திராவிடர் கழகத்தின் வர்ணாசிரம தலைமையும் மானங்கெட்ட மானமிகுகளும்

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு மற்றும் சுயமரியாதையை வலியுறுத்தல், வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது... பாவம் திராவிடர் கழக கூடாரத்தில் இருப்பவர்கள் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை வெறும் சாதி அளவில் மட்டும் என்று நினைத்துவிட்டார்கள் போலும், அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.

திராவிடர் கழகத்திற்கு நாம் பெரியாரின் கருத்துகளை விளக்க வேண்டிய கொடுமையை பாருங்கள்...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர், அதாவது வர்ணாசிரமத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பதவிக்கு வந்துள்ளார், பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா? இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.

திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,வர்ணாசிரமத்தை எதிர்க்கும் பேரியக்கமாச்சே இங்கே ஏன் இப்படி?

பெரியாரின் பிறப்பின் அடிப்படையில் வேறுபாடு பார்ப்பதை எதிர்க்கும் கொள்கைக்கு தான் திக தலைமை குழி தோண்டி புதைத்துவிட்டதென்றால் அதன் "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் பெரியாரின் சுயமரியாதைக்கு பாடை கட்டியுள்ளனர்.

திரு.அன்புராஜ்க்கு பதவிபிரமாணம் செய்ய தலைமை முடிவெடுத்திருந்தாலும் திராவிடர் கழக "மானமிகு" தொண்டர்களும் நிர்வாகிகளும் என்ன செய்திருக்க வேண்டும், கழக தொண்டு, கழக பணிகள், அனுபவம், தியாகம், திறமை இவைகளையெல்லாம் தாண்டி திரு.அன்புராஜ் அதிகாரம்மிக்க பதவிக்கு அறிவிக்கப்பட்டிருப்பது இந்த திறமையான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் இவர்களை எல்லாம் தகுதி குறைத்த செயல்தானே, இவர்களுடைய தகுதி குறைக்கப்பட்டது என்பது இவர்களின் சுயமரியாதைக்கு இழுக்குதானே, இந்த மானமிகுகளின் சுயமரியாதைக்கு இழுக்கு என்றவுடன் என்ன செய்திருக்க வேண்டும், தலைமையை எதிர்த்து குரல் எழுப்பியிருக்க வேண்டாமா?

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... மத நம்பிக்கைகளையும், மூட நம்பிக்கைகளையும் அடிமைத்தனத்தையும் (அடிமைத்தனம் எந்த உருவத்தில் என்றாலும் பாசம், எஜமான விசுவாசம், மத நம்பிக்கை, காதல் என எந்த உருவத்திலும்) எதிர்த்த பெரியாரின் இந்த மானமிகு தொண்டர்கள் எந்த விசுவாசத்தின் அடிப்படையில் இதை சகித்துக்கொண்டுள்ளார்கள்?

இதையெல்லாம் பார்க்கும்போது இவர்கள் போடும் கருப்பு சட்டைக்கும் "மானமிகு" அடைமொழிக்கும் பொருள் புரிந்து தான் போடுகிறார்களா? அல்லது இவர்களும் காவி உடுத்தி பெயரின் முன் ஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீஸ்ரீ ஜல்சானந்தா சுவாமிகள் என்று போடுவது போல கருப்பு சட்டையையும் "மானமிகு" அடைமொழியையும் பயன்படுத்துகிறார்களா என்று புரியவில்லை

தலைப்பு கடுமையாக இருக்கிறது என்று நினைத்தால் பார்பனீயத்தையும் வர்ணாசிரமத்தையும் எதிர்த்து திக வினர் வெளியிட்ட கட்டுரைகளின் தலைப்புகளின் கடுமையை பார்க்கும்போது இந்த தலைப்பெல்லாம் ஒன்றுமேயில்லை.

இணைப்புகள்

அப்பாடா! சுமை இறங்கியது!

இந்தச் சூழலில் அன்புராஜ் தான் உருவாக முடியும்!

57 பின்னூட்டங்கள்:

said...

:)

ஒரு முடிவோடத்தான் இருக்கிங்கப் போல.

said...

இதுபற்றி தமிழ் ஓவியா என்ன சொல்கிறார் என்று அறிய ஆசை.

said...

//
கோவி.கண்ணன் said...
:)

ஒரு முடிவோடத்தான் இருக்கிங்கப் போல
//
நீங்களும் ஒரு முடிவோடத்தான் இருக்கிங்களா என்னை போட்டு தருவது என்று....

பிரின்ஸ் மற்றும் தமிழ் ஓவியா இவர்களின் கருத்துகளை அறிய மிக ஆவலாக உள்ளேன்...

said...

//செந்தழல் ரவி said...
இதுபற்றி தமிழ் ஓவியா என்ன சொல்கிறார் என்று அறிய ஆசை.
//
எப்புடி மாம்ஸ் இப்போதான் நானும் அதையே சொல்லிட்டு வரேன் நீயும் போட்டிருக்க...

said...

கருப்புச்சட்டை என்பதே அழுக்குகளை மறைக்கத்தானே. வெள்ளையாக இருந்தால் தெரியும். கருப்பாக இருந்தால் எப்படி. செத்துப் போட்டியில் இது எல்லாம் சகஜம். நாம்தான் கொள்கைகளைப் படித்து ஏமாந்து போகின்றேம். நன்றி.

said...

//பிரின்ஸ் மற்றும் தமிழ் ஓவியா இவர்களின் கருத்துகளை அறிய மிக ஆவலாக உள்ளேன்...//

என்ன சொல்லப் போறாங்க புலிக்கு பிறந்தது பூனையாகாது என்று நிருபணம் செய்யும். தலைவரின் மகன் என்பதாலேயே அவருக்கு 'தகுதி'யான ஒன்றை நிராகரிக்க முடியாதே என்று ஸ்டாலின் மற்றும் ஜிகேவாசனைச் சுட்டிக்காட்டுவார்கள்.

