தவறான தகவல்கள் தரும் டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கர்

டெக்னாலஜி பிதாமகன் அவதாரம் எடுக்க முனையும் ரவிசங்கர் அவர்களின் சமீபத்திய இந்த பதிவில் ஒரு தவறான தகவலை தந்துள்ளார்...

//தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது.//

இது தவறான தகவல், தமிழ்மணம் வழமைக்கு திரும்பும் வரை தமிழ்மணம் வழியாக படிக்க முடியாதே தவிர நேரடியாகவோ பிற திரட்டிகள் வழியாகவோ படிக்க்க முடியும்... கடந்த காலங்களில் தமிழ்மணம் செயல்படாத நேரங்களில் பிற திரட்டிகள் வழியாக படித்துள்ளார்கள்....

சாஃப்ட்வேர் எஞ்சினியரிங்கில் எந்த ஒரு டிசைனும் எல்லா இடங்களுக்கும் பொறுந்தும் என்பது கிடையாது என்பது மற்றவர்களை விட துறையில் வேலை செய்பவர்களுக்கு தெரியும்....

உங்களின் நீண்ட இந்த தொடர்களுக்கு வரிக்கு வரி எம்மால் பதிலளிக்க இயலும்(இதற்கு முந்தைய பதிவுகளையும் சேர்த்து).... உங்களின் நிறைய சுய முரண் கொள்கை முரன் என்பதில் ஆரம்பித்து உங்களின் டெக்னாலஜி புரிந்துணர்வில் உள்ள ஓட்டைகள் வரை நிறைய எழுத முடியும்ம்....

தவறான தகவல்களை தர வேண்டாம்.... இப்படி நீங்கள் தவறான தகவல்கள் டெக்னிக்கல் விசயங்களில் தந்தால் டெக்னாலஜி பிதாமகன் அல்லது டெக்னாலஜி குரு என்று பெயர் எடுக்க விரும்பும் உங்களுக்கு அது பின்னடைவையே ஏற்படுத்தும் :-)))))))

பிற்சேர்க்கை:
தமிழ்மணம் கருவிப்பட்டை க்கான நிரலி இந்த டெம்ப்ளேட்டில் அப்படியே இருக்கின்றது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளேன்...services.thamizmanam.com என்பதற்கு பதில் services.thamizmanam1.com என்று மாற்றியுள்ளேன்... இது தமிழ்மணம் சர்வர் செயலிழந்து இருக்கும் போது இருக்கும் நிலை... இப்போது என் பதிவு உங்களுக்கு தெரிகிறதா?

< language="'javascript'" src="'http://services.thamizmanam1.com/jscript.php'" type="'text/javascript'">


தெரிந்தால் ரவிசங்கர் சொல்வது சரியல்ல.... இடது மூலையில் ஒரே ஓரு ஜாவா ஸ்கிரிப்ட் பிழை செய்தி வருகிறதா? அவ்வளவே...

பிற்சேர்க்கை 2:
நண்பர்கள் சிலர் சோதித்து பார்த்துவிட்டு தமிழ்மணப்பட்டை தளத்தை முடக்குவதில்லை என்று கூறியுள்ளதால் என் பதிவில் நான் செய்த டெம்ப்ளேட் மாற்றத்தை சரி செய்து கொள்கிறேன்

21 பின்னூட்டங்கள்:

said...

குழலி நீங்கள் தான் உங்கள் மூக்கை நீங்களே உடைக்கிறீர்கள் அவர் கூறுவது 100 வீதம் உண்மை அதற்க்கு மாற்று வழி தளங்களுக்கு வராமல் கூகிள் றீடரிலேயே இருந்து வாசிப்பதுதான்

said...

தமிழ்பித்தன் எத்தனையோ முறை தமிழ்மணம் தளம் நிறுத்தப்பட்டிருந்த போது பதிவுகள் தேன்கூடு, தமிழ்வெளி வழியாக வாசிக்கப்பட்டிருந்தது, மேலும் நேரடியாக உங்கள் பதிவுகள் தமிழ்மணம் செயலற்று இருந்தாலும் வாச்சிக்கலாம்.... இது பதிவுலகில் சமீபத்தில் கூட நடந்த விடயம்....

said...

