வ.கெளதமன் இயக்கத்தில் சீமான் நடிப்பில் இன்று வெளியாகும் மகிழ்ச்சி திரைப்படம்

இயக்குனர் வ.கௌதமனனின் மகிழ்ச்சி திரைப்படம் இன்று மிகுந்த போராட்டங்களுக்கிடையில் வெளியாகிறது...

அட என்னய்யா போராட்டம் அப்படிங்கறீங்களா, புரொடியூசர் பிரச்சினையா? படம் எடுத்து முடியலையா? டப்பிங் பேசாம ஹீரோயின் ஊருக்கு போயிட்டாங்களா என்றால் அதெல்லாம் ஒன்னுமில்லையாம்.... அட தமிழ்நாட்டுல கருணாநிதி குடும்ப பேனர்ல வெளியாகுற படம் தவிர மற்ற எல்லா படங்களுக்கும் தியேட்டர் கிடைத்து வெளியாவதே பெரிய போராட்டம் தானுங்களே, படம் எப்போதோ தயாராகியும் தீபாவளிக்கு வெளியிட தியேட்டர் கிடைக்காமல் கருணாநிதி குடும்பத்தின் தீபாவளி தியேட்டர் ஆக்கிரமிப்பிற்க்கு பின் தற்போது தான் வெளியாகிறது...



எழுத்தாளர் நீல.பத்மநாபன் 1968 எழுதிய தலைமுறைகள் நாவலையே இயக்குனர் வ.கெளதமன் படமாக எடுத்துள்ளார்... இது மட்டுமின்றி படத்தில் செட்டியார் இனத்தை சேர்ந்த பெண்ணை தலித் ஆண் திருமணம் செய்வதாக வருகின்றதாம், அதனால் நம் இனத்துக்கு இழுக்கு என்று சில செட்டியார் இனத்துக்காரர்கள் இந்த படத்திற்க்கு திரையரங்கு தரக்கூடாது என சிலர் வேலை பார்க்க அதே செட்டியார் இனத்துக்கார திரையரங்க உரிமையாளர்களே இந்த மாதிரி சில்லுண்டி வேலை பார்த்தவர்களை போய்யா வேலைய பார்த்துக்கொண்டு என்று துரத்திவிட்டார்களாம்...

செந்தமிழன் சீமானும் இந்த படத்தில் நடித்திருக்கிறார், நீண்ட நாட்களாக திரைப்படங்களுக்கு பாடல் எழுதாமல் இருந்த பாவலர் அறிவுமதி அவர்கள் பாடல் எழுதியுள்ளார்...

இவர் ஏற்கனவே கனவே கலையாதே என்ற படத்தையும் இயக்கியுள்ளார்... சந்தனக்காடு தொலைக்காட்சி தொடர் இவர் இயக்கிய ஒரு புகழ்பெற்ற தொடர்...

பிரிவியூவில் பார்த்த நண்பர்களுக்கு படம் பிடித்திருக்கிறதாம், எதார்த்தமான திரைப்படமாக சிறப்பாக வந்துள்ளது என்கிறார்கள்...

இந்த படம் வெற்றிபெற இயக்குனர் கெளதமனை வாழ்த்துகிறேன்...



6 பின்னூட்டங்கள்:

Aruna said...

Good News மகிழ்ச்சி

thennarasu said...

Enathu iniya nanbar gouthamanin padam vetripera vaazhththukkal

ஹரிஸ் Harish said...

இந்த படம் வெற்றிபெற இயக்குனர் கெளதமனை வாழ்த்துகிறேன்../// உங்களோடு என் வாழ்த்துக்களையும் பதிக்கிறேன்,,

aruna said...

நமக்கு நெருக்கமானவர்களின் பின் மண்டையில் செல்லமாக தட்டி, “போய் மொதல்ல படத்தை பாரு” என்று சொல்லலாம்! ஏனென்றால் ‘மகிழ்ச்சி’யால் நாமும், நமது உறவுகளும் நிறைய வேண்டிய நேரமிது!

era.thangapandian said...

தங்களின் வலை பதிவை வாசித்தேன் நல்ல பதிவு. வாழ்த்துகள்
-இரா. தங்கப்பாண்டியன்
vaigai.wordpress.com

கோவி.கண்ணன் said...

:)

மகிழ்ச்சி படத்தை அரங்கில் மொத்தம் ஆறே பேர்களுடன் அமர்ந்து பார்த்த சோகத்தை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்