சே குவேராவின் பிறந்த நாள்
சே குவேராவின் பிறந்த நாள்.
காந்தியாகினும், ஃபிடல் காஸ்ட்ரேவாகினும், ஹிட்லர் ஆனாலும் உலகின் மாபெரும் தலைவர்கள், போராளிகள் யாராகினும் அவர்கள் மக்களுக்காக, நாட்டுக்காக மட்டும் தான் போராடியுள்ளார்கள், ஆனால் நாடு கடந்து, இனம் கடந்து, மொழி கடந்து போராடிய ஒரே போராளி சே குவேரா தான்.
மோட்டார் சைக்கிளின் டைரி குறிப்புகள் என்ற ஒரு நூல் சே வை உணரச்செய்தது, அதை படிக்கும் ஒவ்வொருவனும் தானும் போராளி ஆக வேண்டும் என்று ஒரு நிமிடமாவது நினைப்பான். மூச்சுத்திணறல் நோயால் பாதிக்கப்பட்டும் போராடியவர் இவர், நோய்கள் போராளிகளின் போராட்டத்தை தடை செய்யாது என்று நிரூபித்தவர்
இந்த படம் எடுக்கப்பட்டது பாலித்தீவில் குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டவர்களின் நின்வாக எழுப்பட்ட நினைவிடத்தின் முன்பு.
தமிழ்நாட்டில் சீமான் வேறு இவர் படத்தை பனியனில் போட்டுக்கொண்டு சுற்றிக்கொண்டிருந்தார், அதனால் சே குவேரா தமிழ்நாட்டில் என்ன கதி ஆனாரோ என கொஞ்சம் பயமாக உள்ளது
ஆக்கம் குழலி / Kuzhali at Sunday, June 14, 2015 0 பின்னூட்டங்கள்
குறிசொல்: சே குவேரா, பாலி பயணம்
டிமாண்டி காலனி படத்தின் கதை என் வலைப்பதிவில் இருந்து சுட்டது
கடந்த 2 மாதங்களாக கடுமையான வேலை, புதியதொரு சிஸ்டம் என் கீழ் வந்துள்ளதால் அந்த வேலையில் மூழ்கி இருந்ததால் ஃபேஸ்புக்கில் அவ்வளவாக எதுவும் எழுதவில்லை, இந்த நேரத்தில் ஆஸ்த்திரேலியாவில் இருக்கும் சத்யா சிங்கப்பூர் வந்திருந்தார், அவரோடு டீமாண்டி காலனி படம் பார்க்க சென்றிருந்தேன்.
படத்தின் மொத்தமுமே ஒரு முக்கியமான சஸ்பென்ஸ் முடிச்சில் தான் இருந்தது, ங்கொய்யால அந்த சஸ்பென்ஸ் முடிச்சி உடையும் போது தான் தெரிந்தது ஆகா நம்ம கிட்ட இருந்து தான் சுட்டிருக்கிறார்கள் என்று.
அருள்நிதி உடன் கூட இருக்கும் ஒரு நண்பர் ஏற்கனவே இறந்து போனவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டவர் என்பது நாடி ஜோதிடம் பார்க்க போன ஜோசியர் மூலமாக தெரியும், இது தான் படத்தின் சஸ்பென்ஸ் அதுவும் படத்தின் ஒரே சஸ்பென்ஸ்சும் இது தான். இதை தான் ஆவிகளின் புரிதல் (எ) ஷியங் - என்று 2005ம் ஆண்டில் நான் எழுதியிருந்தேன். டீமாண்டி காலனி படத்தை பார்த்தவர்கள் இந்த லிங்கை ஒரு முறை படித்து பாருங்கள், படத்தின் முக்கிய சஸ்பென்ஸ் காட்சியே இது தான், இதன் மேல் தான் மொத்த படத்தின் கதையும் உள்ளது.
வலைப்பதிவுகளின் வெளியான கதையை சுட்டு அதனை டெவலப் செய்து படம் எடுப்பது ஒன்றும் புதிதல்ல, மிகப்பிரபலமாக ஓடிய மைனா படத்தின் மொத்த படத்தின் அடிப்படையே கற்பகம் என்ற வலைப்பதிவர் எழுதிய கதையில் இருந்து தான் சுடப்பட்டது.
படம் குறித்து சொல்வதென்றால், மிகக்குறைந்த செலவில் எடுக்கப்பட்ட படம், நல்ல நடிப்பு ஒரு முறை பார்க்கலாம்.
ஒன்றரை கோடிக்கு பட்ஜெட் என்று சொல்லி தயாரிப்பாளரை ஒத்துக்கொள்ள வைத்து படம் முடிவதற்குள் ஒன்றரை கோடி செலவை 4 கோடிகளாக்கிவிட்டு படம் குப்பையாக வந்திருக்கும் பட்சத்தில் பட்ஜெட் பத்தலை என்று தயாரிப்பாளரை குறை சொல்லும் புது இயக்குனர்களுக்கு இப்படியும் மிகக்குறைவான செலவில் சிம்பிளாக படம் எடுக்கலாம் என்று சொல்லும் பாடம்
ஆக்கம் குழலி / Kuzhali at Saturday, June 13, 2015 0 பின்னூட்டங்கள்
குறிசொல்: டிமாண்டி காலனி
Subscribe to:
Posts (Atom)