சாருநிவேதிதாவின் ஓX மாறித்தனம்

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தலைப்பில் உள்ள X க்கு பதில் அந்த தமிழ்வார்த்தையை போட்டிருக்க வேண்டும், சாரு நிவேதிதா ரேஞ்சிற்கே இந்த அளவுக்கு தலைப்பு வைக்கலைன்னாலும் சரியா இருக்குமா என்ன?

சாரு இலங்கை பிரச்சினை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்து வந்தார்... ஒரு கடிதம் எழுதினேன்... இதே போல நிறைய பேர் எழுதியிருக்கிறார்களாம்...அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என ஒரு கட்டுரை எழுதியுள்ளார்... அதில் சைலண்ட்டாக ஒரு குசும்பு வேலை செய்துள்ளார்...

தினமலரில் கருணாவின் பேட்டியை வெளியிட்டார்கள். உடனே தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப் பட்டது. ஆக, என்னுடைய நேர்மையை கவிதா போன்ற நல்லிதயங்களுக்கு நிரூபிப்பதற்காக என் உயிரை விட வேண்டுமா?

எனக்கு தெரிந்து இந்த மாதிரியான சம்பவம் நடக்கவில்லை, மேலும் பல நண்பர்களிடம் விசாரித்த போதும் அவர்களுக்கும் தெரியவில்லை, அப்படியே நடந்திருந்தாலும் என்ன சொல்ல நினைக்கிறார் சாரு? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இவர் எழுதினால் இவர் மேல் குண்டு வீசிவிடுவார்கள் என்றா? கக்கா போய்விடுவார்கள் என்றா? இதன் மூலம் போராளி எழுத்தாளர் சாரு கொடுக்கும் மெசேஜ் என்ன? இது ஒரு பச்சை அய்யோக்கியத்தனம்,

விமர்சித்து எழுதினால் கொன்று விடுவார்கள் என்று ஒரு இமேஜை உருவாக்க நினைக்கும் காவாலித்தனம். இது புலி புலி என்று பூச்சாண்டி காட்டும் ஓழ் மாறித்தனம்(சாருவை கலாய்க்கும்போது சாரு ரேஞ்சுக்கு இருக்க வேண்டாமா?).... சுப்புரமணியசாமியும், சோவும், தினமலரும் இன்னபிறவும் உயிரோடு தான் இருக்கிறார்கள்

புலி பிலி என்று பேசிக்கொண்டு மவுனமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு இன அழிப்பிற்கு வக்காலத்து வாங்கும் பொறம்போக்குத்தனம் இது.

புலியை விமர்சி அல்லது விமர்சிக்காமல் போகுமய்யா... ஆனால் இன அழிப்பில் செத்துக்கொண்டிருக்கும் மக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க இதெல்லாம் காரணமென்று சொல்லிக்கொண்டு இருப்பதை பார்த்தால் இனியும் நீங்கள் எங்கேயாவது மனித உரிமை, புரட்சி புண்ணாக்கு, அதிகார ஆமனக்கு, கருத்து சொதந்திரம் மண்ணாங்கட்டி என்று பேசினால் வாயால் அல்ல வாயு பிரியுமிடத்தால் தான் சிரிக்க வேண்டியிருக்கும்...

பின்குறிப்பு:
எந்த தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது என்று தெரியவில்லை ஒரு வேலை இலங்கையிலோ? பல நண்பர்களிடமும் விசாரித்து விட்டேன், கூகிளில் தேடோ தேடென்று தேடிவிட்டேன், மீடியா நண்பர்களிடமும் விசாரித்தேன், கருணா பேட்டியை வெளியிட்டதற்காக தினமலர் அலுவலகத்தில் குண்டுவீசியதாக செய்தி எதுவும் இல்லை, ஆனால் சாரு உறுதியாக சொல்கிறார்,ஒரு வேளை இது உண்மையென்றால் நேரமெடுத்து உறுதி செய்துகொள்ளாத இதற்காக மட்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மற்றபடி சாரு பற்றி பதிவின் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை....

