OPML பகிர்வு, ip , திரட்டி அரசியல், டெக்னாலஜி பிதாமகன் ரவிசங்கரின் டெக்னிக்கல் தவறுகள் மற்றும் இன்ன பிற...

சமீப காலமாக ரவிசங்கர் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் இருக்க கூடியதான நிலைப்பாட்டை வலியுறுத்தி தொடர் பதிவுகள் எழுதி வருகிறார், ரவிசங்கர் அவர்கள் ஏன் எதற்கக இப்படி எழுதிவருகிறார் என ஆரம்பித்தால் அவரின் டெக்னாலஜி பிதாமகன் என எல்லோரும் புகழ வேண்டுமென்ற ஆசையா, நான் சொன்னேன் செய்யலை என்று ஆரம்பிக்கும் அவரின் ஈகோ வா? அல்லது தமிழ்வலைப்பதிவுலகில் எல்லாம் தன் ஆலோசனையின் கீழ் தான் நடக்கவேண்டுமென்ற தன் முனைப்பா என்பதிலிருந்து சென்னையில் நடந்த வலைப்பதிவு பட்டடறை அரசியல், புதுச்சேரி வலைப்பதிவு பட்டறை அரசியல் என ஆரம்பித்து ஒரு வருடம் இனி பட்டறை நடத்த தேவையில்லை என்று கூறும் அத்தாரிட்டியிலிருந்து ரவிசங்கரின் முன்னுக்குபின் முரணான கொள்கை முரண்பாட்டிலிருந்து தானியங்கியாக பதிவுகளை திரட்டும்
'தமிழ்' திரட்டிகளை விட ஒரு குழுவிற்கு பிடித்த பதிவுகளை மட்டும் காண்பித்து கொண்டிருக்கும் மனித திரட்டிகளுக்கு அவர் தரும் முக்கியதுவத்தின் அரசியலில் இருந்து ஏகப்பட்ட விசயங்கள் பேச வேண்டியிருக்கும் என்பதால் அந்த விடயங்களை விவாதிக்கும் அளவிற்கு எமக்கு நேரமில்லை என்பதாலும் ரவிசங்கர் டெக்னிக்கலாக தந்து கொண்டிருக்கும் தவறான விசமங்களையும் மற்றும் சில விசயங்களை மட்டும் இங்கே சொல்கிறேன்...

1. தமிழ் திரட்டிகள் வெறும் தானியங்கி திரட்டிகள் மட்டுமல்ல, தமிழ் திரட்டிகள் என்று நான் குறிப்பிட்டதற்கு காரணம் டெக்னோரைட், கூகிள் ரீடர் போன்றவை பொதுவான திரட்டிகள், ஆனால் தமிழ்மணம், தமிழ்வெளி, தேன்கூடு, தமிழ்பதிவுகள் போன்றவைகள் தமிழ்மொழியில் எழுதப்படும் வலைப்பதிவுகளுக்காக உருவாக்கப்பட்ட திரட்டிகள், ரவிசங்கர் மூச்சுக்கு முன்னூறு முறை திரட்டிகளை சாராமல் திரட்டிகளை சாராமல் என்று சொல்வது என்ன வென்றால் 'தமிழ்' திரட்டிகளை சாராமல் என்று பொருள் ஏனென்றால் இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்கலாம் அப்போது வலைப்பதிவர்கள் கூகிள் ரீடர் திரட்டியையோ டெக்னோரைட் திரட்டியையோ அல்லது வேறு எந்த திரட்டியையோ சார்ந்து இருப்பதாகும்... சரி இவர் தமிழ் திரட்டிகளை சாராமல் இருக்க சொல்வதற்கான காரணங்களாக சிலவற்றை வைக்கின்றார். அதில் முதன்மையானது கட்டற்ற சுதந்திரம், பாதுகாப்பு என்று சில விடயங்களை முன் வைக்கிறார்... அதற்கு முன் இந்த திரட்டிகள் வெறும் பதிவு, பின்னூட்டம் திரட்டுவது என்று மற்ற திரட்டிகள் போலில்லாமல் ஒரு வலைப்பதிவு சமூகமாக இருந்து வருகின்றது, நட்சத்திரம், பூங்கா, சுடர் விளையாட்டு என தமிழ் வலைப்பதிவர்களின் பங்கேற்ப்பை ஊக்குவிக்கின்றது, information காலத்தை தாண்டி இப்போது நாம் Participatipon காலத்தில் இருக்கிறோம். அதானாலேயே சர்ச்சைகளும் அதிகமாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம்:
ஆபாச பதிவுகள், ஆபாச பின்னூட்டங்கள் என்று தமிழ்மணம் அல்லோகலப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த ஆபாசங்களை எழுத்துவடிவில் எழுத இடம் கொடுத்த ப்ளாக்கருக்கு மின்மடல் அனுப்பி அதை

