மகஇக ஏஜென்ட் மருதையன் எத்தனை முறை சிறை சென்றிருக்கிறார்?

மகஇக பொதுத்தளத்தில் யாருக்கும் தெரியுமோ என்னமோ ஆனால் இணையத்தில் வாய்கிழிய பேசும் இயக்கம், பெரியார் திக காரர்கள் மகஇக வோடு சோடி போட்டுக்கொண்டு சுற்றினார்கள், மகஇகவின் பார்ப்பன தலைமை சாயம் வெளுத்ததோ என்னமோ இப்போது முறைத்துக்கொண்டு திரிகின்றார்கள்...

எல்லோரையும் நோண்டு நொங்கெடுக்கும் புனித(?!)மான மகஇக வின் நிரந்தர பொதுச்செயலாளர் மருதையன் அவர்களின் மீது ஒரு சந்தேகம், எந்த மகஇக தோழர்களாவது தீர்த்துவைத்தால் தன்யனாவேன்...

சாதாரண பத்திரிக்கையாளர் நக்கீரன் கோபால் அவரில் ஆரம்பித்து நெடுமாறன், வைகோ, சுப.வீ, கொளத்தூர் மணி என்று நீளுகிற பட்டியல் தமிழர் விடுதலைப்படை மாறன், தமிழர் மீட்சிப்படை முத்துக்குமார் என பெரும் பட்டியல்... அடடே இதென்ன பட்டியல் என்கிறீர்களா? ஆம் இவர்களெல்லாம் பொதுவாழ்வில் அது பத்திரிக்கையாகவோ, அரசியலாகவோ, ஆயுதப்போராட்டமாகவோ என அரசையும் அதிகாரத்தையும் ஏதோ ஒரு காலகட்டத்தில் ஏதோ ஒரு காரணத்திற்காக எதிர்த்து போராடியவர்கள் (உடனே மகஇக தோழர்கள் இவன் இது செய்தான் அவன் அது செய்தான் என்றெல்லாம் பட்டியல் போடவேண்டாம், இவர்கள் அனைவரும் நான் புனிதர்கள் என்று சொல்லவில்லை), இதற்காக இவர்கள் மீது தடா பொடா என ஏகப்பட்ட வழக்குகள், அந்த வழக்குகளுக்காக மாதக்கணக்கில் ஆண்டுக்கணக்கில் சிறையினுள் இருந்தவர்கள்... இன்னமும் ஏகப்பட்ட வழக்குகள் இவர்கள் மீது உள்ளன...

எதற்கெடுத்தாலும் நாங்கள் தான் காவல்துறையின் கடும் அடுக்குமுறையை சந்திக்கிறோம் என்று காவல்துறை தங்களின் க(ன்)ணை தங்கள் பிடறியின் மீது வைத்திருப்பதாக பீலா விட்டுக்கொண்டிருக்கும் மகஇக (இங்கே குறிப்பது மகஇக வின் அடிமட்ட தொண்டர்களையோ அல்லது இடை மட்ட பொறுப்பாளர்களையோ அல்ல அவர்கள் பாவம் பலியாடுகள், மகஇக வின் தலைமையை குறிப்பிடுகிறேன்)

நான் மேலே குறிப்பிட்டவர்களை போல ஏதேனும் மகஇக மருதையன் மீது அரசாங்கத்திற்கு எதிராக போராடி அதனால் சிறைக்குள் மாதக்கணக்கில் ஆண்டுகணக்கில் இருந்திருக்கிறாரா?

1.தோழர் மருதையன் எத்தனை முறை சிறை சென்றுள்ளார்?( ரிலையன்ஸ் போராட்டத்தில் மதியம் அரெஸ்ட் ஆகி மாலை ரிலீஸ் ஆன கதை போன்றல்ல)

2. மருதையன் மீது என்னென வழக்குகள் நீதிமன்றத்தில் உள்ளன?

3. தடா, பொடா, குண்டாஸ், மிசா என்ற வழக்குகள் ஏதேனும் அவர் மீது இருந்தனவா? அல்லது இருக்கின்றனவா? அப்படியெனில் எத்தனை மாதம் உள்ளே இருந்தார்?

4. மகஇக அடிமட்ட தொண்டர்களையே போலிஸ் ஜட்டியோடு அடிப்பதாக பீலா விடும் மகஇக வினர் மருதையன் அது மாதிரி எத்தனை முறை பரேடு வாங்கியிருக்கிறார்?

இந்த கேள்வியை சுத்தி சுத்தி சிலரிடம் விசாரித்தேன்... ம் பதில் கிடைக்கவில்லை, அது தான் இப்போது பதிவில் கேட்கிறேன்... ஒரு வேளை மருதையன் மீது பெரிய வழக்குகள் ஏதுமில்லை, உள்ளேயெல்லாம் போனதில்லை, ஜட்டியோடு அடிவாங்குவதெல்லாம் மகஇக தொண்டர்கள் மட்டும் தானென்றால் மருதையனின் புரட்சி யாரின் தயவில் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்...

செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள் - இன்று VAD fixing அறுவை சிகிச்சை

செந்தில்நாதன் என்னும் சிங்கைநாதனுக்கு இன்று சிங்கப்பூர் நேரம் காலை 8:00 மணிக்கு முதல்கட்டமான VAD fixing அறுவை சிகிச்சை நடைபெற ஆரம்பித்துள்ளது... நேற்று செந்தில்நாதனை சந்தித்தப்போது மிகுந்த நம்பிக்கையுடன் தெளிவாக இருந்தார், 2 வாரங்களுக்கு முன் சந்தித்தபோது இருந்ததை விட தெளிவுடனும் நம்பிக்கையுடனும் இருந்தார்...

இந்த அறுவை சிகிச்சை 8 மணி நேரம் நடைபெறும், செந்தில்நாதன் எப்போதும் எங்களிடம் கேட்டுக்கொள்வது பிரார்த்தனை செய்யுங்கள் என்று... செந்தில்நாதனுக்கு நடைபெறும் இந்த அறுவை சிகிச்சை வெற்றியடைந்து நல்லபடியாக வீடு திரும்ப அனைவரும் செந்தில்நாதனுக்காக பிரார்த்தியுங்கள்...

காசி, தமிழ்மணம், பத்திரப்பதிவு ஊழல், ஈ-கவர்னென்ஸ், உளவு பார்க்கும் அரசாங்கம்

காசி அண்ணன் கொஞ்ச நாளைக்கு முன்பு சில கேள்விகள் அனுப்பி பதிலனுப்ப சொல்லியிருந்தார், நானும் ஏதோ நமக்கும் இன்னும் சிலருக்கும் மட்டும் அனுப்பியிருப்பாரென்று உட்கார்ந்து அனுப்பினால் அண்ணன் 30 பேருக்கு அனுப்பியிருக்கார், இவர் 30 பேருக்கு அனுப்பியது முன்னாலேயே தெரிந்திருந்தால் காசிக்கு தேவையான அளவிற்கு பதில் கிடைத்திருக்குமென டிமிக்கி கொடுத்திருப்பேன்... அப்புறம் சொந்த பதிவிலேயே போட்டுக்கொள்ளுங்கள் என்று வேறு சொல்லிவிட்டார்... சரி அதான் இங்கே

1. இணையத்தில் தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவுக்கு உள்ளன என்ற எண்ணுகிறீர்களா? கணினியும் இணையமும் கிடைக்க வசதியுள்ள தமிழர் இன்னும் இவற்றில் அதிகமாகத் தமிழில் புழங்கவேண்டுமானால் என்னவெல்லாம் செய்யவேண்டும்?

தமிழ் உள்ளடக்கங்கள் தேவையான அளவு இல்லை என்றே கருதுகிறேன், அதிலும் குறிப்பாக புவியியல், தொழில்நுட்பம், அறிவியல் போன்றவைகளில் கடும் வறட்சி நிலவுகிறது, வரலாறு தன்னிறைவடையவில்லையென்றாலும் வரலாறு.காம் போன்ற ஓரிரு தளங்களினால் கொஞ்சமேனும் உள்ளது, அறிவியல் தளத்தில் 12ம் வகுப்பு வரை உள்ள தமிழ் வழி கல்வி அறிவியல் புத்தகங்களில் உள்ளவைகள் கூட இணையத்தில் தமிழில் இல்லை.

தமிழில் தொழில் நுட்பமே இல்லையா என்றால் அது நிச்சயம் தவறு, பாலிடெக்னிக் பாடதிட்டங்கள் எல்லாம் சுரா பப்ளிகேஷன்ஸ் என்ற பதிப்பகம் தமிழில் கொடுத்துள்ளது, லேத் எப்படி வேலை செய்கிறது என்பதிலிருந்து மைக்ரோபிராசஸர் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது, நோக்கியா கைத்தொலைபேசியின் சர்க்யூட்டுகளிலிருந்து கான்க்ரீட் தொழில்நுட்பம் வரை தமிழில் உள்ளது. ஆனால் இவைகள் எல்லாம் இணையத்தில் இல்லை இதற்கு முக்கிய காரணம் தற்போதைய தமிழ் இணைய பயன்பாட்டாளர்களுக்கு இவைகள் எல்லாம் தேவை இல்லை என்பதே...

தமிழ் இணைய பயன்பாடு அதிகரித்து வந்து கொண்டே உள்ளது, ஆனால் அவைகள் செய்திகள், அரசியல்,இலக்கியம் சினிமா கிசு கிசு படிப்பது மற்றும் பலான பலான என்ற அளவிலேயே பெரும்பாலும் உள்ளது. தற்போதுள்ள இணைய பயனாளர்களுக்கு பெரும்பாலும் புவியியலோ, அறிவியலோ தேவையில்லை, அப்படியே தேவை என்னும் போது அவர்கள் எளிதாக ஆங்கிலத்தில் தேடி பார்த்துவிட்டு போவார்கள்.பட்டம் நடிகை, ஒல்லிப்பிச்சான் நடிகர் என்ற கிசு கிசுக்களை எல்லாம் ஆங்கிலத்தில் படித்தால் சுவராசியமாக இருக்குமா? இருக்காது... எனவே சுவாரசியத்திற்காக கிசு கிசுவை தமிழில் தான்படிக்கவேண்டி உள்ளது...

தற்போதைய பெரும்பாண்மை தமிழ் இணையதள பயனாளர்கள் பிழைப்புக்கும் தொழிலுக்கும் ஆங்கிலத்தையும் பொழுது போக்கிற்கு தமிழையும் பயன்படுத்துபவர்கள். எனவே தமிழ் உள்ளடக்கம் இணையத்தில் நிறைய பெருக வேண்டுமெனில் தொழிலுக்கும் பிழைப்புக்கும் தமிழை பயன்படுத்துபவர்கள் இணைய பயன்பாட்டிற்கு நிறைய வரவேண்டும், அப்படி அவர்கள் வரும்போது யாரும் ஒன்றும் கழட்ட வேண்டாம் தானாகவே தமிழில் நிறைய உள்ளடக்கங்கள் வரும்.



2. தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? உ.ம். ஊடாடுதல் (மின்னஞ்சல், குறுஞ்செய்தி, மின்னரட்டை போன்றவை தமிழ் மூலமாக); மின்வணிகம் (வங்கி, இணையக்கடை, கட்டணம் செலுத்தல் போன்றவை தமிழில்); அரசாளுமை (வரிவிதிப்பு, அரசாணை, அரசின் அங்கங்களிடம் தமிழில் சேவை பெறுதல்) இதழ்கள் (செய்தி,இலக்கியம் வாசித்தல், வலைப்பதிவு, குறும்பதிவு, போன்ற வெப் 2.0 ஊடகங்கள் தமிழில்).

தகவல்-நுட்பப் புரட்சியின் முழுப் பயனையும் தமிழர் சமூகம் அனுபவிக்கிறதா? என்றால் இதற்கு ஆம் மற்றும்இல்லை என்ற இரண்டு பதில்களையும் சொல்ல முடியும், இதற்கும் முதல் கேள்வியில் சொன்ன பதிலே, ஆன்லைன் வசதிகளை பயன்படுத்துவர்கள் பெரும்பாலும் சாஃப்ட்வேர் ஆட்களே... இன்னும் இணையம் பலருக்கும் எட்டாகனியாகவே உள்ளது, அப்படியாகும் போது நிச்சயம் கைத்தொலைபேசி பரவலானது போன்ற நல்ல பரவலான பலன் கிட்டும்...


3. தன்னார்வலர்களின் பங்களிப்பும் விக்கிப்பீடியா போன்ற குழுக்களின் பங்களிப்பும் இணையத்தில், கணினியில், தமிழின் பயன்பாடு அதிகரிக்க எந்த அளவுக்கு உதவியுள்ளன? உங்கள் பார்வையில் முக்கியமானவை, மேலும முன்னெடுத்துச் செல்லவேண்டியவை என எவற்றைக்குறிப்பிடுவீர்கள்?

தமிழ் இணைய சமூகத்தில் இது ஒரு வேதனையான விடயம் தான், தமிழக அரசாங்கம் செய்ய வேண்டியதை,பல்கலைகழகங்கள் செய்ய வேண்டியதை இங்கே ஒரு சில தனி நபர்கள் செய்ய முயற்சித்திருக்கின்றார்கள்,தமிழில் எளிதாக தட்டச்சு செய்ய முதலில் முகுந்த் என்ற தனிநபரே ஈ-கலைப்பையின் மூலம் செய்யவேண்டியிருந்தது, கிட்டத்தட்ட இன்று தமிழ் இணையத்தின் வளர்ச்சி என்பது அரசாங்கம்,பல்கலைகழகங்களின் பங்களிப்பில்லாமல் முழுமையாக தன்னார்வலர்களின் பங்களிப்பே, இது மாதிரி இன்னும் நிறைய குறிப்பிடலாம். விக்கிப்பீடியா போன்ற குழுக்களை சரியாக முறைப்படுத்தினால் பரவலான ஆதரவை பெறும்.

சில முக்கிய தேவைகள் வியாபரமாக கூட இங்கே செய்ய இயலாத அளவிற்கு உள்ளது, உதாரணத்திற்கு OCR ஆப்டிக்கல் கேரக்டர் ரீடர் எனப்படும் ஒரு விசயம் தமிழுக்கு மிக முக்கியமான தேவையாக இருக்கின்றது, ஸ்கேன் செய்தவற்றை எழுத்துக்களாக மாற்றும் இந்த வசதி ஆங்கிலம் மற்றும் பல மொழிகளில் இருக்கிறது, ஆனால் தமிழில் இல்லை, இதை ஒரு திட்டப்பணியாக அண்ணா பல்கலை கழகத்தில் ஒருவர் செய்திருக்கின்றார் ஆனால் அதுவும் முழுமையடையவில்லை, இது கிட்டத்தட்ட உவேசாமிநாதர் அவர்கள் செய்தது போன்ற ஒரு விசயம், அவர் ஓலைச்சுவடியிலிருந்து அச்சு ஆக்கினார், இந்த OCR மூலம் அச்சிலிருந்து கணிணிக்கும் மாற்றலாம்.


4. நாளையே அரசின் தகவல்-நுட்பத்துறைக்கு உங்களைத் தலைமையேற்கச் சொன்னால் மேற்சொன்னவகையிலான தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்துக்கான செயல்களாக எவற்றை உடனடியாக மேற்கொள்வீர்கள்?


என்னங்க திடீரென "நான் முதல்வரானால்" என்று சின்னவயசில் கட்டுரை எழுத சொல்வது போன்ற கேள்வியை போட்டுவிட்டீர்.

தமிழ்ப் பயன்பாட்டு விரிவாக்கத்திற்கு செல்லும் முன் வேறு சில விசயங்கள் மிக முக்கிய தேவையாக உள்ளது, அதில் முதலாவது ஈ-கவர்ணென்ஸ், இந்திய மற்றும் தமிழகத்தில் அரசு, தனியார், தனி நபர் என அத்தனையும் ஊழல் மயமான ஒரு இடத்தில் கொஞ்சம் கொஞ்சமாக ஊழல் என்பது திருட்டு என்பதை தாண்டி அடாவடி என்ற நிலையை தொட்டுக்கொண்டிருக்கின்றது, அதில் மிக முக்கியமானது நில ஊழல்கள், பல இடங்களில் ஒரு சாதாரண பொது மக்களின் வாழ்க்கையை சிதைக்கும் அளவிற்கு சென்று கொண்டுள்ளது, இதற்கு முக்கிய காரணம் பத்திர பதிவு அலுவலகத்தில் உள்ளவர்களை கைக்குள் போட்டுக்கொண்டு மூல பத்திரங்களை திருடி அதிலிருந்து போலி தயார்செய்வதில் ஆரம்பித்து ஒரே நேரத்தில் இரண்டு பேருக்கு ஒரே சொத்தை விற்பது வரை நடைபெறுகின்றது... இதில் அமைச்சர்கள் முதல் அல்லக்கைகள் வரை அத்தனை பேரும் ஈடுபடுகிறார்கள், இன்றைக்கு தமிழகத்தை மிகவும் அச்சுறுத்தும் ஒரு மாபெரும் மோசடி இது. காவல்துறை பற்றி சொல்லவே வேண்டாம், காவல்துறையில் ஒரு கைதி தடுத்துவைக்கப்பட்டுள்ளாரா? கைது செய்யப்பட்டுள்ளாரா? தேடப்படுபவர்கள் எந்த குற்றத்துக்காக தேடப்படுகிறார்கள் என்பதிலிருந்து எந்த தகவலும் தெரிவதில்லை,

சென்ற ஆண்டு நடைபெற்ற ஒரு செய்தி சிங்கப்பூரில் ஒருவரை காணவில்லை என்று ஊரில் பதறுகிறார்கள், காணாமல் போன நபரின் சொந்தக்காரர் ஒரு மின்மடல் சிங்கப்பூர் காவல்துறைக்கு அனுப்பிய இரண்டாம் நாள் எந்த குற்றச்செயலுக்காக, எந்த செக்ஷனுக்கா எப்போது எங்கே அவர் தடுத்து வைக்கப்பட்டார் என்ற தகவல்களை அனுப்பி வைத்தார்கள்.. இவைகளையெல்லாம் தெரிந்து கொள்ள பல நேரங்களில் தற்போதுள்ள நடைமுறைகளில் உள்ள தாமதம் பல ஏமாற்று வேலைகளுக்கும் குற்றச்செயலுகளுக்கும் ஒரு முக்கிய காரணம், எனவே பத்திரபதிவு, நீதிமன்றங்கள், காவல்துறை போன்ற அதிமுக்கியமான துறைகளை உடனே கணிணி மயப்படுத்தி அவைகளை பொது மக்கள் பயன்பாட்டிற்கான ஆன்லைன் வசதியும் செய்ய வேண்டும்.

10 மற்றும் 12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு எழுதி, தேர்வு முடிவுகளுக்காக மாலைமலர் பத்திரிக்கை வரும்வரை காத்திருந்து பாஸா பெயிலா என்பதை தெரிந்து கொண்டு அடுத்த கட்டமாக மதிப்பெண் பட்டியல் கையில் வரும்வரை நகம் கடித்திருந்திருக்கிறோம், இன்று பட்டனை தட்டினா பட்டுன்னு மதிப்பெண் பட்டியலையே கொட்டி விடுகிறது...

