சாருநிவேதிதாவின் ஓX மாறித்தனம்

உண்மையில் சொல்ல வேண்டுமென்றால் தலைப்பில் உள்ள X க்கு பதில் அந்த தமிழ்வார்த்தையை போட்டிருக்க வேண்டும், சாரு நிவேதிதா ரேஞ்சிற்கே இந்த அளவுக்கு தலைப்பு வைக்கலைன்னாலும் சரியா இருக்குமா என்ன?

சாரு இலங்கை பிரச்சினை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்து வந்தார்... ஒரு கடிதம் எழுதினேன்... இதே போல நிறைய பேர் எழுதியிருக்கிறார்களாம்...அதற்கெல்லாம் பதில் சொல்கிறேன் என ஒரு கட்டுரை எழுதியுள்ளார்... அதில் சைலண்ட்டாக ஒரு குசும்பு வேலை செய்துள்ளார்...

தினமலரில் கருணாவின் பேட்டியை வெளியிட்டார்கள். உடனே தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப் பட்டது. ஆக, என்னுடைய நேர்மையை கவிதா போன்ற நல்லிதயங்களுக்கு நிரூபிப்பதற்காக என் உயிரை விட வேண்டுமா?

எனக்கு தெரிந்து இந்த மாதிரியான சம்பவம் நடக்கவில்லை, மேலும் பல நண்பர்களிடம் விசாரித்த போதும் அவர்களுக்கும் தெரியவில்லை, அப்படியே நடந்திருந்தாலும் என்ன சொல்ல நினைக்கிறார் சாரு? ஈழத்தமிழர் பிரச்சினை பற்றி இவர் எழுதினால் இவர் மேல் குண்டு வீசிவிடுவார்கள் என்றா? கக்கா போய்விடுவார்கள் என்றா? இதன் மூலம் போராளி எழுத்தாளர் சாரு கொடுக்கும் மெசேஜ் என்ன? இது ஒரு பச்சை அய்யோக்கியத்தனம்,

விமர்சித்து எழுதினால் கொன்று விடுவார்கள் என்று ஒரு இமேஜை உருவாக்க நினைக்கும் காவாலித்தனம். இது புலி புலி என்று பூச்சாண்டி காட்டும் ஓழ் மாறித்தனம்(சாருவை கலாய்க்கும்போது சாரு ரேஞ்சுக்கு இருக்க வேண்டாமா?).... சுப்புரமணியசாமியும், சோவும், தினமலரும் இன்னபிறவும் உயிரோடு தான் இருக்கிறார்கள்

புலி பிலி என்று பேசிக்கொண்டு மவுனமாக நடந்து கொண்டிருக்கும் ஒரு இன அழிப்பிற்கு வக்காலத்து வாங்கும் பொறம்போக்குத்தனம் இது.

புலியை விமர்சி அல்லது விமர்சிக்காமல் போகுமய்யா... ஆனால் இன அழிப்பில் செத்துக்கொண்டிருக்கும் மக்களை பற்றி ஒரு வார்த்தை கூட பேசாமல் இருக்க இதெல்லாம் காரணமென்று சொல்லிக்கொண்டு இருப்பதை பார்த்தால் இனியும் நீங்கள் எங்கேயாவது மனித உரிமை, புரட்சி புண்ணாக்கு, அதிகார ஆமனக்கு, கருத்து சொதந்திரம் மண்ணாங்கட்டி என்று பேசினால் வாயால் அல்ல வாயு பிரியுமிடத்தால் தான் சிரிக்க வேண்டியிருக்கும்...

பின்குறிப்பு:
எந்த தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப்பட்டது என்று தெரியவில்லை ஒரு வேலை இலங்கையிலோ? பல நண்பர்களிடமும் விசாரித்து விட்டேன், கூகிளில் தேடோ தேடென்று தேடிவிட்டேன், மீடியா நண்பர்களிடமும் விசாரித்தேன், கருணா பேட்டியை வெளியிட்டதற்காக தினமலர் அலுவலகத்தில் குண்டுவீசியதாக செய்தி எதுவும் இல்லை, ஆனால் சாரு உறுதியாக சொல்கிறார்,ஒரு வேளை இது உண்மையென்றால் நேரமெடுத்து உறுதி செய்துகொள்ளாத இதற்காக மட்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன், மற்றபடி சாரு பற்றி பதிவின் கருத்தில் எந்த மாற்றமும் இல்லை....

