கி,வீரமணி ஒரு மொக்கை, பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி

கி,வீரமணி ஒரு மொக்கை, பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ் அடிவருடி

தந்தி டிவியில் பாண்டே நடத்திய கி.வீரமணி கலந்து கொண்ட கேள்விக்கு என்ன பதில் என்ற நிகழ்ச்சியை பார்த்ததில் இரண்டு விசயங்கள் தெள்ளத்தெளிவானது

1) ஆசிரியர் கி.வீரமணி ஒரு மகா மொக்கை
2) ரங்கராஜ் பாண்டே ஒரு ஆர்.எஸ்.எஸ். சார்பு ஊடக பீரங்கி

மிக மோசமாக நடத்தப்பட்ட இரு தரப்பிலும் எந்த தயாரிப்பும் இன்றி நடத்தப்பட்ட நிகழ்ச்சி போல தெரிகிறது. பாண்டே கேட்ட கேள்விகள் எல்லாம் பெரிய அதிபுத்திசாலி தனமான கேள்விகள் அல்ல, அவைகள் பார்ப்பனர்களால் காலம் காலமாக வீசப்படும் கேள்விகள், இது போன்ற கேள்விகளை பிரின்ஸ் என்னெரசு, நான் போன்றவர்களே சிலகாலங்களுக்கு முன் இணையத்தில் பார்ப்பனர்களால் எழுப்பப்பட்ட போது அனாயசமாக கையாண்டு பதில் கொடுத்திருந்தோம். கீழ்வெண்மணி படுகொலை குறித்த பெரியாரின் அறிக்கையை நானே கி.வீரமணி அவர்களிடம் நேரில் பேசியுள்ளேன், விமர்சனங்களை கூறியுள்ளேன், பாண்டேவின் எந்த கேள்வியும் புதியது அல்ல.

வீரமணி அவர்களின் வயதுக்கும் அனுபவத்துக்கும் பாண்டேவை அனாயசமாக கையாண்டு துவைத்திருக்கலாம், ஆனால் நிகழ்ச்சி முழுவதும் ஒரு கான்ஃபிடன்ஸ் இல்லாமல் அனுபவமற்ற புதியவரை போல பதட்டத்துடன் இருந்தார் கி.வீரமணி, அவருடைய உரைகளை நேரில் கேட்டறிந்தவன், அவருடன் நேரில் பேசியிருந்தவன் என்ற முறையில் இந்த பதட்டம் அவருக்கு எழ வாய்ப்பேயில்லை, ஆனாலும் பதட்டப்படுகிறார் எனில் களநிலவரம் அப்படி, திராவிடம் தற்போது தற்காப்பில் இறங்கியுள்ளது, திராவிடத்தின் அழிவு பாதையை வீரமணி உணர்ந்துள்ளார், அதனால் அவருக்கு பதட்டம் அதிகரிக்கிறது, நேற்று அவர் கொடுத்த பதில்களை பார்க்கும் போது  நிச்சயமாக வீரமணி அவர்கள் எழுதியதாக சொல்லப்படுகிற நூல்கள் எல்லாம் மண்டபத்தில் எழுதி கொடுக்கப்பட்டதாக தான் இருந்திருக்கும் என்ற அய்யம் எனக்கு எழுகிறது.

திராவிடம் குறித்து தமிழ் தேசியம் பார்வையில், தமிழர்கள் பார்வையில் ஏன் தமிழ்நாட்டு மக்கள் பார்வையில் கேட்க ஏராளமான கேள்விகள் இருந்தும் பாண்டே வின் கேள்விகள் எல்லாம் பச்சை பார்ப்பன ஆர்.எஸ்.எஸ் பார்வையில் இருந்துள்ளது.

இங்கே கட்டமைக்கப்படுவது என்னவெனில் திராவிடம் அதை விட்டால் ஆரியம் தான் தமிழ்தேசியம் என்ற ஒரு அரசியலே இல்லை என்பது போன்ற நிலையை காட்ட இரு தரப்பும் விரும்புகிறது.

தமிழர்களே கவனமாக இருங்கள்.

திராவிடமும் ஆரியமும் ஒன்னு, அறியாதவன் வாயில மண்ணு

0 பின்னூட்டங்கள்: