ஜெகத்கஸ்பர் அருட்தந்தையா? புளுகுமூட்டையா?
ஃபாதர் ஜெகத்கஸ்பர் அடிக்கடி சர்ச்சைக்குள்ளாகும் பெயர், நான்காம் ஈழத்தில் நான்காம் கட்டப்போர் உச்சத்தை எட்டியிருந்த போது தமிழகத்தில் தேர்தல் உச்சத்தில் இருந்தது, அந்த நேரத்தில் திமுக-காங்கிரஸ் கூட்டணி மீது மிக கடுமையாக விமர்சனம் எழுந்தது, திமுக-காங்கிரஸ் கூட்டணியின் தமிழின துரோகம் அக்கூட்டணிக்கு தேர்தல் தோல்வி ஏற்படுத்துமென்றே நம்பப்பட்டது.
அந்த நேரத்தில் ஃபாதர் ஜெகத்கஸ்பர்(கனிமொழி கருணாநிதி யின் நண்பர் மற்றும் திமுக ஆதரவாளர், ஜெயலலிதாவினால் புலி ஆதரவாளர் என விமர்சிக்கப்பட்டவர், ஜெயலலிதா ஆட்சி காலத்தில் கைது செய்யப்பட்டுவிடுவார் என்றே நம்பப்பட்ட ஒருவர்) ஈழப்போராட்டம் பற்றிய பதிவுகளை எழுத ஆரம்பித்தார்...
அவரோட பதிவுகள் எல்லாம் இயக்குனர் சங்கர் படங்களை போன்றே இருந்தன, பல உண்மைகளுக்கு இடையில் தம் பொய் பரப்புரைகளை புகுத்துவது, முதலில் இலை மறைவாக தமிழகத்தின் ஈழத்தமிழ் ஆதரவு தலைவர்களை(இவர்களை எல்லாம் யோக்கியம் என்று சொல்லவில்லை) விமர்சித்தார் அவரோட விமர்சனம் எல்லாமே கருணாநிதியையும் காங்கிரசையும் காப்பது போன்றே இருந்தது.
நக்கீரனில் ஒரு பதிவில் அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை குறிப்பிட்டு இவர் போர் நிறுத்தத்திற்கு மிகவும் முயன்றதாகவும் கனிமொழி கண் உறங்காமல் பாடுபட்டதாகவும் எழுதினார், பாவம் நக்கீரன் லேஅவுட் மற்றும் ஃப்ரூப் ரீடர்கள் கண்ணில் அது படவில்லையோ என்னமோ, நக்கீரனின் வேறு கட்டுரைகளின் பக்கங்களில் வேட்டி கட்டிய உயர்ந்த பதவியில் இருக்கும் முக்கிய தமிழர் இன்னுமா முடிக்கலை, இன்னும் என்னவெல்லாம்தான் உதவி செய்வது என்று சிங்களனை திட்டிக்கொண்டே அந்த உயர்மட்ட கூட்டத்திற்கு கலந்து கொள்ள சென்றார் என்று எழுதியிருந்தார்கள், இதில் எது உண்மை?
போர் நிறுத்தத்திற்கு தமிழக காங்கிரஸ் பெரியமனிதர்(ப.சிதம்பரம்?) மற்றும் திமுக பெரிய இடத்து ஆட்கள் எல்லாம் உறங்காமல் முயன்று கொண்டிருந்த போது தமிழகத்தின் முக்கிய ஈழ ஆதரவு தலைவர்கள் இன்னமும் நிலமை மோசமாகட்டும் அப்போது தான் நாம் இங்கே தேர்தலில் வெற்றி பெறலாமென ஜெகத் கஸ்பர் காது பட பேசினார்களாம், கனிமொழியின் நண்பர், திமுகவின் ஜால்ரா ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? அவ்வளவு தூரம் சொல்பவர் ஏன் கிசு கிசு பாணியில் எழுத வேண்டும் பெயரை சொல்ல வேண்டியது தானே?
போர் முடிந்தும் இப்போதும் திமுகவிற்கும் காங்கிரசுக்கும் விழுந்த துரோக கறையை துடைக்க முடிந்த அளவிற்கு தம் பொய் மூட்டைகளை அவிழ்த்துவிட்டுக்கொண்டே இருக்கின்றார் அருட்தந்தை.
