சகோதர யுத்தம் பற்றி கலைஞரும் அதற்கு ஈழத்தமிழன் பதிலும்

இலங்கை: என்னால் தனித்து ஏதும் செய்ய முடியாது- என்று அறிக்கை வெளியிட்டுள்ள முதல்வர் கருணாநிதி... நல்லா பாருங்க நல்லா பாருங்க கையாலாகதவர்னு சொல்லலை, தனித்து எதுவும் செய்ய முடியாதுன்னு தான் சொல்லியிருக்கார், அப்புறம் கலைஞரை கையாலாகாதவர்னு சொன்னா கலைஞர் மனைவி துணைவி மகன் மகள் கணக்கெல்லாம் காண்பிக்க வந்துடுவாரு பொன்முடி, நெறைய மனைவிகளும் நிறைய புள்ளைகளும் பெத்துக்கிட்டவங்கதான் கையாலாகவறங்க மத்தவங்க கையாலாகாதவங்கன்னா பொன்முடி கணக்குப்படி பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும் எம்ஜியாரும் கையாலாகாதவர்களா?


அந்த அறிக்கையில் புலிகளின் சகோதர யுத்தம் பற்றி இப்படியாக விமர்சித்திருந்தார்...

தமிழர்க்கு உரிமை பெற்றுத் தர போர்க்கோலம் பூண்டவர்கள், பகைவர்கள் மீது பாய்ந்திடாமல்; சகோதர யுத்தம் நடத்துவதிலேயும் அவற்றில் மாண்டு மடியும் தமது பழைய களத் தளபதிகளுக்கு சமாதிகள் அமைத்திடும் பணியிலேயும் காட்டிய விறுவிறுப்பை இன ஒற்றுமையில் காட்டத் தேவையில்லையென்றே கருதிச் செயல்பட்டு;
தமது இனம் அறவே செத்து மடிவது குறித்து அக்கறையற்றே இருந்து விட்டனர்.

அதற்கு Eela Thamilan என்பவர் கொடுத்த பின்னூட்டம் பளார் பளார்னு உட்ட மாதிரி இருந்தது, அது உங்கள் பார்வைக்கு இங்கே...

