினைவுக்கு வருகிறது!

said...

குழலி,
ஓன்னுமே சொல்லுறதுக்கில்லை, இப்படி ஓரே ஆட்டத்துல எல்லாரையும் அடிச்சா! பாவம் புள்ளைக தாங்குமா!

பதிவோட ஹைலைட் தோழர் vs புரட்சி தான்.

said...

//புரட்சிப் புயல் வைகோவின் கட்சி பற்றிய செய்தி எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்று சோகம் :-(
//
ஸ்ப்ப்ப்ப்பா யாருமே கவனிக்கலையோன்னு நினைச்சேன்.... நீங்களாவது கப்புன்னு புடிச்சிங்களே... புரட்சி புயல் கட்சி நடத்துகின்ற இலட்சணத்தில் வரலாற்று சோகம் நடைபெற்றே விடும் போலிருக்கு... :-((

said...

பெனாத்தல் சுரேஷ் அவர்கள் அனுப்பிய பின்னூட்டம் இங்கே...

ithooL
புரட்சியை உருவாக்கப்போகும் சூப்பர் தளபதி விஜயின் "கமல்" திரைப்படத்தின் சில துளிகளை TBCD-2 கூறியிருக்கிறார், அதன் விரிவான முன்னோட்டம் இதோ:

1. படப்பிடிப்புக்காக பலகோடி ரூபாய் செலவில் "கருப்பு - வெள்ளை" காமெராக்கள் வாங்கி அதில் படமெடுத்திருக்கிறார்கள். பாகவதர் காஸ்ட்யூமிலும், எம்ஜியார் சிவாஜி காஸ்ட்யூமிலும் தளபதி தோன்றும் காட்சிகளில் விசில் பறக்குமாம்.

2. பெங்களூரில் பலகோடி ரூபாய் செலவில் மெரினா பீச்சை செட் போட்டிருக்கிறார்களாம். மெரினா பீச்சில் படப்பிடிப்புக்கு வாடகை கேட்பதால் இந்த ஏற்பாடாம். 110 டி எம்சி நீர் கொண்டு கடலை உருவாக்கியிருக்கிறார்களாம்.

3. கிராபிக்ஸ் மூலம் தளபதியை 15 வயது சிறுவனாக மாற்றி இருக்கிறார்களாம். ஒரு 15 வயது சிறுவனை ஆடவிட்டு, அவனுடைய முகத்துக்கு பதில் தளபதியின் முகத்தை பிக்ஸ் செய்திருக்கிறார்களாம். எவ்வளவு முயற்சித்தாலும் வயதானதால் ஆடவரவில்லை என்பதால் உருவான இந்த ஐடியா, க்ராபிக்ஸ் வரலாற்றில் ஒரு சகாப்தம்.

4. பட ரிலீசுக்கு முன்னால் ரசிகர்கள் முன்பெல்லாம் பால், பீர் போன்ற குறைந்த விலைப்பொருள்களால் கட்டவுட்டுக்கு அபிஷேகம் செய்தார்கள், இப்போது தண்ணீர் கொண்டு அபிஷேகம் செய்தது மிகப்பெரிய புதுமை மட்டுமல்ல, புரட்சியும் கூட!

5. இந்தியத் திரைப்பட வரலாற்றிலேயே முதல் முறையாக, சுரேயா ஒரு காட்சியில் முழுதும் மூடிய உடையில் வருகிறாராம். இந்தக் காட்சி மிகவும் வித்தியாசமான காட்சி என்று பட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

6. 2000 பிரிண்டுகள் போடப்பட்டிருக்கின்றனவாம், கொட்டாம்பட்டி முதல் சென்னை வரை தமிழகத்தின் அத்தனை திரையரங்குகளிலும் ஒரே நாள் வெளியிடப்படப்போகிறது. ஒரு காட்சி மட்டும் ஓடினாலும் போட்ட பணம் வசூலாகிவிடும். மேலும், ரெண்டாம் காட்சி ஓடுவது சந்தேகம் என்பதாலும் இப்படி ஒரு பிரம்மாண்ட முயற்சி.

said...

குழலி நீர் எங்கைய்யா இத்தனை நாள் காணாம போயிட்டீர்!

உங்களுக்கு சப்போர்ட்டா அந்த அசுரனை நான் நாலுவாங்கு வாங்க நினைச்சு உங்க சார்பா நான் பதிலெழுதி கொண்டு இருந்தேன் நீர் என்னடான்னா ஆளை காணோம் .

said...

//எமது படைப்புகள் பற்றிய விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றன...
//

இப்படி கொட்டை எழுத்தில் எழுதி வச்சா மட்டும் பத்தாது விமர்சனம் வந்தா வெளியிடனும் .

புரட்சி பத்தி நக்கல் அடிக்கும் குழலி புரட்சி வரகூடாதுன்னு நினைப்பதாக
பேசிக்கிறாங்களே அது பத்தி உம்மோட கமெண்டு என்னா ?

said...

குழலி கலக்கல் காமெடிங்கண்ணா.. சிரிச்சி முடியல்ல...

அண்ணா புரட்சியைத் தெலுங்குல்ல டப் பண்ணி முணாவது அணி தலைவர்களு எல்லாம் சூசினதை இங்கே இருட்டடிப்பு செய்யப்பட்டிருப்பது எனோ?

said...

