சாமி,ரூசோ,தாகி மற்றும் பலர் திமுகவினரின் சகோதர படுகொலைகள்

சாமி,ரூசோ,தாகி,சீனி.பன்னீர்செல்வம் மற்றும் பல உட்கட்சி தகராறுகளில் கொல்லப்பட்ட திமுகவினர், யார் இவர்களெல்லாம்,இவர்களை கொன்றவர்கள் யார்? கொன்றது எந்த கட்சிகாரர்கள், எடுத்து பார்த்தால் திமுகவின் முக்கிய புள்ளிகளான அவர்களை வெட்டி யும், குத்தியும், சுட்டும் கொன்றதும் திமுக காரர்கள்தான்.

ஒரே நோக்கத்திற்காக போராடும் இரண்டு இயக்கங்கள் கருத்து வேறுபாட்டால் அடித்துக்கொண்டால் அது சகோதர மோதல்கள் சகோதர படுகொலைகள், அப்போது ஒரே இயக்கத்துக்குள் அவைகள் நடந்தால் அதன் பெயர் என்ன? திமுகவினரின் சகோதர படுகொலைகள் என்று சொல்வதா? திமுகவினரின் தற்கொலைகள் என்று சொல்வதா?

யாம் எந்த படுகொலைகளையும் நியாயப்படுத்தவோ, ஆதரிக்கவோ இல்லை, எல்லா படுகொலைகளும் கண்டிக்கத்தக்கவையே, எல்லா படுகொலைகளும் மனிதத்தன்மையற்றவையே...

மூச்சுக்கு முன்னூறு முறை தன்னுடைய இன துரோகத்தை மறைக்க கருணாநிதி பரப்புரை செய்யும் சகோதரபடுகொலைகள் என்றும் திசை மாற்றும் கருணாநிதி இந்த படுகொலைகளுக்கு என்ன பெயர் சொல்வார்?

திமுக ஒரு ஆயுதம் ஏந்தாத இயக்கம், அரசியல் கட்சி, இராணுவத்திடமிருந்தோ அரசிடமிருந்தோ எந்த உயிர் அச்சுறுத்தல்களும் இல்லாத இயக்கம், திமுகவினர் எந்த இராணுவத்தாலும், காவல்துறையாலும் பார்த்த இடத்திலே சுட்டுத்தள்ளப்படுவார்கள் என்ற நிலையில் இல்லாத ஒரு இயக்கம், அதன் தலைமையை பல நாடுகளின் உளவுத்துறையாலோ இராணுவத்தாலோ கொல்லப்படும் அபாயமில்லாத நிலை, தினம் தினம் சுற்றியிருப்பவர்களால் உயிராபத்து ஏற்படுமோ என்ற நிலை இல்லாத போதும் ஏன் இத்தனை படுகொலைகள் அதுவும் சொந்த கட்சிகாரர்களையே கொல்லும் படுகொலைகள், இதில் நாம் திமுகவினர் கொன்ற அதிமுக, மதிமுக மற்றும் பல மாற்று கட்சிகாரர்களை நாம் கணக்கில் எடுக்கவேயில்லை...

திருப்பத்தூர் அரசியலில் வளர்ந்து வந்த இளம்தலைமுறை ரூசோவை உட்கட்சி அரசியலுக்காக கொன்றவர்களை கட்சி தலைவர் கருணாநிதி என்ன செய்தார்?

தாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள், அப்போ தாகியை கொன்றது யார்? தாகி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா?

வைகோ, எம்ஜிஆர் மற்றும் பலர் தலைமையுடன் முரண்பட்ட போது கழுத்தை பிடித்து இயக்கத்தை விட்டு வெளியேற்றினாரே கருணாநிதி, ஒரு வேளை திமுக ஆயுதம் தாங்கி போராடும் இயக்கமாக இருந்திருந்தால்? இவர்கள் கதி? இவர்கள் வாய்வீச்சு அரசியல் செய்து கொண்டிருந்ததற்கு பதில் ஆயுத போராட்டம் செய்து கொண்டிருந்தவர்கள் என்றிருந்தால் என்ன ஆகி இருக்கும், இவர்கள் கையில் ஆயுதம் இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும் என்று கற்பனை செய்யலாம்...

ஆட்சியும் அதிகாரமும் ஊடகமும் கையில் இருக்கிறது என்பதற்காக தம் இனத்துரோகத்தை மறைக்க தம் பொய் பிரச்சாரத்தை அவிழ்த்து விட்டுக் கொண்டும் தம் துரோகத்தை மறைக்க தமிழ்செம்மொழி மாநாடு நடத்தவும் தலைப்பட்டிருக்கும் இவர்களை இன்னமுமா இனமான தமிழர்களும் மூளையுள்ள தொண்டர்களும் நம்புகிறார்கள்?

இந்த பதிவின் பின்னூட்டங்கள் கடும் மட்டுறுத்தலுக்குள்ளாகும், பதிவிற்கு தொடர்பில்லாத எந்த பின்னூட்டங்களும் அனுமதிக்கப்படாது

73 பின்னூட்டங்கள்:

ரவி said...

வணக்கம் குழலி.

காலையில் வாக்கிங் போகும் பழக்கம் உண்டா ?

பதிவுக்கு சம்பந்தமான பின்னூட்டம்./

குழலி / Kuzhali said...

//காலையில் வாக்கிங் போகும் பழக்கம் உண்டா ?
//
யோவ் பயமுறுத்தாத, நான் ஒரு சும்மா ஆளு, நான் அந்த அளவுக்குலாம் நான் ஒர்த் இல்லையா...

Sanjai Gandhi said...

//யோவ் பயமுறுத்தாத, நான் ஒரு சும்மா ஆளு, நான் அந்த அளவுக்குலாம் நான் ஒர்த் இல்லையா...//

இப்போவே நாக்கு கொளறுது. ரொம்ப பயப்படாதிங்க. அண்ணன் அஞ்சா நெஞ்சனார் கிட்ட சொல்லி பார்த்துக்கலாம். :)

Sanjai Gandhi said...

யாருய்யா அது சினங்கொண்ட சிங்கத்தை இப்படி சீண்டி விட்டது? மாண்புமிகு குழலியார் ஃபார்முக்குத் திரும்பிட்டார் போல. இனி எத்தனை உயிர் போகுமோ தெரியலையே.

//இந்த பதிவின் பின்னூட்டங்கள் கடும் மட்டுறுத்தலுக்குள்ளாகும், //
அதென்ன கடுமையான? 10, 15 பேர் படிச்சி ஓகே பண்ணதுக்கப்புறம் தான் வெளியிடுவீங்களோ? :)

ரவி said...

இப்போவே நாக்கு கொளறுது. ரொம்ப பயப்படாதிங்க. அண்ணன் அஞ்சா நெஞ்சனார் கிட்ட சொல்லி பார்த்துக்கலாம். :)////////

யோவ் நீங்க இன்னும் கூட்டணியிலதான் இருக்கீங்க.

ஜெகதீசன் said...

//
அதென்ன கடுமையான? 10, 15 பேர் படிச்சி ஓகே பண்ணதுக்கப்புறம் தான் வெளியிடுவீங்களோ? :)
//
:)))
ஆமாம்.. மட்டுறுத்துனர் குழுவின் தலைவர் சஞ்சய் காந்தி. செயல் தலைவர் ரவி.
(மட்டுறுத்தும் போது குழுத் தகராறு ஏற்பட்டால் அது உள்விவகாரம்...)

இது பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம்.... :)

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

குழலி,

மின் வெட்டு வேறு, மின் தடை வேறு என்று கொல் கைத் தங்கம் ஆற்காட்டார் பதில் சொன்னது போன்ற பதில் தான் கிடைக்கும் பரவாயில்லையா?

TBCD said...

இதைக் கொஞ்சம் பாருங்க.

http://twitter.com/TBCD/statuses/5353549070

ISR Selvakumar said...

ஈழத் தமிழர் ஆதரவு என்பது, கருணாநிதியை எதிர்ப்பது என்ற எண்ணத்தில் தானும் சிக்கிக் கொண்டு, மற்றவர்களையும் சிக்க வைக்க நினைக்கும் உங்களைப் போன்றோரைப் பார்த்தால் . . பாவமாக இருக்கிறது.

குழலி / Kuzhali said...

//r.selvakkumar said...
ஈழத் தமிழர் ஆதரவு என்பது, கருணாநிதியை எதிர்ப்பது என்ற எண்ணத்தில் தானும் சிக்கிக் கொண்டு, மற்றவர்களையும் சிக்க வைக்க நினைக்கும் உங்களைப் போன்றோரைப் பார்த்தால் . . பாவமாக இருக்கிறது
//
உடன்பிறப்பே நன்றாக யோசியுங்கள் கருணாநிதியை ஏன் எதிர்க்கிறோம் என்பதை? சில மாதங்களுக்கு முன் வரை நாங்களும் கருணாநிதி ஆதரவாளர்கள் தான்... சொந்த மூளையோடு யோசிப்பதால் எங்களுக்கு கருணாநிதியின் இனத்துரோகம் தெரிகிறது, தலைவரோட மூளையால் யோசித்தால் இது வெறும் கருணாநிதி எதிர்ப்பாக மட்டும் தான் தெரியும்

குழலி / Kuzhali said...

டிபிசிடி அப்போ தலைவர் கருணாநிதி இல்லையா, நெடுஞ்செழியன் தானா? தலைவர் கருணாநிதியையும் தாண்டி செல்வாக்கு செலுத்துமளவுக்கு இருந்தவரா நெடுஞ்செழியன்... அடடே...

