கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா? - உடல் மொழி

கூட்டத்தில் அதிகாரம் மிக்கவர் யார் என கண்டுபிடிக்கனுமா?


ஒரு பிசினஸ் கூட்டம் அல்லது ஏதோ ஒரு கூட்டம் நடக்கிறது, அதில் பலர் கலந்து கொள்வார்கள், இதில் யார் அதிகாரம் மிக்கவர்கள் என கண்டுபிடிக்க வேண்டும். யார் என்ன பொசிஷன் என்று கூட்டத்தில் வெளிப்படையாக சொல்லாத நேரத்தில் யாரை தமது பேச்சால் திருப்தி செய்ய வேண்டும் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.

அதிகாரி அல்லது முடிவெடுப்பவர் வருவார், கூடவே சில அல்லக்கைகள் கூட வருவார்கள், கூட வருகின்ற கைகள் பல கேள்வி கேட்பார்கள், அதிகாரி அமைதியாக இருப்பார், அல்லது அதிகாரி நூறு கேள்வி கேட்பார் அல்லக்கைகள் அமைதியாக இருப்பார்கள்.

ஒரு கூட்டத்தில் ஒருவர் 100 கேள்வி கேட்பார், இன்னொருவர் ஒரே ஒரு கேள்வி கேட்டிருப்பார், நூறு கேள்விக்கு பதில் அளித்து அந்த ஒரே ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளிக்காமல் போய் அந்த கேள்வியை கேட்பவர் முடிவெடுக்கும் அதிகாரியாக இருந்தால் ஆப்பை நாமே தயார் செய்துவிட்டோம் என பொருள்.

அந்த அதிகாரம் மிக்கவரை கண்டுபிடிக்க அவர்கள் கால்களை கவனியுங்கள், யார் கால்மீது கால் போட்டிருக்கிறார்கள் என்று பாருங்கள். அவரோடு கூட வந்த மற்றவர்களையும் பாருங்கள் மற்றவர்கள் கால் மீது கால் போடாமல் இருக்க ஒருவர் கால் மீது கால் போட்டு இருந்தால் அவரை டார்கெட் செய்யுங்கள்(ரெண்டு மூன்று பேர் கால் மீது கால் போட்டிருந்தால் கொஞ்சம் சிக்கல், அதிலும் கண்டுபிடிக்கலாம்) இதில் ஓரளவுக்கு கெஸ் செய்து விடலாம். அடுத்ததாக அவர் நாற்காலியில் உட்கார்ந்திருக்கும் பொசிஷன், நன்றாக நாற்காலியில் விரவி உட்கார்ந்திருப்பார், அவரைவிட அதிகாரம் குறைவாக உள்ளவர்கள் லேசாக குறுகி உட்கார்ந்திருப்பார்கள், பொசிஷன் குறைய குறைய சீட்டு விளிம்புக்கும் அவர்கள் உட்கார்ந்திருப்பதற்குமான இடைவெளி குறைந்து கொண்டே வரும்

0 பின்னூட்டங்கள்: