அமெரிக்க துப்பாக்கி சூடு, பொதுமக்களின் ஆயுதங்களை பறிக்கும் அரசும் பறிக்க கோரும் முற்போக்காளர்களும்

அமெரிக்க பள்ளி துப்பாக்கி சூட்டை தொடர்ந்து மீண்டும் ஒரு விவாதமும் கூக்குரல்களும் துவங்கியுள்ளது, அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாராம், துப்பாக்கிகளை தடை செய்ய வேண்டும் என்று. இதில் அறிவுஜீவி தளத்தில் இயங்குபவர்களும் கூட இதையே சொல்ல ஆரம்பித்துள்ளது தான் சற்று வேதனையான விசயம்.

எப்போதுமே ஆயுதங்கள் அதிகாரம் கொண்டவை, எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனே ஆதிக்கம் செய்ய முடியும்,  எவனிடம் ஆயுதம் உள்ளதோ அவனால் தான் ஆதிக்கத்தை எதிர்க்கவும் முடியும் எனவே தான் அரசு ஆயுதங்களை தம்மிடையே குவித்துக்கொண்டும் பொதுமக்களை நிராயுதபாணியாகவும் வைத்திருக்கும்.  ஈழத்தில் புலிகளை சமாதான  ஒப்பந்தத்தில் கையெழுத்திடவைத்து முதலில் இந்திய மற்றும் இலங்கை அரசாங்கங்கள் செய்ய சொன்னது அவர்களின் ஆயுதங்களை ஒப்படைக்க சொன்னது, அதே போல புலிகளும் தங்கள் ஆளுமைப்பகுதிகளில் டெலோ, ஈபிஆர்எல்எஃப் இயக்க போராளிகள் தங்கள் ஆயுதங்களை களைய வேண்டும் என்று கெடுவிதித்து செய்தன.  எந்த அரசாங்கமும் எந்த போராளி அல்லது தீவிரவாத இயக்கங்களுடன் பேச்சு வார்த்தையோ ஒப்பந்தத்துக்கோ வரும் போது முதலில் கேட்பது அரசுக்கு எதிராக போராடும் இயக்கங்கள் ஆயுதங்களை களைய வேண்டும், அரசுக்கு எதிராக செயல்படும் ஆயுத இயக்கங்கள் கேட்பது ஆயுதங்களை களையமாட்டோம்.

சுகுணாதிவாகர் ஒரு முறை எழுதியது இன்னமும் நினைவில் உள்ளது "துப்பாக்கி குழலில் இருந்து தான் அதிகாரம் பிறக்கும் என்றால் பெரிய துப்பாக்கி குழலிலிருந்து பெரிய அதிகாரம் பிறக்கும்"

அரசாங்கத்து எதிரான  இயக்கங்கள் ஆயுதம் வைத்திருப்பதை மட்டுமல்ல, அரசாங்கத்துக்கு உட்பட்ட பொதுமக்களும் ஆயுதம் வைத்திருப்பதை அரசு தனது அமைப்பிற்கான அச்சுறுத்தலாகத்தான் பார்க்கிறது.  முதலில் பொதுமக்கள் ஆயுதங்களை வைத்திருப்பதை பற்றி சொல்வதென்றால், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ச.தமிழ்ச்செல்வன் அவர்கள் "அரசியல் எனக்கு பிடிக்கும்" என்ற நூலில் அரசு பற்றி எழுதியதிலிருந்து ஆரம்பிக்கலாம்... வேட்டைகலாச்சாரத்தில் இருந்த ஆதிமனிதன் அத்தனை பேரிடமும் ஆயுதங்கள் உண்டு, விலங்குகளை வேட்டையாடவும் விலங்குகளிடமிருந்து தம்மை பாதுகாத்துக்கொள்ளவும் எதிரிகளிடமிருந்து தங்களை பாதுகாக்கவும் மனிதர்கள் அத்தனை பேரும் ஆயுதங்களை தரித்திருந்தனர். காட்டை விட்டு வெளியேறி விவசாயம், சமவெளி வாழ்க்கை ஆற்றுப்படுகை நாகரிகம் என்று ஆரம்பித்த போது அரசுகள் தோன்ற ஆரம்பித்தன. அரசு தோன்ற ஆரம்பித்த உடன் முதன் முதலில் செய்த செய்கை என்ன வெனில் அது தனது ஆளுமைக்குட்பட்ட பகுதிகளில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்தது. 

வேட்டை அல்லாத சமவெளி விவசாய நாகரீகத்தில் பொதுமக்களுக்கு ஆயுதங்கள் தங்கள் பாதுகாப்புக்கு மட்டுமே தேவைப்பட்டன. அரசு முதலில் மக்களிடமிருந்து ஆயுதங்களை களைந்த போது  ஆயுதமற்ற மக்களின் பாதுகாப்பை தான் ஏற்றுக்கொள்வதாக கூறியது, அதன் தொடர்சி தான் படை, இராணுவம், காவல் என எல்லாம் உருவாக்கப்பட்டு அரசின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது.