இன்னுமொரு பின்குறிப்பு
சாரு எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றால் இதுவரை சாரு எழுதி தீர்ந்த பிரச்சினை என்ன? தீரவில்லையென்றால் பின் ஏன் எழுதினார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலே இதற்கும்

சாருவுக்கு ஒரு கடிதம் - எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும்

வணக்கம் சாரு,
ஒரு சாதாரண எழுத்தாளனை இதை எழுது இதை எழுதாதே என சொல்ல எவனுக்கும் உரிமையில்லை, ஆனால் ஒரு போராளி எழுத்தாளன், அதிகாரத்துக்கு எதிரான குரல் கொடுப்பவன், முற்போக்கு எழுத்தாளன் எனப்படுபவன் எதையெல்லாம் எழுதுகிறான் என்பது மட்டுமல்ல எதையெல்லாம் கவனமாக தவிர்க்கிறான் என்பதுவும் அதன் பின்னனி அரசியலும் முக்கியமானது மட்டுமல்ல அவைகளும் சேர்ந்தேதான் அந்த எழுத்தாளனின் அதிகாரத்துவத்துக்கு எதிரான குரல், போராளி எழுத்தாளன் என்பவற்றின் உண்மை தன்மையை நிரூப்பிப்பவைகள்...

பின்குறிப்பு:
-----------
நீங்கள் ஈழத்தமிழர் படுகொலை குறித்தும் பற்றி எரியும் அப் பிரச்சினை பற்றியும் எழுதவில்லை

தமிழக அரசின் நியமன பதவியை தூக்கியெறிந்த பாவலர் அறிவுமதி


காசு பணத்திற்காகவும், புகழ் பதவிக்கும் ஆசைப்படாத அது கிடைத்தாலும் கொள்கைக்காக அதை தூக்கி எறிவது மிகச்சிலர் தான்...

கொள்கையில் தொழில் செய்து கொண்டிருக்கும் காலத்தில் தொழிலில் கொள்கையை கடைபிடிப்பவர் பாவலர் அறிவுமதி , இவர் மட்டும் திரைத்துறையில் கொள்கை அட்ஜெஸ்ட் செய்திருந்தால் எத்தனையோ பணம் சம்பாதித்திருப்பார், ஆனால் கொள்கைக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டில்லை...

போராளி எழுத்தாள புடுங்கிகளும், அதிகாரத்துவத்துக்கெதிரான எழுத்தாளன் என்னும் புடுங்கிகளும் ஈழப்படுகொலை விசயத்தில் கள்ள மவுனம் சாதிக்கின்ற முற்போக்கு எழுத்தாள புடுங்கிகள் இருக்கும் நாளில் ஒரு கௌரவ பதவியை தூக்கியெறிந்திருக்கிறார் பாவலர் அறிவுமதி

ஜூவி செய்தியில் வெளியான தகவல் சமீபத்தில் திரைப்பட விருதுகளைத் தேர்வுசெய்யும் குழுவில் பாவலர் அறிவுமதியை உறுப்பினராக நியமித்திருந்தது தமிழக அரசு. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்த அறிவுமதி, தன் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிவிட்டார். கடிதம் மட்டுமல்ல... ஈழப் பிரச்னையில் தி.மு.க-வின் துரோகத்தைக் கண்டித்து ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதிவருகிறாராம் அறிவுமதி. 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் 'கிளஸ்டர்' குண்டுகளாக தி.மு.க-வைத் தாக்கும்' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இதே ரீதியில், இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து வந்த தமிழக காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான தமிழருவி மணியன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அத்தனை பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார்

அறிவுமதி அண்ணா உன் தம்பிகளில் ஒருவனாக இருக்க பெருமைப்படுகிறேன்..