தமிழ்மணம் கருவிப்பட்டையால் உங்கள் பதிவை முடக்க முடியாது.....

said...

நண்பர் குழலி,

தமிழ்மணம் முன்பு ஒருமுறை இயங்காத போது நேரடியாகவும், தேன்கூடு வழியாகவும் படித்திருக்கிறார்கள். தமிழ்மணம் இயங்காத போது கருவிபட்டை தெரியாது. மற்றபடி தமிழ்மணம் பதிவுகளை முடக்கிப் போடவில்லை. போடவும் முடியாது.

உங்கள் கருத்து மிகச்சரி

said...

என் பதிவின் டெம்ப்ளேட்டில் thamizmanam.com என்ற இடங்களில் thamizmanam1.com என்று கருவிப்பட்டை போடும் இடத்தில் மாற்றி இருக்கின்றேன், இதன் அர்த்தம் என்ன வென்றால் தமிழ்மணம் சர்வர் டவுன் ஆனால் இருக்கும் நிலை தான் இது
(டம்மி டெஸ்டிங்) என் பதிவு உங்களுக்கு தெரிகின்றதா? தெரிந்ததென்றால் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள் எது சரியென்று

said...

தமிழ்பித்தன் said...
குழலி நீங்கள் தான் உங்கள் மூக்கை நீங்களே உடைக்கிறீர்கள் அவர் கூறுவது 100 வீதம் உண்மை அதற்க்கு மாற்று வழி தளங்களுக்கு வராமல் கூகிள் றீடரிலேயே இருந்து வாசிப்பதுதான்

Kuzhali is right when Thamizmanam was having problem for 15 min two weeks back we were able to check our blog directly. Thanks

said...

Also we were able to read our blogs through Tamilveli when Thamizmanam was not working. we have checked it. Thanks

said...

தமிழ்மணம் கருவிப்பட்டை க்கான நிரலி இந்த டெம்ப்ளேட்டில் அப்படியே இருக்கின்றது அதில் ஒரு சிறிய மாற்றம் செய்துள்ளேன்...services.thamizmanam.com என்பதற்கு பதில் services.thamizmanam1.com என்று மாற்றியுள்ளேன்... இது தமிழ்மணம் சர்வர் செயலிழந்து இருக்கும் போது இருக்கும் நிலை... இப்போது என் பதிவு உங்களுக்கு தெரிகிறதா?

< script language='javascript' src='http://services.thamizmanam1.com/jscript.php' type='text/javascript' >


தெரிந்தால் ரவிசங்கர் சொல்வது சரியல்ல.... இடது மூலையில் ஒரே ஓரு ஜாவா ஸ்கிரிப்ட் பிழை செய்தி வருகிறதா? அவ்வளவே...

said...

நன்றி குழலி! சோதித்துப்பார்த்ததில் தமிழ்மணக்கருவிப்பட்டை என்னுடைய வலைப்பதிவை முடக்கி வைக்கவில்லை!

said...

IP யில் ஆரம்பித்து OPML பகிர்ந்து கொள்வது என ஏகப்பட்ட விசயங்களில் தவறான தகவல்களை தந்து கொண்டிருக்கின்றார் ரவிசங்கர் குறிப்பாக திரட்டிகளின் மீது அதுவும் தமிழ்மணத்தின் மீது ஒரு சந்தேகத்தை விதைக்கும் முயற்சி இது....

கடுமையான நேரக்குறைவால் இவர் எழுதிய பல அபத்தங்களுக்கு விரிவாக பதிலளிக்க இயலவில்லை என்ற போதும் தமிழ்மண கருவிப்பட்டை உங்கள் பதிவை முடக்குமென்றாலும் உளறும் போது சுருக்கமாகவேணும் இதை எழுத வேண்டியிருக்கின்றது....

said...