தனி மனிதனின் ஆயுதம் கைக்கொள்ளாமல் இருக்க அவனது பாதுகாப்பை ஏற்ற அரசு தனிமனிதனின் பாதுகாப்பை பல நேரங்களில் உறுதி செய்வதில்லை, அரசு எந்திரங்களான காவல்துறை, இராணுவம் எதிரி நாடு மட்டுமின்றி சொந்த நாட்டு மக்களிடமே அத்துமீறலை செய்கிறது, இதற்க்கு பல்வேறு உதாரணங்கள் இருந்தாலும் கடந்த ஆண்டு நடந்த இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூசையின் போது நடந்த பரமக்குடி துப்பாக்கிச்சூடு ஆயுதமின்றி இருந்த தலித் மக்களின் மீது ஆயுதம் தரித்த அரசின் கையாளான காவல்துறையின் அத்து மீறல் கொலைகள்.  இந்த ஆண்டு முத்துராமலிங்கத்தேவர் குருபூசையின் போது ஆயுதமின்றி இருந்த தேவர் சமூகத்தின் மீது கொலைவெறி தாக்குதல் நடத்தி அரசு கணக்கின் படி 11பேரை கொலை செய்தனர் தேவேந்திரகுல வேளாளர் சமூகத்தினர்.(ஆயுதமின்றி இருப்பவர்களை கொலை செய்வது என்பது சாதிவித்தியாசமில்லாமல் நடைபெறுவது, சமீப காலங்களில் குருபூசையின் போது ஆயுதங்களை கொண்டு செல்வது கிட்டத்தட்ட முற்றிலுமாக தடைசெய்யப்பட்டிருந்தது, அப்படியெனில் ஆயுதமின்றி வரும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை, அப்படி செய்திருந்தல் பரமக்குடியில் 6 தலித் மக்களும் கொல்லப்பட்டிருக்க மாட்டார்கள், குருபூசையில் 11 தேவர் சமூக மக்கள் கொலைசெய்யப்பட்டிருக்கமாட்டார்கள், அப்படி உறுதி செய்ய முடியாத போது அவர்கள் ஆயுதங்களை கைக்கொள்வதை தடைசெய்யக்கூடாது.

வெளிப்படையாகவே சொல்லலாம், அரசு தரும் பாதுகாப்பு போதாமல் எத்தனை எத்தனை கட்சி இயக்க தலைவர்கள் எத்தகைய பாதுகாப்புடன் ஆயுதங்களுடன் செல்கிறார்கள் என்பது அரசுக்கும் காவல்துறைக்கும் தெரியாதா என்ன? அவர்களை எல்லாம் விட்டு தான் வைக்கின்றன அரசு, ஏனெனில் அவர்கள் பாதுகாப்புக்கு பிரச்சினை வந்தால் சமூக சிக்கல்கள் வரும் என்பதால்.

தாளமுத்து நடராசன் என்ற காங்கிரஸ் பிரமுகர் தன் பண்ணை வீட்டில் கொள்ளையடிக்க வந்தவர்களால் கடுமையாக கொடூரமாக கொலை செய்யப்பட்டார், ஓசூரில் பல ஆண்டுகளுக்கு முன் ஒரு வீட்டில் புகுந்த 14 பேர் கொண்ட திருட்டு ரவுடி கும்பல் தாயையும் மகளையும் கட்டிப்போட்டு கற்பழித்தது, தற்போது திருடர்களால் கொள்ளையடிக்க வருபவர்கள் கொலை செய்வதும் அதிகரித்து வருகிறது, இங்கே தனிமனிதன் ஆயுதங்கள் வைத்திருக்க கூடாது என்னும் அரசு என்ன மாதிரியான பாதுகாப்பை தருகிறது?

ஆயுதம் என்பது பயன்படுத்தப்பட அல்ல, பயன்படுத்தப்படாமல் இருக்கவே, ஆயுதம் அதிகாரத்தை கொடுக்கும் போது அது மிகுந்த பொறுப்புணர்ச்சியையும் தருகிறது, அந்த பொறுப்பு இல்லாமல் குருபூசைகளின் போது முந்தைய காலங்களில் எடுத்து சென்ற ஆயுதங்களை கொண்டு பொதுமக்களையும் மாற்று சாதியினரையும் தொந்தரவு செய்ததால் தற்போது முற்றிலுமாக ஆயுதங்களை தடைசெய்ய இரண்டு சமூகங்களும் வன்முறைக்கு இலக்காகி உள்ளன.

ஒரு அரசாங்கத்தால் ஒவ்வொர் குடிமகனுக்கும் 24 மணி நேர பாதுகாப்பை உறுதி செய்வது செயல்முறையில் கொஞ்சம் சாத்தியமில்லாதது தான், எனவே ஒரு அரசு குடிமக்கள் ஆயுதங்கள் வைத்திருப்பதை தடை செய்யக்கூடாது, ஆனால் அதை முறைப்படுத்தி வைத்திருக்க‌ வேண்டும். 
ஆரம்பத்திலிருந்தே அமெரிக்காவை பற்றி எப்போதுமே நிறைய எதிர்பிரச்சாரம் செய்யப்பட்டுள்ளது, அதையும் வழக்கம் போலவே நம்பி வந்திருந்தோம் எதிரிகளுக்கு மனித உரிமை தருகிறதோ இல்லையோ அவர்கள் குடி மக்களின் பாதுகாப்பை அமெரிக்கா மற்ற எந்த நாட்டையும் விட அதிகமாக உறுதி செய்தே வந்துள்ளது. சில அடிப்படை மனித உரிமைகள்(அவர்கள் குடிமக்களுக்கு மட்டுமாவது) மற்ற நாட்டைவிட அங்கே உள்ளதாகவே தெரிகிறது. நாம் அமெரிக்காவில் அவ்வப்போது நடைபெறும் இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை மட்டுமே அறிவோம், ஆயுதங்கள் தனிமனிதர்களிடம் இருப்பதால் எந்த அளவிற்க்கு அரசால் தடுக்க முடியாத பிற கொலைகள் தடுக்கப்பட்டுள்ளன என்பதை அறிந்திருந்தால் ஒரு வேளை அமெரிக்காவின் ஆயுதக்கலாச்சாரம் என்று கூக்குரல் இடும் முன் சற்று யோசிக்க தோண‌லாம்.