உங்கள் பதிவுக்கு வரிக்கு வரி உடன்படுகிறேன். பெரியார் கருத்துகள் பிடிக்கும் என்பதற்காக வீரமணி ஐயாவின் செயல்களில் ஞாயம் இருப்பதாக நான் நினைப்பது இல்லை.

வீரமணி ஐயாவின் செயல் எந்த ஒரு கொள்கையும் காலத்தால் நீர்த்துப் போகும் என்பதன் மற்றொரு காட்டு.

வாரிசு இல்லாதவர்களால் தான் ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக உருவாக்கி / நடத்த முடியும். பெரியார் அண்ணா எடுத்துக்காட்டு மற்றவர்களுக்கு அவர்கள் பதவிகள், செல்வாக்குகள் வாரிசு உடமை ஆகிவிடும்

said...

திராவிடர் கழகம், தி.மு.கழகத்தின் பிராஞ்ச் ஆபீஸ் போன்று மாறியிருப்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது..!

பாவம் பெரியார்..! இதற்காகவா அவ்வளவு கஷ்டப்பட்டார்..?

said...

தமிழ் ஓவியா போன்ற தி.க அடிமட்ட தொண்டர்களை நினைத்தால் தான் பாவமா இருக்கு!

தலைமை பல்டி அடிக்கும் போதெல்லாம் தன் நிறத்தையும் மாற்றி கொள்ளும் பக்தர்கள் ஸாரி தொண்டர்கள் இருக்கும் வரை எந்த கட்சிக்கும் அபாயமில்லை!

said...

தமிழ் ஓவியாவிடமிருந்து உங்களது எதிர்ப்பார்ப்புக்கு இடி போன்ற அளவில் எதிர்வினை வரும்.

அதாங்க, அதுதான் இடிபோன்ற மௌனம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

ராமதாசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் தங்களுக்கு மற்றவர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது?

said...

//பித்தனின் வாக்கு said...
கருப்புச்சட்டை என்பதே அழுக்குகளை மறைக்கத்தானே. வெள்ளையாக இருந்தால் தெரியும்.
//

ஐயா பித்தனின் வாக்கு, மலைக்கு மாலை போடுபவர்களின் கருப்பு உடையை மாலை போடும் நீங்களே இப்படி கேவலமாகச் சொல்லக் கூடாது.

பெரியவா சின்னவாள்களின் காஷாய காவி நிறம் கூட அழுக்கையும் அதன் நாற்றத்தையும் கூட அமுக்கிவிடும் என்று நான் சொல்வது சரியா தவறா ?
:)

said...

//ndu(#11168674346665545885) said...
தமிழ் ஓவியாவிடமிருந்து உங்களது எதிர்ப்பார்ப்புக்கு இடி போன்ற அளவில் எதிர்வினை வரும்.

அதாங்க, அதுதான் இடிபோன்ற மௌனம்.

அன்புடன்,
டோண்டு ராகவன்
//

எப்படியோ உங்களுக்கு வியாழக்கிழமை கேள்விகளுக்கு அனானிகள் அல்லது அனானிப் பெயர்களாக/ளுடன் போட்டுக் கொள்ள கேள்விகள் கிடைக்குதே. (நீங்களே அனானியாகப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று நான் சொல்வதாக புரிந்து கொள்ள வேண்டாம்)

:)

said...

//இளங்கோ said...
ராமதாசை கண்ணை மூடிக்கொண்டு ஆதரிக்கும் தங்களுக்கு மற்றவர்களைப் பற்றி பேச என்ன இருக்கிறது?
//
ஹைய்யா வந்துட்டாருய்யா... சரி உடுங்க கேட்கறதுக்கு எனக்கு தகுதியில்லைன்னே வச்சிப்போம்... ராமதாசை ஆதரிக்காத பெரிய லிஸ்ட்டே பின்னூட்டத்தில் கேட்கிறாங்களே அவங்களுக்கு பதில் சொல்லுங்கோ... இல்லைன்னா அவங்களையும் இவங்களை ஆதரிக்கிறாங்க அவங்களை ஆதரிக்கிறாங்கன்னு கை மட்டும் காட்டிட்டு போகப்போறிங்களா?

said...

//திமுகவில் வாரிசு அரசியல் இல்லையா, பாமகவில் இல்லையா என்று வாதத்திற்கு வரும் முன் அவைகள் எல்லாம் ஓட்டு பொறுக்கி அரசியல் கட்சிகள், திராவிடர் கழகம் தான் ஓட்டுப்பொறுக்காத சமூக விடுதலை இயக்கமாச்சே,//

இப்டி ஏத்தி விட்டு ஏத்தி விட்டே ஒடம்ப ரணகளமாக்கி வச்சிட்டிங்கய்யா.. யார் ஆளுங்கட்சியாக வராங்களோ அவங்களுக்கு கூஜா தூக்கறதைவிட ஓட்டுப் பொறுக்கி கட்சிகள் மோசமில்லை அய்யாச்சாமி. அவங்க ஆளும்கட்சி பார்க்காம தேர்தலுக்கு தேர்தல் தான் தாவறாங்க. இவரு தேர்தல் முடிஞதும் தாவுவாரு. இவர் தலைமையில் செயல்படும் அமைப்பிடம் நீங்க ரொம்ப ஓவரா எதிர்பார்த்துட்டு, இவரை என் குறை சொல்ரிங்க. வீரமனி ரொம்பத் தெளிவாத்தான் இருக்கிறார். அறக்கட்டளையும் கல்விநிலையங்களும் யாருக்கோ சொந்தமாவதை அவர் விட வேண்டுமா என்ன? போங்கய்யா போக்கத்தவங்களா.. :)

said...