மீடியா மாஃபியா

முத்துகுமார் செய்திகள் இருட்டடிப்பு




















முத்துகுமார் செய்திகள் இருட்டடிப்பு







கலைஞரை கும்மாமல் ஹர்பஜன்சிங்கையா கும்முவது?

ஈழப்பிரச்சினையில் அனேகமாக கலைஞர் ஜூரம் பல உடன்பிறப்புகளுக்கு தனிந்துவிட்டாலும் கலைஞரை கும்முவது தவறு என்றோ அல்லது இன்னமும் மற்றவர்களை கைகாட்டி அவர்களை கலைஞரை கும்மும் அளவுக்கு கும்மாமல் கலைஞரை மட்டும் இப்படி கும்முவது ஏனென்ற மிகக்கடுமையான கவலை வெகு சில உடன்பிறப்புகளை வாட்டோ வாட்டென்று வாட்டுகிறது.

ஒவ்வொரு கட்சிக்கும் ஒவ்வொரு தனித்துவம் அல்லது ஒவ்வொரு முதன்மையான கொள்கை அல்லது கடமை இருப்பதாக அடையாளப்படுத்திக்கொள்ளப்படுகிறது. ஒரு கட்சியோ தலைமையோ அந்த அடையாளத்திலிருந்து விலகும் போது மற்றவர்களும் அதையே செய்திருந்தாலும் மற்றவர்களை விட இவர்களே மிகக்கடுமையாக விமர்சிக்கப்படுவார்கள்.

கம்யூனிஸ்ட்கள் முதன்மை கொள்கையாக கொள்வதும் அவர்களின் அடையாளமும் தொழிலாளர் முன்னேற்றமும் பாட்டாளி வர்கத்தினை வளமை படுத்துவதும் முதலாளித்துவத்தை எதிர்ப்பதும், குஜராத் எங்கும் சிறப்பு பொருளாதார மண்டலம் வைத்து விளைநிலங்களை முதலாளிகளுக்காக தாரை வார்த்த போது பாஜக விமர்சிக்கப்பட்டதை விட நந்திகிராமில் கம்யூனிஸ்ட்கள் முதலாளித்துவத்துக்கு வக்காலத்து வாங்கியபோது கம்யூனிஸ்ட்கள் விமர்சிக்கப்பட்டது மிக மிக அதிகம், ஏனென்றால் பாஜக பாட்டாளி நலம் என்று சொல்லி ஆட்சியை பிடிக்கவில்லை, பாஜகவின் கொள்கையும் அதுவல்ல, ஆனால் கம்யூனிஸ்ட்கள் பாட்டாளிகள் நலமென்றும், விவசாயிகள் நலமென்றும் சொல்லி அதனால் ஓட்டு வாங்கி ஆட்சியை பிடித்தவர்கள். இப்படிபட்ட நிலையில் ஒரு கம்யூனிஸ்ட் தொண்டர் வந்து பாஜகவை கும்மாமல் கம்யூனிஸ்ட்களை கும்முகிறார்களே என்று வருத்தப்பட்டால் காமெடியாக இருக்குமா? இருக்காதா?

டெண்டுல்கர் ரன் குவிப்பதற்காகவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், ஹர்பஜன் சிங் பந்து வீசவே அணியில் சேர்க்கப்பட்டிருப்பவர், டெண்டுல்கர் சரியாக ரன் குவிக்கவில்லை அதனால் அவரை அணியை விட்டு தூக்குங்கள் என்றால் ஹர்பஜன் கூட தான் பேட்டிங் செய்தார் அவரும் தான் ரன் அடிக்கவில்லை அவரை அணியில் வைத்துக்கொண்டு டெண்டுல்கரை தூக்க சொல்றாங்களே என்று டெண்டுல்கர் ரசிகர்கள் கதறினால் எப்படியிருக்கும்?