பொதுமக்களிடம் இருக்கும் ஆயுதத்தை களையாமல் இருக்கும் அமெரிக்க அரசு மற்ற எந்த அரசையும் விட எமக்கு சற்று முற்போக்காகவே தெரிகிறது. அப்போ இம்மாதிரியான துப்பாக்கி சூட்டு கொலைகளை தடுக்க என்ன செய்வது? என கேட்கலாம், தினம் தினம் ஆயிரக்கணக்கானோர் சாலைவிபத்துகளில் கொல்லப்படுகின்றனர், குடித்து விட்டு வண்டி ஓட்டுவது என்பதிலிருந்து, அனுமதிக்கப்பட்டதை விட வேகம், சாலைவிதிகள், கட்டுப்பாடுகளை கடைபிடிக்காமல் வண்டி ஓட்டுவது என மிகப்பெரும்பாலான விபத்துகளுக்கும் விபத்து மரணங்களுக்கும் காரணம் மிக மோசமான ஓட்டுனர்களே, எண்ணிக்கையில் மோசமான வாக ஓட்டிகள் ஏற்படுத்திய மரணங்களில்ன் எண்ணிக்கை இம்மாதிரியான துப்பாக்கி சூட்டி இறந்தவர்களை விட பல நூறு மடங்கு அதிகமாக இருக்கும். ஆனாலும் இன்னும் டிரைவிங் லைசன்ஸு கொடுத்துக்கொண்டு தான் இருக்கின்றோம்.

துப்பாக்கி கலாச்சாரம் என்று கூக்குரலிட்டு பொதுமக்களிடமிருந்து ஆயுதங்களை மொத்தமாக அரசாங்கத்தை களைய செய்வதை விட துப்பாக்கி வைத்திருப்பதை முறை படுத்துதல் வேண்டும். துப்பாக்கியை களைவது வேறு முறைப்படுத்துதல் வேறு, இந்த  உலகில் பொதுமக்களிடம் இன்னமும் ஆயுதங்களை விட்டு வைத்திருக்கும் அமெரிக்க அரசு நிச்சயம் என்னளவில் ஒரு முற்போக்கு அரசு தான்.

பிரபலங்களுக்கு மட்டுமேயான நாடு தானோ?


பிரபலங்களுக்கு மட்டுமேயான  நாடு தானோ?

நண்பர் முரளி ஒரு முக்கிய கேள்வியை எழுப்பியுள்ளார், இதே மாதிரி சைபர் பிரச்சினையால் பாதிக்கப்பட்ட நானே ஏன் இவ்விசயத்தில் சின்மயிக்கு ஆதரவாக இல்லாமல் உள்ளேன் என்கிறார்.... சின்மயி மீதான ஆபாச வசை தாக்குதல்களை எங்கேயும் நான் ஆதரிக்கவில்லை. அதற்கான நடவடிக்கை அதற்கான நடவடிக்கையாக மட்டுமே இருக்க வேண்டும்  There should be  no special treatment for any one. இப்பிரச்சினையில் என்னுடைய அனைத்து கருத்துகளும் கீழ்கண்டவையை அடிப்படையாக கொண்டே...

1) அதிகாரத்துவத்துக்கு எதிரான என் மிகச்சிறிய எதிர்ப்பு குரல்

என் வலைதளத்தில் வெளிப்படுத்திய கருத்துகளால் கோபம் அடைந்த ஒருவர் தனிப்பட்ட முறையில் என்னை மற்றும் குடுமத்தை தாக்கி(என்னை மட்டுமின்றி வேறு பலரையும்)  எழுதினார், என் மனைவியின் புகைப்படங்கள் ஆபாச தளங்களில் போர்னோ படங்களோடு இணைக்கப்பட்டன, இது தொடர்பாக பல்வேறு புகார்களை சைபர் கிரைமுக்கு அனுப்பினேன், கூகிள் சர்ச்சில் வெளிவந்த புகைப்படங்களுக்காக கூகிளுக்கும் பல்வேறு போர்னோ தளங்களில் வெளியிடப்பட்ட  போட்டோக்களை முடக்க சொல்லி அந்த தளங்களுக்கும் மின்னஞ்சல் அனுப்பினேன், இந்த அத்தனையிலும் சைபர் கிரைம் மெயில் ஐடியையும் சிசியில் போட்டிருந்தேன், இது தொடர்பாக பலமுறை தொலைபேசியிலும் பேசி புகார் அளித்தேன், ஒரு விசயத்தை நிச்சயம் பாராட்ட வேண்டும், அனைத்தையும் பொறுமையாக கேட்டாலும் புகார் மீது எந்த நடவடிக்கையும் இல்லை, முடிந்த அளவு பேசி தீர்த்துக்கொள்ளுங்கள் என்ற அறிவுரையே வழங்கப்பட்டது, நான் அதிகபட்சமாக கேட்டது இம்மாதிரியான செயல்களை அந்த நபர் செய்வதை நிறுத்த செய்யுங்கள் என்றதே.

ஒரு சாதாரணனான‌ என் புகார் தொடர்பாக(என்னை மாதிரி மிகப்பலர் அளித்த புகார்) எந்த நடவடிக்கையும் இல்லை, ஆனால் ஒரு பிரபலம் அளித்த புகாருக்கு உடனடியாக சிறைக்கு கொண்டு அடைத்தது வரையான நடவடிக்கை எனில் அப்போ என் மாதிரியான சாதாரண மக்களுக்கு என எதுவுமில்லை, பிரபலமாக இருந்தால் மட்டுமே எமக்கான நியாயம் கிட்டும், இன்று தனக்கு இழைக்கப்பட்ட அநீதிக்காக ஒரு பிரபலத்துக்கு சாதாரணனைவிட ஸ்பெசல் ட்ரீட்மெண்ட் கிடைக்கிறதென்றால், ஒரு சாதரணர் மீது ஒரு பிரபலம் அத்துமீறினால் என்ன செய்ய இயலும் என்ற பயம் வருகின்றது.


சமீபத்தில் டிவி நடிகர் வெங்கட் மற்றும் அவர்களின் தாயார் மீது ஒருவர் புகார் அளித்திருந்தார், வாடகைக்கு விட்டுருந்த அந்த சாதாரணரின் இடத்தை காலி செய்ய மாட்டோம், நாங்கள் செல்வாக்கானவர்கள் என்று மிரட்டுவதாக, அது தொடர்பாக அந்த பிரபல டிவி நடிகர்கள் கைது செய்யப்பட்டார்களா என்ன? இதெல்லாம் ஒரு சாதாரண குடிமகனை பயமுறுத்துகிறது.

