தனிக்குடும்பம் (Nuclear Family) ஒரு மாறுபட்ட அலசல்

அமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப்பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...

தனிக்குடும்பத்தின் பிரச்சினைகள் பலரால், பல காலங்களில் பல மாறுபட்ட கோணங்களில் அலசப்பட்டுவிட்டது,

தனிக்குடும்பம் என்கிற கருத்தாய்வு(Concept) 1970 களில் பிரபலமாகத்தொடங்கி இன்றைய நாளில் கூட்டு குடும்பம் என்பதே அரிதாகிவிட்டது....

ஆணால் தனிக்குடும்பத்தின் முக்கியமான சில பிரச்சினைகள் இப்போதுதான் பூதாகரமாக வெளிப்பட தொடங்கியுள்ளது.....

சில ஆண்டுகளுக்கு முன் வரை விடுமுறை காலங்களில் உறவினர் வீட்டிலே குழந்தைகள் தங்கவிடப்பட்டன....

இப்போது அதற்கும் ஆப்பு கோடை பயிலரங்கங்கள் மூலம்.... உறவினர்கள் வெறும் சுப,துக்க நிகழ்சிக்கு வந்து போகும் அளவிலேயே உள்ளது....

அமிர்தமே விடமாவது போல தனிக்குடும்பத்திலே குடும்ப உறுப்பினர்களுக்குள் வைக்கப்படும் அதீத பாசம் அதீத அன்பே இன்று பல பிரச்சினைகளுக்கு காரணமாகியுள்ளது...

நல்லதானாலும் கெட்டதானாலும் எல்லாமே பெற்றோர்களும் அவர்கள் மகன்(கள்), மகள்(கள்) குள்ளேயே என்றாகிவிட்டது....

சாதகத்தில் கணவனுக்கும் மகனுக்கும் கண்டம் உள்ளது என ஒரு சோசியக்காரன் சொல்லக்கேட்டு...

அவர்களுக்கு முன் நான் போகிறேன் என தற்கொலை செய்து கொண்ட ஒரு தாயை என்னவென்று சொல்வது....

தன் கண் தெரியாத மகன்களுக்கு கண் பார்வை கிடைக்க தன் கண்ணை எடுத்து அவர்களுக்கு

வைக்கவேண்டுமென தற்கொலை செய்து கொண்ட தாயின் கதை சமீபத்திலே பத்திரிக்கைகளில் வந்தது....

சமீபத்திலே ஒரு திரைப்படத்திலே ஒரு வசனம் இடம்பெற்றது....

காதலுக்காக உயிர்விட்ட காதலர்களை தான் பார்த்திருப்பீர்,

மகள் ஓடிப்போய்விட்டாள் என்று எந்த பெற்றவர்களாவது செத்து பார்த்திருக்கிறியா? என்று பெற்றோர்களை போட்டு தாக்கினர்(எந்த படம் என யாரேனும் சொல்லுங்களேன்...எமக்கு மறந்துவிட்டது..
இது போலெல்லாம் நம் தமிழ்த்திரைப்பட வசனகர்த்தாவினால் மட்டுமே யோசிக்கமுடியும்)

இதற்கும் பதில் சொல்வது போல மகள் ஓடி(ஓடி என்கிற பதத்தை பயன்ப்டுத்தியமைக்கு மன்னிக்கவும்) போய்விட்டாள் என்று தாய்,தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதை என்ன சொல்ல...

இதற்கெல்லாம் ஒரே காரணம் தான் பெற்றோர்கள் பிள்ளைகள் மேல் வைக்கும் அதீத பாசம் தான்...

தன் மகனுக்கோ மகளுக்கு ஒரு அவதார புருசனோ அல்லது அவதார புருசியோதான் வாழ்க்கைத்துணையாக வரவேண்டுமென இவர்கள் வரன் தேட அடிக்கும் கூத்தை காண கண் கோடிவேண்டும்... அதுவும் காதல் பிரச்சினைகளில் சிக்காத பிள்ளைகளாகவோ, வீட்டிற்கு எந்த பிரச்சினையும் தராத பிள்ளைகளாகவோ இருந்து விட்டால் இது இன்னும் அதிகம்.