இன்னுமொரு பின்குறிப்பு
சாரு எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றால் இதுவரை சாரு எழுதி தீர்ந்த பிரச்சினை என்ன? தீரவில்லையென்றால் பின் ஏன் எழுதினார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலே இதற்கும்

12 பின்னூட்டங்கள்:

Sanjai Gandhi said...

சாரு ஒரு எழுத்து வியாபாரி.. அவரை போராளி எழுத்தாளர் என்று சொன்னதற்காகவே உம்மை ராஜபச்ஷேவிடம் பிடித்துத் தர வேண்டும். அவர் எதர்கு ஈழத் தமிழர்களைப் பற்றி எழ்ய்த வேண்டும் என நினைக்கிறீர்கள். அரசியல் ரீதியாக அவர் எழுத்துக்கு அப்படி என்ன முக்கியத் துவம் இருக்கு? இதுவரை இவர் எழுத்தால் அபப்டி என்ன பெரிய சமுதாய மாற்றத்தைக் கொண்டுவந்து கிழித்தார்? எதற்கு இவருக்கு இவ்வளவு முக்கியத் துவம்?
இவர் எழுதினால் மட்டும் ஆகப் போவது என்ன? எழுதாமல் விட்டால் தான் ஆகப் போவது என்ன? இவர் எதிர்ப்பு காட்டினால் ராஜபக்‌ஷே உடனே திருந்திடுவாரா?

Sanjai Gandhi said...

//சாரு இலங்கை பிரச்சினை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்து வந்தார்.//
இருக்கடுமே.. இவர் என்ன அரசாங்கப் பிரதிநிதியா? இல்லை மக்கள் செல்வாக்குப் பெற்ற அரசியல் தலைவரா? இவர் மவுனத்தை பற்றி ஏன் இவ்வளவு கவலை தல? ஒரு எழுத்து வியாபாரிக்கு இவ்வளவு முக்கியத்துவம் தேவையா?

//தினமலரில் கருணாவின் பேட்டியை வெளியிட்டார்கள். உடனே தினமலர் அலுவலகத்தில் குண்டு வீசப் பட்டது. ஆக, என்னுடைய நேர்மையை கவிதா போன்ற நல்லிதயங்களுக்கு நிரூபிப்பதற்காக என் உயிரை விட வேண்டுமா?//

சுத்தப் பேத்தல். அபப்டி எதுவுமே நடக்கவில்லை. நான் கூட விடுதலைப் புலிகளுக்கு எதிராகத் தான் எழுதுகிறேன். என்னை யாரும் மிரட்டவும் இல்லை.. என் உயிரை எடுகக்வும் இல்லை.

கொய்யால இன அழிபபை தடுக்க ஒரு தமிழனா குரல் குடுய்யான்னு கேட்டா இங்க எதுக்கு புலிகள் உயிர்பயம்னு சீன் போடனும்?

//இதன் மூலம் போராளி எழுத்தாளர் சாரு கொடுக்கும் மெசேஜ் என்ன? இது ஒரு பச்சை அய்யோக்கியத்தனம்,//

தல, இன்னொருவாட்டி போராளி எழுத்தாளர்னு சொன்னிங்கன்னா கடுப்பாய்டுவேன்.. ஜாக்கிறதை.. போராளி எழுத்தாளர்னு சொல்ற அளவுக்கு இவர் செஞ்சது என்னன்னு தெரிஞ்சிக்கலாமா?

//(சாருவை கலாய்க்கும்போது சாரு ரேஞ்சுக்கு இருக்க வேண்டாமா?)//

அடச்ச.. அப்போ இது சீரியஸ் பதிவு இல்லையா? :))

//சாரு எழுதினால் பிரச்சினை தீர்ந்துவிடுமா? என்றால் இதுவரை சாரு எழுதி தீர்ந்த பிரச்சினை என்ன? தீரவில்லையென்றால் பின் ஏன் எழுதினார் என்ற கேள்விக்கு கிடைக்கும் பதிலே இதற்கும்//

எதற்கும்? :(

( இது தான் என் கேள்வியும் கூட)

Anonymous said...