தற்போது ஒரு போராளி போன் செய்து சொன்னார் என்றும் பொய்யான நம்பிக்கையை தந்தார்கள் தமிழக தலைவர்கள் அதனால் தான் எல்லாம் போயிருச்சி என்றும் மீண்டும் ஒரு முறை இவர்கள் மீது விழுந்து பிடுங்கியுள்ளார் அருட்தந்தை? போயும் போயும் இந்த தலைவர்கள் தந்த கணிப்புகளை நம்பி செயல்படும் அளவிற்கு கேணத்தனமாகவா இருந்தார்கள் போராளிகள்? அருட்தந்தையின் புளுகுமூட்டைகளுக்கு அளவேயில்லையா?
ஈழத்தமிழர் விசயத்தில் இப்படித்தான் தமிழகத்தின் ஒவ்வொரு இயக்க ஆட்களும் தங்கள் தலைமைகளுக்கு சப்பைகட்டு கட்டிக்கொண்டுள்ளார்கள் தங்கள் தலைமைகளின் துரோகம் தெரிந்தும்.
ஈழத்தமிழர்கள் விசயத்தில் தமிழகத்தின் அத்தனை பேரும் துரோகம் செய்துள்ளார்கள், கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள், பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.
அருட்தந்தை ஜெகத்கஸ்பர் கனிமொழிக்கு கூஜா தூக்கட்டும், திமுகவுக்கு ஜால்ரா போடட்டும் ஏன் உடன்பிறப்பாக மாறி தலைவர் வாழ்க, தளபதி வாழ்க கோசமும் கூட போடட்டும் ஆனால் ஈழத்தமிழ் போராட்டத்தில் தம் ஈனத்தனத்தை காட்ட வேண்டாம்.
நக்கீரன் பத்திரிக்கைக்கு ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட விரும்புகிறேன், நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை, அந்த பத்திரிக்கைக்கும் திமுக(மற்றும் அப்போதைய உள்துறை செயலாளர் நாகராஜன்)வுக்கும் பிரச்சினை எழுந்தது, பாக்சர் வடிவேலு தலைமையில் ரவுடி கும்பல் அந்த பத்திரிக்கையின் உள் புகுந்து அடித்து இருவரை கொலை செய்தனர்.
இதை சமாளிக்க ஜெயலலிதா ஆதரவுக்கு மாற துவங்கியது இந்த தராசு பத்திரிக்கை, கொஞ்சம் கொஞ்சமாக அதன் நடுநிலை குறைய ஆரம்பித்த போது நக்கீரன் களம் இறங்கி மொத்த தராசு வின் வியாபரத்தையும் எடுத்துக்கொண்டு மிகப்பிரபலமானது.
நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது. திமுக சார்புநிலை என்பதை தாண்டி திமுக ஜால்ரா என்ற நிலைக்கு நக்கீரன் சென்று கொண்டுள்ளது.
தற்போது அரசியல் பத்திரிக்கைகளே இல்லையென நினைக்க வேண்டாம் "தமிழக அரசியல்" என்றொரு பத்திரிக்கை தற்போது சர்க்குலேசனில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளது, மேலும் உங்கள் மார்க்கெட் பலவீனப்படும் போது மற்றவர்கள் அந்த இடத்தை பிடிக்க கடும் முயற்சி செய்வார்கள்
26 பின்னூட்டங்கள்:
குழலி,
ஜெகத் கஸ்பாரின் புனைவுகள் சிறுவயதில் வாசித்த நாவல்களை நினைவுபடுத்துகின்றன. அதிகாரத்தின் நிழலில் நின்று எழுத்தையும், கலைகளையும் வியாபாரமாக்க முடிவெடுத்த பிறகு நேர்மையாவது... போராட்டமாவது...
