பெரியாரியத்தை மதமாக்கும் சில பெரியாரிஸ்ட்கள்


இந்த கட்டுரை யாரையும் காயப்படுத்தவோ வருத்தப்படுத்தவோ அல்ல, சில நேரங்களில் சுயவிமர்சனங்கள் தேவைப்படுகின்றன, அப்படியானதொரு சுயவிமர்சனம் தான் இது...

மதங்கள் எப்படி தோன்றியிருக்கும் அது எப்படி மிகவும் இறுக்கமானதாக மூர்க்கமானதாக மாறியிருக்கும் என்பது பற்றி பல நேரங்களில் விளங்கிக்கொள்ள முயற்சித்திருக்கிறேன், அதை எனக்கு தற்போது முழுமையாக செய்முறையாக விளக்கிக்கொண்டிருக்கின்றார்கள் சில பெரியாரிஸ்ட்கள்...

எல்லா காலங்களுக்கும் எல்லா மக்களுக்கும் எல்லா சூழலுக்கும் பொறுந்தக்கூடிய கருத்தோ நியாயமோ இருக்கவே முடியாது, எனவே எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது, ஆனால் எல்லா மதங்களும் சொல்வது அவர்களின் புனித நூல்கள் சொல்லும் கருத்துகள் எக்காலத்துக்கும் எப்போதுமே பொறுந்தும் என்பதே...

புரியாத சடங்குகள் பற்றிய புரிதலை கொடுத்தது ஒரு ஜென் கதை, எல்லோருக்கும் தெரிந்த கதை தான், ஒரு ஜென் துறவி தம் சீடர்களுக்கு பாடம் எடுத்துக்கொண்டிருப்பார், அப்போது அவர் வளர்த்துக்கொண்டிருந்த பூனை இதற்கு இடையூறாக குறுக்கும் நெடுக்குமாக ஓடிக்கொண்டிருந்தது, எனவே ஜென் துறவி வகுப்பு ஆரம்பிக்கும் முன்பு அந்த பூனையை பிடித்து கட்டி போட சொன்னார். ஒரு நாள் ஜென் துறவியும் இறந்து போக கொஞ்ச நாளில் பூனையும் இறந்து போக புதிதாக பொறுப்புக்கு வந்த துறவி வகுப்பு எடுக்கும் முன் சீடர்களை பார்த்து கேட்டாராம் ஏன் இன்று பூனையை கட்டி போடவில்லை என்று, அதற்கு பூனை செத்து போயிவிட்டது என்றார்களாம், அதனாலென்ன இன்னொரு பூனையை வாங்கிக்கொண்டு வந்து கட்டி போடுங்கள் உங்களுக்கு தெரியாதா வகுப்பு எடுக்கும் முன் பூனையை கட்டிப்போடுவது நம் பெரிய துறவி ஏற்படுத்திய வழக்கமென்று...இந்த கதை சடங்குகள் எப்படி ஒரு புரிதலின்றி நடத்தப்படுகின்றது என்பதை புரியவைக்கும்.

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.

விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை

கடவுள் நம்பிக்கை உள்ள ஒரு பெண்ணை ஒரு பெரியாரிஸ்ட் திருமணம் செய்கிறார் அதெப்படி கடவுள் நம்பிக்கை உள்ள பெண்ணை திருமணம் செய்யலாம் நீயெல்லாம் ஒருபெரியாரிஸ்ட்டா என இன்னொரு பெரியாரிஸ்ட் விமர்சிக்கிறார், அப்படியென்றால் ஒரு பெரியாரிஸ்ட் இன்னொரு பெரியாரிஸ்ட்டை மட்டும் தான் திருமணம் செய்ய வேண்டும் போல அடடே இப்படி தானே ஒரே மதத்திற்குள் மட்டுமே திருமண உறவுகள் என்று மதங்கள் தங்களை இறுக்கிக்கொள்கின்றன.

பெரியார் திருமணத்தை பற்றியும் குழந்தை பெற்றுக்கொள்வதை பற்றியும் கருத்துகளையும் விமர்சனங்களையும் வைக்கிறார் அவர் பெண் விடுதலை என்ற நோக்கில் இதை நெறி செய்கிறார், ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள் (சிலர் இதை பெண்களிடம் நூல்விட பயன்படுத்தியுள்ளார்கள் என்பது வேறு கதை), பெண் விடுதலை என்பதன் அடிப்படையிலேயே பெரியார் அதை சொல்லியிருப்பார் அவரே திருமணமும் செய்திருக்கார், ஆனால் இவர்கள் பெண் விடுதலையை தூக்கிப்போட்டுவிட்டு திருமணமும் குழந்தையும் வேண்டாமென்று பெரியாரின் கருத்துகளை உதிர்த்துவிட்டு வார்த்தைகளாக மட்டுமே பின்பற்றிகிறார்கள் வேதங்களை பின்பற்றுவது போல.

எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது, இப்படியாக சிறு வயதிலிருந்தே மதத்தை போல பழக்கப்படுத்தப்படும்போது(புரிந்து தெளிந்து ஏற்றுகொள்பவர்களை குறிப்பிடவில்லை) எப்படி மதவாதிகளால் அவர்கள் மதத்தை தாண்டி பார்க்க இயலாதோ அதே போல இவர்களும் ஆக்கப்படுகிறார்கள்.

மிஷனரி கல்வி நிறுவங்கள், இந்து மடம் கல்வி நிறுவங்கள் போன்றவற்றில் மதப்பிரச்சாரம் வலிந்து திணிக்கப்படுகிறது என்று விமர்சித்துக்கொண்டே பெரியார் மணியம்மை கல்லூரியில் மாணவிகளின் பெட்டிகள் திறந்து பார்க்கப்படுகின்றன சாமி படம் எதுவும் வைத்திருக்கிறார்களா என்று, மாணவிகள் கடவுள் நம்பிக்கையுடன் உள்ள சின்னங்களை அணிய அனுமதிப்பதில்லை(கல்லூரியில் இல்லையென்றாலும் விடுதியிலாவது அணுமதிக்கலாமே?)படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.

பெரியாரின் எழுத்துகளுக்கு சொந்தம் கொண்டாடும் திராவிடர் கழகமும் அதன் தொண்டர்களும் பெரியாரின் எழுத்துகளையே தங்கள் தலைமை திணித்துள்ள வாரிசை ஏற்றுக்கொள்ள பயன்படுத்துகிறார்கள், மதவாதிகள் எல்லாவற்றையும் அவர்களின் வேத நூலில் இருந்தே எடுத்து நியாயப்படுத்துவதை போல.


தமிழ் ஓவியா அவர்களின் கட்டுரைகளை படித்துவிட்டு ஒருவர் உரையாடியில் கேட்டார்
--------------------
10:11 PM நண்பர்: thala
tamiloveiya post la periyar solli irukiratha potirukare athu nijama?
10:13 PM me: யெஸ்
100% அவர் சொன்னது தான்
நண்பர்: kodumai :)) ithuku karunanithi better
-------------------
மற்றொரு நண்பர் உரையாடியில் பேசியது
1:05 PM நண்பர்: என்ன கொடுமை தலைவா இது
me: edhu?
நண்பர்: இப்படி பட்ட மீனிங்கா பெரியார் சொன்னார்? தமிழ் ஓவியா பதிவு பற்றி
me: எதை சொல்றீங்க
1:06 PM அதுக்கு தான் சொன்னேன் தாலிபான் என்று தல
1:07 PM நண்பர்: பெரியாரும் ஒரு கும்பலை இப்படி ஆக்கி வைத்திருக்கிறாரே என்று

வருத்தம் வருகிறது :(
1:08 PM me: இல்லை
நண்பர்: இயக்கத்துக்குள் பகுத்தறியக்கூடாதா??
me: உலகத்தில் எதுவுமே எக்காலத்துக்கும் எல்லா இடத்திலும் எல்லோருக்கும்
பொறுத்தமான சரியான ஒன்று உலகில் எப்போதுமே இல்லை
1:09 PM பெரியாரின் எழுத்துகள் மட்டுமின்றி எல்லோருடையதும் அபப்டித்தான்
நண்பர்: மந்தையாய் வாழ்வதே இயக்கம் மாதிரி அர்த்தமாயிடுச்சே தமிழ் ஓவியா சொல்வது

:(
me: சூழ்நிலைகளையும் எம்மாதிரியான தருணங்களில் சொல்லப்பட்டது
என்பது முக்கியம்
---------------------
ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.

ஒரு முறை திரு.வீரமணி அவர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது கீழ் வெண்மணி கொடுமை நடந்த பின் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளை தடை செய்ய சொல்லி அறிக்கை விட்டாரே சரியா என்று கேட்ட போது திரு வீரமணி அவர்கள் கூறியது என்னவெனில் அதை அப்படியே இன்றைக்கு சொன்னது போல எடுத்துக்கொள்ள கூடாது, எந்த சூழலில் அதை சொன்னார் என்று கவனிக்க வேண்டும், அப்போது தான் அண்ணாதுரை ஆட்சிக்கு வந்துள்ளார், அந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்க்க வேண்டுமென திட்டத்தில் பலர் இதை காரணமாக வைத்து பிரச்சினைகள் செய்தனர் என்றார். அப்போது புரிந்து கொண்டேன் பெரியாரை பிழையாமை வேண்டும் என்று ஆனால்

தமிழ் ஓவியா அவர்கள் பெரியார் கூறிய இயக்க கட்டுப்பாடு பற்றி கூறிய கருத்துகளை எந்த சூழலில் கூறினார் என்பதை சொல்லாமல் மொட்டையாக பெரியார் வார்த்தைகளை போட்டதால் பெரியார் மிக மோசமான கருத்தை சொன்னதான தோற்றம் நண்பர்களுக்கு ஏற்பட்டுள்ளது, பெரியார் ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம். பெரியார் எந்நிலையில் அதை கூறினார், திராவிடர் கழகம் என்ற சமூக விடுதலை இயக்கத்தை அதன் அடிப்படையிலிருந்து அதை விலக்கி அதிகாரத்தை கைப்பற்றும் ஒரு கருவியாக அண்ணாதுரை அவர்கள் பயன்படுத்த விரும்பியதும் அதற்கு திராவிடர் கழகத்தினுள்ளேயே பெரும் ஆதரவு உருவாகியதுமான (பின்னே அதிகாரம் பெறுவதென்றால் ஆதரவுக்கா பஞ்சம்) நிலையில் கருத்தாடல்கள், அறிவுஜீவித்தனம், விவாதம் என்ற பெயரில் கழகத்தின் அடிப்படையான சமூக விடுதலை இயக்கம் என்பதிலிருந்து விலகி அதிகாரத்தை கைப்பற்ற வேண்டுமென்ற அண்ணாதுரைக்கு ஆதரவு திரட்டப்படுவதுமான சூழலில் பெரியார் இப்படியான கருத்துகளை தெரிவித்தார், அப்படியான ஒரு சூழலா இன்று இயக்கத்தில் உள்ளது? இவர்கள் தங்கள் தலைமையின் மீதான விசுவாசத்தையும் அடிமைத்தனத்தையும் நியாயப்படுத்த பெரியாரின் எழுத்துகளை பயனபடுத்துகிறார்கள்...

இந்த மாதிரியாக நடந்துகொள்ளும் பெரியாரிஸ்ட்கள் புரிந்து ஏற்றுக்கொண்டு அனுபவிக்க வேண்டிய பெரியாரியத்தை மதங்களை போல பழக்கத்திலும் புரிந்து கொள்ளாமலும் பின்பற்றுவது பெரியாரியத்தையும் இன்னொரு மதமாக்காமல் இவர்கள் ஓயமாட்டார்கள் என்றே தோன்றுகிறது, கருப்பு சட்டை போடுவதும் 'மானமிகு' என்று அழைத்துக்கொள்வதையும் சடங்காக்கிவிடாதீர்கள்...

62 பின்னூட்டங்கள்:

said...

பெரியாரின் பெயரை கெடுக்க தமிழ் ஓவியா ஒருவர் போதும்!

பெரியாரை கடவுளாகவும், பெரியாரிஷத்தை மதமாக மாற்ற நினைக்கும் புல்லுருவிகளுக்கு எனது கண்டணங்கள்!

said...

//பெரியாரின் பெயரை கெடுக்க தமிழ் ஓவியா ஒருவர் போதும்!
//
இன்று ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க புத்தம் சரணம் கச்சாமி, அதையும் பெரியார் சொன்னதென்று வழக்கம் போல context ஐ வெட்டிவிட்டு... அது பெரிய கொடுமை

said...