சனநாயகமுறையில் நடந்த தேர்வை இப்படி பகிடி செய்யலாமா? :) ஒரு கூட்டம் திறமையாக நடத்துமளவு பொறுப்பும், தலைமைப் பண்பும் மிக்கவர் அன்புராஜ். அவரை விட்டால் பெரியார் நிறுவனங்களையும், சொத்துக்களையும் பாதுகாக்க திறமைமிக்கவர்கள் தமிழகத்தில் யார் இருக்கிறார்கள்?

பெரியாரை பிடித்து நடந்தால் நிறுவனமயமாவது எப்படி? அதனால் சுயமரியாதை பிரச்சாரங்களை நிறுத்தி ஆண்டுகள் பல ஆயிற்று. அய்யா வீரமணி தெளிவாக இருக்கிறார்.

நீங்களெல்லோரும் பொறாமையில் பேசுகிறீர்களோ? பேராசிரியர்.அன்புராஜ் வாழ்க! :)

said...

//நீங்களே அனானியாகப் போட்டுக் கொள்கிறீர்கள் என்று நான் சொல்வதாக புரிந்து கொள்ள வேண்டாம்//
அப்படியே நினைத்து கொண்டாலும் அது உங்கள் கருத்து என்று புரிந்து கொள்வேன்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

said...

தி.கவில் உட்கட்சி சனநாயகம் பெரியார் காலத்திலேயே கிடையாது.
பெரியாருடன் முரண்பட்டால் திகவில்
நிலைத்திருக்க முடியாது.குத்தூசி குருசாமி, அண்ணா போன்றோர் கற்ற பாடம் இது.
பெரியாருக்குப் பின் வந்தது யார்-மணியம்மை, அவருக்குப் பின்
வீரமணி.திகவில் ஒருவர் எத்தனை ஆண்டுகள் வேண்டுமானாலும் தலைமைப் பொறுப்பில் இருக்கலாம் என்று இருக்கும் போது வேறு எப்படி நடக்கும்.பெரியாருக்கு தேவை சொன்னதை செய்யும் தொண்டர்கள்,
கேள்வி கேட்பவர்கள் அல்ல. வீரமணி சொல்கிறார்-
எனக்கு பெரியார் கொடுத்த புத்தி போதும், சுயபுத்தி வேண்டாம்.
திகவிற்கு தலைமை சொல்வதைக்
கேட்கும் புத்தியுடைய தொண்டர்கள் தேவை.
முதல் கோணல் முற்றும் கோணல்
என்பதுதான் திகவில் நடக்கிறது.
ஆனைமுத்து என்ன ஆனார், ஏன் திகவில் இல்லை.1990களில் ஏன் விடுதலை ராசேந்திரன் உட்பட பலர் விலகினர்- புது இயக்கம் கண்டனர்.

said...

குழளி அவர்களே !

"வர்ணாசிரமம் என்றால் என்ன? பிறப்பின் அடிப்படையில் மனிதர்களிடையே உயர்வு தாழ்வு பார்ப்பது, பிறப்பின் அடிப்படையில் தகுதியை நிர்ணயிப்பது, பிறப்பின் அடிப்படையில் பலரை தாழ்த்தி சிலரை உயர்த்துவது "

வர்ணாசிரமம் இதுவல்ல. பிறப்பின் அடிப்படையில் என்று எந்த நூலிலும் சொல்லவில்லை. அவரவர் செய்யும் தொழிலின் அடிப்படையில் அந்தகாலத்தில் வகுக்கப்பட்டது.

சரி மேட்டர்க்கு வருவோம்.

தன் சொத்து என்று வரும்போது பெரியாரும் நீங்கள் கூறிய வர்ணாசிரமத்தையே பயன்படுத்தினார். பிள்ளை இல்லாத காரணத்தால், இரண்டாம் திருமணம் செய்து, அந்த டிரஸ்டை மணியம்மையாருக்கு எழுதி வைத்தார். அந்த டிரஸ்ட் நிர்வாகியாக இப்பொழுது வீரமணி. அதன் பிறகு அவர் மகன்.

அண்ணாதுரை அவர்களையே நம்பாமல், அந்த வயதில் இரண்டாம் திருமணம் செய்து, வேறொருவர் பெயருக்கு டிரஸ்டை ஒப்படைத்தவர் பெரியார். அவரின் தொண்டர் ஐயா வீரமணி.அவரும் அப்படித் தான் இருப்பார்.

said...

செருப்பால் அடித்துச் சொன்னாலும் இவர்களுக்கு புரியாது.....

கோழை மணியை நம்பி இத்தனையும் சேர்த்துவைத்துச் சென்ற பெரியாருக்கு இதுவும் வேணும், இன்னமும் வேணும்.

எல்லாவற்றிலும் விவரமாயிருந்த அய்யா இதில் எப்படி ஏமாந்தார்.....

சரி யானைக்கும் அடி சறுக்கும் தானே

அருமையான பதிவு......

said...

ada ennappa!
naangathaan aambalainga vayai mooda Tasmak pombalainga yosikkavekoodathunnu ilavasa TV athula algaachchi serialnnu pottu adimaiyaavachirkoomlla.
Yarange namma Kuzhaikku napolean parcel.

said...

//பிறப்பின் அடிப்படை என்பது பார்ப்பான், சத்திரியன், வெள்ளாளன், தலித் மட்டுமா? தலைவரின் மகன் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பதவி பிறப்பின் அடிப்படையில் இல்லையா?
//

Good thinking, I never thought that you could see this "promotion" like this as Varnasramam !!!