இந்த வார நக்கீரனில் ஆங்கில நாளிதழ் ஆசிரியர் ஒருவரை "ஆங்கில நாளிதழ் ஒன்றின் மூத்த இதழியலாளர் ஒருவரை ஈழத்து மக்களின் அரசியல் பிரச்சனை குறித்து உரையாடி விவாதிக்க" சந்தித்ததாக எழுதியிருக்கிறார் கஸ்பார். இவரது விளக்கங்களுக்கு பிறகு அந்த 'மூத்த ஆங்கில இதழாளர்' இப்படி கேட்டாராம்
//"கடந்த நான்கு ஆண்டுகளாய் என்னை உங்களுக்குத் தெரியும். எல்லாம் முடிந்துவிட்டபின் உரையாட வந்திருக்கிறீர்கள். முன்பேயே வந்து பேசியிருக்கக் கூடாதா? எங்கள் நிறுவனத்திற்குள் ஓரளவுக்கேனும் மாற்றுக் கருத்தை குறைந்தபட்சம் முன்வைக்க வேணும் செய்திருப்போமே...'' என்றார்//
ஆங்கில ஊடகம் ஒன்று செய்திகளையும், தகவல்களையும் அறியாமல் பெரும்பிழை செய்தது போலவும். அவர்களுக்கு இருந்த தகவல் தட்டுப்பாட்டை நீக்கி கஸ்பார் புரிய வைத்தது போலவும் இருக்கிறது. இனிமேல் அந்த ஊடகத்திற்கு கொழும்பில் நிருபர்கள் அவசியமில்லை.
ஏனோ சில மாதங்களில் வரப்போகிற சென்னை சங்கமமும் அதில் விளம்பர உதவி செய்யும் 'கார்ப்பரேட் நிறுவனங்களும்' நினைவில் வந்து தொலைக்கிறது.
:)
அன்புடன்
சிங்கை நாதன்
இலங்கை அரசுக்கு இந்து ராம் எப்படியோ அப்படித்தான் கருணாநிதிக்கு நக்கீரன் கோபாலும்.இது தெரியாமல் இது போன்று எப்படி எழுதுகிறீர்கள்.
ஜெகத்கஸ்பாருக்கும் கனிமொழிக்கும் உள்ள தொடர்புகள் கூட புரியாத புதிர்தான்.என்ன கொடுக்கல் வாங்கலோ?
கனிமொழி அம்மையார் சில காலம் இந்து பத்திரிக்கையில் பணிபுரிந்தது மறந்துவிடுமா?கருணாநிதிக்கு விடுதலைப்புலிகள் மீதுள்ள வன்மம் நமக்குத் தெரியாததா?இன்று வரை கருணாநிதியின் அறிக்கையைப் படித்தாலே புரியுமே?
//இலங்கை அரசுக்கு இந்து ராம் எப்படியோ அப்படித்தான் கருணாநிதிக்கு நக்கீரன் கோபாலும்.இது தெரியாமல் இது போன்று எப்படி எழுதுகிறீர்கள்.
//
Repeatttu!! Repeattu!!! Repeatttu!!!!
Aiyoo! Aiyoo ivaru yeppayume ippadithaan
//ஜெகத் கஸ்பர் காதில் விழுமாறு பேசும் அளவிற்கு அந்த தலைவர்கள் கேணையர்களா? //
இல்லையா?
//பணத்திற்காக தங்கள் வாக்குகளை விற்ற பொதுமக்கள் என அத்தனைபேருக்கும் பொறுப்பு உண்டு.//
திருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல? :))
//நக்கீரனுக்கு முன்பு தராசு என்றொரு பத்திரிக்கை இருந்தது, ஷ்யாம் அதன் ஆசிரியர், தராசு பெரிய அளவில் விற்பனையில் இருந்தது, மிகப்பிரபலமான அரசியல் பத்திரிக்கை,//
டவுசர் கூட போடத் தெரியாத காலத்துல தொடர்ந்து படிச்சது..
//நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் //
அப்போ இது சீரியஸ் பதிவில்லையா? :((
ஜூவில உங்க தலைவர் திருமாவளவனார் சமாளிபிஷேன் வகுப்புகள் எடுத்துட்டு இருக்காரே.. படிச்சிங்களா தல? அதுக்கும் இதே மாதிரி பதிவு வருமா?
இது கண்காணிப்பிற்கு.. :)
ம்ம், சிந்திக்க வேண்டிய பொருள் தான்.