சூப்பர் தெளிவான பதிவு! இதை படித்தாவது உணர்கிறார்களா என்று பார்ப்போமே!!!

said...

sema hot machi...

pattaya kilappu. I pity Tamiloviya...

said...

நல்ல ஒரு பதிவு!

எவனும் முட்டுக்கொடுத்துதான் தற்காத்துக்கொள்ள வேண்டிய சூழலில் பெரியார் இருந்ததே இல்லை. பெரியாரை புரிந்து கொள்ள அடிப்படை மாந்தநேயமும் சிந்திக்க தயாராக இருக்கும் மனமுமே வேண்டும்.

பெரியாரைப் பிழையாமை என்பது மிக முக்கியமான ஒன்றாகும். பெரியாரின் வார்த்தைகளையோ, கருத்தாங்கங்களையோ நேரடியாக அர்த்தப்படுத்திக்கொண்டால் பல நேரங்களில் அவர் அதிர்ச்சியளிக்கும் மனிதராகவே தோற்றமளிப்பார். அவர் இயங்கிய காலகட்டத்தின் சமூக அரசியல் சூழல்களைக்கொண்டே அவைகளைப்புரிந்து கொள்ள முடியும்.

விரிவாக பின்னூட்டம் இரவில் பதிகிறேன்.

said...

”நச்” நெத்தியடி..

உரைத்தால் சரி..

said...

தோழர் குழலி அவர்களுக்கு வணக்கம்.

ஆரோக்கியமான விமர்சனங்கள் மூலமே பல நல்ல முடிவுகள் கிடைக்கும். விடிவுகள் கூட பிறந்த வரலாறுகள் உண்டு. அந்த வகையில் உங்கள் விமர்சனங்களை இரு கரம் கூப்பி வரவேற்கிறேன்.

விரிவான பதில்கள் வரும் அதற்கு முன் உங்கள் பினூட்டத்திலிருந்து.

//இன்று ஒரு பதிவு போட்டிருக்காரு பாருங்க புத்தம் சரணம் கச்சாமி, அதையும் பெரியார் சொன்னதென்று வழக்கம் போல context ஐ வெட்டிவிட்டு... அது பெரிய கொடுமை//

புத்தநெறி பற்றி பெரியார் பேசிய பேருரையிலிருந்து கட்டுப்பாடு பற்றிய பகுதியை மட்டும் எடுத்து போட்டிருப்பேன். அந்தப் பதிவில் கீழே


பெரியாரின் இப்பேருரையை முழுமையாக வாசிக்க கீழ்காணும் சுட்டியை சுட்டவும்;-

http://thamizhoviya.blogspot.com/2008/12/blog-post_2219.html

என்று எழுதியிருப்பேன். அந்த வரிகள் உங்கள் கண்ணுக்குப் படவில்லையா தோழர் குழலி.

context ஐ வெட்டிவிட எனக்கு என்ன அவசியம்.

பெரியாரின் கருத்துக்களை அங்கொன்றும் இங்கொன்றுமாக எடுத்துப் போட்டு பெரியாரைத் திரித்தவர்களை அம்பலப்படுத்தியவன் என்ற முறையில் அப்படி ஒரு அவசியம் எனக்கில்லை.

நமது வசதிக்கு ஏற்ப அதாவது நம் எண்னங்களுக்கேற்ப(நமக்கேற்ப [பெரியாரின் கருத்தை திரித்து) பெரியாரைப் பார்த்து கருத்து சொல்வது சரியல்ல என்பதில் எனக்கு தெளிவுண்டு.

அவர் வாழ்ந்த சூழல்,காலம்,அன்றைய அரசியல் நிலைகள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் நாம் பெரியாரை ஆய்வு செய்ய வேண்டும்.
(இது குறித்து பெரியார் களஞ்சியம் தொகுப்புகளில் வீரமணி அவர்கள் தெளிவாக விளக்கியிருப்பார்)

மொத்ததில் பெரியாரை பெரியாராகப் பார்க்க வேண்டும்.

said...

//மொத்ததில் பெரியாரை பெரியாராகப் பார்க்க வேண்டும். //

நாங்களும் அதைத்தானே சொல்றோம்!

said...

//நமது வசதிக்கு ஏற்ப அதாவது நம் எண்னங்களுக்கேற்ப(நமக்கேற்ப [பெரியாரின் கருத்தை திரித்து) பெரியாரைப் பார்த்து கருத்து சொல்வது சரியல்ல என்பதில் எனக்கு தெளிவுண்டு.

அவர் வாழ்ந்த சூழல்,காலம்,அன்றைய அரசியல் நிலைகள் இதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு தான் நாம் பெரியாரை ஆய்வு செய்ய வேண்டும்.
(இது குறித்து பெரியார் களஞ்சியம் தொகுப்புகளில் வீரமணி அவர்கள் தெளிவாக விளக்கியிருப்பார்)

மொத்ததில் பெரியாரை பெரியாராகப் பார்க்க வேண்டும்
//
இந்த பதிவில் பல பத்திகளில் நான் சொன்னதை நீங்கள் 2 பத்திகளில் சொல்லிவிட்டீர், இதைத்தான் நாங்களும் சொல்கிறோம், பெரியாரை பெரியாராக பாருங்கள் என்று, வீரமணி அய்யா அவர்கள் தங்கள் மகன் திரு.அன்புராஜை அதிகாரம்மிக்க பொறுப்பில் நியமித்ததை ஏன் எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொண்டீர்கள் என்பதற்கு பதிலளிக்கும் விதமாக பெரியார் இயக்க கட்டுப்பாடு பற்றி ஒரு இக்கட்டான நேரத்தில் எழுதியதை போட்டுள்ளீர்கள்... இதற்கு தான் ஏன் பெரியாரை கண்மூடித்தனமாக அவரது வார்த்தைகளை சூழ்நிலையை கணக்கில் கொள்ளாமல் பின்பற்றுகிறீர்கள் என்றேன்

said...

948 இல் இயக்கத்தில் சிக்கல் வந்தது பெரியார் கட்டுப்பாடு பற்றி பேசினார், அதேபோல் 1962,63 காலகட்டத்தில் குத்தூசி பிரிந்த போது கட்டுப்பாடு பற்றி பெசினார்.1957 இல் இயக்கத்தில் எந்தச் சிக்கலும் இல்லாத போது புத்தசங்கத்தில் கட்டுப்பாடு பற்றி பேசியுள்ளார். ஆக ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் வரை அந்த இயக்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இயக்க நடவடிக்கைகள் செயல்பாடுகள் பீடிக்காத போது இயக்கத்திலிருந்து வெளியேறிவிடுவது தான் சரியான செயல். பெரியார் இதைத்தான் வலியிறுத்தியுள்ளார்.

----விளக்கம் தொடரும்

said...

//ஆக ஒரு இயக்கத்தில் உறுப்பினராக இருக்கும் வரை அந்த இயக்கத்திற்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். இயக்க நடவடிக்கைகள் செயல்பாடுகள் பீடிக்காத போது இயக்கத்திலிருந்து வெளியேறிவிடுவது
//
காங்கிரஸ் பேரியக்கத்தில் இடஒதுக்கீட்டை அதன் தலைமை எதிர்த்த போதும் அதன் பின்னும் அதன் செயல்பாடுகள் பிடிக்காமல் உடனே வெளியேறுவதை விட்டு பெரியார் என் சில ஆண்டுகள் உள்ளிருந்தே போராடினார் என்பதை தெரிந்து கொள்ளலாமா அய்யா?

said...

//காங்கிரஸ் பேரியக்கத்தில் இடஒதுக்கீட்டை அதன் தலைமை எதிர்த்த போதும் அதன் பின்னும் அதன் செயல்பாடுகள் பிடிக்காமல் உடனே வெளியேறுவதை விட்டு பெரியார் என் சில ஆண்டுகள் உள்ளிருந்தே போராடினார் என்பதை தெரிந்து கொள்ளலாமா அய்யா?//


கட்டுப்பாடெல்லாம் தொண்டனுக்கு தான் தலைவனுக்கு அல்ல!
அதை தான் இப்போ வீரமணியும் நிறுபித்திருக்கிறார்!

said...

/********காங்கிரஸ் பேரியக்கத்தில் இடஒதுக்கீட்டை அதன் தலைமை எதிர்த்த போதும் அதன் பின்னும் அதன் செயல்பாடுகள் பிடிக்காமல் உடனே வெளியேறுவதை விட்டு பெரியார் என் சில ஆண்டுகள் உள்ளிருந்தே போராடினார் என்பதை தெரிந்து கொள்ளலாமா அய்யா?
**********/
அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும் என்று நினைத்து காங்கிரசில் இருந்தார் பெரியார் .பிறகுதான் தெரிந்தது அது நாய் வால் என்று.அதை நிமிர்த்த முடியாது அதை வெட்டி எடுக்க வேண்டும் என்று.அதனால் தான் காங்கிரசை ஒழிப்பதே எனது முதல் வேலை என்று கூறி காங்கிரசை விட்டு வெளி ஏறினார்.

said...

பெரியார் இயக்கம் குறித்த உங்களுடைய புரிதல்களும்,தமிழ் ஒவியாவின் புரிதலும் வேறு.
இயக்கத்திற்குள் பகுத்தறிவு வேண்டாம்,கீழ்ப்படிதல்தான் வேண்டும் என்கிறார் அவர்.
‘கீழ்ப்படிய’ மறுத்தவர்கள்
புது இயக்கம் கண்டார்கள்-
பெ.தி.க என்று. நீங்கள் பெரியார் பகுத்தறிவு என்றால் அவர் பெரியார்
உள்ளே வந்தால் கட்டுப்படு, பகுத்தறிவை இங்கே பயன்படுத்தாதே
என்று சொல்லிவிட்டார் என்று கூறும் போது எப்படி விவாதிப்பீர்கள்.
பைபிளில் உள்ளதுதான் சரி,பைபிளுக்கு சர்ச் சொல்லும் விளக்கம்தான் சரி - ஒத்துக்கொண்டால் இரு, இல்லாவிட்டல் போ என்று அடிப்படைவாத கிறித்துவர் போல் அவர் எழுதுகிறார். பெரியாரே சொல்லிவிட்டார் பாழுங் கிணற்றில் குதி என்று,ஆகவே குதிப்பேன் என்பது போல் பேசுபவரிடம் என்ன பகுத்தறிவை
எதிர்பார்ப்பீர்கள் :(

said...

குழலி அவர்கள் முதலில் பெரியார் பற்றி முழுமையாக படித்து விட்டு பதிவு இட்டால் அது அவருக்கு தகுதியாக இருக்கும் என்று நினைக்கிறன்.

முதலில் பெரியார் படம் பார்த்திர்களா என்பது தான் எனது கேள்வி?

சலுகை விலையில் பள்ளி குழந்தைகளுக்கெல்லாம் பெரியார் படம் காண்பிக்கப்பட்டது அதுல ஒரு டிக்கெட் வாங்கியாவது பார்த்திருக்கலாம்.அல்லது ஓவியா கிட்டவாவது டிக்கெட் வேணும்னு அவரோட ப்ளோக்ல பின்னோட்டம் போட்டுருக்கலாம்.எது எதுக்கோ பின்னோட்டம் பதிவு போடற உங்களால இது முடியாத என்ன என்பதே எனது கேள்வி.

பெரியார் படத்துல திருவிக தலைமையில் நடக்குற காங்கிரஸ் கமிட்டி காட்சிய பாருங்க.
என்ன திருட்டு வீசிடியே கிடைக்க மாட்டேன்குதுனு சொல்றிங்களா?

காந்தி ரொம்ப நால்லவர் நினைத்துதான் காங்கிரசில் இருந்தார் .அதுனலதன் கள்ளுகடை மறியல்ல தன் குடும்பத்தையே இடுபடித்தனர்.கதர் சட்டைய அவரே சுமந்து விற்பனை செய்தார்.இல்லாவிட்டால் செய்து இருக்க மாட்டாரா என்று கேட்கக்கூடாது.காந்தி மீது இருந்த பற்றும் மரியாதையும் அதற்க்கு ஒரு காரணமாக கருதலாம்.ஆனால் காந்தியே ஏமாற்றத்தை அளித்து விட்டார் .

said...

//முதலில் பெரியார் படம் பார்த்திர்களா என்பது தான் எனது கேள்வி?//

பெரியார் படத்துல பெரியார் கக்குஸ் போனதெல்லாம் காட்ட மாட்டாங்க!

இட ஒதுக்கீட்டு பிரச்சனை பல மாதங்களாக நடந்து அதன் பின் கடைசியாக தான் பெரியார் வெளியேறினார்!

நீங்கெல்லாம் சினிமா பார்த்து தான் பெரியாரை தெரிந்து கொண்டீர்களா இளஞ்சேரன்!

said...

//உள்ளே வந்தால் கட்டுப்படு, பகுத்தறிவை இங்கே பயன்படுத்தாதே
என்று சொல்லிவிட்டார் என்று கூறும் போது எப்படி விவாதிப்பீர்கள்.//

தான் மட்டும் தான் பகுத்தறிவுவாதியா இருக்கனும், மத்தவங்கெல்லாம் ஆட்டு மந்தையா இருக்கனும்னு சொன்னாராக்கும்!

பகுத்தறிவை உலகுக்கு அறிமுகப்படுத்துன சாக்ரடீஸ் கேட்டார்னா இன்னொருக்கா சாவார்!

said...

ஓ அனானி ஸாரி,

நீங்க எங்களுக்கு சப்போர்டா தான் பேசுறிங்களா!

said...

//ELANCHERAN said...
குழலி அவர்கள் முதலில் பெரியார் பற்றி முழுமையாக படித்து விட்டு பதிவு இட்டால் அது அவருக்கு தகுதியாக இருக்கும் என்று நினைக்கிறன்.
//
மிகச்சரியாக மதவாதிகளைப் போன்றே கேள்விகள் வீசப்படுகின்றன, வேதத்தை முதல்ல படிச்சிண்டு வாங்க என்று ஆரம்பித்து, குர்-ஆன்னில் சொல்லப்பட்டது இது தான் நீ ஒழுங்கா புரிந்து கொள், இல்லை இல்லை இது தான் நீ ஒழுங்காக புரிந்து கொள் என்று தமிழகத்தில் இரண்டு பிரிவாக பிரிந்து வெட்டு குத்து நடக்கின்றதே அதே போல நீங்களும் இப்படியான கேள்விகளை தூக்கி எறிகின்றீர்கள்... சரி போகட்டும் எனக்கு பெரியாரை முழுதாக தெரியாது, எனக்கு எவ்வளவு தெரியுமோ அதை வைத்து நான் கேட்கிறேன்... ஏற்றுக்கொள்ளும்படியான பதில் தந்தால் போதும்... தாராளமாக நான் என் பார்வையை மாற்றிக்கொள்கிறேன்...

//முதலில் பெரியார் படம் பார்த்திர்களா என்பது தான் எனது கேள்வி?
//
இந்த சுட்டிக்கு செல்லுங்கள், சாட்சாத் நம்ம விடுதலை சுட்டி தான்...பெரியார் படம் பார்த்துவிட்டு நான் எழுதிய விமர்சனம் விடுதலையில் உள்ளது.
http://viduthalai.com/20070517/news10.htm

நான் அந்த கேள்வியை கேட்டதற்கு காரணம் எனக்கு ஏன் பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறினார் என்று தெரியாது என்றல்ல, தலைமைக்கு கட்டுப்பட்டு இருப்பதென்றால் இரு, இல்லையென்றால் போய் கொண்டே இரு என்கிறார்கள் தமிழ் ஓவியா போன்றவர்கள் அதற்காகத்தான் கேட்டேன் ஏன் பெரியார் கருத்து வேறுபாடு என்றவுடன் காங்கிரசிலிருந்து உடனே வெளியேறாமல் இரண்டாண்டுகள் உள்ளிருந்து போராடி பிறகே வெளியேறினாரே என்று சுட்டிக்காட்டதான்...

said...

ஒரு பெரியாரிஸ்ட் பெரியாரின் தாடி மயிர் எங்களிடம் உள்ளது, இதை நாங்கள் பெருமையாக கருதுகிறோம், பாதுகாப்பாக வைத்திருக்கோம் என்கிறார். என்ன புத்தர் பல் பாதுகாக்கப்படுவது நினைவுக்கு வருகிறதா?
//

ஆமா, அது இலங்கையில இருக்கு!

புத்தர் பல்லை பாதுகாத்த சிங்கள நல் உள்ளங்கள்,

அவர் சொல்லை பாதுகாக்கலையேன்னு நம்மையெல்லாம் வருந்த வைத்து நமக்கு இறகு பிடுங்கிக் கொண்டிருக்கின்றன,


பதிவை ஒட்டி,

:)))
மதம் போலத்தான் இருக்கு!

said...

ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார், அது பார்ப்பனர்கள் உருவாக்கிய வழக்கம் என்பார், சரி நல்லது ஆனால் அதற்காக எக்காரனம் கொண்டும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை பின்பற்ற தேவையில்லை ஆனால் அவர் எந்த சூழலிலும் எந்த காரணத்துக்காகவும் காலையில் குளிக்க கூடாது என்ற சடங்கை கடுமையாக பின்பற்றுகிறார்.//

எங்கள் தந்தை கூட சாவுக்கு போய்விட்டு வந்தால் குளித்ததில்லை. துணிகளை நனைத்துக் கூட போட்டதில்லை. தினமும் காலையில் குளிப்பதோடு சரி.
அப்ப அவர் பெரியாரியத்துக்கு எதிரானவரா?

said...

படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், இவைகளைத்தானே மதங்களும் செய்கின்றன பிற மதத்தவர்கள் மீது.
//

இது உண்மை!

ஆம் உண்மையேதான்!

எங்க பெரியம்மா வீட்டுக்கு வரும்!

said...

இதற்கடுத்ததாக பெரியார் கொள்கைகளை சரியாக எடுத்து செல்லவில்லை என்ற சண்டை அதில் இயக்கம் உடைகிறது, ஒரு குழு தாங்களே உண்மையான பெரியார் தொண்டர்கள் அவரோட எழுத்துகள், புத்தகங்கள் (மற்றும் சொத்துகள்) எங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று வழக்கு போடுகிறார்கள், கேட்டால் மற்றவர்கள் பெரியாரின் எழுத்துகளை திரித்துவிடுவார்கள் என்கிறார்கள் ஆகா இப்படித்தானே ஹீனயானமும் மகாயானமும் புத்தமத்தில் உருவானது, இப்படித்தானே கத்தோலிக்க, புராட்டஸ்டண்ட் உருவானது.
//

நம்ம ஊருல சொல்லுவாங்க ”இவங்களுக்குதான் பட்டா போட்டு கொடுத்திருக்கா”ன்னு

அப்படித்தான் இருக்கு இவர்கள் பேசுறது, நீதி மன்றத்துக்கு ஓடுறதெல்லாம்.

அப்படியானால் தொடர்ந்து (எவ்வளவு நாளாக என்று துல்லியமாகத் தெரியவில்லை) இறை தூதர்களாக(இண்டெர்பிரெட்டர்) இருக்கும் பார்ப்பனர்கள் மட்டும் கோவிலில் பூசை செய்ய பட்டா போட்டா கொடுத்திருக்கு என்று கேட்கிற அருகதை இல்லாமல் அல்லவா போய்விடுகிறது.

அந்த அருகதை வேண்டும் என்றால் பெரியாரை பொதுவுடைமை ஆக்க வேண்டும். எல்லோரும் படிக்கக் கொடுக்கலாம், பரப்பலாம் என்கிற நிலை வேண்டும்.

(இதற்கு கி.வீரமணி மற்றும் சகாக்கள் தெரிவித்த பதிலை பலமுறை படித்துவிட்டேன். அது வேணாம்!)

said...

தமிழ் ஓவியா என்ற ஒருவர் இந்த பதிவர் வட்டாரத்தில் இல்லை என்ற உங்கள போன்ற தோழர்கள் பெரியார் என்றல் யார் என்று கேட்பீர்கள். எப்படியோ ஒரு நாளாவது விடாமல் பெரியாரையும் அவர் கொள்கையை பற்றி விமர்சனம் செய்வது எங்களுக்கு மிக மிக மகிழ்ச்சி தோழரே.

தமிழ் ஓவியாவின் இணையத்திற்கு அவரின் பெரியாரின் கொள்கை பரப்புரைக்கும் பெரியார் பிறந்தநாள் விழா மலரில் நன்றி தெரிவித்திருப்பது நன்கு பொருந்தும்.

உங்களின் விமர்சனங்கள் அவருக்கு பாராட்டுதலாக மாறியுள்ளது அது ஒன்றே அவரின் வெற்றி. நீங்கள் அவருக்கு கிரேடு கொடுக்க தேவை இல்லை தோழரே.

said...

தமிழ் ஓவியாவின் பதிவுகள் தொடர்ந்து ’வாசகர் பரிந்துரை’ பகுதியில் (ஒரு பதிவு விடாமல்) வருவது, ஒரு வகையான எரிச்சலையும், அருவருப்பையும் தான் ஏற்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் / பதிவர்கள் தினமும் படிக்கும் தமிழ்மணத்தில், இந்த ‘ஓட்டு’ போட்டு, அவரின் பதிவுகளை ‘பரிந்துரை’ செய்வது ஒரு சில ‘தொண்டர்கள்’ மட்டும் தான் என்று ஒரு கணிப்பு. அதாவது மீண்டும், மீண்டும் ஒரு சிறு குழுவை வைத்து, தமக்கு தானே ஓட்டு போடும் cheap டெக்னிக்.

இவரது பதிவுகளை விட மிக மிக அருமையாகவும், ஆழமாகவும் எழுதப்பட்ட பதிவுகள் பலவும் கண்டுகொள்ளப்படாத நிலைமைகளை பார்த்திருக்கிறேன். (உதாரணமாக, நண்பர் சுகுணா திவாகர் போன்ற உண்மையான பெரியாரிஸ்டுகளின் பதிவுகள்).

சரி போகட்டும். பதிவுகளின் தலைப்புகள் அதை விட கொடுமை. பார்பானுக்கும், பார்பனியத்திற்க்கும் வேறுபாடு காட்டாது, ஒரு வெறுப்புணர்வை தூண்டும் வகை தலைப்புகள். 60 வருடங்களில், பார்பானியத்தின் வீச்சும், பார்பனர்களின் ஆதிக்கமும்,
பார்பனர் அல்லாத மக்களின் எழுச்சியும்,நிலைமையை வெகுவாக மாறியுள்ளன. ஆனால், இவரோ, இன்றும் பழைய பல்லவி.
இன்னும் எத்தனை வருடங்களோ ?

ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைகள் பற்றி ஒன்னும் காணாம். பெரியார் இன்றிருந்தால், அதைதான் பேசியிருப்பார்.

பார்பன சாதியில் பிறந்த நண்பர்கள் பலரும் தமிழ்மணத்தில் உள்ளனர். அவர்களில் பலரும் பாரபனீயத்தை எதிர்பவர்கள்தாம். அதாவது சாதியத்தை ஏற்க்காதவர்கள் தாம்.
ஆனால் இவரின் தலைப்புகள் அவர்களையும் alienate செய்கிறது.

வெறுப்பும், குரோதமும் அதிகரிக்க செய்யும் முறைகள் இவை. இதனால் எதிர்மறையான விளைவுகள் தான் உருவாகும்.

நான், அவரின் பதிவுகளின் தலைப்பை மட்டும் எரிச்சலுடன் படிப்பேன். பதிவுகள் எதையும் படிப்பதில்லை. இத்தனைக்கும் நான் ஒரு பெரியாரிய குடும்பத்தில் பிறந்து, பெரிய சிந்தனைகளை கற்று வளர்ந்தவன் தான். (இன்று சில விசியங்களில் மாறிவிட்டேன் என்பது வேறு விசியம். ஆனால் சாதியம், பெரியாரியம் என்றால் என்னவென்று அறிவோம்.) தமிழ் ஒவியாவிடம் கற்க எதுமில்லை என்ற ‘மதவாதம்’ எம்மிடம் இருக்கலாம்.

பல காலமாக சொல்ல வேண்டும் என்று நினைத்த விசியங்கள் இவை.

சில வருடங்களுக்கு முன், வீரமணி அவர்களுக்கு நான் எழுதிய மின்மடல் :

http://athiyaman.blogspot.com/2006/01/reg-creamy-layer-misusing-reservation.html

இது போன்ற relevant ஆன விசியங்களை பற்றி தமிழ் ஓவியா எழுதினால் மகிழ்வேன்.

said...

//படிக்கிறார்களோ இல்லையோ எல்லோருக்கும் திராவிடர் கழக பத்திரிக்கை சந்தா கட்டியாக வேண்டும் அந்த பத்திரிக்கை அவர்கள் வீட்டுக்கு போய்விடும், இங்கே கடவுள் நம்பிக்கை உள்ளவர்களை நிராகரிக்கின்றார்கள், அதிகாரம் உள்ளதால் தங்கள் நம்பிக்கையை வலிந்து திணிக்கின்றார்கள், பெரியாரியலை புரிந்து ஏற்றுக்கொள்ள வேண்டியதை வருத்தி திணிக்கிறார்கள், //

தோழரே எத்தனை குழந்தைகள் விருப்பட்டு பள்ளிக்கூடம் செல்லுகின்றன. நாம் தானே அவர்களை பள்ளியில் சேர்க்கிறோம். கல்வி கற்றுக் கொடுக்க ஆவனசெய்கிறோம்.

