ஜெயலட்சுமி விகடன், பெரியவாள் சின்னவாள் விகடன்
அய்....

அய்..... அய்...... அய்....
இட்லிவடை மட்டும் தான் ரஜினிவிகடன் போடுவாறா நாங்க போடுறோம் பாருங்க ஜெயலட்சுமி விகடன், 'வாள்' விகடன்....
ம்... 1995-96 அட்டையெல்லாம் விகடனின் இணைய பக்கத்தில் இல்லை, இருந்தால் நம்ம பிரேம்ஸ் எத்தனை முறை விகடன் அட்டையில் வந்திருக்கார் என எடுத்து போடுவோம்....
எலேய்... ரஜினி படத்தை அட்டையில போடுறதால வியாபாரமாகுதுன்னா ஜெயலட்சுமி, பிரேம்ஸ், வாள் பக்தர்களுக்கெல்லாம் கெளம்பிடுவாங்க... இவிங்க படத்தை போடுறதால தான் விக்குதுன்னு...
காத கிட்ட கொண்டுவாங்க ஒரு ரகசியம்...
இந்த விசயத்துக்காக விகடன் 3 வருசத்து அட்டையை பார்த்தப்ப முழுக்க ஜெயலலிதா, கருணாநிதி, மருத்துவர் ராமதாசு தான், ஒரு ஒன்னரை வருசமா விஜயகாந்த் இவங்க படம் தான் அதிகம்...

11 பின்னூட்டங்கள்:

said...
இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்

said...

//தமிழ்நெஞ்சம் said...இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்
//
இந்தியனுக்கு சொல்லுங்க வாழ்த்துகளை, எனக்கு வேண்டாம்.. ஏன்னா ஐ அம் ஸாரி ஐ அம் நாட் அன் இன்டியன்....

said...

குழலி back to form :-))))

said...

கலக்குங்க!!! உங்க மூளை என்ன அபாரமா வேலை செய்யுது.
இன்னும் ரஜினி மேட்டர் என்ன என்ன இருக்கோ, எல்லாத்திலேயும் புகுந்து விளையாடுங்க. இப்படியே இன்னும் ஒரு வருஷம் இல்லன்னா அதுக்கும் மேல ரஜினி பற்றி எழுதி கொண்டாடுங்க!!

said...

அப்படி போடும் வோய்! இப்போ குமுதம் கூட "அவா" பத்திரிக்கை ஆகிடுத்து. இந்த வாரம் நம்ம சின்ன அய்யா பொண்ணு பேரு சங்கமித்ரா அப்படின்னு சமஸ்கிருத பேரை போட்டு பத்திரிக்கை விக்கறா. நம்ம அய்யா அப்படி ஒரு பேரை வைப்பாளா?

said...

:))))))))))))

கலக்கல் தல!

said...

எப்படி ஸார் இப்படி? சமயம் பார்த்து போட்டுத் தாக்குறீங்க..?

பத்திரிகைகள் தங்களது வளர்ச்சிக்கு பயன்படுத்தியது ரஜினியை மட்டுமேயல்ல.. பிரபலங்கள் பலரையும்தான்..

அந்தந்த நேரத்துல எது பரபரப்பு நியூஸோ அதனை வெளியிட்டுத்தான் பத்திரிகைகள் காலம் தள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றன. இது எல்லா பத்திரிகைகளுக்கும் உண்டு.

அதுக்காக இட்லிவடைய கோச்சுக்காதீங்க.. அவர் போட்டதும் ஒருவிதத்துல சரிதான்.. நீங்க சொல்லியிருக்குற விதமும் சரிதான்..

said...

எந்த நாட்டு பாஸ்போர்ட் தல?

said...

//எந்த நாட்டு பாஸ்போர்ட் தல?//
மாயூ ஓ... ஓ... மடக்கிப்புட்டிங்களே தல... பாஸ்போர்ட்டா? 1947 க்கு முன்னால காந்தி ஒரு நாட்டோட பாஸ்போர்ட் வச்சிருந்திருப்பாரே, அதுக்காக காந்தி பிரிட்டிஷ் குடிமகன் என்பதை ஒத்தூக்கொண்டாரா? இப்போ கூட புலிகளின் அரசியல் தலைவர் மறைந்த தமிழ்செல்வன் இலங்கை பாஸ்போர்ட் வச்சிருந்தாரே அதுக்காக அவர் இலங்கை குடிமகன்னா? அது மாதிரி இப்போதைக்கு இந்தியா பாஸ்போர்ட் வச்சிருக்கேன்... ஓகே வா?

said...

வாருங்கள் குழலி,

இப்பதான் உங்க பதிவுகளெல்லாம் காணவில்லையென்று ஒரு பதிவிட்டிருந்தேன்.

மீண்டும் பழைய ஃபார்மில் எதிர்பார்க்கிறேன்.

said...

காந்தி பிரிட்டிஷ் ஆட்சியை எதிர்த்து சுதந்திர தனி நாடு கோரிக்கை விடுத்தார். அடுத்தவரும் அப்படியே.

அதனால நீங்களும் அப்படிதான்னு சொல்றீங்களா குழலியாரே?!