You are in blasting Form :)

said...

திராவிடர் கழகம் கண்ட பெரியாரின் மிக முக்கிய கொள்கை வர்ணாசிரம எதிர்ப்பு //

கர்ணா எதிர்ப்பு சிரமங்க.

அப்பரம் எப்படி சொத்து, கல்வி நிலையங்கள பாதுகாக்கிறது.

புல் டோசர் வரும் தெரியும்ல.

பெரியாராவது,அண்ணாவாவது,
காயிதே மில்லத்தாவது,கக்கனாவது,
திருமாவா இருந்தாலும் அதான்!

புரிஞ்சு நடந்துக்கனும் சாமியோவ்!

said...

அது தலைவரின் மகன் என்ற பிறப்பின் அடிப்படையில் பதவி வழங்குவதும் வர்ணாசிரமம் தான் என்பதை மறந்துவிட்டார்கள்//

தலைவரின் மகன்களெல்லாம்(,) தான் தோன்றியவர்களாயிற்றே!

இதுக்காக குதிச்சு வந்தவங்க, இன்னும் சொல்லப்போனா, தெய்வப்பிறவிகள்!
தொண்டர்கள் சேவிச்சுக்கனும்!

said...

சுயமரியாதை என்பதை பெரியார் வலியறுத்திய மிக முக்கியமான ஒன்று, சுயமரியாதை என்பது தம்முடைய மரியாதைக்கும் சுயத்துக்கும் இழுக்கு ஏற்படுத்தும் எதையும் வற்புறுத்தலாலோ அல்லது மதத்தின் பெயராலோ அறியாமையாலோ ஏற்று கொள்ளாமல் எதிர்த்து போராடுவது, அதனாலேயே திராவிடர் கழகத்தின் தலையிலிருந்து வால்வரை அத்தனை பேரும் "மானமிகு" என்று அழைத்துக்கொள்வதும் போட்டுக்கொள்வதும்.//

ஆமா, சாயிபாபாவைப் பாக்க அப்புரூவல் லெட்டர் வேனுனா இங்க கிடைக்கும். அதை வைத்து சாயிபாபாவின் காலடியில் சுயமரியாதைச் சுடரை ஏற்றலாம்!
அப்ப குனியும் போது கோல்கேட் வெண்மை தெரியும். அதுதான் சுயமரியாதையின் பொரிம்பிட்ட (பிராண்டட்) பல்லிளிப்பு.

said...

//ஆமா, சாயிபாபாவைப் பாக்க அப்புரூவல் லெட்டர் வேனுனா இங்க கிடைக்கும்.
//
வெளிச்ச பதிவரே அப்ரூவல் லெட்டர் நீங்கள் பதவியில் இருக்கிங்களா இல்லையா என்பதை பொறுத்தே வழங்கப்படும்

said...

திராவிடர் கழகத்தின் எத்தனையோ செயல்வீரர்கள், அனுபவமும் திறமையும் மிக்க அடுத்த கட்ட தலைவர்கள், கழகத்திற்காக முழு நேரமும் பாடுபட்டவர்கள், தம் வாழ்க்கையையே அற்பணித்தவர்கள் என பலரும் இருக்கும் போது ஆசிரியர் அய்யா வீரமணி அவர்களின் புதல்வர் திரு.அன்புராஜ் அவர்கள் கழகத்தின் அதிகாரம்மிக்க பதவிக்கு வந்துள்ளர்//

கூட்டத்துல மிதிபட்டுச் சாவுரவங்களப் பத்தி கவலப்பட்டுக்கிட்டா ஓட முடியும்.

நல்ல கதையா இருக்கே!

said...

இந்த கூட்டத்தில் தலைவர் சொன்னதாக பத்திரிக்கையில் வெளியான செய்தி என்னவென்றால் இந்த நியமணத்திற்கு என்ன எதிர்ப்பு வந்தாலும் அதை எதிர்கொள்ள தயார் என்றாராம், அதாவது தலைவர் எதற்கும் துணிந்து தான் இந்த வேலையை செய்துள்ளார்.//

பணம் பாதாளம் வரைக்கும் பாயுமில்லீங்ளா!?

எடுத்துக்காட்டு நம்ம சேது!

said...

//அண்ணாதுரை அவர்களையே நம்பாமல், அந்த வயதில் இரண்டாம் திருமணம் செய்து, வேறொருவர் பெயருக்கு டிரஸ்டை ஒப்படைத்தவர் பெரியார். //

பெரியார், அண்ணாதுரையை நம்பாததற்கு பல காரணங்கள் உண்டு, அதில் ஒன்று தான் நேரடியாக அரசியலில் ஈடுபட ஆசைபட்டது!

பெரியார் கொள்கைக்காக தான் மணியம்மையிடம் ஒப்படைத்தார், அண்ணாவுக்கு இருந்த கொஞ்சநஞ்ச கொள்கையையும் கருணாநிதி காற்றில் விட்டார்!

said...

இந்த நியமணத்தை எதிர்த்து போராடியிருக்க வேண்டாமா சுயமரியாதையை தன் மூச்சாக கருதிய பெரியாரின் இந்த தொண்டர்கள்... //

என்றைக்கு ஒருவன் ஒரு தலைவனுக்கு தொண்டனாகி விடுகிறானோ, அன்றைக்கே அவன் சுயமரியாதையை மட்டும் அல்ல சுயபுத்தியையே இழந்து விடுகிறான்.

பெரியாரே ஒரு தொண்டர்,
அவருக்கு தொண்டர்கள் தேவைப்பட்டிருக்க மாட்டார்கள். ஒடுக்கப்பட்ட மக்களுக்குத் தொண்டர்கள் தேவைப்பட்டார்கள், அவர்கள் பெரியார் எனும் தொண்டரோடு இணைந்து கொண்டார்கள், அதான்!