அப்படித்தான் தமிழர்களுக்காக என்றும் தமிழுக்காக என்றும் தமிழின உணர்வையும் முன்னிறுத்தி அரசியல் செய்த கருணாநிதி இனஅழிப்பில் இருக்கும் ஈழத்தமிழருக்காக தம்மால் முடிந்த விசயங்களை கூட செய்யாமல் பதவிக்காக மூடிக்கொண்டு இருக்கும் போது தமிழுக்காவும், தமிழ் உணர்வுக்காகவும் மற்றவர்களை எல்லாம் விட கருணாநிதியை ஆதரித்தவர்கள் மற்றவர்கள் எல்லோரையும் விட கருணாநிதியை அதிகமாக கும்மு கும்மென்று கும்மத்தான் செய்வார்கள் உடன்பிறப்பே!

சரி இவ்வளவு நாள் தமிழுக்காக கருணாநிதியை பாராட்டாதவர்களும் ஆதரிக்காதவர்களும் கும்முகிறார்களே என்றால் அவர்களுக்கு இது ஒரு வாய்ப்பு , கருணாநிதியின் தமிழ் பற்றை பாராட்டியவர்கள் தான் கருணாநிதியை கும்மலாமென்றால் திக காரர்கள் இந்து மதத்தின் அருமை பெருமைகளை பாராட்டியிருந்தால் தான் இந்து மதத்தை விமர்சிக்கலாமென்பதோ, ஜெயலலிதாவின் துணிச்சலான(?) நடவடிக்கைகளை பாராட்டியவர்கள் மட்டும் தான் ஜெயலலிதாவின் அகங்கார அராஜகத்தை விமர்சிக்கலாம் என்று சொல்வதற்கு இணையானது, இது கருணாநிதி எதிர்ப்பாளர்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பு, அந்த வாய்ப்பை அவர்களுக்கு அள்ளி வழங்கியது திருவாளர் மு.கருணாநிதியே...

வைகோவை ஏனய்யா கும்ம மாட்டேங்கிறார்கள் என்றால் "வர்றார் சண்டியர்" என்று நெப்போலியன் படத்திற்கு வைத்த பெயர் பிரச்சினை ஆகவில்லை ஆனால் "சண்டியர்" என்று கமல் பெயர் வைத்த போது பிரச்சினையானது, மேலும் வைகோ தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக பேசிக்கொண்டுதான் இருக்கிறார் என்பது மட்டுமல்ல அவருக்கு இருக்கும் அதிகாரத்துக்கு அவ்வளவு தான் செய்ய முடியும்.

பாமக இராமதாசை ஏன் கம்மியாக கும்முகிறார்கள் என்றால் நீயே சொல் உடன்பிறப்பே திமுகவையும் பாமகவையும் ஒரே தட்டில் வைத்தா பார்த்தாய்? நீ மட்டுமல்ல பெரும்பாலானோர் அப்படித்தான் என்பதால் அவருக்கு கொஞ்சம் கும்முதல் லைட்டா தான் இருக்கும். அது கூட அவர்கள் போடும் இரட்டை வேடத்தினால் தான்.

ஜெயலலிதாவை ஏன் கும்மவில்லை என்றால் ஜெயலலிதாவின் அரசியலே வேறு, ஜெயலலிதாவின் தமிழ் ஆதரவற்ற அல்லது எதிர்ப்பு அரசியலுக்காகத்தான் தமிழ் உணர்வாளர்கள் ஜெயலலிதாவை விட்டுவிட்டு கருணாநிதியை ஆதரிக்கிறார்கள்.

உடன்பிறப்பே, தமிழை வைத்து அரசியல் செய்து தமிழுக்காகவே ஆதரிக்கப்பட்ட கருணாநிதி தமிழருக்கு பாதகம் செய்தால் மற்ற எல்லோரையும் விட அவர் ஆதரிக்கப்பட்ட தமிழரசியலுக்காகவே அதிகமாக கும்மப்படுவார்....