இந்த ஈ-கவர்ணனெஸ்ல் பல ஆண்டுகளாக வேலை செய்து கொண்டிருப்பதால் இதன் முழுப்பலன் எந்தஅளவிற்கு இருக்கும் என்பதை நேரடியாக கண்டிருப்பதால் இதற்கே முதன்மை, இம்மாதிரியான விசயங்களுக்கு முன்னுரிமை தருவதை விடுத்து தேசிய அடையாள அட்டை அடிப்பதை முக்கியமாக்கிக்கொண்டு திரிகின்றன இந்த அரசுகள், கணிணி மயமாக்கப்பட வேண்டிய பல முக்கிய விடயங்களுக்கு முன்னுரிமை தராமல் தேசிய அடையாள அட்டைக்கு மட்டுமே அலைவது ஒவ்வொரு குடிமகனையும் நன்றாக வேவு பார்க்க மட்டுமே முக்கியமாக பயன்படும், காவல்நிலையத்தில் ரவுடிகளுக்கு ஃபைல் போடப்படுவது போலதான் இதுவும், முக்கியமான சில மாற்றங்களை செய்யாமல் தேசிய அடையாளஅட்டையை வைத்துக்கொண்டு பொதுமக்கள் நாக்கு கூட வழிக்க முடியுயாது.

இவைகள் எல்லாம் பொது மக்கள் பயன்பாட்டிற்கு வரும்போது இதில் தானாகவே தமிழ் வரும்.


5. தமிழ் வலைப்பதிவுகளை பற்றிய உங்கள் பொதுவான கருத்து என்ன? புதிதாக வலைப்பதிக்க வருவோருக்கான யோசனைகளாக எவற்றைக் கூறுவீர்கள்?

ஹா ஹா... தமிழ் வலைப்பதிவுகள் இப்போது வரை நிறைய பொழுது போக்கு, கொஞ்சம் சீரியஸ் என்றுதான் உள்ளது, புதிதாக வலைப்பதிய வருபவர்களுக்கு யோசனை சொல்லுமளவிற்கு ஒன்றுமில்லை, அவரவர்கள் அவரவர்களாகவே இருந்தாலே போதும்


6. தமிழ்மணம் வரும் ஆகஸ்ட் 23ஆம் நாள் தன் சேவையின் ஐந்து ஆண்டுகளை நிறைவுசெய்கிறது. இந்த 5 ஆண்டுகளில் தமிழ்மணத்தின் சேவையைப் பற்றிய உங்கள் கருத்துகள் என்ன? வரும் ஆண்டுகளில் தமிழ்மணம் செய்யவேண்டியவை எவை?

தமிழ்மணத்திற்கு என் வாழ்த்துகள், தமிழ்மணம் இதன் சேவையை பற்றி எழுத வேண்டுமெனில் பக்கங்கள்போதாது, ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கின்றேன், தமிழ்மணம் கிட்டத்தட்ட ஒரு புரட்சியை இணையத்தில் செய்துள்ளது என்றே சொல்லலாம், நான் தமிழ்மணத்தில் இணைந்த போது பதிவுகளின் எண்ணிக்கை 400க்கும் குறைவு இன்றோ 5000க்கும் மேல், தமிழ் இணையத்தில் குழுமங்களின் காலம் அது, அங்கே மாற்று கருத்து என்பதே பெரும்பாலும் இல்லாத நிலை, சங்கராச்சாரியை 'ர்' போடாமல் எழுதினால் மரியாதை குறைவு என்று குழுமத்தை விட்டே வெளியேற்றிய பாசிச நிலையில் ஒரு சாரரின் ஆதிக்கத்தில் இருந்தது, அதை உடைத்தது தமிழ்மணம், பலமுறை தமிழ்மணத்தை உதிர வைக்க பல முயற்சிகள் நடந்த போதும் பல முறையற்ற விமர்சனங்களை தமிழ்மண நிர்வாகத்தை விட தமிழ்மணத்திலிருந்த பதிவர்கள் பதிலடி கொடுத்து முறியடித்தனர் இதற்கு முக்கிய காரணம் தமிழ்மணம் வேறு தாம் வேறு என்று பதிவர்கள் நினைக்கவில்லை, அந்தளவிற்கு தமிழ்மணம் பதிவர்களோடு பிணைந்திருந்தது

தமிழ்மணம் செய்ய வேண்டியவை என்பதை விட தமிழ்மணம் செய்ய தவறியவை என்ன என்று சொல்கிறேன்.. தமிழ்மணத்திற்கு ஒரு மிக அருமையான வாய்ப்பு ஆனால் அதை தவறவிட்டுவிட்டது என்றே சொல்லலாம், தமிழ்மணம் தனியாக வலைப்பதிவுலகில் கோலோச்சிக்கொண்டிருந்த காலத்தில் தமிழ்மணம் ஒரு லீட் ரோல்(தலைமை) எடுத்திருக்கலாம், தனி மனிதனாக காசியிடமிருந்து 15க்கும் மேற்பட்ட இயக்குனர்கள் கொண்ட குழுவிடம் சென்ற போது நிறைய எதிர்பார்த்தேன், இன்னும் சரியாக சொல்வதென்றால் தமிழ்மணம்

ஒரு கட்டத்திற்கு மேல் தேங்கிவிட்டது, தமிழ்மணம் வலைப்பதிவு என்பதோடு மட்டுமின்றி ஒரு மீடியாவாக, ஊடகமாக, இணையத் தலைமையாக உருவெடுக்கும் என்றே எதிர்பார்த்தேன், தனியாக ஓரிரண்டு பேர் நடத்தும் திரட்டிகளாலோ வலைதளாங்களாலோ இது முடியாது, ஆனால் 15 இயக்குனர்கள் இருக்குமிடத்தில் பணம், வேலையை பகிர்ந்து கொள்ளுதல் என்பது சுலபம்( இது சுலபமா, கடினமா என்பது அவரவர்களுக்கு தான் தெரியும், என்றபோதும் இது என் எதிர்பார்ப்பு என்றே கூறலாம்)...

தமிழ்மணம் தவறிய இன்னொரு விடயம், அது தன் வளர்ச்சியில் பெரிய அளவில் கவனம் செலுத்தவில்லை, தமிழ்மணம் கொஞ்சம் கொஞ்சமாக பதிவர்கள் தங்கள் நண்பர்களிடம் சொல்லி அங்கிருந்து அப்படியே வேறொருவருக்கு சொல்லி என்றே பெரும்பாலும் வளர்ந்ததே, இதனால் exponential growth ஆக இருக்க வேண்டிய தமிழ்மணத்தின் வளர்ச்சி gradual ஆக மட்டுமே இருந்தது... வலைப்பதிவுகளை பரவலாக்குவது, வெளியாட்களிடம் கொண்டு செல்வது, புது தன்னார்வ குழுமங்களை உருவாக்குவது, கம்யூனிட்டியாக உருவாகுவது என லீட் ரோல் எடுத்திருக்கலாம், இதெல்லாமே எளிதான விடயங்கள் இல்லை என்றாலும் தமிழ்மணம் செய்திருக்கலாம்.. செய்யக்கூடிய சூழல் அப்போது இருந்தது என்றே சொல்லலாம், ஆனால் இப்போது வலைப்பதிவுலகம் பெரிதாகிவிட்டதும் மற்ற பல அரசியல்களாலும் இதையெல்லாம் இனி செய்ய இயலுமா என்பது சந்தேகமே.

செய்ய தவறியது என்று சொன்னதிலிருந்தே எதையெல்லாம் தமிழ்மணம் செய்ய வேண்டும் என்ற பதிலும் இருக்கின்றது....

வாய்ப்பளித்த காசி அண்ணாவுக்கும், பலரையும் என்னையும் உருவாக்கிய தமிழ்மணத்திற்கும் இத்தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்

பொட்டீகடை சத்யாவின் மாஸ்டர் பீஸ் - முடவனை பகிடி செய்யும் பாம்பு



பொட்டீகடை சத்யா எப்போவாவது எழுதுவான்... சமீபத்திய அவன் பதிவு "முடவனை பகிடி செய்யும் பாம்பு", முதலில் படித்தேன்... கொஞ்சம் பின் நவீன வாடை அடித்த உடன் சரி இதையெல்லாம் அவசரத்தில் படிக்க முடியாது ஆற அமர படிப்போம் என்று....

திரும்ப போய் படித்தேன்... ஆள் தற்போது நிஜத்தில் முட்டியை உடைத்துக்கொண்டு சிகிச்சை எடுத்துக்கொண்டிருக்கான்... அது ஒரு மாஸ்டர்பீஸ் படைப்பை தந்திருக்கு... மாம்ஸ்க்கு முட்டி உடைஞ்சதும் ஒரு நல்லதுக்கோ?

கதை(யா?) படிக்கும் போது ஜெமோ வின் பார்த்தீனியம் படித்தது போல காட்சிகள் கண் முன் விரிந்தன, சத்யா கொஞ்சம் அழுத்தி புடிச்சான்னா சாருவும் ஜெமோவும் கலந்த கலவையாக புனைவிலக்கிய உலகில் வலம் வர வாய்ப்புகள் உண்டு

முடவனை பகிடி செய்யும் பாம்பு படிக்க இங்கே அமுக்குங்கள்

இன்று சுதந்திர தினமாம்!


சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்


44வது பிறந்த நாளை கொண்டாடும் சிங்கப்பூருக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்....

இரண்டு வருசம்தான் அப்புறம் ஊருக்கு போயிடனும் முதல் தடவை வந்த போது சொன்னது, இரண்டிரண்டு வருடங்களாக கடந்து கொண்டே இருக்கின்றன.ஒரு ஒரு வெள்ளியையும் ரூபாய்க்கு மாற்றி கணக்கு பார்த்து செலவழித்தது போய் ஊரில் செலவு செய்யும் ரூபாய்களை வெள்ளிக்கு மாற்றி கணக்கு பார்க்க பழகிவிட்டது மனம்.

பைசா கையில் எதுவும் மிச்சமில்லையே சரி யு.எஸ் ஆவது போகலாம்... ம்...ஏனோ இந்த ஊரைவிட்டு நகர மனமில்லை... முதல் சில முறைகள் ஊருக்கு போன போது அங்கே கால்பதித்தவுடன் ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கும், இப்போதெல்லாம் இங்கே கால்பதிக்கும் போது தான் ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ப்ப்ப்ப்ப்பா என்றிருக்கிறது...

இந்த ஊர், இந்த ஊர் தமிழ், ஒலி96.8, வசந்தம் என கொஞ்சம் கொஞ்சமாக கட்டிப்போட்டுவிடும் ஆட்களை.... இந்த ஊரை விட்டு நகரவிடாது....



பிறந்தநாள் வாழ்த்துகள்... சிங்கப்பூர்...

வெள்ளைக்காரனுக்கும் சிங்களச்சிக்கும் பொறந்த மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன்

மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன் என்றொரு போட்டி விஜய் தொலைக்காட்சியில் நடைபெறுகிறது...

இன்றைக்கு தான் கொஞ்சூண்டு பார்த்தேன்...

பெயர் தான் மிஸ் சென்னை மற்றும் சென்னை மேன், ஆனால் வெள்ளைக்காரனுக்கு பொறந்தவர்களை போல நிகழ்ச்சி முழுவதும் நடைபெற்றது ஆங்கிலத்தில், நிகழ்ச்சி நடக்கும் இடமோ சிங்களக்காரிக்கு பிறந்தது போல இனவாத சிங்களவெறி நாடான இலங்கையின் தலைநகர் கொழும்பில்.

தமிழ் மக்கள் கொல்லப்பட்டு கொண்டிருக்கும் போது Srilanka is amazing என்று ஒரு குட்டி சொல்வதை விளம்பரப்படுத்துவதும், இந்தியாவுக்கும் சிறிலங்காவுக்கும் உறவுப்பாலம் அமைக்கிறார்களாம் இந்த நிகழ்ச்சியின் மூலம்... காசுக்காக எதையும் தின்னும் பொறம்போக்கு நாய்கள்...

மும்பைகாரன் எல்லாம் ஹிந்திகாரன்களை ரவுண்டு கட்டி அடிப்பது சரிதானோ? பின்னே மராட்டிய தலைநகரில் எங்குமே மராட்டி இல்லாமல் ஹிந்தி புழங்கினால் வெறியாக மாட்டானுங்களா?

150 பேரை பாக்கிஸ்தானிலிருந்து வந்த தீவிரவாதிகள் சுட்டு போட்டுடானுங்களாம் அதுக்கும் குய்யோ முய்யோ என்று கூச்சல் போட்டுக்கொண்டு பாக்கிஸ்தானோடு கிரிக்கெட் விளையாட அனுப்பாத இந்தியா இலைங்கைக்கு அனுப்பியது... ஆனால் பல ஆயிரம் தமிழர்களை கொன்ற சிங்கள இனவெறி நாட்டிற்கு கிரிக்கெட் விளையாட மட்டுமல்ல ஹை கிளாஸ் அ...ம் களை உருவாக்கும் அழகி போட்டியும் அங்கே நடத்துவார்களாம், அதை கோயிந்துகளான நாம் பார்க்க ஒளிபரப்புவார்கள்...

என்ன கொடுமை இது...

இங்கே எழுதுவதால் என்ன நன்மைன்னா கேட்கிறீங்க? ஒரு மயிரும் இல்லைதான் வயிற்றெரிச்சலை புலம்பலை கொட்டுவதற்கு ஒரு இடம் அவ்ளோ தான்

திரட்டி நடத்த ஆகும் செலவு கணக்கு மற்றும் சக்திவேல் என்னும் காமெடி பீஸ்

சக்திவேல் என்னும் பதிவர் பதிவுலகின் சமீபத்திய காமெடி பீஸ் என்பது பதிவுலகறிந்ததே, அவரின் (காமெடி)அறசீற்றத்தின் உச்சகட்டமாக நேற்று தமிழ் திரட்டிகளின் மீது ஒரு குற்றச்சாட்டு வைத்திருந்தார்... அது "6. பதிவர்களின் பதிவை மட்டும் வெளியிட்டு பணம் சம்பாதித்து விட்டு மாங்கு மாங்கென்று எழுதும் பதிவர்களுக்கு நயா பைசா தராமல் இருக்கும் திரட்டிகள்."

திரட்டி நடத்த ஆகும் செலவை சக்திவேல் ஏற்றுக்கொண்டால் நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ், திரட்டி.காம் ஆகிய முக்கிய நான்கு திரட்டிகளிடமும் பேசி அவர்களின் மொத்த மாத வருமானத்தையும் சக்திவேலிடம் தரத்தயாராக உள்ளேன்.

சக்திவேல் மட்டுமல்ல, ஏற்கனவே செல்வராஜ் என்பவரும் இதே போல திரட்டி நடத்துபவர்கள் பெரும் பொருள் ஈட்டுவது போன்று பதிவிட்டிருந்தார், அதற்காகவே இந்த தகவல்.

இனி திரட்டி செய்ய மற்றும் நடத்த ஆகும் செலவுகள் கீழே:

One Time Cost (ஒரு முறை ஆகும் செலவு)

ஒரு PC அல்லது லேப்டாம் ரூ. 50,000

திரட்டி சாப்ட்வேர்
(இணையத்தில் ஓப்பன் சோர்ஸ் என்ற முறையில் இது கிடைத்தாலும், அதை அப்படியே பயன்படுத்த இயலாது, பல மாற்றங்கள் செய்ய வேண்டும், இதற்கு ஒரு மாதம் ஆகும், அதாவது 22 Mandays, 1 Manday = 8 Manhours) மொத்தம் (22 X 8 = 176 Man hours) ஒரு Man hour = 15$, 1$ = ரூ. 45 மொத்தம் 176 Manhours க்கு இந்திய மதிப்பில் ரூ 1,18,800

தள முகப்பு வடிவமைப்பு (web page designing) = ரூ 15,000

வருடாந்திர செலவுகள்

தள முகப்பு வடிவமைப்பு மாற்றுதல் = ரூ.15,000

திரட்டியை பிரபலமாக்க செய்யும் விளம்பர செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

போட்டி நடத்துவது மற்றும் இன்ன பிற பரிசு செலவுகள் = ரூ 25,000 - 1,00,000

திரட்டி விடயம் தொடர்பாக பதிவர்கள் மற்றும் பலருடன் தொலைபேசியில் உரையாடுவது = ரூ 25,000 (இந்தியாவிற்குள் என்றால் ரூ 5,000)

புதிய சர்வீஸ்களை உருவாக்குவது(ஒரு மாதம்) = 1,18,000

மாத செலவுகள்

செர்வர் ஹோஸ்டிங்( திரட்டிகளின் பளு கூடுதல் என்பதால் டெடிக்கேட்டர் செர்வர் போக வேண்டும், இது குறைந்தது $100 ஆகும் ) ரூ 4,500

தினம் 2 மணி நேரம் வேலை செய்தல் (பதிவுகளை அப்ரூவ் செய்தல், மின் மடல் அனுப்புதல், தளம் சரியாக வேலை செய்கிறதா என்று பார்த்தல், ப்லாக்ஸ்பாட், வேர்ட்பிரஸ் மற்றும் பல வலைதளங்களின் கோடிங் மாறும் போது திரட்டி கோடிங்கை மாற்றுவது மாதம் 60 மணி நேரம், 1 Manhour = 15$, 1$=Rs45)
மொத்தம் 60 X 15 X 45 = Rs 40,500
(இதில் பொண்டாட்டியுடன் பேசாமல், குழந்தையோடு விளையாடாமல் தினம் இரண்டு மணி நேரம் செலவு செய்து குடும்பத்தில் வசை வாங்கும் கணக்கையும், கணிணி முன் உட்கார்ந்து உடம்பு குண்டடித்தல், கண் பார்வை, முதுகுவலி பிரச்சினைகள் ஏற்படுத்தும் மருத்துவ செலவு கணக்கில் இல்லை)

ப்ராட் பேண்ட் இணைய செலவு மற்றும் மின்சாரம் = 1500

ஆக ஒரு திரட்டியை மாதா மாதம் நடத்த தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 46,500 ஓராண்டிற்கு ரூ 5,58,000

மாத செலவு தவிர்த்து ஓராண்டுக்கு தேவைப்படும் உழைப்பு மற்றும் பணம் ரூபாய் 2,08,000 (விளம்பரம் மற்றும் போட்டி செலவு குறைந்த அளவு கணக்கில் கொள்ளப்பட்டுள்ளது)

ஒரு முறை திரட்டியை நிறுவ எடுக்கும் உழைப்பு மற்றும் செலவு ரூ 1,83,000

ஆக மொத்தம் ஒரு ஆண்டிற்கு திரட்டி நடத்த ஆகும் உழைப்பு மற்றும் செலவு ரூபாய் ரூ7,66,000 மற்றும் One time cost ரூபாய் 1,83,000 ஆக மொத்தம் 9,49,000( ஒன்பது இலட்சத்து நாற்பத்தி ஒன்பதாயிரம் ரூபாய்கள் மட்டுமே)

திரட்டி நடத்துபவர்களில் பெரும்பாலும் கணிணி வல்லுனர்கள் என்பதால் அவர்களின் உழைப்புக்கான பொருள் செலவு சேர்க்காமலும் கூட மாதம் ரூபாய் 6,000(செர்வர் ஹோஸ்டிங் + இணைய மற்றும் மின்சார செலவு) (12 X 6000 = 72,000) மற்றும் ஆண்டுக்கு 70,000 முதல் 90,000 ஆக மொத்தம் ஒன்றரை இலட்சம் ரூபாய் பணமாக செலவு செய்தே ஆக வேண்டும்...