//நக்கீரன் பத்திரிக்கைக்கும் ஜெயலலிதாவிற்கும் மிகப்பெரிய பிரச்சினைகள் நடந்துள்ளது, இன்னமும் இருக்கலாம், அதற்காக திமுக மற்றும் கருணாநிதியின் முழு ஜால்ராவாக மாற ஆரம்பிப்பது நக்கீரன் பத்திரிக்கையின் வியாபாரத்திற்கும் அதன் நடுநிலைக்கும் சரியானதாக இருக்காது.//
நக்கீரனின் இந்தப் போக்கு வருத்தம் தருவது தான். ஜெயலலிதாவைப் பிடிக்கவில்லை என்பதற்காக கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பது சகிக்கவில்லை. கோபால் அண்ணாச்சியின் மீசையிலும் மண் இருக்கிறது
//நக்கீரனின் இந்தப் போக்கு வருத்தம் தருவது தான். ஜெயலலிதாவைப் பிடிக்கவில்லை என்பதற்காக கருணாநிதிக்கு ஜால்ரா அடிப்பது சகிக்கவில்லை. கோபால் அண்ணாச்சியின் மீசையிலும் மண் இருக்கிறது
//
போன வார ஜால்ரா என்ன தெரியுங்களா?, ஸ்பெக்டரம் பிரச்சினையில் எதிரிகளும் மெச்சும் அளவிற்கு பதிலளித்த அமைச்சர் ராசாவாம்....
முடியலை... கருணாநிதி தொடர்பான விசயங்களெல்லாம் நக்கீரனில் சார்பு நிலை என்பதை தாண்டி ஜிங் ஜாங்காக உள்ளது, சில நேரம் முரசொலிதான் படிக்கிறோமா என்றே நினைக்க வைக்கிறது....
நக்கீரன் மாற்றிக் கொள்ளவில்லையென்றால் தராசை போல நக்கீரனும் ஆனாலும் ஆகிவிடும்... வருத்தம் தான் இருந்தாலும் உண்மையை சொல்லி தானே ஆக வேண்டும்
//திருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல? :))//
திருமாவுக்கு தான் வேலை பார்த்தோம், கே.எஸ்.அழகிரிக்கு அல்ல...
நக்கீரன் ஜூனியர் முரசொலியாக உருமாறி ரொம்ப நாளாச்சுண்ணே..!
அவருக்கும் வேற வழியில்லே.. அவர் பட்ட கஷ்டம் அப்படி..!
இங்க யாரும் தியாகியா வாழ முடியாதே.. அதுதான் ஊரோட ஒத்துப் போவோம்னு சொல்லி அவரும் மாறிட்டாரு..
பணமும், அதிகாரமும் இருந்தால் எதுவும் நடக்கும் என்பதற்கு ஜெகத்கஸ்பாரின் விளம்பரச் செய்தியும் ஒரு உதாரணம்..!
மொத்தமா புளுகி முடிக்கட்டும் பின்னாடி எழுதலாம்னு நினைச்சிருந்தேன். அதுக்குள்ள நீங்க முந்திக்கிட்டீங்க..
நல்லாயிருங்க..!
//கட்சி தலைமைகளுக்கு அடிமைகளாய் அவர்களின் துரோகங்கள் தெரிந்திருந்தும் அதை சப்பைகட்டு கட்டும் காவல்நாய்களாய் இருக்கும் தொண்டர்கள்,//
அப்படிப்பட்ட கொபசெ-க்களை எல்லா கட்சிகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்துத்தானே வந்துள்ளோம்?
அன்புடன்,
டோண்டு ராகவன்
//அப்படிப்பட்ட கொபசெ-க்களை எல்லா கட்சிகளிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பார்த்துத்தானே வந்துள்ளோம்?
//
உண்மை தாண் டோண்டு சார் சிலர் கட்சிப்பாசத்துக்கு அடிமையென்றால், சிலர் ஜாதி பாசத்துக்கு அடிமை, சிலர் கட்சிக்காக வாதாடினால் சிலரோ ஜாதி பாசத்துக்காக ஆபாச ஆட்களை காப்பாற்றுவார்கள்.... இதெல்லாம் பார்த்துத்தானே வருகிறோம்...
பின்னூட்டங்களைப் பெறுவதற்காக இந்தப் பின்னூட்டம்... :)
//குழலி / Kuzhali said...
//திருமாவளவன் வெற்றிக்கு வேலை பார்த்தவர்களும் இதில் அடங்குவார்களா தல? :))//
திருமாவுக்கு தான் வேலை பார்த்தோம், கே.எஸ்.அழகிரிக்கு அல்ல...//
மிஸ்டர் பெரிசு, அழகிரிக்கு நாங்க பார்த்துப்போம். எழு”ச்சீய்” தமிழனுக்கு வேலை பார்த்தவர்கள் பற்றித் தான் பேச்சு. :)
//மிஸ்டர் பெரிசு, //
நான் பெரிசு அல்ல, வன்மையாக கண்டிக்கிறோம்...