//குழலி நீங்கள் தான் உங்கள் மூக்கை நீங்களே உடைக்கிறீர்கள் அவர் கூறுவது 100 வீதம் உண்மை அதற்க்கு மாற்று வழி தளங்களுக்கு வராமல் கூகிள் றீடரிலேயே இருந்து வாசிப்பதுதான்//

தமிழ்பித்தன் நீர் தான் உமது மூக்கை உடைக்கிறீர். தமிழ்மணம் வேலைசெய்யாத போதெல்லாம்பதிவுகளை வாசித்து தான் இருக்கிறேன்.

கருவி பட்டை பதிவை முடக்குவதில்லை...

ஆனால் சில நேரம் பதிவை திறக்க நேரமாகும்.

தமிழ் மணம் செயல் இழந்தால் கருவிப்பட்டை தெரியாது....

said...

நண்பர்கள் சிலர் சோதித்து பார்த்துவிட்டு தமிழ்மணப்பட்டை தளத்தை முடக்குவதில்லை என்று கூறியுள்ளதால் என் பதிவில் நான் செய்த டெம்ப்ளேட் மாற்றத்தை சரி செய்து கொள்கிறேன்

said...

அதைத்தானே நாமும் சொல்கிறோம் விஜே வலைப்பூவில் வேகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்

((முற்று முழுதாக செயலற்று போகும் என கூற முடியாது ஆனால் கணிசமான அளவு பாதிப்பு உணர முடியும் அதனால் சில காலம் பட்டை போடாமல் பாவித்து வந்தேன்))
இது நான் இங்கே கருத்திட முன்பு ரவிசங்கரில் இட்ட கருத்து

said...

தமிழ்மணம் சற்று தூங்கிய சமயங்களில் ரவி சங்கர் சொல்லுவது முற்றிலும் உண்மை. அதாவது.. http://kuzhali.blogspot.com என்ற பதிவை இலகுவாக திறந்து பார்க்க முடியும். ஆனால்.. http://kuzhali.blogspot.com/2007/12/blog-post_24.html என்ற முகவரியில் இருக்கும் ஒரு பதிவை திறந்து பார்ப்பதற்குள் தாவு தீரும். அல்லது திறக்க முடியாமலேயே போன சம்பவங்களும் உண்டு! இது குறித்து ஒரு சமயம் தமிழ்மணத்திடம் நானே கூட சொல்லிய நினைவு உண்டு.

தமிழ்மணம் தூங்கிய சமயங்களில் பல நுட்பம் தெரிந்த பதிவர்கள்.. தங்களின் தமிழ்மணப் பட்டையை தற்காலிகமாக எடுத்து விட்டிருந்தார்கள் என்பதையும் கவணிக்க வேண்டும்.

said...

திரட்டி , மற்றும் தேடு பொறிகளில் எமது பதிவுகள் அனுமதியின்றி தோன்றுமா தோன்றாதா?

1. Add your blog to our listings?

Yes No

A Listed blog may be linked to from Blogger.com, such as the Blogger home page, Blogger Play, and Next Blog. If you select "No" your blog will not appear in these places, but it will still be available on the Internet. This blog will still be displayed on your profile unless you hide it. Edit displayed blogs





2. Let search engines find your blog?

Yes No

If you select "Yes" we will include your blog in Google Blog Search and ping Weblogs.com.



If you select "No", everyone can still view your blog but search engines will be instructed not to crawl it.


கணினிகள், இணையம், இப்படியான விசயத்தில் அவற்றை பயன்படுத்துபவன் என்பதற்கு அப்பால்
வேறு அறிவு எனக்கு இல்லை.

நீங்கள் மேலே சொன்ன தேடுபொறிகள், மற்றும் புளொக்கரின் திரட்டி என்பவற்றில் எமது பதிவுகள் தோன்றுவதற்கு நாம் அனுமதிக்க வேண்டும். நான் ஆம் என்று அனுமதியளிக்கவிட்டால் எமது பதிவை கூகுள் தேடு பொறி மூலம் கூட தேட முடியாதென்பதாக தான் எனக்கு தெரிகிறது.

இதை பற்றி உங்கள் விளக்கம்??

said...