Sanjai Gandhi said...

//இப்போவே நாக்கு கொளறுது. ரொம்ப பயப்படாதிங்க. அண்ணன் அஞ்சா நெஞ்சனார் கிட்ட சொல்லி பார்த்துக்கலாம். :)////////

யோவ் நீங்க இன்னும் கூட்டணியிலதான் இருக்கீங்க.//

அந்த உரிமைல தானே அண்ணன் கிட்ட சொல்லி காப்பாத்தறேன்னு சொல்றேன்.

குழலி / Kuzhali said...

Sanjai's one of the comment rejected as it is not related to the post

ஜோ/Joe said...

//இன்னமுமா இனமான தமிழர்களும் மூளையுள்ள தொண்டர்களும் நம்புகிறார்கள்?//

சரி ..இதற்கு மாற்றாக யாரை ஆதரிக்க வேண்டும் ? அல்லது ஓட்டு போடுதல் ,அரசியல் ஈடுபாடு இதிலிருந்தெல்லாம் விலகிவிட வேண்டுமா?

உங்கள் ஆலோசனையைச் சொல்லவும்.

Sanjai Gandhi said...

I know that it was not related to the post.. but it was related to your comment.


பெரிசு, நான் எதோ தப்பா கமெண்ட் போட்ட மாதிரி சீன் க்ரியேட் பண்ணிவிடறிங்களா? தனி பதிவா போடுவேண்டி..:))

//Sanjai's one of the comment rejected as it is not related to the post//

//இது பதிவுக்குத் தொடர்பில்லாத பின்னூட்டம்.... :)//

அப்போ ஜெகதீசன் கமெண்ட் மட்டும் ஏன் வெளியிட்டிங்க.. சிங்கை சகா என்பதாலா? நாங்கள் கோவியார் மற்றும் தோதியார் தலைமையில் காலை 9 மணி முதல் மதியம் 11.59 வரை உண்ணாவிரதம் இருப்போம்.


( நீங்க என்ன தான் குட்டிக் கரணம் அடிச்சாலும் உடன்பிறப்புகள் வரப் போறதில்லை. நானாவது கும்மி அடிக்க்கிறேனே.. :) )

கோவி.கண்ணன் said...

//தாகி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுவிட்டார்கள், அப்போ தாகியை கொன்றது யார்? தாகி ஒரு வேளை தற்கொலை செய்து கொண்டாரா?
//

:)

தன்னை படுகொலைச் செய்யச் சொல்லி கூலிப் படையை அவரே ஏவி விட்டுக் கொள்ளவில்லையா ?

கோவி.கண்ணன் said...

// குழலி / Kuzhali said...
Sanjai's one of the comment rejected as it is not related to the post
//

:)

எனக்கும் இவரால் இது போன்று வருவது உண்டு.

குழலி / Kuzhali said...

//சரி ..இதற்கு மாற்றாக யாரை ஆதரிக்க வேண்டும் ? அல்லது ஓட்டு போடுதல் ,அரசியல் ஈடுபாடு இதிலிருந்தெல்லாம் விலகிவிட வேண்டுமா?

உங்கள் ஆலோசனையைச் சொல்லவும்
//
ஜோ உங்களுக்கு தெரியாததல்ல, ஒரு ஜென் கதையிலிருந்து சில வரிகள், ஏற்கனவே நிரம்பியிருக்கும் கோப்பையில் எவ்வளவு தான் மேலும் மேலும் ஊற்றினாலும் கோப்பையில் தங்காது வழிந்தோடிவிடும், எனவே தான் முதலில் கோப்பையில் இருப்பதை கொட்ட வேண்டும்...

நான் கோப்பையில் இருக்கும் விசத்தை கொட்ட சொல்கிறேன்... வேறு வழியில்லையென்று கோப்பையில் இருக்கும் விசத்தையே கட்டிக்கொண்டு அழுதால்?

குழலி / Kuzhali said...

//தன்னை படுகொலைச் செய்யச் சொல்லி கூலிப் படையை அவரே ஏவி விட்டுக் கொள்ளவில்லையா ?
//
ஒரு குரூப்பாதான் கெளம்பியிருக்கிங்க‌ போல நீங்கலாம் மாட்டிவிடுற அளவுக்கு ஒர்த் இல்லிங்க‌

Sanjai Gandhi said...

//:)

எனக்கும் இவரால் இது போன்று வருவது உண்டு. //

கோவிஜி, ஆனாலும் உங்களுக்கு கொழவி அளவுக்கு எச்பீரின்ஸ் பத்தாது.. :)

உங்க ப்ளாக்ல தான் மாடரேஷனே இல்லையே சாமி.. இந்த பெரிசு மாடரேஷன் போட்டிருக்கிறதே போடாத கமெண்டுக்கெல்லாம் பொய் பழிப் போடத்தான்.. :))

K.R.அதியமான் said...

மனிதாபிமானம், சகாகக்கள் மீது உண்மையான பாசம் / நேசம் அற்றவர் கருணாநிதி. இந்த உண்மை, தா.கி படுகொலையை அவர் rationalise செய்த போதுதான் உறைத்தது. (ஒரு தி.மு.க குடும்பத்தில் பிறந்தவன் நான்). 1990களில் தீப்பொறி ஆறுமுகம் குமுதத்தில் எழுதிய திறந்த மடல் பல விசியங்களை தெள்வுபடுத்தியது.

எம்.ஜிஆரும், ஜெவும் இந்த விசியத்தில் மேல். அவர்கள் பல தவறுகள் புரிந்திருந்தாலும், தம்மை சார்ந்தவர்கள் மீது பரிவும், பாசமும்,
செலுத்தியவர்கள். தாரளமாக உதவும் உள்ளம் கொண்டவர்கள்.

மு.க கள்ள மனம் கொண்ட வஞ்சகர்.
இரக்கமும், உண்மையான நேசமும் கிடையாது. எனவே...

தா.கி ஆட்கள், அழகிரியை போட்டு தள்ளியிருந்தால் இதே போல முக பேசியிருப்பாரா ? அண்ணா காலம் முதல் நடந்த படுகொலைகளை பட்டியலிட்டு, rationalise செய்திருப்பாரா ? தா.கி குடும்பத்தாருக்கு ஒரு அனுதாப தொலைபேசி கூட செய்யாத ‘தலைவர்’ இவர். இவரை நம்பியதுதான் பெரும் தவறு.

மணிஜி said...

யப்பா...நல்லாயிருங்க..சிங்கப்பூர்லயேயும் எங்களுக்கு (அடி) ஆள் இருக்கப்பா..அப்புறம் ரிஜெக்ட் செய்யப்பட்ட கமெண்ட்களை தனி மெயிலில் அனுப்ப முடியுமா?

மாயவரத்தான் said...

எப்படீங்க பேரெல்லாம் இப்படி நியாபகத்துல வெச்சிருக்கீங்க?

பட்டுக்கோட்டை சீனி. பன்னீர்செல்வம் கொலையான போது செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே நடந்த கொலை அது!

Anonymous said...

The comparison is wrong.DMK did not eliminate leaders of opposition parties.DMK and ADMK fought against each other and had killed many in the course of time. Still that was not a policy of both parties.Even when they were power they did not let loose a regime of terror and violence against each other or against the public.
But LTTE had a clear cut policy of eliminating other groups, not just their leaders. Its victims included men,women who had nothing to do with inter/intra group rivalry.Killing political opponents was justified by LTTE and its supporters and they committed a great blunder in that.They paid a heavy price for that.
LTTE ran kangroo courts and used torture and cruel methods to kill
anyone whom they suspected.Their terror network was well organised and its reach was beyond Sri Lanka.

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

எம்.ஜிஆரும், ஜெவும் இந்த விசியத்தில் மேல். அவர்கள் பல தவறுகள் புரிந்திருந்தாலும், தம்மை சார்ந்தவர்கள் மீது பரிவும், பாசமும்,
செலுத்தியவர்கள். தாரளமாக உதவும் உள்ளம் கொண்டவர்கள்.//

எம்.ஜி.ஆரை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவை எந்த வகையில்...?
எடுத்துக் கொள்கிறீர்கள்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

r.selvakkumar said...
ஈழத் தமிழர் ஆதரவு என்பது, கருணாநிதியை எதிர்ப்பது என்ற எண்ணத்தில் தானும் சிக்கிக் கொண்டு, மற்றவர்களையும் சிக்க வைக்க நினைக்கும் உங்களைப் போன்றோரைப் பார்த்தால் . . பாவமாக இருக்கிறது.
//

கருணாநிதி மீட்டெடுத்த உரிமைகளைப் பட்டியலிடுங்கள்!

விட்டுக் கொடுத்தவைகளை நான் சொல்கிறேன்!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

அப்போ ஜெகதீசன் கமெண்ட் மட்டும் ஏன் வெளியிட்டிங்க.. சிங்கை சகா என்பதாலா? நாங்கள் கோவியார் மற்றும் தோதியார் தலைமையில் காலை 9 மணி முதல் மதியம் 11.59 வரை உண்ணாவிரதம் இருப்போம்.


( நீங்க என்ன தான் குட்டிக் கரணம் அடிச்சாலும் உடன்பிறப்புகள் வரப் போறதில்லை. நானாவது கும்மி அடிக்க்கிறேனே.. :) )//

சரியா 1159 க்கு உண்ணா நிலையை நாங்கள் முடித்துக் கொண்டவுடன் எனக்கு மட்டன் பிரியாணியும், கோவியாருக்கு வெஜிடேபில் புலாவும் பிளேட்டுல ரெடி பண்ணி வச்சா ஒரு கட்டு கட்டுவோம்.

இதை எனது சுய சரிதையில் எழுதிவைக்க ஏதுவாக அமையும். வரலாறு முக்கியம்!

உண்ணா நிலையை கற்றுக் கொடுத்த காங்கிரச் காரங்களுக்கே நாங்க அல்வா கொடுக்குறோம் பாருங்க சஞ்சை.

இப்பல்லாம் காங்கிரச் காரங்க பெருசா உண்ணா நிலை எடுப்பதில்லையே ஏன்?

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

மாயவரத்தான்.... said...
எப்படீங்க பேரெல்லாம் இப்படி நியாபகத்துல வெச்சிருக்கீங்க?

பட்டுக்கோட்டை சீனி. பன்னீர்செல்வம் கொலையான போது செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். போலீஸ் ஸ்டேஷன் எதிரிலேயே நடந்த கொலை அது!//

அப்ப நான் மயிலாடுதுறையில் (மாயவரத்தில்)இருந்தேன். மாலை முரசில் தலைப்புச் செய்தியில் வந்திருந்தது!

Sanjai Gandhi said...

//எம்.ஜி.ஆரை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவை எந்த வகையில்...?
எடுத்துக் கொள்கிறீர்கள்? /

மனனார்குடி மாஃபியா கும்பல் வகையில் தான்.

Sanjai Gandhi said...

//இப்பல்லாம் காங்கிரச் காரங்க பெருசா உண்ணா நிலை எடுப்பதில்லையே ஏன்?
//

2 சாப்பாட்டு வேளைகளுக்குள் உண்ணாவிரதம் இருப்பது தானே இப்போ ட்ரெண்ட். நானெல்லாம் அதுக்கும் மேலயே இருக்கேனே.. தெரியாதா?. நாங்க இதை எல்லாம் விளம்பரப் படுத்திக்கிறதில்லை. மேலும் கோவையில் இன்னும் பீச் கட்டவில்லை. சன் & கிங் “உள்” கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதாக கேள்வி.. :))

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...
//இப்பல்லாம் காங்கிரச் காரங்க பெருசா உண்ணா நிலை எடுப்பதில்லையே ஏன்?
//

2 சாப்பாட்டு வேளைகளுக்குள் உண்ணாவிரதம் இருப்பது தானே இப்போ ட்ரெண்ட். நானெல்லாம் அதுக்கும் மேலயே இருக்கேனே.. தெரியாதா?. நாங்க இதை எல்லாம் விளம்பரப் படுத்திக்கிறதில்லை. மேலும் கோவையில் இன்னும் பீச் கட்டவில்லை. சன் & கிங் “உள்” கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதாக கேள்வி.. :))//

இன்னும் கொஞ்சம் பணத்தப் போட்டு ஒரு லட்சம் கோடியாக்கி, தோண்டுனா சேது கோயம்புத்தூருக்கு வரமாட்டேன்னா சொல்லப்போறாரு!

அத்திவெட்டி ஜோதிபாரதி said...

SanjaiGandhi™ said...
//எம்.ஜி.ஆரை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவை எந்த வகையில்...?
எடுத்துக் கொள்கிறீர்கள்? /

மனனார்குடி மாஃபியா கும்பல் வகையில் தான்.//

சுவாமி கொஞ்சம் ரசனையோடு சொல்லுவான். நீங்கள் சொல்வது அந்த ரசனையுடன் ஒலிக்கவில்லை. இன்னும் எதிர் பாக்குறேன்.

ஜோ/Joe said...

//நான் கோப்பையில் இருக்கும் விசத்தை கொட்ட சொல்கிறேன்... வேறு வழியில்லையென்று கோப்பையில் இருக்கும் விசத்தையே கட்டிக்கொண்டு அழுதால்?//

சரி ..கொட்டி விட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள் ..அடுத்து உங்கள் பரிந்துரை என்ன ? எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் ? விஷமில்லா பானத்தை கொடுப்பவர்கள் யாராவது உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா?

ரவி said...

2 சாப்பாட்டு வேளைகளுக்குள் உண்ணாவிரதம் இருப்பது தானே இப்போ ட்ரெண்ட். நானெல்லாம் அதுக்கும் மேலயே இருக்கேனே.. தெரியாதா?. நாங்க இதை எல்லாம் விளம்பரப் படுத்திக்கிறதில்லை. மேலும் கோவையில் இன்னும் பீச் கட்டவில்லை. சன் & கிங் “உள்” கட்டமைப்பு நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டிருப்பதாக கேள்வி.. :)



என்ன கொடுமை சஞ்ஜெய். நீ என்ன இளங்கோவன் கோஷ்டியா ?

மற்றபடி, பதிவுக்கு சம்பந்தமாகத்தான் பின்னூட்டம் போடவேண்டும் என்றால் எப்படி என்று எனக்கு சத்தியமாக விளங்கமாட்டேங்குது.

குழலி / Kuzhali said...

//சரி ..கொட்டி விட்டேன் என்றே வைத்துக்கொள்ளுங்கள் ..அடுத்து உங்கள் பரிந்துரை என்ன ? எத்தனை காலம் காத்திருக்க வேண்டும் ? விஷமில்லா பானத்தை கொடுப்பவர்கள் யாராவது உங்கள் கண்ணுக்கு தெரிகிறார்களா?
//
நான் கொட்டிவிட்டு காத்திருக்கிறேன், எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று உள்ளேன் நான், ஆனால் அதற்காக என்னால் விசத்தை அருந்த முடியாது...

என் சட்டையில் தீ பிடித்தவுடன் சட்டையை கழட்டி எறிகிறேன், அம்மணகட்டையாக இருப்பதை பற்றி யோசிக்கவில்லை, ஆனால் தீபிடித்த சட்டையோடிருந்தால் கரிக்கட்டை தான் என்பது மட்டும் எனக்கு தெளிவாக தெரியும்.

ஜோ/Joe said...

//நான் கொட்டிவிட்டு காத்திருக்கிறேன், எவ்வளவு நேரம் காத்திருந்தாலும் பரவாயில்லை என்று உள்ளேன் நான், ஆனால் அதற்காக என்னால் விசத்தை அருந்த முடியாது...//

நீங்களும் நானும் காத்திருக்கலாம் ..ஆனால் நாடும் ,அரசாங்கமும் ,நம்மை பாதிக்கும் ஆட்சிகளுக்கும் விடுமுறையோ இடைவெளியோ கிடையாது ..அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் .

குழலி / Kuzhali said...

//நீங்களும் நானும் காத்திருக்கலாம் ..ஆனால் நாடும் ,அரசாங்கமும் ,நம்மை பாதிக்கும் ஆட்சிகளுக்கும் விடுமுறையோ இடைவெளியோ கிடையாது ..அது தொடர்ந்து கொண்டு தான் இருக்கும் .
//
தலைவரின் நல்லாட்சி தொடரட்டும்... வாழ்க தமிழ் வாழ்க தமிழின தலைவர்... வேறென்ன சொல்ல?

வால்பையன் said...

ஈரோட்டு முன்னாள் அமைச்சரை சி.பி.ஐ தேடுதாமாம்!

ஜோ/Joe said...

//தலைவரின் நல்லாட்சி தொடரட்டும்... வாழ்க தமிழ் வாழ்க தமிழின தலைவர்... வேறென்ன சொல்ல?//

உங்கள் நக்கலை நட்புணர்வோடு விலக்கி வைத்து விட்டு கேட்கிறேன்.

தமிழின துரோகி கருணாநிதி ஆட்சி தொடர வேண்டாம் ..வேறு யாருடைய ஆட்சி வர வேண்டும் என நினைக்கிறீர்கள் ? அல்லது நீங்கள் காத்திருக்கும் வரை எந்த ஆட்சியும் வேண்டாமென்று ஏற்பாடு செய்ய முடியுமா?

thiru said...

கருணாநிதி அல்லது ஜெயலலிதா என்கிற மரணச்சுழலை விட்டு வெளியேற முதலில் இரண்டும் மரணச்சுழல்கள் என்பதை உணரவேண்டும் ஜோ. அடுத்தது எதைப் பற்றி கரையேறுவது என்பதை யோசிக்கலாம். அது பலமிக்க மரக்கிளையாக இருக்குமா? படகா? கரையோரமா? என்பதெல்லாம் பிறகு.

'கருணாநிதியை விட்டால் வேறு நல்ல ஒருவரை காட்டுங்கள்' என்கிற இந்த அபத்தமான போக்கு தான் அழிவுகளின் ஆரம்பமே. ஆட்சியாளர்களுக்கு மக்களால் அடுத்தமுறை ஆட்சியிலிருந்து விலக்கப்பட்டு தண்டிக்கப்படுவோமென்ற அச்சம் இருக்க வேண்டும். அந்த அச்சத்தை விலக்கி நிரந்தர அடிமைப் பத்திரம் எழுதி கொடுப்பது.

குழலியின் முந்தைய பதிவில் கேட்க நினைத்த கேள்வி ஒன்று. குஜராத் படுகொலைகள் பற்றிய அவரது பார்வையை சில மாதங்களுக்கு நானும் நண்பர்களிடம் கேட்டிருக்கிறேன். அதிலிருந்து வரும் கேள்வியொன்று.

திமுககாரர்கள், அனுதாபிகளுக்கு விடுதலை, மனித உரிமை, சமூகநீதி ஆகிய மூன்று விழுமியங்களும் எப்படிப்பட்டது? இன்றைய நிலையில் திமுக அவற்றிற்காக பாடுபடுகிறதா? இந்த கேள்வி ஈழப்பிரச்சனைக்கு மட்டும் அல்ல. ஈழப் பிரச்சனையை தவிர்த்தும் சிந்திக்கலாம்.

சிங்கை நாதன்/SingaiNathan said...

;)

அன்புடன்
சிங்கை நாதன்

K.R.அதியமான் said...

////எம்.ஜி.ஆரை ஒரு வகையில் எடுத்துக்கொள்ளலாம். ஜெயலலிதாவை எந்த வகையில்...?
எடுத்துக்கொள்கிறீர்கள்? /

///

தனிப்பட்ட முறையில் பலருக்கும் பல காலமாக பெரும் உதவி செய்தவர் / செய்கிறவர் ஜெ. வெளியே தெரியாமல் செய்வார். (எம்.ஜி.ஆர் போல அல்லாமல்). ஆனால் சசிகலா கும்பல்கள், ஊழல்கள், அடக்குமுறை வேறு விசியம். நான் சொல்ல வந்தது, தனிபட்ட மனிதனேயம் மற்றும் கைவிடாத மனோபாவம்.
மு.கவிடம் சற்றும் இல்லாத
குணம்.

ஜோ/Joe said...

//கருணாநிதி அல்லது ஜெயலலிதா என்கிற மரணச்சுழலை விட்டு வெளியேற முதலில் இரண்டும் மரணச்சுழல்கள் என்பதை உணரவேண்டும் ஜோ. அடுத்தது எதைப் பற்றி கரையேறுவது என்பதை யோசிக்கலாம். அது பலமிக்க மரக்கிளையாக இருக்குமா? படகா? கரையோரமா? என்பதெல்லாம் பிறகு. //

சரி திரு ! மரணச்சுழலில் போராடிக் கொண்டு தானிருக்கிறோம் . இந்த மரணச்சுழல் ஒரேடியாக நம்மை அமுக்கி சாகடிக்கும் முன்னராவது நீங்கள் கரையேறுவதற்கு எதையாவது காட்டுவீர்கள் என நம்புகிறேன் ..அதைத் தான் கேட்கிறேன் .கரையேறு அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என்றால் கரையேற இடம் இருக்கிறதா என கேட்கிறேன் . குழலியும் நீங்களும் அதை மட்டும் தான் சொல்ல மாட்டேன் என்கிறீர்கள் . அல்லது நான் கரையேறி மூச்சு வாங்க சற்று நேரம் சமுத்திரத்தை இல்லாமல் செய்ய முடுயுமா?

தயவு செய்து உடனே கருணாநிதியை நான் நல்லவர் என்று சொல்கிறேன் என்றெல்லாம் குறை சொல்லி பெயர் வாங்காதீர்கள்.

ஜோ/Joe said...

குழலி/திரு,
ஒரு சின்ன சந்தேகம் .கட்சிகளுக்கு சேவகம் செய்வதைப் பற்றி இங்கே நீங்கள் பேசிக் கொண்டிருந்தால் ..மன்னிக்கவும் ..நான் அதைப் பற்றி பேசவில்லை ..நான் கேட்பது நடைமுறை எதார்த்தம் ..அடுத்த மாதம் தேர்தல் வந்தால் நான் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் ?

தத்துவங்கள் ,சித்தாங்களை பதிலாக தராமல் நேரடியாக நடைமுறை பதில் தரவும்.

Sanjai Gandhi said...

//
என்ன கொடுமை சஞ்ஜெய். நீ என்ன இளங்கோவன் கோஷ்டியா ?//

இளங்கோவனின் தீவிர ரசிகன். இதற்கு நீங்கள் என்ன அர்த்தம் சொன்னாலும் கவலை இல்லை மாம்ஸ்..

கடந்த வாரம் தருமபுரி வந்த வாசனுக்கு தினகரனிலும் தினத்தந்தியிலும் கொடுக்கப் பட்ட விளம்பரத்திலும் என் பெயரும் படமும் இருந்தது.

சிதம்பரத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி பதிவு போட்டிருக்கிறேன். இதுவரை எந்த தலைவர் முன்னாடியும் கை கட்டி நின்றதோ சிபாரிசுக்கு சென்றதோ இல்லை. எங்கள் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரையும் மதிக்கிறேன். ஒருவரைத் தவிர.

குழலி / Kuzhali said...

//.அடுத்த மாதம் தேர்தல் வந்தால் நான் யாருக்கு ஓட்டளிக்க வேண்டும் ?
//
போன பாராளுமன்ற தேர்தலைவிட கொடுமையான சூழலா இன்னும் ஒரு மாதத்தில் வந்துவிடப்போகிறது?

கடந்த பாராளுமன்ற தேர்தலில் தான் நம்முடைய எதார்த்தமும் நடைமுறையும் கொண்டு வந்து நிறுத்திய இடம் தான் எல்லோருக்கும் தெரியுமே....

Sanjai Gandhi said...

ஜோவின் கேள்விகளுக்கு நேரடியாக பதில் சொல்லுங்க குழலி. ஓவர் சமாளிஃபிகேஷன் ஒடம்புக்கு ஆகாது. கருணாநிதி என்றில்லை. இப்போது பலமாக இருக்கும் தலைவர்களை புறக்கணிக்க வேண்டுமென்றால் யார் மாற்று? உங்க ஜென் கதை எல்லாம் எல்லாத்துக்கும் ஒத்து வராது சாமி. நடுக்கடலில் இருக்கும் படகில் இருந்து குதிக்க வேண்டுமானால் மாற்றுப் படகு இருக்க வேண்டும். தண்ணீரில் மூழ்கி சாகவெல்லாம் முடியாது. அந்த மாற்றுப் படகு எது? கரைக்கு வா பார்த்துக்கலாம் என்பது வாதமாக தான் இருக்கும். கரைக்கு வரும் வரை உயிரோட இருக்க முடியாது. எதுனா சுறா கவ்விடும்.

மாற்று யார் என்பதற்கு என்னிடம் பதில் இருக்கு. உங்களிடம் தான் ஜோ கேட்கிறார். அதை நான் ஆதரிக்கிறேன். :)

TBCD said...

// குழலி / Kuzhali said...

டிபிசிடி அப்போ தலைவர் கருணாநிதி இல்லையா, நெடுஞ்செழியன் தானா? தலைவர் கருணாநிதியையும் தாண்டி செல்வாக்கு செலுத்துமளவுக்கு இருந்தவரா நெடுஞ்செழியன்... அடடே...
//

செவிவழிச்செய்தி என்று போட்டியிருந்தேன்.

அண்ணா உயிரோடியிருந்தப் பொழுது, கலைஞர் 2ஆம் நிலையில் இல்லை. அண்ணா மறைந்தப் பொழுது, ஒரு பிற்படுத்தப்பட்டவர் தான் முதல்வராக வரவேண்டும் என்று கலைஞர் கேட்டுக்கொண்டு, அதற்கு பொதுக்குழு ஆதரவும் கிடைத்தது. அதில் முக்கியமானவர் எம்சிஆர். கலைஞருக்கு முன் அந்தப் பதவிக்கு போட்டியிட்டவர் நாவலர்.

கலைஞர் முதல்வர் ஆனாலும், கட்சியில் அவர் நினைத்த மாற்றங்கள் எல்லாம் உடனே செய்யும் நிலைக்கு வந்துவிடவில்லை.

எம்சிஆர் கணக்கு கேட்டவுடன், எப்படியாவது சமாதானம் செய்து அழைத்து வந்துவிட வேண்டும் என்று கலைஞர் விரும்பியதாகவும், ஆனால் ,தன்னை ஆதரிக்கவிரும்பாத எம்சிஆரை பழிவாங்க நாவலர் தன்னிச்சையாக முடிவெடுத்தார் என்றும் சொல்லக் கேள்வி.

நாவலர் கட்சியில் பொதுச்செயலாளர், கலைஞர் தலைவர். இருவருமே கட்சியில் கிட்டத்தட்ட சரி சமமான பலம் தான் கொண்டவர்கள்.

இது பதிவின் மையக்கருத்துக்கு தொடர்பில்லை என்றாலும், இந்த விவகாரத்தில் கலைஞர் கை இருந்ததா என்பது சந்தேகத்திற்குரியது, என்பது என் கருத்து.

thiru said...

ஜோ,
‘ஜெயலலிதாவுக்கு மாற்று கருணாநிதி. கருணாநிதிக்கு மாற்று யார்?’ என்கிறீர்கள். கருணாநிதிக்கு பிறகு தமிழகத்திற்கு யாரை பிடிப்பீர்கள்? எதனடிப்படையில் அந்த ‘தலைவரை’ தேர்வு செய்வீர்கள்? (திமுக கட்சி தலைவர் பற்றியதல்ல). தமிழக/இந்திய அரசியலின் 'oligarchy' அரசியலை பின்னர் விரிவாகவே பேசலாம்.
மக்கள் மத்தியிலிருந்து தலைவர்களை உருவாக்கும் சனநாயக அரசியலைப் குறிப்பிட்டால் தத்துவம், சித்தாந்தம் என்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் உங்களைப் போன்றவர்கள் 'வேறு எவன் நல்லவன் என்று காட்டு' என்று கேட்கும் போது உங்களை அறியாமலே 'கருணாநிதியை பார் எவ்வளவு நல்லவர்' என்று 'அத்தாட்சி பத்திரங்கள்' வழங்குகிறீர்கள். மாற்று அரசியலை தேடுபவர்களையும் இந்த கேள்வி தடுக்க முனைவதை அறிகிறீர்களா?
இப்படித்தான் 'ராஜாஜியை போல இவன்களால் ஆட்சி செய்யமுடியுமா?' 'பெரிய பாரம்பரீயத்துக்கு சொந்தக்காரர், மெத்த படித்த அறிவாளி...' என்று கேலி பேசினார்கள் ஆதிக்க வர்க்கத்தினர். ஆனால் காமராசரின் அரசியலில் அவர்கள் தோற்றார்கள். அன்று மாற்றத்தை உருவாக்க பெரியாரும், காமராஜருக்கு துணையாக இருந்தார். இப்போது ராஜாஜியின் இடத்தில் கருணாநிதி இருக்கிறார்.
கட்சிகளுக்கு சேவகம் செய்ய சொன்னதாக தவறாக புரிகிறீர்கள். தலைவரை மையப்படுத்துவதல்ல அரசியல் நண்பரே. இதுவரையில் அந்த பிழையை தான் தமிழ்ச் சமூகம் செய்து வருகிறது. தேர்தலோடும், வாக்களிக்கும் நாளோடும் அரசியல் முடிந்து போவது இல்லை. வாக்களிப்பது மட்டுமே அரசியலும் இல்லை. ஒரு தேர்தலுக்குள் மாற்றம் ஏற்பட்டு ஆட்சி அதிகாரத்தையை பிடிக்க வேண்டுமென்று எதிர்பார்ப்பவர்களுக்கு திமுக வரலாற்றிலிருந்தே உதாரணம் கிடைக்கும். 1949ல் திமுக துவங்கப்பட்டு 1956 வரையில் தேர்தலில் நிற்கவில்லை. 1956 ல் திருச்சியில் நடந்த மாநில மாநாட்டில் தேர்தலில் நிற்க திமுக முடிவெடுத்தது. ஆனாலும் 1967ல் தான் திமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து அண்ணா ஆட்சியமைத்தார். கட்சி துவங்கிய பிறகு ஆட்சியமைக்க அண்ணாவுக்கு 19 ஆண்டுகள் ஆகியிருக்கிறது.
தலைவர், கட்சி போன்ற பக்திகளிலிருந்து விடுபட்டு மாற்றத்துக்கான தேடல் இருந்தால் மாற்று அரசியலை உருவாக்க முடியும். இது யதார்த்தமான நடைமுறை.

ஜோ/Joe said...

திரு,
உங்கள் பதிலில் ஒரு வாக்கியத்தை கூட நான் மறுக்க முடியவில்லை .மாற்றத்துக்கான தேடல் என்னிடமும் இருக்கிறது . ஆளாளுக்கு தனித்தனியாக தேடுவதை விட ,உங்கள் கருத்தையும் கேட்டு முடிவு செய்யலாம் என்பதால் ,உங்கள் கண்ணுக்கு ஏதாவது ஒளி தெரிகிறதா என கேட்கிறேன்.

இப்போதைக்கு மாற்று ஏதும் இல்லையென்கிறீர்களா ?
மாற்றாக வரக்கூடிய சக்தியாக நீங்கள் கணிப்பதற்கு கூட யாரும் இல்லையா?
மாற்றாக வரமுடியும் என நீங்கள் பரிந்துரைப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என நினைக்கிறீர்கள்?
அந்த நாள் வரும் வரை நாம் என்ன செய்ய வேண்டும் ?

என்னுடைய கேள்விகள் எந்த உள்நோக்கமும் இல்லாத மிக நேரடியான கேள்விகள் ..பதிலிருந்தால் தாருங்கள் ..நானும் உங்களோடு இணைந்து கொள்கிறேன்.

Anonymous said...

'திமுககாரர்கள், அனுதாபிகளுக்கு விடுதலை, மனித உரிமை, சமூகநீதி ஆகிய மூன்று விழுமியங்களும் எப்படிப்பட்டது? இன்றைய நிலையில் திமுக அவற்றிற்காக பாடுபடுகிறதா? இந்த கேள்வி ஈழப்பிரச்சனைக்கு மட்டும் அல்ல. ஈழப் பிரச்சனையை தவிர்த்தும் சிந்திக்கலாம்'

1976 DMK govt dismissed by India Gandhi.1979 DMK allied with her
1989 DMK allied with BJP and joined NDA.2002 Anti-muslim riots in Gujrat, DMK dismissed that as a
minor issue, did not demand removal
of Modi, did not withdraw ministers and continued in the alliance till Dec 2003.2004 DMK
allied with congress.
Did DMK vote against POTA in the parliament? Did DMK ever demand that actions should be taken against VHP and RSS ? Did it ever demand that recommendations of various reports
on police reform be implemented.
Thiru as a labor activist should tell us DMK's stand and performance on labor issues.
The same can be applied to other parties like PMK.

Anonymous said...

ஆனாலும் 1967ல் தான் திமுக பெரும்பான்மை இடங்களை பிடித்து அண்ணா ஆட்சியமைத்தார்

Yes but it was because it had an alliance and people were unhappy with congress.Even now DMK cannot win without an alliance.

உண்மைத்தமிழன் said...

இன்னும் அதிகமான உட்கட்சிப் படுகொலைகள் நடந்திருக்கின்றன. அவரைப் பொறுத்தவரையில் அவைகளனைத்தும் இரங்கற்பா எழுத கிடைத்த அவருக்குக் கிடைக்கப் பெற்ற வாய்ப்பு.. எழுதி, எழுதியே மறந்து போயிருப்பார்..

ஈழத்தை மறக்க முடியாததால் திசை திருப்பியாவது தப்பிக்கலாம் என்று பார்க்கிறார்.. நீங்கள்தான் விட மறுக்கிறீர்கள்..!?

thiru said...

//இப்போதைக்கு மாற்று ஏதும் இல்லையென்கிறீர்களா ?
மாற்றாக வரக்கூடிய சக்தியாக நீங்கள் கணிப்பதற்கு கூட யாரும் இல்லையா?
மாற்றாக வரமுடியும் என நீங்கள் பரிந்துரைப்பதற்கு இன்னும் எவ்வளவு காலம் ஆகும் என நினைக்கிறீர்கள்?
அந்த நாள் வரும் வரை நாம் என்ன செய்ய வேண்டும்?//

ஜோ,

உங்கள் கேள்விகளில் உள்நோக்கமில்லை என்பதால் பதிலளிக்கிறேன். இதில் நானும் உங்களைப் போல தேடலில் ஈடுபடுகிறேன்...நாம் இணைந்து தான் தேட வேண்டும்.

விடுதலை, மனித உரிமை, சமூகநீதி, சனநாயகம் ஆகியவை விழுமியங்களும் மாற்று அரசியலுக்கான அலகுகள். அவற்றில் அனைத்து வேறுபாடுகளையும் கடந்த சம உரிமையும், நீதியும் அடிப்படையாக பார்க்கிறேன். உட்கட்சி/இயக்கம், சமூகம், ஆட்சியியல் அனைத்திலும் அவற்றை காண வேண்டும். அப்போது மட்டுமே இன்றைய பிரச்சனைகள் நாளை இல்லாமல் போகமுடியும்.

உடனடி மாற்றம் (instant change)என்று எதுவுமில்லை. நேர்மையான மக்கள் அரசியலுக்கு அது பொருத்தமான வழியோ எதிர்பார்ப்போ அல்ல. அவை ஒருபோதும் நிகழ்ந்து விடாது. ராணுவ சர்வாதிகாரம் வேண்டுமானால் விரைவாக அதிகாரத்தை கைப்பற்றலாம். அது மாற்று அரசியலை உருவாக்காது. இந்தியாவில் அதற்கு சாத்தியமோ அவசியமோ இல்லை. காரணம், ஏற்கனவே மக்கள் 5 வருடங்களுக்கு ஒருமுறை சர்வாதிகாரிகளை தாங்களே தேர்ந்தெடுக்கிறார்கள்.

மாற்றாக வரக்கூடிய 'சக்திகள்' யாரென்ற உங்கள் கேள்விக்கு இப்போதைக்கு அடையாளப்படுத்தும் முன்னேற்றங்கள் அவ்வளவாக தெரியவில்லை. ஆனால் மாற்றத்தை விரும்புகிற எண்ணற்ற மனிதர்கள் இருக்கிறார்கள். குறிப்பாக தங்களது சொந்த வேலைகளையும், குடும்பங்களையும் கூட கருதாது 'மாற்று அரசியல்' தேடலில் ஈடுபடும் பல இளைஞர்களும், இளம் பெண்களும் இருக்கிறார்கள். அவர்களது அரசியல் வளர்த்தெடுக்கப்பட்டு ஒருங்கிணைக்கப்பட்டால் மாற்றம் நிகழும். அந்த பாதையில் தலைவர்கள் அடையாளம் காணப்படுவார்கள். தலைவர்களை மறந்து நாம் முதலில் அரசியலை கட்டியெழுப்ப வேண்டும்.

ஒற்றைத்தலைமை என்பதை மறந்து பலர் இணைந்து (பெண்கள் உட்பட) சமவுரிமையுடன் சிந்தித்து, விவாதித்து, செயல்படும் கூட்டுத்தலைமைக்கு நாம் செல்ல வேண்டும். சனநாயக மறுப்பு செயல்கள், சுயமோகம், அதிகாரவெறி ஆகிய எதிர்பண்புகளை கூட்டுத்தலைமையால் தோற்கடிக்க முடியும். கூட்டுத்தலைமையை கட்டியெழுப்புவதொன்றும் சாத்தியமில்லாததல்ல. ஆனால் ஒரு நாளில், மாதத்தில், ஆண்டில் நிகழ்ந்துவிடுமா என்றும் சொல்லமுடியாது. மாற்று தேடலுக்கான நம் உழைப்பை பொறுத்தது.

அந்த மாற்றம் நிகழும் வரையில் மாற்று அரசியலை, மாற்று பாதையை உருவாக்க, மாற்று தலைமைகளை அடையாளம் காணலாம். அதுவரையில் யாருக்கு வாக்களிப்பது என்று கேட்பீர்களானால் யார் உண்மையிலேயே அந்த தொகுதிக்கு உழைக்கிற மனித உரிமைகளை மதிக்கிற சமூக நோக்குள்ள வேட்பாளரோ அவருக்கு வாக்களிக்கலாம்.

இந்த சின்னம், கட்சி, இந்த தலைவர் சுட்டிக்காட்டுகிற வேட்பாளர் என்பதை மறந்துவிட வேண்டியது தான். புதிய ஒன்றை கட்டியெழுப்ப, பாழடைந்த இவற்றை விட்டு விலகுவது முதல் வேலை. மீண்டும் நினைவுபடுத்துகிறேன் மாற்று அரசியல் நினைத்தவுடன் வரவழைக்கும் மாய மாங்கனியல்ல.

உடனடி தீர்வு தான் வேண்டுமென்றால் கருணாநிதி, ஜெயலலிதா, தங்கபாலு, விஜயகாந்த் ..........(கோடிட்ட இடத்தில் மற்றவர்களை நிரப்பிக்கொள்ளுங்கள்) துவங்கி நாளை முதலமைச்சர் கனவிலிருக்கும் விஜய் வரை நிறைய ஆட்கள் இருக்கிறார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் தங்களது அனுதாபிகளுக்கும், தொண்டர்களுக்கும் நல்லவர்கள். ஆனால் மாற்று அரசியல் அதுவல்லவே!

குழலி, நீண்ட பின்னூட்டங்கள் எழுதி பதிவின் மைய கருத்திலிருந்து விலகியிருந்தால் மன்னித்துக்கொள்ளுங்கள்.

ஜோ/Joe said...

திரு,
உங்கள் பதிலுக்கு நன்றி!

நீங்கள் சொன்னது நான் எதிர்பார்த்த நேரடி பதில் இல்லையென்றாலும் நீங்கள் சொல்ல வருவது கீழ்கண்ட 'தேவர்மகன்' வசனம் சுட்டும் நிலைப்பாடு தான் என புரிந்து கொண்டு ஏற்றுக்கொள்ளுகிறேன்.

"நீ வா ..அங்க கூட்டிட்டு வா ..ஆனா அந்த பய மெதுவா தான் வருவான் .மெதுவா தான் வருவான் .."

"மெதுவாண்ணா எம்புட்டு மெதுவாய்யா ..அதுக்குள்ள நான் செத்து போயிடுவேன் போலிருக்கு "

"போ ..செத்து போ..நான் தடுக்க முடியுமா ..எல்லா பய புள்ளையும் ஒரு நாள் செத்து போக வேண்டியது தான் ..ஆனால் மத்தவங்களுக்கு பயனுள்ள வாழ்க்கையா வாழ்ந்துட்டு போறது தான் அந்த வாழ்க்கைக்கே பெருமை ..இன்னிக்கு நீ வெத போடுற ..உடனே நீ பழம் சாப்பிட முடியுமா ? உன் மகன் சாப்பிடுவான் ..அப்புறம் அவன் மகன் சாப்புடுவான் .ஆனா வெத நீ போட்டது ..இதெல்லாம் நமக்கு பெருமையா ..இல்லை..ஒவ்வொருத்தனோட கடமை."

thiru said...

ஜோ,

தேவர்மகன் திரைப்படத்தில் அந்த வசனத்தின் பலன் எதற்காக சொல்லப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. திரைப்பட காட்சிகள் மறந்து போனதால் உங்கள் வசனத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை. ஆனால் இதே வசனம் அழிவுக்கும், ஆக்கத்திற்கும் பயன்படலாம்.

'மாற்று அரசியலும், சமுதாய மாற்றங்களும் சுயம்புவாக வரட்டும். எனக்கும் அதற்கும் சம்பந்தமில்லை. என்னை சுற்றி நடப்பது எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. கொண்ட தலைமையும், கட்சியும் அதைவிட முக்கியம்' என்று இருந்தால் அழிவுகளும், துயரங்களும் நமக்கும் வந்துசேரும்.

நமக்காக போராடவும், உழைக்கவும் நாம் பிறரை மட்டும் எதிர்பார்க்கும் இடத்தில் மாற்றமோ, சுதந்திரமோ இருக்கமுடியாது. அடிமைத்தனம் மட்டும் இருக்கலாம்.

உங்கள் புரிதலுக்கும், பொறுமைக்கும் மிக்க நன்றி!

ஜோ/Joe said...

//தேவர்மகன் திரைப்படத்தில் அந்த வசனத்தின் பலன் எதற்காக சொல்லப்பட்டுள்ளது என்பதை பொறுத்தது. திரைப்பட காட்சிகள் மறந்து போனதால் உங்கள் வசனத்திற்கு பதில் சொல்ல விரும்பவில்லை.//
இதை பாருங்க ..புரியும்.
http://www.youtube.com/watch?v=ul9Xvjt83eI

முகவை மைந்தன் said...

@ஜோ

திரு விளக்கமாகவே நிறைய சொல்லி விட்டார். 'எனக்கு வேறு மாற்று இல்லை, அதனால ஆதரிக்கிறேன்' அப்படிங்கறது அறியாமை (அபத்தம்) இல்லையா? குறைந்தது ஏன் எதிர்க்க வேண்டும் என்ற விழிப்புணர்வாவது பரவ வேண்டும்.

இங்க கருணாநிதி, செயலலிதா மேல குற்றம் சொல்றது வீண். அதிகாரங்கள் குவிந்துள்ள இடத்துல முறைகேடுகள் மலிவதைத் தடுக்க முடியாது. 5 ஆண்டுக்கொரு தனிநபர் செல்வாக்கில் ஆட்சி ஆமைவது அதனால் தான். மாநில தன்னாட்சிக்காக குரல் கொடுக்கும் யாரும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரங்களை பிரித்துத் தர எண்ணுவதில்லை. இங்கே பணத்தை கையாளும் அதிகாரம் பிரிந்தால் மட்டுமே மாற்றம் கொண்டு வரும் எந்த அமைப்பும் தன் வழியில் பெரிதும் விலகாது தொடர்ந்து செயல்பட முடியும்.

அடுத்த திங்கள் தேர்தல்ல யாருக்கு வாக்குன்னு கேட்டீங்க இல்லையா? திமுகவை எதிர்த்து வாக்களிக்கணுங்கறது தான் என்னோட பரிந்துரை. ஊழல் என்பதையும் தாண்டி நாம என்னத்தை சிந்திக்கணும், சிந்திக்கக் கூடாதுங்கறதை தீர்மானிக்கும் கருவியாக இன்றைய ஆளும் குடும்பம் (உண்மை தானே) மாறி இருக்கிறது. ஆட்சி இன்னொரு குடும்பத்துக்கு (இதுவும் உண்மை தாங்க) மாறுனா குறைஞ்சது வேற ஒருவழிச் சிந்தனைல கொஞ்ச நாள் பயணப் படலாம். பேசாம 3 ஆண்டுகளுக்கு ஒரு தேர்தல்னு கொண்டு வரலாம். மாறி சிந்திக்க ஏந்தா இருக்கும்.

பதிவை விட்டு விலகிய கருத்துரை. மன்னிக்கவும்.

ஜோ/Joe said...

//அடுத்த திங்கள் தேர்தல்ல யாருக்கு வாக்குன்னு கேட்டீங்க இல்லையா? திமுகவை எதிர்த்து வாக்களிக்கணுங்கறது தான் என்னோட பரிந்துரை//

'திமுக எதிர்ப்பு ஓட்டு' -ன்னு பட்டன் வச்சுருக்காங்களா என்ன ?

யாருக்கு ஒட்டளிக்கணும்னு நேரடியா சொல்லுங்க.

ஜோ/Joe said...

// ஆட்சி இன்னொரு குடும்பத்துக்கு (இதுவும் உண்மை தாங்க) மாறுனா குறைஞ்சது வேற ஒருவழிச் சிந்தனைல கொஞ்ச நாள் பயணப் படலாம்.//

இங்கே நீங்கள் ஜெயலலிதாவை மீண்டும் ஆட்சியில் அமர்த்த பரிந்துரைக்கிறீர்கள் என்றால் திரு -வின் கருத்தும் உங்கள் கருத்தும் ஒன்றா என அறிய ஆவலாயிருக்கிறேன்.

(எல்லோரும் ஏன் இப்படி சுத்தி வளைச்சு பேசுறாங்கண்ணு புரியவேல்ல சாமி)

குழலி / Kuzhali said...