பதிவு செய்தவர்: Eela Thamilan பதிவு செய்தது: 06 Nov 2008 10:55 pm

உனது பிள்ளைக்கும் உற்றார் உறவினருக்க உன் குடும்ப துதிபாடிகளுக்கும் கீழ்சபையில் எம்பி பதவியும் மத்தியில் அமைச்சர் பதவியும் உன்னால் தனித்து நின்று மத்தியரசிடம் வாங்கி கொடுக்கமுடியும் ஆனால் எந்த இனத்தின் பெயாரால் பிழைப்பு நடத்துகிறாயோ அந்த இனத்திற்கு எதாவது நன்மைசெய்யதான் உன்னால் முடியாது.
விடுதலைப்புலிகள் தமிழினபகைவர்களான சிறிலங்கா படையுடன் மோதமால் வாளதிருக்க. 50 000 மேற்ப்பட்ட சிங்களபடை வாந்திபேதி கண்டா தமிழீழமண்ணில் அழிந்தது! 1500 இந்திபடை தமிழீழத்தில் எப்படி மடிந்தது!
தமிழை தாய் மொழியாக பேசிகொண்டு தமிழினத்தை கருவறுப்பவர்களை தமிழின துரோகிகள் என்று சொல்லாது தமிழர்களின் சகோதரர்கள் என்று உங்களைவிட்டால் எந்த முட்டாளாலும் சொல்ல மாட்டான். விடுதலைபுலிகளுடன் டெலோ தமிழரசுகட்சி தமிழ்காங்கிரஸ் ஈபிஆர்எல்எப் ஈரோஸ் என 5கட்சிகள் புலிகளுடன் கூட்டமைத்திருப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.23 வடகிழக்கு தமிழ்நாடளமன்ற உறுப்பினர்களில் 22 பேர் புலிகளை நிபந்தனையின்றி ஆதரிப்பதை தெரிந்து கொண்டும் ஏன்தான் பொய் பேசுகிறீர்கள்.இது உங்களுக்கு மாபெரும் ஒற்றுமையாக தெரியவில்லையா!
அண்ணா காலத்தில் திமுக வாக இருந்தது உன் காலத்தில் அதிமுக மதிமுக தேதிமுக இதிமுக........ இப்படி சிதறிப்போனாது கூட நீ புலிகளிடம் எதிர்பார்க்கும் ஒற்றுமையால்தானா!.
மகன் ஸ்ராலினிற்கும் அழகிரிக்கும் இடையிலுள்ள உலகமகா ஒற்றுமை தமிழரிடத்தில் இல்லையென்ற சொல்கிறீர். அல்லது மாறன் குடும்பத்திற்கும் கலைஞர் குடும்பத்திற்கும் இடையிலுள்ள இனிய ஒற்றுமையையா புலிகளிடம் எதிர்பார்க்கிறீர்கள்.
மண்ணிற்காகவும் மக்களிற்காகவும் போராடி விழுந்த வீரமறவர்களுக்கு மாவீரர்களிற்கு செய்யும் ஒரு சிறியமரியாதையே கொச்சைபடுத்தும் கேவலம் கெட்ட உன்னை நேற்றுவரை தமிழின தலைவனாக நினைத்தது மதித்தது என் தப்புதான். உயிரோடு இருக்கும் உன்பெயரில் சாலைகளும் கிராமங்களும் (காலனிகளும்) விருதுகளும் உருவச்சிலைகளும் அமைத்து மகிழும் போது அந்த இழிவான சுயதம்பட்டம் உனக்கு உறைக்கவில்லையா? மாவீரர் கல்லறைகளையும் அவர்தன் ஈகத்தையும் இந்த கார்த்திகை மாதத்தில் கொச்சை படுத்திய உனக்கும் சிங்களஇனவெறியர்களிற்கும் இடையே எந்தவொரு வேறுபாட்டையும் என்னால் பார்க்கமுடியவில்லை

12 பின்னூட்டங்கள்:

said...

//பொன்முடி கணக்குப்படி பெரியாரும், அறிஞர் அண்ணாதுரையும் எம்ஜியாரும் கையாலாகாதவர்களா? //

அதானே!!!

என்ன குழலி அந்த அறிக்கையையும், அதில் உள்ள முதல்வரின் அசையும், அசையா சொத்துக்களின் புள்ளிவிவரங்கள் கொடுதிருப்பதை பார்த்துமா யார் எழுதியது என்று தெரியவில்லை?? அவர் கேவலாமா எழுதனுமன்னா தான் பெயரிலேயே எழுதுவார், அதுவே ரெம்ப கேவலமா வந்திட்டா இந்த மாதிரி பொன்முடி, துரைமுருகன் என்று யாரோடய பேரையாவது போட்டு கொடுத்திடுவாரு போல ;)

said...

Eela Thamilan பின்னூட்டம் நச் !

அதை இங்கே போட்டு பார்ப்பன அடிவருடி ஆயிட்டிங்களே குழலி!

said...

//அதை இங்கே போட்டு பார்ப்பன அடிவருடி ஆயிட்டிங்களே குழலி!//

எவன் அவன்? எந்த நாய் வந்து சொல்லுவான்? எவன் எவன் எது எதுக்கு எந்த எந்த பார்ப்பானை அடிவருடுனான் எது எதுக்கு இப்பவும் அடிவருடறானுங்க எல்லா எழவும் தெரியும்... இந்த ஆஃப் பாயில் குஞ்சுகள் குடுக்குற பார்ப்பன அடிவருடி பட்டமெல்லாம் காமெடி நெம்பர் 1....

said...

ஒலக தமிழின தலைவரை இப்படி திட்டினா நீங்க தான் பார்ப்பன அடிவருடி! அது உங்களுக்கு தெரியாதா?? நீங்க பார்ப்பனர் இல்லை அதனால தான் அடிவருடி... இப்ப நிறை ஆப்பாயில் குஞ்சுங்க கெலம்பியிருக்கு தல உங்களுக்கு தெரியாதா??

said...