தடைசெய்ய சொன்னதை விட தமிழ்மணம் அதை காட்டக்கூடாது என்று எழுந்த கோரிக்கைகளும் அதை வைத்து தமிழ்மணத்தை தாக்கிய நிகழ்வுகளுமே நடந்தது, அந்த பதிவுகளை எல்லாம் தமிழ்மணம்

நீக்கியது, பின்னூட்ட மட்டுறுத்தல் செய்தால் தான் தமிழ்மணம் பின்னூட்டத்தை காண்பிக்கும் என்ற நிலைக்கு தமிழ்மணத்தை தள்ளியது யார்? தமிழ்மணமா? அல்லது வலைப்பதிவர்களா? இந்த பிரச்சினையில் எழுத இடம் கொடுத்த கூகிளை நோண்டியவர்களை விட தமிழ்மணத்தை தாக்கியதே அதிகம், சில மாதங்களுக்கு முன் பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லையென்றாலும் பதிவுகளின் பின்னூட்டம் காட்டப்படும் என்ற போதும் இதோ இந்த நொடி வரை ரவிசங்கரின் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளதே என்ன காரணம், அவர் பதிவு மட்டுமல்ல எத்தனையோ பதிவுகளில் இன்னமும் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளது, ஏனென்றால் இங்கே அப்படியிருக்கு நிலைமை...

ரி தமிழ் திரட்டிகளில் தான் சுதந்திரம் இல்லை, கூகிளில் என்ன நிலைமை, ஒரு ஆபாச போலி ப்ரொபைலை சர்வேசன் பதிவில் வைத்து புகார் மேல் புகார் வைத்து குத்தோ குத்தென்று குத்தி முடக்கவில்லையா? புகார் மேல் புகார் அனுப்பியதில் இன்னொரு வலைப்பதிவை திறக்கும் போதே ப்லாக்கர் இந்த பதிவில் அவதூறுகள் உள்ளதாக புகார் வந்துள்ளது பார்க்க விருப்பமெனில் உள்ளே செல்லுங்கள் என்று எச்சரித்ததே அதெல்லாம் கட்டற்ற சுதந்திரமா?

கட்டற்ற சுதந்திரம் என்ற பெயரில் தமிழ் திரட்டிகளை புறக்கணிக்க சொல்வதன் காரணம் என்ன? அதன் பின் ஏதேனும் அரசியல் இருக்கா? என்ன அரசியல் அது?

ஒரு நாள் ஒரே ஒரு நாள் சுதந்திரமாக வலைப்பதிவுகளை தானாக இணைக்க அனுமதித்தால் இங்கே என்ன நடக்கும்? திரட்டியில் வந்து இணைத்து அதை வேலை, வீட்டுப்பிரச்சினைகள், புள்ளைகுட்டியோடு நேரம் செலவழிப்பு அதன் பிறகு ஏகப்பட்ட இன்ன பிற வேலைகளுக்கு பின் இந்த பதிவுகளை எல்லாம் படித்து இதெல்லாம் திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு இருக்கிறதா என பார்த்து பிறகு சேர்க்கும் போதே ஏகப்பட்ட பிரச்சினைகள் வருகிறது இதில் கட்டற்ற சுதந்திரமாக இணைக்கவிட்டால்?

பொது OPML உருவாக்குவதற்கான வரைமுறையாக ரவிசங்கர் முன்னெடுத்த விசயத்தில் எந்த பதிவுகளை சேர்க்கலாம் எதை சேர்க்க கூடாது என சொல்லியுள்ளது இங்கே

வெர்சன் 1 Dec -14 :எந்த மாதிரி பதிவுகளைத் தவிர்ப்பது?

பதிவுகள் பெரும்பாலும் தமிழில் எழுதப்படுவதாக இருப்பது முக்கியம். சாதி, மத, இன, மொழி வெறுப்புணர்வூட்டும் பதிவுகள், விளம்பரப் பதிவுகள், ஒரு பல்கலைக்கழக வளாகத்தில் இருந்து பார்க்கத் தகாத பதிவுகளைத் :) தவிர்க்கலாம். வேற பெரிய வரையறை ஏதும் இல்லை.

கட்டற்ற சுதந்திரம் பற்றி பேசுபவர் எந்த மாதிரி பதிவுகளை தவிர்க்க வேண்டுமென சொல்லியுள்ளார் பாருங்கள், டிசம்பர் 20 ம் தேதி வரை 7 முறை அடித்தல் திருத்தல் செய்த போது இருந்த இந்த தணிக்கை டிசம்பர் 20ம் தேதி கடைசியாக அடித்து திருத்தி எழுதிய போது இல்லை, திடீரென ஞானோதயம் வந்துவிட்டதோ என்னமோ....

2. OPML பகிர்வு
OPML என்பது ஒரு திரட்டியின் சொத்து, ஏன் அதை சொத்து என சொல்கிறேன் என்றால் அது ஒரு திரட்டியின் டேட்டா, எத்தனை பேர் அந்த திரட்டியில் இணைந்துள்ளார்கள் என்பதுவே அது தான், தமிழ்மணத்தின் பலம் அதில் இணைந்துள்ள 2400+ பதிவர்கள், அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது, மீண்டும் சொல்கிறேன் அதை வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது... அது தான் தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு OPML ஆக வெளியிட்டால் அந்த பிரச்சினையில்லை அதனால் தான் ரவிசங்கர் OPML ஆக வெளியிட சொல்கிறார், தமிழ்மணம் OPML வெளியிடும் உதாரணத்திற்கு ரவிசங்கரே ஒரு திரட்டியை உருவாக்குகிறார் என வைத்துக்கொள்ளுங்களேன் தமிழ்மணம் மூன்றாண்டுகளுக்கு மேலாக கொஞ்சம் கொஞ்சமாக சேகரித்து வைத்திருக்கும் அவர்களின் சொத்தை நோகாமல் நோன்பு கும்பிட ரவிசங்கர் உருவாக்குகிற(ஒரு உதாரணத்திற்கு மட்டுமே ரவிசங்கர் பெயரை பயன்படுத்தியுள்ளேன்) புது திரட்டியில் உபயோகப்படுத்தி கொள்ளலாம் பாருங்கள். மீண்டும் சொல்கிறேன் OPML வெளியிட சொல்லி வேண்டுகோள் மட்டுமே விடுக்கலாம், கட்டாயப்படுத்த முடியாது. அந்த வேண்டுகோளை புறந்தள்ள தமிழ்மணத்திற்கோ மற்ற திரட்டிகளுக்கோ உரிமை உண்டு.

OPML பகிர்வில் மேலும் சில சிக்கல்கள் உண்டு, ஒரு வலைப்பதிவர் ஒரு திரட்டியில் இணைகிறார் அந்த திரட்டியின் சட்டதிட்டங்களுக்கு இணங்க தம் பதிவை திரட்டியில் சேர்க்கிறார், அதை OPML ஆக வெளியிடும் உரிமை அந்த திரட்டிக்கு உண்டு, OPML பயன் படுத்தி இன்னொரு திரட்டியில் அந்த பதிவர் அவருக்கு தெரியாமலேயே இணைக்கப்படுகிறார், இப்போது புதிதாக வந்த திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு அவர் கட்டுப்பட்டவரா?

