திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

திமுகவுக்கு வாக்களிக்க போகும் மதிமுகவினரே சிந்திப்பீர்

இத்தனை நாள் நீங்கள் பேசிவந்த கருணாநிதியின் தமிழின துரோகமும் ஈழத்துரோகமும் கருணாநிதியின் குடும்ப அரசியலும் வைகோ மீதான கருணாநிதியின் வஞ்சமும் உங்களின் ஈகோவின்முன் ஒன்றுமில்லாமல் போய்விட்டதா?

கருணாநிதியின் தமிழின துரோகத்தைவிட உங்கள் ஈகோ பெரிதா?
கருணாநிதியின் ஈழத்துரோகத்தைவிட 21 சீட்டு உங்களுக்கு பெரிதா?
வைகோவுக்கு வந்து சேரவேண்டிய திமுக தலைமை பதவி கருணாநிதியின் குடும்ப அரசியலால் பழிவாங்கப்பட்டதை எதிர்ப்பதைவிட உங்களுடைய ஈகோ பெரிதா?

உங்களின் இனப்பாசம் உண்மையெனில் உங்களின் ஈழப்பாசம் உண்மையெனில் உதயசூரியனுக்கு வாக்களிக்காதீர்கள்... இல்லை எங்களுக்கு எங்களின் 21 சீட்டு ஈகோதான் பெருசு என்றால் உங்களுக்கும் கருணாநிதி ஈழப்பிரச்சினையின் போது நடந்துகொண்ட முறைக்கும் வேறுபாடு எதுவுமில்லை

15 பின்னூட்டங்கள்:

said...

சரிதான் ...! ஆனால் அதிமுகவுக்கு எப்படி வாக்களிப்பது..?

ஒருவேளை அதிமுக ஆட்சியை பிடித்து விட்டால்..! மதிமுக வின் நிலை..? அம்மா வெளியேற்றியது சரிதான் என ஆகிவிடாதா?

said...

எங்களுக்கு 21 சீட்டைவிட தன்மானமும் இன நலனே முக்கியம்.ஆனால் ஜெவுக்கு வாக்களிப்பது என்பது தற்கொலைக்கு சமமே!

said...

நீங்க இப்படி தொடர்ந்து எழுத மாதம் ஒரு முறை தமிழ்நாட்டில் தேர்தல் வந்தால் நல்லாயிருக்கும்.

said...

குழலி, காங்கிரசுடன் சேர்ந்து பாமகவும் அடிவாங்குதே.

1996-ல் தனியான நின்று 4 இடங்களில் வென்ற பாமக, இப்போதும் அது போதும் என்று நினைத்துவிட்டது.

said...

ஈழத் தமிழர்களின் இழபபுகளிலும் கண்ணீரிலும் அரசில் செய்யும் துரோகக்க கூட்டம் தமிழக அரசியல் வியாதிகள் என்பதனை தெட்டத் தெளிவாக கரைகடந்த புயல் புரியவைத்துள்ளார். நன்றிகள். இவர்களை நப்பி நம்பியே அரைவாசி தமிழினம் அழிந்தது இன்னும் அழிந்து கொண்டிருக்கின்றது. இனியும் இந்த அரசியல் வியாதிகளை நம்பி நாமே நம் கண்களை குத்திக் கொள்ளாது இருப்போமாக.

said...

உங்கள் கருத்தோடு நானும் உடன்படுகிறேன்

said...

@ தமிழ் அமுதன்

நீங்கள் சொல்வது சரிதான். இருந்தாலும் அம்மாவிற்கு பின்னர் பாடம் கத்து கொடுக்கலாம். ஆனால் இன்றைய தேவை திமுக வை ஆட்சியிலிருந்து அகற்றுவதே அதற்கு அனைவரும் பாடுபடுவதே

said...

@ நந்தா ஆண்டாள்மகன்

மதிமுகவை அழித்ததில் கலைஞரின் பங்கு அதிகம் என்பதை மறக்கவேண்டாம்

said...

இலங்கை தமிழர் பிரச்சினையில் அவர்களால் அதிகம் பாதிக்கப் பட்டது கருணாநிதிதான்.ராஜிவ் காந்தி கொலையை தனக்கு சாதுரியமாக பயன்படுத்திக் கொண்டவர் ஜெயலலிதா.அதனால் தி.மு.கவிற்கு ஏற்பட்ட தோல்வியை நாடே அறியும்.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் பா எழுதியதற்காக கூப்பாடு போட்டு கருணாநிதியின் அனுதாபத்தினைக் கூட கொச்சைபடுத்தியவர் ஜெயலலிதா.இலங்கை என்பது இந்தியாவின் ஒரு மாகாணம் கிடையாது.இன்னொரு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைகளுக்கு கருணாநிதி என்ன செய்யமுடியும்?

said...

