தமிழக அரசின் நியமன பதவியை தூக்கியெறிந்த பாவலர் அறிவுமதி
காசு பணத்திற்காகவும், புகழ் பதவிக்கும் ஆசைப்படாத அது கிடைத்தாலும் கொள்கைக்காக அதை தூக்கி எறிவது மிகச்சிலர் தான்...
கொள்கையில் தொழில் செய்து கொண்டிருக்கும் காலத்தில் தொழிலில் கொள்கையை கடைபிடிப்பவர் பாவலர் அறிவுமதி , இவர் மட்டும் திரைத்துறையில் கொள்கை அட்ஜெஸ்ட் செய்திருந்தால் எத்தனையோ பணம் சம்பாதித்திருப்பார், ஆனால் கொள்கைக்காக எல்லாவற்றையும் சகித்துக்கொண்டில்லை...
போராளி எழுத்தாள புடுங்கிகளும், அதிகாரத்துவத்துக்கெதிரான எழுத்தாளன் என்னும் புடுங்கிகளும் ஈழப்படுகொலை விசயத்தில் கள்ள மவுனம் சாதிக்கின்ற முற்போக்கு எழுத்தாள புடுங்கிகள் இருக்கும் நாளில் ஒரு கௌரவ பதவியை தூக்கியெறிந்திருக்கிறார் பாவலர் அறிவுமதி
ஜூவி செய்தியில் வெளியான தகவல் சமீபத்தில் திரைப்பட விருதுகளைத் தேர்வுசெய்யும் குழுவில் பாவலர் அறிவுமதியை உறுப்பினராக நியமித்திருந்தது தமிழக அரசு. இந்த நிலையில், இலங்கைப் பிரச்னையில் முதலமைச்சர் கருணாநிதியின் செயல்பாடுகளால் கடும் அதிருப்தியடைந்த அறிவுமதி, தன் பதவியை ராஜினாமா செய்து முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பிவிட்டார். கடிதம் மட்டுமல்ல... ஈழப் பிரச்னையில் தி.மு.க-வின் துரோகத்தைக் கண்டித்து ஒரு கவிதைத் தொகுப்பையும் எழுதிவருகிறாராம் அறிவுமதி. 'இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் வெளியிடப்படும் இந்தத் தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கவிதையும் 'கிளஸ்டர்' குண்டுகளாக தி.மு.க-வைத் தாக்கும்' என்கிறார்கள் தமிழ் உணர்வாளர்கள். இதே ரீதியில், இலங்கைப் பிரச்னையில் மத்திய அரசின் அணுகுமுறையைக் கடுமையாக விமர்சித்து வந்த தமிழக காங்கிரஸின் பொதுச்செயலாளரும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினருமான தமிழருவி மணியன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவி உட்பட அத்தனை பொறுப்புகளில் இருந்தும் விலகிவிட்டார்
அறிவுமதி அண்ணா உன் தம்பிகளில் ஒருவனாக இருக்க பெருமைப்படுகிறேன்..
8 பின்னூட்டங்கள்:
பாவலர்.அறிவுமதிக்கும், நேர்மையான அரசியல் தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கங்கள்!
அவர்கள் இருவருக்கும் எனது வணக்கங்கள்.
தமிழருவி மணியனின் இது சம்பந்தமான பேட்டியை படிக்கும் போதே நி்னைத்தேன், அவரால் இனி காங்கிரஸில் அதிக காலம் இருக்க முடியாது என்று. அவர் நியாயமாக பேசி வருகிறார் அல்லவா அதனால்தான்.
தங்களின் தமிழ் உணர்வுக்கு பாராட்டுகள் ....வாழ்க வளர்க உங்கள் பணி...ஏனைய தமிழ்நாட்டு உறவுகளும் இவர்களை பின்பற்றி ஈழத்தமிழனை காக்க குரல் கொடுக்க முன்வரவேண்டும் என்பதே ஈழத்தமிழனின் இன்றைய வேண்டுதல்....செய்வீர்களா??????
மெய் சிலிர்த்து விட்டேன்
பாவலர் அறிவுமதி வாழ்க
தமிழருவி மணியனின் வாழ்க
வாழ்க உமது பனி
பெயர் சொல்லும் இடத்தில இல்லாத ஒரு தம்பி
thanks
thanks
thanks so much
பாவலர்.அறிவுமதிக்கும், நேர்மையான அரசியல் தலைவர் தமிழருவி மணியன் அவர்களுக்கும் தலைதாழ்ந்த வணக்கங்கள்!
Post a Comment