//(எல்லோரும் ஏன் இப்படி சுத்தி வளைச்சு பேசுறாங்கண்ணு புரியவேல்ல சாமி)
//
Joe if election is tomorrow I prefer Jayalalitha, I guess we had a very long discussion about this in one of my post before the MP election.

but in the long run I prefer an alternate from these two mafia.

http://kuzhali.blogspot.com/2009/04/blog-post_29.html

Now I feel jeya is lesser evil than Karunanithi and Family...

Enough??

ஜோசப் பால்ராஜ் said...

Here everybody asking about alternative source . Ok, i am ready. How many of you will come forward to support me?
How many of you will join with me? how many of you will work with me?

Tell me the answer.

Sanjai Gandhi said...

//Joe if election is tomorrow I prefer Jayalalitha, I guess we had a very long discussion about this in one of my post before the MP election.//

இதை மொதல்ல சொல்ல வேண்டியது தானே. எதுக்கு இவ்ளோ பில்டப். தனி ஈழம் வாங்கித் தருவதே தன் லட்சியம் என முழங்கிய கையோடு கொடநாட்டில் போய் போர் வியூகமா வகுத்தார்? தேர்தலுக்குப் பின் ஈழம் என்ற வார்த்தையாவது உபயோத்தாரா கருணாநிதியை திட்டும் அறிக்கைகள் தவிர. பிரபாகரன் தீவிரவாதி என்ற நிலையை மாற்றிக் கொண்டாரா? தேர்தலுக்கு முன் போராளி என்று சொல்லிவிட்டு பின் மீண்டும் தீவிரவாதி என்றார்.

அவர் கட்சியின் MLA கூட அவரை பார்க்க முடியாது. இவருக்கு ஓட்டுப் போட்டு யாருக்கு என்ன பயன்?. சிதம்பரமும் , ஸ்டாலினும் என் ஆப்ஷன். உலகத் தமிழர்களுக்கும் இல்லை என்றாலும் தமிழகத் தமிழர்களுக்காவது பிரயோஜனமா இருக்கும்.

//Now I feel jeya is lesser evil than Karunanithi and Family...//

but not an angel.. isn't it? and the same way we feel that karunanithi is not bad then J and co ( vaiko & comminists).

கருணாநிதியையும் ஜெவையும் ஒப்பிடுவதற்கு மட்டுமே இந்த பதில். கருணாநிதிக்கும் மாற்று இருக்கு.

thiru said...

ஜோ,

முந்தைய பின்னூட்டங்களில் எனது கருத்தை தெளிவாகவே வைத்திருக்கிறேன். கருணாநிதியும், ஜெயலலிதாவும் செய்கிற அரசியல் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவை. இவர்களின் கட்சிகளின் ஆட்சி தமிழக அரசியலை மாற்றுமென்று நம்புவது அறியாமை. ஒன்று தனது குடும்பமென்றால், இன்னொன்று திரைமறைவில் இயக்குகிற வேறொரு குடும்பம். இரண்டு பேரிடமும், அவர்கள் கட்சிகளிலும் சனநாயம் துளியுமில்லை. இருவருக்கும் சுயமோகமும், பதவிவெறி மட்டும் தான். மக்கள் நலன் என்று பேசுவதெல்லாம் வாக்கு வங்கிக்காக.

நீங்கள் இதுவரையில் கேள்விகளை மட்டும் கேட்கிறீர்களே தவிர, உங்கள் பார்வையில் எது சரியான அரசியல் என்பதை சொல்லவில்லை.

வெளிப்படையாக சில கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள்.

1. கருணாநிதியின் அரசியலில் உங்களுக்கு பூரணமான நிறைவு உள்ளதா?

2. திமுக எதற்காக துவக்கப்பட்டது? இப்போது அந்த கொள்கைகள் அடிப்படையில் இன்று திமுக அரசியலில் ஈடுபடுகிறதா?

3. மனித உரிமைகள், விடுதலை, சனநாயகம், சமூகநீதி ஆகியவற்றில் இன்றைய திமுகவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?

4. பணநாயகம், குடும்ப அரசியல் பற்றிய உங்கள் பார்வையென்ன?

ஜோ, இவற்றில் உங்கள் கருத்தை அறிந்தால் மேற்கொண்டு உரையாட வசதியாக இருக்கும்.

இதற்கெல்லாம் ஜெயலலிதாவை இழுக்கமாட்டீர்களென்று நினைக்கிறேன்.

ஜோ/Joe said...

திரு,
உங்கள் கேள்விகளுக்கு என்னுடைய பதில்கள்...

1. கருணாநிதியின் அரசியலில் உங்களுக்கு பூரணமான நிறைவு உள்ளதா?
இல்லை .பெருத்த ஏமாற்றம்.

2. திமுக எதற்காக துவக்கப்பட்டது? இப்போது அந்த கொள்கைகள் அடிப்படையில் இன்று திமுக அரசியலில் ஈடுபடுகிறதா?
திமுக-வின் தனது கொள்கைகளை நீர்த்துப் போக செய்வதில் புதிய உச்சத்தை எட்டியிருக்கிறது.

3. மனித உரிமைகள், விடுதலை, சனநாயகம், சமூகநீதி ஆகியவற்றில் இன்றைய திமுகவை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள்?
பாதை மாறி பயணப்படும் இயக்கம்.

4. பணநாயகம், குடும்ப அரசியல் பற்றிய உங்கள் பார்வையென்ன?
விசனப்படக் கூடிய அளவுக்கு மோசமாக உள்ளது

ஜோ/Joe said...

குழலி,

//Joe if election is tomorrow I prefer Jayalalitha, I guess we had a very long discussion about this in one of my post before the MP election.//
மறக்கவில்லை .என்னுடைய புரிதலின் படி ,நீங்கள் ஜெயலலிதாவை ஆதரிக்கப் போவதற்கு சொன்ன காரணம் "கருணாநிதிக்கு மீண்டும் வாக்களித்தால் என்ன தான் நடந்தாலும் வேறு வழியில்லாமல் நமக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்ற கருணாநிதியின் மமதையை போக்குவதற்காகவாவது பரவாயில்லை என ஜெயலலிதாவுக்கு வாக்களிக்க வேண்டும் " (தவறாக இருந்தால் மன்னிக்கவும்) ..ஆனால் இப்போது "Now I feel jeya is lesser evil than Karunanithi and Family" என்ற நிலைக்கு வந்திருக்கிறீர்கள்.

நீங்களும் முகவை மைந்தனும் சொல்வதை பார்த்தால் கருணாநிதியும் அவர் குடும்பமும் மட்டுமே தொடர்ந்து பணத்தை அள்ள வேண்டுமா ? ஒரேடியாக இவர்களிடம் போவதை தவிர கொஞ்சநாளாவது ஜெயலலிதாவுக்கு போகட்டுமே என நினைப்பதாக தோன்றுகிறது (நீங்கள் இல்லையென்றால் குறைந்தபட்சம் முகவை மைந்தன் சொலிவதைப் பார்த்தால் அப்படித் தான் இருக்கிறது) .என்னைப் பொறுத்தவரை போகிற பணம் யாரிடம் போகிறது என்பதை விட கவனத்தில் கொள்ள வேண்டிய இன்னும் பல விடயங்கள் இருக்கின்றன ..கருணாநிதி மிக மோசமாக நடந்து கொண்ட ஈழத்தமிழர் விடயம் உட்பட பல தமிழகம் சார்ந்த நீண்டகால சமூக அரசியல் விடயங்களில் கருணாநிதியின் ஏமாற்றமளிக்கும் செய்லபாட்டுக்கு எந்த விதத்திலும் எள் முனையளவு கூட அதிகமாக செய்யமாட்டார் என்பது மட்டுமல்ல ,இதை விட மோசமாக இருக்கும் என்ற என் நம்பிக்கையை மாற்றக்கூடிய அளவுக்கு ஜெயலலிதாவிடம் எதுவும் காணக்கிடைக்கவில்லை ..உங்களுக்கு அந்த நம்பிக்கை இருக்கலாம் ..எனக்கந்த நம்பிக்கை துளியும் இல்லை.

Selvakumar said...

குழலி, எனக்கு சரியாக நினைவில்லை. ஆனால், வீரமணி இதற்கு முன்பு வேறொருவரை தலைவராக நியமித்ததாக நியாபகம். அவர் விபத்தில் இறந்துபோனதாக படித்த நினைவு.

குழலி / Kuzhali said...

ஜோ நீங்கள் இந்த வாதத்தை கருணாநிதி Vs ஜெயலலிதா என்ற நிலைக்கு எடுத்து போவதற்கு மிகவும் முயற்சிக்கின்றீர்கள்... விசயம் கருணாநிதி Vs ஜெயலலிதா அல்ல... நமக்கான மாற்று எது என்பதை தேட நினைக்கும் முயற்சி...

நாங்கள் உண்மையாகவே மொழி உணர்வுக்காகவும், இனத்துக்காகவும், கொள்கைக்காகவும் கருணாநிதியை நேசித்தவர்களின் எண்ணத்தில் மாற்றங்களை விதைக்க முயலுகிறோம்...

கருணாநிதியை ஒரு ஹீரோவாகவும் அதன் ரசிகர்களாகவும் உள்ளவர்களின் எண்ணங்களை மாற்ற எதுவும் செய்ய இயலாது, எத்தனை தீவிர ரஜினி ரசிகர்களை மாற்ற முடிந்தது??... எனவே நீங்கள் தொடருங்கள்...

முகவை மைந்தன் said...