 ஒரு சாதாரண பொது சனத்தை விட கொஞ்சம் அதிகமான பிரபலத்தை உடைய டிவி பிரபலங்களுக்கு இவ்வளவு செல்வாக்கும் உள்ளதென்றால் இதையும் விட மிகப்பிரபலமான சினிமா நடிகர்கள், அதையும் விட அதிக பலமுள்ள அரசியல் கட்சிதலைவர்கள் இவர்களையும் விட பெரும் அதிகார மைய்யங்களான ஜெயலலிதா, கருணாநிதி அவர்களை போன்ற அரசு அதிகாரமுடையோட் அவர்களையும் விட மாபெரும் அதிகாரமய்யமான சோனியா காந்தி அவர்களின் செல்வாக்கும் அவர்கள் அதிகாரமும் அவர்கள் நினைத்தால் என்ன வேண்டுமானாலும் செய்ய இயலுமே. உண்மையில் சொல்லப்போனால் இம்மாதிரி பெரும் அதிகாரம் படைத்தவர்கள் போடும் பிச்சை தான் அவர்களையெல்லாம் விமர்சித்துவிட்டு இன்னமும் நாம் சாதாரணமாக சுற்றி திரிவது...

2) இடஒதுக்கீடு பற்றிய சின்மயியின் புரிதலற்ற கருத்து பரப்பல்.
    இடஒதுக்கீட்டினால் படித்தவனாகிய நான், இடஒதுக்கீடு தொடர்பாக இடஒதுக்கீட்டை ஆதரித்து தொடர்ந்து எழுதியும் பேசிக்கொண்டும் வருபவன், இடஒதுக்கீடு தொடர்பான சின்மயியின் கருத்துகள் மட்டுமின்றி அது தொடர்பான எந்த ஒரு விளக்கத்தையும் பெற்றுக்கொள்ளவும் உரையாடவும் அவர் தயாராக இல்லை, நூற்றுக்கு அருகில் மதிப்பெண் வாங்கியிருக்கும் ஒரு பெண்ணுக்கு மருத்துவ சீட்டு கிடைக்கவில்லை என்று கூறி இடஒதுக்கீடு தேவையா என்று கேள்வியை மட்டும் எழுப்புகிறார் சின்மயி. இடஒதுக்கீடு தொடர்பான ஒரு விவாதத்தை திறப்பவர் அது தொடர்பான ஒரு பார்வையை வைத்துவிட்டு மறுப்புக்கான எந்த இடத்தையும் அளிக்காமல் அந்த விவாதத்தை மூடுகிறார், எது வேண்டுமானாலும் சொல்லட்டும் என்று சொல்லி ஒதுக்கிவிட்டு போக என்னை போன்ற ஒரு சாதாரணன் அல்ல அவர் , எனக்கெல்லாம் வெறும் 400 பேர் டிவிட்டரில் தொடர்கிறார்கள் என்றால் அவரை இலட்சக்கணக்கானவர்கள் தொடர்கிறார்கள், அவர் சொல்லும் செய்தி லட்சக்கணக்கானோரை சென்றடைகிறது. இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை இது சமூக தளத்தில் சிக்கலுக்கு உண்டாக்கும் செயலாகும், இது சமூக தளத்தில் இடஒதுக்கீட்டை பயன்படுத்திய எம்மை போன்றோரை கீழாக பிறரை பார்க்க தூண்டும், இது எம் போன்ற இடஒதுக்கீட்டை பயன்படுத்தியவர்கள் மீதும் இடஒதுக்கீட்டு ஆதரவாளர்கள் மீதும் ஒருவிதமான உளவியல் தாக்குதலை ஏற்படுத்தும்.இது மேலும் மேலும் இடஒதுக்கீடு பற்றிய தவறான பிரச்சாரத்தை முன்னெடுக்கும் வாய்ப்பாக உள்ளது. ஒன்று இம்மாதிரியான விசயங்களில் பிரபலங்கள் விவாதங்களை திறந்தால் அதன் எதிர்கருத்துகளையும் சொல்வதற்க்கு இடமளித்து  தொடர்ந்து நடத்த வேண்டுமோயொழிய நான் மட்டும் எதுவேண்டுமானாலும் சொல்வேன் என்று சொல்லிவிட்டு போவது தவறானது. இடஒதுக்கீட்டுக்கு எதிரான பரப்புரைகளை தொடர்ந்து எதிர்த்து வருபவன் நான். இது

2) இதில் சாதி எங்கே வந்தது?
சின்மயி பல்வேறு இடங்களில் அய்யாங்கார் சாதியை குறிப்பிடும் இடங்களில் Higheyngar என்று குறிப்பிட்டுள்ளார் அது மட்டுமின்றி ஒரு இடத்தில் அவர்களுக்கு இதற்கெல்லாம் நேரமில்லை, அவர்கள் நாசாவில் டாலர்களில் சம்பாதிப்பதில் பிசியாக உள்ளார் என்றும் குறிப்பிட்டுள்ளார். ஒரு பொதுவெளியில் சாதாரணமாக Higheyngar என்று குறிப்பிட்டு பேசுவது பிற சாதிகளை சேர்ந்தவர்களை உளவியல் ரீதியாக தாக்குதலை, உளைச்சலை ஏற்படுத்தும் செயல்.