அது போல் தான் பகுத்தறிவுக் கல்வியை போதிக்க அந்த நடைமுறையைகையாள்கின்றனர். (அந்தக் கல்வி நிறுவனத்தில் அது பிடிக்க வில்லையென்றால் அந்தக் குழந்தையை ஏன் சேர்க்கிறீர்கள் )

அந்த பத்திரிக்கைகளை படிக்கட்டும் பிடித்திருந்தால் ஏற்றுக் கொள்ளட்டும். இல்லையென்றால் தூக்கி எறிந்து விட்டுப் போகட்டும். பெரியார் கொள்கை பரவ திட்டமிடப்படும் செயலை திணிப்பதாகச் சொல்வது சரியல்ல.

எனக்கு கூட என்னுடைய தோழர்கள் முதன்முதலில் பெரியாரின் நூல்களைப் படிக்கக் கொடுத்து ஏன் உங்கள் பாணியில் சொல்வதென்றால் திணித்தார்கள். படிக்கும் போது அதில் உள்ள விசயங்களை அறிந்து நானே நூல்களை வாங்கிப் படிக்க தொடங்கினேன். இன்னும் படித்துக் கொண்டிருக்கிறேன்.

நான் பள்ளிக்கூடம் போக மறுத்து எங்கம்மாவின் கையை கடித்தவன்.எங்கம்மவின் கையிலுள்ள அந்த வடு இன்னும் என் நெஞ்சில் இருக்கிறது. அன்று மட்டும் எங்கம்மா கல்வியை என் மீது திணிக்காமல் இருந்திருந்தால்(எனது அம்மாவுக்கு எழுதவோ படிக்கவோ தெரியாது-ஒரு தற்குறி) இன்று எங்கேயோ மாடு மேய்த்துக் கொண்டிருந்திருப்பேன் அல்லது(மாடு மேய்ப்பதை குறைத்து மதிப்பிடுவதாக நினக்காதீர்கள்). எங்கப்பன் தொழிலை செய்து கொண்டிருப்பேன்.

எனவே எதையும் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று எழுதாமல் அதில் உள்ள விசயங்களை ஆராய்ந்து எழுத வேண்டுகிறேன்.

-----------விவாதிப்போம்

said...

//விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது, நாம் நம் குடும்பங்களோடு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள வேண்டும் இப்படி குடும்பங்களாக கலந்துகொள்வதால் திருமண உறவுகள் நம் இயக்க தோழர்களின் குடும்பங்களுக்குள் உருவாகும் என்கிறார்கள், இப்படித்தானே கோவிலிலும் மற்ற விழா நிகழ்ச்சிகளிலும் நடைபெறுகிறது, சரி இது கூட பரவாயில்லை//

விடுதலைப் பத்திரிக்கையில் வரும் பெரியார் இயக்க குடும்பங்களின் செய்தியையும் திருவிழாக்களில் கலந்து கொள்ளும் குடும்பங்களின் செய்திகளையும் பிரித்துப் பார்க்காததால் தான் உங்களுக்கு பெரியாரியல் மதமாகத் தெரிகிறது.

தோழர் குழலி
பெரியார் இயக்க குடுமபங்களில் ஏற்படும் திருமணங்களில் ஜாதி ஒழிந்த திருமணங்கள் ஏற்ப்ட வாய்ப்பு அதிகம் உண்டாகும் என்ற அடிப்படையில் விடுதலையில் செய்தி வருகிறது.

ஆனால் திருவிழாக்களில் கூடும் குடும்பங்களில் ஜாதி ஒழிக்கப்படுகிறதா? காக்கப்படுகிறதா?

பல திருவிழாக்களில் வெட்டுக் குத்து தான் அதிகம் நிகழ்கிறது.

மதம் பற்றி பெரியார் எழுதிய பேசிய பெரியார் களஞ்சியம் தொகுதிகள் 3.4 27,28,29,30,31 நூல்கள் கிடைக்கிறது. அருள்கூர்ந்து ஒருத்டவை அவைகளை வாசிக்க வேண்டுகிறேன். தெளிவு கிட்டும்

------விவாதிப்போம்

said...

//காங்கிரஸ் பேரியக்கத்தில் இடஒதுக்கீட்டை அதன் தலைமை எதிர்த்த போதும் அதன் பின்னும் அதன் செயல்பாடுகள் பிடிக்காமல் உடனே வெளியேறுவதை விட்டு பெரியார் என் சில ஆண்டுகள் உள்ளிருந்தே போராடினார் என்பதை தெரிந்து கொள்ளலாமா அய்யா?//

அய்யா இது பற்றி விரிவாக எழுதினால்தான் புரிந்து கொள்ள முடியும். இருந்தாலும் ஓரளவுக்கு விளக்கம் அளிக்க முயற்சி செய்கிறேன்.

சாமி.சிதம்பரனார் அவர்கள் எழுதிய தமிழர் தலைவர் நூலில் 80 ஆம் பக்கத்தில் உள்ள செய்தையை அப்படியே தருகிரேன்.

"1925-ம் ஆண்டு வரையிலும் ஈ.வெ.ரா. உண்மையான காங்கிரசுக்காரராகவே இருந்தார். ஒரு தீவிரமான ஒத்துழையாதாரராகவும் இருந்தார்.

காங்கிரசின் ஆதரவு கொண்டே ஜாதி வேற்றுமையை நிலை நிறுத்தவும், வருணாசிரமத்தை ஏற்படுத்தவும் சுயராஜ்யக் கட்சியின் மூலம், பார்ப்பனரல்லாதார் கட்சியையும், அவர்களது தேவைகளையும் ஒழிக்கவும், காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் அனைவரும் ஒன்று கூடி முயற்சி செய்தார்கள். இதைச் சந்தேகமற உள்ளிருந்து உணர்ந்து கொண்டதே ஈ.வெ.ரா. காங்கிரசைவிட்டு விலகியதற்கு முதற் காரணமென்று கூறலாம்.

கதர் போர்டு நிர்வாகத்திலும் ஈ.வெ.ரா.வே தலைவராக இருந்தபோதிலும்
K.சந்தானம் என்கின்ற ஒரு பார்ப்பனர் காரியதரிசியாக இருந்ததால், அதில் பார்ப்பனர்களே மிகுதியாக இருந்து வந்ததும், அதன் வருவாய் முழுவதும் அதற்காகச் செலவிடும் பொருளும், பெரும்பாலும் பார்ப்பனர்களுக்கே பயன்பட்டு வந்ததும் இவருக்குப் பிடிக்கவில்லை. அதற்காகச் செய்த பல போராட்டங்களில் காந்தியார் தலையிட்டதால் ஈ.வெ.ரா. வெற்றிபெற முடியாமல் போனதும் இவர் விலகியதற்கு மற்றொரு காரணமென்று சொல்லலாம்."

பெரியார் விலகியதற்கான காரணங்கள் தெரிந்து விட்டது. ஏன் உடனே விலக வில்லை அதற்கான காரணங்கள்.

1921 ஆம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற 27ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தை முன்வைத்தார். அவ்வமயம் திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் இதனைக் கொள்கையாக வைத்துக் கொள்வோம் தீர்மான ரூபமாக வேண்டாம் என்று தந்திரமாகத் தடுத்தார்.


1922 அம் ஆண்டு திருப்பூரில் நடைபெற்ற 28ஆவது, தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில், வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொண்டு வந்தார். அப்போது நடைபெற்ற விவாதத்தில் சினமுற்று ‘மனு தர்ம சாஸ்திரத்தையும், இராமயணத்தையும் கொளுத்த வேண்டும்! என்று முழுங்கினார்.

1923 ஆண்டு 29ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். அதில் கலகம் ஆகும்போல் தெரியவே, திரு.ஜார்ஜ் ஜோசப்பும், திரு. வரதராஜூலு நாயுடுவும் தீர்மானத்தை நிறுத்தி விட்டார்கள்.

1924 திருவண்ணாமலையில் நடைபெற்ற 30ஆவது தமிழ் மாகாண காங்கிரஸ் மாநாட்டில் தானே தலைவராக இருந்து வகுப்புரிமைத் தீர்மானத்தைக் கொணர்ந்தார். திரு.எஸ். சீனுவாச அய்யங்கார் சென்னையிலிருந்து ஏராளமான ஆட்களைக் கூட்டிவந்துத் தடுத்து, தீர்மானம் தோல்வியுறச் செய்தார்

2.5.1925 தேதிகளில் திரு.வி.க தலைமையில் நடைபெற்ற 31ஆவது ராஜீய காங்கிரஸ் மாநாட்டில் வகுப்புரிமைத் தீர்மானம் கொணர்ந்தார் திரு.வி.க. பார்ப்பனர் சூழ்ச்சிக்கு பயந்து, ‘பொது நன்மைக்காக இத்தீர்மானத்தை அங்கீகரிக்க முடியாது’ என்று கூறி அனுமதி மறுத்தார். அப்போது தமிழ்நாடு காங்கிரஸ் செயலாளராக இருந்த பெரியார், ‘இனி காங்கிரசை ஒழிப்பதே எனது வேலை’ என்று துண்டை உதறித் தோளில் போட்டுக் கொண்டு, தம் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

பெரியார் காங்கிரஸின் தலைவர்,செயலாளர் ஆக பதவியில் இருந்தும் கூட அவரால் தீர்மாணத்தை நிறிவேற்றமுடியாமல் போனதற்கு காரணம் பார்ப்பனியம் தான் காரணம் என்பதை உணர்ந்து கொள்வீர்கள் என நம்புகிறேன்.

அவர் கொண்டு வந்த தீர்மானம் தோற்கடிக்கப்படுகிரது அதன் பின் தீர்மானமே கொன்டு வரக்கூடாது என்று அதுவும் அந்த அமைப்பின் செயாலளர் பொறுப்பில் இருப்பவரையே சொல்கிறார்கள் என்றால் பார்ப்பனியத்தின் வலிமை அப்போது எப்படிப்பட்டதாக இருந்திருக்க வேண்டும்.
ராஜாஜியின் பேச்சை நம்பி ஏமாந்தார்.

புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று நம்புகிறேன் குழலி.

said...

//விடுதலை பத்திரிக்கையில் ஒரு கட்டுரை வருகிறது//

அட. விடுதலையில் இன்னொரு நாள் ஒரு நியூஸ் வந்தது. ஒரு போலி "சாமியார்" பற்றி. அவர் பெயர் எதுவும் இல்லை. ஆனால், அதே நியூஸை தினமலரில் படித்த பொழுது தான் தெரிந்தது, அந்த போலி சாமியார் என்பவர் ஒரு இஸ்லாமியர் என்று. அப்பொழுது தான் புரிந்தது, ஏன் அவர் பெயரை விடுதலை போடவில்லை என்பது. அன்றோடு அந்த பத்திரிக்கையை படிப்பதை நிறுத்திவிட்டேன்.

//ஆனால் ஒரு சில பெரியாரிஸ்ட்கள் குழந்தை பெற்றுக்கொள்ளாத திருமணம் செய்யாமல் சேர்ந்து மட்டுமே வாழனும் என்று எதிர்பார்க்கிறார்கள்//

நல்லது தானே. இதை ஃபாலோ பன்னியிருந்தால் தி.க.வில் இபோது வாரிசு பிரச்சினை தலை தூக்கியிருக்காதே!! ;)

எப்படி நம்பிக்கைகள் அதன் அர்த்தம் தெரியாமல் பழகியதால் மூடநம்பிக்கை ஆகியதோ, அதே வியாதி தான் பெரியாரிஸ்ட்டுகளிடமும்.

நீங்கள் சொல்வதில் முழுவதும் உடன்படுகிறேன். இதே கருத்தை உடையவன் தான் நானும். ஆனால், இதை நான் சொன்னால் __________________ அடிவருடி என்பார்கள் இந்த 'அறிவாளிகள்'. அவர்கள் சொல்வதற்காக வருத்தப்படவில்லை. ஆனால், இந்த முட்டாள்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டி வருமே?

said...