//எழு”ச்சீய்” தமிழனுக்கு வேலை பார்த்தவர்கள் பற்றித் தான் பேச்சு. :)
//
யெஸ் வேலை பார்த்தோம், அப்போது தலைவர் மீதும் அவர் கொள்கை மீதும் அவர் வார்த்தை மீதும் நம்பிக்கை இருந்தது... துரோகிகள் மற்றும் சந்தர்ப்பவாத அரசியல்வாதிகள் மத்தியில் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்தார்....
கட்சி சாராத எத்தனையோ தமிழ் உணர்வாளர்கள் அவரை அள்ளிக்கொண்டனர், ஆனால் என்ன இவரும் ஒரு குட்டி கருணாநிதியாக வந்துவிடுவாரோ என்றே பயமாக உள்ளது...
//சிலரோ ஜாதி பாசத்துக்காக ஆபாச ஆட்களை காப்பாற்றுவார்கள்.... இதெல்லாம் பார்த்துத்தானே வருகிறோம்..//
ஜாதி பாசத்தை பத்தியெல்லாம் நீங்க சொன்னா சரியா தான் இருக்கும் தல!
Note the point..
ஜாதி பாசம்ன்ற வார்த்தைக்கு மட்டும் தான் இந்த பின்னூட்டம். அதுக்கு அப்புறம் இருக்கிற வார்த்தைகளுக்கு அல்ல! மத்தபடி ராமகோபாலனும், வீரமணியும் (திரும்ப) சேர்ந்த மாதிரி ஒரு பீலிங் பின்னூட்டங்களில் தெரியுது?!
ஆரம்பத்தில் தமிழ்நாட்டின் தலைவர்கள்,அவர்களோடு சேர்ந்து இயங்கும் துணைவர்கள் --அதாவது பத்திரிக்கையாளர் ,கலைஞர் ,கவிஞர் ,அருள்தந்தைகள் எல்லோரையும் எமக்கு ஆதரவு தருகிறார்கள் என்று எண்ணி நன்றி சொல்லி அவர்கள் சொல்வதை கேட்டு கைதட்டி ஆரவாரித்த பல ஈழத்தமிழருக்கு இப்போது உண்மைகள் புரியத்தொடங்கி விட்டன ,ராஜபக்சாக்கு போடப்பட்ட பொன்னாடை,கனிமொழி புன்னகையுடன் அவருக்கு கொடுத்த பரிசு எல்லாமே தமிழருக்கு ஒரு செய்தியையும் உண்மையையும் தெரியப்படுத்தி விட்டன ,எத்தனை தமிழர் இறந்தால் என்ன ,எத்தனை தமிழக மீனவர்கள் மாண்டால் என்ன ,எத்தனை தமிழர் முகாம்களில் முடக்கப்பட்டால் என்ன எங்களுக்கு அவர்கள் வாழ்வு பற்றியோ அவர்கள் உணர்வுகள் பற்றியோ அக்கறை கிடையாது எங்களுக்கு வர்த்தகமும் பதவியும் அதிகாரமும் தான் முக்கியம் என்பதை இந்தத் தலைவர்கள் சொல்லாமல் சொல்லி விட்டார்கள் ,
திருமாவளவன் ஒருகாலத்தில் தமிழகத்தின் சிறப்பான தலைவராக வருவார் ,இளைய தலைமுறையை தம் பக்கம் திருப்பி தமிழகத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை அமைப்பார் என்று பலர் எண்ணியிருந்தார்கள் ,அவருடைய சமீப கால நடவடிக்கைகள் அந்த நம்பிக்கையை சிதறடித்து விட்டன ,தமிழக அரசியல் என்ற குட்டையில் விழுந்து அவரும் குழம்பிவிட்டார் ,மற்றவர்களையும் குழப்புகிறார்
தேர்தல் அரசியலில் இறங்காமல் தனது இயக்கத்தை ஒரு சமூக மறுமலர்ச்சி இயக்கமாக மட்டும் நடத்தியிருந்தால் ஒருவேளை தமிழ் நாட்டின் எதிர்காலத்தில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு திருமாவுக்கு கிடைத்திருக்கும்,இப்போதோ ஒரு சில எம்பி எம்எல்ஏ பதவிகளுக்காக அடங்க மறுக்கவுமில்லை ,அத்து மீறவுமில்லை ,
--வானதி
திருமாவளவன் என்ன செய்திருக்க வேண்டும் ? ராஜ பக்சே -வை பார்த்தவுடன் விஜயகாந்த் மாதிரி மறைத்து வைத்திருக்கும் துப்பாக்கியை எடுத்து ராஜபக்சே ,அவர் பாதுகாப்பு வீரர்கள் ,ராணுவத்தினர் அனைவரையும் வெறும் 20 தோட்டாவில் சுட்டுக்கொன்று விட்டு ஒரே தாவலில் தமிழர் முகாம்களுக்கு சென்று அவர்களை நொடிப்பொழுதில் விடுவித்து கப்பலில் ஏற்றி ,புரட்சித் தலைவர் போல 'அதோ அந்த பறவை போல வாழ வேண்டும்' என பாட்டு பாடி தமிழகத்துக்கு கொண்டு வந்திருக்க வேண்டும் ..இதை செய்தாலும் கூட இண்டு இடுக்கில் குறை சொல்ல எதாவது கிடைக்காமலா போகும் .