சரியாக ரன் குவிக்காததற்கு டெண்டுல்கர் தான் கும்மப்படுவார், பவுலர் ஹர்பஜன்சிங் அல்ல...

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் முழு அடைப்பு நடைபெறவிருக்கிறது, இந்த அமைப்பின் முக்கிய கட்சியாக பங்கேற்றுள்ளது பாமக, ஆனால் இங்கு மட்டுமல்ல இனவாத சிங்கள அரசிற்கு தமிழர்களை அழிக்க ஆயுத உதவி, ரேடார், பீரங்கி டாங்கி அனுப்புதல் என்று மட்டுமல்லாமல் ஆள் உதவியும் செய்து கொண்டிருக்கும் மத்திய அரசிலும் பங்காளியாக உள்ளது.

பாமக தம்மை வெறும் சாதிக்கட்சியாக மட்டுமே அடையாளம் காட்டிக்கொண்டிருந்தால் யாரும் கேள்விகேட்க போவதில்லை, ஆனால் தமிழ்பாதுகாப்பு இயக்கம் ஆரம்பித்து அதன் முக்கிய கூட்டாளியாகவும் செந்தமிழில் தொலைகாட்சியும், பத்திரிக்கையும் நடத்தி தமிழை பாதுகாப்பதாக கூறும் பாமக ஈழத்தமிழர்களை அழிக்கும் மத்திய அரசிற்கு பங்காளியாக முட்டுக்கொடுத்துக் கொண்டே இங்கே ஈழத்தமிழர் பாதுகாப்பு இயக்கத்தில் பங்கெடுப்பது மிக கடுமையான முரணாக உள்ளது.

ஆட்சியும் அதிகாரமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு தேவை, நீக்குபோக்கான நிலைப்பாடும், அதிகாரத்திற்கான சமரசங்கள் தேவை, ஆனால் எதை எதற்காக சமரசம் செய்கிறோம் என்பது மிக முக்கியமானது, தமிழர் அழிவை தடுப்பதை தாண்டி வேறென்ன காரணத்துக்காக சமரசம் செய்து கொண்டுள்ளார்கள் தற்போது அமைச்சரவையில் தொடர்வதற்கு.

நாங்கள் ஆறு உறுப்பினர்கள் வெளியேறினால் மத்திய அரசாங்கம் கவிழுமா? என்று எதிர்கேள்வி கேட்கலாம், ஆனால் இனவாத சிங்கள அரசிற்கு உதவி செய்ய்யும் மத்திய அரசாங்கத்தில் இருந்து கொண்டு ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேசுவதே இரட்டை வேடமாக உள்ளது.

முந்தைய காலங்களில் சட்டமன்றத்திலேயே ஈழத்தமிழர்களுக்கும் புலிகளுக்கு எதிராக ஜெயலலிதா கொண்டுவந்த தீர்மாணத்திற்கு எதிராகவும் புலிகளுக்கு ஆதரவாகவும் பேசியிருக்கலாம், கடந்த கால கதைகளை சொல்வதை விட தற்போது மத்திய அரசிலிருந்து விலகாமல் பாமக ஈழத்தமிழர் பாதுகாப்பு பற்றி பேச பாமகவிற்கு எந்த அருகதையுமில்லை.

கலைஞரின் தமிழ்துரோக அரசியலை சுட்டிக்காட்டும் விரல்கள் பாமகவையும் சுட்டி காட்டும் என்பதும் உறுதி.

பிப்ரவரி 4ம் தேதி ஈழத்தமிழ் பாதுகாப்பு இயக்கம் முழு அடைப்பு போராட்டம் நடத்தும் முன் பாமக மத்திய அரசிலிருந்து வெளியேறினால் மட்டுமே பாமகவிற்கு தார்மீக உரிமையுள்ளது, இல்லையென்றால் எத்தனையோ பேர் தமிழன் தலையில் அரைத்த மிளகாய் கணக்கில் பாமகவும் சேர்ந்து கொள்ளட்டும்.