தமிழ் ஓவியா அய்யா நான் கேட்டது 1921லிருந்து தலைமையோடு கருத்து மோதல் ஏற்பட்ட பின் 4 ஆண்டுகள் கழித்து 1925ல் தான் காங்கிரசை விட்டு வெளியேறினார், உள்ளிருந்தே போராடி பார்த்தார், ஆனால் நீங்கள் என்ன சொல்கிறீர்கள், திகவின் தலைமையை குரூபீடம் போல் ஆக்கி அது திணிக்கும் எதையும் எதிர்ப்பவன் மடத்தை விட்டு வெளியே போ என்பது போல இயக்கத்தை விட்டு வெளியே போகட்டும் என்கிறீர்களே அதற்காகத்தான் இந்த கேள்வியே...

said...

//அது போல் தான் பகுத்தறிவுக் கல்வியை போதிக்க அந்த நடைமுறையைகையாள்கின்றனர். (அந்தக் கல்வி நிறுவனத்தில் அது பிடிக்க வில்லையென்றால் அந்தக் குழந்தையை ஏன் சேர்க்கிறீர்கள் )
//
பல மத அடிப்படைவாதிகள் இதே முறையில் வாதிட்டு கேட்டிருக்கிறேன், பிடிக்கவில்லையென்றால் ஏன் இந்து மதத்தில் இருக்கின்றீர் வெளியேற வேண்டியது தானே, வெளியேறி பின் கேள்வி கேட்டால் இந்து மதத்திற்கு தொடர்பில்லாத நீ ஏன் கேள்விகேட்கிறாய் என்கிறார்கள்.... தமிழ் ஓவியா விவாதிக்க விவாதிக்க மேலும் மேலும் இந்த பதிவில் சொல்லப்பட்ட கருத்து சரியாத்தான் சொல்லியிருக்கேன் என்பதை நிரூபிக்கிறார்....

said...

பூனை கண்னைமூடிக் கொண்டு உலகே இருண்டு போய் போய்விட்டது என்று நினைக்குமாம். அது போல் இருக்கிறது அய்யா கருத்தும்.

எற்கனவே ஒரு முடிவுக்கு வந்துவிட்டீர்கள் (தவறாக) அதன் பின் விவாதித்து என்ன பயன்.

காங்கிரசில் யார் வேண்டுமாலும் சேரலாம். ஆனால் பெரியார் இயக்கத்தில் கொள்கை உள்ளவன் தான் சேர முடியும்.

கொள்கைக்கு கட்டுப்பட்டவன் தான் பெரியார் இயக்கத்தில் நீடிக்க முடியும்.காங்கிரஸ் அப்படி அல்லவே.

said...

//1921லிருந்து தலைமையோடு கருத்து மோதல் ஏற்பட்ட பின் 4 ஆண்டுகள் கழித்து 1925ல் தான் காங்கிரசை விட்டு வெளியேறினார்,//

பெரியார் 1924 இல் காங்கிரஸில் தலைவர்,1925 இல் செயலாளர் .அவர் கொண்டு வந்த தீர்மானமே விவாதிக்க மறுக்கப்படுகிறது.

பெரியார் தலைவர் செயலாளர் பொறுப்பிலிருந்தும்(தொண்டராக அல்ல) ஒன்றும் செய்ய முடியவில்லை.முடியாத போது வெளியேறினார்.

-----விவாதிப்போம்

said...

//எந்த கருத்துகளையும் யார் சொல்லியிருந்தாலும் அது எந்த சூழலில் யாருக்கு சொல்லப்பட்டிருக்கின்றது(context) என்பதை கணக்கில் எடுத்து அதன் வழியாக தான் அந்த கருத்துகளை புரிந்து கொள்ளவேண்டுமேயொழிய அந்த வார்த்தைகளை அப்படியே எடுத்துக்கொண்டு அதை எக்காலத்துக்கும் எல்லா சூழலுக்கும் எல்லா மனிதர்களுக்கும் பொறுத்தி பார்க்க கூடாது//

இப்போ இருக்கிற அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்காங்க. எதையும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தற மாதிரி சொல்றதில்லை. சூழ்நிலைக்கேற்ப பேசறாங்க. இதுக்கு இன்னொரு பேர் உண்டு : சந்தர்பவாதம்.

said...

/*******Blogger K.R.அதியமான் said...பார்பன சாதியில் பிறந்த நண்பர்கள் பலரும் தமிழ்மணத்தில் உள்ளனர். அவர்களில் பலரும் பாரபனீயத்தை எதிர்பவர்கள்தாம். அதாவது சாதியத்தை ஏற்க்காதவர்கள் தாம்.
ஆனால் இவரின் தலைப்புகள் அவர்களையும் alienate செய்கிறது.
*******/

அப்படி என்றால் அவர்கள் சட்டை கழட்டி அவர்களின் முதுகை பார்த்தல் plain ஆக இருக்குமா?அல்லது எதாவது white cross இருக்குமா?
//////
Blogger K.R.அதியமான் said...

தமிழ் ஓவியாவின் பதிவுகள் தொடர்ந்து ’வாசகர் பரிந்துரை’ பகுதியில் (ஒரு பதிவு விடாமல்) வருவது, ஒரு வகையான எரிச்சலையும், அருவருப்பையும் தான் ஏற்படுத்துகிறது. ஆயிரக்கணக்கான வாசகர்கள் / பதிவர்கள் தினமும் படிக்கும் தமிழ்மணத்தில், இந்த ‘ஓட்டு’ போட்டு, அவரின் பதிவுகளை ‘பரிந்துரை’ செய்வது ஒரு சில ‘தொண்டர்கள்’ மட்டும் தான் என்று ஒரு கணிப்பு. அதாவது மீண்டும், மீண்டும் ஒரு சிறு குழுவை வைத்து, தமக்கு தானே ஓட்டு போடும் cheap டெக்னிக்.
////////////////
பெரியாரின் தொண்டர்கள் அதுபோல் என்றைக்கு ஒரு cheapana விளம்பரம் தேட மாட்டார்கள்.அவ்வாறு செய்வது சிறு கூட்டமாய் இருக்கின்ற வந்தேறி வஞ்சக பார்ப்பானின் செயல்.

காஞ்சி ஊத்தவாயன் சுபிரமணி சங்கரச்சாரி சங்கரராமனை கூலி படை வைத்து கொன்னாரே தனோட பதவிய காப்பற்றிக்கொள்ள அதை விடவா cheap ஆனா செய்யல் இருக்க முடியும்.

அனுராத ரமணனை புடிச்சு மல்லு கட்டினாறேமே ..இது நல்ல honesty யா? அப்புறம் horlicks சியாமளா ....etc,,,,,,

சின்னவர் சொர்ணமால்யவ....இது எல்லாம் சொல்ல வேண்டி இருக்கும்..

நீங்களும் ஒரு கூட்டத்தை வைத்து கொண்டு ஒட்டு போடுங்களேன்..உங்களை யார் தடுத்தார்கள்...இது எல்லாம் தானாக சேர்ந்த கூட்டம்..காசு கொடுத்து சேர்த்த கூட்டம் அல்ல...

ஆட தெரியாதவன் மேடை கோணல் என்றானாம்....

அது போல்தான் இருக்கிறது அதியமானின் கருத்தும்....

said...

//இப்போ இருக்கிற அரசியல்வாதிகளும் இப்படித்தான் இருக்காங்க. எதையும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தற மாதிரி சொல்றதில்லை.
//
சஞ்சய் எதையும் எல்லாக் காலத்துக்கும் பொருந்தற மாதிரி யாராலும் எப்போதும் சொல்ல முடியாது... பாத்ரூமில் அவுத்துப்போட்டுட்டு குளிப்பது போல ரோட்டில் அவுத்து போட்டு நடக்க முடியுமா? பொண்டாட்டியுடன் பேசுவது போல அம்மாவிடம் பேசமுடியுமா? இதெல்லாம் சந்தர்ப்பவாதம் என்று உங்களால் சொல்ல முடியுமா?

said...

//ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.//

தோழர் குழலி

பொதுமக்களுக்கும்,

இயக்கத் தொண்டர்களுக்காகவும்

பெரியார் சொன்னதை பகுத்துப் பார்க்காததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. பெரியார் சர்வாதிகாரியா? இது குறித்து பெரியார் தரும் தகவல் இதோ:-

"என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், "கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய ஒரு படிமானமுள்ள சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், கத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார்.

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

--------பெரியாரின் விளக்கம் அடுத்த பின்னூட்டத்தில் தொடரும்

said...

//ராமசாமி சொல்றான்னு நான் சொல்ற எதையும் அப்படியே ஏற்றுக்கொள்ளாதீர்கள், நீங்கள் உங்கள் பகுத்தறிவைக்கொண்டு ஆராய்ந்து பாருங்கள் என்று சொன்ன பெரியாரை ஒரு சர்வாதிகாரி போன்றும் மாற்று கருத்துகளுக்கு மதிப்பளிக்காதவராகவும் போன்ற தோற்றம் அளிக்கும் வகையில் தமிழ் ஓவியா பெரியாரின் கருத்துகளை எடுத்து போட்டுள்ளார்.//

தோழர் குழலி

பொதுமக்களுக்கும்,

இயக்கத் தொண்டர்களுக்காகவும்

பெரியார் சொன்னதை பகுத்துப் பார்க்காததால் உங்களுக்கு அப்படித் தோன்றியிருக்கிறது. பெரியார் சர்வாதிகாரியா? இது குறித்து பெரியார் தரும் தகவல் இதோ:-

"என்னைப் பொறுத்தவரையில், என்னைப் பின்பற்றி நடந்து வருபவர்கள் புத்திசாலிகளாய் இருக்க வேண்டுமென்ற கவலை எனக்கு ஒரு சிறிதும் கிடையாது. தங்கள் அறிவை, ஆற்றலை மறந்து என் லட்சியத்தை நிறைவேற்றிக் கொடுக்கக் கூடிய ஆட்கள் தான் எனக்குத் தேவையே ஒழிய, அவர்கள் புத்திசாலிகளா? முட்டாள்களா? பைத்தியக்காரர்களா? கெட்டிக்காரர்களா? என்பதுபற்றி எனக்குக் கவலை இல்லை.

இந்தச் சந்தர்ப்பத்தில் எனது மதிப்பிற்குரிய நண்பர் பா.வே. மாணிக்கநாயக்கர் அவர்கள் கூறியது எனது ஞாபகத்திற்கு வருகிறது. அவர் ஈரோட்டில் எக்சிகியூட்டிவ் எஞ்சினீயராய் இருந்தபோது அவர் எங்கள் வீட்டில் குடியிருந்தார். மாடுகளுக்குச் சுலபமாய் இழுக்கக்கூடிய புதுமாதிரியான கவலை ஒன்று செய்யத் தனக்கு இரண்டு கொல்லர்களைத் தருவித்துக் கொடுக்கும்படி சொன்னார். நான் யோசித்து இரண்டு கெட்டிக்காரக் கொல்லர்களின், அதாவது துப்பாக்கி செய்யக் கூடியவர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்களை அழைத்து வரும்படி என் காரியஸ்தர்களுக்குக் கூறினேன்.

அப்போது அவர் சொன்னார், "கொல்லன் கெட்டிக்காரன் என்பவர்களை அனுப்பி வைப்பாயானால், அவர்கள் இருவருக்குள்ளும் கெட்டிக்காரத்தனப் போட்டி வேலையைக் கெடுத்துவிடும். அவர்களே எனக்கு யோசனை சொல்ல முந்துவார்கள். என் திட்டம் ஆட்டம் கொடுத்து வேலை நடவாது. ஆகவே, சொல்வதைப் புரிந்து கொண்டு அதன்படி வேலை செய்யக்கூடிய ஒரு படிமானமுள்ள சொன்னபடி நடக்கக்கூடிய, இரண்டு சம்மட்டியும், கத்தியும் பிடித்துப் பழகிய ஆளை அனுப்பி வைத்தால் போதுமானது. அவர்கள் முட்டாள்களாயிருந்தாலும் சரி; அவர்களைக் கொண்டு சுலபத்தில் வேலையை முடித்து விடலாம் என்று கூறினார்.

புத்திசாலிகள் சண்டையிட்டுக் கொள்வது எப்போதுமே இயற்கைதான். ஆகவேதான், நான் நீடாமங்கலம் மாநாட்டின் போதே மிகத் தெளிவாகக் கூறியிருக்கிறேன்.

என்னைப் பின்பற்றுகிறவர்கள் தங்கள் சொந்த பகுத்தறிவைக் கூட கொஞ்சம் தியாகம் செய்ய வேண்டுமென்று. யாராவது ஒருத்தன்தான் நடத்தக்கூடியவனாக இருக்க முடியுமே தவீர, எல்லோருமே தலைவர்களாக இருக்க முடியாது. மற்றவாகள் தலைவர் இட்ட கட்டளைப்படி நடக்க வேண்டியவர்கள்தான். தோழர்களே! நான் இப்போது கூறுகிறேன். நீடாமங்கலத்தைவிட ஒருபடி மேல் செல்லுகிறேன்.