நாற்பதாண்டு காலமாக அவரவர் மனம் போன போக்கு படி சிக்கல் மேல் சிக்கலை ஒரு சாரார் உருவாக்கி வைப்பார்கள் ..ஆனால் அதையெல்லாம் ஒரு சிலரிடம் எல்லாம் நீங்கள் நினைக்கும் விதத்தில் நினைக்கும் வேகத்தில் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும் . எழுதுறதுக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கும் (கஸ்பாரையும் சேர்த்துத் தான்)
ஜெகத் கஸ்பர் பியூச்சர் மெம்பர் ஆப் பார்லிமெண்டை பற்றியா எழுதறீங்க ? சரி ஓக்கே
//நாற்பதாண்டு காலமாக அவரவர் மனம் போன போக்கு படி சிக்கல் மேல் சிக்கலை ஒரு சாரார் உருவாக்கி வைப்பார்கள் ....ஆனால் அதையெல்லாம் ஒரு சிலரிடம் எல்லாம் நீங்கள் நினைக்கும் விதத்தில் நினைக்கும் வேகத்தில் நடந்து விட வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டும்
//
இதை நீங்கள் இன்னும் கொஞ்சம் விரிவாக ஒரு சில பெயர்களுடன் எழுதினால் தெளிவாக விளங்குமே, இப்போ பாருங்க பின்நவீனத்துவம் மாதிரி பல பெயர்களை யோசிக்கிறேன்...
தமிழகத்திலே மிக மோசமான பரப்புரை நடந்துள்ளது, ஊடகங்களை கையில் வைத்திருக்கும் அதிகாரம் மிக்க கருணாநிதி கும்பல் மிக எளிதாக அத்தனை பிரச்சினைக்கும் தோல்விகளுக்கும் போராளிகள் பிரிந்துவிட்டது தான் என்ற காரணத்தை மக்களின் மனதில் விதைத்து தன் துரோகத்தை மறைத்துள்ளது, இது மட்டுமே ஒற்றை காரணம் என்பது தமிழின பெரிய துரோகி கருணாநிதி(இங்கே பெரிய என்பதற்கு என்ன காரணமென்றால் பல சின்ன துரோகிகளும் இருக்கிறார்கள் என்பதால்) ஒவ்வொரு அறிக்கையிலும் சொல்லிக்கொண்டுள்ளார்.
பொதுவாக சொல்கிறேன் நம்முடைய ரசிக மனோபாவத்தையும் இவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தள்ளிவைத்துவிட்டு கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்த மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்த்தால் புரியும். இல்லையென்றால் தலைவனிடம் எல்லாவற்றையும் ரசிக்கும் பிரியாணி விசிலடிச்சான் குஞ்சுகளுக்கும் நமக்கும் எந்த வித்தியாசமும் இல்லாமல் போய்விடும்...
சரி நினைக்கும் வேகத்தில் இல்லையென்றாலும் என்னென்ன இயன்றதை செய்தார்கள் என்றால் வேதனையே மிஞ்சும், ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் பெரிய லெவலில் ஒருவர் செய்தால், சில எம்பி அதன் மூலம் கிடைக்கும் மந்திரி என மீடியம் லெவலில் ஒருத்தர், ஓரிரண்டு எம்பி என சின்ன லெவலில் வேறொருத்தர்... இப்படித்தானே எல்லாம்...