தமிழ்மணம் தங்களின் Terms And Conditions ல் பதிவுகளின் உள்ளடக்கம் எப்படி தமிழ்மணத்தால் பயன்படுத்தப்படுவதை வெறும் preview என்ற அளவில் மட்டுமே வைத்திருக்கிறது இதற்கு இணங்கி தமிழ்மணத்தில் ஒரு பதிவர் சேர்கிறார், தமிழ்மணத்தின் OPML மூலமாக அதே பதிவர் இன்னொரு திரட்டியில் இணைக்கப்படும் போது அந்த திரட்டியில் வலைப்பதிவு எழுத்துகள் காப்பிரைட் பிரச்சினையில்லாமல் மறுபதிப்பு, லைசன்ஸ் ஃப்ரீ என்றெல்லாம் இருந்தால் அந்த பதிவர் நிலை என்ன? அவராக சென்று அந்த திரட்டியில் இணைக்கவில்லை, இப்போது அந்த புது திரட்டியின் சட்ட திட்டங்களுக்கு இவர் கட்டுப்பட்டவரா?
அதற்கு கட்டுப்படாமல் அவர் இருக்க விரும்புகிறார் எனில் அவர் புது திரட்டிக்கு தெரிவிக்க வேண்டும், ஆனால் அவர் அந்த திரட்டியில் இருப்பதே அவருக்கு தெரியாதென்றால் என்ன செய்யலாம்? கிரெடிட்

கார்டு வழங்குபவர்கள் வழக்கமாக ஒரு வித்தையை செய்வார்கள், நாங்கள் மாதம் 20 ரூபாய் இந்த இன்சூரன்ஸ்க்காக, அந்த இன்சூரன்ஸ்க்காக பிடித்துக்கொள்வோம் உங்களுக்கு விருப்பமில்லையென்றால் லெட்டர் போடுங்கோ, போன் செய்யுங்கோன்னு, இதென்னடா கூத்து எனக்கு அதில் விருப்பமில்லையென்றால் நான் சொல்ல வேண்டுமாம், விருப்பம் இருப்பவனை மட்டும் சேர்த்துக்கொள், லெட்டர் போட்டு எவனுக்கு விருப்பமிருக்கோ அவன் பணத்தை மட்டும் எடுத்துக்கோ, அதே கதைதான் இங்கேயும் இதே மாதிரியான ஒரு காமெடியை ரவிசங்கரும் செய்துள்ளார், அவர் tamil-blogs-open-opml திட்டத்தில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்

"ஒரு வேளை, சில பதிவர்களுக்கு இப்படி இந்த OPMLல் இடம்பெறுவதில் விருப்பம் இல்லாமல் இருக்கலாம். இந்தக் கணக்கு பொதுவில் இருப்பதால் வேண்டாதவர்கள் தாமாகவே நுழைந்து பெயர்களை நீக்கிக் கொள்ளலாம். ஒரு வரி padhivu@gmail.comக்கு எழுதிப் போட்டால் நாம் அவற்றைப் பொது வெளியீடுகளின் போது கவனம் எடுத்து நீக்கலாம்."

இவுங்க சேர்த்துப்பாங்களாம், வேணாமுன்னா நாம போய் எனக்கு விருப்பமில்லைன்னு எழுதி போடணுமாம்.... சேர்க்கும் முன் அனுமதி பெற்று சேர்ப்பதே சரியானது, அதைத்தான் திரட்டிகள் செய்து வருகின்றன.