ஆனா இப்ப...?

said...

"வால்பையன்
பெரியார், அண்ணாதுரையை நம்பாததற்கு பல காரணங்கள் உண்டு, அதில் ஒன்று தான் நேரடியாக அரசியலில் ஈடுபட ஆசைபட்டது!"

வால்ஸ் பாதி மட்டும் சொல்லி இருக்கீங்க...மிச்சத்தை நான் கம்ப்ளீட் பண்றேன்...
பெரியார், அண்ணாதுரையை நம்பாததற்கு பல காரணங்கள் உண்டு, அதில் ஒன்று தான் நேரடியாக அரசியலில் ஈடுபட ஆசைபட்டது, அதுவும் பெரியாரின் பணத்தில் ! என்றிருக்க வேண்டும். இது தானே முக்கியம்.

said...

இது வெறும் விமர்சனத்திற்கு உரிய செயல் மட்டுமல்ல, பெரும் கண்டனத்திற்கு உரிய செயல்.

பெரியாரியலை நீர்த்துப்போக செய்வதில் பெரும் முனைப்பாக செயல்படுகிறார் விரமணி.

said...

ஒரு தகவல் விடுபட்டிருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னால் தலைமைப் பொறுப்பை சக்கரவர்த்தி எனபவர் ஏற்றுக் கொண்டார். சாலை உந்து மோதலில் அவர் இறந்ததால் மீண்டும் வீரமணி பொறுப்பேற்றார். வாரிசு அரசியலை வேறு வழியில்லாமல் நம்பித் தொலைக்க வேண்டி இருக்கிறது இன்றைய தலைவர்களின் கட்டாய சூழ்நிலை. அந்த நிலைக்கு அந்த்த் தலைவர்களே பொறுப்பு என்பது வேதனையான முரண்.

said...

Kuzhali lacks objectivity and has a poor understanding of issues.
DK is a movement and it has various committees to decide on these issues.Veeramani chose Durai Chakrvarthi but he died in an accident.Veeramani's son had been working with DK and was helping in managing various institutions. It was not that he suddenly surfaced from nowhere and was offered the post.Now Veeramani wants to give him more responsibilities and formalise that by appointing him to a post in the movement.That has to be approved by the decision making body.If that is what the rules of that movement prescribe as procedure and if there is no bar in father and son holding party posts simulatanenously why should others object so much to this.It is an internal matter of a movement. It is not a company where shareholders have a right to vote and decide.It is not an election where there is more than one contenstant. If you want to find fault with this, then you should criticise the rules that permit father and son holding key posts at the same time and criticise those who framed it.When Periyar was alive Maniammai was actively involved in party affairs.She succeedded as head of the party after his death.If that is fine why find fault with Veeramani.

said...

//That has to be approved by the decision making body.
//
இப்படிப்பட்ட விவாதங்களை கேட்கும்போதெல்லாம் எனக்கு பெரியார் தாசன் சொன்ன இந்த வரிகள் தான் நினைவுக்கு வரும், "யேசு சொல்றார்னு நான் எப்புடி நம்பறது" அப்படின்னா "அதான் பைபிள்ல இருக்கே" என்றும் "சரி அந்த பைபிளை நான் எப்படி நம்பறதுன்னா" அதான் யேசுவே சொல்லியிருக்காரேங்கறது... இது போலதான் பொதுக்குழுவை நியமிப்பது தலைமை, தலைமையை தேர்ந்தெடுப்பது பொதுக்குழு காமெடி...

said...

//It is an internal matter of a movement.
//
அட ஒரு வாதத்துக்கு தான் கேட்கிறேன், இயக்கத்தின் உள்விசயமென்றால் இயக்கம் ஏன் பார்ப்பனர்கள் பூணுல் போடுவதை திட்டுகின்றது? அது பார்ப்பனர்களின் உள் விசயம் தானே? இந்த மாதிரி ஒரு கேள்வியை கேட்க உங்களுக்கே உறுத்தவில்லையா?

said...

// ஐயா பித்தனின் வாக்கு, மலைக்கு மாலை போடுபவர்களின் கருப்பு உடையை மாலை போடும் நீங்களே இப்படி கேவலமாகச் சொல்லக் கூடாது.//
அண்ணா பின்னூட்டத்தை இரண்டுக்கு மூன்று முறை படிக்கவும், நான் கருப்புச் சட்டை என்றுதான் சொல்லியிருக்கேன், கருப்பு வேஸ்டி அல்ல. மலைக்கு மாலை போட்டாலும் தவறு செய்தால் தவறுதான். காவி என்றாலும், மஞ்சத் துண்டு என்றாலும் அவர்கள் செய்யும் பாவம் கண்டிப்பாய் அவர்களை பாதிக்கும். சங்கர மடத்தின் புகழை கொடுத்தவர்களை அல்லது காவியில் கருமம் செய்வபர்களை நான் மனிதனாக கூட மதித்ததில்லை. நீங்கள்தான் ஞாபகம் வைத்துள்ளீர்கள்.
நான் நெற்றிக்கண் திறப்பினும் அவன் குற்றம் செய்தால் குற்றம் என்று சொல்லும் கீரனின் வாரிசு. அது நானாக இருந்தாலும். நன்றி.

said...

//காவி என்றாலும், மஞ்சத் துண்டு என்றாலும் அவர்கள் செய்யும் பாவம் கண்டிப்பாய் அவர்களை பாதிக்கும்.//

கருடபுராணத்தின் படியா!?

செத்து போனவங்களை மறுபடி சாகடிக்க முடியுமா!?

said...