நீங்கள் இந்த இயக்கத்தில் உள்ளவரை உங்கள் சொந்த பகுத்தறிவை மட்டுமல்ல, உங்கள் மனசாட்சி என்பதைக் கூட நீங்கள் கொஞ்சம் மூட்டைக் கட்டி வைத்துவிட வேண்டியதுதான். கழகத்தில் சேரு முன்பு நீங்கள் உங்கள் பகுத்தறிவு கொண்டு கழகக் கோட்பாடுகளை எவ்வளவு வேண்டுமானாலும் ஆராய்ந்து பார்க்கலாம். என்னுடன் வாதாடலாம். உங்கள் மனசாட்சி என்ன கூறுகிறது என்றும், என்னுடைய தன்மை எப்படிப்பட்டது என்றும் நீங்கள் எவ்வளவு காலத்திற்கு வேண்டுமானாலும் ஆர அமர இருந்து யோசித்துப் பார்க்கலாம்!

ஆனால், எப்போது உங்கள் மனசாட்சியும், பகுத்தறிவும் இடங் கொடுத்து நீங்கள் கழகத்தில் அங்கத்தினர்களாகச் சேர்ந்துவிட்டீர்களோ; அப்போதிலிருந்து உங்கள் பகுத்தறிவையும், மனச்சாட்சியையும் ஒருபுறத்தில் ஒதுக்கி வைத்துவிட்டு கழகக் கோட்பாடுகளைக் கண்மூடிப் பின்பற்றி நடக்க வேண்டியதுதான் முறை.

--------பெரியாரின் விளக்கம் அடுத்த பின்னூட்டத்தில் தொடரும்

said...

//பாத்ரூமில் அவுத்துப்போட்டுட்டு குளிப்பது போல ரோட்டில் அவுத்து போட்டு நடக்க முடியுமா? பொண்டாட்டியுடன் பேசுவது போல அம்மாவிடம் பேசமுடியுமா? இதெல்லாம் சந்தர்ப்பவாதம் என்று உங்களால் சொல்ல முடியுமா? //

ஒரு தலைவர் தன் இயக்கத் தொண்டர்களுக்கு சொல்லும் கருத்தை நீங்கள் சொல்லும் விஷயங்களுடன் என்னால் ஒப்பிட்டுப் பார்க்க முடியவில்லை குழலி. கொள்கை முடிவுக்கும் குடும்ப உறவுகளுக்கும் எபப்டி முடிச்சி போட்டு ஒப்பிட முடியும்?

இலங்கைக்கு சென்று பல்லிளித்துவிட்டு இந்தியா வந்து தினம் ஒரு அறிக்கை விட்டு தன் தவறை நியாயமாக்கும் முயற்சியில் இருக்கும் திருமாவளவன் நிலையில் தான் இன்று பெரியாரிஸ்ட்கள் இருப்பது போல் தெரிகிறது.

தொண்டர்கள் அடிமைகளாக இருக்க வேண்டும் , கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது என பெரியார் சொன்னார் என்று ஒரு தரப்பு சொல்கிறார்கள். அடிமைன்னா அது அடிமை இல்லை, இது வேற என்று சமாளிக்கும் முயற்சியில் இன்னொரு தரப்பு. பாவம் தான் பெரியார். இயக்கம் என்றில்லாமல் தனி மனிதராகவே பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்திருக்கலாம்.
இயக்கம் - கட்டுப்பாடு - நிலைப்பாடு - மரணம் - கொலை. பெரியாரின் ஆன்மா சாந்தி அடையட்டும்

said...

பெரியாரின் விளக்கம் தொடர்கிறது:-

"ஒரு எஜமான் வேலைக்காரனைப் பார்த்து, 'அந்தப் பெட்டியைக் கொஞ்சம் எடப்பா' என்று கூறினால், 'என் மனசாட்சி என்னை அதற்கு அனுமதிக்கவில்லையே' என்று கூறினால், அது முறையாகுமா? ஒரு டிஸ்டிரிக் சூப்ரண்டென்டெண்ட் 'சுடு!' என்று போலீஸ்காரனுக்கு உத்தரவுபோட, அவன் 'என் மனசாட்சி அதற்கு இடங்கொடுக்கவில்லையே' என்று கூறினால் அந்த சூப்ரண்டென்டெண்ட் கதி என்னாவது? கசாப்புக்கடையில் வேலை பார்க்க ஒப்புக் கொண்டவன், 'அந்த ஆட்டை வெட்டுடா' என்று எஜமான் உத்தரவு விடும்போது, 'அய்யோ என் மனசாட்சி மாட்டேன் என்கிறதே நான் என்ன செய்யட்டும்?' என்று கூறினால், 'ஏண்டா மடப்பயலே! முன்னாடியே உனக்கு இது தெரியாமற் போனதேனடா? அப்போது உன் மனச்சாட்சி எங்கேயடா போயிருந்தது?' என்று கேட்பானா, இல்லையா அவனை?

ஆகவே, மனச்சாட்சியோ, சொந்தப் பகுத்தறிவோ, கழகக் கொள்கையை ஒப்புக் கொள்ள மறுக்குமானால், உடனே விலகிக் கொள்வது தான் முறையே ஒழிய, உள்ளிருந்து கொண்டே குதர்க்கம் பேசித் திரிவது என்பது 'விஷமத்தனமே' ஆகும் என்பதைத் தெரிவித்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

சிலருக்கு நான் ஏதோ சர்வாதிக்காரம் நடத்த முற்படுகிறேன் என்று தோன்றலாம். இது ஓரளவுக்குச் சர்வாதிகாரம்தான் என்பதையும் ஒப்புக் கொள்கிறேன். ஆனால், தோழர்களே நீங்கள் சிந்திக்க வேண்டும். "இந்தச் சர்வாதிகாரம் எதற்குப் பன்படுகிறதென்று? என்னுடைய சர்வாதிகாரத்தைக் கழக இலட்சியத்தின் வெற்றிக்காக; பொது நன்மைக்காகப் பயன்படுத்துகிறேனே ஒழிய, எந்த சிறு அளவுக்கும் எனது சொந்தப் பெருமைக்காகவோ, ஒரு கடுகளவாவது எனது சொந்த நன்மைக்காகவோ பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதை நீங்கள் ஆராய்ந்து பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டுகிறேன்.

--------------1948- இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.

said...

The problem is not with Veeramani or DK.It starts with Periyar and it just continues.So dont blame the followers, blame the one who started that.In Periyar's DK if you disagree with him either you agree and continue, or you leave the DK, or be expelled.There is no scope for having a difference of opinion with high command and still continue in DK.It is as good as anyother sect where the leader's word is the word of the God.Tamiloviya has no problem with that.In DK it is Periyar->Maniammai->Veeramani. If you disagree with Veeramani you cannot remain in DK even if you claim that you follow Periyars philosophy 100% because following 100% means obeying Veeramani.
If you dont understand this I pity you. If you understand this you should start your criticism with Periyar.


The only difference is Periyar is not god in DK.

said...

//--------------1948- இல் நடந்த தூத்துக்குடி மாகாண மாநாட்டில் தலைமையுரை, "குடிஅரசு" - 29-05-1948.//
இதில் 1948 என்பதை அடிக்கோடிட வேண்டும்... 1948 என்பதை நினைவுபடுத்த வேண்டும் 1949ல் திகவிலிருந்து பிரிந்து திமுக உருவானது என்பதையும் நினைவில் நிறுத்த வேண்டும்... இதைத்தான் context என்பது

said...

தோழர் குழலி

உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்கள் எத்தனை பேர் பெரியாரியலை சரியாக கடைபிடிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?(இது வேண்டுகோள் தான்)

குறைந்த பட்சம் பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்காக ஜாதி ஒழிந்த திருமணங்கள் செய்துள்ளார்கள்?.

அல்லது பெரியார் கொள்கை அடிப்படையில் அவர்களின் செயபாடுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

---------விவாதிப்போம்

said...

//கொள்கை முடிவுக்கும் குடும்ப உறவுகளுக்கும் எபப்டி முடிச்சி போட்டு ஒப்பிட முடியும்?
//
சரி விடுங்க இதில் வேண்டாம், நம் பாரத பிரதமர் இராணுவத்தினரிடம் உரையாற்றும் போது கொள்கை முடிவாக எதிரிகள் உள்ளே வந்தால் சுட்டுக்கொள்ளுங்கள் என்கிறார், இங்கே கட்சிக்கூட்டத்தில் வந்து எதிரிகளை நாம் வன்முறையால் எதிர்கொள்ளகூடாது, நாம் விவாதத்தில் எதிர்கொள்வோம் என்கிறார் இரண்டும் ஒன்றா? ஏன் அங்கே எதிர்களை கொல்ல சொல்கிறார், இங்கே எதிரிகளோடு விவாதிக்க சொல்கிறார்? சந்தர்ப்பவாதமாக இல்லையா பிரதமர் பேசுவது, அது போலத்தான், இராணுவத்தினரிடம் பேசும்போது எதிரிகள் என்பது நாட்டை ஆக்கிரமிக்க துடிக்கும் எதிரிகள், கட்சிக்கூட்டத்தில் எதிரிகள் என்பது எதிர் கட்சிகள் எதிர் கருத்துடையவர்கள்... அது போலத்தான் உலகில் எப்போதும் எல்லோருக்கும் எல்லா காலத்திலும் பொதுவான கருத்து என்ற ஒன்று இல்லவே இல்லை

said...

//தோழர் குழலி

உங்களுடன் உரையடியில் உரையாடிய தோழர்கள் எத்தனை பேர் பெரியாரியலை சரியாக கடைபிடிப்பவர்கள் என்று சொல்ல முடியுமா?(இது வேண்டுகோள் தான்)

குறைந்த பட்சம் பெரியாரின் அடிப்படைக் கொள்கையான ஜாதி ஒழிப்புக்காக ஜாதி ஒழிந்த திருமணங்கள் செய்துள்ளார்கள்?.

அல்லது பெரியார் கொள்கை அடிப்படையில் அவர்களின் செயபாடுகள் இருந்தால் தெரியப்படுத்துங்கள்.

---------விவாதிப்போம்
//
நீங்கள் தான் இந்து மதத்தை பின்பற்றாதவர்களாயிற்றே பின் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கின்றீர்கள்?

said...

//பார்பன சாதியில் பிறந்த நண்பர்கள் பலரும் தமிழ்மணத்தில் உள்ளனர். அவர்களில் பலரும் பாரபனீயத்தை எதிர்பவர்கள்தாம். அதாவது சாதியத்தை ஏற்க்காதவர்கள் தாம்.
ஆனால் இவரின் தலைப்புகள் அவர்களையும் alienate செய்கிறது.//

பார்ப்பனர்களுக்கு இல்லாத அக்கறை உங்களுக்கு இருப்பதைப் பார்க்கும் போது பார்ப்பனர்கள் உங்களை உச்சி மோந்து மெச்சுவார்கள் .நீங்கள் வேண்டுமானால் அவர்கள் பசப்பு வார்த்தைகளில் மயங்கி ஆட்டம் போடுங்கள். ஆனால் பெரியார் சிந்தனைகளை கற்று வளர்ந்தவன் என்று சொல்லாதீர்கள்.

இன்னும் எங்களின் நம்முடைய இழிவு ஒழிக்கப் படவில்லை. அனைத்துச் ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்பதற்கு தடையாய் இருப்பவர்கள் யார் பார்ப்பனர்களா? ஆதிக்க தமிழர்களா?.

அசலுக்கும் போலிக்கும் வேறுபாடு தெரியாமல் குழம்பிப்போய் உள்ள உங்களை நினைத்தால் பரிதாமாகத்தான் இருக்கிறது.விதிவிலக்குகளை விதியாக கொண்டு செயல்படாதீர்கள் அதியமான்.

ஐ ஐ டி யில் என்ன நிலைமை என்பதஎல்லாம் தெரிந்து தான் பேசுகிறீர்களா?

ஐ டி ஐ வேண்டுமானால் நமக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம்.

மணியடிக்கும் வேலை மட்டும் பரம்பரையாக அவாளுக்கு மட்டும் ரிசர்வேசன் செய்வது எப்படி?

கிருமிலேயர் பற்ரியெல்லாம் பல பதிவுகளில் விளக்கியாகி விட்டது. வீரமணிக்கு மடல் எழுதி அவர் நேரத்தையும் கணினியையும் வீணடித்திருக்கிரீர்கள் அதியமான்.