கணிணி வல்லுனர்கள் உழைப்பை சேர்த்தால் கிட்டத்தட்ட ஓராண்டுக்கு ரூபாய் பத்து இலட்சமும், அதை சேர்க்காமல் பணமாக ரூபாய் ஒன்றரை இலட்சமும் செலவு செய்யும் இந்த திரட்டி செலவை அண்ணன் சக்திவேல் எடுத்துக்கொண்டால் ஒவ்வொரு மாதமும் திரட்டிகளுக்கு கிடைக்கும் முழுவருமானத்தையும் அண்ணன் சக்திவேலுக்கு அளிக்க நான் தமிழ்மணம், தமிழ்வெளி, தமிலிஷ் மற்றும் திரட்டி.காம் திரட்டிகளிடம் பேசி வாங்கி தர நான் தயாராக உள்ளேன், அண்ணன் சக்திவேல் இதற்கு தயாரா என்று தெரிவிக்கவும்...

இவ்வளவு பணமும் உழைப்பும் போட்டு திரட்டிகளை ஏன் நடத்துகிறார்கள் என்றால் அது அவர்களின் "நானும் ஏதாவது செய்யனும் என்கிற சுயஅரிப்பு" மட்டுமே, திரட்டி நடத்துவதால் கிடைக்கும் மனதிருப்தி, தமிழ்மணம் காசி, தேன்கூடு சாகரன் என்று கிடைக்கும் பெயர் அதனால் ஏற்படும் திருப்தி மட்டுமே....


திரட்டி கிசு கிசு
திரட்டி நடத்தி நடத்தி அது நடத்துவதற்கான மாத செலவுகளும் உழைப்பும் கை மீறி போவதால் வேறெதிலும் கவனம் செலுத்த முடியவில்லை தன் உழைப்பில் உருவாக்கி சமீபத்தில் அதிக பிரபலமான ஒரு திரட்டியை ஒரு குழுவிடம் ஒப்படைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார் அந்த திரட்டி ஓனர்...

இந்த கிசு கிசுவுக்கான குளூ : அந்த திரட்டி பெயர் இந்த பதிவில் குறிப்பிடப்படவில்லை

தொரையின் துறை பறிபோன கதை சில அரசியல் கிசு கிசுக்கள்

வாரம் இருமுறை பத்திரிக்கைகள், இட்லி வடை போன்றவைகள் எல்லாம் துரையின் துறை போனதைப்பற்றி கிசு கிசுக்கின்றன.

தொரை காலேஜ் கட்டறாரு, தொரை சொத்து சேர்த்துட்டாரு, தொரை நண்பருக்கு சாதகமா நடந்துக்கிட்டாரு இது தான் கம்ப்ளெய்ண்ட் இதனால தான் தூக்கிட்டாங்க என்று புலனாய்வு பத்திரிக்கைகளெல்லாம் பொலனாய்வு செய்து போட்டாங்க, இதற்காகவெல்லாம் நடவடிக்கை எடுக்கனும்னா தாத்தாவும் தாத்தா குடும்பத்து மேலயும் தான் மொதல் நடவடிக்கை எடுக்கனும்னு தெரியாதா என்ன அவிங்களுக்கு, பின்னே தாத்தா குடும்ப சொத்தெல்லாம் தாத்தா கதை வசனம் எழுதி சேர்த்ததா?

தொரைக்கு துறை புடுங்கப்பட்ட விசயம் நடந்ததென்னமோ இப்போதான் ஆனா பூர்வாங்க வேலைகள் ரொம்ப நாளா நடக்குது, அரசியல் வட்டத்தில் இதற்காக கிசுகிசுக்கப்படும் காரணங்கள்

1. தொரைக்கு தலைவர் தாத்தாவா குடிதாங்கியா என்பதில் தொரைக்கும் குடிதாங்கிக்கும் எந்த டவுட்டும் இல்லையாம், ஆனால் தாத்தாவுக்கு நிறையவே இதில் டவுட் உண்டு.

2. தாத்தாவுக்கு பின்னால வாரிசை கவுக்க எதிர் ஆளுங்க போடுற சதுரங்க பிளானில் வாரிசுக்கு ஆதரவா வாரிசின் பின்னால தம் நண்பர்கள் நிற்பாங்க அப்படிங்கற நம்பிக்கை தாத்தாவுக்கு இல்லை, தொரை மேல மட்டுமில்ல, வீரபாண்டி கோட்டையிலே உள்ள சிக்ஸ்பேஸ் மேலயும், பிச்சை, மணியானவர் என பலர் மேலும் நம்பிக்கையில்லையாம்.

3. குடிதாங்கிக்கும் தாத்தாவுக்கும் ஒறவு புட்டுக்கிட்ட போது தொரை பெயரில் வெளியான அறிக்கையில் தொரையோட பெயர் மட்டும் தான் தொரைதாம் மற்றதெல்லாம் யாருடையது என்று சொல்லி தெரியனுமா?

4.கலக்க போவது காமெடியில் டி.ராஜேந்தர் வறுபடுவது மாதிரி தொரையோட மிமிக்கிரியில் அதிகம் வறுபடுவது அப்போதைய 'இளைய'வாம் இளைய தொணை ஆன பின்பும் தொரை மிமிக்கிரியில் தொடருதாம், தொரைக்கு தொணை மேல மரியாதையில்லைங்கறது தொணைக்கும் தாத்தாவுக்கும் வருத்தமாம்

5. தொரையை மட்டம் தட்ட தொரை ஆளுங்களை தொரை ஊருல பதவி கொடுக்காம காலி செய்தார் அப்போதைய இளைய இப்போதைய துணை, தொரை அழுது ஆர்பாட்டம் செய்து திரும்ப வாங்கிட்டாரு, தொரை இல்லாம ஊருக்குள்ள கட்சி நடத்த முடியும்ங்கற நிலை வரும்வரை விட்டு கொடுத்து இப்போ காலி செய்ததாக பேச்சி

6. வீரபாண்டி கோட்டியிலே கொடி நாட்ட போனாராம் இளைய, சிக்ஸ்பேஸ் உடன் முட்டியதில் தொடருந்து நிலையத்துக்கு ஒரு ஆளும் வரலையாம், அப்புறம் தாத்தா ராசியா போக சொல்லியிருப்பதால் அண்ணா தம்பி என்று உருகுகிறார்களாம்

7.சிக்ஸ்பேஸ்க்கும், குடிதாங்கி கட்சிக்கும் நடக்கும் மோதலை உண்மை என்று தாத்தா வீட்டில் இருக்கும் பொடிசு கூட நம்பலையாம்

8. கோல்ட் ஹேர் காரரோட க க கல்லூரியில் பாதி கவிதைக்கு போயிருச்சாம்

9.பன்னீர்சோடா வாசம் வீசும் ஒருவர் காலேஜ் கட்டுறாருன்னு தகவல் போனதாம், என்னதான் மறைத்தாலும் மொத்தமா நூறூ ஏக்கர் வாங்கினா தெரியாதா என்ன? பாதி காலேஜ் போயிருந்தா கூட பரவாயில்லை, முழுசும் கேட்குறாங்களாம்.

10. தாத்தாவோட தொடர்புக்கு இருக்கும் எல்லா பை-பாஸ் வழிகளையும் நேரம் பார்த்து வெட்டெறிந்துவிட்டு தான் மறுவேலையாம், பின்னே நெல்லுக்கு மட்டும் பாயனுமோ இல்லியோ இங்கே வழியில இருக்கிற புல்லு பூண்டுக்கெல்லாம் பாயுதே...

மீள் கவுஜ

மீள் கவுஜ
காத்திருந்தேன் உனக்காக
காதலுடன் வருவாயென
கால்கடுக்க நின்றிருந்தும்
காணவில்லை உன்னை

உனக்காக ஒரு ரோசா
வைத்திருந்தேன் வாடியது
எழுதிவைத்த கவிதையெல்லாம்
எங்கேயோ ஓடியது

எங்கே போனாயென
ஏங்கி இருந்தபோது
ஏக்கம் தீர்க்கவந்தாய்
என்னிடம் நீ கண்ணே!

வாடிய ரோசாவை
வாசமுடன் நான் நீட்ட
வைத்திருந்த ரோசாவை
வான் நோக்கி நீ எறிய
வானரப்படையாக நான்மாறி
அதை பிடிக்க

வழக்கம்போல் வீசினாயே
வசந்தப் புன்னகையை
அதைப்பிடிக்க என்னால்
இயலவில்லை கண்ணே

நீ பேசுவாயென
நான் மவுனிக்க
நான் பேசுவேனென
நீ மவுனிக்க
இருளும் மவுனமும்
இறுகிக் கொண்டிருந்தது

எனக்காக நீபேச
உதடுபிரிக்க
உனக்காக நான்பேச
உதடுபிரிக்க

எழுந்திருடா
மணியேழு
என்றான்
என் அறைத்தோழன்

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே (அ) வேறு மழை

சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
(அ) வேறு மழை
- ஆதவன் தீட்சன்யாவின் கவிதை

மிஞ்சிப்போனா என்ன
சொல்லிற முடியும் உன்னால
இந்த மழையைப் பத்தி

ஓதமேறுன கொட்டாய்ல
கோணில மொடங்கியும்
குளுர்ல நடுங்கியிருக்கியா

உங்கூட்டுப் பொண்டுக
நமுத்த சுள்ளியோட சேந்தெரிஞ்சு
கஞ்சிக் காய்ச்சியிருக்காங்களா
கண்ணுத்தண்ணி உப்பு கரிக்க

ஈரஞ்சேராம எளப்பு நோவெடுத்து
செத்த சொந்தத்த எடுக்க வக்கத்து
பொணத்தோட ராப்பகலா
பொழங்கித் தவிச்சதுண்டா

ஒழவுமாடொன்னு கோமாரியில நட்டுக்க
ஒத்தமாட்டைக் கட்டிக்கிட்டு
உயிர்ப் பதற அழுதிருக்கா உங்குடும்பம்

எதுக்கும் ஏலாம
உஞ்செல்லப்புள்ளையோட
சிறுவாட்டக் களவாண்டு
சீவனம் கழிஞ்சிருக்கா

தங்கறதுக்கு வூடும்
திங்கறதுக்கு சோறுமிருந்துட்டா
சவுரியத்துக்கு எழுதுவியாடா மயிரானே
ஒண்ணு தெரிஞ்சுக்கோ
மழை ஜன்னலுக்கு வெளியதான்
எப்பவும் பெய்யுது உனக்கு
எங்களுக்கு எங்க பொழப்பு மேலயே.
--
ஆதவன் தீட்சண்யா கவிதை

சோதனை

சோதனை

ரேடியோ திரட்டி - இது செம தூளு

ரேடியோ அனேகமாக 30 வயதுக்கு முற்பட்டவர்கள் பெரும்பாலும் ரேடியோவில் பொழுதை கழித்திருக்க வாய்ப்புண்டு, கம்பி வட தொலைக்காட்சிகளுக்கு பின் கிட்டத்தட்ட மறைந்து போன வானொலியை மீண்டும் கொண்டு வந்தது எஃப்.எம்.

உலக அளவில் தமிழில் நிறைய எஃப்.எம். வானொலிகள் உண்டு, அவைகளை தொகுத்து தந்திருக்கிறார் திரட்டி.காம் வெங்கடேஷ்...

அழகான தள வடிவமைப்பு, நிறைய எஃப்.எம். வானொலிகளை இணைத்து அட்டகாசமாக செய்திருக்கிறார்...



இது செம தூளு ... நீங்களும் கேட்டு பாருங்களேன் திரட்டி ரேடியோ

மக்களின் வயிற்றில் மண் அள்ளி போட்ட அதிமுக,பாமக, மதிமுக

இடைத்தேர்தல் என்றாலே சாதாரணமாகவே கொஞ்சம் கூடுதல் கவனிப்பு இருக்கும், திருமங்கலம் இடைத்தேர்தலும் அதைத் தொடர்ந்து நடந்த நாடாளுமன்ற பொது தேர்தலிலும் மக்களுக்கு செம நோட்டு கவனிப்பு நடந்தது.

இந்த நேரத்தில் ஐந்து சட்டமன்ற இடைத்தேர்தல்கள் வரப்போகின்றது என்றதும் நாக்கில் எச்சில் ஊற மக்கள் காத்திருந்த நேரத்தில் அதில் மண் அள்ளி போடுகிற மாதிரி அதிமுக தேர்தலை புறக்கணிப்பதாக சொல்ல அ.தி.மு.க.வை தொடர்ந்து பா.ம.க. ம.தி.மு.க.வும் தேர்தலை புறக்கணிக்கிறது!

ஆளில்லாத மைதானத்துல ஓடி ஓடி கோல் போட திமுகவும் என்ன கேணையா... இந்த இடைத்தேர்தலில் நோட்டு கவனிப்பு குறையுமா? பார்க்கலாம்...

முதலாளித்துவ பயங்கரவாதம். - பு.ஜ.தொ.மு

இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு வேறு... அது கடைசியில்

முதலாளித்துவ பயங்கரவாதம் பற்றிய கூட்டம் சுப. தங்கராசு, பா. விஜயகுமார், பு.ஜ.தொ.மு போன்றோர் நடத்துகிறார்கள்

நாள் : 21 ஜூலை 2009 செவ்வாய்க்கிழமை
நேரம் : மாலை 6.15 மணி
இடம் : கிழக்கு பதிப்பகம் மொட்டமாடி :-)
மேலதிக தகவல்கள் இங்கே
இந்த பதிவிற்கு முதலில் வைத்த தலைப்பு
"என்ன கொடுமை அசுரன் இது?"

சோதனை 1

சோதனை 1

சோதனை

சோதனை

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/

தெனாலி பல்சுவை தளம் - அறிமுகம்

தெனாலி ராமன் ஒரு அதி புத்திசாலியான நகைச்சுவை தூக்கலாக சாதுரியமாக செயலாற்ற கூடிய ஒரு பல்செயல் ஆளுமை...

அந்த தெனாலி ராமன் போன்றே தெனாலி இணைய தளமும்..

தெனாலி தளம் அசத்தலான வடிவமைப்பு, சமூக சிந்தனைகளோடு கூடிய கட்டுரைகள் ஸ்பெஷல்ஸ் பகுதியில்(கண்ணீர் தேசம் போர் என்ன செய்யும், இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்! என செவிட்டில் அறையும் கட்டுரைகள்...)

தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, சினிமா என்ற தலைப்புகளின் கீழ் செய்திகள்...


பிரகாஷ்ராஜ் எழுதும் பெர்சனல் தொடர், திரைப்பட கேலரி , அரசியல் நையாண்டி, ரகசிய தெனாலி(கிசு கிசு??), திரை விமர்சனம் என ஒரு பல்சுவை இணைய தளத்திற்கான அத்தனை அம்சங்களுடன் கலக்கலான தெனாலி தளம்...

பொதுவாக பல்சுவை இணையதளங்கள் தினம் தினம் புதுப்பிக்கப்படாது, ஆனால் தெனாலி தளம் தினம் தினம் நிறைய புதியவைகள் பதியப்படுகின்றன...

உங்களின் படைப்புகளையும் தெனாலிக்கு அனுப்பலாம்...

ஏற்கனவே கலக்க ஆரம்பித்திருக்கும் "தெனாலி" தமிழ் இணையத்தில் ஒரு பெரிய இடத்தை பிடிக்க வாழ்த்துகள்..
http://www.thenaali.com/

தமிழ் விக்கிபீடியா - வருந்துகிறேன்

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை என்று ஒரு பதிவிட்டிருந்தேன், விக்கிபீடியாவில் எமக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவத்தையும் செய்தியையும் சொல்லியிருந்தேன், ஆனால் தமிழ்விக்கிபீடியாவா ஆங்கில விக்கிபீடியாவா என்ற குழப்பத்தில் அது தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்டது போன்ற பொருள் தொனித்துவிட்டது... நான் குறிப்பிட்ட இரண்டும் தமிழ்விக்கிபீடியாவில் ஏற்பட்ட அனுபவம் இல்லை என்பதால் அம்மாதிரி பொருள் தரும் வகையில் எழுதியதற்கு வருந்துகிறேன்...

ஆனால் விக்கிபீடியாவின்(இதில் தமிழும் உண்டு) விதிகள், நடைமுறை பிரச்சினைகள், நிர்வாகியின் கூடுதல் அதிகாரங்கள், எளிதில் குழுக்களால் ஆக்கிரமிக்க படும் அளவிற்கு பலவீனமாக உள்ள விதிகள், குழு பிரச்சினைகள் குறித்தான விமர்சனங்கள் அப்படியே இருக்கின்றன... வேறென்ன விக்கிபீடியா மாதிரி இருக்கிறது காண்பியுங்கள் என்று தான்சொல்ல இயலுகிறதே தவிர இதற்கான களைதலை சொல்ல இயலவில்லை..

ஒரு குழுமம் நடத்துவதோ, ஒரு நிறுவனம் நடத்துவதற்கும் விக்கிபீடியா என்பதற்கும் பெரிய வித்தியாசம் உண்டு, ஒரு செய்தி முரசொலியில் வருவதற்கும் நமது எம்ஜியாரில் வருவதற்கும் தினமலரில், தினகரனில் வருவதற்கும் தினமணியில் வருவதற்கும் அதன் உண்மை தன்மைக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு, முரசொலி, நமது எம்ஜிஆர், தினமலர் இன்ன பிற தாள்களை படிக்கும் போது செய்திகளோடு சேர்ந்து அந்த நிறுவனத்தின் நிலைப்பாடும் அது எப்படி அதன் செய்தி சேவையில் எதிரொலிக்கும் என்பதை அறிந்தே பகுத்துணர்ந்தே படிப்பார்கள், அது போல ஒரு கலைகளஞ்சியம் ஒரு குழுமத்தாலோ ஒரு நிறுவனத்தாலோ நடத்தப்பட்டால் அதன் சார்புகள் நடைமுறைகள் எல்லாம் கணக்கில் கொள்ளப்பட்டே அது படிக்கப்படும் அதன் தாக்கமும் இருக்கும், ஆனால் பொதுப்படையான பெயரில் இயங்கும் (ஆங்கில)விக்கிபீடியா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பக்க சார்புடையதாக இருந்தாலும் reference என்றால் அதிலிருந்தே காட்டுகின்றனர்.