பெரியாரின் எதிர்ப்பு மொழி என்பது வேறு, அவர் ஒடுக்கப்பட்ட மக்களின் மத்தியிலும், மத மூட நம்பிக்கையின் மூலம் தாழ்த்தப்பட்ட மக்களின் மத்திலிருந்தும் தன் எதிர்க்குரலைப் பதித்தவர். அது மானுட விடுதலைக்குரியது. அதில் எந்த அரசியலும் கிடையாது. அண்ணா காலத்தில், அண்ணாவுக்கு அரசியல் மொழி தேவைப்பட்டது. கழக குரலாக மாற நினைத்தார்.

அரசியல் வழி அல்லது ஓர் இயக்கத்தின் வழி, தன் வாதங்களைப் பதிவு செய்தவர். தனிமனித சுய சிந்தனையாக இருந்த பெரியாரின் குரல், அண்ணாவின் மூலம் இயக்கத்திற்குள் போய், இன்று சுயமரியாதை என்பதே சிதைந்துவிட்டது.

said...

மானமுள்ளவங்க வீரமணி தி.க.வில் இருக்கமுடியாது.

மானமிகுகள் தி.க.-வைவிட்டு வெளியேறி வெகுநாட்கள் ஆகிறது.

said...

இது போலதான் பொதுக்குழுவை நியமிப்பது தலைமை, தலைமையை தேர்ந்தெடுப்பது பொதுக்குழு காமெடி...
If so blame Periyar for that.He was the one who was the chief for so many years.Did veeramani change the rules to suit him. The point is simple- DK is a movement and their organizational structure and rules do not forbid father and son holding posts at the same time.
So why are you making an issue out of this.If you want to quarrel do that with one who built the organization with such rules.
The buck should stop there.

said...

//வாரிசு இல்லாதவர்களால் தான் ஒரு இயக்கத்தை வெற்றிகரமாக உருவாக்கி / நடத்த முடியும். பெரியார் அண்ணா எடுத்துக்காட்டு மற்றவர்களுக்கு அவர்கள் பதவிகள், செல்வாக்குகள் வாரிசு உடமை ஆகிவிடும்//

இல்லீங்களே! பெரியாருக்கு பின் வாரிசு அல்லாதவர் தானே வீரமணி. அவருடைய தலைமையில் இயக்கம் வெற்றிகரமாக நடந்ததா என்ன? (வாரிசு அரசியல்/தலைமை ஆகியவற்றை ஆதரிக்கிறேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள்).

said...

//November 04, 2009 10:54 AM Anonymous said...
Kuzhali lacks objectivity and has a poor understanding of issues.
DK is a movement and it has various committees to decide on these issues.Veeramani chose Durai Chakrvarthi but he died in an accident.

Veeramani's son had been working with DK and was helping in managing various institutions. It was not that he suddenly surfaced from nowhere and was offered the post. Now Veeramani wants to give him more responsibilities and formalise that by appointing him to a post in the movement. That has to be approved by the decision making body. If that is what the rules of that movement prescribe as procedure and if there is no bar in father and son holding party posts simulatanenously why should others object so much to this. It is an internal matter of a movement. It is not a company where shareholders have a right to vote and decide. It is not an election where there is more than one contenstant.//

சங்கரமடமும், சங்கரமடத்து பக்தர்களும் கூட இப்படி தான் சொல்கிறார்கள். பல ஆலய நுழைவு மறுப்பிற்கும் ஆகமம், சாஸ்திரம்…முன்னோர் உருவாக்கிய வழிமுறை (சட்டம்) இத்தியாதிகள் காரணமாக சொல்லப்படுகிறது. அவர்களும் இது எங்கள் மடத்தின், ‘சமூகத்தின்’ உள்விவகாரம் என்று தான் சொல்கிறார்கள்.

// It was not that he suddenly surfaced from nowhere and was offered the post. Now Veeramani wants to give him more responsibilities and formalise that by appointing him to a post in the movement.//

குடும்ப அரசியல் ஒரே நாளில் நடந்துவிடாது. நேரு குடும்பம், கருணாநிதி குடும்பம்…இன்னும் தெற்காசியாவின் பல குடும்ப அரசியல்கள் மெல்ல மெல்ல ‘திறமைகளை நிரூபிக்க வைத்து’ பட்டம் சூட்டப்படுகிறது.

அன்புராஜுக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகள் திகவில் இருக்கிற அடிமட்ட தொண்டர்களுக்கு கொடுக்கப்பட்டனவா? அதே அளவு மரியாதை, அங்கீகாரம், ஆதரவு….ஆகிய எல்லாவற்றுடன்… திகவில் அடுத்த தலைமையேற்க தகுதியுள்ள ஒருவர் தான் இருந்தாரென்றால் இன்றைய அதன் செயல்பாடு விமர்சனத்திற்குரியது.

திகவின் விவகாரம் உள்விவகாரம் அதனால் விமர்சிக்க கூடாதென்பது தவறான பார்வை. பெரியார் கொள்கைகள், சொத்துக்களும், கட்டமைப்புகளும் உள் விவகாரமல்ல. கடந்த 80 ஆண்டுகளாக தமிழக மக்களின் உழைப்பும், ஆதரவும், நிதியும் அங்கே இருக்கிறது. சனநாயக மறுப்பு எங்கு நடந்தாலும் எவரும் கேள்வியெழுப்ப முடியும். திகவின் உள்விவகாரம் என்னும் ஆட்கள் ஆர்எஸ்எஸ் பாசிஸ்டுகளின் இயக்கத்தையும் அதன் உள் அமைப்பையும் விமர்சிக்காமலா இருக்கிறார்கள்.

said...

பெரியார் புத்தகங்களை பொத்தி வச்சப்பயே வீரமணி ( ஐயா??? ஐயோ..ஐயோ) மேல இருந்த மரியாதை போயிடுச்சு....