உதயகுமாரிலிருந்து முத்துகுமார் வரை - கலைஞரின் பிண அரசியல்


முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாது, இவ்வாறு அரசியலாக்குவது காலம் காலமாக நாம் கட்டிக் காத்து வரும் பண்பாட்டிற்கே விரோதமானது, சொன்னது வேறு யாருமில்லை அன்று உதயகுமார் பிணத்தின் மீதும், ஜெயலலிதா ஆட்கள் கொளுத்திய மூன்று மாணவிகளின் பிணத்தின் மீது இடைத்தேர்தலுக்காகவும், மதுரையில் அஞ்சாநெஞ்சன் அனுப்பிய ரவுடிகள் கொளுத்திய மூன்று ஊழியர்கள் பிணத்தையும் வைத்து அரசியல் நடத்திய அதே தமிழின தலைவர் கருணாநிதி தான் சொல்கிறார் முத்துக்குமார் மரணத்தை வைத்து அரசியல் செய்யக்கூடாதாம்...

முத்துக்குமார் இறுதி மரியாதை செலுத்துமிடத்தில் நேற்று திமுக சட்ட மன்ற உறுப்பினர் பாபுவுக்கு கிடைத்த கவனிப்பு அப்படியல்லவா இருந்தது, அதான் தலைவர் பொங்கி எழுந்து பண்பாடு பற்றியெல்லாம் கிளாஸ் எடுக்கிறார்.

மற்றவைகள் எல்லாம் விவரமாக தெரிந்திருக்கும் அதென்ன உதயகுமார் மரணம் என்று தெரியாதவர்களுக்கு இன்னமும் கடலூர் மாவட்டங்களில் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு செய்தியாக சொல்லப்படும் மூன்று கொலைகள், முதல் கொலை சிதம்பரத்தில் நெருப்பில் புகுந்து கடவுளோடு சேர்ந்த நந்தனார் என்ற கதைகளை ஒரு வரியில் உடைத்து சொல்லுவார்கள் தீட்சிதர பசங்க நந்தனாரை எரிச்சிட்டு நெருப்புல போயிட்டாருன்னு கதை உடுறானுங்க... இரண்டாவது கொலை வடலூர் வள்ளலார் இராமலிங்க அடிகளார் ஜோதியில் ஐக்கியமானார் என்பதை, பாப்பார பசங்களோட அடியாளுங்க அடிச்சி கொண்ணுட்டானுங்க வள்ளலாரை என்பார்கள், மூன்றாவது கொலை தான் உதயகுமார், கலைஞரின் வீரபிரதாபங்களில் கட்சி வித்தியாசமின்றி கடலூர் மாவட்டத்தில் சொல்லும் ஒரு விசயம் கலைஞருக்கு அண்ணாமலை பல்கலை கழகம் டாக்டர் பட்டம் வழங்கிய போது அதை கடுமையாக எதிர்த்து போராடிய மாணவர்களில் அடித்துக் கொள்ளப்பட்டவர் உதயகுமார், நெல்லிக்குப்பத்தை சேர்ந்த உதயகுமாரின் பெற்றோர்களிடம் உதயகுமார் தன் மகன் அல்ல என்று எழுதி வாங்கப்பட்டது தான் இதில் உச்சகட்ட கொடுமை.

இன்றைய காலத்தில் உள்ளது போல உடனடி செய்திகள் தொலைக்காட்சி, இணையமென இல்லாமல் உதயகுமார் காலத்தை போல முதல்நாள் நடக்கும் நிகழ்வுகள் மறுநாள் செய்தி தாளில் தான் காண முடியுமென்றால் அதிகார பலம் முத்துக்குமார் தீக்குளிப்பை காதல் தோல்வியால் எடுத்த முடிவென்றல்லவா இருட்டடிப்பு செய்திருப்பார்கள்.