3) தலித் மற்றும் பிற சாதித்தலைவர்களை விமர்சித்தது
தலித் அரசியலிலும் பிற்படுத்தப்பட்டோர் அரசியலிலும் மிகுந்த ஈடுபாடுடையவன் நான், இது தொடர்பாக தலித் மற்றும் பிறபடுத்தப்பட்ட இயக்கத்தலைவர்களுடன் சில இடங்களில் இணைந்து பணியாற்றியுள்ளேன், பணியாற்றிக்கொண்டுள்ளேன். சாதிய படிநிலை சமூகமான இந்தியாவில் அரசியலானாலும் சரி சமூகமானாலும் சரி சாதியை பிரிக்க முடியாத அளவிற்க்கு உள்ளது. மொழியால் உமக்கு ஏதேனும் மறுக்கப்பட்டால் அந்த மொழியை கொண்டு தான் அதை பெற வேண்டும், மதத்தால் உமது உரிமைகள் மறுக்கப்பட்டால் அந்த மதத்தை அடையாளமாக கொண்டுதான் போராட வேண்டும், அது போல சாதியால் மறுக்கப்படும் உரிமைகளை சாதியாக கொண்டு தான் பெற்றாகவேண்டும், சின்மயி "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்று யாருமில்லை, அரசியல்வாதிகளுக்கு சாதி ஓட்டுக்காக சாதியை வைத்திருக்கிறார்கள் என்று பொருள் பட பேசுகிறார், இதிலும் அதே போல கருத்தை கொட்டிவிட்டு விவாதத்தை மூடுகிறார்...

வர்றார் சண்டியர் என்ற தலைப்பில் ஒருவர் படம் எடுத்த போது வராத எதிர்ப்பும் போராட்டமும் சண்டியர் என கமல் படம் எடுத்த போது எழுந்தது, ஏனெனில் கமலின் ரீச்சும் வீச்சும் அதிகம் அதைப்போலவே எம் போன்ற ஒரு சாதாரணனின் பேச்சை விட சின்மயி போன்ற பிரபலங்களின் பேச்சும் வீச்சும் அதிகம்.

4)மக்கள் ஊடகங்கள் கைவிட்டு போகும் நிலைக்கான எதிர்ப்பு
அச்சு ஊடகங்களும், காட்சி ஊடகங்களும் சினிமா போன்ற மாஸ் மீடியாக்களும் பிரபலங்களுக்காகன ஊடகங்கள், அவர்களின் பேச்சு மட்டுமே அதில் பதிவாகும், அதில் எதிர்தரப்பில் உரையாட கூட எதிட்தரப்பில் பிரபலமானவராக இருந்தாக வேண்டும், ஆனால் இணையம் குறிப்பாக வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவை மக்கள் ஊடகங்களாக இருந்துவருகின்றன, ஒரு சாதாரண வேறு எந்த ஊடகத்திலும் பிரபலமாக இல்லாத ராஜன் லீக்ஸ் போன்றவர்கள் மக்கள் ஊடகத்தில் ஓரளவுக்கு பிரபலங்களுக்கு இணையாக ஃபாலோயர்ஸ்களை பெற முடிந்துள்ளது, ஆனால் இங்கேயும் பிரபலங்கள் மட்டுமே கருத்து சொல்ல முடியும் என்ற நிலை உருவாவது ஆல்டர்நேட்டிவ் மீடியா ஆதரவாளனான, மக்கள் ஊடக ஆதரவாளனான என்னால் சாதாரணமாக ஏற்றுக்கொள்ள இயலவில்லை...

கற்பழிக்கப்பட்ட பெண்களின் கேஸ்கள் பலதும் பெரிய நடவடிக்கை ஏதுமின்றி அப்படியே கிடக்க தமிழகமெங்கும் தினந்தோறும் ஒவ்வொரு குழாயடியிலும் நடந்து கொண்டிருக்கும் ஒரு சாதாரண சண்டை போன்றதொரு வாய்ச்சண்டைக்கு  சிறை அளவு கொண்டு சொல்ல ஒரு பிரபலத்தால் முடியுமெனில் இந்தியாவும் தமிழகமும் பிரபலங்கள் மட்டுமே வாழத்தகுதியான ஊர் தானோ?


நாட்டில் கற்பழிக்கப்பட்ட பெண்களின் புகார்களெல்லாம் அப்படியே கிடக்க சாதாரணமாக பக்கத்து பக்கத்து வீடுகளின்

செலிபிரட்டி அட்ராசிட்டி! - சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்?


நேற்று நான் இந்த ட்விட்டை எழுதும் போது முதலில்  சின்மயி  கூறியதாக "என்னைப் பற்றி ஐந்து பேர் கொண்ட ஒரு குழு அவதூறாகவும், கீழ்த்தரமாகவும் டிவிட்டர், பேஸ்புக் மூலம் பிரசாரம் செய்து வருகிறது" என்ற அளவிலேயே பத்திரிக்கைகளில் வந்திருந்தன, ஆனால் பிறக்கு "சின்மயிக்கு ஆபாச தொல்லை கொடுத்தது இந்த 6 பேர்தான்!", "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்றெல்லாம் ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் பல இலட்சம் பேர் படிக்கும் தட்ஸ்தமிழிலும் வர ஆரம்பித்துள்ளது, செக்ஸ் தொல்லை என்பது மிகப்பெரிய குற்றச்சாட்டு, பேச்சாலோ செய்கையாலோ பாலியல் உறவுக்கு அழைக்கும் செயல் பற்றிய குற்றம்.

இந்த குற்றச்சாட்டு தவறானதாகவோ அல்லது அதிகப்படியானதாகவோ கருதினால் புகார் அளிக்கப்பட்டவர்கள் சின்மயி மீது அவதூறு வழக்கு தொடுக்கலாம்(defamation case).

செய்திகள் எப்படி உருவாக்கப்படுகின்றன என்பதை பற்றி சின்மயியே கூறிய ஒரு டிவிட்டை குறிப்பிட விரும்புகிறேன்.