இதனால் திருமணங்கள் தள்ளிபோவதும் அதனால் தாய் (மிகவும் பாதிக்கப்படுவது தாய்தான்) மன உளைச்சல் அடைவதும் இன்றைய தனிகுடும்பங்களிலே காணும் சாதாரண விடயம்.

முந்தைய தலைமுறை கூட்டு குடும்பத்திலிருந்து பிரிந்து தனிக்குடும்பம் ஆனது... இப்போதோ தனிக்குடும்பத்திலிருந்து இன்னொரு தனிக்குடும்பம் உருவாகிறது....

கூட்டுகுடும்பத்திலிருந்து தனிக்குடும்பமானபோது இந்த பிரச்சினை கட்டுக்குள் இருந்தது.... இப்போது பூதாகரமாக வெடித்துள்ளது.


வெளிநாட்டிலோ,பெருநகரங்களிலே வேலை செய்யும் மகன், திருமணம் செய்து கொண்டு சென்றுவிட்ட மகள், இந்த நிலையில் மிகவும் அன்பு செலுத்தியவர்கள் அருகே இல்லாமல் இந்த பெற்றோர்கள் படும் துன்பம் மிக அதிகம்.... ஆண்டுக்கு 10-15 நாள் மட்டுமே வரும் மகனுக்காகவும் மகளுக்காகவும் வீட்டிலே தனி அறைகள் கட்டி இந்த பிள்ளைகள் வெப்பம் தாங்கமாட்டாரகளென அதிலே குளுகுளு எந்திரத்தையும் மாட்டிவிட்ட இவர்கள், மீதி நாட்களில் பூட்டிய அந்த அறைகளை பார்த்து ஏங்கிகொண்டே நடையில் (Hall) படுத்துறங்குகின்றனர்.

இனி பிள்ளைகளின் பிரச்சினைகளை அலசுவோம்....

வெளிநாட்டிலே வாழும் நம் மக்கள் அழைப்பு அட்டைகளுக்குதான்(calling card) மிக அதிகம் செலவழிக்கன்றனர்... பெற்றோர்களை பிரிந்து வேலைசெய்யும் நாட்டிலும், ஊரிலும் நிம்மதியாக இருக்காமல் சொந்த ஊருக்கும் வரமுடியாமல் தவிக்கின்றனர்....

பெரும்பாலான திருமணங்களிளே மணமகனின் தாயாரால் பிரச்சினைகள் வரும் அல்லது மணமகனின் தாயார் அதிருப்தியில் இருப்பார்,
இதுவும் கூட மகன் மீது வைக்கும் அதீத அன்பு தான் காரணம்.... இது சில சமயம் மகனின் விவாகரத்துக்கே வழிவகுக்கும்....

இன்றைய தனிக்குடும்ப இளம் தலைமுறையின் முக்கிய பிரச்சினை கருக்கலைதல் (miscarrying).....

கணவன் மனைவி மட்டுமே தனியாக வாழ்கிறார்கள் என்றால் இந்த பாதிப்பு இன்னும் அதிகம்

பெற்றோரை பிரிந்து இருப்பதனால் ஏற்படும் மன உளைச்சல், வேலையினால் ஏற்படக்கூடிய மன அழுத்தம் சரியான கண்கானிப்பு & பராமரிப்பு இன்மை முக்கிய காரணங்கள்.

வேலைக்கு செல்லாமல் இருக்கும் மனைவியர்களிடம் வேறொரு பிரச்சினை..... காலையில் வேலைக்கு செல்லும் கணவன் இரவு சாப்பாட்டிற்கு தானே வருகிறான்.... தன் ஒருத்திக்காக மதியம் எதற்கு சமைப்பது என்று ஏதோ சாப்பிட்டு உடல் பலவீனமடைந்து கருகலைதற்கும் வழிவகுக்கின்றனர்....

அடுத்த தலைமுறை தனிகுடும்ப ஆவர்தனத்திற்கு தயாராக உள்ளது, டாலர்களையும், பெரு நகரங்களிலே ரூபாய்களையும் துரத்திக்கொண்டிருக்கும் இளம் தலைமுறைக்கும்
இதே பிரச்சினைகள் இதைவிட இன்னும் பூதாகரமாக சில ஆண்டுகள் கழித்து வெடிக்கும்.....