பணம்தாங்க...

said...

தோழர்களே உங்கள் அனைவருக்கும் ஆசிரியர் மீது கடுப்பா இல்ல அவர் பெரியார் விட்டுசென்ற பணியுடன் சேர்த்து சொத்துகளையும் இரண்டு மடங்க ஆகிவிட்டார் என்ற கடுப்பா. நீங்க என்ன பணினாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது பெரியார் திடளில்ருந்து. விமர்சனம் என்பது பெரியார் தொண்டர்களுக்கு புளிச்சு போன ஒன்னு.

இன்று குழலி மற்றும் பிநூடம் இடும் தோழர்கள் அனைவரும் பெரியாரை பற்றி பேச காரணமாக இருப்பவரும் ஆசிரியர் தான். அவர் இதனை காப்பாற்றி கொண்டு வரவில்லை என்றால் இன்று உங்களை போன்ற தோழர்கள் ஒப்புக்கு கூட பெரியாரை தொட்டுக்க மாடீர்கள் என்பது நிச்சயம் திரிந்த ஒன்று. புத்தரின் கொள்கைகள் எப்படியோ காந்தியின் கொள்கைகள் எப்படியோ அப்படி ஆகி இருக்கும். ஒப்புக்கு கூட ஒருவர் நினைத்து பார்க்க மாடீர்கள்.


தேவையான விளக்கம் அய்யா ஓவியா அவர்கள் கொடுத்து விட்டார்கள். இருந்தாலும் ஒரு அடிப்படை கருது என்னிடம் இருந்து.

said...

//தோழர்களே உங்கள் அனைவருக்கும் ஆசிரியர் மீது கடுப்பா இல்ல அவர் பெரியார் விட்டுசென்ற பணியுடன் சேர்த்து சொத்துகளையும் இரண்டு மடங்க ஆகிவிட்டார் என்ற கடுப்பா.
//
இதில் எங்களுக்கு ஏங்க கடுப்பு? நாங்கள் என்ன பெரியார் சொத்தில் பங்கு கேட்கவா வருகிறோம்...


//நீங்க என்ன பணினாலும் ஒரு ஆணியும் புடுங்க முடியாது பெரியார் திடளில்ருந்து. விமர்சனம் என்பது பெரியார் தொண்டர்களுக்கு புளிச்சு போன ஒன்னு//
ஹா ஹா பின்னே விமர்சனத்தை பார்த்தால் முடியுமா தலைமைக்கு முட்டாள்தனமாக தலையாட்ட... நேர்மையான விமர்சனங்களையெல்லாம் கேட்டு சிந்தித்துவிட்டால் முட்டாள்தனமாக தலையாட்டமாட்டீர்கள் எனவே விமர்சனமெல்லாம் புளிச்சி போன ஒன்னு தானே...

//இன்று குழலி மற்றும் பிநூடம் இடும் தோழர்கள் அனைவரும் பெரியாரை பற்றி பேச காரணமாக இருப்பவரும் ஆசிரியர் தான். //
அதற்காக அவரை வணங்குகிறோம், மதிக்கிறோம், ஆனால் இதற்காக அவரது குடும்பத்துக்கே ஊழியம் செய்ய வேண்டுமா என்ன? அதற்கு அடிமைகள் தான் அப்படி செய்வார்கள், பெரியார் சொல்லித்தந்த சுயமரியாதைக்காரன் அப்படி செய்யமாட்டான்...

//அவர் இதனை காப்பாற்றி கொண்டு வரவில்லை என்றால் இன்று உங்களை போன்ற தோழர்கள் ஒப்புக்கு கூட பெரியாரை தொட்டுக்க மாடீர்கள் என்பது நிச்சயம் திரிந்த ஒன்று. புத்தரின் கொள்கைகள் எப்படியோ காந்தியின் கொள்கைகள் எப்படியோ அப்படி ஆகி இருக்கும். ஒப்புக்கு கூட ஒருவர் நினைத்து பார்க்க மாடீர்கள்.
//
மேலே சொன்னது தான் அவரை வணங்குகிறோம் அதற்காக அவர் குடும்பத்துக்கே அடிமையாகி கிடக்கமாட்டோம்...


//தேவையான விளக்கம் அய்யா ஓவியா அவர்கள் கொடுத்து விட்டார்கள். இருந்தாலும் ஒரு அடிப்படை கருது என்னிடம் இருந்து.
//
எது தமிழ் ஓவியா கொடுத்ததற்கு பெயர் விளக்கமா? அதற்கு பெயர் ஜால்ரா... சப்பைக்கட்டு... பெரியாரியத்தை மதமாக்காமல் விடமாட்டீர்கள் போல...

said...

//எது தமிழ் ஓவியா கொடுத்ததற்கு பெயர் விளக்கமா? அதற்கு பெயர் ஜால்ரா... சப்பைக்கட்டு... பெரியாரியத்தை மதமாக்காமல் விடமாட்டீர்கள் போல...//

தோழர் குழலி ஜால்ரா அடிக்க வேண்டிய எந்த அவசியமும் எனக்கு கிடையாது.

அப்படி ஜால்ரா அடித்து நான் ஏதாவது காரியம் சாதித்திருந்தால் நீங்கள் அம்பலப் படுத்தலாம்?



என்னுடைய கைக்காசைக் கொண்டு தான் பெரியார் கொள்கைப் பரப்பல் செய்து வருகிறேனே தவிர யாரையும் அண்டி அல்ல.

பெரியாரியல் என்பது ஒரு வாழ்க்கை நெறி.நாணயமாக ஒழுக்கமாக, நேர்மையாக, மனித நேயத்துடன் உண்மையான் பெரியார் தொண்டனாக வாழ்ந்து வருகிறேன்.