//குழலி நீங்கள் தான் உங்கள் மூக்கை நீங்களே உடைக்கிறீர்கள் அவர் கூறுவது 100 வீதம் உண்மை அதற்க்கு மாற்று வழி தளங்களுக்கு வராமல் கூகிள் றீடரிலேயே இருந்து வாசிப்பதுதான்//




அப்ப நீர் 100% உண்மை எண்டு கீழ மேற் கோள் காட்டினதை சொல்லேல்லை எண்டுறீரோ :)

//தமிழ்மணம் வழங்கி செயல் இழந்தாலோ தளப் பராமரிப்பு வேலைகளுக்காகத் தளத்தைத் தமிழ்மணம் தற்காலிகமாக முடக்கி வைத்தாலோ, அது தமிழ்மணக் கருவிப்பட்டைச் சேவையைப் பெறும் 2000+ பதிவுகளையும் சேர்த்து முடக்கும். முடக்கும் என்றால் தமிழ்மணம் வழமைக்குத் திரும்பும் வரை 2000+ பதிவுகளின் ஒரு பக்கத்தையும் யாரும் திறக்கவும் படிக்கவும் முடியாது. //

said...

//தமிழ்மணம் தூங்கிய சமயங்களில் பல நுட்பம் தெரிந்த பதிவர்கள்.. தங்களின் தமிழ்மணப் பட்டையை தற்காலிகமாக எடுத்து விட்டிருந்தார்கள் என்பதையும் கவணிக்க வேண்டும்.//

இது முற்றிலும் உண்மை. தமிழ்மணம் ஒரு முறை தூங்கிவிட்டபோது என் பதிவுகளையே என்னால் திறந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது நண்பர் இட்லிவடை சொன்ன யோசனையின் படி தமிழ்மண கருவிப்பட்டையை தற்காலிகமாக எடுத்துவிட்டேன். அதன் பின்னரே பதிவுகள் தெரியத் தொடங்கியது.

said...

விளக்கமாக எழுதியதற்கு நன்றி, குழலி. தமிழ்மணம் செயலிழந்தால் பதிவுகள் திறக்க சற்று தாமதமாகும் என்பதே நான் கண்ட அனுபவம். முடக்கும் என்பது சரியல்ல. தாமதத்தையும் களைதல் தேவையே. இது மூன்று வருடங்களுக்கு முன்பே அறியப்பட்ட சிக்கல்தான். இதற்கான தீர்வு விரைவில் வரும் என்று நம்புகிறேன்.

said...

குழலி,

பதிவிற்கு நன்றி...

தமிழ்மணம் கருவிப்பட்டையில் சில பிரச்சனைகள் உள்ளன என்பது சரியே. ஆனால் அது Broadband போன்ற இணைய இணைப்புகளில் தெரிவதில்லை என்று நினைக்கிறேன். தமிழகத்தில், பெரும்பாலும் dial-up இணைப்புகளை பயன்படுத்துகிறவர்களுக்கு இந்தப் பிரச்சனை உள்ளது.

பதிவர்களுக்கு மட்டுமில்லாமல் தமிழ்மணத்திற்கும் இந்த கருவிப்பட்டையால் பிரச்சனை உள்ளது. உதாரணமாக இந்த கருவிப்பட்டை 2000 பதிவுகளில் இருக்கும் பொழுது, மறுமொழிகள் இந்த கருவிப்பட்டையால் திரட்டப்படும் பொழுது தமிழ்மணம் வழங்கிக்கு அது அதிக அழுத்தத்தை கொடுக்கும்.

*****

தமிழ்மண நிர்வாகம் இதனை தன்னுடைய வலைப்பதிவில் கடந்த காலங்களில் எழுதியும் உள்ளது. கருவிப்பட்டை பிரச்சனைக்கு தீர்வுகள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறியும் உள்ளது.

http://blog.thamizmanam.com/archives/99 - தமிழ்மணம் : தொழில்நுட்ப தேவைகளும், புதிய வாய்ப்புகளும்