Chinmayi
@ezharai Someday you ll need to meet an intelligent journalist to tell you how news is made 'newsworthy'

சின்மயின் மேற்கண்ட கூற்றுப்படி ஒரு கோடி பேர் படிக்கும் தினத்தந்தியிலும் மேலும் பல பத்திரிக்கைகளிலும் வந்த "சின்மயிக்கு செக்ஸ் தொல்லை கொடுக்கும் 6 பேர்" என்ற செய்தி எப்படி 'newsworthy' ஆக ஆக்கப்பட்டது?

http://365ttt.blogspot.in/2011/12/famous-tamil-twitter-conversation.html

http://www.rajanleaks.com/2012/03/blog-post.html

சின்மயியின் டிவிட்டை படித்து பாருங்கள் "சோ கால்ட் தாழ்த்தப்பட்டவர்கள்" என்றெல்லாம் பொங்கியிருப்பார்...

இந்த பிரச்சினை பல மாதங்களாக இருந்து வந்துள்ளது, குறிப்பாக ராஜன்லீக்ஸ் க்கும் சின்மயிக்கும் இடஒதுக்கீடு தொடர்பாக கருத்தியல் ரீதியாக கடும் வேறுபாடு இருந்துள்ளது. பல மாதங்களாக இருந்த பிரச்சினைக்கு உடனடியாக அப்போதோ அல்லது அடுத்து வந்த சில நாட்களிலோ மாதங்களிலோ புகார் அளித்திருக்கலாம், அதை செய்யாமல் தற்போது  சின்மயி பணப்பிரச்சினைக்காக ஒருவர் மீது புகார் கொடுக்க சென்றவர் போனதே போனோம் இதுக்கும் குடுத்துடுவோம் என்ற ரீதியில்  புகார் கொடுத்தது மட்டுமின்றி செக்ஸ் தொல்லை என்ற அளவில் ஊடகங்களில் அதை பிரச்சாரப்படுத்தியுள்ளார். குறிப்பாக ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது ஒரு உதவிப்பேராசிரியருக்கு இதில் தொடர்புள்ளது என்று அழுத்தி சொல்லிவைத்தது அவரின் வேலைக்கு வேட்டு வைக்க வேண்டுமென்ற எண்ணத்தில் சொன்னது போலவே உள்ளது.

சின்மயியை பொதுவெளியில் ஆபாசமாக பேசியவர்கள் அதற்கான எதிர்வினைகளையும் குற்றச்சாட்டையும் எதிர் நோக்கித்தான் ஆகவேண்டும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் தங்கள் மீது சின்மயி சாற்றிய குற்றசாட்டை மறுக்கும் பட்சத்திலோ அதிகப்படியான குற்றச்சாட்டு என்று கருதும் பட்சத்திலோ ,

1) சென்னை சைபர் கிரைம் ஒருதலைபட்சமாக ஒரு பக்க குற்றச்சாட்டின் அடிப்படையில் எந்த முடிவையும் எடுக்காது என்றே நம்புகிறேன், எனவே தாமாகவோ அல்லது ஒரு வழக்கறிஞரின் உதவியுடனோ அவர்களுக்கு தகுந்த விளக்கம் அளிக்கலாம்,

2)சின்மயி உங்களை பற்றி தரக்குறைவாக விமர்சித்திருந்தால் அதற்கான ஆதாரங்களுடன் கவுண்டர் ஃபைலிங் செய்யலாம்.சின்மயி பொது வெளியில் பேசிய எழுதிய  பிற கருத்துகள் உங்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியிருந்தால்  அதற்காகவும் கூட புகார் அளிக்கலாம்.

சின்மயி தொடர்பாக என்றில்லாமல் பொதுவாக குறிப்பிடுகிறேன்.

கன்வென்சனல் ஊடகங்களான அச்சு ஊடகங்கள், காட்சி ஊடகங்கள் அனைத்தும் பிரபலங்களுக்கே முக்கியத்துவம் அளிக்கும், அவைகள் பிரபலங்களின் ஊடகங்களாக தான் இருந்ததேயொழிய சாதாரண பொது மக்களின் ஊடகங்களாகஇருப்பதில்லை, இம்மாதிரியான மெயின்ஸ்ட்ரீம் ஊடகங்களில் பிரபலங்கள் ஏதேனும் ஒரு கருத்தை உதிர்த்து விட்டு போய்விடுவார்கள், அதற்க்கு மாய்ந்து மாய்ந்து பொதுமக்கள் யாரேனும் மறுப்பு எழுதினாலும் அவைகள் எதுவும் பிரசுரமாகாது, இணைய ஊடகங்களான வலைப்பதிவுகள், டிவிட்டர், ஃபேஸ்புக் போன்றவைதான் பிரபலங்களையும் பொதுமக்களையும் ஒரே தளத்திற்க்கு கொண்டு வந்தன, இங்கே பிரபலம் என்ற பீடத்தின் மேல் உட்கார்ந்து கருத்து சொல்லிவிட்டு ஓடிவிட முடியாது, பிரபலங்கள் கருத்து உதிர்த்தாலும் அதற்க்கு மறுப்புகள் எதிர்வினைகள் வந்து சேரும். இந்த மனமுதிர்ச்சி அற்ற பிரபலங்கள் மிக மோசமான குற்றச்சாட்டுகளை பல கோடி பேர் படிக்கும் ஊடகங்கள் வழியாக தங்களின் பிரபலத்தை தவறாக பயன்படுத்தி வெளிப்படுத்தினால், அனைவரும் பிரபலங்களின் கருத்துக்கு எதிர்கருத்து சொல்லவோ அய்யோ நமக்கென்னப்பா என்று விலகிப்போகும் வாய்ப்புண்டு, இது  இணையம் என்பது  பொது மக்கள் ஊடகமாக இல்லாமல் கண்வென்சனல் ஊடகங்களை போன்றே பிரபலங்களுக்கான ஊடகமாக மாறிவிடும்.