எளிதாக பெறப்படாத நடுநிலைபெயர். எளிதில் கிடைக்காத பொதுவானவை என்ற அங்கீகாரம் விக்கிபீடியாவிற்கு எளிதில் கிடைக்கும் போது அதன் நடைமுறைகள் விதிகள் நிர்வாகி அதிகாரங்கள் எல்லாம் இத்தனை குழப்பமாகவும், எளிதில் குழு ஆக்கிரமிப்புக்குள்ளாகும் வகையிலும் நிர்வாகிகள் நினைத்தால் எளிதில் எதையும் தூக்கலாம்(அப்புறம் போராடி பெற வழி உண்டு என்றாலும்) என்னும் போது நிச்சயம் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இன்று நான் நாளை வேறு யாரேனும் விமர்சனம் செய்வார்கள்.

எனக்கு மின்மடலிலும் பின்னூட்டங்களிலும் மறுமொழிந்த அனைவருக்கும் நன்றி...

இந்தியாவிடமிருந்து சுதந்திரம் வாங்கிய 50 கிராமங்கள்!


ராணுவத்தை அனுப்பி, சொந்த தேசத்து மக்கள்மீதே கொலைவெறித் தாக்குதல் நடத்தும் கொடூரம் ஈழத்தில் நடந்தபோது அதைக் கண்டித்த, கொதித்தெழுந்த மனிதாபிமானிகள் பலர் இப்போது மேற்கு வங்காளத்தில் நடப்பது என்ன என்பதை குறைந்தபட்சம் தெரிந்துகொள்ளக்கூட விரும்பவில்லை. ‘அது மாவோயிஸ்ட் வன்முறை...’ அவ்வளவுதான்! வழக்கம்போல் இந்த இங்கிலீஷ் மீடியா, போர்க்களத்தில் நின்று செய்தி சேகரிப்பது போல சாகசத்தனங்களில் ஈடுபட்டிருக்கிறது. ஏதோ எல்லையில் இந்திய ராணுவமும் பாகிஸ்தான் ராணுவமும் சண்டையிடுவதை வர்ணிப்பது போல் இருக்கிறது அவர்களின் செய்கைகள். லால்கர் என்ற நடுத்தரமான நகரில் இருக்கும் ஆள்நடமாட்டமில்லாத ஒரு போலீஸ் ஸ்டேஷனைப் பிடித்ததும், பரபரப்பான ஃபிளாஷ் நியூஸ்! ஏதோ போரில் சீன வீரர்களை துரத்திவிட்டு சீனப் பெரும்சுவரைக் கைப்பற்றியது போன்ற கூக்குரல்கள்! மாநில முதல்வர் உடனடியாக போலீசுக்கும் துணை ராணுவப் படைக்கும் வாழ்த்துச் செய்தி அனுப்புகிறார். இந்த ஆரவாரங்களுக்கு நடுவே சந்தாலி பழங்குடியினரின் கூக்குரல்கள் யார் காதுகளிலும் விழவில்லை...

மேலும் படியுங்கள் இங்கே அழுத்தி

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

செந்தழல்ரவியிடம் கேளுங்கள்


செந்தழல் ரவி க்கு அறிமுகம் எதுவும் பெருசாக தேவையில்லை, ஜூன் 18, வியாழன் அன்று பிற்பகல் 2.00-4.00 இந்திய நேரத்தில் தமிழ்வெளி தளத்தின் உரையாடியில்(chat) டேட்டா என்ட்ரி மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றி கலந்துரையாடுகிறார்... டேட்டா எண்ட்ரி தொழில் மற்றும் கூகிள் ஆட்சென்ஸ் பற்றிய உங்கள் சந்தேகங்கள், விபரங்களை அவரிடம் கேளுங்கள்...

ஒரு சிலர் ஆக்கிரமித்துள்ள விக்கிபீடியாவை ஏன் நான் ஆதரிப்பதில்லை

விக்கிப்பீடியா என்பது ஒரு ரெஃபரன்ஸ் தளமாக பயன்படுத்தப்படும் அளவிற்கு எதைப்பற்றியும் அதை மேற்கோள் காட்டி சொன்னால் அது சரியானதாக இருக்கும் என்று நம்ப தகுந்த அளவிற்கு செல்வாக்கு செலுத்த கூடிய ஒரு தளம், அப்படியென்றால் அந்த தளம் எத்தனை தூரம் நடுநிலையாக இருக்க வேண்டும்? எத்தனை தூரம் எந்த குழுவின் ஆதிக்கமும், தனி நபர்களின் ஆதிக்கம் இல்லாமல் இருக்க வேண்டும்? ஆனால் அப்படி இருக்கின்றதா தமிழ் விக்கி பீடியா தளம்?

இது பற்றியெல்லாம் எதுவுமே இல்லாமல் விக்கிபீடியா என்பது ஏற்கனவே அதில் உள்ளே புகுந்த ஒரு குழுவின் ஆதிக்கத்தில் இருப்பது மிக மோசமானது...

சில ஆண்டுகளுக்கு முன் விக்கிபீடியாவில் தகவல்களை தேடியபோது அதிர்ச்சியே மிஞ்சியது... உதாரணத்திற்கு பாமக அன்புமணி அவர்களை பற்றி எழுதியிருந்த தகவல் உண்மைக்கு புறம்பானது, அது என்ன தகவல் என்றால் அன்புமணி அவர்கள் ஒரு பிராமண பெண்ணை அந்த பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக கடத்திக்கொண்டு திருமணம் செய்து கொண்டார் என இருந்தது, அன்புமணி ராமதாஸ் அவர்கள் திருமணம் செய்து கொண்டவர் கிருஷ்ணசாமி என்கிற காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரின் மகள், அவர் சிவப்பு நிறமாக இருப்பார் என்பதாலோ என்னவோ அவரை பிராமண பெண், கடத்திக்கொண்டு திருமணம் செய்துவிட்டார் என்றெல்லாம் இருந்தது, இதை நான் திருத்தி விட்டு வந்தால் மறுநாளே என் திருத்தம் அங்கே இல்லை, மீண்டும் பழைய கதையே அங்கே இருந்தது, பிரபலமான அரசியல் வாதி காங்கிரஸ் தலைவர், எம்.பி என்றெல்லாம் இருக்கும் ஒரு அரசியல்வாதியின் மகளை திருமணம் செய்திருந்த போதே இம்மாதிரி செய்திகளை விக்கிபீடியா தளத்தில், அதை மாற்றம் செய்தாலும் மீண்டும் மீண்டும் அங்கே வருகிறது.

பெரியார் பற்றியும் விக்கிபீடியாவில் எழுதப்பட்டிருந்த அவதூறுகளை திரு அவர்களும் அருள் போன்றோரும் மாற்றி மாற்றி எழுதி சலித்தே போய்விட்டார்கள், முதல்நாள் இவர்கள் மாற்றுவார்கள் மறுநாளே இவர்கள் மாற்றியது இருக்காது... காரணம் ஏற்கனவே அதில் உள்ளே புகுந்தவர்களின் ஆதிக்கத்தில் இருப்பதுவே, இன்றைக்கு விக்கிபீடியாவில் சேருபவருக்கு இருப்பதை விட முன்பே அதில் இணைந்தவர்களுக்கு பிரிவிலேஜ் அதிகம் என நினைக்கிறேன்.

டோண்டு போன்றவர்கள் வலைப்பதிவில் விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் மதிவதினையை கடத்தி திருமணம் செய்துகொண்டாரா என்று தானே கேள்வி தானே பதில் போன்ற தம் வலைப்பதிவில் எழுதினால் யாருக்கும் பிரசிச்னையில்லை ஏனெனில் டோண்டு போன்றோரின் பக்க சார்புகளும் விருப்பு வெறுப்புகளும் நன்றாகவே வாசகர்களுக்கு தெரியும், ஆனால் விக்கிபீடியா ஒரு நடுநிலை தளமாக அதை மேற்கோள் காட்டும் தளமாக நம்(இணையத்தில் உள்ளவர்கள்) உழைப்பில் உருவாக்கி அதன் பின் அதில் இம்மாதிரி உண்மைக்கு புறம்பான தகவல்களை திருத்தி எழுதிணாலும் ஏற்கனவே அதில் நடுநிலைதளமாக பெயர் எடுத்துக்கொண்டு ஒரு சிலருக்கு ஒத்த மாதிரியான கருத்துகள் மட்டுமே அதில் வெளியாகும். நாம் எவ்வளவு மாற்றினாலும் மறுநாளே நம் மாற்றம் திருத்தப்படும்.

இது மாதிரியான ஒரு தளத்துக்கு நம் உழைப்பை தர வேண்டுமெனில் அதன் குறைகள், முன்பு சேர்ந்தவன் பின்பு சேர்ந்தவன் என்ற பிரிவிலேஜ், நடுநிலை கட்டுரை என முத்திரை குத்துவதும் பக்க சார்பு கட்டுரை என லேபில் ஒட்டுவதுமான குறைகள் எல்லாம் திருத்தப்படாமல் விக்கிபீடியாவுக்கு ஆதரவு அளிப்பது என்பது மிக தவறான ஒரு தகவலை பரப்புவதற்கு நாமும் காரணமாகிவிடும்.

எனவே தான் ஒரு சிலரின் ஆதிக்கத்தில் இருக்கும் விக்கிபீடியாவிற்கு நடுநிலை பெயர் கொடுத்து, உழைப்பை கொடுத்து அந்த சிலருக்கு சாதகமான கருத்துகளே நடுநிலை கருத்துகள், ரெஃபரன்ஸ் க்கு தகுந்தவை என்று கொண்டு போகப்படும் நிலைக்கு நானும் ஒரு காரணமாக இருக்க விரும்பவில்லை... அதனால் நான் விக்கி பீடியாவை ஆதரிப்பதில்லை...
தொடர்புள்ள பதிவுகள்
கிழக்கு மொட்டைமாடிக் கூட்டம்: தமிழ் விக்கிபீடியா

வலைப்பதிவர்கள் விக்கிப்பீடியாவுக்கு ஆற்றக்கூடிய பங்களிப்புகள்

விடுபட்டவை » இன்று பதிவர்களுக்கான ...

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-ஆகா தலைவர் எதுக்கோ அடிபோடுறார்.

தமிழகமும், தமிழர்களும் புறக்கணிப்படுகின்றனர்-மக்களவையில் திமுக காரசாரம்...

சென்னை: ஈழத் தமிழர்களுக்கு மறுவாழ்வு மற்றும் சம உரிமை கொடுக்க வேண்டும். ஜனாதிபதி உரையில் தமிழ்நாடும், தமிழர்களும் புறக்கணிக்கப்பட்டதாக நாங்கள் உணர்கிறோம் என திமுக எம்.பி. டிகேஎஸ் இளங்கோவன் காரசாரமாக பேசினார்....

தட்ஸ்டமில் செய்தி

உடன்பிறப்பு1: இன்னுமாடா இந்த உலகம் நம்மை நம்புது? கனிமொழி என்னு தமிழச்சிக்கு இன்னும் கேபினேட் அமைச்சர் கொடுக்காமல் தமிழகத்தை புறக்கணிக்கின்றது...

உடன்பிறப்பு2: விடுங்க உடன்பிறப்பே, அதான் தலைவர் கலைஞர் தமிழகத்தை மத்திய அரசு புறக்கணிக்கிறதுன்னு அடி போட்டுட்டாரில்லையா கனிமொழிக்கு கண்டிப்பா கேபினேட் கிடைச்சிரும்

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் தூள் நடிப்பு

தரணி இயக்கத்தில் கலைஞர் கருணாநிதியின் 'தூள்' நடிப்பில் பட்டைய கிளப்பிய நாடகம்... எத்தேச்சையாக பார்த்தபோது அசந்துவிட்டேன், 'தூள்'படம் எடுக்கப்பட்டு வெளிவந்த‌ போது இந்த காட்சியை கடுமையாக விமர்சித்தேன், இது தமிழ் உணர்வாளர்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்துவது போன்றது என்று நண்பர்களிடம் பேசும்போது பகிர்ந்து கொண்டேன்... தரணி இயக்கட்தில் தூள் படத்தில் வந்தது ஃப்ரேமுக்கு ப்ரேம் வரிக்கு வரி, வசனத்துக்கு வசனம் அப்படியே கலைஞர் கம் நடிகர் கருணாநிதி நடித்ததில் அப்போது நான் தரன் மீது வைத்த விமர்சனத்தை திரும்ப பெற்றுக்கொண்டு மிகச்சிறப்பாக என்ன நடக்கும் என்பதை அன்றே படமெடுத்த தரணி பாராட்டுகிறேன்...

மைடியர் உடன்பிறப்பு பிரியாணி குஞ்சுகள் இதை பார்த்துவிட்டு என்னை திட்டுவதற்கு பதில் அறிவாலயத்தில் மொத்த குடும்பத்தினரும் தின்றுவிட்டு துப்பிய மிஞ்சிய எலும்பு துண்டை பொறுக்க ஓடவும்

சாருவின் பின்புறத்தில் முள்கம்பி ஏற்றப்படும் போதும்

வாசிப்பு அனுபவம் என்பது வாசிப்பு பயங்கரமாகிவிடக்கூடாது என்பதற்காக இந்த பதிவின் தலைப்பு சாருவின் சூ..வில் முள்கம்பியை ஏற்றினாலும் என்று வைக்கவில்லை.

சாரு என்கிற அறிவுஜூவி எழுத்தாளனின் வன்முறையின் தோல்வி என்ற கட்டுரை படித்தேன், அகிம்சை காந்தி கன்றாவி என்று என்னென்னமோ சொல்கிறார்... எங்களுக்கு வேலையின் போது சொல்லப்படும் பாடம் கஸ்டமர் ஷீவில் இருந்து பார், சரி மாய்ந்து மாய்ந்து இதற்கு மாற்று எழுதுவதை விட ஈழத்தமிழனின் இடத்தில் சாருவை வைத்து பார்த்தேன்...

படங்களை வெட்டி ஒட்டுவதில் எமக்கு அவ்வளவாக என்ன சுத்தமாவே வராது என்றாலும் ஏதோ சும்மா சாருவை ஈழத்தமிழன் இடத்தில் ஒட்டி வச்சிருக்கேன்...



தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் - கருணாநிதி



"தமிழ்நாட்டில் மீண்டும் ஆரியர் -திராவிடர் போராட்டம் ஆரம்பித்துள்ளது நாங்கள் சிப்பாய்களாக இருந்து அவர்களை எதிர்கொள்வோம்" என்று கருணாநிதி தெரிவித்தார்.





உடன்பிறப்பு: என்ன தலைவா இப்போதானே தேர்தல் முடிந்தது, இனி அடுத்த தேர்தலுக்கு தனே ஆரிய திராவிட போரெல்லாம்

ஓ டில்லி அமைச்சரவை பிரச்சினையா?

விடுங்க விடுங்க தலைவா. அதான் சூத்திரர் தயாநிதி மாறன், சூத்திரர் அழகிரிக்கு மந்திரிபதவி கொடுத்தாச்சே, மிச்ச ஆரிய-திராவிட போராட்டத்தை பிறகு பார்த்துக்கலாம் ஓஓ சூத்திரர் கனிமொழிக்கு கேபினேட் தரலைங்கற கோபமோ? இப்போ பாருங்க தலைவா, ஏ பார்ப்பனர்களே, பார்ப்பன அடிவருடிகளே, ஆரிய-திராவிட போர் தமிழ்நாட்டிலே, சூத்திரனுக்கு கேபினேட் இல்லையா? எப்புடி தலைவா ஓகே வா?

சூத்தை பிளந்து



இந்தியாவின்
இறையாண்மையும்

இலங்கையின்
இறையாண்மையும்

காப்பாற்றப்பட்டது

ஈழக்குழந்தையின்
சூத்தை பிளந்து

பிராந்தியில் வீசும் ரத்த வாசனை

நேர்மையான வாக்காளன் நான்
வாங்கின காசுக்கு
வாக்களித்தேன்

குவார்ட்டர் குமட்டியது
எப்போதும் அடிக்கும்
புழுத்த வீச்சமல்ல அது
வேறு ஏதோ ஒன்று!

அரை முட்டையில்
முழு குவார்ட்டர்
அடிப்பேன், இன்றைக்கு
வீச்சம் அதிகமாக உள்ளது

வீச்சம் குறைக்க
பிரியாணி சோத்தை
உள்ளே தள்ளினேன்

பிரியாணியில் தட்டுப்பட்டது
தொடை பீஸ்
கடித்து பார்த்தேன்
கோழியா? கெளதாரியா?

அய்யோ பிரியாணியில்
ஈழத்தமிழ் பிஞ்சின்
தொடை பீஸ்

அப்போ
குவார்ட்டர் பிராந்தியில்?
வீசும் வீச்சம்?
ஈழத்தமிழனின் ரத்த வாசம்

காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

அந்த பிரியாணியில்
எந்த பிஞ்சின்
தொடை பீசோ
அந்த பிராந்தியில்
எவன் ரத்த வாசனையோ



காத்திருக்க வேண்டும்
ஓசி பிராந்திக்கும்
ஒரு பிளேட் பிரியாணிக்கும்
அடுத்த தேர்தல்வரை

ஈரோடு கணேசமூர்த்தி மீது கொலைவெறி தாக்குதல்

ஈவிகேஎஸ்.இளங்கோவனை தோற்கடித்த கணேசமூர்த்தி அவர்களின் மீது ஈவிகேஎஸ்.இளங்கோவனின் மகன் குடித்து விட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளார், கணேசமூர்த்தி கைகள் முறுக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்ந்து பின் வெளியேறியுள்ளார்... இந்த செய்தி இன்னும் ஊடகங்களில் வெளிவராதது ஆச்சரியம்

திமுக-காங்கிரசுக்கு தமிழக மக்கள் அங்கீகாரம்

நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் திமுக-காங்கிரசுவின் சாதனை செயல்களை தொடர சொல்லி தமிழக மக்கள் அங்கீகாரம் அளித்துள்ளனர். வாழ்க தமிழினம்


பணமா? ஈழமா? மற்றும் சில தொகுதி நிலவரங்கள்

தற்போது வாக்கு பதிவு நடைபெற்று கொண்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பணமா? ஈழமா? என்ற அளவில் போட்டி, ஈழம் அதிக அளவில் தாக்கத்தை உருவாக்கினால் திமுக-காங்கிரஸ் மொத்தமாக ஊத்திக்கொள்ளவும் வாய்ப்புள்ளது... பணம் அதிகமென்றால் அதிமுக கூட்டணியின் வெற்றி தொகுதிகள் குறைய வாய்ப்புள்ளது, யார் மீதும் நம்பிக்கையில்லாமல் 49ஓ போடுவதும் நடக்கிறது எனக்கு முன் வரிசையில் நின்றிருந்தவ்ர் 49ஓ போட்டார்.

போட்டி மிக கடுமையாக உள்ளது, பெரும்பாலான தொகுதிகள் கணிக்க இயலாததாகவே உள்ளது, பத்தாயிரத்துக்கும் குறைவான வாக்குவித்தியாசம் என்பது 4 கிளை செயலாளரோ, ஒரு நகர செயலாளரோ கவிழ்த்துவிட்டாலே தொகுதி கை மாறிவிடும் என்ற நிலையில் கணிப்பு தப்பி போக நிறைய வாய்ப்புகள் உண்டு.