தமிழ்மணம் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்திற்கு பதிவர்கள் தங்கள் பதிவுகளை அறிவிக்கவும், பின்னூட்டங்களை தமிழ்மணம் முகப்புப் பக்கத்தில் உடனே தெரிவதற்கும் முக்கிய தொழில்நுட்பமாக விளங்குவதை பதிவர்கள் அறிவீர்கள். இந்தக் கருவிப்பட்டை தமிழ்மணம் தளத்தில் உள்ள சுமார் 1821 பதிவுகளிலும் இருப்பதாலும், ஒவ்வொரு பதிவும் Refresh செய்யப்படும் பொழுதும், இந்த கருவிப்பட்டை மூலம் புதிய பின்னூட்ட விவரம் (பின்னூட்ட எண்ணிக்கை மட்டும்) தமிழ்மணத்திற்கு வரும். இந்த சேவையின் காரணமாக தமிழ்மணம் Serverல் CPU Utilization மிக அதிகமாக இருந்தது. தமிழ்மணம் தளத்தினை மேலும் மேம்படுத்தும் வாய்ப்புகள் இருப்பதால் மேம்பட்ட வழங்கி ஒன்றில் தமிழ்மணத்தை நிறுவினோம். தளத்தைச் சோதனை செய்த பொழுது சரியாக வேலைசெய்த தைரியத்தில் தமிழ்மணம் தளத்தை மாற்றிய பொழுது தமிழ்மணம் தளமே தொங்கிப் போனது.

----

பின்னூட்டத்தினைத் திரட்ட கருவிப்பட்டையைத் தற்பொழுது பயன்படுத்தி வரும் நிலையில் அதற்கு மாற்று வழியாக பதிவுகளின் பின்னூட்ட ஓடை மூலம் பின்னூட்டங்களை திரட்டுவது தமிழ்மணத்தின் பரிசீலனையில் இருந்தாலும், இதில் சில பிரச்சனைகளும் உள்ளன. இவ்வாறான யோசனையை சில பதிவர்கள் கூடக் குறிப்பிடிருந்தார்கள். ஆனாலும் இவ்வாறு பின்னூட்டங்களை திரட்டும் பொழுது பின்னூட்ட ஓடையினைக் குறிப்பிட்ட இடைவேளைக்கு ஒரு முறை தான் திரட்ட முடியும். இதனால் பின்னூட்டங்கள் உடனே தமிழ்மணம் முகப்பு பக்கத்தில் தெரியாது. ஆனால் கருவிப்பட்டை மூலம் பின்னூட்டங்களை உடனே முகப்புப் பக்கத்தில் காட்டலாம்.

said...

குழலி,
இந்த விஷயத்தில் கொஞ்சம் பிசகிவிட்டார் ரவி என்றே நினைக்கிறேன், ஒரு வேளை தனிப்பட்ட கணினி சார்ந்து , இணைய வேகம் சார்ந்து பதிவுப்பட்டை வேலைக்காட்டும் என நினைக்கிறேன்.

உதாரணமாக சமிபத்திய ஜாவா, கன்சோல்கள் கணினியில் இல்லை எனில் எர்ரர் காட்டும் என நினைக்கிறேன்.

தமிழ் மணம் செயல்ப்படாதப்போதும் ,எனது புக் மார்க்களில் உள்ளப்பதிவை படித்துள்ளேன்.

தமிழ் சசி சொன்னது போல அகலப்பட்டை இருந்தால் அந்த நேரம் ஆவது ஏற்படாது என நினைக்கிறேன்.

யாருடையப்பதிவுகளில் அதிக வெஜெட்ஸ், ஸ்டாட் கவுண்டர், தமிழ்மணப்பதிவுகளின் சமீபத்தியபதிவுகளை காட்டும் வசதி, அதிக பின்னூட்டம் இருக்கிறதோ அவை எல்லாம் மெதுவாகத்தான் திறக்கிறது எப்போதும்.

என்னோடப்பதிவுகளில் எந்த விட்ஜெட்ஸ், ஸ்டாட் கவுண்டர் எதுவும் இதற்காகவே வைத்துக்கொள்வதில்லை.

எந்த எந்த சைட்க்கு திறக்கும் போது பிங்க் ஆகிறது என்பது பிரவ்சரின் அடியில் உள்ளப்பாரில் தெரியும், எல்லாரும் பார்க்கலாம்.

said...

பதிவையும் மறு மொழிகளையும் படித்தேன். ஒரே குழப்பம். ஒன்றுமே புரியவில்லை.