தோழர் குழலி

இந்த மாதிரி ஆளுக,ஒரு சில பயளுக அடிக்கடி மூக்கு சொறிந்து விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிரேன்

said...

//தோழர் குழலி

இந்த மாதிரி ஆளுக,ஒரு சில பயளுக அடிக்கடி மூக்கு சொறிந்து விடுவார்கள். எச்சரிக்கையாக இருக்க வேண்டுகிரே
//
அய்யா அதியமான் அவர்களை எப்போதுமே கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை, சரி பெயரோடு போட்டிருக்காரே, அனானியாக இல்லாமல் அவரை பலருக்கும் தெரியும் அதனால் அவரோட கருத்துக்கு அவரே சொந்தக்காரர் என்பதால் தான் அவர் பின்னூட்டத்தை கருத்துசுதந்திரத்தை முன்னிட்டு வெளியிட்டேன்...

said...

என்னால் பதிவு திசை திரும்ப வேண்டாம்.. உங்கள் விவாதங்கள் தொடரட்டும்.. கவனிக்கிறேன்..

said...

இளஞ்சேரன்,

இது போன்ற சபை நாகரீகமற்ற பேச்சுக்ககளைதான் சொன்னேன். கருத்துக்களை சொல்லும் முறை பற்றிதான் நான் சொன்னது. கருத்துவேறுபாடுகள் பற்றி அல்ல.
ஜெயந்த்திர்ர் குற்றவாளிதான் என்று பல பார்பனர்களும் நம்புகிறார்கள். சும்மா வார்த்தைகளை விட வேண்டாம். ஓ.கே. உன்னை விட கீழ்தரமாக பேச எமக்கும் தெரியும்.

தமிழ் ஓவியா,

வீரமணிக்கு யான் மடல் இடுவது எம் உரிமை. அவரின் நேரத்தை நான் வீணாக்குகிறேன் என்று நீர் சொல்வதுதான் ஃபாசிசம், மதவாதம்.
இது போன்ற கேள்விகளுக்கு தக்க பதில் அளிப்பது அவர் கடமை. அதற்காகத்தால் பெரியார் அவரை செய்லாளராக நியமித்தார்.

பெரியாரின் கருத்துகளுக்கு நீங்க மட்டும் தான் ‘உரிமையாளரா’ என்ன ? ஃபாசிச மதவாதம் போல் பேசுகிறீர்கள்.

நான் ஒரு கிரிமி லேயர், பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். இட ஒதுக்கீடு, எம் குழந்தைகளுக்கும் சட்டப்ப்படி உண்டு. இன்னும் எத்தனை தலைமுறைக்கு இது தேவை ? இதைதான் கேட்டேன். இதை விட முக்கிய விசியம் வேறு என்ன இருக்க முடியும். சும்மா பார்பானியம், பூணுல் என்று பேசிக்கொண்டு.

பார்பானியத்தை எதிர்க்க கிடைத்த மிக மிக முக்கியமான ஆயுதம், இட ஒதுக்கீடு. அதை நேர்மையான, சரியான முறையில் செயல்படுத்துவதே பெரியாருக்கு செய்யும் மரியாதை. பிற்பட்டோரில் உள்ள கிரிமி லேயர்களை்கக்குளைந்து, உண்மையில் அவர்களில் பிற்பட்டொருக்கு மட்டும் சலுகைகள் கிடைக்க செய்ய வேண்டும். இதை பற்றி தான் விவாதிக்க முயன்றேன்.

வினவு தளத்தில் எழுதபடும், ஆதிக்க சாதி வெறியர்களின் அடக்குமுறைகள் பற்றிய பதிவுகள் போல் ஏன் எழுத மாட்டேங்கிறீங்க ? தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்களின் ஆதிக்க சாதி வெறியும் பார்பானியம் தான். அதுதான் இன்று தலித்துகளை நசுக்கும் வெறியாக தொடர்கிறது. சில பார்பனர்களின் பார்பானியத்தை ‘மட்டும்’ தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தால் போதுமா ?

said...

தோழர் குழலி
நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள்.ஆனால் நீங்களும் மற்றவர்களைப்போல் தான் விவாதம் செய்வீர்கள் என்றால் உங்களிடம் விவாதத்தை தவிர்த்துக் கொள்கிறேன்.

விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர்கள் -அப்பாற்பட்டவைகள் உலகத்தில் இல்லை.யாரும் யாரையும் விமர்சிக்கலாம்.

இடம் பொருள்.காலம் சூழலைக் கணக்கில் எடுத்துக் கொண்டு அதச் செய்ய வேண்டும்.

இழவு வீட்டிற்கு துக்கம் விசாரிக்க போனவனைப் பற்றி பெரியார் சொன்ன உவமைதான் எனக்கு நினைவுக்கு வருகிறது.

//நீங்கள் தான் இந்து மதத்தை பின்பற்றாதவர்களாயிற்றே பின் ஏன் இந்து மதத்தை விமர்சிக்கின்றீர்கள்?//

நான் இந்து மதத்தைப் பின்பற்றாதவன் மட்டுமல்ல உலகில் மதங்களே ஒழிய வேண்டும் என்ற கொள்கை யுடைவன் தான்.

நான் அப்படியிருந்தும் இந்த இல்லாத இந்து மதம் என்னையும் இந்து என்ற வரையரையில் வைத்துள்ளது. நாத்திகர்களும் இந்து தான். இந்து யார்? என்ற வரையரையைப் படிக்கவும். அல்லது சட்டப்படி நாம் இன்னும் சூத்திரரே என்ற நூலை படிக்க வேண்டுகிரேன் தோழரே.

என் கேள்விக்கு விடை சொல்ல் விருப்பமில்லாவிட்டால் சொல்ல வேண்டாம். அந்தக் கேள்விய நான் வேண்டுகோளாகத்தான் வைத்துள்ளேன்

said...

பதிவு விவாதம் வேறு கோணத்தில் திரும்புவதை அடுத்து அது தொடர்பான சிலரின் பின்னூட்டங்கள் நிறுத்தப்படுகின்றன...

said...

//தோழர் குழலி
நீங்கள் தான் விவாதத்திற்கு அழைத்தீர்கள்.ஆனால் நீங்களும் மற்றவர்களைப்போல் தான் விவாதம் செய்வீர்கள் என்றால் உங்களிடம் விவாதத்தை தவிர்த்துக் கொள்கிறேன்.
//
அய்யா உங்கள் மீது மிகுந்த மதிப்புடனும் மேலும் பல விசயங்களை அறிந்துகொள்ளவும் எல்லோரும் தெளிவடையவும் தான் இந்த விவாதமே, சில நேரங்களில் கடுப்பேற்றுவது போன்ற தொனியில் சில கேள்விகளை வீசுவதுண்டு, அதற்கு காரணம் சில பதில்களை உங்கள் வாயாலே கொண்டு வருவதற்காகத்தான்... என் பதிவில் பெயரோடும் உண்மையான அடையாளங்களோடும் வருபவர்களின் கருத்துகளை மட்டுறுத்துவதில்லை ஏனெனில் அவர்களே அதற்கு பொறுப்பு என்பதல், விவாதம் தடம் மாறுவதால் இப்போதை அதையும் மட்டுறுத்துகிறேன்
மிச்சம் சாப்பிட்டு விட்டு வருகிறேன்

said...

//தேவர்கள், கவுண்டர்கள், வன்னியர்களின் ஆதிக்க சாதி வெறியும் பார்பானியம் தான். அதுதான் இன்று தலித்துகளை நசுக்கும் வெறியாக தொடர்கிறது. சில பார்பனர்களின் பார்பானியத்தை ‘மட்டும்’ தொடர்ந்து திட்டிக்கொண்டிருந்தால் போதுமா ?//

அதியமான் இது தொடர்பாக பல நூல்கள் வெளிவந்து விட்டது. பெரியார் தொண்டர்களாலும் முற்போக்குச் சிந்தனையாளர்களாலும் உண்மையை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்ட அந்த நூல்களைப் படியுங்கள்.

தமிழ் ஓவியா வலைப்பதிவில் பெரியார்-தலித் சுட்டியை சுட்டுங்கள் மேலும் விபரங்கள் கிடைக்கும்.

ஒரு உதாரணம்
தாழ்த்தப்பட்டவர்களும் பிற்படுத்தப்ப்ட்டவர்களும் அண்ணன் தம்பிகள். இவர்களிடம் பகையை மூட்டி அதில் குள்ர்காய்ந்து வருபவர்கள் பார்ப்பனர்கள். இது குறித்து அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளார். இது குறித்த செய்திகளும் தமிழ் ஓவியா வலைப் பதிவில் கிடைக்கும்.

படியுங்கள்! தெளியுங்கள்

said...

//நான் ஒரு கிரிமி லேயர், பிற்படுத்தப்பட்ட சாதியில் பிறந்தவன். இட ஒதுக்கீடு, எம் குழந்தைகளுக்கும் சட்டப்ப்படி உண்டு. இன்னும் எத்தனை தலைமுறைக்கு இது தேவை ?//

உங்களுக்கு இட ஒதுக்கீடு தேவையில்லையென்றால் அதுக்குறிய படிவத்தை பூர்த்தி செய்து கொடுங்கள். பிரச்சினை முடிந்து விடும்.
அதைவிடுத்து நம்முடைய முதல் த்லைமுறை இப்போதுதான் தட்டுத் தடுமாறி எழுந்து நிற்கிறது. அதையும் குறுக்குச் சால் ஓட்டி கெடுக்கிறீரே

அதுவும்கூட மைய்ய அரசில் இன்னும் முழுமையாக்க படவில்லை.

said...

தமிழ் ஓவியா,

பெரியார் பேட்டிகளை எந்த contextயில் சொன்னது என்று தெரியாமல் எல்லா இடத்திலும் உபயோபிப்பதா பகுத்தறிவு??

இதையா உங்க குழந்தைக்கு சொல்லித்தருகிறீர்கள்?? உங்கள் குழந்தையை வீரமணியின் பேரனுக்கு அடிமையா வளர்க்கிறேன் சொல்லுங்க, அதுவே சால சிறந்ததாக இருக்கும்!! தயவு செய்து பகுத்தறிவு ஊட்டி வளர்க்கிறேன் என்று சொல்லாதீர்கள்!!

ஒரு இயக்கத்தில் சுயமாக சிந்திக்காமல், பகுத்தறிவை உபயோகிக்காமல் இருக்கும் தொண்டன் எக்காலத்திலும் தலைவனாக முடியுமா?? முடியும் என்றால் எப்படி என்று சொல்லமுடியுமா??

இல்லை இயத்தில் தலைவன் இருக்கிறான், அவருக்கு பிள்ளைகள் இருக்கின்றன, அவர்கள் தான் தலைவனாக வரவேண்டும் என்பது தான் நீங்கள் சொல்லவரும் கட்டுப்பாடா??

said...

கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்

We The People

said...

இது உட்கட்சிப் பூசல் என்று நினைக்கின்றேன். ஒகே. ஆஜர் அண்டு அப்பீட்.

said...

குழலி பின்னூட்டங்களை தடை செய்திருப்பதாக அறிவித்திருந்தார் இருந்தாலும் இதை அந்த கருத்தோடு ஒப்பிட்டு சிலவற்றை குறிப்பிட விரும்புகின்றேன்.

//ஒரு பெரியாரிஸ்ட் என சொல்லிக்கொள்பவர் காலையில் எக்காரணம் கொண்டும் குளிக்க மாட்டார் மாலையில் தான் குளிப்பார், காலையில் குளிப்பது நம் பழக்கமில்லை என்பார்....//

பெரியார் சில வழக்கமான பின்பற்றல்களை மூடநம்பிக்கைகளை வளர்க்கின்றது என்பதற்காக அவர் அதை மாற்றிக்காட்டினார். பெரியவர்களிடம் காலில் விழுந்து வணங்குவது இதையும் அவர் விலக்கி வைத்தார். மரியாதை மனதில் இருந்தால் போதும் என்ற நம்பிக்கையை வலியுறுத்துவதற்காக. தன் காலில் ஒரு தொண்டர் விழுந்த பொழுது எடுத்த புகைப்பட பதிவை அழித்தார் என்பது வரலாறு. இது முன்னூதாரணத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்ற எண்ணத்தினால். நாம் செய்த காரணத்தால் மூடநம்பிக்கையான பின்பற்றல் நடைபெறக்கூடாது, என்பதற்காக. அதுபோலத்தான் காலையில் குளிப்பதை மாற்றிக்காட்டினார்.