மிககுறைந்த வாக்குவித்தியாசம் என்றாலும் சில தொகுதி நிலவரங்கள் கீழே... ஒவ்வொரு தொகுதிக்குட்பட்ட சிலரிடம் பேசியது, பழைய புள்ளிவிபரங்கள், தொகுதி மறுசீரமைப்பு, கூட்டணி, ஈழம், பணம், உள்ளூர் மற்றும் உள்குத்து அரசியல் என பல விசயங்களை கொண்டே இது தனிப்பட்டு என்னால் கணிக்கப்பட்டுள்ளது. வரும் ஆனா வராது என சொல்ல விரும்பவில்லை, ஒரு ஓட்டு வித்தியாசமென்றாலும் இது தான் என்று சொல்லவே விரும்புகிறேன், எல்லா கணக்கும் 16ம் தேதி நண்பகலுக்கு முன்பே தெரிந்துவிடும்.

வட சென்னை - தா.பாண்டியன்

மத்திய சென்னை - தயாநிதி மாறன்

தென்சென்னை - சிட்லபாக்கம் ராஜேந்திரன்

காஞ்சிபுரம் - டாக்டர் ராமகிருஷ்ணன்

ஸ்ரீபெரும்புத்தூர் - ஏ.கே.மூர்த்தி
எல்லாவற்றிலும் சம வலுவிருந்தாலும் மத்திய தரவர்கத்திடமும் மிடில்கிளாஸ் பெண்களிடமும் மூர்த்தி எடுத்துள்ள நல்ல பெயர் வெகுசில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை படுத்தும்.

விழுப்புரம் - ஆனந்தன்
வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கட்சி பாகுபாடின்றி தலித் மற்றும் தலித் அல்லாதோராக சாதியாக பிளந்துள்ள தொகுதி விடுதலை சிறுத்தைகளுக்கு பாதகமாக உள்ளது.

பாண்டிச்சேரி - நாராயணசாமி
வாக்குவித்தியாசம் 20 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும், கூட்டணி பலம் மற்றும் எல்லாம் பண மயம். ஈழப்பிரச்சினை இங்கு நன்றாக எடுபட்டிருந்தாலும் அதையெல்லாம் ஓட்டாக்குமளவுக்கு பாமகவிற்கு பலமான கட்டமைப்பு மற்றும் கூட்டணி அதிமுகவுக்கு செல்வாக்கு இல்லாததே காங்கிரசை போட்டு பார்க்க இயலாமல் உள்ளது.

கடலூர் - எம்.சி.சம்பத் (விஜயகாந்த் கட்சி சுமாராக ஒரு இலட்சம் வாக்குகளை பெறும்)வாக்குவித்தியாசம் 30 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும்

சிதம்பரம் - கணிக்க இயலவில்லை
வாக்கு வித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் குறைவாக இருக்கும், தொகுதி மறுசீரமைப்பில் விடுதலை சிறுத்தைகளின் வலுவான மங்களூர், காட்டுமன்னார்கோவில் தொகுதியில் பாதி இவை களுக்கு பதில் பாமக வலுவான ஜெயங்கொண்டமும், அரியலூரும்(இங்கே சிறுத்தைகளும் வலுவானநிலையில் உள்ளார்கள்), குன்னம் சிதம்பரம் தொகுதியில் வந்திருப்பது, கட்சி வித்தியாசமில்லாமல் சாதியால் தொகுதி பிளவுபட்டுள்ளதும் திருமாவிற்கு பாதகமான அம்சங்கள்.

அரக்கோணம் - ஜெகத்ரட்சகன் / ஏ.வேலு - கணிக்க இயலவில்லை

கள்ளக்குறிச்சி - தன்ராஜ் வாக்குவித்தியாசம் 10-15 ஆயிரம், கொமுபே வின் புண்ணியம் கொஞ்சம் தன்ராஜை முன்னிலை படுத்தும்.


திருவண்ணாமலை - வேணுகோபால், வாக்குவித்தியாசம் 10 ஆயிரத்துக்கும் மேல் இருக்கும் குருவின் நல்ல(?) பெயரும் வேணுகோபாலின் நல்ல பெயரும் என்ற பரப்புரை வேணுகோபால் முந்த முக்கிய காரணியாக இருக்கும்

தர்மபுரி ‍- டாக்டர் செந்தில்

போடுங்கய்யா ஓட்டு ரெட்டெலைய பார்த்து...

தேர்தல் என்றால் வாக்காளர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் ஜாலியோ என்னமோ சிறு வயதிலிருந்தே அரசியல் ஆர்வத்தோடு இருக்கும் எனக்கு எப்போதும் குஜாலாக இருக்கும், ஒரு கிரிக்கெட் போட்டியை பார்ப்பது போன்று பத்திரிக்கைகள் படிப்பது, நண்பர்களுடன் அலசுவது, கருத்து கணிப்பு செய்வது என்று ஒரு சுவாரசியமான விசயமாகவே இருந்தது... வலைப்பதிவு எழுத ஆரம்பித்த பின் தளம் இன்னும் விரிவானது, கடந்த சட்டமன்ற தேர்தலில் நிறைய பதிவுகள் தொகுதி நிலவரங்கள் என்று பதிவு செய்திருந்தேன்...

மும்பையில் தீவிரவாதிகள் தாக்கிய அன்று சில மணி நேரங்களில் அந்த செய்திகளை முதலில் வலைப்பதிவுகளில் பார்த்து அதன் பின் இணையத்தில் செய்திகளை தேடினேன், பின் நேரமாகிவிட்டது என தூங்க சென்றுவிட்டேன் காலையில் பார்த்துகொள்ளலாமென்று, பெரிய அளவில் எந்த விதமான பதட்டமோ பதைபதைப்போ எனக்கு இல்லை, அது எனக்கு மற்றுமொரு வருந்த வைத்த செய்தி என்பதை தவிர இந்தியா என்றோ உணர்வுப்பூர்வமாகவோ அது எனக்கு இல்லை.

கிளிநொச்சி முற்றுகை நிலைமை மோசம் என்று உறுதியாக படித்த அன்று இரவு தூக்கமே வரவில்லை அதிகாலை வரை ஒரு ஒரு இணைய தளமாக தேடுகிறேன், அதிர்ச்சியோடும் துக்கத்தோடும் அடுத்த சில நாட்கள் இதே விசயங்களை தேடிக்கொண்டே இருந்தேன், தூக்கம் வரவில்லை, உணவும் இறங்கவில்லை... அன்று ஆரம்பித்தது இன்று வரை தூக்கத்தில் இருந்து அவ்வப்போது விழித்துகொள்வது என நிம்மதியாக தூங்கி பல நாட்கள் ஆயிற்று.

மும்பை தாக்குதல் உணர்வுப்பூர்வமாக என்னை பாதிகவில்லை ஆனால் ஈழம் உணர்வுபூர்வமாக பாதித்துள்ளது இந்திய தேசியம் பற்றி மிக கடைசியாக எஞ்சியிருந்த குழப்பத்தையும் தீர்த்துவைத்தது.

தேர்தல் அறிவுப்புகள் கூட்டணி கூத்துகள் என அல்லோகலப்பட ஆரம்பித்தும் இதில் மனம் ஒட்டவில்லை, தேர்தல் கணிப்புகள் எழுத முக்கியமான அடிப்படை தேவை நாம் எந்த கட்சி வெற்றி பெறவேண்டும் என நாம் நினைப்பதை கணிப்பாக திணிக்க கூடாது, தேர்தல் கணிப்பு எழுதுவது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல. அது ஒரு பக்குவமாக செய்யப்படவேண்டிய கலை முந்தை தேர்தல் புள்ளிவிபரங்கள், கட்சி உள்ளூர் நிலவரங்கள், சாதி, படிநிலை சாதி உருவாக்கிய சமூக தாக்கங்கள், சாதி மத சமூக முரண்கள், என ஏகப்பட்ட விசயங்கள் உள்ளன, இம்முறை தொகுதி மறுசீரமைப்புஅதனால் குறிப்பாக மிக நன்றாக தெரிந்த தொகுதிகள் தவிர மற்ற தொகுதிகளுக்கு கணிப்பு எழுதுவது "வரும்.... ஆனா வராது..." மாதிரிதான்....

1991,1996 சட்டமன்ற தேர்தலில் தனியாக நின்று சில ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயங்கொண்டத்தில் தோற்ற பாமக இரண்டாம் இடத்தை பிடித்தது, வெற்றிக்கு வெறும் ஓரிரு ஆயிரம் வாக்குகள் மட்டுமே தேவைப்படும் நிலையில் 2006ல் திமுக கூட்டணியோடு நின்ற போதும் சில ஆயிரம் வாக்குகளில் பாமகவுக்கு மீண்டும் தோல்வி ஏன்? 1999 பாராளுமன்ற தேர்தலில் தொல்.திருமா என்ற வலுவான வேட்பாளரை எதிர்த்து 65ஆயிரம் வாக்குகள் விருத்தாசலம் சட்டமன்ற தொகுதியில் பெற்ற பாமக 2001 சட்டமன்ற தேர்தலில் வென்ற போதும் 48 ஆயிரம் வாக்குகளே பெற முடிந்தது ஏன் என்று அலசினால் அது வெறும் கூட்டல் கழித்தல் கணக்கு மட்டுமல்ல, சாதிபடிநிலை இந்த சமூகத்தில் எவ்வளவு தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்பது புரியும்.

2001 தேர்தலில் குறிஞ்சிப்பாடியில் பாமக அதிமுக கூட்டணியில் இருந்த போது திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களிலேயே மிக அதிக வாக்குவித்தியாசத்தில் வெற்றி பெற்றவர் அந்த நேரத்தில் மாநிலமெங்கும் திமுக தோல்வியடைந்திருந்தது, ஆனால் 2006ல் திமுக கூட்டணி மாநிலமெங்கும் வெற்றி பெற்ற போதும் பாமக திமுக கூட்டணியில் இருந்தும் திமுக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வெறும் இரண்டாயிரத்து சொச்சம் வாக்குகள் வித்தியாசத்திலே தான் வெற்றிபெற்றார். இதை ஏன் என்று நோண்டினால் உள்குத்து அரசியல், சொந்த சாதிகாரர்களிடம் சம்பாதித்த வெறுப்பு என எக்கச்சக்கமாக வெளிப்படும்.

நாகர்கோவில் பாராளுமன்ற தொகுதியில் 1996ல் கூட்டணியில்லாமல் பாஜக வெறும் 10,000 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, 1998ல் எல்லோரும் பாஜகவெற்றி என்று கணித்த போதும் நாகர் கோவிலில் அதிமுக கூட்டணி இருந்தும் அதே 10,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றது, இதையும் நோண்டி பார்த்தால் மதப்பிரச்சினை புரியும்.

குறைந்தபட்ச புள்ளிவிபர அலசல், அரசியல் மற்றும் சமூகத்தின் நிகழ்வுகள் ஏற்படுத்தும் மாற்றங்களை தொடர்து நோக்குவது என்று கூட இல்லாமல் டேபிள் கருத்துகணிப்புகள் எழுதிய சிலரின் பதிவுகளை பார்த்தபோது எழுத வேண்டும் என்று கை அரித்தது என்றாலும் ஈழ வேதனையில் தேர்தல் கும்மிகளில் நாமும் கலந்து கொண்டு ஈழவேதைனையை மறைக்க என்பதிவுகளும் உதவ வேண்டாமென தொடர்ச்சியாக ஒதுங்கியே நின்றேன்.

சென்ற சட்டமன்ற தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் அதிமுகவை விட திமுகவே மேல் என்று திமுக கூட்டணி வெற்றிபெற வேண்டுமென விரும்பி அதை ஆதரித்து பதிவுகளும் பலரிடம் தொலைபேசி திமுக கூட்டணிக்கு வாக்களிக்க கேட்டுக்கொண்டேன், சட்டமன்ற தேர்தலில் திமுக ஆட்சியின் முதல் இடியாக

நடைபெற்ற உள்ளாட்சி மன்ற தேர்தலில் அதிமுக முன்பு செய்தது போன்றே திமுக செய்த அடாவடி ரவுடியிசம், அதை தொடர்ந்து மாமன் மச்சான் குடும்ப பிரச்சினையில் அதிமுகவினர் தர்மபுரிவாலாபாக் படுகொலை போலவே மதுரையில் அப்பாவிகள் மூன்று பேரை எரித்து கொன்றது என திமுக தாம் அதிமுகவை விட எந்த விதத்திலும் வித்தியாசப்படவில்லை என்று காட்டியது.

சீமான், கொளத்தூர்மணி போன்றோரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ளி தமக்கு எதிராக கருத்து சொல்பவர்களை கைது செய்யும் பாசிச போக்கை கடைபிடித்து ஜெயலலிதாவிற்கும் தமக்கும் எந்த வித்தியாசமுமில்லை என்று காட்டினார் கருணாநிதி.

முத்துக்குமார் செந்தழலில் வெந்து போனதை கூட தம் ஊடக வலிமையால் மறைக்க முயன்றதும் இன்றைக்கு ஈழப்பிரச்சினை தேர்தல் பிரச்சினையல்ல என்று இன்றும் தன் அடிபொடி ஜால்ராக்களின் மூலம் முழுங்குவதும் ஈழ எழுச்சியை ஒடுக்க முயல்வதும் திமுகவிடம் எதிர்பாராத ஒன்று.

சமீப காலமாக ஜெயலலிதாவின் ஈழ ஆதரவும் கோத்தாபய ராஜபக்சே, கபில்சிபிலுக்கு கொடுத்த மறு அடி பதில்களையும் ஜெயலலிதாவின் தேர்தல்கால நாடகமாக எடுத்து கொண்டாலும் கருணாநிதியின் கபட நாடகங்களும் ஒன்றுக்கொன்று சளைத்தவையல்ல.

எது எப்படியாயினும் தேர்தலுக்காகவேனும் ஈழ ஆதரவு பேச்சு பேச வேண்டுமென்ற நிலை எல்லோருக்கும் ஏற்பட்டது மிக்க மகிழ்ச்சியே. அதிலும் குறிப்பாக ஜெவின் ஈழ ஆதரவு பேச்சு அதன் தொடர்ச்சியாக

தேர்தல் கள நிலை முழுக்க ஈழத்தை மையம் கொண்டது தமிழின அரசியலை ஒதுக்கிவிட்டு எதுவும் இல்லை என்பதை உறுதி செய்துள்ளது.

அதிமுகவை விடுத்து தமிழின அழிப்பை மேற்கொண்டு வரும் சிறிலங்கா அரசிற்கு ஆதரவும் உதவியும் தரும் காங்கிரஸ் கட்சியை தன் தோள்மேல் தாங்கிக்கொண்டு தமிழின எழுச்சியை அடக்க முயலும் திமுகவை ஆதரிக்கும் அளவிற்கு திமுக எந்த விதத்தில் அதிமுகவை விட மேலானதாக இல்லை... சமதூரத்தில் இரண்டும் இருக்கும் போது தற்போது காங்கிரசை ஆதரிக்காத அதிமுக கூட்டணியை தேர்ந்தெடுக்கும் நிலை.

மேலும் திமுக-காங்கிரஸ் கூட்டணிக்கு கிடைக்கும் படுதோல்வி தமிழின அரசியலை முன்னெடுக்காததற்கு ஈழப்படுகொலைகளை நிறுத்தாததற்கு கிடைக்கும் தண்டனையாக அமையும்.


இன்றைய நிலையில் ஈழம் விசயத்தில் காங்கிரஸ் என்பது கோப்பை முழுக்க நிரம்பிய விஷம், திமுக என்பது விஷம் கலந்த தேநீர், அதிமுக என்பது பழைய தேநீர், பழைய தேநீர் குடித்தால் ஃபுட் பாய்சன் ஆகாதா என்றால் இந்த மூன்றில் எதையாவது ஒன்றை எடுக்க வேண்டுமெனில் , நாளைக்கு ஃபுட்பாய்ஸன் ஆயிடுமோ என பீதியடைந்து கோப்பை விஷத்தையோ, விஷம் கலந்த தேநீரையோ எடுக்க மாட்டேன்....

காங்கிரசு சிறையில்

திராவிடச் சிங்கம்
என்ற பதிவில் முத்துகுமார் நான் எழுத நினைத்தவைகளையே எழுதியுள்ளார்...

தமிழின உணர்வாளர்களை அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்க தள்ளியது கருணாநிதியே... இதை புரிந்து கொள்ளாமல் வலைப்பதிவாளர்கள் சூ... வில் சுண்ணாம்பு என்றெல்லாம் கொக்கரித்தால் (சொல்லி வாயை மூடும் முன் பொய் செய்தியை பரப்பி உண்ணாவிரத்தை முடித்துக்கொண்டு சுண்ணாம்பு தடவிட்டார் என்று சொன்னவர்களுக்கெல்லாம் சுண்ணாம்பு தடவினார் கருணாநிதி) வன்னியர் ஒற்றுமை ஓங்குக என அனானியாக பின்னூட்டம் போட்டு காலத்தை ஓட்டலாம்.

Test

Test

கருணாநிதியின் நண்பரா பிரபாகரன்? என் பதிவும் ஜூவி கட்டுரையும்

கட்டுரைகளுக்காக தொடர்ச்சியாக ஈழ‌ம் குறித்து சில விசயங்களை ஆராய்ந்த போது கிடைத்த ஒரு விசயம் கருணாநிதி எப்போதுமே புலிகள் இயக்கத்திற்கு கருணாநிதி எந்த காலத்திலும் ராஜீவ்காந்தி கொலைக்கு முன்பு பின்பு என எக்காலத்திலும் விடுதலைபுலிகளுக்கு ஆதரவாக இருந்ததில்லை என்பதை குறித்து ஜனவரி மாதத்தில் ஒரு கட்டுரை எழுதியிருந்தேன். அதே கருத்துகளோடு ஜூவியில் வந்திருக்கும் கட்டுரை இங்கே....



'பிரபாகரன் எனக்கு உற்ற நண்பர். அவர் தீவிர வாதி இல்லை' என்று கருணாநிதி தனியார் சேனலுக்குப் பேட்டி கொடுத்ததாகவும் பின்னர் மறுத்ததாகவும் தமிழக அரசியல் களம் அதிர்ந்து கிடக்கிறது!

இந்நிலையில், பிரபாகரனின் பழைய நண்பர்கள் பற்றி அறியும் முயற்சியாக ஈழ ஆதரவாளர்கள் சிலரி டம் பேசினோம். ''பிரபாகரன் தமிழகத்தில் காலடி வைத்தபோது, அவருடைய பெயர் கரிகாலன்.

'தமிழ் நியூ டைகர்ஸ்' என்ற அமைப்பை ஏற்படுத்தி அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகத் தமிழகம் வந்த பிரபாகரன், எழுபதுகளின் இறுதியில் நெடுமாறனோடு தங்கினார். தமிழகத்தில் பிரபாகரனுக்கு முதல் நண்பர் நெடுமாறன்.