உங்களுக்கு சிங்கப்பூர்ல வேற வேலை இல்லையா? ஏன் சார் டைம் வேஸ்ட் பண்ணுறீங்க? அந்த ஆளுக்கு பொண்ணுங்க கிட்ட வழியறது மட்டும்தான் முக்கியம். க்வார்ட்டர் வாங்கிக் கொடுப்பவன் எழுத வேண்டும் அல்லது கொஞ்சி பேசும் பெண் எழுத‌ வேண்டும்...அவர்கள் மட்டுமே அந்த ஆளுக்கு எழுத்தாளர்கள்....பெரிய இலக்கியவாதின்னு பிட்டு வேற...சார் வேற நல்ல விஷயம் நிறைய இருக்கு...அதை எழுதுங்க....

ILA (a) இளா said...

சாரு ஏன் இலங்கைப் பிரச்சினையப் பத்தி எழுதனும்? எழுதித்தான் ஆவனும்னு கட்டாயம் இல்லே. அப்படியே எழுதினாலும் அவர் யாருக்கு வேணுமின்னாலும் ஆதரவு தெரிவிக்கலாம். அதுவும் அவர் விருப்பம்.

Anonymous said...

We all know very well Charu is a parasite, and Dinamalar Ramesh is breeding him. I just thought of quoting an article about Vinavu. Though, the article is not related Charu, it came few months ago, but the content is very well applicable to all the psuedointellect shits. Here, is the passage:
இசைஞானி என எல்லோராலும் புகழப்படும் இளையராசாவின் இசை எதை எந்த கருத்தை தாங்கி வருகிறது என்பதை பொறுத்தே அவரின் திறமையை புகழ்வதா இல்லை இகழ்வதா என தீர்மானிக்க முடியும்.ஒரு படைப்பாளி என்பவனின் கடமை யாது?மக்களின் அன்றாட பிரச்சினைகளை சந்திக்காது இல்லை அதை பற்றி சிந்திக்காது இருப்பவன்,மக்களின் பிரச்சினைகளை தன் கலை மூலமாக வெளிப்படுத்தாது இருப்பவன் எப்படிஆகமுடியும்.. ஆசான்கள் சொன்னது போல “வர்க்கத்துக்கு அப்பாற்பட்டு எதுவும் இல்லை”,வர்க்கத்துக்கு அப்பாற்பட்ட எழுத்தாளனோ அல்லது ஒரு படைப்பாளியோ இருக்கவே முடியாது.

ஒரு படைப்பாளி தன்னுடைய படைப்புக்களை உண்மையாகவே சிந்தித்து படைக்கின்றான் எனில் எப்படி ஒரே கையால் ஏழையின் வறுமையை பற்றியும் , முதலாளித்துவத்தின் பெருமையைப்பற்றியும் படைக்க முடிகின்றது, அவன் முதலாளித்துவத்தின் பெருமையை படைப்பதற்க்ககவே ஏழையின் வறுமையை படிக்கின்றான் . எந்த படைப்பாளியும் தன் வர்க்கத்துக்காகவே சிந்திக்கின்றான் அவனின் தேவைக்கு ரசிப்புக்கு ஏழையின் கண்ணீரும் தேவைப்படுகின்றது என்பது தான் உண்மை.

கேள்விக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இங்கு இல்லை என்பது தான் உண்மை.ஆனால் கேள்வி கேட்கவே கூடாத பல புனிதங்கள் வரிசையாய் நிற்கின்றன.அவற்றை வெட்டி வீழ்த்தாது மக்களுக்கு கண்டிப்பாய் விடுதலை இல்லை.புனிதங்களுக்கு கல்லறை கட்டும் வேலையை செய்யும் வினவை கண்டிப்பாய் பாராட்டித்தான் ஆக வேண்டும்,பொழுதுபோக்கென கூறி புரளிகளையும் புரட்டுகளையும் பேசும் இந்த வலைஉலகில் வலைக்கு வெளியே பரந்து பட்ட மக்கள் உலகம் இருகின்றது அது இன்னமும் அடிமையாயிருக்கின்றது,அந்த அடிமை விலங்கை உடைக்க போராடி நம்மையும் அப்போர்க்களத்திற்கு அழைத்து செல்லும் வினவின் பதிவுகள் தொடர வேண்டும்.மீண்டும் சொல்வோம் இது மகிச்சிகரமான விசயமே ஏனெனில் மகிச்சி என்பது போராட்டம் தானே.

Courtesy: Vinavu: http://www.tamilcircle.net/index.php?

Anonymous said...