ஒரு வலைப்பதிவருக்கு ஒரு திரட்டியில் சேர்திருப்பார், இன்னொரு திரட்டியின் அரசியல் பிடிக்காமல் அதில் சேர விரும்பாமல் இருக்கலாம், மற்றொரு திரட்டியை நடத்துபவரை பிடிக்காமல் அதில் சேராமல் இருக்கலாம், ஆயிரம் காரணங்கள் இருக்கலாம் இதெல்லாம் பதிவரின் சுதந்திரம், அதில் தலையிட யார் கொடுத்தது அதிகாரம்? இதை சொன்னால் உடனே தமிழ்மணம் தேன்கூட்டிற்கு OPML கொடுத்ததே என்றால் தமிழ்மணத்தின் சேர்க்கை விதிகளிலேயே இருக்கின்றது அவர்கள் விரும்பினால தரலாமென, அதை ஒத்துக்கொண்டு தான் தமிழ்மணத்திலேயே சேர்கின்றார்கள் என்னும் போது தப்பில்லை.


கடைசியாக ரவிசங்கர் அவர்கள் பொறுப்பு துறப்பு என்று எழுதியிருக்கும் விசயமென்னவென்றால் பொறுப்புத் துறப்பு:

"இது திட்டமிட்டு தணிக்கை செய்ய முற்படாத ஒரு பட்டியல். எனவே இந்த பட்டியலில் இடம்பெற்றிருக்கும் பதிவுகள், தளங்கள் தரும் உள்ளடக்கம் தரமானதாகவும் பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் ஏற்புடையதாகவும் இருக்கும் என்று உறுதி அளிக்க இயலாது. இப்படியலில் தங்களுக்கு ஒவ்வாத தளங்களை நீக்கிப் பயன்படுத்த வேண்டியது பயனரின் பொறுப்பாகும் என்பதைத் தெளிவுபடுத்துகிறோம்."

இவர் துறந்த பொறுப்பை தான் திரட்டிகள் தானாக முன்னமேயே செய்துவருகின்றன.... ரவிசங்கர் எப்படி மூக்கைத்தொடுவார் நேரடியாகவா? அல்லது காதை சுற்றியா என்று தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது.

கட்டற்ற சுதந்திரம் என்ற காரணத்தை சொல்லி 'தமிழ்' திரட்டிகளை துறக்க சொல்லும் ரவிசங்கருக்கு ப்லாக்கர், டெக்னோரைட்டில் ஆரம்பித்து எதிலுமே கட்டற்ற சுதந்திரம் கிடையாது என்பதே ஆபாச போலி பதிவுகளையும் புரொபைல்களையும் குத்தோ குத்தென்று குத்தி மூட வைத்த விசயத்தினால் தெரிந்திருக்கும்


குட்டிப்பையன் தூங்கி எழுந்து சத்தம் கொடுத்துக்கொண்டே என் லாப்டாப்பை தட்ட வந்தான், இனி அவனை பார்க்கவில்லையென்றால் ரகளை தான் மிச்சத்தை அடுத்து எப்போது நேரம் கிடைக்குமோ அப்போது....

7 பின்னூட்டங்கள்:

said...

//இந்த நொடி வரை ரவிசங்கரின் பதிவுகளில் பின்னூட்ட மட்டுறுத்தல் உள்ளதே என்ன காரணம்,//

நண்பர் குழலி,

சரியான பாயிண்ட்.

பதிவர் அனுமதி இல்லாமல் திரட்டிகள் திரட்டுவது தவறு என்பதில் உடன்படுகிறேன். நமக்கு அனுமதி இல்லாமல் நம்ம பதிவை எடுத்துக் கொண்டு அங்கு வேறொருவர் எதோ ஒரு அனானி பெயரில் நமது பதிவை வைத்து அரசியல் செய்வார்...கும்முவார். இதற்கெல்லாம் யார் பொறுப்பு ஏற்பாங்க. பொது இடத்தில் எழுதுவது என்பது உண்மைதான். எதிர்ப்புகளை சமாளிக்க வேண்டும் என்பது ஏற்கத்தக்கது. ஆனால் அவை நாமே விரும்பிய இடத்தில் வெளி இட நினைப்பது நமது உரிமை.

said...