பிரபல நடிகை குஷ்பு அவர்கள் டிவிட்டரில் இயங்கி வருகிறார், இணைய வெளியில் இயங்கி வரும் அவரை நான் பார்த்த வரையில் யாரும் தரக்குறைவாக விமர்சிப்பதோ பேசுவதோ இல்லை, குஷ்பு மேம் என்றோ குஷ்பு மேடம் என்றோ தான் பலரும் குறிப்பிடுகிறார்கள், அதற்காக குஷ்பு தன் கருத்தை எங்கேயும் வலியுறுத்தாமல் இருந்ததில்லை, தன் கருத்தின் மீதான விமர்சனங்களை இணையத்தில் குஷ்பு எப்படி கையாள்கிறார் என்பதே அவரை குஷ்பு மேடம் என்றும் குஷ்பு மேம் என்றும் அழைக்க வைக்கின்றது, குஷ்பு ஒரு கட்சியில் இருக்கிறார் என்பதால் அல்ல, ஏனெனில் குஷ்புவின் கட்சித்தலைவர் கருணாநிதியை அவரோட ஃபேஸ்புக் இணையப்பக்கத்தில் கடும் விமர்சனங்களை பொழிந்து தள்ளினர் இணைய பயன்பாட்டாளார்கள்.

இணையம் பொது மக்கள் ஊடகமாக இருக்க வேண்டுமா? அல்லது  பிரபலங்களின் ஊடகங்களாக இருக்க போகின்றதா என்பது இந்த கேஸில் ஆரம்பித்து இனி வரும் காலங்களில் தெரிந்து விடும்.

இதுநாள் வரை இதற்க்கு நேரமில்லை, அதற்க்கு நேரமில்லை என்று சாக்கு போக்கு சொல்பவர்களிடமும் சரி பல நேரங்களில் என் மனைவியிடமும் சின்மயியை பார், திரைப்பாடல்கள் பாடுறாங்க, கச்சேரி டிவி நிகழ்ச்சி செய்யாறாங்க,  ஒரு நிறுவனம் நடத்துறாங்க இதோடு வலைப்பதிவும் டிவிட்டரிலும் இயங்குகிறார், சரியாக நேரத்தை முறைப்படுத்தினால் செய்யமுடியும் என்று ஒரு முன்மாதிரியாக மட்டுமே சொல்லிக்கொண்டு வந்திருக்கிறேன், சின்மயின் தொடக்ககால வலைப்பதிவுகளில் நான் ஆதரித்து பின்னூட்டமிட்டுள்ளேன், ஆனால் இப்போது சொல்கிறேன் I HATE YOU CHINMAYI

இணையத்தில் செலிபிரட்டிகளுக்கு கொம்பு முளைத்துவிடவில்லை - பாடகி சின்மயி யின் பரபரப்பு புகார்!

பொதுவில் பேசும் பேச்சுக்கு வரும் பின்விளைவுகளை எதிர்நோக்கும் மனப்பக்குவம் இல்லாதவர்கள், தயவு செய்து பொது இடங்களில் ஆல் இன் ஆல் அழகு ராஜா/ராணி போல கருத்து சொல்வதை தவிர்க்க வேண்டும். பொது இடங்களில் ஒரு அரசியல், சமூக கருத்தை உதிர்க்கும் முன் நூறு முறை யோசித்து செய்ய வேண்டும், பாடகி சின்மயி இடஒதுக்கீட்டு எதிராகவும், ஈழம் பற்றிய சர்ச்சையான கருத்துகளை உதிர்த்த போது அதற்க்கு மிகவும் சாதாரணமாகவும் டீசண்டாகவும் வந்த எதிர்வினைகளை மிக மூர்க்கத்தனமாகவும், மிகுந்த அலட்சியப்போக்குடனும் அதை எதிர்கொண்டார்.  அதை ஒரு உரையாடலாகவோ விமர்சனமாகவோ அவர் கருதவில்லை....

இணையம் ஒரு சுதந்திர பூமி இங்கே, செலிபரிட்டிகளுக்கு கொஞ்சம் கூடுதலாக ஃபாலோயர்கள் இருப்பார்கள் என்பதை தவிர பிரபலங்கள், செலிபரிட்டிகளுக்கு ஸ்பெசலாக இங்கே எந்த கொம்பும் முளைத்துவிடுவதில்லை,  கருத்து என்று எதை உதிர்த்தாலும் சைலண்ட்டாக போகமாட்டார்கள் எதிர்வினைகள் இருக்கும் அதை முறையாக எதிர்கொள்ள தைரியம் இல்லாதவர்கள் பேசாமல் இருக்க வேண்டும்.

பாடகி சின்மயி பற்றி மிகக்கேவலமாக பேசியும் சித்தரித்தும் வந்தவர்களை கடுமையாக எதிர்க்க வேண்டும், எமது கடும் கண்டனங்கள், . சின்மயி புகார் கொடுத்திருப்பதாக வந்திருக்கும் செய்திகளை படித்தால் சின்மயி செகண்ட் ஆஃப்பை மட்டுமே புகாராக தந்துள்ளார், ஃபர்ஸ்ட் ஆஃபை எங்கேயும் சொல்லவில்லை போலும்...

நானும் இணைய ஆபாச சித்தரிப்பில் முன்பு மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தேன், அதன் வலி எமக்கும் தெரியும், சிங்கப்பூரில் பிரபலமாக இருந்த ஒரு சமூக இணையதளத்தில் என் தொலைபேசி எண் கொடுக்கப்பட்டு அதில் நான் பாம்பேவிலிருந்து பெண்களை கொண்டுவந்து தொழில் செய்வதாக மூர்த்தி என்பவன் குறிப்பிட ஒரே நாளில் 200க்கும் மேற்பட்ட போன்கால்கள், எல்லா வித இன(சீன, இந்திய, மலாய்) ஆட்களும் அழைத்து பொண்ணு புரோக்கர் தானே நீ, பொண்ணு இருக்கா, எவ்ளோ ரேட்டு என்று கேட்ட போது அதை என்னால் இயல்பானதாக எடுக்க  முடியவில்லை தான். என் குடும்ப பெண்களின் போட்டோகளை ஆபாச தளங்களில் அப்லோட் செய்யப்பட்டிருந்த போது அதை நீக்க படாத பாடு பட்டேன், கூகிள் சர்ச்சில் ஆபாச போட்டோக்களுடன் எங்கள் போட்டோக்களும் வந்ததை கூகிளுக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பும் அளவுக்கு போக வேண்டியிருந்தது. இதில் சென்னை சைபர் கிரைம் காவல்துறையின் ஒத்துழைப்புடன் ஒரு முடிவுக்கு கொண்டு வந்தோம்.