உங்கள் பார்வையில் இது ஜால்ரா என்றால், ஜால்ரா என்றால் என்ன? என்றாவது விளக்கவும்.

எனக்குப் புரியவில்லை.

said...

//இன்று குழலி மற்றும் பிநூடம் இடும் தோழர்கள் அனைவரும் பெரியாரை பற்றி பேச காரணமாக இருப்பவரும் ஆசிரியர் தான்.//

இதற்காக பெரியார் மீண்டும் ஒரு முறை செத்திருப்பார்!

said...

//ஜால்ரா அடித்து நான் ஏதாவது காரியம் சாதித்திருந்தால் நீங்கள் அம்பலப் படுத்தலாம்?//


சங்கரா சொறியனுக்கு ஜால்ரா அடிப்பவர்கள் காரியம் சாதிக்கவா அடிக்கிறார்கள்!

அவர்களது நம்பிக்கை அவர்களுக்குன்னு எடுத்துக்க முடியுமா!?

said...

//உங்கள் பார்வையில் இது ஜால்ரா என்றால், ஜால்ரா என்றால் என்ன? என்றாவது விளக்கவும்.//

பெரியாரியலை பரப்புவது கொள்கை, வீரமணிக்கு அடிப்பது ஜால்ரா!

said...

மானமுள்ள சுயமரியாதைக்காரன் இதெல்லாம் ஒருபக்கம் இருக்கட்டும் அந்த கட்சியில் ழார் அடுத்து பதவியேற்க தகுதியானவர்களாக உள்ளனர். அவர் பின்னால் எத்தனை பேர் உள்ளனர். இந்த கேள்வி எழாதபோது, இதை ஏற்று கொண்டுதான் ஆகவேண்டும். அப்படியிருந்தால் இந்நேரம் ஒரு போர்க்களம் ஆகியிருக்குமே. இல்லையென்றால் அவர்கள் பொதுக்குழுவில் எதிர்த்து வாக்களித்திருப்பார்களே. அந்த கட்சியினரே ஏற்று கொண்டுவிட்டபொழுது. நாம் குரல் கொடுத்துதான் என்ன பயன்.

said...

//பெரியாரியலை பரப்புவது கொள்கை, வீரமணிக்கு அடிப்பது ஜால்ரா!//

வீரமணி தனி நபர் அல்ல. பெரியாரியலின் குறியீடு.

said...

//வீரமணி தனி நபர் அல்ல. பெரியாரியலின் குறியீடு. //

மதவாதிகளின் பேத்தலுக்கும், உங்களின் பேத்தலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!

பெரியாருக்கு கோயில் எப்ப கட்டப்போறிங்க!?

said...

//இன்று குழலி மற்றும் பிநூடம் இடும் தோழர்கள் அனைவரும் பெரியாரை பற்றி பேச காரணமாக இருப்பவரும் ஆசிரியர் தான். அவர் இதனை காப்பாற்றி கொண்டு வரவில்லை என்றால் இன்று உங்களை போன்ற தோழர்கள் ஒப்புக்கு கூட பெரியாரை தொட்டுக்க மாடீர்கள்//

மானமுள்ள சுயமரியாதைக்காரன் கூறியது.

இது தவறு. பெரியார் என்றால் ஆசிரியர் என்ற பொருளில் கூறப்படுவது போல் உள்ளது. ஆசிரியர் கூறியது பலருக்கு தெரியாமல் இருக்கும். ஏன் அனைத்து மக்களுக்கும் தெரியாது. பெரியார் கூறியது அனைவருக்கும் தெரியும். தொடர்ந்து திராவிடர் கழகத்தை நடத்தி வந்திருக்கலாம். அதற்காக பெரியார் பற்றி பின்னூட்டம் இடுவதற்கே ஆசிரியர் காரணம் என்பது பொருத்தமற்றது. பெரியார் காலத்தில் நடைபெற்ற போராட்டங்கள் அவர் மறைந்த பிறகு நடக்கவில்லை. ஒரு சில போராட்டங்கள் அவ்வப்பொழுது நடத்தியிருக்கலாம் ஆனால் அது அந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியிருக்கவில்லை. காரணம் பெரியார் சமரசம் (காம்பரமைஸ்)செய்து கொள்ளவில்லை, அனைத்து கட்சி தலைவர்களுடன் நட்பு ரீதியில் பழகினாலும் கூட.ராஜாஜியுடன் நெருக்கமாக பழகியவர் ஆனால் சமரசம் செய்து கொள்ளவில்லை. போகிற போக்கில் நீங்கள் அண்ணாதுரை, கலைஞர், ராமதாஸ், இன்னும் பலர்... அனைவரும் பெரியாரை பற்றி பேசுவதற்கே ஆசிரியர் வீரமணிதான் காரணம் என்பீர்கள் போலிருக்கே. இது கொஞ்சம் அல்ல நிரம்பவே ஒவர். இதில் ஆசிரியருக்கே உடன்பாடு இருக்காது.

said...

//பெரியாருக்கு கோயில் எப்ப கட்டப்போறிங்க!?//

நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்கள்

said...

யாருக்கும் ஜால்ரா அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை வால்பையன்.

said...

//மதவாதிகளின் பேத்தலுக்கும், உங்களின் பேத்தலுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை!//

நீங்க பேத்தறதுலே ரொம்ப.............ப கெட்டிக்காரர் தான்.

said...

//பெரியாருக்கு கோயில் எப்ப கட்டப்போறிங்க!?//

நீங்க எந்த நிலையில் இருக்கிறீர்கள் //

உங்களுக்கு பூசாரி வேலை கொடுத்து சுத்தியும் கேமரா வைக்கிற நிலையில் இருக்கிறேன்!