DMK & CONGRES-wins
you and your TAMIL fagots sucks

said...

அ இ அ தி மு க வுக்கு வைகோ மாபெரும் இழப்பு என்று வைத்து கொண்டாலும், வைகோ தரப்பு ஸ்டெர்லைட் மூலம் ஆயிரம் கோடிகள் வந்ததாக சொல்வது ரொம்ப ரொம்ப ஓவராக படவில்லையா?

ஜெவால் தி மு க வை எதிர்த்து கடைசி வரை தாக்கு பிடித்து வெற்றி பெறமுடியுமா, கலைஞரின் அதிகார பலத்துக்கு முன் ஜெயிக்க முடியுமா என்ற ஐயம் ஒவ்வொரு வாக்காளனுக்கும் உள்ளது.

நிலைமை இவ்வாறு இருக்க, இப்படி ஒரு அபாண்ட குற்றசாட்டு ஏன்? இதனால் என்ன சாதிக்க முடியும்?

இதே பணத்தை கருணாநிதிக்கு கூட வைகோவுடன் சேர்த்தே அ இ அ தி மு க வும் வரக்கூடாது என ஸ்டெர்லைட் நிர்வாகம் செய்திருக்கலாமே?

அப்படி வைகோவுக்கு ஸ்டெர்லைட் தான் பிரதான எதிரியாக கருதினால் தூத்துக்குடியில் சுயேட்சையாக களம் இறங்கியிருக்கலாமே...ஏன் செய்யவில்லை?

அப்படியும் இல்லாவிட்டால் இன்று நீலி கண்ணீர் வடிக்கும் வீரமணி, ராமதாஸ், திருமாவளவன், நக்கீரன் கோபால் மூலம் திராவிட இயக்கங்களை ஒன்றின்னைக்க முற்படுவதாக முகாரி பாடும் கருணாவின் ஆதரவைப்பெற்று களம் கண்டு சட்டமன்றத்துக்கு வந்து ஜெ..முதல்வராவும் போது ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராக முழங்க முயற்சித்திருக்கலாமே...?ஏன் செய்ய வில்லை?

அறுபத்தி மூன்று சீட்களை தானமாக இத்துப்போனவர்களுக்கு தந்த கருணாநிதியால் தன அன்பு தம்பிக்கு ஒரு சீட் தரமுடியாதா ..?

கடந்த எம்பி, எம்மெல்யே எலேச்ஷங்களில் தொடர்ந்து தோற்பது மட்டுமல்ல... வெற்றிபெற்று உடன் இருந்தவர்களையும் இழந்தது யார் தப்பு..?

நாஞ்சில் சம்பத் போன்றோர்களை நம்பினால் கட்சி கரை சேராது...வைகோவும் அவரது புதிய ஆதரவார்களுமான முன்னாள் வசவாளர்களும் புரிந்துகொள்ளட்டும்.

said...

ம் ம் கரெக்ட்

said...

போர்க்குற்றவாளி ராஜபட்சே - எனது அனுபவம்.

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_2462.html

said...

அவசரம்: ராஜபட்சேவை தண்டிக்க உதவுங்கள்

http://arulgreen.blogspot.com/2011/04/blog-post_16.html

(இது TIMES வாக்கெடுப்பு அல்ல)

said...

இந்தியாவின் ஒரு மாகாணம் கிடையாது.இன்னொரு நாட்டில் நடக்கும் பிரச்சினைகளைகளுக்கு கருணாநிதி என்ன செய்யமுடியும்?

உங்க கூற்று சரியாகவே இருக்கட்டும். வலிய்க்கப் போய் 1000 முதல் பல்லாயிரம் கோடிகளுக்குண்டான ஆயுதங்கள் கொடுத்து அழிக்க வேண்டிய அவஸ்யம் என்ன? ஏன் இந்தியா பொத்திக்கிட்டு இருக்க வேண்டியது தானே? யார் ஜெயித்து இருப்பார்கள் என்று நாம் பார்த்து இருக்கலாமே?

இந்தியா மட்டும் கடற்பகுதியை கண்டும் காணாமல் இருந்திருந்தால் இந்நேரம் ராஜபக்ஷே வுக்கு பால் ஊற்றி பல வருடங்கள் ஆகியிருக்கும்.

இப்போது கூட அந்நாளு அரசாங்க அலுவலகத்தை கூட அவர் வீட்டுக்குள் வைத்து தான் நடத்துக்கிறார்? ஏன்?

அதான் புலிகள் அழிக்கப்பட்டு விட்டார்களா? ஏனிந்த பயம் இன்னமும் இளங்கோ?