//சாரு இலங்கை பிரச்சினை தொடர்பாக கள்ள மவுனம் சாதித்து வந்தார்... ஒரு கடிதம் எழுதினேன்... //

ஏனயா அடுத்தவனை நிம்மதியாவே இருக்கவே விட மாட்டீங்களா?

அஜித் ஏன் உண்ணாவிரததுக்கு வர மாட்டாரா? ரகுமான் ஆஸ்கார் விருது வாங்கும் போது இதைப் பத்தி பேசல? சாரு நிவேதிதா ஏன் எழுதல?

நீங்க போரடுங்கைய்யா... அடுத்துவனுக்கும் ஏதாவது செய்யனும்முன்னு தோனுன செய்வான். அதை விட்டுகிட்டு சும்மா போறவனையெல்லாம் பிடிச்சு, "நீ ஏன் செய்யல... எதையாவது செய்"-ன்னு சட்டய பிடிச்சு உலுக்காதீங்க!

உங்க இம்சை தாங்காமதான் சாரு இப்படியெல்லாம் பிட்டை போட்டு தப்பிக்க வேண்டியிருக்கு, இத முதல்ல புரிஞ்சுங்கங்க.

Anonymous said...

http://www.charuonline.com/aug08/mathru.html

http://www.charuonline.com/aug08/kanjikodu.html

http://www.charuonline.com/Feb09/SatamKaval.html

http://www.charuonline.com/june08/mboomi.html

http://www.charuonline.com/oct08/Rajinikanth.html

ஜெகதீசன் said...

சாரு போன்ற எழுத்து வியா(ப)பா(ச்சா)ரிகளிடம் இதையெல்லாம் எதிர்பார்ப்பது நம் தவறு....

Anonymous said...

குழலி, இரண்டொரு வாரங்களுக்கு முன்னால் கருணாவின் பேட்டியே விகடனிலோ ஜூவியிலோ வந்திருந்ததே, விகடன் அலுவலகம் இருந்த இடத்தில் புல் முளைத்து விட்டதா என்ன?

ஏற்கனவே தன்னுடைய வாசகி ஒருத்தர் காதல் திருமணம் செய்து கொள்ள சாட்சி கையெழுத்துப் போட வரச் சொன்னதற்கே குலை நடுங்கி, என்னை சாகடிக்க திட்டம் போடுகிறார்கள் என்றெல்லாம் கூச்சலிட்ட புர்ச்சிவியாதிதான் இந்த ஆள்... இவரையெல்லாம் மதிச்சு ரெண்டு போஸ்ட் போடணுமா? இடத்தையும், நேரத்தையும் வேஸ்ட் பண்ணாதீங்க சார்...

selventhiran said...

குழலி, தகவலுக்காகச் சொல்லுகிறேன்.

கருணாவின் பேட்டி வெளியான தினத்தன்று கோயம்புத்தூர் தினமலர் அலுவலத்தில் இரண்டு பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. நள்ளிரவில் இருசக்கர வாகனங்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்களால் இது நிகழ்த்தப்பட்டது. சம்பவம் நடந்த உடனே போலீஸாரும், பத்திரிகையாளர்களும் குவிந்தனர். நானும் அங்கு இருந்தேன்.

Unknown said...

//சாரு ஏன் இலங்கைப் பிரச்சினையப் பத்தி எழுதனும்? எழுதித்தான் ஆவனும்னு கட்டாயம் இல்லே. அப்படியே எழுதினாலும் அவர் யாருக்கு வேணுமின்னாலும் ஆதரவு தெரிவிக்கலாம். அதுவும் அவர் விருப்பம்.//

இளா, சாரு இலங்கைப் பிரச்சனையைப் பற்றி எழுதாமல் இருப்பது அவரது சொந்த விருப்பமே. யாருக்கு வேண்டுமானாலும் ஆதரவு தெரிவிப்பதும் அவரது சொந்த விருப்பமே. ஆனால், அப்படி எதாவது எழுதினால் தன்னை கொன்று புதைத்துவிடுவார்கள் என்பது போல சீன் விடுவது ஓ.மா.த அல்லாமல் வேறென்னவாம்?

சரவண வடிவேல்.வே said...

” பாரதி கோழையாக இருந்தால் எனக்கென்ன? அவர் கவிதை படித்து எனக்கு வீரம் வருகிறதே, அது போதும் ”