இதே கலைஞர் எதிர்கட்சியக இருந்திருந்தாலோ கலைஞர் புறங்கையை நக்கியவர் என முத்துக்குமாரால் விமர்சிக்கப்படாமலிருந்திருந்தாலோ முத்துகுமார் பிணத்தை வைத்து என்ன அரசியல் செய்திருப்பார் என நிச்சயம் யோசிக்க முடிகிறது.

தன் பிணத்தை கைப்பற்றி துருப்பு சீட்டாக வைத்து போராடுங்கள் என்றார் முத்துக்குமார், இப்படியாக பிணங்களின் மீது அரசியல் செய்த தமிழின தலைவர் தான் சொல்கிறார்
பிணத்தின் மீது அரசியல் செய்யக்கூடாது என்றும் பண்பாடு என்றும்.


உடன்பிறப்புகளே நீங்க திமுக கட்சி பொறுப்பில் இருக்கின்றீரா? கவுன்சிலராகவோ அதற்கு மேலும் பதவி வகிக்கின்றீர்களா? உங்களின் இருப்பை புரிந்து கொள்ள முடிகிறது, கலைஞரின் அரசியலுக்கு எதிராக பேசிவிட்டு கட்டிட காண்ட்ராக்டோ கக்கூஸ் காண்ட்ராக்ட்டோ எடுக்க முடியாமல் உங்கள் பிழைப்பில் மண் விழுந்துவிடுமென்பதால் உங்களை புரிந்து கொள்ள முடிகிறது.

இவையெதுவும் இல்லாமல் இருக்கும் கலைஞரின் ரசிக கண்மணிகளே, கலைஞர் எது செய்தாலும் அதில் ஒரு காரணம் இருக்கும், கலைஞரை எதிர்ப்பவர்கள் எல்லாம் பார்ப்பனர் அல்லது பார்ப்பன அடிவருடிகள், ஆரிய சதி அல்லது ஏதோ ஒரு இயக்க முத்திரை அல்லது அனுதாபி அல்லது ஏதேனும் ஒரு சாதி முத்திரை என மூடிய மனதுடன் திரைப்பட ரசிக விசிலடிச்சான் குஞ்சுகளுக்கு இணையாக இருக்கும் கலைஞர் ரசிகர்களே, தமிழின தலைவரை நார் நாராக கிழித்திருக்கும் முத்துக்குமாருக்கு எந்த சாதி முத்திரை, எந்த இயக்க முத்திரை தரப்போகின்றீர்கள்?

கலைஞரின் ரசிகர்களே திறந்த மனதுடன் யோசியுங்கள், தமிழர்களுக்கான அரசியல் என்ற ஒற்றை காரணத்திற்காக மனசாட்சியை மூடி எத்தனை விசயங்களில் கலைஞரை ஆதரித்திருப்போம், ஆனால் அந்த தமிழர்களுக்கான அரசியலே இல்லாமல் இருக்கும் போது எதற்காக ஆதரிக்க வேண்டும்?

ஜெயலலிதாவின் எதிர் அரசியல் என்ற சப்பைகட்டு காரணம் சொல்லாதீர்கள், முழுக்க தேநீர்
நிரம்பியிருக்கும் கோப்பையில் வேறு எவ்வளவு ஊற்றினாலும் கீழே வடியத்தான் செய்யும், அது போல கலைஞர் உங்கள் மனதில் நிரம்பியிருக்கும் வரை வேறு மாற்றுகளை சிந்திக்க கூட செய்யாது உங்கள் மனம், கொஞ்சம் உங்கள் மனதை காலி செய்துவிட்டு சிந்தியுங்கள், கலைஞர் என்ற இந்த துரு பிடித்த போர் வாள் இன்னமும் உங்களுக்கு தேவையா என்று?

முத்துக்குமாரின் மரண சாசனத்தை இங்கே படிக்கலாம்