சிலருக்கு காலையில் குளிக்காவிட்டால் ஒரு மாதிரியாக சோர்வாக இருக்கும் அத்ற்காக காலையிலேயே குளிப்பார்கள் இதை பெரியாரிஸ்டுகள், பெரியாஸ்டு அல்லாதவர்கள் என்று பிரித்து கொள்ள தேவையில்லை. அவரவர் வியர்வையின் தன்மை தோல் தன்மைக்கேற்றமாதிரி இதை மாற்றி கொள்ளலாம் இதனால் எந்தவித கொள்கை மாற்றமும் அல்லது தடுமாற்றமும் வந்துவிடப்போவதில்லை. சில நேரங்களில் சோம்பேறித்தனத்திற்காகவும் குளிப்பதில்லை. இப்படியெல்லாம் இருப்பதினால் கடவுள் அணுக்கிரகம் கிடைக்காது என்று கூறிவந்தவர்களையும், ஆரோக்கியமில்லை என்று கூறிவந்தவர்களையும் முட்டாளுக்குவதற்காக நடைமுறைப் படுத்தினார். இதையெல்லாம் கண்டிப்பாக கடைப்பிடித்துதான் பெரியாரிஸ்டாக வாழவேண்டும் என்ற அவசியமில்லை. நான் சொல்லுவதையே பகுத்தறிவுடன் சிந்தித்து பார்த்து எது சிறந்தது என்று ஏற்றுக் கொள்ளுங்கள் என்று கூறியவர் தான் பெரியார் ஆகையாலேயே அவரை பெரியார் என்கின்றோம்.

தொடரும்.......

said...

தொடர்ச்சி....1
//எப்படி மதத்தை பின்பற்றுபவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தங்கள் மதத்தை சிறு வயதிலிருந்தே திணிக்கின்றார்களோ அதே போல பல பெரியாரிஸ்ட்கள் குடும்பங்களில் சிறு வயதிலிருந்தே கடவுள் இல்லையென்றும் பெரியாரியமும் திணிக்கப்படுகின்றது,....//

ஒரு குழந்தையை எந்த மதத்திணிப்பும், கடவுள் நம்பிக்கையும் இல்லாமல் வளர்த்தாலே அது பகுத்தறிவுவாதியாக வளர்ந்து விடும் அதற்கு பெரியாரிஸ்டு என்ற போர்வைத் தேவையில்லை. அது சாத்தியமில்லை காரணம் குழந்தைகள் செய்யும் குறும்புகளை, தவறுகளை தடுப்பதற்காக முதலில் கடவுளை நம்மையும் அறியாமல் திணிக்கின்றோம் அப்படியில்லையென்றால் பூச்சாண்டிகளையும், தற்காலத்தில் காவலர்களை காட்டி இதுவும் மூடநம்பிக்கை தான். அவர்களை அடிக்காமல், துன்புறுத்தாமல் பணியவைக்க மனிதர்கள் பயனபடுத்தி வரும் சுலபவழி. இது ஆழப்பதிந்து விடுகின்றது. என் குழந்தைக்கும் இந்த மாதிரி பெரியாரை காட்டி அவன் செய்த தவறுக்காக பெரியார் உன்னை மன்னிக்கமாட்டார் என்று கூறினேன் அன்று முதல் பெரியாரின் உருவத்தைப் பார்த்து பயப்பட ஆராம்பித்தான் (அவர் தாடியுடன் இருந்ததை பார்த்து) அவன் மனதில் வேறொரு முகமாக உருவகப்படுத்தி கொண்டான். இதற்கு முன் விவேகானந்தரை காட்டினேன். அவரையும் இப்படி ஒரு தனி சக்தியாக உருவகப்படுத்திகொண்டான். இதன் விளைவு அவர்கள் அவன் கணவில் வந்து மிரட்டினர். எதை நினைத்து கொண்டு படுக்கின்றோமோ அதுதான் கனவாக வருகின்றது. அய்யோ பெரியார் என்னை பார்க்கின்றார் அவரின் படத்தை திருப்பி வையுங்கள், விவேகானந்தர் பார்க்கின்றார் நான் தவறு செய்யவில்லை திருப்பி வையுங்கள் என்று நடுஇரவில் எழுந்த அலர ஆரம்பித்து விட்டது. இவைகளை மனோத்துவ ரிதியில் அனுகவேண்டியது நம் கடமையாகிவிட்டது. இதற்குப் பிறகு பெரியாரிசம் என்பது என்ன? அதை அவன் வளர வளர போதிக்கவேண்டியது கல்வி நிறுவனங்களின் கடமையாகும் அதை கண்டிப்பாக பல கல்வி நிறுவனங்கள் செய்யாது மாறாக இன்னும் மூடநம்பிக்கைகளையே கல்வி நிறுவனங்களும் சரி சமூகங்களும் சரி கடவுள் என்ற உருவகத்தையே அவன் மனதில் ஆழப்பதிய வைத்துவிடும் என்னதான் பகுத்தறிவை (பெற்றோர்கள் சிறிதளவே புகுத்தமுடியும்) மீண்டும் சமூகம் மூடநம்பிக்கைகளை வேரூன்றிவிடும். பெற்றோர் எண்ணிக்கை இருநபர்கள் ஆனால் சமூகம் பெரும் எண்ணிக்கை இதிலிருந்து விழித்தெழ கல்வி நிறுவனங்கள் பெரியாரிசத்தை சொல்லித்தருவதில் என்ன தவறு இருக்கமுடியும். மூடநம்பிக்கைகளை சொல்லித்தருவதற்கு நிறுவனங்கள் இருக்கும் பொழுது, பெரியாரிசத்தை புகட்டுவதற்கு ஒரு சில மிகச் சொற்ப கல்வி நிறுவனங்களே உள்ளன. கிருத்துவத்தை ஒரு சில கிருத்துவ கல்வி நிறுவனங்கள் பாரபட்சமில்லாமல் சொல்லிக் கொடுக்கவில்லையா? இதில் மட்டும் திணிப்பு எங்கிருந்து வந்தது. இதில் தான் பகுத்தறிவு வந்துவிடுகின்றதே, வேறு எதிலும் பகுத்தறிவு வருவதில்லையே. என்னை பொருத்தவரை ஏன் எல்லோருக்கும் இதுதான் பகுத்தறிவாக இருக்கும் ஏன், எதற்கு, எப்படி... என்று ஆங்கிலத்தில் WH Questions அடங்கியவையே பகுத்தறிவு அது பெரியாரிசத்தில் நிறைய உண்டு.

தொடரும்....2

said...

தொடர்ச்சி.....3

மூன்றாவதாக தங்களுடைய பின்னூட்டத்தில்

// நீங்கள்தான் இந்து மதத்தை வெறுப்பவர்கள்ஆயிற்றே....//என்று கூறியிருக்கின்றீர்கள் இது தமிழ் ஒவியா நோக்கி எழுப்பிய வினா அவர் பதிலளித்து விட்டார். இருப்பினும் இந்த வினா இப்படி பலராலும் எழுப்பப்படும் என்பதால் தான் பெரியார் மதம் மாறவில்லை. அவரை மதம் மாறி விடுமாறு கூறியபோதும் இந்த மதத்தில் இருப்பதால் தான் பல சவுகரியங்கள் இருப்பதாக கூறினார். அதையும் விளக்கினார், நாம் இதன் ஒட்டைகளை எடுத்து காட்ட முடியும் இல்லாவிட்டால், உனக்கும் என் மதத்திற்கும் என்ன சம்பந்தம்? என்ற கேள்வி இந்து மதத்தினரால் வைக்கப்படும். அவர் சாதுர்யம் இன்றுவரை நிரூபனம் ஆகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கு உங்கள் கேள்வியே சாட்சி.

தவிர இளஞ்சேரன் குறிப்பிட்டதில் தவறொன்றுமில்லை. பிராமாணர்களில் நல்லவர்கள் உள்ளனர் என்ற வாதம் எழுப்பப்பட்டது. அப்பொழுது பிராமணர்கள் மோசமானவர்கள் என்பதை மறைமுகமாக சுட்டிக்காட்டுகின்றது. பாராதியார் தாழ்த்தப்பட்டவருக்கு பூணூல் அணிவித்து அவரை உயர்ந்தவராக்கினார் என்ற பதிலை ஆகா ஒகோ என்று கூத்தாடுபவர்கள் உண்டு. ஏன் தாழ்ந்தவன், உயர்ந்தவன் என்பதை தீர்மானிக்க ஒரு கயறு தேவையா? அதை தூக்கி எறி ஜாதியை உன் அடிமனத்திலிருந்து தூக்கி எறி, உன் ஜாதிய அடையாளங்களை, மத அடையாளங்களைத் தூக்கி எறி அந்த சமத்துவத்தை வலியுறுத்துவதுதான் பெரியாரிசம். அது இன்று வரை எந்த பிராமணரும் கடைப்பிடிக்கவில்லை. ஆனால் நாங்கள் மாறிவிட்டோம் எங்களுக்கும் இடவொதுக்கீடு வேண்டும் என்கின்றனர். இடவொதுக்கீட்டை சலுகை என நினைக்கின்றனர். மிகப்பெரிய தேசிய அரசியல் கட்சி தலைவருக்கே தெரியவில்லை, ஆனால் எப்படியாவது ஆட்சிக்கு மட்டும் வந்து விடவேண்டும். என்ன தான் அப்படி பெரிய படிப்பு படித்தார்களோ தெரியவில்லை.

இங்கிருந்து மதம் மாறி செல்கின்றனர் அவர்களும் அந்த மதத்தில் மூடநம்பிக்கைகளை பின்பற்றிக் கொண்டு இந்து மதத்தை பெரியாரை துணைக்கு வைத்து வாதாடுவார்கள் இது பெரியாரிசமில்லை. என் கல்லூரியில் ஒருவர் கிருத்தவராக மாறிவிட்டார் ஆனால் தலித் என்ற பிரிவில் பயன் பெற்று வந்தார் ஆனால் அவர் பிற்படுத்தபட்டவர் (கிருத்தவர் என்பதால்) தலித்தை காரணம் காட்டி மத்திய அரசு வேலை வாங்கி சென்றுவிட்டார் அது வேறு விசயம். அவர் அடிக்கடி இந்து மதத்தை சாடிக்கொண்டிருப்பார் பெரியாரை உதாரணத்திற்கு வைத்து கொண்டிருப்பார். நான் கூட பெருமை பட்டதுண்டு.

ஒரு நாள் அவர் தேர்வுத்தாளில் jc என்று குறிப்பிட்டார். அதை பார்த்து கேட்ட பொழுது இந்து மதத்தில் உள்ளவர்கள் பிள்ளையார் சுழி போடுகிறார்களே அதற்காகத் தான் நான் உடனே அப்படி என்றால் இனி பெரியார் பெயரை சொல்லி இந்த செயலை செய்யாதே என்று கூறினேன். பெரியார் கூறியதை உன் இன்னோரு மூடநம்பிக்கைக்கும், மதவெறிக்கும் சாதகமாகப் பயன்படுத்தாதே. இது பெரியாருக்கு இழுக்கு அதற்காகவா பாடுபட்டார். இன்று வரை அவரோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்வதில்லை. பெரியாரிசத்தை புரிந்து கொள்ளாதவர்களுக்கு பெரியார் ஒரு கவசம். ஆம் சுயநலக் கவசம். அதைத்தான் சிலர் பின்பற்றுகின்றனர் சில பிராமணர்கள் கூட பெரியாரிசத்தை ஆதாரிப்பார்கள். அவர்கள் முழு மனதுடன் ஆதரிக்க வில்லை அப்படிபட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்களை எதிர்த்தும் கேள்வி கேட்டிருக்கின்றேன். அதற்கு பதில் ஹி ஹி தான்.....நன்றி.

முற்றும்.

said...

//கட்டுப்பாட்டையும், பகுத்தறிதலையும் போட்டுக் குழப்பிக் கொள்ளாதீர்கள்

We The People //


We The People தான் நாங்க மட்டும் ஆடு மாடுன்னா சொன்னோம்!

அன்புராஜை தவிர வேறு யாரும் தகுதியானவர்கள் தி.க.வில் இல்லையான்னு ஒரு கேள்வி கேட்டா, கட்டுபாடு, பகுத்தறிவுன்னு ஜல்லி அடிக்கிறிங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!

said...

//கட்டுபாடு, பகுத்தறிவுன்னு ஜல்லி அடிக்கிறிங்களே இது உங்களுக்கே நியாயமா இருக்கா?!//

ஜல்லி அடிக்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை வால்பையன்.