சின்மயி இப்பிரச்சினையிலிருந்து மன உறுதியுடன் மீண்டு வர விரும்புகிறேன், அதே சமயம் சர்ச்சைக்குறிய கருத்துகளை பொதுவில் உதிர்க்கும் போது  அதன் டீசண்டான எதிர்வினைகளை அதற்குறிய மரியாதையுடன் அலட்சியப்படுத்தாமல் எதிர்கொள்ள வேண்டும், நான் பெரிய அப்பாடக்கர், கருத்து மட்டுமே சொல்லுவேன் எதிர்வினைகள் என் மயிருக்கு சமம் என்ற அலட்சியத்துடன் செயல்படுவது சரியான நிலைப்பாடு அல்ல.

இன்டர்நெட்டில் ஆபாசப் படம் : பாடகி சின்மயி பரபரப்பு புகார்!
http://www.soundcameraaction.com/cinema-news/item/452-singar-chinmayi-files-a-complaint-about-degrading-pictures-on-twitter

சைபர் க்ரைம் போலீசில் புகார் செய்யப்பட்ட பிரபல ட்வீட்டர்கள் விபரம்
http://www.tamilveli.com/v2.0/index.php?itemId=363010


 

அட்டகத்தி - ஒரு தலித்திய கொண்டாட்ட பின்னணி - குழலி


அட்டக்கத்தி  திரைப்படத்தின் பின்னணி ஒரு முக்கிய அரசியலை செய்துள்ளது ஆனால் அட்டக்கத்தி திரைப்படம் பற்றிய  கிட்டத்தட அனைத்து பேச்சுகளும், விமர்சனங்களும், பேட்டிகளும் படம் ஒரு நகைச்சுவையான, லேசான கதையமைப்புடைய ஒரு டைம் பாஸ் படம் என்பதையே வலியுறுத்துகின்றன.

இயக்குனர் இரஞ்சித் தன் படத்தில் செய்துள்ள இந்த அரசியலை கவனிக்காமலேயே போய்விடக்கூடாது.
 
எல்லா கதைகளும் பழைய கதைகளே, புதியதாக எந்த கதையும் திரைஉலகில் வருவதென்பது சந்தேகமே, ஆனால் எந்த கதையையும் அனுபவிக்க வைக்க கூடிய, பொறுந்த வைக்க கூடிய  செயலை செய்வது தேர்ந்தெடுக்கப்படும் கதைக்களனே. அழகி திரைப்படமாகட்டும், பருத்திவீரனாகட்டும் அந்த படத்தின் கதைகளை விட கதைக்களன்களே  அந்த படத்தினை ஒரு அனுபவமாக மாற்றுகின்றது.
 
முதன் முறையாக ஒரு திரையுலக இணையதளத்திற்க்கு கட்டுரை எழுதியுள்ளேன், இந்த கட்டுரையின் மீதியையும் படிக்க கீழுள்ள சுட்டியை அழுத்துங்கள்



திரு.சுப.உதயகுமார் கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சு

கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்ட குழு தலைவர் திரு.சுப.உதயகுமார் அவர்களின் பேச்சு... கைதாக தயாராக இருப்பதாக அறிவித்து பேசிய பேச்சின் கோப்பு...

 ஐ லவ் யூ உதயகுமார் சார்...

 



கூடங்குளம் மக்கள் மீது இந்திய, தமிழக பாசிச அரசுகளின் தாக்குதல் படங்கள்


கூடங்குளம் அணு உலையை எதிர்த்து போராடிய மக்கள் மீது தமிழக மற்றும் இந்திய பாசிச பயங்கரவாத அரசும் அதன் காவல்துறையும் மக்களை தாக்கிய படங்கள்...

முக்கியமான ஊடகங்கள் எல்லாம் அரசுக்கு  மாமா வேலை பார்க்க சென்றதால் சமூக ஊடகங்கள் வழியாக பகிரப்பட்ட போராட்டகள படங்கள் இங்கே...



















சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா மறைவு


பாவாணர் என்னும் போது கூடவே நினைவுக்கு வரும் மற்றொருவரின் பெயர் திரு.கோவலங்கண்ணன். பாவாணரின் நூல்களை ஆதரித்து பாதுகாத்தது மட்டுமின்றி அந்நூல்களை இணையத்திலும் தன் சொந்த கைப்பொருளை செலவு செய்து வெளியிட்டுள்ளார். நேற்று இரவு(14.05.2012) அன்று சிங்கப்பூர் வெ.கரு.கோவலங்கண்ணன் அய்யா அவர்கள் மறைந்துவிட்டார்.

அய்யாவின் இறுதிச்சடங்கு நடைபெறுகிறது. நாளை (16.05.2012) நண்பகல் வரை கீழ் கண்ட முகவரியில் அவருக்கு அஞ்சலி செலுத்தலாம்.


No 10, UBI Road 4,
Teochew Funeral parlour,
singapore 408609

முனைவர் மு.இளங்கோவனின் பதிவு

பாவாணர் இணையதளம்

ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும், தம்பி அண்ணன் ஷாநவாஸ் அழைக்கிறார்


"ஒரு முட்டை பரோட்டாவும் சாதா பரோட்டாவும்"

சாப்பாட்டு இடம் : ஜூராங் நூலகம், சிங்கப்பூர்

சாப்பாட்டு நாள் : ஞாயிறு, பிப்ரவரி 12, 2012