@ஜோ
திருவின் கேள்விகளுக்கு நீங்கள் அளித்த விடைதான் என்னுடையதும். ஆட்சி மாற்றம் கோருவதற்கான காரணம் ஊழலில் பங்கு போடுவது மட்டுமில்லை. வல்லவன் ஒருவனே என்ற நிலையை விட இரண்டு கெட்ட வல்லவர்கள் தான் ஓரளவு நன்மை விளைவிக்க முடியும். ஆட்சி மாறும் வாய்ப்பு இருப்பதே ஒரு கட்டுப்பாட்டுடன் சுரண்ட வழி வகுக்கும்.

ஈழ விவகாரத்தில் இன்று தமிழ்நாடு (அரசு) எடுத்திருக்கும் நிலைக்கு எவ்வளவு துணிச்சல் வேண்டும்! திமுக கூட்டணிக்குழு என்ற பெயரில் சென்ற குழு முகாம்கள் உலகத் தரத்தில் இருப்பதாகவும், அங்கே இருப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கிறார்கள்னும் அறிக்கை விட எவ்வளவு ஈனம் நிறைந்திருக்க வேண்டும்? ஏன் மக்களின் உணர்வுகள் அங்க எதிரொலிக்கலை? சேத்ததைக் காக்க வேண்டிய கட்டாயந்தானே?

இப்ப மாற்றங்கறது என்னன்றது தான் கேள்வி. என்னைப் பொறுத்த வரை கொள்ள அடிக்கிற ஆட்கள் மாறுவதை விட கொள்ளை அடிக்கும் வாய்ப்புகள் குறைக்கப் பட வேண்டும். தேன் எடுத்தாப் புறங்கையை நக்கித் தான் ஆகணும். புறங்கையில தேன் ஒட்டாம (மாற்று வழிகள்ல ) எடுத்தா? அதிகாரங்கள் சிறு வரையறைக்குட்பட்ட அமைப்புகளிடம் பிரித்து வழங்கப் படவேண்டும். தமிழ்நாடு முழுவதும் சாலை போடும் குத்தகை ஒரு அமைச்சரிடம் இருப்பதை விட அந்தந்த பகுதி உள்ளாட்சி அமைப்புகள் தனித்தனியே குத்தகை விட முடியும்னா, ஊழலே நடந்தாலும் பல நூறு மனிதர்களிடம் பணம் சிக்கும். அவர்களால் கேள்வி கேட்க நினைப்பவர்களை ஒடுக்கும் அளவுக்கு வளர முடியாது.

இதெல்லாம் நடக்குறதுக்குள்ள அப்படின்னு அயர்ந்தீங்கன்னா, அதுவரைக்கும் கொள்ளையர் கூட்டத்தை மாறி, மாறி ஆட்சில அமர்த்த வேண்டியது தான். மக்களாட்சி முறை தன்னில் இருந்து மாற்றத்தை விளைவித்து (self evolution)அடுத்த கட்டத்துக்கு முன்னேறும் இயல்புடையது. அதில் அடுத்த கட்டத்துக்கு நெருக்கத்தில் இருக்கிறோம்னு நம்பறேன்.

thiru said...

அன்பின் ஜோ,
எனது முந்தைய கேள்விகளுக்கு உங்கள் உளமார்ந்த பதிலுக்கு (மிகவும் சுருக்கமாக இருப்பினும்) என் நன்றிகள்.

மானிட விடுதலை, சுயமரியாதை, சுதந்திரம், மனித உரிமைகள், சமூகநீதி, சனநாயகம் ஆகிய அடிப்படை விழுமியங்களை எப்போது ஒரு அமைப்பு சிதைக்க ஆரம்பிக்கிறதோ அப்போதே அதன் தலைமையையும், அந்த அமைப்பையும் விட்டு வெளியேறுவது மாற்றத்திற்கான முதல் முயற்சி. நீங்கள் கருணாநிதி/திமுக செயல்பாட்டைப் பற்றி கொடுத்திருக்கிற பதில்களை இன்னும் ஆளமாக சிந்திப்பீர்களென்று நினைக்கிறேன். திமுக/கருணாநதியை விட்டு வெளியேறுவதும், அங்கேயே தங்கிவிடுவதும் உங்களது சுதந்திரத்திற்கும், சுயமுடிவிற்கும் உட்பட்டவை.

முகவை மைந்தனுக்கு,

எந்த குடும்பத்திடம் நம்மை ஒப்படைப்பது என்பதல்ல இங்கே நடைபெறும் உரையாடல். எது மாற்று அரசியல் என்னும் தேடலே…

சஞ்சய்,

ஸ்டாலினை கருணாநிதியின் மாற்றாக நிறுத்துவது கண்ணை மூடி எரியும் நெருப்பில் குதிப்பது போன்ற முயற்சிதான். சிதம்பரம் பற்றி இங்கு ஒரு நண்பர் குறிப்பிட்டுள்ளார். சிதம்பரத்தின் தனிப்பட்ட திறமைகளுக்காக ஏற்றுக்கொள்வோமானால் தேர்தல் இல்லாமலே கலாநிதி மாறனிடமோ, அம்பானி சகோதர்களிடமோ ஆட்சியை ஒப்படைக்கலாம்.
உலகமயமாக்கல் பொருளாதார கொள்கையின் மனித உரிமை குற்றங்களுக்கு சிதம்பரத்தின் திட்டங்களும், கொள்கைகளும் காரணமென்பதை எவரும் மறைக்க முடியாது.

சிவகங்கை தொகுதியில் தனியார் நிறுவனங்கள் செலவிட்ட பணம் எதற்காக? பாராளுமன்ற தேர்தலில் சிதம்பரமும், அவரது ஆட்களும் எப்படியெல்லாம் சனநாயகத்தை முடக்கும் வேலைகளில் ஈடுபட்டார்கள்? வழக்கு நடைபெற்று வருகிற சிவகங்கை தேர்தல் முடிவு தனிக்கதை.

வட மாநிலங்களில் நக்சல் ஒழிப்பு என்ற பெயரில் மலைவாழ் மக்கள் மற்றும் பழங்குடியினர் நிலங்களை துப்பாக்கிமுனையில் பறித்து பன்னாட்டு மற்றும் தனியார் முதலாளிகளுக்கு சுரங்கம் மற்றும் தொழிற்சாலைகள் அமைக்க கொடுக்கும் அநீதிக்கு சிதம்பரத்தின் உள்த்துறை துப்பாக்கிமுனையில் காவல் நிற்கவில்லையா? கொள்ளையிடும் தனியார் நிறுவனங்களுக்கு ஆலோசகராக சிதம்பரம் செயல்பட்டிருந்தாரா இல்லையா?

நம் வீட்டுக்கு அருகில் யுரேனிய சுரங்கங்களிலிருந்து வெளியேறும் அபாயகரமான கழிவுகள் தேங்கி குழந்தைகள் உட்பட அனைவரும் மடியும் போதும் சிதம்பரத்தை மீட்பராக அறிவிப்போமா? ஈழப் படுகொலைகளில் சிதம்பரத்தின் பங்கு உண்டா இல்லையா? இல்லையானால் மைய அரசில் வேறு யார் இவற்றிற்கு காரணமென்று இதய சுத்தியோடு சிதம்பரம் வெளிப்படையாக பேசுவாரா? சிதம்பரத்தின் கொள்கைகள் பாம்புகளில் நல்லபாம்பு!

மக்களை என்று நேசிக்கிறோமோ அன்று முதல் நமக்கு விடுதலையும் துவங்கும். தற்காலிக மாற்றாக நாம் தேடும் எதுவும் நிரந்தர சமாதனத்தையும், நீதியையும் தராது. சமூக நீதிக்கும், மனித உரிமைகளுக்கும் எதிரான எவையும் விடுதலையோ, சமாதானமோ அல்ல. அவை மாற்றமோ, மாற்றத்திற்கான ஆட்சியோ அல்ல.

thiru said...

முகவை மைந்தன்,

உங்கள் முந்தைய பின்னூட்டம் அதிகாரத்தை மக்களுக்கு பிரித்துக்கொடுப்பது பற்றி பேசுவதாக விளங்குகிறேன். ஊழலையும், அதிகார குவியல் காரணமாக வருகிற பணநாயகத்தையும் மாற்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு முழு சுதந்திரம் கொடுக்கப்பட்டு பெண்கள், சமூக ஆர்வலர்கள்...ஆகியவர்களை உள்ளடக்கிய கண்காணிப்பு குழுக்களை அமைத்தால் ஓரளவு உள்ளாட்சி மட்டங்களிலும் ஊழல் பரவாமல் தடுக்கமுடியும். திட்டங்களை அந்தந்த பகுதி மக்களின் தேவைகள், நலன்கள் அடிப்படையில் உருவாக்க முடியும்... மக்களும் சமூக பொறுப்பு, சனநாயகம், கூட்டுமுயற்சி... ஆகிய பண்புகளில் வளர்வார்கள்.

Pot"tea" kadai said...

இரும்படிக்கர எடத்துல ஈக்கென்ன வேலை என்பதனால் அமைதியாய் பார்வையாளனாக...

திருவின் விளக்கங்களும் ஜோவின் வியாக்கியானங்களும் ...

டிங் டிங் டொங்

ஜோ/Joe said...

//கருணாநிதியை ஒரு ஹீரோவாகவும் அதன் ரசிகர்களாகவும் உள்ளவர்களின் எண்ணங்களை மாற்ற எதுவும் செய்ய இயலாது, எத்தனை தீவிர ரஜினி ரசிகர்களை மாற்ற முடிந்தது??... எனவே நீங்கள் தொடருங்கள்..//

அற்புதமான புரிதல் ..நன்றி!