பின்னர் ம.தி.மு.க-வின் ராதாகிருஷ்ணனோடு தொடர்பு ஏற்பட்டது. இருவரும் ரூம் மேட்டாக இருந்தார்கள். அந்த சமயத்தில் தமிழ் நியூ டைகர்ஸ் அமைப்பைச் சேர்ந்த முகுந்தனுக்கும் பிரபாகரனுக்கும் பிரச்னை வர, பாண்டிபஜாரில் இரு தரப்புக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

துப்பாக்கி சூடு சம்பவம் பிரபாகரனுக்குப் பின்ன டைவைக் கொடுத்துவிடக் கூடாது என்பதற்காக அப்போதைய முதல்வர் எம்.ஜி.ஆரிடம் பேசினார் நெடுமாறன். மற்ற தமிழகத் தலைவர்களிடம் அந்த சம்பவம் தொடர்பாக விளக்கமளிக்கச் சொன்னார் எம்.ஜி.ஆர்.! பிரபாகரன் சார்பாக பேபி சுப்பிரமணியமும், ராதாகிருஷ்ணனும் கருணாநிதியை சந்தித்தார்கள். 'இதெல்லாம் இப்போ முக்கியமில்லை. இதுக்காக என் நேரத்தைச் செலவிட முடியாது!' என்று பிரபாகரன் தூதர்களைத் திருப்பி அனுப்பினார் கருணாநிதி.

அப்போது காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராக இருந்த நெடுமாறன், ஈழப் பிரச்னையை இந்திரா காந்தி யின் கவனத்துக்குக் கொண்டுசென்றார். இந்திரா காந்தியும் பயிற்சிக் களம் அமைத்துக் கொடுத்து உதவி னார். கிருஷ்ணகிரி, தர்மபுரி பகுதிகளில் பயிற்சித் தளங்களை உருவாக்கினார்கள்.

தி.அழகிரிசாமி என்பவர் சிறுமலையில் இருக்கும் தன்னுடைய தோட்டத்தில் புலிகளுக்காக பயிற்சித் தளத்தை அமைத்துக் கொடுத் தார். இதற்கெல்லாம் எம்.ஜி.ஆர். ரொம்பவே உதவியாக இருந்தார். அந்த சமயத்தில் ஒருநாள் எம்.ஜி.ஆரின் ராமாபுரம் தோட்டத்துக்குவரும்படி பிரபாகரனை அழைத்திருந்தார் எம்.ஜி.ஆர். காலை நேரத்தில் நடந்த அந்த சந்திப்பின்போது பிரபாகரன் இடியாப்பம் பாயா சாப்பிட்டார். அப்போது, 'உங்களுக்காக மட்டன் செய்து வைத்திருக்கிறேன். எலும்புகளைக் கடியுங்கள். அதிலிருக்கும் மஜ்ஜைகளில் போராட்டத்துக்குத் தேவையான உணர்வு கிடைக்கும்' என்று பிரபாகரனுக்கு அசைவ அயிட்டங்களை சாப்பிடக் கொடுத்தார்.

கிட்டத்தட்ட இதே சமயத்தில் பிரபாகரனை சந்திக்க விரும்பினார் கருணாநிதி. ஆனால், அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. 86-ம் வருடம் தன்னுடைய பிறந்தநாளில் வசூலான தொகையை ஈழப் போராளிக் குழுக்களுக்கு தலா ஐம்பதாயிரமாகப் பிரித்துக் கொடுத்தார் கருணாநிதி. அதைப் புலிகள் வாங்க மறுத்துவிட்டனர். அதன்பிறகு ஈழப் போராளி களுக்குள் சண்டை மூள, சபாரத்தினத்தைக்கொன்று விட வேண்டாம் என்று புலிகளிடம் கருணாநிதி வேண்டுகோள் வைத்தார். ஆனால், சபாரத்தினம் கொல்லப்பட்டார்.

தி.மு.க. புலிகளைக் கொஞ்சம் தள்ளி வைத்துப் பார்த்த சமயத்தில்தான், தி.மு.க-வில் இருந்த வைகோவுக்கு புலிகளுடன் நெருக்கம் ஏற்பட்டது. ராஜீவ் தயார்செய்த இலங்கை ஒப்பந்தத்தில் புலிகளைக் கையெழுத்திடச் சொல்லி இந்தியா நெருக்கடிகள் கொடுத்தபோது, பிரபாகரன் உள்ளிட்ட முக்கிய புலித் தலைவர்கள் தமிழகத்திலிருந்து ஈழத்துக்குப் போய்விட்டார்கள்.

அப்போது பிரபாகரனை சந்திக்க வைகோ வன்னிக்காட்டுக்குப் போனார். அதனைத் தொடர்ந்து, 'புலிகளால் கலைஞர் உயிருக்கு ஆபத்து. இதில் வைகோவுக்கும் தொடர்பு' என்று தமிழக அரசின் உளவுத்துறை எச்சரிக்கை செய்ததாக பேராசிரியர் அன்பழகன் அறிக்கைவிட, வைகோ கட்சியிலிருந்து பிரிந்து வந்தார். அதன்பிறகு, புலிகளின் நட்பு வட்டாரத்தில் தி.மு.க. என்றுமே இருந்ததில்லை!'' என்றார்கள் அவர்கள்.


- எஸ்.சரவணகுமார்
- Junior Vikatan

மெளனசாட்சி


உலகத்தின்
பெருந்துயரக்காரன்
யதேச்சையாக எதிர்பட்டான்

உலர்ந்து
பிளந்திருந்த உதடுகளில்
உட்கார்ந்திருந்தது
விரக்தியும் பரிதவிப்பும்...



கடைசி ஈரத்தையும்
தொலைத்துவிட்டு
கடுந்தீயாய்
விழிகளில்
கனன்று தெறித்தது கங்கு...

கண்முன்னாலேயே
மொத்தத்தையும்
வாரிகொடுத்த ஈழக்கோபம்...
உக்கிரச் சிரிப்பாகி
ஊர் மேல் விழுந்தது!

"நாசமாப் போவீங்கடா"வென‌
அடிவயிற்று வலி இழுத்து
முகம் சிலுப்பி
தூற்றிய சாபம்
கடைசி டத் துளி விஷமாய்
நெஞ்சறுக்க....
குற்றவுணர்வில்
கட்டிக்கொள்கிறேன்
என் குழந்தைகளை...!

நானும்
வேடிக்கை பார்த்தவர்களில்
ஒருவன்!

-‍‍
இரா.சரவணன்
ஜூனியர் விகடன்

நக்கிப்பிழைப்பவை நாய்கள்தான் போராளிகள் அல்ல!

நக்கிப் பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித் தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

ஆரிய பார்ப்பான்
அலறி சொன்னான்
நீ போய்
சேரலையேயென்று

வாய் சண்டையிட்டோம்..
அட்டை கத்தி சுழற்றினோம்

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

உன் நினைப்பே
அவர்களை அறுக்குதென்று...

உன் உயிர்ப்பே
அவர்களை உருக்குதென்று...

கத்தினோம் கதறினோம்
உள்ளே புன்முறுவிக்கொண்டே

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

போன வருசமே
போய் சேர்ந்திருதால்

கண்ணீர் விட்டு
கதறியிருப்போம்...

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும் உனக்கு

இனி இல்லை ஒரு சொட்டு
கண்ணீரும்

ஆரிய பார்ப்பான்
ஆரிய பார்ப்பான்
என்றாய்
நீயே
சூத்திர பார்ப்பானாகி
எம்மினம் குடித்தாயே!

கொள்ளையிட்டு சேர்த்த
சொத்து காக்க நீ
கொள்கை விற்று சேர்த்த
சொத்துக் காக்க
கொள்ளைபோச்சே என்
இனம்...

அய்யோ போச்சே
அய்யோன்னு போச்சே!

நக்கிப்பிழைப்பவை
நாய்கள்தான்
போராளிகள் அல்ல!

கக்கித்தின்பவை
பூனைகள் தான்
புலிகள் அல்ல!

மே13க்கு முன்
வந்தால் கெட்ட செய்தி
அது உமக்கும்
கெட்ட செய்தியே!

நீ நம்பாத கடவுளை
வேண்டிக்கொள்
எதுவும் மே13க்கு
பிறகே என்று

பதவி துண்டு
கொள்கை வேட்டி
அரசியல் வியாபாரிக்கு
வெறும் பேச்சு
போராளிகளுக்கு
அதுவே மூச்சி


அல்லக்கைக்கே
அமைச்சர் பதவியெனில்
'ரோ'ட்டில் விற்றிருந்தால்
தங்கதட்டில் தின்றிருக்கலாம்
ஆனால் நக்கிதான்...

சேகுவேரா
தங்கத்தட்டில் நக்கிதின்று
கடற்கரையில் சமாதியாகவில்லை
அகோர சாவென்றாலும்
அவன் சாவு
போராளி சாவு
அது அவன்
கெளரவ சாவு


நக்கியும் கக்கியும்
நீ தின்றுகொள்!

சொத்தையும் சொந்தத்தையும்
நீ காத்துகொள்!

இனி உனக்கில்லை
ஒரு சொட்டு கண்ணீர்!

இனி உனக்கில்லை
எம்மிடம்
ஒரு சொட்டு கண்ணீர்!

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை

சீக்கியரும் தமிழரும்! - ஓர் இனமான ஒப்புமை
சர்தார்ஜி ஜோக்குகள் மூலம் முட்டாளாக வர்ணிக்கப்படும் சீக்கியர்கள், நிஜத்தில் புத்திசாலிகள். சக சீக்கியனை கஷ்டத்தில் வைத்துப் பார்க்க விரும்பமாட்டார்கள். அவ்வளவு சகோதரத்துவம் உள்ளவர்கள். ஆனால் சீக்கியர்கள் கோபப்பட்டால்? 25 ஆண்டுகள் ஆனாலும் அது ஆறாமல் அப்படியே இருக்கும் என்பதைத் தமிழரான(?) ப.சிதம்பரம் தன் மீதான "காலணி" வீச்சு சம்பவத்தால் உணர்ந்த அடுத்த சில மணி நேரங்களில் இந்தியாவே உணர்ந்தது.

அந்த சம்பவம் உணர்த்தும் சேதி? அந்த உணர்வை அப்படியே உள்வாங்கி, நம் "தன்மான"(?!)த் தமிழனத்தைத் திரும்பிப் பார்த்தால்..?

சீக்கியர்களுக்கு எதிரான கேவலமான திட்டமிட்டு நடத்தப்பட்ட அந்த மாபாதகச் செயல்கள் உண்மையாகவே கொடுரமான இன் வெறித்தாக்குதல். கண்டிக்க வேண்டிய காட்டுமிராண்டித்தனம். மறுக்கவே முடியாது.

ஆனால், அந்தக் கலவரத்தில் எந்தப் பெண்ணும் கற்பழிக்கப்படவில்லை.(சீக்கியர்கள் மன்னிக்க!) சீக்கியக் குழந்தைகளின் அனாதை இல்லங்களில் குண்டு போடவில்லை. தன் குடும்பத்தார் கொலை செய்யப்படுவதைப் பார்த்து அழுத "மாபெரும்" தவறுக்காக எந்த சீக்கிய பெண்ணும் வன்புணர்ச்சி செய்யப்படவில்லை. (மீண்டும் மன்னிக்க) கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றில் இருந்து எந்தக் குழந்தையும் கத்தியால் கிழித்து எடுக்கப்பட்டு, காலணியால் சதைக்குழம்பாக ஆக்கப்படவில்லை. கிளஸ்டர் குண்டுகள், பாஸ்பரஸ் குண்டுகள், பல்முனையில் பாய்ந்து தாக்கும், கொடிய குண்டுகள் சீக்கியர்கள் மேல் போடப்படவில்லை. விச வாயு செலுத்தி அப்பாவி சீக்கிய மக்கள் கொல்லப்படவில்லை.

அந்த மாபாதகத்தைச் செய்தவர்களுக்கு அன்றைய காங்கிரஸ் அரசு ஆயுதம் வழங்கவில்லை. வட்டியில்லாக் கடன் கொடுத்து கத்தி வாங்கச் சொல்லவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுப்பப்படும் நிவாரணம் அவர்களுக்குக் கிடைக்காமல், அதையும் வன்முறையாளர்களுக்கே தரவில்லை. அப்பாவி சீக்கியர்களை கொடூரமாக அழிக்க வதை முகாம்கள் அமைக்கச் செய்யவில்லை.

நல்ல வேளை, நம் சீக்கிய சகோதர, சகோதரிகளுக்கு இந்தக் கொடுமைகள் நடக்கவில்லை. ஆனால் ஈழத்தமிழர்களுக்கு இது எல்லாம் நடக்கிறது. இதற்கு மேலும் நடக்கிறது. எழுதக்கூடாததும் நடக்கிறது.

சீக்கியர்கள் கொடூரமாகத் தாக்கப்பட்டது நேற்றல்ல... போன வருடம் அல்ல...பத்து வருடம் முன்பு கூட அல்ல..1984-ல், அதாவது 25 வருடங்களுக்கு முன்பு! பொதுவாக நம் குடும்பத்தில் யாராவது ஒரு ரத்த உறவு.. ஒரே ஒரு ரத்த உறவு அநியாயமாகக் கொல்லப்பட்டால், நாமும் சீறி எழுவோம். எவ்வளவு நாட்களுக்கு? சில பல வருடங்கள்? ஐந்து வருடங்கள் ஆகிவிட்டால் மனைவி நம்மிடம், " நடந்தது நடந்துப் போச்சு பழிக்குப் பழி வாங்கணும்னு போய் வங்களை அனாதையாக்கிடாதீங்க" என்பாள். பதினைந்து வருடங்கள் ஆகிவிட்டால் அதே விசயத்தை மகனோ, மகளோ சொல்வார்கள். பாரம் கடவுள் மேல் போடப்படும்.

ஆனால் பொதுவில் தமிழனைவிட பக்தி நிறைந்த சீக்கியர்கள்? 25 என்ற நீண்ட கால் இடைவெளி அவர்களது மீசையில் உள்ள ஒரு முடியைக்கூட அசைக்கவில்லை. அசைக்க முடியவில்லை. செருப்பு வீசிய அன்றே சோனியா வீடு முற்றுகை, செருப்பு சீக்கிய நிருபரைத் தேர்தலில் நிறுத்தி வெற்றி பெற வைக்க முயற்சிகள்!

ஆனால் ஈழத்தில்..?

சீக்கியர்கள் டெல்லியில் தாக்கப்பட்ட 1984-ம் ஆண்டுக்கு ஒரு வருடம் முன்பு 1983-லேயே இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக கொலை, கொள்ளை, கற்பழிப்பு, கொதிக்கும் தார் பீப்பாய்களில் குழந்தைகளைத் தூக்கிப்போட்டது...கசாப்புக் கடைகளில் தமிழனின் உடலை உறித்து ஆட்டுக்கறி போலத் தொங்கவிட்டு, "தமிழனின் ரத்தம் இங்கே கிடைக்கும்" என்று எழுதி வைத்தது...என்னென்னவோ நடந்தது...
தொடர்ந்து நடந்தது...நடந்துகொண்டே இருந்தது...இருக்கிறது. இன்னும்...இப்போதும்... இந்த நிமிடமும் நடக்கிறது.

ஆனால் தமிழன்?

ஆம்! 25 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அநியாயத்துக்கு எதிராக - இன்று நடந்ததுபோல் பொங்கி எழுகிறது சீக்கிய இனம். ஆனால் 25 ஆண்டுகளாகத் தொடர்ந்து நடந்துகொண்டே..இருக்கிற கொடுமைகளுக்கு எதிராக, இன்றுவரை ஆக்கபூர்வமாக எதுவும் செய்யாமல், சுயநல அரசிரல்வாதிகளின் கபட நாடக அரசியல் வேசித்தனத்தை நம்பி ஏமாந்து கொண்டுள்ளது தமிழினம்.
சீக்கியர்களிடம் மட்டும் ஆளும்கட்சி, எதிக்கட்சி, கூட்டணிக் கட்சிகள்... இவரைக் கவிழ்க்க அவரின் சதி, அவரைக் கவிழ்க்க இவரின் சதி இவை எல்லாம் இல்லையா? அங்கும் உண்டு. ஆனாலும் உலகின் எந்த மூலையில் ஒரு சீக்கியன் பாதிக்கப்பட்டாலும் இன்னொரு சீக்கியன் சும்மாயிருக்க மாட்டான்.

ஆனால் சீக்கியர்களின் கோபத்திலும் ஒரு கண்ணியம். அந்த நிருபர் ப.சிதம்பரத்தை "காலணி"யால் அடிக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், மிக அருகில் இருந்த அவரின் அடியில் நிலைமை விபரீதம் ஆகியிருக்கும். ஆனால், அவர் காலணியை தூக்கிப்போட்டார். மிகச் சரியான லட்சியம் உள்ள, ஆக்கபூர்வமான, உணர்ச்சிவசமில்லாதத் திட்டமிட்டு செலுத்தப்பட்ட கோபம்! அதுதான் கோபத்தின் அழகு! (இச்செயல் கண்டனத்துக்குரியது என்றாலும்).
ஆனால் இழங்கைத் தமிழனுக்கு ஆதரவான தமிழனின் கோபம்?
ஒரு நாள் உண்ணாவிரத்தில் உட்கார்ந்து, தொண்டை வறளக் கத்திவிட்டு, தமிழினத் துரோகம் செய்யும் நமது அரசியல்வாதிகளில் பிடிக்காதவர்களை மட்டும் கரித்துக்கொட்டிவிட்டு, தனக்கு எலும்புத்துண்டு போடுகிற இன்னொரு தமிழினத் துரோக அரசியல் தலைவனுக்கு ஆரத்தி எடுத்து, பூசி மெழுகி, மழுப்பி உண்ணாவிரதம் உட்கார்ந்ததன் நோக்கத்தைத் தானே கெடுத்து அழித்துவிட்டு...இரவில் சாராய போதையிலோ அல்லது தனது மன்க்கொதிப்புக்கு ஒரு தற்காலிக மருந்து கிடைத்துவிட்ட சமாதான போதையிலோ தூங்கிவிடுவது. என்ன அசிங்கமான கோபம்! இது எங்கே உருப்படும்?

அன்று சீக்கிய கலவரத்துக்குக் காரணமாக இருந்துவிட்டு, இன்று "சீக்கியர்கள் நடத்தும் போராட்டத்தில் சீக்கியருக்கு ஆதரவாக நானும் கலந்துகொள்கிறேன்" என்று ஜெகதீஸ் டைட்லரோ அல்லது கலவரத்துக்குக் காரணமான வேறு யாருமோ, 25 ஆண்டுகள் ஆனபிறகும்கூட சொல்ல முடியாது. நடப்பதே வேறு. கிழிந்துவிடும்.

ஆனால், சிங்கள அரசுக்கு ரேடாரும், வட்டியில்லாக் கடனும், உயிர்க்கொல்லி ஆயுதங்களும், ராணுவ வீரர்களையும் வழங்கும்போது, அதற்குத் துணை போய்விட்டு, "இலங்கை அரசைக் கண்டித்து மாபெரும் பேரணிக்கு வாரீர்..." என்று கூவி, கலைஞரும், தங்கபாலுவும் பேரணியே நடத்த முடியும்.
ஏன், சோனியா காந்தியே வந்து நடத்தினாலும் தமிழன் வேடிக்கைப்பார்ப்பான். 1984-ல் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரத்தில் கொல்லப்பட்ட சீக்கியர்கள் சுமார் நான்காயிரம் பேர். அந்தக் கோபம் எட்டுக்கோடி தன்மானச் சிங்கங்களின் கோபமாக இன்று சீக்கிய இனத்தில் பொங்கிப் பாய்கிறது. ஆனால் ஈழத்தில் தினசரி நான்காயிரம் பேர் கொல்லப்பட்டாலும்கூட, ஏழுகோடி தாயகத்தமிழர்களும், அரசியல் வியாபாரிகளின் வாய்ப் பந்தல் பேச்சில் மயங்கி சுரணையில்லாமல், தங்களுக்குள் கட்சி ரீதியாக அடித்துக்கொண்டு நிற்கின்றனர்.