குழலி,

இன்று இணையத்தில் எல்லா விடயங்களிலும் தலையிட்டு கொண்டிருக்கும் கூகுள், வீக்கிபீடியாவையும் அமுக்க "Knol" என்பதை கொண்டு வருகிறது. விக்கிபீடியாவை ஆதரிக்கும் எவரும் கூகுளின் இத்தகைய முயற்சியின் நோக்கத்தை உணர்ந்து கொள்ள முடியும். விக்கிபீடியாவின் தகவல்களில் முழுமையான நம்பகத்தன்மை இல்லை என்பது உண்மையே. அதே நேரத்தில் கூகுள் விக்கிபீடியா போன்ற ஒன்றை உருவாக்கி "Corporate" மயமாக்க பார்க்கிறது.

கூகுள் நிறுவனம் பயனர்களின் privacyஐ பெரும்பாலும் கண்டுகொள்வதில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. பயனர்களின் privacyஐ பாதுகாக்கும் நிறுவனங்களின் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்ட பொழுது கூகுள் அதில் கடைசி இடத்தையே பிடித்தது. அமெரிக்காவில் கூகுள் பேசும் பாணி வேறு மாதிரியாகவும், சீனாவில் வேறு மாதிரியாகவும் இருக்கும்.

இதை ஏன் சொல்கிறேன் என்றால் தமிழ்மணத்திற்கு மாற்று Google Readerஆ ? கூகுள் மற்றும் தமிழ்மணத்தை ஒப்பிடுவது கூட மிக மோசமான ஒன்று. அதிலும் தமிழ்மணத்திற்கு மாற்று கூகுள் ரீடர் என்றால் சிரிக்கத்தான் முடிகிறது.

தமிழ் மொழிக்கு தேவையானதை தமிழர்கள் தான் அமைக்க வேண்டும். ஏன் Google Readerக்கு செல்ல வேண்டும் ? கேட்டால் கூகுள் ஒரு tool மட்டுமே என்கிறார். ஏன் கூகுள் மட்டும் தான் toolஆ ? அவ்வாறான ஒன்றை நாமே நம்முடைய தளத்தில் உருவாக்க முடியாதா ? ரவிசங்கரே அவ்வாறான ஒன்றை உருவாக்கலாம். personal web based aggregator நிறைய உள்ளது. அதை install செய்ய ஒரு மணி நேரம் போதுமானது. நம்முடைய தளத்தில் அமைத்து, நாம் எளிதாக பயன்படுத்த முடியும். அவ்வாறான ஒன்றை செய்து பலரையும் அதை பயன்படுத்த செய்வது தான் மாற்றாக இருக்க முடியும்.

ரவிசங்கர் விக்கிபீடியாவையும் முன்னிறுத்துகிறார். மிகப் பெரிய அளவில் Corporate Gaintக எழுந்து நிற்கும் கூகுளையும் முன்னிறுத்துகிறார்.

இன்று கூகுளிற்கே ஒரு "மாற்று" தேவை என்ற கூக்குரல் வலுபெற்று வருகிறது. இவ்வாறான நிலையில் ரவிசங்கரின் கருத்துக்கள் சிரிப்பை தான் வரவழைக்கின்றன.

said...

//அதே நேரத்தில் கூகுள் விக்கிபீடியா போன்ற ஒன்றை உருவாக்கி "Corporate" மயமாக்க பார்க்கிறது.//

இதையே தான் ரவிசங்கரும் தமிழ்மணம் மீதான குற்றச்சாட்டாக சொல்லுகிறார். தமிழ் வலைப்பதிவர்கள் இடையே ‘தமிழ்மணம்' monopoly ஆக செயல்பட விரும்புகிறது என்கிறார்.

தமிழ்வெளி, தேன்கூடு போன்ற திரட்டிகளின் நிலைமை தான் அய்யோ பாவம்.

said...

குழலி, பல விதங்களிலும் சரியான கருத்துக்களும் புரிந்துகொள்ளலுமாய் இருக்கிறது உங்கள் பதிவு. அநேகமாக எல்லாக் கருத்துக்களிலும் எனக்கு உடன்பாடு உண்டு. ஒன்றிரண்டு தவிர. அதை மட்டும் குறிப்பிடுகிறேன்.

