"மைனா" திரைப்படம் கதை - வலைப்பதிவிலிருந்து திருடப்பட்டது
வலைப்பதிவுலகிலிருந்து ஒரு கதை திருடப்பட்டு "மைனா" என்ற பெயரில் வெளியாகி அந்த படம் இயக்குனருக்கும் தயாரிப்பாளருக்கும் புகழையும் கோடிகளையும் அள்ளிக்கொடுத்துள்ளது...
"மைனா" படம் பார்த்த பலரும் சொன்னது காவல்துறையினர் படும் சிரமங்களை புது கோணத்தில் சொல்லியிருப்பதாகவும் படத்தில் தீபாவளி அன்று தப்பித்து ஓடிப்போன கைதியை பிடித்து வர அவர்கள் படும் சிரமத்தையும் சொல்வதாகவுமான அணுகுமுறைய பாராட்டியிருப்பார்கள், காட்சி களன், காட்சி நகர்வுகள், படத்தின் முக்கிய இழையே வலைப்பதிவில் எழுதப்பட்ட பதிவிலிருந்து திருடப்பட்டுள்ளது...
"அரசு ஊழியர்கள் - பகுதி - 3." அப்படிபோடு கற்பகம் அக்கா என்றழைக்கும் கற்பகம் அவர்கள் 2005ம் ஆண்டில் எழுதிய சிறுகதை போலான இந்த வலைப்பதிவு உள்ளடக்கமே காட்சிகளாகவும் படமாகவும் மைனாவில் விரிவு படுத்தப்பட்டுள்ளது... கதையின் ஒன் லைனர் ஒத்து போவது போல அல்ல இது... மைனா படத்தின் கதையையும் இந்த கதையும் படித்து பார்த்து சொல்லுங்கள்...
இந்த கதை திருட்டை அம்பலப்படுத்தி மின் மடல் அனுப்பியவருக்கு மிகவும் நன்றி, நிறைய விவரித்து எழுத வேண்டும் என நினைத்தேன், ஆற்றாமையாலும் உடனே வெளிப்படுத்த வேண்டுமென்றும் சுருக்கமாக சொல்லியுள்ளேன்...
**** அந்தநாள்., விடிந்தால் தீபாவளி*** ***அன்று இரவும் ஏதோ வாக்குவாதம் நடந்து கொண்டிருக்க., வெளியில் காவலர் விசில் ஊதும் சத்தம் கேட்டது., நான் முதலில்., சின்னப் பசங்க விளையாடிட்டு இருக்காங்கன்னு நினைச்சுட்டு இருக்கும் போது ஒரு எண்ணம் விடிஞ்சா தீபாவளி., பட்டாச, கிட்டாச வெடிக்காம., இது என்ன?ன்னு நினைச்சுக்கிட்டே வெளிய வந்து பார்த்தா உண்மையிலேயே போலீஸ் பட்டாளம்தான். எங்க ஏரியா மிக அமைதியான ஏரியா. எதுக்கு வந்திருக்காங்கன்னு பார்த்திட்டு இருக்கும் போதே ரெண்டு பேர் எங்க வீட்ட நேக்கி வந்தாங்க. எங்க பக்கத்து வீட்டுல., ஒரு குடும்பம் வாடகைக்கு இருந்தார்கள். நம்ம வீட்டுலயே சத்திரம் மாதிரி ஆளுக இருக்கறதுனால பக்கத்து வீட்டயெல்லாம் கவனிச்சதே இல்ல. ஆனா., அந்த வீட்டுல சமீபத்தில் ஒரு திருமணம் நடந்தது தெரியும். வந்த காவலர்கள் கேட்டார்கள் "பாப்பா... உங்க வீட்டுல ஏதாவது திருடு போயிருக்கா?"., "இல்லங்க., என்ன ஆச்சு?"., விதயம் இதுதான் அந்த வீட்டில் மணமாகி வந்த மாப்பிள்ளை., எங்கையாவது ரோட்டுல அனாமத்தா கிடக்கிற, அல்லது யார் வீட்டுலயாவது பயன்படுத்தாம இராத்திரில நிக்கிற ஹீரோ ஹோண்டா., யமாஹா போன்ற வாகனங்களை பத்திரமா அவர் வீட்டுல கொண்டு வந்து வச்சுக்குவாராம். இதுல ஒரு ஆச்சரியம் என்னன்னா., எங்க வீட்டுக்கும் அவங்க வீட்டுக்கும் இடையில் இருக்கும் சந்தில்தான் என் தம்பி எப்போதும் அவனுடைய யமஹாவை வைத்திருப்பான். அவரைப் பிடிக்க வந்த பட்டாளம் அவருடைய மனைவியின் குடும்பத்தை கேள்வியால் துளைத்துக் கொண்டிருந்தார்கள். அந்தப் புது மணப்பெண் அழுத அழுகை மனதை என்னவோ செய்தது. ஆனால் விதயம் தெரிந்து மாப்பிள்ளை எஸ்கேப். அவரைப் பிடிக்க வந்த காவலர்கள்., அந்தக் காவலர் கூட்டத்திலேயே ஒல்லியாக, நிற்க சத்தில்லாத நிலையில் இருந்த இரு கவலர்களை பார்த்து "வந்தா விட்றாதிங்கய்யா!" என்று கூறிவிட்டு கலைந்து சென்றார்கள்.
*
அந்த இரு காவலர்களும் இரவு 7.30 மணியிலிருந்து 10 மணி வரை சாலையிலேயே நின்று கொண்டிருந்தார்கள். வானம் வேறு தூறிக்கொண்டிருந்தது. எங்கோ சென்று விட்டு வந்த என் அப்பாவிடம் எல்லாவற்றையும் விளக்கினோம்., அவர் இரண்டு நாற்காலி மற்றும் டீ அவர்களுக்கு தரச் சொன்னார். நள்ளிரவு 1.30 மணிவரை அவர்கள் இருந்ததைப் பார்த்தோம். பின்பு படுக்கச் சென்று விட்டோம். காலை நாற்காலிகள் எங்கள் வீட்டின் முன் இருந்தது எப்போது சென்றார்கள் என்பது தெரியவில்லை. அவர்களுடைய அந்தத் தீபாவளி எப்படி இருந்திருக்கும்? காவலர்களுக்கு குடும்பம்., குழைந்தைகள் இருக்குமல்லவா., அவர்கள் மனநிலை எப்படியிருந்திருக்கும்?.
*
ஊடகங்களில் அதிகம் தாக்கப்படுபவர்கள்., கேலிக்குள்ளாக்கப் படுபவர்கள் காவலர்களே., ஒரு அரசியல்வாதி ரோட்டில் பவனி வர 2, 3 மணிநேரம் இவர்கள் வெயிலில் காயவும், மழையில் நனையவும் வேண்டியிருக்கிறது. அரசியல் கொலைகளில் பலியான முகம் தெரியாத காவலர்கள் எத்தனை பேர்?., அரசியல்வாதிகளின் பாதுகாப்பு என்ற பெயரில் இவர்கள் சந்திக்கும் சிக்கல்கள்..., எல்லாவற்றுக்கும் மேலாக குற்றவளிக்களுக்கும் பாதுகாப்பு பணிபுரிய வேண்டிய நிலை. ********
இதை காப்பியடித்தது போல் அப்படியே கிளைமாக்சை மட்டும் மாற்றி (அக்கியூஸ்ட் புதுசா கல்யாணம் ஆனவர் மைனால போலிஸ்காரனுக்கு தலை தீபாவளி). இப்பதிவுடன், படத்தின் முற்பாதிக்கு சமிபத்தில் வெளியான 'வெளுத்துக்கட்டு' படத்தின் சில காட்சிகளையும் வைத்து எடுத்ததுபோல் உள்ளது "மைனா" படம்.
முதற்பத்தியில் (முழு பதிவில்) சொல்லியிருப்பது கூட படத்தில் போலீஸ்காரன் பொண்டாட்டி போனில் சொல்வதாக சேர்த்துவிட்டு, அந்த கேரட்டர வில்லியாக்கிருக்காய்ங்க....
---------------------
இப்போ சொல்லுங்கய்யா காப்பி பேஸ்ட் என்றும் எதையும் எழுத தெரியாதவர்கள் என்றெல்லாம் தட்ஸ்டமில் ஆரம்பித்து பல ஊடகங்களிலும் வலைப்பதிவர்கள் பற்றி தவறாக எழுதும் மயிராண்டிகளா வலைப்பதிவர்களின் கதைகளையும் பிரபலமான வசனங்களையும் திருடி படங்களில் பயன்படுத்தி புகழையும் கோடிகளையும் அள்ளும் அளவிற்க்கு உள்ளது...
இயக்குனர் மிஸ்டர் பிரபு சாலமன் இது உங்களுக்கே நியாயமா?