இந்திரா கொல்லப்பட்டதும், பிரதமராகப் பதவி ஏற்ற "பைலட்" ராஜிவ்காந்தி அரசியல் விவரம் புரியாமல், அல்லது மனிதாபிமானமின்றி - சீக்கியர்களுக்கு எதிரான வன்முறையை நியாயப்படுத்தும் விதத்தில் - ஒரு பெரிய ஆலமரம் சாயும்போது, சுற்றியுள்ள நிலத்தில் அதிர்வுகளை ஏற்படுவது சகஜம்தானே" என்று பேசினார்.

ஆனால் 1984-ம் ஆண்டு ராஜிவ் பேசிய பேச்சை சீக்கிய இனம் கடைசிவரை மன்னிக்காததன் விளைவாக 1998-ம் ஆண்டு 14 வருடம் கழித்து கணவரின் பேச்சுக்காக மனைவி சோனியா மன்னிப்புக் கேட்டார். அது சீக்கியரின் இனமான உணர்வு. ஆனால், இங்கே கலைஞர் தூக்கும் காங்கிரஸ் பல்லக்குகளின் விளைவாக, உணர்வுபூர்வமாக நடக்கும் சில போராட்டங்களும்கூட வலுவிழந்தும் அர்த்தமற்றும் போய்விடுகின்றன.
டெல்லியில் நடந்த, அந்த சீக்கியர்களுக்கு எதிரான கலவரத்தைக் கண்டித்து, பல சிறுகதைகள், நாவல்கள் வந்தன. தமிழில்கூட பல டெல்லிவாலா எழுத்தாளர்கள் "குருத்து குருத்தாக" சிறுகதை எழுதினார்கள். அது சிக்கிய இனத்தின் முக்கியத்துவத்தைக் காட்டுவதாக இருந்தது.

ஆனால் அப்படி சீக்கியர்கள் பரிதாபம் பற்றி தமிழில் பிலாக்கனமாக எழுதிய எழுத்தாளர்களே-ஈழத்தில் பொழியப்படும் குண்டு மழைகளுக்கு நடுவே தன் கைக்குழந்தையை தன் உடலுக்குக் கீழே மறைத்து தரையோடு தரையாகத் தவழ்ந்து செல்லும் பாச வீரத் தாய்மார்களைப் பற்றி ஒரு குட்டிக்கதை எழுதக்கூடத் தயாரில்லை.

ப.சிதம்பரம் மீது பத்திரிகையாளர் காலணி வீசிய சம்பவத்தைச் சிறு பொறியாகக் கொண்டு எரியத் தொடங்கிய சீக்கிய வீரத்தின் வெம்மையில் பொசுங்கி அலறிய சோனியாவின் ஆணவம்...இந்தத்தேர்தலில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட ஜெகதீஷ் டைட்லரையே வாபஸ் வாங்கிக் கொண்டது.
1984-ல் சீக்கியனுக்குச் செய்த தவறின் பலனை இன்னும் காங்கிரஸ் அனுபவிக்கிறது. இன்னும் 25 ஆண்டுகள் போனாலும் அது அனுபவிக்கும். ஒரு சீக்கியரை ஐந்து வருடம் பிரதமராக வைத்திருந்து, இன்னும் ஐந்து வருடம் பிரதமராக வைக்க தயார் என்று காங்கிரஸ் கூறியும் அதனால் விலை போகாத சுத்தமான் தன்மானம் சீக்கியனுக்குச் சொந்தமானது.

ஆனால் இந்திராகாந்தி, எம்.ஜி.ஆர். ஆகியோரின் மறைவிற்குப் பின்பு, 1988-ல் இருந்தே இலங்கையில் தமிழினத்துக்கு எதிரான துரோகச் செயலை இந்திய மத்திய அரசுகள் மிக அதிகமாக காங்கிரஸ் அரசுகள் செய்துதான் வருகின்றன. அதுவும் ஈழப்பிரச்சனையில தமிழினத்திற்கு ஆதரவாகப் பேசிய அத்தனை பேரையும் கைது செய்து சிறையில் போட்ட அத்தனை பிள்ளைப் பிடிப்பவர்களும், இதோ காங்கிரஸ் வேட்பாளர்களாக - அந்தக் கூட்டணி வேட்பாளராகப் பவனி வரப்போகிறார்கள்.

பொங்கி எழுந்து - அப்படிப்பட்ட காங்கிரஸ் வேட்பாளர்கள் ஒருவரையாவது வாபஸ் பெற்றுக்கொள்ளும் நிலைமையை டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு ஏற்படுத்தும் தெம்போ, திராணியோ, இன உணர்வோ தமிழனுக்கு உண்டா? ஓட்டுக்குப் பணம் வாங்கும் மந்தையால் எப்படி முடியும்?
இந்திராகாந்தியைச் சுட்டுக்கொன்ற பியாந்த் சிங் மனைவியை சுயேச்சையாகத் தேர்தலில் நிறுத்தி மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிக்க வைத்தவர்கள் சீக்கியர்கள். மாமியாரைக் கொன்ற அந்த இனத்தைப் பாராட்டிதான் அதற்குப் பரிசாக ஒரு சீக்கியரை பிரதமர் ஆக்கினார் மருமகள் சோனியா. இதோ இப்போது சிதம்பரம் மீது காலணி வீசியவரை நாடாளுமன்றத்தேர்தலில் வேட்பாளராக ஆக்கத் தீர்மானித்துள்ளனர் சீக்கியர்கள்.

ஆனால் ஈழத்தமிழருக்கு ஆதரவாகப் பேசும் எல்லோரையும், அட, தேர்தலில் நிற்க வைத்து ஜெயிக்க வைக்க வேண்டாம்...ஜெயிலில் உட்கார வைத்துக் களி திங்க விடாமல் தூங்குவதில்லை என்று கங்கணம் கட்டியதா தமிழினம்?
சீக்கியர்களுக்கு எதிராக நடந்த அந்த 1984 கலவரத்தில் ஜெகதீஷ் டைட்லர் குற்றமற்றவர் என்று தற்போது சி.பி.ஐ.-யால் விடுவிக்கப்படுவதற்கு முன்பு பஞ்சாபில் சில் இடங்களிலாவது காங்கிரஸ் வெற்றிபெறும். இப்போது அதுக்கூட இல்லை என்கின்றனர். பிரதமர் பதவியைக் கொடுத்தும் அவர்களை சமாதானப்படுத்த முடியவில்லை.

அப்படி பார்த்தால் அதே வகையில் ஈழத்தமிழர்கள் மற்றும் சுட்டுக்கொல்லப்பட்ட 450 ராமேஸ்வரம் மீனவர்கள் விசயங்களில் தமிழனுக்கு நியாயமான சூடு, சுரணை, மானரோசம், கோபம் இருந்தால் காங்கிரஸ் தமிழகத்தில் ஒரு தொகுதியிலகூட டெபாசிட்டை மீட்கக் கூடாது. ஆனால் பிரதமர் பதவி எல்லாம் தேவையில்லை. சில ஆயிரங்களைப் பிச்சையாகப் போட்டே, தமிழனின் ஓட்டுகளைப் பெற்றுவிட முடியும். எனவேதான் கரன்சி வாசத்தில் "நாற்பதும் நமதே" என்கின்றனர்.

மொத்தத்தில் காலம்காலமாக "சிங்"குகளைக் கொண்ட சீக்கிய இனம் சிங்க இனமாகவே உள்ளது. ஆனால் அரசியல் நயவஞ்சகர்களின் வாய்ச்சவடால்களை நம்பிய தமிழினம் அசிங்க இனமாகி விட்டது.

-நன்றி- 17.04.09 - 23.04.09 அன்று வெளிவந்த வார இதழ் "தமிழக அரசியல்"-ல் திருமொழி எழுதிய கட்டுரை

ஓட்டு என்னும் செருப்பால் திமுக-காங்கிரசை அடிக்க நான் தயார்...

இம்முறை வரும் நாடாளுமன்ற தேர்தலில் திமுக-காங்கிரஸ் கூட்டணி தோற்க வேண்டுமென்பதற்காக அதற்கு எதிராக என் வாக்கு என்னும் செருப்பால் அந்த கட்சிகளை அடிக்க தயாராகிறேன்.

காங்கிரஸ் புரிந்து கொள்ள முடிகிறது ஆனால் ஏன் திமுக? திமுகவை மட்டும் செருப்பால் அடிப்பதேன்? திமுக மட்டும் தான் குற்றவாளியா? கடைசி நாள் வரை காங்கிரசோடு இழைந்துவிட்டு ஓடிப்போன பாமக, ஈழத்தமிழர்களுக்கு எதிராக கருத்து கூறிய அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ள மதிமுக இவர்களையெல்லாம் எதால் அடிப்பது?

இயல்பாக எழும் கேள்விகள் தான்! ஏன் திமுக என்றால் தமிழ் பெயரை சொல்லி ஓட்டு வாங்கி தின்றது திமுக தான்

பாமக என்ற கட்சி ஒரு சாதிகட்சியாக வன்னியர் கட்சியாக உருவகப்படுத்தப்பட்டுள்ளது, அல்லது
அப்படியாக நடந்துகொள்கிறது! அதற்கான விளைவாக வன்னியர் அல்லாத பிற சாதியினர் பெரும்பாலும் பாமகவுக்கு வாக்களிப்பதில்லை, அதன் நிலைப்பாட்டுக்கான பின் விளைவை அது பெறுகின்றது... அதே போன்றே விடுதலை சிறுத்தைகள் கட்சியும்.

அதிமுக தலைமையின் தமிழர் விரோத நடவடிக்கைகளுக்காக தமிழர் ஆதரவு நிலைப்பாட்டுடன் இருப்பவர்கள் அதிமுகவுக்கு வாக்களிப்பதில்லை. முற்போக்காளர்கள் பெரும்பாலும் அதிமுகவிற்கு எதிராகவே உள்ளனர். அதிமுக தலைமையின் நிலைப்பாட்டிற்க்கு அது அதன் பின் விளைவை எதிர்கொள்கிறது.

பாமக, விடுதலை சிறுத்தைகள், அதிமுக என அத்தனை கட்சிகளும் அதன் நிலைப்பாட்டிற்கான பின் விளைவுகளை எதிர்கொள்ளும் போது தமிழ், தமிழர், முற்போக்கு மற்றும் தமிழர் பாதுகாப்பு என்ற காரணத்திற்காக தமிழ் இன ஆதரவு நிலைப்பாடு மற்றும் முற்போக்காளர்கள் திமுக ஆதரவு எடுத்திருந்தனர்கள் (கலைஞரின் ரசிக கண்மணிகள், கழக பிரியாணி குஞ்சுகள், கழகத்தின் சார்பில் காண்ட்ராக்ட் பெற்று வாழும் உடன்பிறப்புகளையெல்லாம் இந்த கணக்கில் சேர்க்கவில்லை) இவர்களின் வாக்குகளையும் எவ்வித பலனும் எதிர்பாராமல் இவர்கள் செய்கின்ற திமுக ஆதரவு பிரச்சாரங்களை(சென்ற முறை நானே பல கட்டுரைகள் மற்றும் உறவினர்கள் நண்பர்கள் மத்தியில் திமுக ஆதரவு பேச்சுகளை செய்தேன்) இது நாள் வரை பெற்று வந்த திமுக ஈழத்தமிழர்களை அழித்துக்கொண்டிருக்கும் பாசிச காங்கிரஸ் இயக்கத்துடன் கூட்டணி சேர்ந்து அக்கூட்டணியை தாங்கி பிடித்து ஈழத்தமிழ் போராட்டத்தை கொச்சை படுத்திக்கொண்டிருக்கும் திமுகவுக்கு என்ன செய்ய போகிறோம்.

வேறு வழியில்லை இருப்பதில் இவர் பரவாயில்லை என்று மீண்டும் சூரியனுக்கும் கைக்கும் ஓட்டு குத்தி கலைஞர் செய்தவைகளுக்கு அங்கீகாரம் வழங்க போகிறோமா? அல்லது தமிழர்கள் பெயரை சொல்லி வாக்கு வாங்கி தமிழர்களுக்கு எதுவும் செய்யாமல் தமிழர்களின் உரிமை பறிபோனபோது அதிகாரத்தை மட்டும் சுவைத்து கொண்டிருந்த மலேசிய இந்தியன் காங்கிரசுக்கு தமிழ் மக்கள் அடையாள தோல்வி தந்ததை போல கலைஞருக்கும் திமுக-காங்கிரசுக்கு தோல்வியை தரப்போகிறோமா?

தமிழ் பெயரை சொல்லி ஓட்டுவாங்கி தின்ற திமுக அதே தமிழர்களுக்கு துரோகம் செய்கிறது எனில் மோகன் கந்தசாமி பாணியில் சொல்வதென்றால் விபச்சாரியிடம் படுத்துவிட்டு காசு கொடுக்காமல் ஓடுவதற்கு சமம்.

பின்குறிப்பு
--------------
வழக்கம்போல இதற்கும் என் சாதி முத்திரையும் பாமக ஆதரவு முத்திரையும் குத்தப்படும், கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக பல சந்தர்ப்பங்களில் இம்மாதிரியான முத்திரைகள் வாங்கித்தான் இணையத்தில் வளையவருகிறேன். என்ன ஒவ்வொரு முறையும் யாருக்கு ஒவ்வாத கருத்தை சொல்கிறேனோ அவர்கள் குத்துவார்கள்.

எனக்கு ஓகேப்பா சாதி முத்திரை கட்சி முத்திரை குத்துவிங்க, கலைஞரை கிழி கிழியென்று கிழித்த தியாகி முத்துகுமாருக்கு என்ன முத்திரை குத்தப்போறிங்க?

பாரி.அரசு அவரின் ஒரு பதிவில் சொல்லியுள்ளார் கலைஞரை தாக்கும் அளவிற்கு இராமதாசை தாக்காததற்கு இணைய புரட்சியாளர்கள் பலரும் வன்னியர் என்பதனால் என்று, கிட்டத்தட்ட மக்கள் தொகையில் 20% வன்னியர் சாதி(உள்ளதாக சொல்லப்படும்) என்பதால் கொலைகாரன்களில் 20% மொள்ளமாறிகளில் 20% குடிகாரன்களில் 20%(குடிகாரன்களில் இதற்கும் மேலாக இருக்கும்) இருப்பதை போல இணைய புரட்சியாளர்களில் 20% இராமதாஸ் வாங்கி கொடுத்த இடஒதுக்கீட்டில் படித்து இணையத்தை நோண்டுபவர்களாக இருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.

மருத்துவர் இராமதாசை தாக்கி இந்த விசயத்தில் நான் எழுதிய கட்டுரைகள்

கலைஞர், மக்கள் தொலைகாட்சி உரிமையாளர்கள்

ஈழத்தமிழர் பிரச்சினை தொடரும் பாமகவின் இரட்டை வேடம்

கலைஞரின் ரசிக குஞ்சாக, கழக பிரியாணி குஞ்சாக, காண்ட்ராக்ட் பெற்று வயிறு வளர்க்கும் உடன்பிறப்பாக இல்லாமல் கலைஞரையும் திமுகவையும் தமிழுக்காக, தமிழ் இனத்திற்க்காக ஆதரிப்பவர்களே ஒரு நிமிடம் யோசியுங்கள் தமிழினத்தை கை கழுவிய திமுகவை என்ன செய்ய போகிறீர்கள் இந்த தேர்தலில்?

தமிழன் என்று எவனாவது ஓட்டு கேட்டால் செருப்பால் அடியுங்கள்

மனசும் உடம்பும் சரியில்லை.... செய்திகள் எல்லாம் முடிந்ததாகவே சொல்கிறது... இனி பேசுவதற்கும் செய்வதற்கும் எதுவும் இருப்பதாக தெரியவில்லை...

தேர்தல் திருவிழா வருகிறது... சாதிக்காக, மதத்துக்காக, சாராயத்துக்காக, பிரியாணிக்காக, அல்லது தலைவன் மேல் இருக்கும் ரசிக மனோபாவத்துக்காக எதுக்காக வேண்டுமானாலும் ஓட்டு போடுங்கள் ஆனால் எவனாவது தமிழனுக்காக என்று கேட்டால் செருப்பால் அடியுங்கள்...

ஒருத்தர் முதல்வர் பதவிக்காக, ஒருத்தர் மகனின் பதவிக்காக என்றால் இன்னொருவரோ ரெண்டு எம்.பி. சீட்டுக்காக என அத்தனை பேரும் விற்று தின்றுவிட்டார்கள் தமிழனை.

ஆரிய பார்ப்பானாக, சூத்திர பார்ப்பானாக, முற்போக்கு திமுக காரனாக, பிற்போக்கு அதிமுக காரனாக, வன்னிய சாதி பாமக காரனாக, தலித் விசியாக, தலித் புதியதமிழகத்துக்காரனாக அல்லது எதுவுமே இல்லாத இலம்பாடிகளாக இருந்துவிட்டு போவோம்...

இனி தமிழனாக மட்டும் இருக்கவே வேண்டாம்...

நாலு மந்திரிக்க்காக ஈழத்தமிழனை காட்டி கொடுத்தவர்கள், ஆறு மந்திரிக்காக தமிழக தமிழனை கூட்டி கொடுப்பார்கள் என்பதால் தமிழனாக மட்டும் இருக்க வேண்டாம்

சுகுணா, அ.மார்க்ஸ்... கேளுங்கள் கற்பழிப்பே ஒடுக்குமுறையின் உச்சகட்ட சாட்சி...

கற்பழிப்பு என்பது காம வெறியால் மட்டுமே நடைபெறுகிறதா? காம வெறி மட்டுமே கற்பழிப்பை நடத்துகிறதா? 50-60-70 வயது பெண்களிடம் என்ன காமத்தை பெறப்போகிறார்கள் கற்பழிப்பாளர்கள்?

கற்பழிப்பினால் காமம் தீருமா?காமமே கற்பழிப்பின் ஒற்றை காரணமெனில் ரோட்டில் ஒரு பெண் கூட நடமாட முடியாது, எவ்வளவு காமவெறி இருந்தாலும் அந்த காமத்தை கற்பழிப்பு அளவுக்கு கொண்டு செல்வது உட்சபட்ச ஆதிக்க அதிகாரம் மட்டுமே.