இப்படியான பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது.....

பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை எதார்த்த வாழ்விற்கு மனதளவில் தயார் செய்வது....

எந்த காரணம் கொண்டும் பெற்றோர்களிடம் பேசுவதை குறைக்காமல் இருப்பது....

எப்போதும் எதார்த்த வாழ்க்கைக்கு தயாராக இருப்பது...

இன்னும் எப்படியெல்லாம் இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது என பின்னூட்டத்திலே எழுதுங்களேன்......

9 பின்னூட்டங்கள்:

said...

மிக நல்ல அலசல். பதிவு.

23ந் திகதி சிங்கப்பூரில் " எது சிறந்தது - தனிக்குடும்பமா? கூட்டுக்குடும்பமா? " என்று ஒரு பட்டி மண்டபம் நடக்க இருக்கிறது. உங்களது pointகளை பேசிவிட்டு வந்து சொல்கிறேன் - நான் எந்த அணியில் பேசினேன் என்று ! :)))

said...

Hello Kuzali,

Collectivism is slowly eroding to individualism. This concept of life is really a challenge in our society. It is mainly due to the overpowering of western cultural values among eastern thoughts. Maintaining family values would be one option to prevent the erosion of collectivism.

Your article is good with different perspective. It kindles my earlier argument with one of our famous Tamil personality.

said...

Hai Kuzhali,
Very Good article, keep it up

said...

மகள் ஓடிப்போய்விட்டாள் என்று எந்த பெற்றவர்களாவது செத்து பார்த்திருக்கிறியா? என்று (எந்த படம் என யாரேனும் சொல்லுங்களேன்...எமக்கு மறந்துவிட்டது..
இது போலெல்லாம் நம் தமிழ்த்திரைப்பட வசனகர்த்தாவினால் மட்டுமே யோசிக்கமுடியும்)

இதற்கும் பதில் சொல்வது போல மகள் ஓடி(ஓடி என்கிற பதத்தை பயன்ப்டுத்தியமைக்கு மன்னிக்கவும்) போய்விட்டாள் என்று தாய்,தந்தை இருவரும் தற்கொலை செய்து கொண்டதை என்ன சொல்ல...

ennudaya theruvileye irandu udharanangal solla mudiyum. tharkolai seyyavillai enilum vegu viraivil iyarkai maranam adainthavarkal undu. nadappathaidhan vasanakarththaa ezudhiyirukirar.

said...

மிகவும் வித்தியாசமான அலசல்,
பெற்றோர்,பிள்ளைகள் என எல்லா கோனங்களிலும் அலசப்பட்டுள்ளது

said...

குழலி,

இப்பத்தான் பார்த்தேன். நல்ல பதிவு. நல்ல அலசல்.

என்றும் அன்புடன்,
துளசி.

said...

குழலி,
நீங்களே சொல்லிவிட்டீர்கள்:"எப்போதும் எதார்த்த வாழ்க்கைக்கு தயாராக இருப்பது..."
ஒரே சொற்றொடரென்றாலும் 'செமத்தியாகச்' சொல்லிவிட்டீர்களே! அதிலேயே, 'எல்லாம் முடிந்தது"!

said...
This comment has been removed by a blog administrator.
said...

குழலி மிக அருமையான அலசல்.. வாழ்த்துக்கள்

// பெற்றோர்களிடம் தொடர்ந்து பேசி அவர்களை எதார்த்த வாழ்விற்கு மனதளவில் தயார் செய்வது....

எந்த காரணம் கொண்டும் பெற்றோர்களிடம் பேசுவதை குறைக்காமல் இருப்பது... //

கூடவே எங்கேயிருந்தாலும் வாழ்க்கையில் தானெடுக்கும் பல முக்கிய முடிவுகளுக்கும் பிரச்சனைகளுக்கும் பெற்றோரிடம் ஆலோசனைப் பெருவது பெரிய அளவில் இதற்கு உதவும். நீங்க என்ன சொல்றீங்க..?