பதிவு நச்!!! தான். நாளைக்கு மரம்வெட்டி அய்யா சிங்கை (கோபாலபுரம் சிங்கப்பூர் மாதிரி இருக்குன்னு ஒரு நண்பர் சொன்னார்) கோபாலபுரத்தில் நின்று கொண்டு தமிழினத்தைக் காப்பாற்ற திமுகவுடன் ஒரே கொள்கையுடன் ஒரே மனதுடன் போராடுவோம்னு சொன்ன பிறகும் இதே எதிர்வினையை வைத்தால் நன்றி.
++++

ஈழ விடயத்தில் கருணாநிதியின் காமெடி சகிக்கலை என்றாலும், அந்த கிழவனால் அல்லது அந்த கிழவன் ஆட்சியைத் துறக்க வேண்டும் என்று நீங்களும் எதிர்பார்க்கிறீர்களா குழலி.
சகோதர யுத்த வகையறா சமாச்சாரங்கள் கிழவனின் வயது முதிர்ச்சியாலும், வேறு வழியின்றி ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளவேண்டி அவனது மனசாட்சிக்கே விரோதமாக கடிதம் எழுதுகிறான் என்பது தான் உண்மை.ஆனால் இதைப் பயன்படுத்தி தமிழ், தமிழீழம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு நுண்ணறிவும் இல்லாமல் கும்மி அடிக்கும் மதுசூதனன் என்ற தரகுவர்க்கத்தினருக்கு நாம் அவலாக இருக்க வேண்டாமே...இந்த மதுசூது தமிழீழத் தலைவனை சந்தன காட்டு வீரப்பனுக்கு ஒப்பாக வைத்து பதிவிட்டது.

இங்கு கூட, நான் நீங்கள் என்னவோ ஈழத்தின்பால் கொண்ட உணர்வால் கிழவனை சாடுகிறீர்களோ என நினைத்தேன் ஆனால் வீ த பூப்பில் பின்னூட்டமும் அதற்கு நீங்கள் பதிலளிப்பதும் மிக அருமை.

++++

எஞ்ஜாய்

++++

//இப்ப நிறை ஆப்பாயில் குஞ்சுங்க கெலம்பியிருக்கு//

கெலம்பியிருக்க குஞ்சுகளுக்கு சுயமைதுனம் செய்துவிட்டா அடங்கிடுமோ...

ஊரான்வீட்டு நெய்யே எவன் பொண்டாட்டி கையே!!! :D

said...

//கோபாலபுரத்தில் நின்று கொண்டு தமிழினத்தைக் காப்பாற்ற திமுகவுடன் ஒரே கொள்கையுடன் ஒரே மனதுடன் போராடுவோம்னு சொன்ன பிறகும் இதே எதிர்வினையை வைத்தால் நன்றி.
//
அடடே அம்பி நோக்கு மேட்டர் தெரியாதா?

ராமதாஸ்-டி.ஆர்.பாலு சந்திப்பு: திமுக-பாமக சமரசத்துக்கு முயற்சி

http://thatstamil.oneindia.in/news/2008/11/07/tn-dmk-pmk-show-signs-of-moving-closer.html

அதையும் படிச்சிட்டுதான் ஓய் எழுதறேன்...

கோபாலபுரமும் தைலாபுரமும் ஜாயிண்ட்டு அடிச்சாலும் அடிக்கலைன்னாலும் நேக்குன்னு ஒண்ணு இருக்காதோ என்னா?

//தமிழ், தமிழீழம் என்றால் என்ன என்பது பற்றி ஒரு நுண்ணறிவும் இல்லாமல் கும்மி அடிக்கும் மதுசூதனன் என்ற தரகுவர்க்கத்தினருக்கு நாம் அவலாக இருக்க வேண்டாமே...
//
நிச்சயமாக அவ்னுங்களுக்கு அவலாக இருக்கனும்னு இல்லை, ஆனா எப்பவும் பார்ப்பானுங்களுக்கு டொக்கா போயிடும் டொக்கா போயிடுமென்று எந்த சுயபரிசோதனைக்கும் தயாராக இல்லாததே பிரச்சினை அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை, திமுகவின் 10 தவறுகள்னு எழுதனா தமிழின தலைவர் பூணுல் போட்டு உட்டுடறாரு, எல்லா எழவுக்கும் பூணுலையே போட்டு உட்டா பூணுல் போட்டு உடறதுக்கான அர்த்தமே இல்லாம போயிருது...


//இங்கு கூட, நான் நீங்கள் என்னவோ ஈழத்தின்பால் கொண்ட உணர்வால் கிழவனை சாடுகிறீர்களோ என நினைத்தேன்.//

மாமு நான் என்ன நினைக்கிரெங்கறதை நான்தான் சொல்லனும் அதலாம் நீ சொல்லக்கூடாது தப்பு தப்பு

said...

கலைஞர் கட்சிய ஒரு நல்ல இன உணர்வாளர்கிட்ட குடுத்துட்டு காங்கிரஸ்ல சேர்ந்து விடுவது நல்லது.

said...

ஈழதமிழன் பதில் அருமை.

said...

குழலி,
உங்கள் ஆதங்கத்தை புரிந்துகொள்கிறேன் ..ஆனால் we the people எதோ ஈழ விவகாரத்தில் உங்களோடு ஒத்த கருத்துள்ளவர் மாதிரி இங்கு வந்து உசுப்பி விடுவது சகிக்கல்லை.

said...

//உங்கள் ஆதங்கத்தை புரிந்துகொள்கிறேன் ..ஆனால் we the people எதோ ஈழ விவகாரத்தில் உங்களோடு ஒத்த கருத்துள்ளவர் மாதிரி இங்கு வந்து உசுப்பி விடுவது சகிக்கல்லை//

சகிக்காத அளவுக்கு என்ன செய்துவிட்டேன் ஜோ என்று சொல்லமுடியுமா?? ஈழம் பற்றி என் கருத்து என்ன என்று உங்களுக்கு தெரியுமா?? உமக்கு கருணாநிதியை வாழ்த்தினால் மட்டுமே புடிக்கு என்று என்பதால் வாழ்த்துப்பா எல்லாம் எழுத முடியாது! நான் ஒரு சாதாரண குடிமகன் என்ற நிலையில் எனக்கு தோன்றுவதை மட்டுமே சொல்ல முடியும்! உங்களுக்கு அவர் வெல்லம் என்பதால் நான் உங்க தலைவருக்கு துதி பாடி ஒத்து ஊதா நான் ஒன்னும் படித்த முட்டாள் இல்லையே!!

said...

Pot"tea" kadai

////இப்ப நிறை ஆப்பாயில் குஞ்சுங்க கெலம்பியிருக்கு//

கெலம்பியிருக்க குஞ்சுகளுக்கு சுயமைதுனம் செய்துவிட்டா அடங்கிடுமோ...
//

இது தான் தலைவன் எவ்வழி தொண்டன் அவ்வழி என்று சொல்வதோ!

said...

குழலி ஸார்..

இதெல்லாம் அரசியல் வாழ்க்கைல சகஜம் ஸார்..

அவர் அழுதார்னா அழுகுறார்ன்னு உங்களை யார் நினைக்கச் சொன்னது..

அவர் செய்றேன்னு சொன்னா செஞ்சிட்டுத்தான் மறுவேலை பார்ப்பாருன்னு யார் உங்களை நம்பச் சொன்னது..

அவர் ராஜினாமா பண்ணப் போறோம்னு சொன்னவுடனேயே பண்ணப் போறார்ன்னு சிரிக்கச் சொன்னது யாரு..

எல்லாத் தப்பையும் நீங்க பண்ணிட்டு அவரையே குத்தம் சொல்லாதீங்க சாமி..

பாவம் அவரு.. அவரும் எத்தனை டிராமாதான் போடுவாரு.. எத்தனை டிராமாவுக்காகத்தான் வசனம் எழுதுவாரு.. எத்தனை வசனத்துக்குத்தான் குத்துமதிப்பா நடிப்பாரு..

வயசானவரு.. உழைப்பாளி.. நல்லா தமிழ் பேசுவாரு.. நல்லாயிருக்கட்டும்னு வாழ்த்திட்டு வாங்க.. நாம போய் தனியா ஒப்பாரி வைக்கலாம்..