முற்போக்காளர்கள்/பெண்ணியவாதிகள் கற்பழிப்பு என்ற வார்த்தையை நான் பயன்படுத்துவதற்கு மன்னிக்கவும், இன்றைய ஆணாதிக்க சூழலில் வன்புணர்வு என்ற வார்த்தை கண் முன் நிறுத்தும் கொடூரத்தைவிட கற்பழிப்பு என்ற வார்த்தை அந்த நிகழ்வை விளக்குவது அதிகம். எனவே தான் கொடூரத்தை விளக்க வேண்டிய இடத்தில் இந்த வார்த்தையை போட வேண்டியுள்ளது.

ஒடுக்குமுறைகள் நடைபெறும் எல்லா இடங்களிலும் கற்பழிப்பு நடைபெறும் என்று பொருள் அல்ல, ஆனால் கற்பழிப்பு நடை பெறும் எல்லா இடங்களிலும் உச்சபட்ச அதிகார ஆளுமை அதன் மூலம் உச்சபட்ச ஒடுக்குமுறை நடைபெறுகிறது என்று பொருள். மண்ணின் மீதான உரிமையை அறிவிக்க கொடி நாட்டுவது போல உட்சபட்ச ஆதிக்க அதிகார ஆளுமையை அறிவிக்க செய்வதே அந்த மண்ணின் பெண்களின் மீதான கற்பழிப்பும்.

ஆணாதிக்க சமுதாயத்தில் மண்ணின் மீதான ஆதிக்கத்தையும் அதன் குறியீடாக பெண்ணையும் பாதுகாப்பதே பெரும் கடமையாக உள்ளது, அதற்காக பல மாதிரியான உத்திகளை கடைபிடிப்பார்கள், ஆதிக்கத்தின் குறியீடாக பெண்ணை கவருவது அமைவதால் எதிரி மண்னை பிடித்துவிட்டால் ராஜபுத்திர பெண்கள் கூட்டமாக தீயிட்டு தற்கொலை செய்துகொள்ளுதல் என இருந்தது இதன் மூலம் பெண்ணை தொடும் உட்ச பட்ச அதிகாரத்தை எதிரியின் ஆளுமையை அவர்கள் அழிக்கிறார்கள்.

"பாப்பத்தியோடு படுத்தால் பாவம்" என்று வாய்வழியாக தலைமுறையாக பரப்பப்பட்டிருக்கும் கருத்தாக்கத்தை கேள்விப்படிராதவர்கள் அரிது, இதுவும் கூட பார்ப்பன பெண்களை எவ்விதமாகவும் பிற சாதியினர் தொடக்கூடாது அதன் மூலம் பார்ப்பனர்கள் மீதான மற்றவர்கள் ஆதிக்கம் செய்யாமலிக்கும் குறியீடு பாதுகாக்கப்படுகிறது. இதெல்லாமே தம் மீதான ஆதிக்கத்தை எதிர்ப்பதையும் அதிகாரத்தை எதிர்ப்பதையும் பெண்களை பாதுகாப்பதன் மூலமான குறியீடாக வைத்துள்ளார்கள். கற்பழிப்பு என்றல்ல காதல் மூலமாகவும் பெண்களை வேறு சாதி/இனம்/மதம்/மொழி ஆட்கள் தொடுவதை தம் மீதான ஆக்கிரமிப்பாகவும் அதிகாரமாகவும் பார்ப்பதால் நடைபெறுவதே "ஹானர்" கொலைகள்.

அந்த மண்ணை ஆக்கிரமிக்க அந்த அதிகாரத்தை கைப்பற்ற விரும்புபவர்கள் அந்த மண்ணை ஆக்கிரமித்து அந்த பெண்களை கற்பழிப்பதன் மூலம் அந்த மண்ணின் அதிகாரமும் ஆளுமையும் எங்களுடையது என்று அறிவிக்கிறார்கள். அதனாலேயே வயது வித்தியாசமெல்லாம் கற்பழிப்புகளுக்கு இருப்பதில்லை. அதனால் தான் கோத்தபாய ராஜபக்சேவால் தமிழ் ஆண்களை வெட்டி கடலில் போடுங்கள் பெண்களை உங்களுக்கு விருந்தாக்கிக்கொள்ளுங்கள் என சொன்னான்.

ஒரு சிங்க கூட்டத்தின் (வயதான)தலைவனை இன்னொரு (இளம்)சிங்கம் தலைமை பொறுப்பிற்காக சண்டையிட்டு அடித்து வீழ்த்தினால் முதலில் வெற்றிபெற்ற சிங்கம் செய்வது அந்த பழைய தலைவனின் மனைவிகளான கிழ பெண் சிங்கங்களை வரிசையாக உட்காரவைத்து புணருகிறேன் என இரண்டு குத்து குத்திவிட்டு போகும், அதன் பின்னே தனக்கான புதிய இளம் பெண் சிங்கங்களை தேர்ந்தெடுக்கும். கிழசிங்கங்களை பின்னால் குத்தியது புணர்ச்சிக்காக அல்ல, தன்னுடைய ஆளுமையை, தன் உட்சபட்ச அதிகாரத்தை தெரிவிக்கவே இப்படி செய்தது.

எந்த ஒரு பிரச்சினையென்றாலும் பெண்கள் கற்பழிக்கப்படுவது இதனால் தான், காவிரி பிரச்சினையில் தமிழ் ஆண்களை கொலை செய்தும் போதாதென்று கன்னட வெறியர்களால் தமிழ் பெண்கள் கற்பழிக்கப்பட்டதுவும் இங்கே கன்னடர்களான நாங்கள் தான் ஆதிக்கம் செலுத்துவோம், உச்சநீதிமன்றத்தின் ஆதிக்கம் இங்கே இல்லை என நிரூபிக்க செய்யப்பட்டது. முசல்மான்களின் குறிகளை வெட்டுவோம் பீவிகளின் இறுகிய யோனிகளை பிளப்போம் என்றெல்லாம் கோஷமெழுப்பி குஜராத் இந்து மதவெறியர்கள் செய்தது காமத்துக்காக மட்டுமல்ல, தங்களின் அதிகாரத்தின் குறியீடாகவும் முஸ்லீம்களின் மீதாக அதிகபட்ச ஒடுக்குமுறையாலுமே நடந்தன அந்த கற்பழிப்புகள்

இந்திய அமைதி(?)படை ஈழத்தில் வயதான தமிழ்பெண்களை கற்பழித்ததும் இங்கே நாங்கள் தான் உட்ச அதிகாரம் படைத்தவர்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள் என சொலவதற்கே. சிங்கள இராணுவ கூலிபடையினர் தமிழர்களின் மீதான தம் அதிகாரத்தை காண்பிக்கவே போரிட்டு இறந்த பெண் புலிகளின் உடல்களை நிர்வாண படுத்தி அதை படம் எடுத்து ரசித்ததும், தமிழ்பெண்களின் மீதான கற்பழிப்பை நடத்துவதும்.

திருடர்கள் கற்பழிப்பதும் இப்படியான ஒன்றே, ஆளில்லாத நாளில் கன்னம் வைத்து பூட்டை உடைத்து கொள்ளையடித்து போவது ஒருவகை...அவர்கள் பொருளை மட்டுமே திருடுகிறார்கள், ஆனால் ஒரு வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து கணவன்,மகனை அடித்து கட்டி வைத்து பின் மனைவி மற்றும் மகளை கற்பழித்ததுவும் மிகவும் கொடூரமானது, அதற்க்கு காமம் மட்டும் தான் காரணமென்றால் அந்த வீட்டில் கொள்ளையடித்த பணத்தை வைத்து வேறு எங்காவது அந்த காமத்தை அவர்கள் வாங்கியிருக்கலாம், ஆனால் அன்றைய இரவில் அந்த வீட்டின் உட்சபட்ச ஆளுமையையும் அதிகாரத்தையும் அந்த கொள்ளையர்கள் கையில் எடுத்துக்கொண்டார்கள் அதனால் அந்த வீட்டினரின் மீதான ஒடுக்குமுறையை பொருட்களை கொள்ளையடிப்பதன் மூலம் மட்டுமின்றி கற்பழிப்பின் ஊடாகவும் நடத்தினார்கள்.

வெள்ளைக்கார டூரிஸ்ட் பெண்களை கற்பழிக்கும் இந்தியர்களுக்கும் இதே மாதிரியான காரணம் தான்...

கற்பழிப்பு என்பது உட்சபட்ச ஒடுக்கு முறையின் கொடூரமான சாட்சி, ஒரு இடத்தில் கற்பழிப்பு நடந்தால் அந்த இடத்தில் உட்ச பட்ச ஒடுக்குமுறை நடக்கிறது என்று அர்த்தம், அது தவிர வேறு எந்த வியாக்கியானமும் சாட்சியும் அங்கு நடைபெறும் உட்ச பட்ச ஒடுக்குமுறையை அறிவிக்க தேவையேயில்லை.


அ.மார்க்ஸ் இன் அரைலூசு பேட்டி என்ற என் முந்தைய பதிவில் "மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே??" என்ற என் கேள்விக்கு ஆக மொத்தம் "கற்பழிப்பு"தான் உங்களுக்கு ஒடுக்குமுறைக்கான அளவுகோலா? பார்ப்பனர்கள் யாரும் தலித் பெண்களைக் 'கற்பழிக்கவில்லை". எனவே பார்ப்பனர்கள் தலித்துகள் நண்பர்கள் என்று கூட ஒரு சூத்திரம் போடலாமே! என்று கேட்டிருந்தார்... சுகுணா திவாகர்.

சுகுணா திவாகருக்கும் அதற்கு ஆமாம் போட்ட சஞ்சய்க்கும் சிங்கள-தமிழ் இன முரண்களுக்கும் தமிழ்-தமிழ் பிரதேச முரண்களுக்கும் உள்ள வித்தியாசம் தெரியாமல் அரை லூசுத்தனமாக உளறும் அ.மார்க்ஸ்க்கும் இக்கட்டுரை சில பதில்களை சொல்லியிருக்கலாம்.

வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸின் அரை லூசு பேட்டியும் சில எதிர்வினைகளும்

புலிகளை மட்டுமே வைத்து பிரச்சனைகளை அணுகுவதை சற்றே ஒத்தி வைப்போம் என்று கீற்றில் வெளியான "புதிய புத்தகம் பேசுது" இதழில் ஒரு செவ்வி வழங்கியிருக்கிறார் அ.மார்க்ஸ்.

பேட்டி முழுக்க தம் இலக்கிய சகா "ஷோபா சக்தி"யை போல முழுக்க பேசியிருப்பது புலிகளின் மீதான விமரசனங்கள் மட்டுமே, காங்கிரஸ்காரர்களும் புலி எதிர்ப்பாளர்களும், திடீரென ஞானோதயம் பெற்ற திருவாளர் மு.கருணாநிதி யும் அவரவர்கள் பாணியில் செய்யும் புலியெதிர்ப்பு என்பதன் ஊடக தமிழர் போராட்டங்களை சிறுமைபடுத்தும் வேலையை இங்கே அ.மார்க்ஸ் தம் அறிவுஜீவி பாணியில் செய்திருக்கிறார்.

வித்தியாசங்களின் அரசியல் பேசியவர் அ.மார்க்ஸ், இன்னமும் கேட்டால் அ.மார்க்ஸ் என்னை கவர்ந்த இடம் அவரின் "வித்தியாசங்களின் அரசியல்" பற்றிய எழுத்துகளுக்கு பின் தான்.... ஆனால் அந்த வித்தியாசங்களின் அரசியலை வக்கனையாக பேசிவிட்டு, தமிழ் - சிங்கள இன வித்தியாசம், தமிழ் - சிங்கள இனங்களுக்கிடையான முரண்பாடுகள், சிங்கள இனம் தமிழினத்தின் மீதான அழிப்பு என கடும் முரண்களோடு இருக்கும் தமிழ்-சிங்கள இன முரண்பாடும், கிழக்கு-வடக்கு மற்றும் மலையக தமிழர்களுக்கிடையேயான வேறுபாடுகள், யாழ்மேலாதிக்கம் பற்றி பேசுதல் என்பதும் ஒன்றா? நிச்சயமாக இல்லை, இந்த இரண்டு வித்தியாசங்களும், முரண்களும் வெவ்வேறான தாக்கங்கள், வெவ்வேறான சீரியஸ்னஸ் உள்ள பிரச்சினைகள்... ஆனால் வித்தியாசங்களின் அரசியல் பேசிய அ.மார்க்ஸ் தமிழ்-சிங்கள இனப்பிரச்சினையையும் தமிழர்களுக்கிடையேயான பிரதேச வாதப்பிரச்சினையையும் ஒன்று போல காட்ட முயலுகிறார். மட்டகளப்புகாரர்கள் என்பதற்காக யாழ் அல்லது வன்னி பிரதேச ஆட்கள் மட்டக்களப்பு பெண்களை கற்பழித்தார்களா? ஆனால் தமிழன் என்பதற்காக சிங்கள வெறியர்கள் தமிழ் பெண்களை கற்பழிக்கிறார்களே? கிழக்கு-வடக்கு-மலையக தமிழர்களுக்கிடையேயான பிரச்சினைகள் சென்னை-மதுரை பிரச்சினை மாதிரியானது, வட தமிழ்நாடு தென் தமிழ்நாடு என பிரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்கிறார்களே சிலர், அம்மாதிரியான பிரச்சினை(வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் சீரியஸாகவும் கூடுதலாகவும் இருக்கலாம்) ஆனால் அ.மார்க்ஸ்க்கு தமிழ்-சிங்கள இன பிரச்சினையும் தமிழர்களுக்குள்ளான பிரச்சினையும் ஒன்றோ? மேலும் அரசியல் பிரச்சினைகளில் Priority Politics என்பதுவே மற்ற எதையும் விட முக்கியமானதில்லையா? Priority Politics படி இந்த இரண்டு பிரச்சினைகளில் எவை அதிக தாக்கத்தை ஏற்படுத்துவதும் அழிவை ஏற்படுத்துவதுமானது? எவை எல்லாவற்றிற்கும் முன்பாக தீர்க்கப்படவேண்டியது.. இல்லை இல்லை இரண்டும் சமமென சொல்வாரா அ.மார்க்ஸ்? இரண்டும் சமமென சொன்னால் பிறகென்ன வித்தியாச அரசியல்?

அதிலும் குறிப்பாக "வடக்கிலிருந்த முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டார்கள். இன்னும் அவர்கள் நாடு திரும்ப இயலவில்லை." என்று கூறும் அ.மார்க்ஸ் குறைந்த பட்சம் யாழ்பாணம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் கடந்த 12 ஆண்டுகளாக இல்லை, இருந்தும் ஏன் இன்னும் முஸ்லீம்கள் யாழ்பாணத்தில் மீள் குடியேற்றப்பட வைக்கப்படவில்லை? அதன் பின்னுள்ள அரசியல் என்ன? என்ற கேள்வி எழவில்லையா இந்த அறிவுஜீவி அ.மார்க்ஸ்க்கு

அடுத்ததாக தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவாக பேசுபவர்களை புலிமுகவர்கள் என்று சிறுமை படுத்தி முத்திரை குத்துவது, அப்போ புலியை விமர்சிப்பவர்கள் எல்லாம் சிங்கள ராஜபக்சே முகவர்கள் என்று முத்திரை குத்தலாமா? அப்போ அ.மார்க்ஸ் சிங்கள முகவரா?

அடுத்ததாக கம்யூனிச இயக்கங்களுக்கு தன் ஜால்ராவை ஓங்கி ஒலிக்க தட்டும் போது "இரு தரப்பிலும் இடதுசாரிகள் தான் ஓரளவு நடுநிலையுடன் இனவெறிகளுக்கு அப்பால் நின்று இந்தப் பிரச்சினையை அணுகி வந்துள்ளார்கள் என்பதையும் நாம் சொல்ல மறக்கக் கூடாது. சமீபத்தில் தமிழகமெங்கும் மக்களைச் சந்தித்துப் பேசிய இலங்கையில் உள்ள ஐக்கிய சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சிரீதுங்க ஜெயசூர்யாவின் பேச்சை நீங்கள் கேட்டிருப்பீர்கள் தானே." என்று சொல்லும் அ.மார்க்ஸ்க்கு சிரீதுங்க ஜெயசூர்யாவை ஞாபகம் வைத்தும் சொல்லும் அ.மார்க்ஸ்க்கு இடதுசாரி ஜேவிபியின் தமிழர்களுக்கு எதிரான அகோர கொலைவெறி எதிர்ப்பை மறந்துவிட்டாரோ...

மறைமுக பார்ப்பன போலி கம்யூனிச இயக்கமான மகஇகவை குறிப்பிட்டு சொல்லும் போது "ம.க.இ.க முதலிய அமைப்புகள் புலிகளைப் பாசிஸ்ட் இயக்கம் என்றே கூறுகின்றனர்" என்று கூறுகிறார், அ.மார்க்ஸ் அண்ணே ம.க.இ.கவையும் ஈ.பி.ஆர்.எல்.எஃப்பையும் இணைக்கும் சங்கிலி "ரோ ரோ ரோ ரோட்டில் கட்டுண்டு கிடக்குதாமே? அது பற்றி எதுவும் உங்கள் நக்சல் தோழர்களிடம் விசாரிச்சி சொல்லுங்களேன்...

சந்தடி சாக்கில் தமிழ் தேசிய கருட்துடையவர்களை பார்ப்பன ஆதரவாளர்கள் போன்ற தொரு தோற்றம் தரவைக்கும் முயற்சி, "திராவிட" பார்ப்பனிய எதிர்ப்பையும் திராவிடத்தையும் மறுவாசிப்புக்குள்ளாக்க வேண்டிய சூழல் உள்ளது, நன்றாக ஆய்ந்து பார்த்தால் தமிழனை கெடுத்தது பார்ப்பனர்கள் மட்டுமா அல்லது அடுத்தவனும்(அதாவது அடுத்துள்ளவனும் அதவாது பக்கத்தில் இருக்கும் தேசிய இனங்களும் இன்னும் குறிப்பாக சொல்லப்போனால் தெலுங்கர்களும், கன்னடர்களு, மலையாளிகளும்) சேர்ந்து கெடுத்தானா என்று ஆராயவேண்டியுள்ளது.


முற்போக்கு கருத்துகள், சிந்தனைகள் என்பவைகள் எல்லாம் இவர்களுக்கு இடத்துக்கு இடம் மாறும் போல....

ஈழம் இன்னும் எத்தனை பேரின் முகமூடியையும் முற்போக்கு வேசங்களையும் கலைக்கப்போகிறதோ தெரியலையே!!!

வன்னியர் நலவாரியம், முதலியாருக்கு இடஒதுக்கீடு

வன்னியர் நல வாரியம் அமைப்பு - முதல்வர் கருணாநிதி அறிவிப்பு

முதலியாருக்கு இடஒதுக்கீடு கோரி மாநாட்டுக்கு அழைக்கிறார் புதிய நீதிகட்சி தலைவர் ஏ.சி.சன்முகம்

'இலங்கை' தமிழர் பிரச்சினையை தீர்க்காத மத்திய மாநில அரசுகளை கண்டித்து ஜெயலலிதா உண்ணாவிரதம்.

கொங்கு நாடு முன்னேற்ற பேரவை - புதிய கட்சி ஆரம்பம்


-- அடேடே தேர்தல் வந்துருச்சா?