வாவ்! தேவ் சொல்லி தான் இங்க வந்தேன்! செம கலக்கல் போங்க! சரவெடி சிரிப்பு:-)) என்னால சிரிப்பை அடக்க முடியலைங்க!!

said...

//கதை சூப்பர்...

//கலக்கல் :)

சொல்ல முடியாது, பல வருடங்களுக்குப் பின் இது அப்படியே நடந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை!//

ரிப்பீட்டு!!!//

DOUBLE REPEATE :))))

SENSHE

said...

:)

ஐம்பது லட்சம்தான் எக்ஸ்ட்ரா கேட்கிறாங்களா... ரொம்பக் கம்மியா இருக்கு!

said...

You Forget mention the certificates and press releases of of White house, 10 down street, 10 Janpth road????

said...

அசிங்கமாக இருக்கிறது. இந்த மாதிரி ஒரு கேனத்தனமான பதிவை உங்களிடமிருந்து எதிர்பார்க்கவில்லை, சாரி.

said...

யாத்ரா சினிமாவில் நடிகிறாரா? கனிமொழியின் மகன் எங்கே?

said...

கலக்கல்.....

said...

//அசிங்கமாக இருக்கிறது.//
சுகுணா இதில் எது அசிங்கமாக இருக்கின்றது என்று விளக்கி சொன்னால் தன்யனாவேன்

ஒரு வேளை "புரட்சி" என்ற வார்த்தை எடுத்தாளப்பட்ட விதத்தையா?

எதையுமே புனிதமென்று தூக்கி பீடத்தில் வைக்காத பின் நவீனத்துவ சிந்தனையாளர்கள் கூட "புரட்சி" என்ற வார்த்தையை புனித பீடத்தில் வைத்தால் என்ன செய்வது? சிலருக்கு "புரட்சி" புனித பீடத்தில் இருப்பது போல் பலருக்கும் பலதும் புனித பீடத்தில் இருக்கிறது.இதையெல்லாம் பார்த்தால் உங்களாலும் எழுத முடியாது என்னாலும் எழுத முடியாது....

said...

குழலி மன்னிக்கவும். இந்த பின்னூட்டம் பதிவுக்கு சம்பந்தமில்லாததாக இருக்கலாம்

ஆமா என்ன நடக்குது இங்க! உங்க பதிவைப் போலவே இருக்குது. பிளாக்கர் முழுங்கிடுச்சுன்னு வேற பதிவு போட்டிருக்காரு. அது நீங்க தான் நினைச்சு நான் பின்னூட்டமெல்லாம் போட்டேன். ஒருவேளை போலியோ? கீழ இருக்கு சுட்டி

http://kuzhali.blogspot.com/

ஏற்கனவே 'குசும்பன்' பதிவிலும் போலி.

said...

//ஆமா என்ன நடக்குது இங்க! உங்க பதிவைப் போலவே இருக்குது. பிளாக்கர் முழுங்கிடுச்சுன்னு வேற பதிவு போட்டிருக்காரு. அது நீங்க தான் நினைச்சு நான் பின்னூட்டமெல்லாம் போட்டேன். ஒருவேளை போலியோ? கீழ இருக்கு சுட்டி

http://kuzhali.blogspot.com/
//
விஜயன் உங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி, திடீரென ப்ளாக்கர் ஸ்பேம் என்று சொல்லி என் பதிவை தூக்கிவிட்டார்கள், அது மட்டுமன்றி என் யு ஆர் எல் http://kuzhali.blogspot.com/ என்பதையும் பொதுவிற்கு avilable ஆக்கிவிட்டார்கள், வேறு யாரும் இந்த யு ஆர் எல் லை எடுத்துவிடும் முன் நானே இன்னொரு ப்ளாக்க்காக அந்த யு ஆர் எல்லை எடுத்து வைத்துக்கொண்டேன்...

ப்ளாக்கர் இந்த பதிவை மீண்டும் வெளியிட்டவுடன் இதே http://kuzhali.blogspot.com/ என்பதையே பயன்படுத்திக்கொண்டுள்ளேன்....


என் பதிவு எல்லாம் போய்விட்டதோ என்று பயந்தபோது இதே மாதிரி சுகுணா திவாகருக்கும் நடந்ததாக அறிந்து அவரிடம் பேசினேன்.... ப்ளாக்கருக்கு மெயில் அனுப்பினால் 10-15 நாளில் மீண்டும் அதை கொடுத்துவிடுவார்கள் என்றார்...

நன்றி
நன்றி

said...

வன்மையாகக் கண்டிக்கிறோம். எங்களுடைய கட்சியின் தலைவர் 'சொம்பு கொம்பு சலம்பரசன்' கொடுத்த அறிக்கையை வெளியிடாமல் செய்ததில் ஏதோ ' சதி' இருக்கிறது.

இங்ஙனம்

அகில இந்திய, உலக, பூமி, புதன், செவ்வாய் தாயக மறுமலர்ச்சிக் கழகம்.

(அப்படியே வயிறு வலிக்கும் ஏதாவது வைத்தியம் டிஸ்கியில போட்டிருக்கலாம்ல)