"...அது தான் தமிழ்மணத்தில் பதிவர் பட்டியல் இருக்கே அங்கேயிருந்து எடுத்துக்கொள்ளவேண்டியது தானே என்றால் அங்கே காப்பிரைட் பிரச்சினை உண்டு OPML ஆக வெளியிட்டால் அந்த பிரச்சினையில்லை அதனால் தான் ரவிசங்கர் OPML ஆக வெளியிட சொல்கிறார்,..."

OPML பற்றி ரவி சொல்லுவதில் ஒன்றிரண்டு சரியாக இருப்பதில் இது ஒன்றாக இருக்கலாம். இது வெறும் விருப்பப்பட்டியல் தானே. இதில் காப்பிரைட் பிரச்சினை இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. யார் வேண்டுமானாலும், தமக்கு விருப்பமான பட்டியலைச் செய்துகொள்வதில் யாதொரு பிரச்சினையுமில்லையே. தமிழ்மணமோ, தமிழ்வெளியோ, பிற திரட்டிகளோ, இவற்றின் பட்டியலில் இருந்து ஒருவர் ஒவ்வொரு பதிவாய்ச் சேர்த்து ஒரு திறந்த அல்லது மூடிய ஓபிஎமெல் செய்வதில் ஒரு தடையும் இல்லை. அதற்காகச் சற்று மெனக்கெட வேண்டியிருக்கும் என்பது தவிர.

அதே சமயத்தில், சாதாரணப் பதிவர் ஒருவருக்கு இந்த எல்லாமுமடக்கிய ஓபிஎமெல்லால் எந்தப் பயனும் இல்லை. சொல்லப் போனால் தொந்தரவு தான் உண்டு. இதை வைத்து கூகுள் ரீடரோ, தனித்திரட்டியோ செய்தாலும், பிறகு அதிலிருந்து வேண்டாதனவற்றை நீக்க வேண்டிய வேலையும், இதனை இற்றைப் படுத்திக்கொண்டே இருக்க வேண்டிய அவசியமும் என்று ஆரம்பித்து நிறைய இருக்கிறது. நீங்களும் இன்னும் சிலரும் இது பற்றிச் சுட்டிக்காட்டி இருக்கிறீர்கள்.

said...

hello sir!
I came to know about this web site through anandha vikatan. i like tamil language very much. i dont know how to write a tamil essay.how an essay should be? can you suggest me some points?

said...

தமிழமணம் போன்ற திரட்டிகளை பதிவர்கள் தவிர்க்கும் போது அவரிடைய "மாற்று" ஊடாக மக்களை கவரும் உத்தியாகவும் இருக்கலாம்.

அது இல்லாமல் ஒரு திரட்டி செய்யும் வேலையை பலர் இணைந்து அடுத்தவர் பதிவுகளை காண்பிக்கும் நோக்கம் தான் என்னன்னு கேட்கிறேன்.

தமிழ் வலைப்பதிவுலகமே தனக்கு கீழ் எனும் விதத்தில் தான் அவரடு கருத்துகள் இருக்கிறது.

said...

விக்கிபீடியாவிலும் சண்டை நாறிக்கொண்டு இருக்குது. f ன்னு ஒரு பதிவு போட்டுருக்காரு பாருங்க.

//விக்கிபீடியாவின் தகவல்களில் முழுமையான நம்பகத்தன்மை இல்லை என்பது உண்மையே.//

ரிப்பிட்ட்டு..............

அதை நிர்வகிக்கிறவர்களின் கருத்துக்கு ஏற்ற மாதிரி தான் இருக்கிறது.

விக்கிப்பீடியா கட்டற்ற கலைக் களஞ்சியம் என்கிறதே சுத்தப் பொய். அங்கு ராஜாங்கம் பன்னுவர்களது மட்டுமே களஞ்சியம்.