// எழுதுறதுக்கு எல்லாம் நல்லாத் தான் இருக்கும் (கஸ்பாரையும் சேர்த்துத் தான்)
//
ஜெகத்கஸ்பர் செய்ந்திருப்பது பெரிய மோசடி, சரியாக கவனித்தால் இந்த உத்தி பல நேரங்களில் கூட இருந்து கவிழ்க்கும் உத்தி, முதலில் ஆதரிப்பது போல செயல்பட்டு அப்போது வரும் எதிர்ப்புகளை ஆதரவாளர்களை வைத்து வாய்மூட வைத்து பின் விமர்சனம் என்ற பெயரில் எதிர்ப்பது, இதற்காக ஜெகத் கஸ்பரின் உணர்வை நான் சந்தேகிக்கவில்லை... பல உண்மைகளுக்கு நடுவில் இவர் தன் ஜால்ரா பிரச்சாரத்தையும் பொய் பிரச்சாரத்தையும் செய்வதால் இப்போது ஜெகத்கஸ்பரை புளுகுமூட்டை என்று சொல்லும் போது மற்ற விசயங்களும் சேர்த்தே என்பது போலாகும் எனவே தான் பலரும் அமைதியாகிவிடுவது. உண்மைகளுக்கு நடுவே பொய்யை தினித்தல் ஷங்கர் படங்களில் இந்த உத்தி இருக்கும், செருப்பு தைக்கும் தாத்தா உண்மை, லஞ்சம் வாங்கும் அரசதிகாரி தினம் தினம் நாம் பார்க்கும் உண்மை, ஆனால் இந்தியன் தாத்தா பொய், பல உண்மைகளுக்கு நடுவே இருக்கும் இந்த பொய்யை காட்சி ஓட்டத்தில் நாம் நம்புவோமே அது போல....
// ஜெகதீசன் said...
பின்னூட்டங்களைப் பெறுவதற்காக இந்தப் பின்னூட்டம்... :)//
மறுக்கா சொல்லேய் !
//பொதுவாக சொல்கிறேன் நம்முடைய ரசிக மனோபாவத்தையும் இவனை விட்டால் வேறு போக்கிடம் இல்லை என்பதையும் தள்ளிவைத்துவிட்டு கொஞ்சமாவது சிந்திக்க தெரிந்த மூளை உள்ளவர்கள் சிந்தித்து பார்த்தால் புரியும்.//
இதையே பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளை இத்தனை காலம் வெறும் ரசிக மனோபாவத்தோடு அணுகவும் , ஒட்டு மொத்த நம் முன்னேற்றத்திற்காக சிறிதளவு கூட சுயவிமர்சன பார்வையில் கருத்தளிப்பவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி வந்த மனோநிலையை தள்ளிவைத்து விட்டு கொஞ்சமாவது சிந்திக்க மூளை உள்ளவர்கள் வெறு புறநானூற்று வீரத்தை மட்டும் பேசிக்கோண்டிருக்காமல் ,கொஞ்சமாவது நடைமுறைக்கு ஒத்து வரும் மாற்றங்களை ஏற்றுக்கொள்ளும் மனநிலைக்கு வந்திருப்போமானால் இந்த இழி நிலை நமக்கு வந்திருக்குமா?
புறநானூற்று காலத்தில் நேருக்கு நேர் நின்று கை ஆயுதங்களை கொண்டு போரிடும் போது வீரம் மட்டும் வெற்றியை பெற்றது ..இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சிக்கு பிறகு எத்தனை பெரிய வீரனாக இருந்தாலும் விஷக்குண்டுக்கு முன்னால் என்ன செய்ய முடியும் ..ஆக இன்று வெறும் வீரம் மட்டுமல்ல ,அரசியல் அணுகுமுறையோடு சேர்ந்த போராட்டம் தான் வெற்றி பெற முடியும் .
இந்த விடயத்தில் நான் யாரிடமும் ரசிக மனோபாவம் கொண்டிருக்கவில்லை (இப்போது) .ஆனால் யாரை விட யாரால் பின்னடைவு அதிகமாக இருந்திருக்கும் என்ற அனுமானங்களில் தான் நீங்களும் நானும் வேறுபடுகிறோம் .
இன்னும் பல விடயங்களை பேச விருப்பம் தான் ..ஆனால் இன்னும் நான் மனதில் எரிந்துகொண்டிருக்கும் வேதனை தீ அணையும் முன்னரே ,குறைந்தபட்சம் யாரும் யாரையும் புண்படுத்த வேண்டாம் ,அது நம்மை(நம் இனத்தை) மோத விட்டு குளிர் காய்வோரின் இலக்கில் தான் செல்லும் என்பதால் இப்போதைக்கு தவிர்க்கிறேன்.
//இதையே பிரபாகரன் மற்றும் விடுதலைப்புலிகளை இத்தனை காலம் வெறும் ரசிக மனோபாவத்தோடு அணுகவும் , ஒட்டு மொத்த நம் முன்னேற்றத்திற்காக சிறிதளவு கூட சுயவிமர்சன பார்வையில் கருத்தளிப்பவர்களை துரோகிகள் என முத்திரை குத்தி வந்த மனோநிலையை தள்ளிவைத்து விட்டு //
பிரச்சாரம் உங்கள் வரை வந்துள்ளதை பரப்புரைக்காரர்களின் வெற்றி என்றோ அல்லது சார்பு நிலையை விட்டு தர முடியவில்லை என்றோ கருதுகிறேன்... இதை இந்த நிலையில் நிறுத்துவோம்...
இப்போது பிரபாகரனோ புலிகளோ இல்லை... என்ன தீர்வு கிடைக்கப்போகிறது? பொறுத்திருந்து பார்க்கலாம் என்றால் நிச்சயம் சில ஆண்டுகள் பொறுத்திருந்து பார்க்கலாம்.... நானும் காத்திருக்கிறேன்... அதே சமயம் துரோகமிழைத்த தமிழக தலைமைகளை என்ன செய்யலாம்... இன்னமும் ரசித்துக்கொண்டிருக்கலாமா அல்லது போக்கிடம் இல்லை என்று பொங்கி தின்றுகொண்டிருக்கலாமா?
குஜராத்தில் கொலைகள் நடந்த போது தாம் பேசும் கொள்கைகளுக்கு எதிராக நடக்கிறதே என்று நடுவண் அரசில் பங்கேற்றிருந்த திமுக, பாமக கட்சிகள் பதவி வெறியில் அதைப்பற்றி நினைக்கவில்லை, நாமும் அதை கண்டு கொள்ளவில்லை ஏனெனில் நடந்தது எங்கேயோ தானே என்று, அந்த நேரம் நமது கட்சிகளின் பதவி வெறியை கணிக்க தவறிவிட்டோம்...
அடுத்ததாக ஈழப்படுகொலைகளுக்கு பின்புலமாக இருந்த இந்திய நடுவண் அரசில் பங்கேற்றிருந்த கட்சிகளின் பதவிவெறி அவர்களை அம்பலப்படுத்தியது, இதே தான் தமிழக தமிழர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றாலும் நடக்கும், என்ன கட்சிகளுக்கு ஒன்றிரண்டு எலும்புதுண்டுகள் கூடுதலாக கிடைக்கும்...
//பிரச்சாரம் உங்கள் வரை வந்துள்ளதை பரப்புரைக்காரர்களின் வெற்றி என்றோ அல்லது சார்பு நிலையை விட்டு தர முடியவில்லை என்றோ கருதுகிறேன்..//
எங்கே தவறு நடந்தது என்பதை பார்க்க வேண்டும் என்ற கோணத்தில் நான் சொன்னதை கூட நீங்கள் நான் ஏதோ பிரபாகரனுக்கும் புலிகளுக்கும் எதிராக புதிதாக பேச ஆரம்பித்திருப்பது போல கட்டமைக்க முனைகிறீர்கள் ..இதுவும் கூட ஒரு பிரச்சார முறை தான் ..இதுவும் நம் பலகீனங்களில் ஒன்று .
என் சார்புநிலை பற்றி வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சொல்லிவருகிறீர்கள் . ஆம்! என் சார்பு நிலையை நான் என்றைக்கும் மறுத்ததில்லை .ஆனால் அந்த சார்புநிலைக்கு பிழைப்புவாதமோ அல்லது என் சுயநலமோ ,தனிப்பட்ட பலனோ இல்லையென உங்களுக்கே தெரியும்.
//இதே தான் தமிழக தமிழர்களுக்கு ஏதேனும் ஒன்றென்றாலும் நடக்கும், என்ன கட்சிகளுக்கு ஒன்றிரண்டு எலும்புதுண்டுகள் கூடுதலாக கிடைக்கும்..//
Already happening in Cauvery and Mulla-Periyaar issues.
=====================================
Indian : who tolerate mediocrity,
celebrate the better, insult the greats.
Post a Comment